Monday, August 31, 2009

மகிழ்ச்சியும் நன்றியும்..




மதியம் விகடனிலிருந்து என் பெயர் கேட்டு வந்த மின்னஞ்சலை மாலையில் தான் பார்த்தேன். தோழி கலகலப்ரியா என் மன்னித்துவிடு தேவதையே (இந்தப் பதிவில் மன்னித்து விடு தேவதையே - 2 ) தலை வாசலில் நீட் பகுதியில் வெளியாகி இருப்பதை மகிழ்வோடு கூறிப் பாராட்டினார். இன்னும் மகிழ்வாக அவருடைய அன்பு...நட்பு.. ம் தலைவாசலில் ஜூட் பகுதியில் வெளியாகி இருப்பதைக் கண்டோம். இந்த மகிழ்ச்சியை உங்களுடன் பகிர்வதில் மிக்க மகிழ்ச்சி:

எனது கவிதை விகடனில் படிக்க: http://youthful.vikatan.com/youth/vasudevanbalaji31082009.asp

தோழி கலகலப்ரியாவின் கவிதை: http://kalakalapriya.blogspot.com/2009/08/blog-post_31.html

இந்த மகிழ்ச்சியான தருணத்தில் என்னை எழுதத் தூண்டி பாராட்டி, திருத்தி வழிகாட்டிய தோழி கலகலப்ரியாவிற்கு என் நன்றி.

பாலாண்ணே என்று அன்போடு விளித்து 'நறுக் கவி' என்றும் வலைச்சர அறிமுகமென்றும் சுட்டி, வழிகாட்டிய பழமை, ராஜ நடராஜன், ப்ரியமுடன் பிரபு மற்றும் தவறாமல் பின்னூக்கமிட்டு ஊக்கிய யூர்கன், சுரேஷ்குமார், சுரேஷ், சுப்பு, லவ்டேல் மேடி, கீத், நைஜீரியா ராகவன், கிரி, கும்மாச்சி, செந்தில் குமார், மற்றும் சுவையான பதிவர் விருதளித்த சகோதரி சக்தி, சூர்யாகண்ணன், பெயர் தெரியாத காரணத்தால் இது நம்ம ஆளு, தமிழ்நெஞ்சம் மற்றும் பெயர் குறிப்பிடாமல் விட்ட பதிவரல்லாத வாசகர்கள் அனைவருக்கும் இத் தருணத்தில் 'நறுக்குன்னு நாலு வார்த்தை' யை நூறாக்கியமைக்கும் நன்றி கூறுகிறேன்.

அன்புடன்
வானம்பாடிகள்
***

தொலைந்து போனவர்கள் - 1

தம்பி பழமைபேசி நட்டாமுட்டி இடுகையில ஈயம் பூசுரத பத்தி சொல்லவும் மண்டைக்குள்ள செல்லொண்ணு கிளம்பிருச்சி. ஈயம்ங்கற ஒரு வார்த்தை அது பூசுறப்ப நடக்குற காட்சி, அந்த வாசனைன்னு, மேச்சட்ட இல்லாம 'எக்ஸ்' பட்டி அர டவுசர் போட்ட பையனா மாத்தி விட்ருச்சி.

இங்கல்லாம் கலாய் பூசுறதுன்னு சொல்லுவாங்க இதை. பித்தளைப் பாத்திரத்துக்கு கலாய் பூசுறதுன்னு கன காரியமா வீதி நடுவில நின்னு ஒரு ரெண்டு மூணு வாட்டி குரல் விடுவாங்க. அது முக்கியமா எங்கள மாதிரி விடலைக்குத்தான். நாம வீதிக்கு ஓடுறது. இவரு வேலை ஆரம்பிக்கறதுக்குள்ள வீட்டில ஓடி கலாய் பூசுறாங்க, பாத்திரமெல்லாம் குடுங்கன்னு அவனுக்கு ஏஜன்டாய்டுவம். அதெல்லாம் வேணாம்னா அழுவாச்சியா வரும். பின்ன நாளு முழுக்க இருக்கமாட்டானே. சோறு தண்ணி மறந்து வேடிக்கை பார்க்கிற‌தெப்படி? அங்க ஓடி அய்யோ குழி நோண்டுறாங்களே, அப்புறம் அங்க நிக்க இடம் கிடைக்காதேன்னு பதட்டம். திரும்ப ஓடி சொம்பு, அடுக்குன்னு தேடி எடுத்து இதுக்கெல்லாம்னு பூசலாம்னு கெஞ்சுறது. பயபுள்ள மனசு புரியுதா? நீ அவங்கூட துருத்தி அடிக்கதான் போற, ஓடு நாயேன்னு விரட்டுவாங்க. ஓடிப்போய் பார்த்தா அவரு குழி தோண்டுற இடத்துல தண்ணிய கொட்டி பதம் பண்ணி இருப்பாரு.

இது சரியாவாதுன்னு திரும்ப ஓடி, நம்மாளுங்களுக்கு பிடிக்காத நபர் பேரு சொல்லி அவங்க ஒரு அண்டா, தவலை எல்லாம் பூசுராங்க. நாமளும் பூசலாம்மான்னு பிட்டு போடுறது. முதல்ல இருந்த வேகம் இல்லாம ஏண்டா உசிரெடுக்கறங்கும் போதே ஆஹா மீனு மாட்டிச்சிடோய்னு குசியாயிடும். அப்புறம் யாரு காத்திருக்கா. கைக்கு கிடைச்சத தூக்கிக் கொண்டு ஓட, குடுக்கிற காசுக்கு உருப்படியா பண்ணலாம்னோ கவுரவ பிரச்சினையோ; தவலை, அண்டான்னு வரும். நமக்கென்ன போச்சி. போய் இடம் பிடிக்கணும்ல.

அங்கால ஓடிப்போய் குத்துக்காலு போட்டு காலுக்குள்ள கைய இடுக்கி கன்னத்த புதைச்சி கண்ணு விரிய பார்க்குறது. விரட்டுவாங்களோன்னு உசாரா அம்மா கொண்டுவரான்னு சொல்லுறது. ஈயம் பூசுறது ஒரு கலைன்னா அதுக்கு செட்டப் பண்றது இருக்கே அதுக்கு ஈடு இணையில்லை. ஒன்னரையடிக்கு ஒரு இரும்புக்கம்பி. இன்னும் வளராத கடப்பாறை மாதிரி சின்னதா ஒண்ண வெச்சிருப்பாங்க. காம்பஸே இல்லாம வட்டம் போட எங்க படிச்சாங்கன்னு இப்ப கூட பிரமிப்பா இருக்கும். கைக்கு வந்த வாகுல குத்தினாலும், வட்டமா எப்படித்தான் வருமோ. ஒரு அரையடி ஆழத்துக்கு ஜாண் அகலத்தில ஒரு குழி. அதுக்கு முக்காலடி தள்ளி சரிவா ஒரு குழி வெட்டுவாங்க பாருங்க, மேல் மண்ணு பிளக்காம சரியா பெரிய குழியோட அடிக்கு வந்து சேரும்.

துருத்தி முனையில பாண்ட்ஸ் பகுடர் டப்பா ரெண்டு பக்கமும் அறுத்து ஒரு முனையில துருத்தி வாய். அதுக்கு சைக்கிள் ட்யூப் ரப்பர் பேண்ட் மாதிரி வெட்டி வளையல் மாதிரி மேல மேல போட்டிருப்பாங்க. மத்த முனைய சின்ன ஓட்டையில சொருகி நிறுத்தினா, அளவெடுத்தா மாதிரி சரியா வந்து நிக்கும். நிக்கணும். வெளிய தெரிஞ்சிச்சோ, நாம எதுக்கு இருக்கறது அங்க? அண்ணா வெளிய வருதுன்னு அலறுவம்ல. காசு செலவில்லாம நம்மளுக்கு எத்தன அப்பரசன்டின்னு அந்தாளு நினைச்சிருப்பாங்களோ? அப்புறம் துருத்தி சொருகின இடத்துல தோண்டுன மண்ணைக் குழைச்சி சீல் வைப்பாங்க. அதுக்குள்ள அம்முனிங்க பாத்திரம் பண்டத்தோட வந்து நிக்கும்.

ஒரு வழியா கணிசமா சேர்ந்ததும் பையில இருந்து விறகு கரி எடுப்பாங்க. ஆறு, இல்லன்னா எட்டு துண்டுதான். விறக்கடை நீளத்துக்கு. அத அழகா ஒரு மாதிரி அடுக்கி, நடுவில இருக்கிற சந்துக்குள்ளால ஒரு கந்தைத்துணில மண்ணெண்ணைய சிந்தாம நனைச்சி சொருகுறது. என்னா காத்தடிச்சாலும் ஒரே வத்திக்குச்சில கொளுத்தி, அதில முதல்ல ஒரு பீடிய கொளுத்தி அப்புறம் அந்த சந்துக்குள்ள போட பக்குன்னு புடிச்சிக்கிட்டு எரியுற அழகிருக்கே. அட அட. அந்த வயசில இதோட தாக்கம் ரொம்ப பெருசு தெரியுமா? எதையாச்சும் சிந்திட்டாலோ, கை தவறி உடைச்சாலோ ஒரு சின்ன வேலை ஒழுங்கா செய்யத் தருவுசிருக்கான்னு திட்டு விழும்ல. பொங்கலுக்கு, வீட்டில திதிக்கு எல்லாம் கரியடுப்பிலதான் பண்ணணும்னு எங்கப்பாரு கண்டிசன். அப்போ அதுக்கு கரி பத்த வைக்கிறதுக்குள்ள கரியை மண்ணெண்ணைல குளுப்பாட்டி பாதி வத்திப்பெட்டிய காலி பண்ணி மல்லுக்கட்டி அது கங்கு பிடிக்கவே போராடுறீங்க. அந்தண்ணா ஒத்தக் குச்சில பீடி, கரி எல்லாம் பத்த வைக்கிறாங்களே. உங்களுக்குத் தெரியலையேன்னு கேக்க தோணும்.

செவ செவன்னு கனிஞ்சிட்டிருக்கிற கரியை வெறும் கையால எடுத்து குழிக்குள்ள போட்டு மேல கொஞ்சம் கரி, திரும்ப கங்குன்னு வைக்கிற ஆள் ஹீரோவா இல்லையா? துருத்தி பிடிக்குள்ள கைய நுழைச்சி டக் டக்னு லயத்தோட நாலே அமுக்கு. தக தகன்னு எரியும். அண்டாவ ஏத்தி விட்டு ஒரு தகரத் தட்டுல துத்தநாகப் பொடி(அப்போ அது தெரியாது) , ஈயம் எல்லாம் வெச்சிக்கிட்டு டோய் ஓடிபோய் கந்தத்துணி கொண்டுவாம்பாரு. இடம் போய்டுமே. போவலைன்னா விரட்டுவாரோன்னு பயத்தோட ஓடி கிடைச்சத லவட்டி கொண்டு வந்து கொடுக்கிறது.

சூடானதும் பாதித் துணி கந்தலை பிடிக்கவும், மீதி கந்தலை பொடியை புரட்டி ஈயத்தை உடைச்சி பாத்திரத்தில போட்டு இறக்கி வெச்சி அதில தேய்க்கிறது. சூடா கிளம்புற புகை வாசனை தீபாவளியை நினைவு படுத்தும். சுத்தி சுத்தி சுட்டுக்காம எப்படித்தான் பூசுவாங்களோ. அதும் தவலை பூசுறப்போ சுடுமோன்னு பக்கு பக்குன்னு உக்காந்திருக்கிறது. வெள்ளி மாதிரி தக தகன்னு ஜொல்லிக்க ஜொலிக்க எடுத்து வச்சி தண்ணியை கொட்டி ஒரு சுத்து. அடுத்த பாத்திரத்தில ஊத்துவாங்க. எல்லாம் முடியரதுக்குள்ள டேய் நான் வந்ததும் விடணும். இடத்த பார்த்துக்கடான்னு பக்கத்து பையன கெஞ்சி அவசர காரியமெல்லாம் முடிச்சிட்டு வரதெல்லாம் நினைச்சா சிரிப்பா வரும்.

அந்தாளு கிளம்பிப் போக தெருப்புழுதி, துத்தநாகப் பொடி, கரித்தூள், சாம்பல் எல்லாம் படர வெயில்ல சிவந்த கண்ணோடு வீட்டுக்கு வரும்போதே ஆரம்பிக்கும் அர்ச்சனை. அவன்கூடவே போறது தானேன்னு. கறுத்துப் போய் (இல்லன்னா மட்டும் நாம உரிச்ச கோழி கலரோ) குடிகாரன் மாதிரி கண்ணும் (எப்போ பார்த்தாங்களோ. தெருவில டாய்னு சவுண்ட் வந்தா பதறிபோய் கதவ பூட்டும் அம்மா) உள்ள வந்தா காலை உடைப்பேன்னு அலறுவாங்க. சோகமா போய், பக்கத்து வீட்டு மாடிப்படி ஏறி, நம்ம வீட்டுக்குள்ள குதிச்சி, பாத்ரூம்ல குளிச்சி, புழக்கடை வழியா போய் இவங்க உள்ள வரும்போது நெத்தில விபூதியும் கையில புத்தகமுமா எஸ்கேப். மனசெல்லாம் திரும்ப எப்போ கலாய் பூச வருவாங்கன்னு இருக்கும்.

Sunday, August 30, 2009

வெற்றிடம்.

காலை எழுந்திருக்கும் போதே மனது சரியில்லை.
குடித்த தேநீர் சூடில்லை.
பத்திரிகை வரவில்லை
குளிக்கையில் பாதியில் நீரில்லை.
நேரமானதில் காலை உணவில்லை.
அவசரத்தில் கைபேசி எடுக்கவில்லை.
புகுந்து போகவில்லையென ஆட்டோக்காரன் ஏசியது உறைக்கவில்லை.
அலுவலகத்தில் சொன்ன காலை வணக்கத்தில் உற்சாகமில்லை.
வலைத் தொடர்பில்லாததால் வேலையில்லை.
வேலை சேருமே என்ற பதைப்பில் பொறுமையில்லை.
நைந்த மனதில் மதிய உணவும் செல்லவில்லை.
கொடுத்த ஆணையை மறந்து எகிறும் அதிகாரியை எதிர்க்கத் துணிவில்லை.
முடியாத இலக்கை நிர்ணயிக்கும்போது பொங்க முடியவில்லை.
அவசரப் பணி இருந்தும் ஐந்து நாள் விடுமுறை கேட்பவனை அறையவில்லை.
களைத்துச் சலித்து வீடு திரும்புகையில் உட்கார இடமில்லை.
மௌனமாய் உணவுண்டு கண்மூடித் துயில முயல்கையில் நித்திரை வரவில்லை.

மனது கேட்கிறது!
எத்தனை முறை இப்படி இருந்திருக்கிறேன்?
சுயநல உலகில்
பர்கின்ஸன்ஸால் நினைவழிந்து
கடந்தகாலத்துக்கும் நிகழ்காலத்துக்கும்
ஊசலாடிய உணர்விலும் கூட‌
கடந்து போகையில் கை பிடித்து
தவறாமல் என் வலியுணர்ந்து
ஏனடா? ஏதோ மாதிரி இருக்கிறாய்
என்று கேள்வியடுக்கிய என் அம்மாவுக்கு
சலிப்பாய் சொன்ன பதில் எல்லாம்
தெரிந்து என்ன செய்யப் போகிறாய்? தூங்கு என்பதுதான்.

பாவி மனது இப்போது பரிதவிக்கிறது
ஒன்றும் சொல்லாமல்
மூப்பும் நோவும்
மருந்தும்,அம்மாவுமாய்
கலவையான‌ வாசனையில்
அவள் மடி புதைந்து
மீண்டும் குழந்தையாக
வழியிருந்தபோது தொலைத்த நாட்கள்!

அம்மா இல்லை!
ஆறுதல் இல்லை
தொலைத்த வலியோ
தொலையவில்லை!
_________________________________

Saturday, August 29, 2009

ஒன்று எங்கள் சாதியே..

கதிர்,நர்சிம், தங்கமணி பிரபு, காமராஜ், இரும்புத்திரை அரவிந்த் இன்னும் பலர் சிங்களவனின் வெறியாட்டத்தை எதிர்த்துக் குரல் கொடுத்திருக்கிறார்கள். ராஜ நடராஜன், யூர்கன் ஆகியோர் மனம் வெறுத்து இடுகையை நிறுத்தி வைத்திருக்கிறார்கள். பாமரன்..ஆகிய நான் என்ன செய்யப் போகிறேன்?

கதிர் தன் இடுகையில் "நல்ல இதயங்களே இந்த அவலம் பற்றி ஒரு இடுகை உடனே உங்கள் வலைப்பூவில் எழுதுங்கள் என அன்போடு வேண்டுகிறேன்" ; "இப்போது நாம் இடும் இடுகையின் மூலம் இதுவும் ஒரு நாள் வெடிக்கும் என்ற நம்பிக்கை கீற்று எனக்குண்டு." என்கிறார். விரக்தியில் பின்னூட்டம் இட்டு காத்திருந்த வேளையில் கலகலப்ரியா கொடுத்த ஒரு சுட்டி நம்பிக்கையளிக்கிறது. ஆம். வலைப்பூவின் தாக்கம் பெரிது தான் போல. அதிலிருந்து சில துளிகள் இதோ:

"பிளாக் என்று சொல்லப்படும் வலைப்பூக்கள் கணிசமான வாசகர் வட்டாரத்தை கொண்டிருக்கிறது. இங்கே எழுதப்படும் சினிமா விமர்சனங்கள் பற்றிதான் இப்போது பெரும் கவலையோடு பேச ஆரம்பித்திருக்கிறார்கள் திரையுலகத்தில்."

"எங்கோ ஒரு மூலையில் உட்கார்ந்து கொண்டு உதிரத்தை சிந்தி படம் எடுக்கும் படைப்பாளிகளையும், கோடி கோடியாக கொட்டிவிட்டு தவிக்கும் தயாரிப்பாளர்களையும் பீதிக்குள்ளாக்குகிற இவர்கள் கொஞ்சம் மனிதாபிமானத்தோடு விமர்சனங்கள் எழுத வேண்டும் என்பதே நமது வேண்டுகோள்."

இதோ இலங்கையில் நடந்த இனப்படுகொலை பற்றி அயல் நாட்டுத் தொலைக்காட்சியில் வெளியாகிய விடியோ வந்து 4 நாட்களாகிவிட்டது. ஏதாவது ஒரு தொலைக்காட்சியில் காட்டப் பட்டதா? எடுபிடிகளாகிவிட்ட பத்திரிகையில் வந்ததா? வந்ததும் சிங்களவனுக்குச் சாதகமான அண்டர்லைன் பத்திரிகையின் பொய் பிரசாரம் தானே. எவனாவது இந்தச் செய்தியை போட்டானா? தனி ஈழக் குல்லாய் போடப் பார்த்த அரசியல் வாதிகள் எங்கே தொலைந்தார்கள்? தமிழக மீனவர்களைக் கடத்துவதும், சுடுவதும் பெயரளவுக்கு எதிர்ப்பைக் காட்டியே புதைக்கிறீர்களே? ஏன்? ஒட்டு மொத்தமாக ஏன் இப்படி அடிமையானோம்? என்னவெல்லாம் சொன்னார்கள் என்று ஒரு மீள் பார்வை பார்ப்போமா?

ராஜபிச்ச: "பாதுகாப்பு வலையம் ஐ.நா. குறிப்பிட்டதல்ல. எமது ராணுவத்தின் யுத்தோபாயம்"
ஃபொன்சேகா: "கெரில்லா யுத்தியினாலேயே வெற்றி பெற்றோம்"
ராம்புக்வெல: "வெற்றி பெற்றவர்கள் மீது விசாரணை நடந்ததாக சரித்திரமில்லை"

இந்த நாய் எல்லாம் இப்படித்தான் பேசும். கலைஞருக்கு என்னாயிற்று? ஒரு பத்திரிகையாளர் இந்தியா ராணுவத் தடவாளங்களை அளித்திருக்கிறது எனப் புத்தகம் வெளியிட்ட பின்பும், ராணுவத்துறை இணை அமைச்சர் புலிகளுக்கு எதிராக ஆயுதம் கொடுக்கவில்லை, இலங்கை அரசைத் தற்காத்துக் கொள்ளத்தான் ஒப்பந்தப்படி ஆயுதம் அளித்தோம் என அறிவித்த பின்பும் பத்திரிகையாளரின் கேள்விக்கு கலைஞரின் பதில் இது:

"ஆயுதங்களோ, போருக்குத் தேவையான கருவிகளோ எதையும் இந்திய அரசு அனுப்பவில்லை என்று பல முறை மத்தியிலே உள்ள பிரதமர் உட்பட அமைச்சர்கள் சொல்லியிருக்கிறார்கள்." மே 18க்கு முன்பும் இதையே தான் சொன்னீர்கள் ஐயா. நடந்தது என்ன? இப்படி வெட்ட வெளிச்சமான பிறகும் ஏன் இப்படி பேசுகிறீர்கள். தமிழாய் வாழ்ந்து தமிழால் வளர்ந்து இத்துணை காலமும் கடந்த பின்னர் உங்கள் காலத்தில் தமிழுக்கு இப்படி சாபக்கேடு வரலாமா? இருக்கும் மீதித் தமிழர்களை வாழவைக்க எதிர்த்துக் குரல் கொடுத்துப் பாருங்கள். எதிர்ப்பவர்களை தமிழன் எட்டி உதைப்பான். இதோ இன்னோரு செய்தியும் ஐயா.

"இந்திய கடலோரக் காவல் படையினர் இதுவரை பயன்படுத்தி வந்த விக்ரஹா என்ற கடலோர ரோந்துக் கப்பல், இலங்கைக் கடற்படைக்கு வழங்கப்பட்டுள்ளது. இலங்கைப் போருக்குப் பின்னர் இந்தியா வழங்கியுள்ள முதல் பகிரங்க உதவி இது என்பது குறிப்பிடத்தக்கது."

என்றோ ஒரு நாள் சிங்கள நாய் தமிழக மீனவனைச் சுட இதைப் பயன்படுத்தும் அப்போது என்ன சொல்லப் போகிறீர்கள்?

எனவே வலைப்பூத்தோழர்களே கட்சி மறந்து, வேறுபாடு மறந்து கலைஞரை வேண்டுவோம். ஐயா இப்பொழுதாவது ஏதாவது செய்யுங்கள் என்று. இந்தக் கொடுமையை எதிர்க்க பின்னிருப்போம் என்று. நிச்சயம் குரல் எட்டும். சினிமா என்ற மீடியாவே பாதிக்கப் படும்போது, தாக்கம் வலுவானது தான். இணைவோம். எழுதுவோம், இறைஞ்சுவோம், போராடுவோம் இல்லையெனில் கிழிப்போம்.

பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள்: தங்கள் இடுகைகளை label ஈழம் என்று வகைப்படுத்தினால் நம் அத்தனை இடுகைகளும் திரட்டிகளில் ஈழத்தின் கீழ் வரும்.

Friday, August 28, 2009

நறுக்குன்னு நாலு வார்த்த - 100

இராணுவத்திற்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் வீடியோக்கள் சிங்கள புலிகளால் விநியோகம்: திவயின

ஆமாம்டா. உண்மை சொல்றவனெல்லாம் அந்த அந்தமொழிப் புலி. உனக்கு எடுபிடி எல்லாம் நீ வளக்குற நாக்குட்டி. உன் இராணுவத்துக்கு அபகீர்த்தி வேறயா?
_________________________________________________
பிரபாகரன் குறித்த விசாரணைக்காக இந்திய முகவர் அமைப்பு விரைவில் இலங்கை விஜயம்

இவ்வளவு நாள் சத்தமே காணோம். காட்டுனதெல்லாம் காணாம போகட்டும்னு காத்திருந்தா மாதிரி இருக்கு. அதென்ன முகவர் அமைப்பு. ஒட்டப்பால கும்பல்போய் ஓதிக் கொடுத்துட்டு வருமா?
_________________________________________________
இலங்கை மீது போர்க்குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும்: நோர்வே அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம்

நோர்வேப் புலின்னு நக்கலடிப்பான் சிங்களவன். பான் கி மூன் காதில 2 புல்லட் சொருகி அனுப்பிட்டானா பக்ஸே. எனக்கு என்னா போச்சின்னே இருக்கானே அந்தாளு.
_________________________________________________
யுத்தத்தில் ஈடுபடாதவர்கள் தடுப்பு முகாமிலிருந்து வெளியேற அனுமதிக்க வேண்டும் – உச்ச நீதிமன்றம்

அதெல்லாம் சரிங்கையா. சண்டை நடந்த இடத்தில இருந்தவங்க எல்லாமே ஈடுபட்டவங்கன்னு சொல்வானே!
_________________________________________________
சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து அரசாங்கம் புற்றுநோயை கடனாக பெற்றுள்ளது: சிரேஷ்ட விரிவுரையாளர்.

இந்த அரசாங்கம் பிழைச்சிதான் என்ன பண்ணப்போகுது. இவனே புற்றுநோய் மாதிரிதான். அழியட்டும்.
_________________________________________________
பாரிய பட்டாளத்துடனான ஜனாதிபதியின் அமெரிக்க விஜயம் ரத்து

ஏனோ? என்னமோ புதுசு புதுசா வெடிக்குதே. அங்க போய் நிக்கிறப்ப ஆப்பு வெச்சிடுவாங்கன்னா?
_________________________________________________
இலங்கையில் அரசியல் தீர்வை மீண்டும் வலியுறுத்துகிறார்: ரொபேர்ட் ஓ பிளேக்

ஆமாம். சொல்லிட்டே இருங்க. வலியெல்லாம் சனங்களுக்குதான். அவனுக்கு உறுத்தல் கூட இல்ல. இவரு வலியுறுத்துறாராம்.
_________________________________________________
23 அமைச்சர்களுக்கு 13 கோடி ரூபா வாகனக் கூலியாக செலுத்தப்படுகிறது: ரோசி சேனாநாயக்க

இதுக்கும் எவனாவது நிவாரணம் குடுப்பாங்கம்மா.
_________________________________________________
ஈழத்தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட காட்சிகள் பற்றி மத்திய அரசு விசாரணை நடத்தும்: எஸ்.எம். கிருஷ்ணா

என்னா கொழுப்பு இவருக்கு. கொல்லப்பட்டது பற்றி இல்லையாம் காட்சி பற்றி விசாரிக்கவாம். மவனே. மாட்டணும்டா. இப்படி பயந்தே சாவப் போறீங்க.
_________________________________________________
மின்னணு வாக்குப்பதிவு முறைகேடு புகார்: நிரூபிக்க பா.ம.க.வுக்கு தேர்தல் ஆணையம் மீண்டும் வாய்ப்பு

தோடா! அப்புறம் நாங்க எப்படி போடுறது. முடிஞ்சா கண்டு பிடிங்க.
_________________________________________________
உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு தங்கபாலு பாராட்டு

அடுத்தவன் சொத்துக் கணக்கு குடுத்தா பாராட்டுறதுக்கென்னா ? இவரு குடுக்கமாட்டாரே!
_________________________________________________
கலைஞரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தை வரவேற்கிறோம்: ராமதாஸ்

மருத்துவக் காப்பீடுன்னா பில்லே மாறிடும்ல. தொழில் வேற! கொள்கை வேற!
_________________________________________________
பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு செல்வோர் ரூ.500 க்கு மேல் வைத்திருக்கக்கூடாது: அரசு உத்தரவு

ஒரு ஒரு வாட்டியா போகும் போதெல்லாம் ரூ 500 வெச்சிருக்கலாம்தானே! நல்லா குடுக்குறாய்ங்கப்பா அகிடியா!
_________________________________________________
திமுக இல்லாமல் மத்தியில் ஆட்சி நடத்த முடியும்: காங்கிரஸ் எம்.எல்.ஏ.,ஞானசேகரன்

தலீவா! மம்மிக்கு போன் போட்டாச்சா? இல்லைன்னா நாளைக்கு முரசொலில கேள்வி பதிலா?
_________________________________________________
இரட்டை கொலை வழக்கு: விஜயகாந்துக்கு சி.பி.சி.ஐ.டி.,சம்மன்

நொந்து நூலாகப் போறானுங்க ஏண்டா கூப்டோன்னு. சாரின்னு சொல்லக்கூட விடமாட்டாரே. எனக்குப் பிடிக்காத வார்த்தைன்னு.
_________________________________________________
3 1/2 மணி நேரத்தில் 14 பேருக்கு அறுவை சிகிச்சை: மதுரை அரசு மருத்துவமனை மீது புகார்

திருப்பதில மொட்டையடிக்கிறா மாதிரி கீறி விட்டுட்டு நெக்ஸ்ட்ம்பாய்ங்களோ?
_________________________________________________
டைகர் பவுண்டேஷன்: புலிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க அரசு புது முயற்சி

என்னாது? நிஜம்மாவா? இந்தக் குழப்பம் வரக்கூடாதுன்னு புது வருடம் மாத்திவிட்டா மாதிரி புலிக்கு பேரு மாத்திடுங்க தலைவா?
_________________________________________________
இந்தியாவின் தேசிய இயக்கங்களில் ஒன்றாக தி.மு.க. மாறும்: கலைஞர்

அதுக்காகதான் இந்தி படிக்கணுமோ!
_________________________________________________
சென்னை வக்கீல்களுடன் மும்பை போலீஸ் மோதல்

சென்னை போலீஸ் மோதின விவகாரமே முடியல. நீங்க வேறயா?
_________________________________________________
சல்மான் கான் டவல் 62,000க்கு ஏலம்

நல்லா வருது வாயில. கோடி ரூபாய்க்கு கோவணத்த கூட எடுப்பானுங்க போல ஏலத்துல.
_________________________________________________
அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைக்க வேண்டும்: பிரதமருக்கு சோனியா கடிதம்

ஏம்மா. இதெல்லாம் அரிசி பருப்பை சொல்றீங்களா! அந்த நாய்க்கு அத்யாவசியம்னு கொடுத்த ஆயுதத்த சொல்றீங்களா?
_________________________________________________

இளிச்சவாய்த் தமிழன்!

இந்தியும் படிக்க வேண்டும் என்ற செய்தியும், நேற்று திரு ராமதாஸ் தமிழ் ஆட்சிமொழியாக்கப்பட வேண்டும் எனக் கோரிய செய்தியும், இது தொடர்பாக சரியா தவறா இடுகைகளையும் பார்த்த பொழுது ஒரு புறம் நம் இளிச்சவாய்த்தனத்தின் மீது கோபமும், கண் எதிரில் நடக்கும் மோசடியைத் தெரிந்துக் கொள்ளாத அவலமும் ஒரு சேர எழுந்தது. இந்தி தேவை அல்லது தேவை இல்லை என்பதல்ல என் எழுத்தின் நோக்கம். கர்நாடகா போனால் கன்னடம் தெரியவேண்டுமே, ஆந்திரா போனால் தெலுங்கு தெரிய வேண்டுமே என்ற வாதம் வருமேயானால், ஒவ்வொருவரும் எல்லா மொழியும் தெரிந்து வைத்திருக்கத்தான் வேண்டும்.

சென்னை வாசிகளுக்கு, அதிலும் சென்ட்ரல் சுற்றுப் புறத்தில் பணி செய்பவர்களுக்கு அடிக்கடி காணக் கிடைக்கும் காட்சி. திடீரென்று புற்றீசல் போல் இந்தி பேசும் இளைஞர்கள் கூட்டம் காணப்படும். சென்ட்ரல் எதிரில் புல் வெளிகளில், கடற்கரையில், மற்றும் சுற்றுலாத் தலங்களெங்கும் பெர்முடாவும், முண்டா பனியனும் அணிந்து தெருவெங்கும் பான் பராக் எச்சில் உமிழ்ந்தபடி சுற்றி, இரவில் தெருவோரம் படுத்து போலீசுக்கு போக்கு காட்டி, இந்தியில் சண்டைபோட்டு ஊர் திரும்ப, நினைத்த வண்டியில் முன்பதிவு செய்த பெட்டியில் ஏறி ரகளை செய்து இவர்கள் அடிக்கும் லூட்டி சொல்லி மாளாது.

யார் இவர்கள்? பெரும்பாலும் பீகாரிகள். எதற்கு வந்திருக்கிறார்கள்? மத்திய அரசின் ஒரு துறையின் ஆளெடுப்புப் பரிட்சைக்கு வந்தவர்கள். இலவசமாக ரயில்வே பாஸ் கொடுக்கப்படும் இவர்களுக்கு.(லல்லு லல்லுதான்). பரிட்சை எழுதுகிறார்களோ இல்லையோ, ஞாயிறு பரிட்சைக்கு முந்திய திங்களிலிருந்து அடுத்த வெள்ளி வரை இவர்கள் அடிக்கும் கூத்து கலங்கடிக்கவிடும். சரி, இவ்வளவு பேர் எப்படி வருகிறார்கள்?

பெரும்பாலும் இரயில்வேத்துறையின் கலாசி வேலைக்கு வருபவர்கள் இவர்கள். எழுத்துத் தேர்வுக்கு வந்தவர்கள். எல்லா மாநிலத்துக்கும் இவர்கள் சென்றாலும், தமிழகம் மட்டும் ஏமாளி. ஏன் தெரியுமா? மத்திய அரசுப் பணியில் இட ஒதுக்கீடு இருக்கிறதல்லவா? தாழ்த்தப் பட்ட மற்றும் பழங்குடியினருக்கான இட ஒதுக்கீட்டுக்கு ஆளில்லாமல் சேர்ந்து போன இடங்களை இட்டு நிரப்ப அடிக்கடி நடத்தப் படும் சிறப்புத் தேர்வுக்காக வந்தவர்களாம்.

அப்படியானால், தமிழகத்தில் தாழ்த்தப்பட்ட/பழங்குடியினர் அனைவரும் வேலையில் இருக்கிறார்களா? சாத்தியமே இல்லை. ஒன்று, இப்படி ஒரு தேர்வு இருக்கிறதென்பதே அறிந்திருப்பதில்லை. மற்றது கலாசி வேலைக்கு அடிப்படைத் தகுதியாக எழுத்துத் தேர்வை ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே எழுதக் கூடும். எட்டாவது படித்த ஒரு தமிழன் ஆங்கிலத்தில் தேர்வெழுதும் சாத்தியம் இன்றைய கல்வி முறையில் அசாத்தியம். எனக்கு வியப்பளித்த ஒன்று என்னவெனில் படித்தவர்கள் கூட தேர்வெழுதத் தயாரில்லை. ஏனெனில் படித்த படிப்புக்கு இந்த வேலை தாழ்வென்ற எண்ணம். இன்று இந்த வேலையில் சேர்பவர்களின் சம்பளம் மற்றும் படிகள் சேர்த்து 15 ஆயிரம். இருந்தும் இப்படி ஓர் புறக்கணிப்பு. மற்றது இந்தியில் எழுதுவது தமிழ்நாட்டில் நினைத்துப் பார்க்க முடியாத கேலிக்கூத்து.

இத்தகைய இளைஞர்கள் என்னவாகிறார்கள். வேலையின்மை, வறுமை ஆகியவை சமுதாய விரோத சக்திகளாகவும் இன்ன பிற சமுதாயக் கேட்டுக்கும் தான் வழி வகுக்கும். பீகாரின் ஒரு சின்ன கிராமத்திலிருந்து பல்லாயிரக் கணக்கான மைல் தள்ளி வந்து இப்படி ஒரு பரீட்சையில் கலந்து கொள்ள அங்கு மட்டும் எப்படி சாத்தியமாகிறது? அவனைக் கட்டி இழுத்துக் கொண்டா வந்தார்கள்?

அப்படி வந்து தேர்வாகி இங்கு பணிபுரியும் பெரும்பாலானவர்களிடம் நான் கேட்டேன். உன் ஊர்ப் பக்கம் பணிமாற்றம் கேட்கவில்லையா? ஊருக்குப் போவதாகக் கூட தெரியவில்லையே என்று. சிரித்தபடி சொல்வார்கள். இங்க நல்லா இருக்கு. அங்க போனா அடிதடி, போலீஸ்னு தினம் ஏதோ ஒரு தகறாரு வரும். ஏதாவது விசேஷமென்றால் போய்விட்டு வந்துவிடுவோமாம். அவன் எப்படியோ போகட்டும்.

நம் படித்த இளைஞர்கள் ஏன் இந்த வாய்ப்பைப் பயன் படுத்துவதில்லை.பல கோடிக் கணக்கில் இவர்களுக்காக அமைக்கப்பட்ட‌ வாரியம் என்ன செய்கிறது? செம்மொழி என்ற சாதனையைச் சொல்லிக்கொண்டே என்ன புண்ணியம். ஏன் தமிழ்நாட்டில் தமிழில் எழுத வாய்ப்பு இல்லை? இது மறைமுக இந்தித் திணிப்பா இல்லையா? கர்நாடகா, ஆந்திரா, கேரளாவில் இந்தியும் படிப்பதால் அவர்கள் இப்படி விடுவதில்லை. தமிழ்நாட்டின் இன்னொரு சாபக்கேடு இது.

நம் அரசியல் வாதிகள் ஒன்று அல்லது இரண்டு முறைக்காவது சலுகை பெற்று தமிழில் எழுத வழி செய்து, இவ்விளைஞர்களுக்கு வழிகாட்டி வேலை வாய்ப்புப் பெற்றுத்தர வழி காண்பார்களா? கணினியில் விடைத்தாள் திருத்தப் படுவதால் வேலை வாங்கிக் கொடுக்கிறேன் என்று காசு பார்க்க முடியாது. இனிமேல் இந்தி படிக்க வழி செய்வதால் இன்னும் கொஞ்சம் இந்தி ஆசிரியர்களுக்கு வேலை வாய்ப்பு. அதாவது இந்தியில் தேர்ச்சி பெற்ற தமிழனுக்குத் தான் என்று சொல்வார்களோ அதுவும் பீகார்க்காரன் வருவானோ தெரியாது.

சரி சம்பந்தமில்லாமல் முதல் பத்தியில் திரு ராமதாஸை எதற்கு இழுத்தாய் என்கிறீர்களா? திரு மூர்த்தி, திரு வேலு என்று இரண்டு பா.ம.க. உறுப்பினர்கள் இரயில்வேத் துறை துணை மந்திரிகளாக இருந்த காலத்தில்தான் இந்த சிறப்புத் தேர்வுகள் நடந்தன. லல்லுவால் முடிந்தது. இவர்கள் செய்ததென்ன? ஐயா சாமிகளா, இங்கிருக்கும் தமிழனுக்கு உங்களால் செய்யக் கூடியது இது. உங்கள் தோழமைக் கட்சி ஆட்சியிலிருக்கிறது. செய்ய முடியுமா உங்களால்? தமிழகத்திலிருக்கும் மத்திய அரசு அலுவலகங்களில் எத்தனைக் காலியிடங்கள் எனத் தொகுத்து தமிழ்நாட்டு இளைஞர்கள் தமிழிலும் எழுதலாம் என்ற விதிவிலக்கோடு ஒரு சிறப்புத் தேர்வுக்கு வழி செய்ய முடியுமா உங்களால்? மறுக்கப்படும் பட்சத்தில் எது எதற்கோ பாராளுமன்றத்தை நாறடிக்கிறீர்களே. இதற்குக் குரல் கொடுப்பீர்களா?

Thursday, August 27, 2009

நறுக்குன்னு நாலு வார்த்த - 99

"சானல் 4" வெளியிட்ட காட்சிகள் குறித்து இந்திய மத்திய அரசு அதிக கரிசனை

ஐய்ய்ய்யோ! புல்லரிக்குது. யார் மேல கரிசனை? மாட்டிகிட்டானேன்னா? ஒட்டப்பாலம் ஒண்ணா கூடி ஏதோ சொல்லிக் கொடுக்கும். செத்தது சிங்களவன். சுட்டது புலி. சீருடை டுபாக்குருன்னு. போங்கடா உங்க கரிசனை.
________________________________________________
வவுனியா முகாம்களில் உள்ள சிறுவர்கள்,பாலியல் துன்புறுத்தல்களுக்கு உட்பட்டுள்ளனர்: அவுஸ்திரேலிய தொண்டு நிறுவனம்

ஆமாங்க. இந்தப் புள்ளிவிவரமெல்லாம் சரியா வச்சிருங்க. நாள பின்ன இவனுக்கு அப்பன் ஒருத்தன் வருவான். அவன் இவ்வளவு பேரை நாசம் பண்ணப்பவே சும்மா இருந்தீங்க. நான் பண்ணது ஒண்ணுமே இல்லைன்னு.
________________________________________________
இலங்கையில் முறையற்ற நிர்வாகமே காணப்படுகிறது: ஆசிய அபிவிருத்தி வங்கி

எல்லாம் சொல்றீங்க. ஆனா கொட்டிக் குடுக்குறீங்களே பரதேசிங்களே.
________________________________________________
ராஜபக்சவின் தமிழின அழிப்பை இந்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

கும்பகர்ணன் தம்பி இவரு. ஆறுமாசம் தூங்கி இப்போதான் விழிச்சிருக்காரு. இன்னும் தடுத்து நிறுத்த என்ன இருக்கு?
________________________________________________
இலங்கையில் பொதுமக்கள் கொல்லப்பட்டமை தொடர்பில் சர்வதேச விசாரணை அவசியம்: சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம்

ஆமாம்! ரொம்ப அவசியம். அதுலையும் எல்லாருமா சேர்ந்து கைய தூக்கிட்டா அப்படியெல்லாம் ஒண்ணுமே நடக்கலைன்னு தீர்ப்பாயிடும்.
________________________________________________
படகோட்டிகளால் கைவிடப்பட்டு தமிழக மீனவர்களிடம் நகைகளை இழந்த அகதிகள்

இதுக்கு வேற எப்படியோ பிழைக்கலாம். இன்னும் நம்மாளுங்களை நம்பி வராங்களே. இந்த கொடுமைய எங்க போய் சொல்ல?
________________________________________________
ஜனாதிபதி தேர்தலில் 1 .75 லட்சம் மக்களின் வாக்குகளை பறிப்பதற்காகவே மீள்குடியேற்றத்தை அரசு தாமதிக்கிறது: மனோ கணேசன்

ஏங்ணா? உங்களுக்கு மனுசனெல்லாம் ஓட்டாதான் தெரியுமா?
________________________________________________
சரத்பொன்சேகா தொடர்பிலான செய்திகளை வெளியிட உள்ளகத் தடையாம்

அவனையும் வலையத்துக்குள்ள அனுப்புங்கப்பா. கொஞ்சம் ஆறுதலா இருக்கும்.
________________________________________________
ராகுலைச் சந்தித்தார் விஜய்! காங்கிரசில் இணைவு?

படம் ஓடலைன்னு இப்படியா பழிவாங்குவ. அது என்னா சாபமோ, தமிழச் சொல்லியே தமிழச் சாவடிக்கிறாய்ங்கப்பா.
________________________________________________
செட்டிக்குள தடுப்பு முகாமில் நாளாந்தம் தமிழர்கள் வெள்ளை வானில் கடத்தல் - பி.பி.சி சிங்கள சேவை

சே சே. உள்ளையே இருந்தா வெறுப்பா இருக்கும்னு பிக்னிக் கூட்டிட்டு போனேன்னு சொல்லுவான்.
________________________________________________
இலங்கை முகாம்களில் அனாதையாக சுற்றும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறுவர்கள்

தமிழனென்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா. பேசாம சுரணைக்கு க்ளோபல் டெண்டர் விட்டு காசு பார்க்கலாம்.
________________________________________________
இலங்கையில் 300 கண்ணிவெடிகளை அகற்றினோம்:இந்தியக் குழு

இதுக்காடா 1200 பேரு போனீங்க. அடுத்த ஆப்பும் பக்ஸேக்கு வச்சாச்சி. அண்ணனே சொல்லிட்டான் இனியும் ஏண்டா அடைச்சி வச்சிருக்கன்னு எந்தக் கபோதிப் பயலாவது கேப்பானா?
________________________________________________
முகாமிலிருந்து 800 பூசாரிகளை விடுவிக்கும் இலங்கை

ஏன். சாமி வந்து கனவில சொல்லிச்சோ. இவங்கள மட்டும் விடுன்னு.
________________________________________________
மக்களை சந்திக்க ஜெ.வுக்கு பயம்: EVKS இளங்கோவன்

நீ வெளிய வந்து சொல்லு முதல்ல.
________________________________________________
ஓட்டுக்குப் பணம்: தமிழகத்துக்கு பெருத்த அவமானம்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்

அப்படி நினைச்சித்தான் மொத்தமா லவட்டிட்டு ஊத்திக்கிச்சோ?
________________________________________________
மலேசிய ஓட்டலில் தமிழர்களுக்கு சித்ரவதை

பாஸ்போர்ட்ல இவன் நல்லவன்னு எழுதிடுறானோ. எவனப் பார்த்தாலும் அடிக்கிறான்?
________________________________________________
தமிழை மத்திய ஆட்சி மொழியாக்கவேண்டும்:ராமதாஸ்

தமிழன் தொலைக்காட்சியை அரசாங்கத் தொலைக்காட்சியாக்க வேண்டும்!
________________________________________________
அதிக அளவில் சிகரெட் பிடிக்கும் பெண்களுக்கான பட்டியலில் இந்தியாவுக்கு 3வது இடம்

ஸ்டைலு ஸ்டைலுதான். சூப்பர் ஸ்டைலுதான்.
________________________________________________
ஏழை மாணவர்களின் கல்விக் கடன் வட்டி ரத்து!

ஆமாம். விளம்பரத்துலதேன். நேர்ல போனா கல்வியும் வட்டியும் தூக்கிட்டு கடன் ரத்தும்பான்.
________________________________________________
லஞ்ச, ஊழல் வழக்குகளில் சிக்கும் பெரிய மனிதர்களை நழுவவிடக் கூடாது: பிரதமர் மன்மோகன் சிங்

பூட்டாசிங்கைத் தவிரவாங்கைய்யா?
________________________________________________
நண்பரை திருமணம் செய்ய மாலையுடன் வந்த வாலிபர்:மந்திரம் சொல்ல மறுத்த அர்ச்சகருக்கு அடி

ஏண்டா. லொள்ளுக்கு அளவில்லையா? இப்பதானே கோர்ட்ல தப்பில்லன்னாங்க. இனிமேதான் மந்திரம் மாத்தணும். அதுக்குள்ளயேவா அடிக்கறது ?
______________________________________________
தோழியை திருமணம் செய்யும் டென்னிஸ் வீராங்கனை

இவங்க மட்டைய வேற வேச்சிருப்பாங்களே! யாரு அடி வாங்க போறாங்களோ ?
________________________________________________

திருடனாய் பார்த்துத் திருந்தாவிட்டால்..

நண்பர் கதிரின் சரி...யார் நிறுத்துவது... என்ற இடுகையில் சொல்லி இருந்தார்:

"300 ரூபாய் கையூட்டை பிடிக்க 1200 ரூபாய் செலவா என்று என்னிடம் ஒரு குறுநகை வந்தது. “புகார் கொடுக்கும் ஒரு குடிமகனுக்கு நாங்கள் இருக்கிறோம் என்ற பெரிய நம்பிக்கையை கொடுப்பதுதான் எங்கள் கடமை. கையூட்டு என்பது பணத்தின் அளவில் இல்லை, 300 ரூபாய் என்பது கையூட்டாக வாங்குபவனுக்கு ஒரு வேளை சாப்பாட்டிற்கான பணமாக இருக்கலாம், ஆனால் அந்த கூலித் தொழிலாளிக்கு பத்து நாள் சாப்பாடு, அதாவது அவனுடைய பத்து நாள் உணவையே இன்னொருவன் திருடுகிறான்” என்று அவர் சொன்னது தான் மிகப்பெரிய நம்பிக்கையைக் கொடுத்தது."

படிப்பதற்கு மிகவும் அழகாக நம்பிக்கையூட்டுவதாக இருப்பினும் இது உண்மையல்ல. இது எந்த விதத்திலும் குடிமகனுக்கோ, ஊழலை ஒழிப்பதற்கோ உதவாது எனக் கூறினால் என்னை அடிக்க வருவீர்கள். உண்மை இதுதான். அந்த அதிகாரியே கொஞ்சம் மனம் திறந்தால் இப்படித்தான் புலம்பி இருப்பார். காரணம், அந்த‌க் குடிமகனுக்கு எதற்காக லஞ்சம் கோரப்பட்டதோ அது உடனே முடிந்துவிடும் என்பதில்லை. மாட்டிய ஊழியர், சக ஊழியருக்காக இல்லா விடினும், இந்த ஆள் வில்லங்கமான ஆள் என்று என்னவெல்லாம் முட்டுக்கட்டை இருக்கக் கூடுமோ தேடுவார். குடிமகன் சாட்சி, சம்மன் என்று அலைய வேண்டும். மாட்டிக் கொண்ட ஊழியரைப் பொறுத்தவரை இரண்டு கட்டமாக நடவடிக்கை இருக்கக் கூடும். ஒன்று நிர்வாகம் சார்ந்த ஒழுங்கு மற்றும் முறையீட்டுச் சட்டத்தின் கீழ். மற்றது காவல்துறை நடவடிக்கை மூலமாக நீதிமன்ற வழக்கும் தீர்ப்பும்.

முதல் வழியின் மூலம் இவ்வளவு சிறிய குற்றத்தை எளிதில் மறைக்கவோ, நிர்வாக முறைகேடு சுட்டியோ தப்ப முடியும். தொழிற்சங்கம், ரெகமென்டேஷன் மூலம் சிறிய தண்டனையோடு தப்ப முடியும். நீதி மன்ற கேஸ்களில் நல்ல வக்கீல் போதும்.

ஒரு உதாரணம் சொல்கிறேன். உண்மையில் நடந்த சம்பவம். அவர் ஒரு பொறியியல் அதிகாரி. மத்திய அரசுப் பணியைச் சார்ந்தவர். ஒரு உதிரி பாகத்தைப் பெற டெண்டர் விடப்பட்டு முறைப்படி ஆர்டர் கொடுக்கப்பட்டு, அந்த பாகத்தை சப்ளை செய்யும் கம்பெனியுடன் கூட்டுச் சதி செய்து, பொருள் வந்ததாகவும், பயன் படுத்தப் பட்டதாகவும் ஆவணத்தில் மடும் பதியப்பட்டு கம்பெனிக்குப் பணம் பட்டுவாடா செய்து கம்பெனியிடமிருந்து பணமாகப் பெற்றுக் கொண்டார். கம்பெனிக்கு சப்ளை செய்யாமலே கமிஷன் தொகை கிடைத்தது என்பது புகார்.

கூட்டுச் சதி/மோசடி என்பதால் காவல் துறைக்கு சென்றது வழக்கு. விசாரணையில் ஆவணங்கள் தெளிவாக இருந்தாலும் புகார் உண்மை எனத் தெரிகிறது. விசாரணையில் உதிரி பாகம் ஒன்று பொருத்தப் பட்டால், பழுதடைந்த பாகம் கணக்கில் வர வேண்டுமே எங்கே என்று கேட்கப் பட்டதற்கு ,அது பழுதல்ல; அது உடையும் தன்மை உள்ளது. எனவே பொருத்தப் படும்போதெல்லாம் பழைய பாகம் இருக்க வேண்டும் எனக் கூற முடியாது என்பது பதில். அது நியாயமானாலும், மிக மிகக் குறைந்த அளவே பழைய பாகங்கள் கணக்கில் வந்தன. ஆனாலும் ஐயமின்றி இதில் உண்மை இல்லை என நிரூபிக்க முடியாமல் போனது.


புகாரின் மறுபாதியான பணம் பெற்றுக் கொண்டதற்கான புகாருக்கு, அதிகாரியின் வீடு சோதிக்கப்பட்டு, ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு மிக நேர்த்தியாக அவர் வேலைக்கு சேர்ந்தது முதல் சம்பளம் போன்ற ஊதியங்கள் எல்லாம் கணக்கில் கொண்டு வரப்பட்டு, அவர் குடும்பத்துக்கு எவ்வளவு செலவிட்டிருக்கக் கூடும் என்றும் தாராளமாக கணக்கிடப்பட்டு வருவாய்க்கு மேல் இவ்வளவு பணம் என வழக்கு பதியப்பட்டது.

அதிகாரி தரப்பில் மிகத் திறமையான வழக்கறிஞர். அதிகாரிக்கு வெளியூரில் வேலை நிமித்தம் செல்ல நேரிடின் பயணப்படி வழங்கப்படும். அது கூடுதல் வருமானமாக இருக்கக் கூடாது என்பது வழிமுறையாய் இருப்பினும் அதுவும் ஒரு வருமானம். என் கட்சிக்காரர் மிக எளிமையானவர். புலால் உண்பவரல்லர். ஒழுக்கமானவர் என்பதால் எந்தக் கெட்ட பழக்கமும் இல்லை. காலை சிற்றுண்டி, மதியம் எளிமையான அளவான சைவச் சாப்பாடு, இரவு சிற்றுண்டி என்ற உணவுப் பழக்கம் உள்ளவர். தங்குமிடம் அலுவலகமே கொடுப்பதால் பயணப் படியில் சேமிப்பு சாத்தியம். இது கணக்கில் கொண்டு வரப்பட வேண்டும் என்று வருமானத்தைப் பெருக்கினார். செலவினத்திலும் அரசுத் தரப்பில் எங்கெல்லாம் தாராளம் காட்டினார்களோ அங்கெல்லாம் குறைத்து சில செலவினங்களை நியாயமாகக் கூட்டி மிக நேர்த்தியாக வரவு செலவு கணக்கு தயாரித்ததில் விழுந்த துண்டு எவ்வளவு தெரியுமா? வெறும் 6 ஆயிரம் ரூபாய்.

தன் மைத்துனி திருமணத்துக்கு 6 ஆயிரம் ரூபாய் கொடுத்து உதவியதாகவும் அந்தப் பணம் பல வருடங்கள் கழித்து திரும்பக் கொடுக்கப்பட்டதாகவும் அந்தந்தக் காலக்கட்டத்தில் கணக்கு காட்டப்பட்டது. தகுந்த ஆதாரங்கள் இல்லாத காரணத்தால் சந்தேகத்துக்கான பலன் குற்றவாளிக்கு வழங்கப்பட்டு கேஸ் தள்ளுபடி செய்யப்பட்டது. எல்லாமே இப்படியா எனக் கேட்பவருக்கு பதில் மிகப் பெரும்பாலும் இப்படித்தான் என்பதுதான் உண்மை. மிக்ச் சிறிய மீன் அகப்படும். சொன்னாற்போல் ஆன செலவுக்கு சம்பந்தமே இல்லை.

அதை விட வேடிக்கை என்னவெனில், நீதிமன்றத்தில் ஜெயித்தாலும் நிர்வாகத்தினர் கோடாரிக் காம்புகளை நீக்கவென்றே ஒரு சட்டம் இருக்கிறது. அதிகாரிகள் மட்டத்தில் 50 வயதானவர்களின் பணித்தேவை பரிசீலிக்கப்பட்டு தேவையில்லை எனில் நீக்கப்படலாம். ஒருமாத சம்பளம் நோடீசுக்கு பதிலாக வழங்கப் பட வேண்டும் என்பது. அந்த விதியின் படி பணிநீக்கம் செய்யப்பட்டது. அலுவலக நேரம் முடிய அழைக்கப்பட்டு, நோட்டீஸ் சம்பளம் செக் வழங்கப்பட்டு, பணி நீக்கம் செய்யப்பட்ட ஆணை கொடுக்கப்பட்டது. சிரித்தபடி எதிர்பார்த்தாற்போல் வாங்கிக் கொண்டு சென்றார். மத்தியப் பணியாளர் ஆயத்தில் வழக்குப் போட்டார். தனக்கு இன்கிரிமென்ட் வழங்கப் படவில்லை (வெறும் ரூ 100. காரணம் இவருடைய பணி ஆவணங்கள் காவல் துறையிடமிருந்து வந்திருக்கவில்லை). எனவே சட்டப்படி கொடுக்கப்பட்ட நோட்டீஸ் சம்பளம் முழுமையானதல்ல. சட்டப் படி பணமாகத் தந்திருக்கப்பட வேண்டும். செக்காக வழங்கப்பட்டது. இது வரை தன் பணி குறித்து எந்தவித அதிருப்தியும் தெரிவிக்கப் படவில்லை என்பது காரணங்கள்.

அத்தனைக் காரணங்களும் ஏற்கப்பட்டு பணிநீக்கம் செய்யப் பட்டது செல்லாது எனத் தீர்ப்பாகியது. வெற்று கவுரவத்துக்கு உயர்நீதி மன்றம் உச்சநீதி மன்றம் எனப் போனதில் வருடங்கள் கடந்து, பணிமூப்படைந்த பின்னர்தான் உச்சநீதி மன்றத் தீர்ப்பு வந்தது. பணி நீக்கம் செல்லாது என்பதோடு, இடைக்காலம் முழுதும் பணியிலிருந்ததாகக் கருதி முழு சம்பளம் பதவி உயர்வு எல்லாம் அளிக்கப்படவேண்டுமென்று.

இதுதான் யதார்த்தம். புகார் கொடுத்தவர் அடைந்த பலன் என்ன? அது போகட்டும் இப்படி வழி இருப்பது என்ன பயத்தைத் தோற்றுவிக்கும். "திருடனாய் பார்த்துத் திருந்தாவிட்டால்" என பிகிலடிக்க வேண்டியதுதான். ஊழல்தடுப்பு அதிகாரியைப் பொறுத்த வரை அவர் கடமை கேஸ் பதிவு செய்து கோர்டில் சமர்ப்பிப்பது வரை. அப்புறம் சட்டம் ஒரு இருட்டறைதான். பெரிய மீன் கதை..சரி சரி இதுவே இழுவை. தப்பிச்சிப் போங்க.

Tuesday, August 25, 2009

மூர் மார்கெட்

எனக்கு மூர்மார்க்கட் அறிமுகமானது என்னுடைய 17ம் வயதில்.(சென்னைல அஞ்சாம்புல இருந்து படிச்ச ஒரு புள்ள 17 வயசுலதான் மூர்மார்க்கட்ட பார்த்துச்சுன்னா தெரிஞ்சிக்கிங்க எவ்வளவு அப்புராணின்னு). என் தம்பி ஒரு விபத்தில் சென்னை பொது மருத்துவ மனையில் மாநகராட்சியினால் சேர்க்கப் பட்டதால் இந்த பாக்கியம் கிடைத்தது. தனியாக பஸ்ஸில் ஏறியதும் அடுத்த ஸ்டாப்பிலிருந்தே அண்ணா மூர்மார்கட் வந்தா சொல்லுங்கன்னு ஆரம்பிச்சி, மறந்துட்டா என்ன செய்யன்னு டிக்கட் குடுக்க அவரு போற இடமெல்லாம் சொக்காய பிடிக்காத குறையா போனத நினைச்சா இப்பக் கூட சிரிப்பு வரும்.


சனியன் தொலஞ்சதுன்னு கவனமா இறக்கி விட்டாங்க. அவ்வளவு கூட்டத்தை முதல் முறையா பார்க்கிறது ஒரு பக்கம், பொது மருத்துவ மனையில் தனியா வார்டத்தேடி எப்படிப் போகப்போறேன்னு ஒரு பக்கம், திருவிழால காணாம போன மாதிரியே போய்க்கிட்டிருந்தேன். மூர்மார்க்கட் உள்ள போகாமலே என்னத் தேடி வந்து அதிர வைத்தது ஒரு அங்கம். நடை பாதையில் நின்றிருந்தார்கள் 2 பேர். ஒருவர் கையில் 10 -15 பேனாக்கள். மற்றவர் ஒரு பேனாவை திரும்ப நீட்டிக் கொண்டிருந்தார். நான் கடந்து போகவும் படக்கென தோளைத் தொட்டிழுத்து, தம்பி இதில எழுதி இருக்கிறத படிச்சி சொல்லுன்னாரு விக்கிறவர். ஆகா, நம்மளையும் படிக்க சொல்லி கேக்க ஒரு விசிறின்னு மண்டைக்கு கர்வம் ஏற, ஹீரோ, மேட் இன் சைனானு படிச்சி பக்கத்து ஆளைத் திரும்பி பார்க்கவும், அவரு போய்க்கிட்டே இருந்தாரு.


இந்தாங்கண்ணா என்று திரும்பக் கொடுக்க, வாங்கிக்க தம்பி 15ரூ தான் என்றார். பாட்டியிடம் வாங்கிக் கொண்டு வந்த 1ரூபாயில் பஸ்ஸூக்கு போக வர 50 பைசா. போனதும் 50 பைசா திருப்பிக் கொடுக்க வேண்டிய ஆளுட்ட போய் 15ரூ பேனா வாங்க சொன்னா திகைச்சிப் போச்சி. இல்லண்ணா வேணாம் என்றேன். நல்ல பேனாப்பா. வாங்கிக்க என்றார். வேணாங்க காசு இல்லைன்னு சொன்னேன். படிக்கிறியா? நல்ல மார்க் வரும்னு செண்டிமெண்டா அடிச்சாரு. இல்லைங்க வேணாம்னதும், விலை கேளு என்று அன்பாக சொன்னார். அடி விழுந்தாலும் பரவாயில்லை 50 பைசான்னு கேக்கலாமான்னு தோணினாலும் இல்லைங்க வேண்டாம், காசு இல்லைன்னு சேர்த்து சொல்லிப் பார்த்தேன். டேய். எவ்ளோ முடியுமோ கேளு. கட்டுப்படியானா குடுக்குறேன். இல்லைன்னா போயிக்கன்னு மரியாதையா சொன்னாரு. அட வேணாம்னு சொல்றப்ப விலையேன் கேக்குறதுன்னு கண்ணு தளும்ப வேணாண்ணா காசு இல்லைன்னேன். அடிக்காத குறையா விலை கேளுன்னு மிரட்டுறான். 75 பைசா காண்பிச்சி 25 பைசா பஸ்ஸுக்கு வேணும். 50 பைசா வீட்ல குடுக்கணும். என்ன விட்றுங்கண்ணான்னு அழுதுட்டேன். தேறாதுன்னு தெரிஞ்சதும் பிடுங்கிக்கிட்டு கேட்டான் பாருங்க கேள்வி, காசு இல்லைன்னா ஏண்டா கைல வாங்கினன்னு. இந்த டெக்னிக் கிட்டதட்ட 3 வருசம் கழிச்சி தான் பாரீஸ் கார்னர்ல புரிஞ்சது. விக்கிறவனும் வாங்குறவனும் ஒரே டீம். கொஞ்ச நேரம் இவரு விக்க மத்த ஆளு வாங்குறா மாதிரி நடிக்கிறது. அப்புறம் இவரு விக்க மத்தவரு நடிக்கிறது. நடுவில போற வர என்னை மாதிரி கேனையன புடிச்சி படிச்சி சொல்லுன்னு ஆட்டய போடுறது.


அப்புறம் வேலைக்கு சேர்ந்து பக்கத்துலயே மூர்மார்கட் அமைஞ்சதால, நெளிவு சுளிவு தெரிஞ்சி வேடிக்க பார்க்கன்னே போறது. என்னமால்லாம் ஏமாத்துவானுங்க தெரியுமா? அடுத்த ஆட்டை செண்டர் செருப்புகடை. மாட்றது பெரும்பாலும் வெளியூர் பார்ட்டிகளும் வெள்ளந்தி கிராமத்து ஆளுங்களும். அப்போல்லாம் ஏரோப்ளேன் டயர் சோல்னா உழைக்கும்னு நம்பிக்கை. சைக்கிள் டயர்ல தெச்சி கூட ஏரோப்ளேன் டயரும்பானுங்க. கோந்து தடவி ஒட்டுவானுவளா தெரியாது. மாடு ஒன்னுக்கடிச்சத மிதிச்சாலே வாய பொளக்கும். மழைக்கு எப்படி இருக்கும் சொல்லுங்க. அதுமில்லாம, தோல்ல சோல் இருக்கிற (காபூலின்னு சொல்றாங்களே அது) அதுக்கு லாடம் வேற அடிப்பான் நம்மாளு. தேஞ்சிறப்படாதுன்னு. விவரமா போய் வேடிக்கை பார்த்தாலே பாசமா கூப்பிட்டு செருப்பு காட்டுவானுங்க. சொல்ற விலை பாட்டா மாதிரியே ரூ50.99னு ஆரம்பிக்கும். நம்ம கிட்டயேவான்னு 30ரூபாய்க்கு கேட்டு, அவன் தங்கச்சி புருஷன் கடன் கேட்டா எவ்ளோ கஷ்டம்னாலும் இல்லைன்னு சொல்ல முடியுமா மாதிரி ஃபீல் பண்ணி 45 ரூன்னா குடுக்குறேன்னு போராடி 40ரூபாய்க்கு குடுப்பான். கொடுமை என்னன்னா, அங்கனயே உக்காந்திருப்பாரு ஒரு ஆளு செருப்பு தைக்க. அவர காட்டி, ஆணி அடிச்சிக்கிங்க நாள்பட வரும்னு சொல்லுவாரு. செருப்பையும் நம்மட்ட குடுக்காம அங்க குடுத்துடுவாரு. வேணான்னு வர நினைக்கிற ஆளுங்களுக்கு தாவு தீர்ந்துடும்.


அந்தாளு கூசாம சொல்லுவான். ஆணி அடிக்கலைன்னா ஆறுமாசம் கூட வராதுன்னு. எவனாவது அப்படின்னா வேணாம் துட்ட குடுய்யான்னு கேப்பானான்னு நானும் பார்க்குறது. ஒரு வீரன் கூட இல்லை. ரொம்ப விவரமா எவ்ளோ ஆணிக்குன்னா, பித்தள ஆணி மேலுக்கு ஒன்னு 20 பைசாதான், கீழ லாடம் 4 வரும் ஒன்னுக்கு ஒரு ரூபாம்பான். நாம என்ன நினைப்போம் மிஞ்சி போனா 10 அல்லது 15 ஆணின்னு. எப்படி அடிப்பானோ தெரியாது. புள்ளிக்கோலம் மாதிரி, இண்டு இடுக்கெல்லாம் அடிச்சிடுவான் சிமிட்ற நேரத்துல. 30ரூ குடுங்கறப்பதான் மயக்கம் வரும். ஏண்டா செருப்பே 40ரூ ஆணிக்கு 30ரூ எப்டிடான்னு. எண்ணிக்கம்பான். வேணாம்னா அடிச்சதுக்கப்புறம் எப்படி புடுங்கறது. அடிக்க சொல்லவே வாய்ல என்னா வெச்சிறுந்தன்னு மிரட்டல் வரும். விதியடான்னு கெஞ்சி கூத்தாடினா 20ரூனு ஒத்துக்குவானுங்க. திட்ற திட்டு இலவசம்.


வெயில்கால ஸ்பெஷல் ஆட்டை டெக்னிக் இது. சர்பத் வண்டியும் குச்சி ஐஸ்காரனும் போடுற ஆட்டை. என்னதான் உசாரா எவ்ளோ நன்னாரி சர்பத்னாலோ, சேமியா ஐஸ்நாலோ ஒன்னு அம்பது பைசா, ஒன்னு இருவத்தஞ்சு பைசான்னு விலைய கேட்டப்புறம் வாங்கினாலும் ஆளிருந்தா அவங்க கிட்ட என்ன வேணும்னு கேட்டு, இல்லைன்னா எதையோ நோண்டிகிட்டிருப்பாங்க. வெயில்ல கைல வெச்சிகிட்டு சும்மாவா இருக்க முடியும். உறிஞ்சிட்டு காச நீட்டுனா இன்னாது மெட்ராஸ்கு புச்சா. அம்பது பைசா/நால்னா குடுக்குற. ஒரு ரூபா உங்கப்பன் குடுப்பானான்னு குண்ட போடுவானுவ. அதிர்ந்து போய், ஏம்பா விலை கேட்டுத்தானே வாங்கினதுன்னா, ஆமாம் ஒரு ரூபாய் அம்பது காசு, ஒரு ரூபா இருவத்தியஞ்சு காசுன்னு சொன்னேன்னு சாதிப்பானுவ. வாய்ல வெச்சப்புறம் காச கக்காம முடியுமா? காசு இல்லைன்னா அடி கூட விழும். சாவு கிராக்கின்னு.


இத்தனையும் தாண்டித்தான் மூர்மார்கட் என்ற அந்த உலகத்துக்குள்ள போக முடியும். அது ஒரு தனி உலகம்.

Monday, August 24, 2009

நறுக்குன்னு நாலு வார்த்த - 98

விடுதலைப் புலிகளுக்கு சொந்தமான கப்பல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணைகள்

அதான் தகவல் குடுத்தது யாருன்னு புத்தகமே வந்தாச்சாமே ! நாங்களே கண்டு பிடிச்சோம்னு சொல்லிக்கவா?
__________________________________________
புலிகளின் ஆயுதக் கப்பல்கள் பற்றிய புலனாய்வுத் தகவல்களை வழங்கியது உட்பட மிக முக்கியமான, மூடிமறைக்கப்பட்ட பங்களிப்பை இந்தியா வழங்கியுள்ளது : 'சிறிலங்கா - போரில் இருந்து அமைதிக்கு'

ஆஹா. வர ஆரம்பிச்சிடுசா? ஆமாம் பண்ணோம்னு சொன்னாலும் எங்காளுவளுக்கு கூட்டணிதான் முக்கியம்.
__________________________________________
கொரில்லா போருக்கு தயாராகும் விடுதலைப்புலிகள்

உங்க கிட்ட வந்து சொன்னாங்களா? சும்மாவே குரங்குப்பய. இவனுவ கொள்ளிக்கட்டைய வேற குடுப்பானுவ.
__________________________________________
நாம் புலிகளின் கெரில்லா தந்திரோபாயத்தினை பின்பற்றினோம் அதுதான் வெற்றிக்கு காரணம் - சரத் பொன்சேகா

எது? பாது காப்பு வலயதுக்குள்ள வர வெச்சி பச்ச புள்ளைங்கள சாவடிச்சதா? அதுக்கு உங்க அகராதில கெரில்லாவா? அது பேரு பச்ச துரோகம். போடாங்.
__________________________________________
என் தேர்தல் தோல்விக்கு ராஜபக்சே காரணமல்ல:மணிசங்கர் அய்யர்

இதுக்கு கூட அவன் காரணமில்லைன்னு சொல்லி கால நக்கறது எதுக்கு?
__________________________________________
நாம் தமிழர் இயக்கம் அரசியல் இயக்கமாக மாறும்: இயக்குநர் சீமான்

திருமாவ நம்பினோம். நாசமா போச்சி. அரசியல்னு போனா கடிவாளம் விழுமே ஐயா. நீங்களுமா?
__________________________________________
பாகிஸ்தானே எமது முதலாவது நண்பன் நாம் அவர்களிற்கு நிறைய கடமை பட்டிருக்கின்றோம் - சிறிலங்கா இராணுவம்

நாராயணா! சிவ சங்கரா! தேவையா? ஆமாம் நண்பனைச் சொல்லு உன்னை சொல்லுறேன்னு ஏதோ சொல்லுவாங்கல்ல?
__________________________________________
ஈழத்துக்காக அமைதி வழியில் போராடுவோம்: வைகோ

எப்படி. பொத்திக்கிட்டு கம்னு இருந்துடலாமா?
__________________________________________
காந்தி படம் போட்ட 100 ரூபாய், 500 ரூபாய் நோட்டுகளுக்குதான் இடைத் தேர்தலில் வெற்றி கிடைத்தது.

நாளைக்கு டங்குவாலு லபோ திபோன்னு அடிச்சிக்கும். காந்திக்கு பேரன் நாந்தானு.
__________________________________________
புலிகளுக்குச் சொந்தமான 10 சிறிய ரக வானூர்திகள் எரித்திரியாவில் தரித்து நிற்கின்றன: சிங்கள நாளேடு

எல்லாம் காலிபண்ணிட்டோம்னு அலட்டுனது என்ன?
__________________________________________
20 வருட காலத்திற்கு ஜனாதிபதி ஆட்சி நடத்துவார்: பந்துல குணவர்தன

விசுவாசத்துக்கு ஒரு அளவில்லையாடா? உன் நேரம் சரியில்லைன்னா அதுக்கப்புறம் நடத்தமாட்டனான்னு வேன் வரும் சாக்கிரத.
__________________________________________
திருவாங்கூர் ராஜவைத்திய சாலை டாக்டர் விடுதலை

அடப்பாவிங்களா! மோசடிய பெரிய ரேஞ்ச்ல பண்ணா சீக்கிரம் விட்றுவாய்ங்களோ ?
__________________________________________
விடுதலைப் புலியாருக்கு தடைவிதித்தது போன்று விடுதலை சிறுத்தையாருக்கும் தடை விதிக்க மத்திய அரசு ஆலோசனை

தோடா! ஆக தடை புலிக்கும் சிங்கத்துக்கும் இல்லை. விடுதலைதான் உறுத்தல். வாழ்க சனநாயகம்.
__________________________________________
சென்னை: நவீனமாகும் தொற்றுநோய் மருத்துவமனை

எது நவீனமாகுது? தொற்றுநோயா? மருத்துவமனையா?
__________________________________________
பெண் போதை சாமியாரின் வீட்டுக்கு சீல்வைக்கப்பட்டது

வீட்டுக்குத் தானே? பாட்டிலுக்கு இல்லைல்ல? பேரு வைக்கிறானுங்க பாரு போதை சாமியாராம்.
__________________________________________
இலங்கையின் அபிவிருத்தியில் சீனா பிரதான பங்குதாரர்: பசில் ராஜபக்ஷ

வித்துட்டிங்களாடா? வேற யாரெல்லாம் பங்கு?
__________________________________________
இலங்கையில் இடம்பெற்ற இன ஒடுக்குமுறைக்கு எதிராக சர்வதேச ரீதியில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் : பிரான்ஸிஸ் பொய்லி

கிழிஞ்சுடும். கண்டனத்துக்குரியது. எதிர்காலத்தில் இவ்வாறு நடக்காமல் எச்சரிக்கப் படுகிறார்கள்னு சொல்லிடுவாய்ங்க.
__________________________________________

ஆறு 'மை'க்கூவும் அரை வேக்காடாய் ஒரு கவிதையும்.

(தலைப்பும் அமைப்பும் கலகலப்ரியாவிடம் சுட்டது)

காதல்
!

வலி விதைத்து
கண்ணீர் பாய்ச்சி
பூத்த மலர்..

கண்ணீர்..

பிரிவெனும் நெருப்பை
அணைக்கும் முயற்சியில்
ஆவியான மனம்..

நெருப்பு..

என்னைத் தவிர்த்து
யாருடனோ பேசுகையில்
உன் சிரிப்பு..

பூமி..

உன் வருகைக்காய்
காத்திருந்து வெடித்திருக்கும்
என் மனம்

ஆகாயம்..

நீ இருக்கையில்
வைரம் ஜொலிக்கும்
வெட்ட வெளி.

காற்று..

நீ செல்கையில்
பறித்துச் செல்லும்
என் மூச்சு.
***********************************************************************************
ஆத்மா..

மழையாய் வந்து பார்
உன்னில் கலந்து சேறாவேன்

நெருப்பாய் வந்து பார்
உன்னில் கலந்து தணலாவேன்

புயலாய் வந்து பார்
புழுதியாய் உன்னுள்ளிருப்பேன்

அமைதியாய் இருப்பினும்
நினைவாய் நானிருப்பேன்

பிரிக்க முடியாதென்னை
காரணம் நானுன்....
___/\___

(சரியா ந வே எழுதத் தெரியாத குழந்தை அதில் காக்காய் படம் போட்டு காட்டினா மாதிரி ஹைகூல ஒரு விஷயம் இருக்கு. என்னையே அறியாமல் பிரயத்தனம் இன்றி அமைந்தது. யாருக்காவது அந்தக் காக்கா தெரியுதா பார்க்கலாம் )

Sunday, August 23, 2009

யாராவது சொல்லுங்கப்பு!

தம்மாத்தூண்டு கவிதையை 'ஹை'கூன்னு ஏன் சொல்றாங்க?
__________
ஆளு ஓட்டினாதானே ஓடுது கார். அப்புறமென்ன ஆட்டோமொபைல்னு பேரு?
__________
மாசத்துக்கு ஏத்தா மாதிரி தேதி மாறாத கடிகாரத்த ஆட்டோமேடிக் வாச்னு வித்தா மோசடி இல்லையா?
__________
பரீட்சைல எல்லாமே தப்பா எழுதினாலும் ஒண்ணுமே எழுதாம வெத்து பேபர் குடுத்தாலும் ஒரே மாதிரி முட்டை மார்க் போடுறது சரியா?
__________
படிச்சி வாங்குறது, பணம் குடுத்து வாங்குறது, பாராட்டிக் குடுக்கிறது எல்லாத்துக்கும் பட்டம்னே சொன்னா வில்லங்கமா இல்லை?
__________
ராசிக்கல்லு விக்கிறவன் எந்த கல்லு போட்டா வியாபாரம் நல்லா நடக்கும்னு யாரையாவது கேப்பானா? தானே போட்டுக்குவானா?
__________
கடற்கரையும், காதலர்களும், கடலை விக்கிறவனும் காலம் காலமா இருந்தாலும் கடல போடுறதுன்னு இப்போ எப்படி கண்டு புடிச்சாங்க?
__________
சிடி படிக்க மாட்டங்குறான், எழுத மாட்டங்குறான், ஹேங்க் ஆயிட்டான்னு நம்மாளுங்க மட்டும்தான் சொல்றாங்களே. கம்ப்யூட்டர் ஆண்பால்னு தமிழன் எப்படி கண்டு புடிச்சான்?
__________
பயணப்படுறது நாமளா இருந்தாலும், ஊரு வந்துடுச்சா, வீடு வந்துடுச்சான்னு தானே கேக்குறோம். ஏன்?
__________
செல்லுல பேசினாலும் முடிக்கிறப்ப வெச்சிடுறேன்னு கொள்ள பேரு சொல்றாங்களே. ஏன்?
__________
யூரின் டெஸ்ட்னு போனா லேப்ல எந்தஅளவில கண்டெயினர் குடுத்தாலும் அவனவனும் நிரப்பி குடுத்து, போவாதவன் இவ்வளவு தான் போச்சுன்னு மன்னிப்பு கேக்குறா மாதிரி பண்றாங்களே. ஏன் ஒரு அளவு வைக்கிறதில்லை?
__________
ஹோட்டல்ல மெனுகார்ட் பார்த்து ஆர்டர் பண்றவங்க விலையை பார்க்காம ஆர்டர் பண்ணுவாங்கன்னு நம்புறீங்க?
__________
பிரபாகரன் சாயல்ல பிள்ளையார் வைக்கிறாங்களாமே. போலீஸ் பிரபாகரன்னு புடிக்குமா? பிள்ளையார்னு உட்ருமா?
__________
உலகத்துல எல்லா பிரதமருக்கும், ஜனாதிபதிக்குமாவது அவங்க அவங்க நாட்டு அரசியல் சட்டம் நல்லா தெரியுமா?
__________
பின்னூட்டத்துக்கு பதில் போட்டா அது என்ன ஊட்டம்?
__________

Saturday, August 22, 2009

நறுக்குன்னு நாலு வார்த்த - 97

பான் கீ மூனின் செயற்பாடுகளினாலேயே பிரபாகரனை காப்பற்ற முடியாமல் போனது – மோனா யூல்

எல்லாருக்கும் தெரிஞ்சதுதான். ஆனா ஏன்னு தெரியலையே?
__________________________________________________________
இலங்கை விமானப் படையே உலகிலேயே சிறந்தது என்கிறார் கோத்தபாய

படையப்பா ரஜனி சொன்னா மாதிரி விமானம் உன்னோடது தான். ஓட்டுனது யாருடா?
__________________________________________________________
வடக்கில் உள்ள இராணுவ முகாம்கள் நிரந்தரமாக முகாம்களாக மாற்றப்படும் - அரசாங்கம்

சுத்தியும் இவன வெச்சி உள்ள சிங்களத்தான வச்சிடுவ. அதுக்குதானே இவ்வளவு நரபலி.
__________________________________________________________
சர்வதேச சமூகத்தின் உதவிகளை இலங்கை இழக்க நேரிடும் -அமெரிக்கா

மிதமிஞ்சி குடுத்ததே நெஞ்சுமுட்டும் அவனுக்கு. இன்னமும் என்ன குடுக்கப் போறீங்க?
__________________________________________________________
இடம்பெயர்ந்த மக்களை அழுத்தங்கள் காரணமாக மீள்குடியேற்றிவிட முடியாது. - லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன

அப்பப்ப இத சொல்லி வேற ஏண்டா வெறுப்பேத்துறீங்க? அந்த மாதிரி ஒரு நோக்கமே இல்லைன்னு தெரிஞ்சும் தானே அகில உலகமும் அள்ளிக் கொடுக்குது.
__________________________________________________________
இலங்கைத் தமிழர்களைப் பாதுகாக்க, புலம்பெயர் தமிழர்கள் ஒன்று திரண்டு, தமிழீழம் மலரச் செய்வார்கள்: வைகோ

அதாஞ்செரி. நாம ஒரு புண்ணாக்குக்கும் லாயக்கில்ல. காச வாங்கினமா. ஓட்டைப் போட்டமா, போனமானு இருக்கலாம்.
__________________________________________________________
விடுதலைப் புலிகளுடனான யுத்தத்திற்கு பிரித்தானியாவிடம் ஆயுதம் பெற்றுக்கொள்ளவில்லை: இராணுவத் தளபதி

கொக்கு சுடவா வாங்கின பின்ன? ஒண்ணொண்ணையும் பெத்தாங்களா செஞ்சாங்களா தெரியல.
__________________________________________________________
தமிழர் பிரச்சினைக்கு எதற்கு அரசியல் தீர்வு? : பாலித கோஹன பேட்டி

அது சரிவராது உங்ககிட்டன்னு தானே ஆயுதமெடுத்தாங்க? எடுக்க வெச்ச உங்கள உலகம் சீராட்டுது. தற்காத்த ஜனங்களை உலகம் அழிச்சது.
__________________________________________________________
புலிகளுடனான போரில் 14,000 இராணுவத்தினர் கால்களை இழந்துள்ளனர்

நீ குடுக்கிறது பொய் கணக்குன்னு தெரியும்டி. ஆனா கால் போனது மட்டுமே இவ்வளவுன்னா மத்த கணக்கு எப்படி இருக்கும்?
__________________________________________________________
முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியாவில் வெளிநாட்டுப் படையினருக்கு பயிற்சிகைள வழங்கும் படையப் பள்ளிகள்

இன அழிப்பு வல்லுனர்களாச்சே. ஐ.நா. படை கூட பயிற்சிக்கு வந்தாலும் வரும்டி. உங்க நேரம்.
__________________________________________________________
பிரபாகரன் திரைப்படம்:மாவீரர் தினத்திற்கு பிறகு படப்பிடிப்பு ஆரம்பம்

பாட்டு இல்ல, டேன்ஸ் இல்ல, பறந்து பறந்து பைட்டிங் இல்ல. கிளைமாக்ஸ் புரிலம்பான் தமிழ்நாட்டு தமிழன். இங்க ரிலீஸ் பண்ணாதீங்க. ஹிந்துல விமரிசனம் கூட ஒழுங்கா வராது.
__________________________________________________________
பாகிஸ்தான் ராணுவத்திற்கு இலங்கை பயிற்சி

இதென்னாங்கடா கூத்து. இனிமே அழிக்க ஆளில்லன்னதும் நாந்தான் உதவினேன்னான் பாகிஸ்தான். அவனுக்கே இவரு பயிற்சி தராராம்ல. எப்படா நிஜம் பேசினீங்க.
__________________________________________________________
புலிகளுக்கு ஆதரவாக பேசிய திருமாவளவன் மீது அரசு நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறேன்: தங்கபாலு

புலிகளுக்கு ஆதரவா இருந்த இந்திரா காந்தியை கண்டிக்கிறேன்னு சொல்லு பார்ப்பம். பொழப்பு ஓடுதான்னு. நம்புனவங்கள நாசம் பண்ணிட்டு பேசுறாரு.
__________________________________________________________
அரசு பிரசார படத்தில் நடிக்க அமீர்கான் மறுப்பு

ஒரு இன்கம் டாக்ஸ் ரெய்ட் பண்ணா ஒத்துக்குவாரு.
__________________________________________________________
திருப்பதி கோவில் நகைகள் அடகு. அர்ச்சகர் கைது!

அர்ச்சகர் நகைய வெச்சா அறங்காவலர் கோவிலையே வெச்ச்ருக்கப் போறாரு. சாமியவாவது விட்டு வைங்கப்பா.
__________________________________________________________

கொஞ்சம் ஜோக் - கொஞ்சம் அலட்டல்

ஆபிஸ் ஜோக்ஸ் என்றால் முதலில் வருவது லீவ் லெட்டர் தான். அதிலும் எங்கள் அலுவலகத்தில் மக்கள் ரொம்ப சோம்பேறிகள். மாதிரி வைத்திருப்பார்கள். காஷுவல் லீவுக்கு, ஏர்ன்ட் லீவுக்கு, மெடிகல் லீவுக்கு என்று வகை வகையாக. தேதி மட்டும் மாற்றிக் கொடுப்பார்கள். மாதிரியில் தலை வலி என்றிருந்தால் அதேதான் காரணமாக இருக்கும். மாற்றக் கூட மாட்டார்கள். சில சந்தர்ப்பங்கள் மாட்டிவிடும் தருணங்களில் சும்மா அதிருதில்ல.

ஒரு அம்மணி, தன் தம்பிக்கு உபநயனம் என்று விடுமுறை எடுத்தார். வெள்ளைக்காரன் பூணூல் போட்டிருந்தால் அதற்குப் பெயர் இருக்கும். இதற்கெங்கே போவது. கேட்டால் மட்டும் யார் சொல்ல முடியும். ஆங்கில மனுவில் உபநயனம் என்று எழுதினால் நல்லாவா இருக்கும்? அந்தமா எழுதியது இப்படி: As i have to attend my brother's "Flower thread maarriage" on. என்னமோன்னு நினைச்சி குழம்பிடாம, தம்பிக்கு பூணல் கலியாணமாம். பத்திரிகையோட நீட்டுச்சி.

இன்னோரு ப்யூன் அய்யா அக்கா பெண் பெரியவளாகி வீட்டுக்கு அழைக்கிற விழான்னு சொல்லி தமிழில் எழுதி கொண்டு போய் கொடுத்தாரு. அதிகாரிக்கு தமிழ் தெரியாது. ஆங்கிலத்தில் எழுதி கொண்டு வர சொல்லிட்டாரு. இவரும் ஒரு எழுத்தரிடம் போய் எழுதித் தரக் கேட்டார். அந்தாளு வீட்டுக்கு அழைக்கிறதுன்னு போட்டா சரி வருமான்னு குழம்பி எழுதிக் கொடுத்தது " Yellow water shaking function" . அதாங்க மஞ்சள் நீராட்டு விழா.

ஒரு அம்மணி பேறுகால விடுமுறைக்கு எழுதிக் கொடுத்தது இது. மருத்துவர் ஒரு குத்து மதிப்பா எப்பொழுது குழந்தைப் பிறப்பிருக்கும் என்று சொன்னதை வைத்து எழுதியது இது. "As I have to deliver my child during next 10 days "

பெண்களுக்கு மட்டும் பேறுகால விடுமுறையான்னு மத்திய அரசு ஆண்களுக்கும் 15 நாள் விடுமுறை அறிவித்த‌து. சாதனையில பங்கு வேண்டாமா? அவர் எழுதினது இப்படி: "Since my wife has delivered a baby"

இன்னோரு ஊழியர் சென்னையை அடுத்த சூளூர்பேட்டையிலிருந்து தினமும் வந்து செல்பவர். ஆந்திரமாகையால் தமிழ் சரியாக‌ வராது. எப்படியோ தடுமாறி எழுதுவார். அவர் நிலத்தில் விவசாயமும் செய்து வந்தார். ஒரு நாள் லீவோ, பத்து நாள் லீவோ ஒரே ஒரு போஸ்ட்கார்ட் தான். ஒரே காரணம்தான். அதுவும் இப்படி:

"உயர்திரு எப்பனசிஒ அவர்கள சமுகம்
ஜயா
இப்பவும் நான் நாய கடிது விட்டதால் ஆபீஸ் வரமுடியாது. மன்னிக்கவும். ..... தேதி to ......... நான் ..... லீவ் வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்
அன்புள்ள தங்கள் உண்மை ஊழியன்
...''

எப்பனசிஒ=FA &CAO.
கார்ட் வந்து சேருமுன்னே இவர் லீவே முடிந்து வந்துவிடுவார்.

***********************************************************************************
நட்பு பாராட்டி நண்பர் சூர்யா:

அன்பு பாராட்டி நண்பர் சூர்யா கொடுத்த விருதை நானும் சூர்யாவுக்கு நன்றியுடன் பகிர்ந்து கொள்கிறேன்:
விருது பற்றிய விளக்கம்:
It is the Scrumptious Blog Award -a blog award given to people who:
Inspire you
Encourage you
May give Fabulous information
A great read
Has Scrumptious recipes
Any other reasons you can think of that make them Scrumptious!

அவார்ட் வாங்கிய அனைவரும் மேலும் இதனை 10 ப்ளாக் நண்பர்களுக்கு வழங்கவும்.

நான் கொடுக்க விழைபவர்கள்:
1. கலகலப்ரியா (http://kalakalapriya.blogspot.com)
2. மாதேஷ் (http://madydreamz.blogspot.com/)
3.ராசா(http://aveenga.blogspot.com/)
4.Kricons (http://kricons.blogspot.com/)
5.குமாச்சி (http://kummacchi.blogspot.com/)
6.கதிர்‍‍-ஈரோடு ( http://maaruthal.blogspot.com/)
7.சுரேஷ் குமார்(http://www.sureshkumar.info/)
8.கிருத்திகன் குமாரசாமி (http://kiruthikan.blogspot.com/)
9.யூர்கன் க்ரூகியர் (http://inthiyaa.blogspot.com/)
10.வணக்கம் தமிழன் (http://vanakamtamilan.blogspot.com/)

Friday, August 21, 2009

ஞானக் கிணற்றிலோர் அஞ்ஞானக் குழி..

(இந்த இடுகை யாரையும் புண்படுத்தவோ, அவர்களின் நம்பிக்கையைகொச்சைப் படுத்தவோஎழுதப்படவில்லை. மிகச் சிறுவயதிலிருந்துகிட்டத்தட்ட 40 ஆண்டுகள் பார்த்து அனுபவித்தவலிகளின் வெளிப்பாடு. குற்றஉணர்ச்சியைக் காசாக்கும் கேவலம் தந்த வலி. கடமையை காசால்அடிக்கும்கயமைத்தனத்தைப் பார்த்த வலி. கை பிடித்து வழி நடத்தும் புனிதத்தொழிலை காசுக்குவிற்கும் அவலத்தினை அனுபவித்து எனக்குள் புதைத்தவலி. நான் நாத்திகன் அல்ல. இந்த வலிதாங்காமல் என்னதான் இது எனத்தேடித் தேடிப் படித்து, பலரைக் கேட்டறிந்த பின் இந்தக்கயமையை தாங்காதவலிகள். )

யாகத்துக்கு கறுப்புப் பூனை தேடிய சாமியார் கதை தெரியும் தானே. (தெரியலைன்னா அதில ஒரு இடுகை போடுவோம்ல )

இன்றைக்கு நாம் செய்யும் சடங்குகளும் இப்படித்தான் ஆகிவிட்டது. சென்னையைச் சுற்றிலும் புற்றீசல் போல் பெருகிவரும் புறநகர்க் குடியிருப்புக்களிலும், நகருக்குள்ளேயும் (எத்தனை கோடி விலை) சமீபத்தில் கார்ப்போரேட் பாணியில் பெருகி வருபவை ஞான வாபி எனும் நீத்தார் கடன் செய்யும் மையங்கள். கொடுமை என்ன தெரியுமா. ஞான வாபி என்னும் வட சொல்லுக்கு அறிவுக் கிணறு, ஞானக் கிணறு என்று பொருள். இங்கு வருபவர்களின் அஞ்ஞானத்தைக் காசாக்கும் மையம் இது. ஆம். அடுக்குமாடிக் குடியிருப்பில் வசதிக் குறைவு, தனி வீடாயினும் நீத்தார் கடன் என்பது ஒரு அசுப காரியம் என்ற எண்ணப் போக்கில், காசு கொடுத்து விட்டால் எல்லாமும் கிடைக்கும். பிக்னிக் மாதிரி போய் நடத்திவிட்டு வரலாம் என்ற சுகம் தேடும் போக்கும் காரணமான படியால், இது ஒரு தவிர்க்க முடியாத சமாசாரமாகி விட்டது. புரோகிதத்தில் வரும், மிதமிஞ்சிய, வரி என்ற பேச்சுக்கே இடமில்லாத வருமானம், நமக்கே இப்படி ஒரு இடம் சொந்தமாகிவிட்டால், தின வாடகை, இதர வாடகை என்று கொழிக்கலாம் என்ற பேராசையால் காசுக்கு ஏத்த படி காரியம் என்ற நிலை வந்தாகி விட்டது.

பொய்யில்லை நண்பர்காள். முழுதாக மொட்டையடிக்கப் படும் NRI களும் கார்பொரேட் அதிகாரிகளையும் பார்க்கப் பாவமாய் இருக்கும். வயதான தாயோ தந்தையோ இறந்த பிறகு கெஞ்சிக் கூத்தாடி லீவ் எடுத்து, வயதான காலத்தில் தாம் பராமரிக்கவில்லை என்ற‌ அடைத்து வைத்திருந்த தான் ஆடாவிட்டாலும் பாசத்தால் குற்றவுணர்ச்சிக்கு ஆளாகி பலிகடாவாக மாறியவர்கள் இவர்கள். தகனம் முடிந்தவுடன் ( இதற்கு வரும் புரோகிதர் வேறு. கொஞ்சம் மட்டம்) சுபகாரியங்கள் ஸ்பெஷலிஸ்ட் அப்புறம்தான் வருவார். தனக்கு இதில் எதுவுமே விருப்பமில்லாதது போல் சாஸ்திரம் சொல்றத நான் சொல்றேன். மத்தது உங்கள் வசதிக்கு எப்படி பண்ணலாம் என்பதும் சாஸ்திரத்தில் இருப்பது போல் சொல்றேன். அப்புறம் உங்கள் இஷ்டம் என ஆரம்பிக்கும்போதே இந்தக்காலத்தில இப்படியும் ஒரு தெய்வம் உண்டுமா என கட்டிப் பிடித்து அழத் தோன்றும்.

அம்மா அப்பாவை வயதான காலத்தில் எப்படி பார்த்துக் கொள்ள வேண்டும் என புராணத்திலிருந்து ஒன்றிரண்டு பிட்டுக்களுடன் தொடங்கும் மூளைச்சலவை. செய்ய வேண்டிய காரியங்கள், அதற்குண்டான விளக்கங்கள் எல்லாம் சொல்லி ஒரு ஆழம் பார்த்தல் நடைபெறும். பார்ட்டி கண் கலங்க கேட்டுக் கொண்டு சரி சரி என்று மண்டையாட்டினால் ஒரு விதம், சொறிந்து கொண்டு மதில்மேல் பூனை என்றால் ஒரு மாதிரி, சட்டு புட்டுன்னு சொல்லித் தொலை மாதிரி இருந்தால் அதற்கு வேறு மாதிரி என்று தேர்ந்த சேல்ஸ்மேன் மாதிரி பேச எந்த பிஸினஸ் ஸ்கூலிலும் சொல்லித் தர முடியாது.

கடைசியில் வரும் பகற்கொள்ளைதான் இந்த இடுகைக்கு கரு. பத்து நாள் காரியம் முடிந்த பிறகு இறந்தவரின் ஆத்மா சாந்தி அடைய பல தானங்கள் சொல்லி இருக்கு. எல்லாம் பண்ணனும்னு இல்லை. முக்கியமான தானங்கள் பண்ணத்தான் வேண்டும். மற்றது வசதிப்படி பண்ணா நல்லது என்று இழுக்கும் போதே முதல் வகை கண்ணைக் கசக்கிக் கொண்டு, காசு பத்தி பிரச்சனையே இல்லை. அம்மா/அப்பா ஆத்மாக்கு குறை இல்லாம முறைப்படி என்ன பண்ணனுமோ அதான் முக்கியம் என வலையில் விழும். இந்த காலத்தில இவ்வளவு சிரத்தையா பண்றவங்க ரொம்ப கம்மி. செலவுதான் பார்ப்பாங்க என்று போட்ட போடில் ஐயா மட்டையாய் ரெடியா இருப்பார். என் தலை உன்கிட்ட. அடிச்சிக்கோ வசதிப்படி என்று. ரொம்ப அழகாக, சரி நான் என்னன்ன வாங்கணும்னு லிஸ்ட் தரேன் வாங்கிட்டு சொல்லு என்பார்.

சுகவாசியா இருந்து பழகியாகிவிட்டது . இதுக்கெல்லாம் யாரு அலையுறது? அதும், மாடு, செருப்பு, கைத்தடி, சொம்பு என்று என்னல்லாமோ இருக்கும். அலறி அடிச்சி அதெல்லாம் எனக்கு தெரியாது. நீங்களே பார்த்துக்குங்க. எவ்வளவு ஆகும்னு சொல்லுங்க. பணம் தறேன் என்று வகையாய் மாட்டிக் கொள்ளும். ரொம்ப பிகு பண்ணிக்கொண்டு குத்து மதிப்பாக ஒரு தொகை வாங்கிக் கொண்டு பில் அப்புறம் தரேன் பார்த்துக்கலாம் என்று சொல்லி ஒரு ஃபோன் பறக்கும். அது அது அவங்க வீட்டில கொடுத்துடுவாங்க பெரிய சாமான்லாம். கையோட குடுக்கறது அங்க வந்துடும் என்று சொல்லி விடுவார். கட்டில், மெத்தை, பீரோ (டி. வி, ட்விடி ப்ளேயர், டிஷ் கனெக்ஷன்லாம் என்ன பாவம் பண்ணிச்சோ) எல்லாம் அங்கே வந்து நிற்கும். சொம்பு, கைத்தடி, தட்டு, குடை, வெள்ளி, தங்கக் காசு மட்டும் தானே கொண்டு வருவார்கள்.

ஒரு வேனில் இதெல்லாம் நிற்கும் ஞான வாபியின் முன். எல்லாம் பழைய ஐட்டங்கள். ஏன் என்று கேட்கக் கூச்சம். அந்தக் கேள்விக்கே இடம் வைக்க மாட்டார்கள். புதுசு அங்க இங்கன்னு தூக்கிக் கொண்டு அலைஞ்சா டெலிவரிசார்ஜ் எங்கயோ போயிடும்.(அடங்கொய்யா? என்னா அக்கறை). இங்க பாவனையா தாரை வார்த்து கொடுத்தால் போதும். இவர் போன் நம்பர் தருவார். பொருள் வந்துடுச்சன்னு கேட்டுக்கலாம் என்ற பிட்டுக்கு அப்புறமும் சந்தேகப் பட முடியுமா? பாவம் தானம் என்று வாங்கியவருக்கு ரூ 200 அல்லது அதிக பட்சம் ரூ 500 போனால் அதிகம். அந்த ஒரே வேனைக் காட்டி ஐந்தாறு அப்பா அம்மா ஆத்மாவை சாந்தி அடைய வைப்பதை யாரு பார்க்கப் போறாங்க. எனக்குத்தான் மண்டைக் குடைச்சல். ஐயோ பாவிகளா என்று அலறத் தோன்றும்.

இதெல்லாமாவது உள்குத்து. அப்புராணிங்களுக்கு புரியாது. பாவம் பால் வத்திப் போன பசு மாடு. தானம் கொடுக்கிறேன் பேர் வழி என்று, ஆயிரக்கணக்கில் கணக்கெழுதி நிற்கும் மாடுகளில் ஒன்றிடம் கொண்டு போய் கயிற்றைக் கையில் பிடித்துக் கொடுக்க வைத்து சூடு வேறு போடுவார்கள். மாட்டுக் காரனுக்கு பால் வற்றியும் சம்பாதித்துக் கொடுக்கும் அந்த வாயில்லா ஜீவன். ஒரு தானத்துக்கு அவனுக்கும் ரூ 200 கிடைக்கும். சூடாவது போடமாட்டேன் என்று சொல்லித் தொலைங்களேன்னு வருமா இல்லையா ? தாய்ப் பால் குடித்ததை விட ஆவின் பால் குடித்துத் தானே வளர்ந்தோம் என்று நினைப்பாவது இருந்தால் உறுத்தும்.

இவ்வளவுதான் பட்ஜெட் என்பவருக்கோ, லிஸ்ட் குடுங்க நான் பார்த்துக்கறேன் என்பவருக்கோ அதற்கேற்றார் போல் காரியம் செய்து வைப்பார்கள். (பின்ன இதே மாதிரி இன்னோரு பிசுனாரி கேஸ் நடத்தி வைத்தால் தானே வருமானம்). முதலாமவருக்கு 3 மணி நேரம் பிடித்தால் இவர்களுக்கு பாதி நேரம்தான்.

அப்புறமும் மத்திய கைலாஷில் பணம் கட்டினால் வருடா வருடம் திதியன்று தவராமல் திவசம் செய்து ப்ராசாதம் அனுப்பிடுவாங்க. ரெகமண்டேஷன் வேணுமென்றெல்லாம் காசு பார்க்க வழி உண்டு. என் கோரிக்கை இதுதான்.

யார் நம்பிக்கைக்கும் யாரும் தடை போட முடியாது. வசதி இருக்கிறதா யோசியுங்கள். சுத்த ஃப்ராடு. நான் ஏமாற மாட்டேன் என்பவர்களும் யோசியுங்கள். பிள்ளைகளால் கைவிடப்பட்டு, அல்லது யாரும் இன்றி கவுரவமாக உழைத்துப் பிழைக்கும் முதியவர்களை தத்தெடுத்துக் கொள்ள முடியும். Helpage India இதற்கான திட்டம் வைத்திருக்கிறது. ஒரு பாட்டியையோ தாத்தாவையோ ஒரு வருடத்திற்கு தத்தெடுக்க வெறும் ரூ 6000 தான். வசதிக்கு தகுந்தபடி உதவ முடியும். இறந்த ஆத்மா வாழ்த்துகிறதா என்பது தெரியாது. இருக்கும் ஜீவன் நிச்சயம் வாழ்த்தும். மனமிருப்பவர்கள் பாருங்களேன் : http://www.helpageindia.org/

Thursday, August 20, 2009

நறுக்குன்னு நாலு வார்த்த - 96

ஐ.நா.வின் சான்றிதழ் கிடைத்ததும் மீள்குடியேற்றம் -அரசாங்கம் அறிவிப்பு

பாராட்டுப் பத்திரமே தருவான் பங்கி மூன். வாங்கி மாட்டிக்க.
_________________________________________
திருப்தியாக வாழும் ஆசிய நாடுகளில் இலங்கை முதலிடம்

எந்தக் கம்மினாட்டி கண்டு புடிச்சான். அவன புடிச்சி அனுப்பணும். போய் திருப்தியா வாழ்ந்துக்கன்னு.
_____________________________________________
இடம்பெயர் மக்கள் தங்கியிருந்த காணிகளை அரசியல்வாதிகள் மோசடி செய்துள்ளனர்

விக்கிற நாய்க்கு விவஸ்தை வேணாம். வாங்குற பேய் விளங்காம போகும். எல்லாம் வித்து போச்சி. எங்க குடியமர்த்துறது. உள்ளயே இருன்னு வச்சிடுவான்..
_____________________________________________

இலங்கை விவகாரத்தில் பான் கீ மூன் தமது கடமையை சரிவரச் செய்யவில்லை

அந்தாளுக்கு என்னா போச்சி. அவனவனும் பொழைக்க வேணாமா? அது கைப்புள்ள பாவம்.
________________________________________________

வவுனியாவில் இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு அவர்கள் விரும்பினால் முகாம்களில் தங்கியிருப்பதற்கும் அல்லது வேறெங்கும் செல்வதற்கும் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என அமெரிக்கா கோரிக்கை விடுத்துள்ளது

உக்காந்த இடத்துல இருந்து உளறணுமேன்னு உளறுரான் படு பாவி. ஒரு மிருகம் கூட அடைச்சி வச்சா உள்ள இருக்க விரும்புமா? எப்ப‌டித்தான் பேசுரானுவளோ தெரியல.
_____________________________________________
அகதி முகாம் ஊழல், மோசடியில் அமைச்சர், உறவினர்களுக்கு தொடர்பு: சபையில் ஹக்கீம் குற்றச்சாட்டு

இல்லைன்னா தான் ஆச்சரியம். பாவம் பங்கு வரலையோ?
_____________________________________________
பல இலட்சம் ரூபா பெறுமதியான நகைகள் நல்லை கந்தன் இரதோற்சவத்தில் அபகரிப்பு

கந்தனுக்கு கவனம் கவட்டியிலன்னு சொலவடை இருக்கே. உங்களுக்கு உங்க நகை மேல இருக்க வேணாமா?
_____________________________________________
புலம் பெயர் தமிழ் மக்கள் விடுதலை புலிகளின் செயற்பாடுகளுக்கு வழங்கப்பட்ட பணத்தை இடம்பெயர் மக்களுக்கு வழங்கப்பட வேண்டும் : ரிசாட் பதியூதீன்

நீ வெளிய விடு நாயே! மத்தவங்க பார்த்துப்பாங்க. எப்படியெல்லாம் காசு பாக்க அலையுறான் பரதேசி நாயி.
_____________________________________________
பான் கீ மூனின் இலங்கை விஜயம் தோல்வி கண்டுள்ளது: நோர்வேயின் ஐ.நா. தூதுவர் தெரிவிப்பு

எதுக்கு விஜயம் போனாரு? என்ன தோல்வியாச்சி. எதுவுமே வெளிய வராதே? எவனாவது கண்டு புடிச்சி புக் போட்டா அப்பொதான் தெரியும்.
_____________________________________________
வரவு செலவுத் திட்டத்தின் போது பாதுகாப்பு செலவீன ஒதுக்கீடு குறைக்கப்படமாட்டாது: கோத்தபாய

அப்புறம் நீ எதுல ஒதுக்குவ. விட்றுவீங்களா?
_____________________________________________
பிறக்கும் குழந்தைகளுக்கு பிரபாகரனின் பெயரை சூட்டுங்கள்: வைகோ

அதுங்களையும் கைது பண்ணிடுவாங்க வாலாட்டிங்க. 6 மாசம் கழிச்சி கோர்ட் தப்புன்னு சொல்லும். பசங்களுக்கு அம்மா அப்பா யாருன்னே தெரியாது. ஜெயில்ல அன்னைன்னா சோனியான்னு சொல்லி குடுத்துடுவானுங்கோ. தேவையா இதெல்லாம்?
_____________________________________________
பிரித்தானிய ஆயுதங்கள் முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தில் உபயோகிக்கப்பட்டதா?

அவனே ஐ.நா. பொருப்புன்னு சொல்லிட்டிருக்கான். இதில வேற இப்படி ஆராய்ச்சி பண்ணா ஆமாம், அவன் குடுக்காம இருந்தா நான் அடிச்சிருக்க மாட்டேன். அவன கேளும்பான்.
_____________________________________________
சுவிஸ்சில் கருணா களியாட்ட மங்கையுடன் அட்டகாசம்

அரிப்பெடுத்த நாயீ. அதுக்குதானே சோரம் போனது. விசா எப்படிக் குடுத்தாங்க?
_____________________________________________
விடுதலைப் புலிகளை வழிநடத்தக் கூடிய ஆளுமை மிக்க எவரும் தற்போதில்லை

அப்படியே இல்லாம நாசமா போனாலும் உன்னை மட்டும் கூப்பிட மாட்டாங்க. நீ புட்டி குட்டின்னு கெட.குறி தப்பி எத்தன வெடிச்சது. உம்மேல ஒண்ணு விழாம போச்சே!
_____________________________________________
கே.பி.யை கைது செய்வதற்கு மலேசியாவிடம் உத்தியோகபூர்வமாக கோரப்படவில்லை – அரசாங்கம்

கடத்துறதுக்கு உத்தியோக பூர்வமா வேற கேப்பீங்களாடா?
_____________________________________________
தமிழர்களை உடனே விடுதலை செய்யுங்கள்: இலங்கைக்கு அமெரிக்கா எச்சரிக்கை

நம்பிட்டம். உடனே செய்துடுவான்.
_____________________________________________
விடுதலைப்புலிகளிடம் ரஜினிகாந்த் பணம் பெற்றாரா?: இலங்கை அமைச்சர்

தமிழனுக்குதான் சொரண இல்லாம கெடந்துட்டோம். தலைவனையா சொன்னன்னாவது பொங்குவமா?
_____________________________________________
அதிகாரம் மிக்க பெண்கள் பட்டியலில் சோனியா

அந்தம்மா பேரு மட்டும்தானே இருக்கும். அதையுமா பட்டியல்னு சொல்றது?
_____________________________________________
ஸ்னேகாவுக்கு தொந்தரவு கொடுத்த ராகவேந்திராவின் குற்றால லீலைகள்:

குற்ற லீலை போறாதா? குற்றால லீலை வேற.
_____________________________________________
பன்றிக் காய்ச்சல் குறித்து தெரிந்திருந்தால் ஜெயலலிதா எச்சரிக்கை விடுத்திருக்கலாம்: வீரபாண்டி ஆறுமுகம்

அப்புறம் அரசாங்கத்தோட சுகாதாரத் துறை எதுக்காம்.
_____________________________________________
புதுப்பேட்டையில் இருந்து நக்சலைட்டுகளுக்கு என்ஜின்கள் கடத்தல்

அடங்கொன்னியா! அங்க நாராயணன் வாங்கினா என்ன நக்ஸலைட் வாங்கினா என்ன? எல்லாருக்கும் தானெ விப்பான்.
எவனோ முக்கிய புள்ளியோட கார் போச்சோ, இல்ல புள்ளையாண்டான் பைக் போச்சோ. இப்ப தான் கண்டுபுடிச்சா மாதிரி சீன் போடுறானுவ.
_____________________________________________
முகமூடிகளை இலவசமாக வழங்க வேண்டும்: ஐகோர்ட்

அதுக்குள்ள பன்னிக் காய்ச்சல் போயிடும். இல்லைன்னா பாதி ஜனங்க போய்டுவாங்க. ஊழலுக்கு இவங்களே வழிகாட்டுறாங்களே.
_____________________________________________

உன்குத்தமா என்குத்தமா...?

நம்மாளுவ இருக்கானுவளே. அதெப்பிடித்தான் இப்படி இருப்பாங்களோ தெரியாது. இல்லை என் மண்டைதான் இப்படி குதர்க்கமா பார்க்குதா தெரியலை. ஒரு நாள் இரண்டு நாள் இல்லை. பல அலுவலகங்களில், பல ஊர்களில், என் முப்பத்தி மூன்று வருட சர்வீசில் அனேகமாக நாள் தவறாமல் உணவு நேரத்தில் காணும் கூத்து இது. பல நேரங்களில் அடக்க மாட்டாமல் பைத்தியம் மாதிரி சிரித்து தொலைத்திருக்கிறேன். என்னதான் பாசக்காரப் பயலுவன்னாலும் இடம் பொருள் ஏவல்னு ஒண்ணு இருக்கில்ல.

500 பேர் கூடும் திரையரங்கத்தில் கழிப்பறைக்கு விதி செய்யும் அரசு 5000 பேர் இருக்கும் தன் அலுவலகத்தை கண்டுக்கவே கண்டுக்காது. அதிகம் போனால் ஒரு தளத்தில் 5 யூரினல் 2 அல்லது 3 கழிப்பறை இருக்கும். சாப்பாட்டு நேரத்தில் கூட்டம் நெரியும். க்யூ கட்டாத குறைதான். யூரினலில் இடமில்லை என கழிப்பறைக்கு போய் விட்டு வெளியே வருபவரிடம் , காத்திருப்பவரிடம் என்று விவஸ்தை இல்லாமல் அவரின் நண்பர் கேட்கும் கேள்வி 'சாப்டாச்சா'? என்ன பதில் சொன்னாலும் வில்லங்கமா தோணுமா இல்லையா? இது கேக்குற இடமா இதுன்னு கேக்கிறவனும் நினைக்க மாட்டானுவ. மத்தவன் பதில் சொல்லாம போகவும் மாட்டானுவ.
---------------------------------------------------------------------------------
ஒரு பெரிய அதிகாரி இருந்தார். சரியான கடுவன் பூனை. ஒரு நாள் எதற்கோ கூப்பிட்ட பொழுது ப்ரீஃப் கேசைப் பாதி திறந்து தேடியபடி இருந்தார். என் போறாத காலம் அதுக்குள்ள இருந்த மத்துக் கழிக்காம்பு கண்ணில் பட்டுவிட்டது. மண்டைக் குடைச்சல் ஆரம்பித்து விட்டது. இத எதுக்கு வெச்சிருக்கார் என்று. கோடு போட என்றாலும் அவ்வளவு பெரிய அதிகாரிக்கு அது தேவை இல்லை. அதுவும் கோடு போட உதவாத நிலையில் கேவலமாக இருந்தது அது. மெதுவாக அவரின் ஸ்டெனோவிடம் கேட்டேன். எதுக்கு அந்தக் கழி என்று. அப்படி வெச்சிருக்காரா? இவ்வளவு நாள் நாங்க பார்க்கவே இல்லையே என்ற பதில் வரவும் தூக்கம் தொலைந்தது. அந்தாளைப் பார்க்கும் போதெல்லாம், ப்ளீஸ் சொல்லுங்கசார் என்று கெஞ்ச வேண்டும் போல வரும். கண்டு பிடிக்காம விடுறதில்லைன்னு வைராக்கியமே வந்துடிச்சி.

அது அதுக்கும் நேரம் காலம் வர வேண்டாமா. வந்துச்சி. திரும்ப ஒரு நாள் கூப்பிட்டு வருமான வரி சம்பந்தமான ஆவணங்களைக் காட்டி கேட்டுக் கொண்டிருந்தார். ஏதோ ஆவணம் தேவை என சொல்லிவிட்டு வந்துவிட்டேன். சிறிது நேரம் கழித்து கூப்பிட்டு ஒரு ஆவணம் காணவில்லை; நீங்க கொண்டு போனீங்களா என்றார். அதை ஜெராக்ஸ் எடுக்க கொடுத்தது தெரியும். வாய்த்ததுடா வாய்ப்பு! நடத்து, என்று உங்க ப்ரீஃப் கேசில் வைத்தீர்கள் என்றேன். அப்படியா என்று திரும்ப பாதி திறந்து தேடிவிட்டு இல்லையே என்றார். மவனே விடுறதில்லைன்னு, இல்லை சார் பவுச்சில் வெச்சீங்கன்னு திரும்பவும் சொல்ல, அப்படியா என்று ப்ரீஃப்கேசை டேபிளில் வைத்த போது எனக்கு விடை கிடைத்தது. பொட்டிய முழுசா தொறக்கப்படாதாம். பாதி மூடினா மாதிரி இருக்க ஸ்டேன்ட் அந்த கட்டை. அதை சாத்தி வைத்து விட்டு ரெண்டு கையாலையும் தேடினாங்க. எதுக்கும் ஸ்டெனோவைக் கேக்கிறேன்னு பறந்துட்டேன்.
------------------------------------------------------------------------------
இன்னொரு அதிகாரி இருக்கார். அலுவலகத்துக்கு அருகாமையில் வீடு. மனுசன் அலுவலக நேரம் முழுதும் மேலதிகாரி அறையில் இருப்பார். காலை வருவதும் லேட். மதியம் வீட்டில் சாப்பிட்டு விட்டு ஒரு தூக்கம் போட்டு விட்டு வருவார் போல. இரண்டரை மணிக்கு மேல் வருவாரு பகுடரெல்லாம் போட்டு ஃப்ரெஷ்ஷா. நிதி நிலைத் துறை அதிகாரியாச்சா. எண்களோடதான் போராட்டம். A3 காகிதத்தில் கட்டு கட்டாய் ஏதோ ஸ்டேட்மென்ட் அனுப்ப வேண்டி இருக்கும். 5 மணிக்கு வருவாரு தன் அறைக்கு. வரும்போதே ஸ்டேட்மென்ட் ரெடியான்னு தான் வருவாரு. கிண்டலா சொல்லலைங்க. நம்புங்க. 3 ப்ளை ஷீட்ல எக்ஸெல்ல இருந்து 2 காபின்னு ப்ரின்ட் எடுத்தா 6 காபி வரும் இல்லையா? ஆறு பேரைக் கூப்பிடுவாரு. இவரையும் சேர்த்து ஆளுக்கு ஒரு ஷீட் பிரிச்சிப்பாங்க. ஒருத்தர் படிப்பாரு. மத்த 5 பேரும் சரி பார்க்கணும். ஒரு ஷீட் முடிய மீதமிருக்கிற ஆள் 6 செட்டா பரத்தி வெச்சி காத்திருப்பாரு. விடிய விடிய வேலை பார்ப்பாங்க. காலைல வந்து சொல்லுவாரு. நேத்து ஒரு மணியாச்சி சாரி வீட்டுக்கு போக. காலைல ஸ்பீட் போஸ்ட்ல அனுப்பிட்டேன்னு. பெரிய புண்ணாக்கு எக்சலன்ட்னு சொல்றப்போ சிரிக்கிறதா? அப்புறதா? ஒரே நேரத்துல எடுத்த பிரின்டவுட்ல என்னதான் ரென்டு செட்னாலும் தப்பா வந்துடுமா? அதே ப்ரின்ட்டவுட்ட வெச்சி காபியை கம்பேர் பண்ணா என்ன கண்டு பிடிச்சிட போறாரு?
------------------------------------------------------------------------------
இன்னோரு ஆளு அப்பிராணி. ரொம்ப சீனியர். வேலைல கெட்டிக்காரர். தசாவதாரம் நாயுடுவேதான். இவர் கிட்ட ட்ரெயினிங் எடுத்த அம்மணி இவருக்கு மேலதிகாரியா வர வேண்டிய துர்பாக்கியம் ஏற்பட்டுப் போச்சு. இந்திக்காரம்மா. அதனால இங்கிலீஷ்ல தான் பேசணும். ஏதோ ஒரு கடிதம் ரொம்ப அவசரமா பதில் அனுப்ப வேண்டி இருந்தது. ஐய்யாவோட டிஸ்கஷன் முடிச்சி எப்படி பதில் அனுப்பலாம்னு பேசி வெச்சிட்டு வந்துட்டாங்க. அந்தம்மா அந்த கடிதத்தை இவர் கிட்ட குடுத்ததா நினைச்சி, கொண்டுவா பதில் போடணும்னு சொல்லி இருக்கு. இவரு அலறி, என்கிட்ட இல்லைன்னு சொல்லியும் நம்பல. சரியாத் தேடி பாருன்னிச்சி. வந்து சின்ஸியரா தேடிப் பார்த்துட்டு போய் இல்லைன்னு சொல்லி இருக்காரு. அம்மணி தொலைச்சிட்டு குடுக்கலைன்னு சொல்றியான்னு காச் மூச்னு கத்த மனசொடிஞ்சி போய்ட்டாரு. அப்போ அவர் சொன்னது இது:

Madam. At this Age. I wont lie with you Madam. You ask any body in the office. I never lie with anybody. If you want you can open my drawer and see. There is nothing inside. It is empty only.

படிக்கிறவங்க வில்லங்கமா புரிஞ்சிகிட்டா நானோ அந்த மனுசனோ பொறுப்பில்லை.

Wednesday, August 19, 2009

நறுக்குன்னு நாலு வார்த்த - 95

விடுதலைப் புலிகள் மீண்டும் தலைதூக்க முடியாது: மகிந்த ராஜபக்ஸ

துள்ளுற மாடு பொதி சுமக்கும்னு பழமொழி. அவனும் இவனும் பிச்ச போடுறான் பொழப்பு ஓடுதுன்னு இருக்கீரு. எல்லாத்துக்கும் ஒரு அளவிருக்கில்லடி. அப்போ தெரியும்!
_____________________________________________________
முகாம்களில் மக்கள் 'எலிகளைப் போல வாழ்கிறார்கள்': ஆனந்த சங்கரி

கிழத்துக்கு எதுகை மோனை வேற! வேளா வேளைக்கு உண்டு உறங்கி ஜனாதிபதிக்கு கால் நக்காத குறையா கடிதம் எழுதிதான் என்ன கிழிஞ்சது?
_____________________________________________________
இலங்கைக்கு கடந்த 24 மணி நேரத்தில் 31 பில்லியன் ரூபா கிடைத்துள்ளது - அமைச்சர் ஜீ.எல். பீரிஸ்

பணக்கார பிச்சக்காரனுங்கடா யப்பா. இத வெச்சி 3 ஹில்டன் ஹோட்டல் கட்டலாம்னு புத்தி போவுதே ஒழிய யாரைக் காட்டி எடுத்த பிச்சையோ அவங்களுக்கு என்ன பண்ணலாம்னு போவுதா?
_____________________________________________________
அகதி முகாமகளில் தமிழர்களுக்கு மற்றொரு முள்ளிவாய்க்கால் அவலம்: சர்வதேசம் இதனையும் வேடிக்கை பார்க்கப் போகிறதா?: சுரேஸ் பா.உ. கேள்வி

மாட்டாங்களே! கோரிக்கை, கண்டனம், தூதர அனுப்புறது எல்லாம் பண்ணிட்டு அப்புறம் பொத்திட்டு இருப்பாங்க.
_____________________________________________________
தவறு செய்யும் அதிகாரிகளை அரசாங்கம் பாதுகாக்காது: இலங்கை பிரதமர்

தவறு செய்யும் அரசை அகில உலகமும், ஐ.நா.வும் பாதுகாக்கும்.
_____________________________________________________
இடியமீன் ஆட்சி காலத்தில் கூட இவ்வாறான முகாம்கள் காணப்பட்டதா என்பது சந்தேகமே: புதிய சிஹல உறுமய

அவன் மனுசக்கறி தின்னாலும் மனுசனா இருந்தான். இவனுக்கு ராக்ஷச பக்சேன்னு பேரு வைக்கலாம்.
_____________________________________________________
வட இலங்கையில் கண்ணி வெடிகளை அகற்றுவதற்கு அமெரிக்கா 6 மில்லியன் டொலர் நிதியுதவி

இதயும் வாங்கிக்கிட்டு கொழுத்துப் போய் கன்னிங்களுக்கு வெடி வைப்பான். ஏண்டா இப்படி? அவ்வளவு அக்கறைன்னா எல்லாத்தையும் நீங்க வந்து புடுங்கி போட்டு இப்போ விடுடா ஜனங்களன்னு சொல்லிப் பாறேன்.
_____________________________________________________
செல்வராசா பத்மநாதன் இந்தியாவுக்கு நாடு கடத்தப்படலாம்?

என்னா டீலிங்கு?
_____________________________________________________
வெள்ளிமுள்ளிவாய்க்காலில் லட்சக்கணக்கான வெடி பொருட்கள் மீட்பு : உதய நாணயக்கார

நீ கொண்டு போனதுல வெடிச்சது எத்தன. மிச்சம் எத்தனைன்னு கணக்குப் பாரு ராசா. அவசரப்பட்டு இப்படி புளுவிட்டா அக்கவுன்டு இடிக்கும்.
_____________________________________________________
வேதம் படித்தால் வேலை வாய்ப்பு கிடைக்கும்: எஸ்.வி.சேகர்

படி சேகரு! இனிமேல்லாம் M.L.A. ஆக முடியுமா. பொழப்ப பார்க்க வேணாமா?
_____________________________________________________
சென்னை: விமானம் மீது லாரி மோதல்

லாரிக்கு விமான பெட்ரோலும், விமானத்துக்கு டீசலும் மாத்திப் போட்டுட்டாங்களா?
_____________________________________________________
ஜெ.வை மக்கள் புறக்கணித்து விட்டனர்: தங்கபாலு

இவ்வளவு நாளா சத்தமே காணோம். நாக்குல புண்ணா டங்குவாலு (காபிரைட்:யூர்கன்)
_____________________________________________________
கொட்டும் மழையில் கஞ்சி கலய ஊர்வலம்

அட்றா சக்க! கஞ்சித்தண்ணின்னு தானே சொல்லுவோம். இப்படி போனா கலயம் நிரம்பிடும். கவுண்டர் மாதிரி, தண்ணி இங்க இருக்கு. கஞ்சி எங்கன்னு கொடச்சல் குடுக்கலாம்.
_____________________________________________________
பீர் அருந்திய பெண்ணுக்கு பிரம்படி: மலேசிய கோர்ட்

வலி தெரியாம இருக்க பிராந்தி அடிக்கப் போவுது அந்தப் பொண்ணு.
_____________________________________________________

இன்னும் கொஞ்சம் சந்தேகம்!

தண்டவாளத்துக்கு கீழ இருக்கிறதையும் ஸ்லீப்பருங்கறான், அது மேல ஓடுறதையும் ஸ்லீப்பருங்கரானே. ஏன்?
------------------------------------------------------------------------------
லைன் மேல ஓடுற ரயிலுக்கு ரயில்வேன்னு பேர வெச்சிட்டு தண்ணில போற கப்பலுக்கு ஷிப்லைன், வானத்துல பறக்குற விமானத்துக்கு ஏர்லைன்னு ஏன் பேரு வெச்சான் வெள்ளைச்சாமி?
------------------------------------------------------------------------------
தரையோட இருக்கிற ஹைவேஸ் பாலத்து கீழ போகும்போது மட்டும் சப்வே ஆவுதே! பாலத்து மேல போகும்போது மட்டும் ஹைவேஸ்னே இருக்கே எப்படி?
------------------------------------------------------------------------------
அமெரிக்கா விட்ட ராக்கட்டு செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமா இறங்குச்சின்னு வெள்ளக்காரன் சொல்றான். அது இறங்க ஆறு மாசம் முன்னதான் செவ்வாய் கிரகப் பெயற்சி; 8 ல இருந்து 9 கு போச்சி, 8 ல சந்திரன் வருதுடிச்சின்னு நம்மூரு ஜோசியன் சொல்றான். எத நம்பறது?
------------------------------------------------------------------------------
சந்த்ரயான் வெற்றிகரமா பறக்கணும்னு தேங்கா உடைச்சி, கற்பூரம் காட்டினப்புறம் தான விட்டாங்களாம். நாள பின்ன சந்திரனுக்கு ஆளு போய் இறங்கினா ரிடர்ன்ல வெற்றிகரமா திரும்ப பூஜை பண்ண வேணாமா? அங்க கற்பூரம் எரியாது. தேங்கா உடையாதே. என்ன பண்ணுவாங்க?
------------------------------------------------------------------------------
கணினி முன்னாடி உக்காந்திருந்தாலும் மணி என்னன்னா கொள்ள பேரு கைக்கடிகாரம் இல்லன்னா சுவர்க்கடிகாரம் தானே பார்க்குறாங்க. வலக்கை ஓரமா கணினி காட்டுற மணியை பார்க்கறதில்லை?
------------------------------------------------------------------------------
திரைக்கும் மூஞ்சிக்கும் மூணு அடி தூரத்துல தான் பாக்குறதுனு உலகம் முழுதும் இருக்கிறப்ப அத ஏன் இன்னும் தொலைக்காட்சின்னு சொல்லணும்?
------------------------------------------------------------------------------
என்னதான் காசு குடுத்து வாங்கின கீ வெச்சிருந்தாலும் கதவ தொறந்தா கணினி உள்ள விடுது.அப்பவும் திருடன் மாதிரி 'விண்டோஸ்' வழியாதானெ போகணும். அப்புறமெதுக்கு அது நல்ல கீயா சுட்ட கீயான்னு செக்கப்பு?
------------------------------------------------------------------------------
விமானமோட்றப்ப ஹெட்ஃபோன் மாட்டணும்னு விமானி எப்படியும் தொப்பி போட மாட்டாருல்ல. அப்புறம் எதுக்கு காசுக்கு தண்டமா அத குடுக்கறது?
------------------------------------------------------------------------------
ஆசுபத்திரி கட்டின டாக்டர் கோவிலுக்கு போய் ஆசுபத்திரி அமோகமா வளரணும்னு வேண்டுனா சாமி வரம் குடுப்பாரா? சாபம் குடுப்பாரா?
------------------------------------------------------------------------------
ஹார்ட் டிஸ்க்னு பேர வெச்சிட்டு க்ராஷ் ஆயிடிச்சின்னா அபத்தமா இல்லை?
------------------------------------------------------------------------------
விழுப்புரம் போறதுன்னாலும் வீடடில இருந்து சாப்பாடு கட்டிட்டு போறவன் அமெரிக்கா போறதுன்னா அவன் குடுக்கறாதே போதும்னு போறானே? என்ன கூச்சம்?
------------------------------------------------------------------------------
என்னதான் ஊருக்கு முன்ன செக் இன் பண்ணி கதவு பக்கத்துல சீட் போட்டாலும் கடோசியா லக்கேஜ் வந்தா கடோசியாதானே போகமுடியும். அப்புறம் ஏன் முதல்ல அந்த சீட் போடுறாங்க?
------------------------------------------------------------------------------
வடைய எண்ணெயில் பொறிக்கிறோம். இட்டிலிய ஆவியில அவிக்கிறோம். தோசை கல்லுல ஊத்துறோம். ஆனாலும் சொல்றப்ப வடசுட்டா, இட்லிசுட்டா, தோச சுட்டான்னே ஏன் சொல்றாங்க.?
------------------------------------------------------------------------------

Tuesday, August 18, 2009

நறுக்குன்னு நாலு வார்த்த - 94

தமிழர் படும் துயரை துடைப்பதற்கு இலங்கை அரசுக்கு, இந்தியா நெருக்கடி கொடுக்க வேண்டும்: கலைஞர்

பாலுக்கும் காவல். அட இரண்டு நாளுக்கு முன்னாடிதானே சுமுக நிலைன்னு சொன்னீங்க? இது எதுக்கு இப்ப?
_______________________________________________
தடை செய்யப்பட்ட இயக்கங்களை ஆத‌‌ரித்தால் நடவடிக்கை: மிழக அரசு ச்சரிக்கை

பூனைக்கும் தோழன். எத்தனை முறை கோர்ட்டில் செருப்படி பட்டாலும் தொங்கு சொல்ற ஆள புடிச்சி அனுப்பறது தான்.
_______________________________________________
குடாநாட்டிற்கான பாதுகாப்பு படையினரின் எண்ணிக்கை இரண்டு மடங்காக உயர்த்தப்படும்: சரத் பொன்சேகா

இவரு பங்குக்கு இவரு காசு தேத்த வேணாமா? மொத்த பேருமே ராணுவம்னு சொல்லிடு.
_______________________________________________
எவர் என்ன சொன்னாலும் அகதிகளை உடனடியாக மீளக்குடியமர்த்த முடியாது: சரத் பொன்சேகா

நீயே அகதியாகப் போறன்னு செய்தி வந்திச்சே. நீ குடியேற இடமில்லாம சாவணும்டா நாயீ. திமிரப் பாரு.
_______________________________________________
உள்நாட்டு, வெளிநாட்டு அழுத்தங்களுக்காக முகாம் மக்களை விடுவிக்க முடியாது: கோத்தபாய திட்டவட்டமாக தெரிவிப்பு

பேச விட்டு வேடிக்கை பார்க்குறானுங்களே பெரியண்ணனுங்க. இதை விட காலம் முழுதும் வலைக்குள்ள தான்னு எப்படி விளங்க வைக்க முடியும்?
_______________________________________________
அதிகாரங்கள் பகிரப்படாவிட்டால் புலிகளின் தமிழீழ போராட்டத்திற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி கொடுக்கும்: ரொபட் பிளக்

அய்யா வெள்ளச்சாமி! நீர் ஆதரவா பேசுறீரா? போட்டுக் குடுக்கிறீரா? அமெரிக்காவே சொல்லிட்டான். நான் விடமாட்டேன்னு கொட்டடிலயே வைக்கவா? ஏன்யா இந்தக் கொலை வெறி?
_______________________________________________
இலங்கை அகதிகள் முகாம்களில் வெள்ளம் ஏற்பட்டதற்கு .நா. நிறுவனங்களே பொறுப்பு!

இதுக்கு மேலயும் சொல்லுவான். அய்யோ நான் இல்லன்னு அலறுவானுங்களே தவிர, நீதாண்டா பொறுப்புன்னு நடவடிக்கை எடுப்பானுங்களா?
_______________________________________________
தனித் தமிழ் ஈழத்தை சர்வதேச நாடுகள் அங்கீகரிக்க வேண்டும்: விடுதலைச் சிறுத்தைகள் கட்சி

முதல்ல உங்க கூட்டணி அங்கீகரிக்குதா பாருங்க. அப்புறம் உலகத்துக்கு குரல் விடலாம். மெரீனால பேசினீங்களே ஒரு வாட்டி கேட்டுப் பாருங்க.
_______________________________________________
யுத்த நிறுத்த காலத்தில் பாதுகாப்பு தரப்பினர் புலிகளுடன் தொடர்பினைப் பேணியுள்ளனர்: கோத்தபாய ராஜபக்ஷ

யார் யாருக்கெல்லாம் வெள்ளை வேன் வருதோ தெரியல. புள்ளி வெச்சிட்டான் போல.
_______________________________________________
விடுதலை சிறுத்தைகள் இன்றி எந்த அணியும் வெற்றி பெறமுடியாது: திருமா

ஓவராத் தெரியல?
_______________________________________________
அமெரிக்காவில் ஷாருக்கானிடம் விசாரணை நடத்தியது அத்து மீறிய செயல்: .சிதம்பரம்

அய்யா. பக்கத்து நாட்டில நாம நடத்தியது எத்தை மீறிய செயல்? இதெல்லாம் பேச முடியும்?
_______________________________________________
அரசுகளின் சாதனைகளுக்கு எதிராக ஓராயிரம் ஜெயலலிதா வந்தாலும் அரசியல் நடத்த முடியாது: தங்கபாலு

ஆமாம். கொஞ்ச நஞ்ச சாதனையா? பாதி படம் எரிஞ்சதுக்கு பதறின பரதேசி பச்சைக் குழந்தைங்க எறிஞ்சப்ப இறையாண்மை பேசின சாதனை ஒண்ணு போறாது?
_______________________________________________
சபரிமலையில் பூசைக் கட்டணம் பன்மடங்கு உயர்வு: செய்தி

சாமியெல்லாம் சம்பாதிக்க ஆரம்பிச்சா ஆசாமிங்க எங்க போறது?
_______________________________________________
தன் பெற்றோர்களை விஷம் வைத்துக் கொன்று விடுவேன் என்றதால் மனைவியை வெட்டிக் கொன்ற கணவர் கைது!

செருப்பால அடிச்சா 5 ரூ தண்டனை. அடிப்பேன்னா 50ரூ தண்டனைன்னு சொல்றத நிஜம்னு நம்பிட்டாரோ?
_______________________________________________