Monday, September 28, 2009

பள்ளித் தலமனைத்தும் கோவில் செய்குவோம்..



பள்ளித் தலமனைத்தும் கோவில் செய்குவோம்னு பாரதி பாடினப்ப ஒரு பக்கம் பயலுவ வசூல்னு இருப்பாங்க. மறுபக்கம் புள்ளைங்க தலைவிதி இவங்க கைலன்னு தெரிஞ்சிதான் பாடினாரு போல.

ப்ளஸ் டூ. கலியாணம் கட்டுனோம் சரி. புள்ளைய ஏண்டா பெத்தோம்னு பெத்தவங்களையும், ஏண்டா பொறந்தோம்னு புள்ளைங்களையும் ஒரு சேர டரியலாக்குற வாக்கியம் இது. அதுவும், தொகுப்பு வீடுகள்ள அக்கம் பக்கத்துல, அல்லது அலுவலகத்தில் அதே வகுப்புல படிக்கிற பசங்க இருந்துட்டா பெத்தவங்களுக்கு மானப் பிரச்சினையா மாறி உண்டு இல்லைன்னு ஆக்குற விஷயம் இது.

சி.பி.எஸ்.இ தான் பெஸ்ட்னு ஒண்ணு சொல்ல, மாநிலக் கல்விதான் நல்லதுன்னு ஒண்ணு சொல்ல மெட்ரிகுலேஷன்ல போட்டா நல்லதுன்னு ஒண்ணு நிக்க ஒரு மூலையில ஒண்ணு ஓ.எஸ். எல். சின்னு குரல் கொடுக்க அத்தனையும் மீறி அப்பன் ஆயி ஒரு முடிவெடுத்து புள்ளைய சேர்க்கிற கொடுமை உலகத்தில எங்கயாச்சும் உண்டுமாங்க?

ஐ.ஐ.டி இல்லன்னா அகில இந்திய தொழிற்கல்வி நுழைவுத் தேர்வுன்னு ஒரு குழு, அகில இந்திய மருத்துவக் கல்வி நுழைவுன்னு ஒரு குழு. எட்டாவதில ஆரம்பிக்கும் இந்த டார்ச்சர். லட்சத்துல கொட்டிக் கொடுத்து ட்யூஷன். (சொந்தமா படிச்சி ரேங்க் வாங்கின பசங்களுக்கு லட்சத்துல இவனுங்க காசு கொடுத்து என் கிட்ட படிச்சன்னு போட்டுக்குறேன், ஃபோடோ குடுன்னு பண்ற கேடு கெட்டத் தனம் தெரியுமாங்க?).

இப்புடி டார்ச்சர்ல புயல்ல அடி பட்ட கட்டுமரம் மாதிரி அலைக்கழிஞ்சி அரை லூசா இப்ப நான் என்னதான் பண்ணட்டும்னு ஆன புள்ளைங்கள, நீ ப்ளஸ் டூ பாஸ் பண்ணா போதும் மக்கான்னு தவிக்க வைக்கிற வியாதி இது. இப்புடி பைத்தியம் புடிச்சா மாதிரி சகலத்தையும் துறந்து படிக்கிற புள்ளைங்களையும், படிக்க வைக்கிற பெத்தவங்களையும் பொறுப்பான ஒரு துறை எவ்வளவு கவனமா கருத்தில் இருத்தி இருக்கணும்?

அப்புடியா இருக்கு? பரிட்சை முடிஞ்சதும் ரெயில் டிக்கட் மாதிரி ஒரு தத்கல் பரிட்சை. மறு கூட்டலுக்கு ஆயிரக் கணக்கில். மறு மதிப்பீட்டுக்கு இன்னும் சில ஆயிரம். இப்புடியெல்லாம் இருக்குன்னு தெரியாம தற்கொலை பண்ணிக்கிட்டு ஆயுசு பூரா எம்புள்ளைய படிக்க வெச்சி கொன்னுட்டனேன்னு தவிக்கிற பெத்தவங்க. பல பேரு ஜெயில் மாதிரி ஆறாவதில இருந்து எங்கயோ ஒரு குறிப்பிட்ட ஊருல மட்டும் சில பள்ளிகள்ள சேர்க்குறதுன்னு ஆகிப் போச்சு.

வெக்கக் கேட்டுக்கு உச்சமா இந்த வருடம் மறு கூட்டல்ல மாநிலத்துலயே முதலாவதா வந்திருக்கு ஒரு மாணவன். அதிலயும் அலக்கழிப்பு. மறு கூட்டல்ல வந்ததால முதல் ரேங்க் குடுக்க முடியாதுன்னு உளறிட்டு, ஆளாளுக்கு கிழிச்சதும் அவசரமா இல்ல இல்ல குடுக்கறோம்னு ஒரு சமாளிப்பு. போன வாரம், மறுகூட்டல்/மறு திருத்தல்ல சம்பந்தப் பட்ட ஆசிரியர்களுக்கு கவுன்ஸிலிங்காம். அதில் இயக்குனர் பேசிய கருத்துக்கள் அடப்பாவிங்களான்னு திகைக்க வச்சது நிஜம்.

மறு கூட்டல்ல ஒரு மார்க், இரண்டு மார்க் பரவாயில்லை. அறுபது, எண்பது மார்க் எல்லாம் சகஜமா வருது. அதுக்கு அந்தம்முனி சொன்ன ஆலோசனைகள் இருக்கே. இப்புடித்தானே இருந்திருக்கணும். இனிமேத்தான் பண்ண போறீங்களான்னு அறையணும் போல வருது.

1. ஒரு ஆசிரியர் திருத்தி கொடுத்த மதிப்பெண்ணை இன்னொருத்தர் கூட்டிப் போடணுமாம். அவங்களே பண்ணப்படாதாம். (அவங்களுக்கு கூட்டல் தெரியாதோ?)
2. காலையில் ஐந்து மாலையில் ஐந்து பேப்பர் மட்டுமே திருத்த வேண்டுமாம். (அப்போ இவ்வளவு நாளும் நிறைய திருத்தினா நிறைய காசுன்னு தானே இருந்திருக்கு?)
3. அந்தந்த பாடத்தை அந்தத் துறை ஆசிரியை தான் திருத்தணுமாம்.(இவ்வளவு நாள் கணக்கு பேப்பரை சரித்திர ஆசிரியர் திருத்தினாங்களா?)
4. ஒரு மார்க்குக்கு அந்த புள்ளைங்க எவ்வளவு கஷ்டப்பட்டு படிக்கிறாங்கங்கறதை மனசுல வச்சிக்கணுமாம்.(வாத்திமார் பசங்க படிக்கிறாங்கதானே?)

இதையெல்லாம் தாண்டி பட்டப் படிப்புக்கு அல்லாடுற அல்லாட்டம் தனிக் கதை. அய்யா புண்ணியவான்களே. சமச்சீர் கல்வி இன்னும் என்ன கல்வி எல்லாம் உண்டோ எல்லாத்துக்கும் ஒரே ஒரு குறிக்கோள் வெச்சிக்கிடுங்க. படிக்கிறது பட்டணத்து அதிகாரிங்க புள்ளை மட்டுமில்ல. கூழ்க்காசை மிச்சம் பண்ணி படிக்கணும்னு வெறியோட படிக்கிற குக்கிராமத்து அப்புராணி பசங்களும்தான். சாமானியக் கல்வியா இருக்கட்டும் அது. செய்வீங்களாய்யா?

21 comments:

கலகலப்ரியா said...

//1. ஒரு ஆசிரியர் திருத்தி கொடுத்த மதிப்பெண்ணை இன்னொருத்தர் கூட்டிப் போடணுமாம். அவங்களே பண்ணப்படாதாம். (அவங்களுக்கு கூட்டல் தெரியாதோ?)
2. காலையில் ஐந்து மாலையில் ஐந்து பேப்பர் மட்டுமே திருத்த வேண்டுமாம். (அப்போ இவ்வளவு நாளும் நிறைய திருத்தினா நிறைய காசுன்னு தானே இருந்திருக்கு?)
3. அந்தந்த பாடத்தை அந்தத் துறை ஆசிரியை தான் திருத்தணுமாம்.(இவ்வளவு நாள் கணக்கு பேப்பரை சரித்திர ஆசிரியர் திருத்தினாங்களா?)

4. ஒரு மார்க்குக்கு அந்த புள்ளைங்க எவ்வளவு கஷ்டப்பட்டு படிக்கிறாங்கங்கறதை மனசுல வச்சிக்கணுமாம்.(வாத்திமார் பசங்க படிக்கிறாங்கதானே?)//


என்ன சார் நறுக் போட வச்சத இங்க போட்டுட்டீங்களா..

vasu balaji said...

கலகலப்ரியா
/என்ன சார் நறுக் போட வச்சத இங்க போட்டுட்டீங்களா../

ப்ளஸ் டூ இல்லையா. அதான் டூ இன் ஒன். ஹெ ஹெ.

தமிழ் நாடன் said...

//படிக்கிறது பட்டணத்து அதிகாரிங்க புள்ளை மட்டுமில்ல. கூழ்க்காசை மிச்சம் பண்ணி படிக்கணும்னு வெறியோட படிக்கிற குக்கிராமத்து அப்புராணி பசங்களும்தான். சாமினியக் கல்வியா இருக்கட்டும் அது. செய்வீங்களாய்யா?//

உண்மையான வரிகள்!

vasu balaji said...

தமிழ் நாடன்

/உண்மையான வரிகள்!/

நன்றிங்க வருகைக்கும் பின்னூட்டத்திற்கும்.

க.பாலாசி said...

//அதே வகுப்புல படிக்கிற பசங்க இருந்துட்டா பெத்தவங்களுக்கு மானப் பிரச்சினையா மாறி உண்டு இல்லைன்னு ஆக்குற விஷயம் இது.//

அதையேன் கேட்கிறீங்க...அதுவும் பெத்தவங்க படிக்காதவங்களா இருந்துட்டா இந்த மானப்பிரச்சனை டபுள் மடங்கா ஆயிடும்..

இதுல மறுமதிப்பீடுல முன்ன போட்ட மார்க்கோட அதிகமா போட்டா, முன்னாடி திருத்தினது சரியில்லங்கற மானப்பிரச்சனை வாத்தியார்களுக்கு வந்திடும்னு மறுபடியும் அதே மார்க் போட்டு அனுப்புரவங்களும் இருக்காங்க....

நல்ல ஆதங்கத்துடன் கூடிய பதிவு....

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

நல்ல பதிவு.நியாயமான ஆதங்கம். இந்த மாதிரி குழப்பம் இன்னிக்கு மட்டுமில்லீங்க.. பல வருசமா இது தான் நடக்குது.

ஒற்றைச் சாளர முறை வேண்டுமா வேண்டாமா? நுழைவுத்தேர்வு வேண்டுமா வேண்டாமா? இட ஒதுக்கீடு வேண்டுமா வேண்டாமா? பத்தாவது வேண்டுமா வேண்டாமா?

இப்படி ஏதாவது ஒரு நிலையில்லாமை நம் மனசுல நிலைச்சுடுது.

vasu balaji said...

க.பாலாஜி
/நல்ல ஆதங்கத்துடன் கூடிய பதிவு..../

நன்றிங்க பாலாஜி

vasu balaji said...

ச.செந்தில்வேலன்(09021262991581433028)

/ஒற்றைச் சாளர முறை வேண்டுமா வேண்டாமா? நுழைவுத்தேர்வு வேண்டுமா வேண்டாமா? இட ஒதுக்கீடு வேண்டுமா வேண்டாமா? பத்தாவது வேண்டுமா வேண்டாமா?

இப்படி ஏதாவது ஒரு நிலையில்லாமை நம் மனசுல நிலைச்சுடுது./

சரியாச் சொன்னீங்க. ஒண்ணு தீர்மானமாகறதுக்குள்ள புதுசா ஒண்ணு முளைக்குது.கருத்துக்கு நன்றிங்க செந்தில்.

ராஜ நடராஜன் said...

//படிக்கிறது பட்டணத்து அதிகாரிங்க புள்ளை மட்டுமில்ல. கூழ்க்காசை மிச்சம் பண்ணி படிக்கணும்னு வெறியோட படிக்கிற குக்கிராமத்து அப்புராணி பசங்களும்தான். சாமினியக் கல்வியா இருக்கட்டும் அது. செய்வீங்களாய்யா?//

அர்த்தமுள்ள வரிகள் பாலாண்ணா!

ஆமா!முதல்வர் சமசீர் கல்விங்கிறாரு.மருத்துவரு இது சமசீர் கல்வியில்ல சமரசக் கல்விங்கிறாரு.

இதையெல்லாம் பார்த்து நேற்று கருணாநிதி ஒரு முடிவுக்கு வந்துட்டாரு.இனி யார் என்ன சொன்னாலும் நான் வாயே திறக்க மாட்டேன்னுட்டாரு.ஆடுன காலும் பேசுற வாயும் சும்மா இருக்காதுன்னு பழமொழி.பார்ப்போம்:)

vasu balaji said...

ராஜ நடராஜன்
/அர்த்தமுள்ள வரிகள் பாலாண்ணா!/

நன்றிங்க சார்.

/ஆமா!முதல்வர் சமசீர் கல்விங்கிறாரு.மருத்துவரு இது சமசீர் கல்வியில்ல சமரசக் கல்விங்கிறாரு.

இதையெல்லாம் பார்த்து நேற்று கருணாநிதி ஒரு முடிவுக்கு வந்துட்டாரு.இனி யார் என்ன சொன்னாலும் நான் வாயே திறக்க மாட்டேன்னுட்டாரு.ஆடுன காலும் பேசுற வாயும் சும்மா இருக்காதுன்னு பழமொழி.பார்ப்போம்:)/

எதுனாலும் இடக்கு மடக்கா பேசிருவாங்க. பார்க்கலாம்:))

Unknown said...

யோவ் பாலா...
இப்பிடியே எல்லா மேட்டரையும் நீர் எழுதினா நாங்கள் எங்கய்யா போறது???? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

வழமை போலவே பாலா முத்திரை

ப்ரியமுடன் வசந்த் said...

//சாமினியக் கல்வியா//

அப்பிடின்னா இன்னா சார்?

ப்ரியமுடன் வசந்த் said...

//3. அந்தந்த பாடத்தை அந்தத் துறை ஆசிரியை தான் திருத்தணுமாம்.(இவ்வளவு நாள் கணக்கு பேப்பரை சரித்திர ஆசிரியர் திருத்தினாங்களா?)//

நல்ல வேளை துரை ஆசிரியர்தான் திருத்தணும்ன்னு சொல்லாமவிட்டீங்க :)))

vasu balaji said...

பிரியமுடன்...வசந்த்
///சாமினியக் கல்வியா//

அப்பிடின்னா இன்னா சார்?//

ம்கும். ஒரு எழுத்துப் பிழை. மார்க் குறைச்சிக்கங்க வசந்து சார்.

vasu balaji said...

பிரியமுடன்...வசந்த்

/நல்ல வேளை துரை ஆசிரியர்தான் திருத்தணும்ன்னு சொல்லாமவிட்டீங்க :)))/

:)). யப்பா சாமி. இது நான் சொல்லலை. டைரக்டர் சொன்னது.

vasu balaji said...

Kiruthikan Kumarasamy
/யோவ் பாலா...
இப்பிடியே எல்லா மேட்டரையும் நீர் எழுதினா நாங்கள் எங்கய்யா போறது???? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

வழமை போலவே பாலா முத்திரை/

ஹி ஹி. நன்றி கிருத்திகன்.

துபாய் ராஜா said...

நியாயமான அறச்சீற்றம்.

இன்சினியரிங்,மெடிக்கல்,ஆர்ட்ஸ் & சயின்ஸ் மேல்படிப்புகள் போல நாடு முழுதும் சி.பி.எஸ்.இ,மாநிலக் கல்வி,மெட்ரிகுலேஷன்,ஓ.எஸ். எல். சி அனைத்திற்கும் ஆரம்பத்திலிருந்தே ஒரே பொதுவான பாடங்களை கொண்டுவர மத்திய அரசுதான் நடவ்டிக்கை எடுக்க வேண்டும்.ஆனா யார் செய்யுவா சார்..... ????????

பழமைபேசி said...

//செய்வீங்களாய்யா? //

நானும் அண்ணம் பக்கந்தேன்!

ஈரோடு கதிர் said...

//கூழ்க்காசை மிச்சம் பண்ணி படிக்கணும்னு வெறியோட படிக்கிற குக்கிராமத்து அப்புராணி பசங்களும்தான்.//

பாவம் இந்த பசங்க

புலவன் புலிகேசி said...

// (சொந்தமா படிச்சி ரேங்க் வாங்கின பசங்களுக்கு லட்சத்துல இவனுங்க காசு கொடுத்து என் கிட்ட படிச்சன்னு போட்டுக்குறேன், ஃபோடோ குடுன்னு பண்ற கேடு கெட்டத் தனம் தெரியுமாங்க?)//

உண்மையான கருத்து.......

vasu balaji said...

நன்றி துபாய் ராஜா, பழமை, கதிர் புலவன் புலிகேசி