என்னைக் கொல்ல முயல்கின்றனர்: பொன்சேகா
அது நிஜமோ பொய்யோ. இந்த கிலி சாவர வரைக்கும் விடாது. புலி அடிக்காம போனத கிலி முடிக்கும் பன்னாட நாயே.
______________________________________________________________________________________________________
முகாம் மக்களை விடுவிப்பதாக அறிவித்திருப்பது ராஜபக்சேவின் அரசியல் சித்து விளையாட்டு!
இப்புடி உசுப்பேத்தி இன்னும் உள்ளயே வைக்கவா. பொத்திக்கிட்டு கிடங்க பரதேசிங்களா.
______________________________________________________________________________________________________
ஆவணநூலாகும் ஈழத்தமிழினப் படுகொலைகள்
ஆமாம். 56லிருந்து ஏப்ரல் 2009 வரைக்கும் 2000 படுகொலைகள்தானாம். இது ஆவண நூலா கோவண நூலா?
______________________________________________________________________________________________________
இலங்கை தமிழ் அகதிகளுக்கு இலவச கல்வி: சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர்
உங்க காலுக்கு ஆயிரம் கும்பிடு துணைவேந்தர் ஐயா. உதவின்னா இதுதான்.
______________________________________________________________________________________________________
அகதிகள் பிரச்சனை குறித்து நான் தான் முதலில் குரல் கொடுத்தேன்: ராமதாஸ்
நீங்க ராமதாஸா இருக்கலாம். ஆனா நாங்கல்லாம் ஊக்கதாசு இல்லை. வேலையப் பாருங்க.
______________________________________________________________________________________________________
விடுதலைப் புலிகளுக்கு கலைஞர் என்றுமே ஆதரவாக இருந்ததில்லை: ராமதாஸ்
சரி. அவரு ஒருத்தருதானே இல்லை. மிச்ச பரதேசிங்க இத்தன பேரு நீங்கல்லாம் ஆதரவா இருந்து என்ன கிழிச்சிட்டீங்க?
______________________________________________________________________________________________________
முகாம்கள் அனைத்தும் திறந்த முகாம்களாக்கப்படும்: பசில் ராஜபக்சே
இப்பவும் கூரையின்றி திறந்தபடிதானே இருக்கு. ஆக முகாம்கள் நிரந்தரம்.
______________________________________________________________________________________________________
பொன்சேகாவைக் கொல்ல முயற்சியா ? இலங்கை மறுப்பு
ஆமாம்னாடா சொல்லப் போறீங்க.
______________________________________________________________________________________________________
வாடகை வீடு கிடைக்காமல் தவிக்கும் பொன்சேகா
முன்னையிட்ட தீ முப்புறத்திலே நாயே. எத்தனை குடியழித்தாய்.
______________________________________________________________________________________________________
பிரபாகரனை சுட்டு பொசுக்கி விடுங்கள் என்று உத்தரவிட்டது டெல்லி: வைகோ
ஓஓஓஓ. இது எப்ப தெரிஞ்சது உங்களுக்கு?
______________________________________________________________________________________________________
மாவீரர் திலகம் பிரபாகரனை கருணாநிதி கொச்சைப்படுத்தி விட முடியாது:வைகோ
ஆமாங்க. மத்தபேரெல்லாமும் சேர்ந்துதான் முடியும்.
______________________________________________________________________________________________________
சிங்கள அட்டூழியம்: இரவு முழுவதும் தமிழர்களை நிர்வாணமாக்கி பாலியல் கொடுமை
தமிழனுக்கு மட்டும் எந்த ஆண்மையும் கிடையாதுன்னு தெரியும். ஊருக்குள்ள வந்து பண்ணாலும் அவன் இறையாண்மைதான் முக்கியம் நமக்கு.
______________________________________________________________________________________________________
பாதுகாப்புத் தேடி கட்டுப்பாட்டு பகுதிக்கு வந்த மக்களை அரவணைத்த அரசை அவர்கள் மறக்கக் கூடாது என்கிறார் பசில்
அட படுபாவி. மனசாட்சின்னு ஒன்னு இல்லவே இல்லையா? நீங்க பண்ணது பண்ணிட்டிருக்கிறதுக்கு பேரு அரவணைப்பா? மறக்க முடியுமா அதை.
______________________________________________________________________________________________________
நாங்கள் கேட்கும் உத்தரவாதத்தை கலைஞர் அளித்தால் இடைத்தேர்தலில் போட்டியிட தயார்: ராமதாஸ்
என்ன அது. நீங்க தோத்தாலும் ஜெயிச்சாலும் அன்பு மணிக்கு பதவியா?
______________________________________________________________________________________________________
எந்த தேர்தலை முதலில் நடத்துவது: இந்திய ஜோதிடர்களின் பதிலுக்காக காத்திருக்கும் ராஜபக்சே
இந்த உதவி வேறயா. ரைட்டு. ராஜ் டிவி ஜோசியர்கள கூப்புடுங்கப்பா. அவனுக்கு அதாஞ்சரி.