Saturday, November 14, 2009

நறுக்குன்னு நாலு வார்த்த V 3.3

பிரணாப் முகர்ஜி தீடீர் கொழும்பு பயணம்

கலக்க ஆரம்பிச்சிடுச்சி டோய்!
________________________________________________________________________________________________
தமிழ்க்கைதிகளை தாக்கிய சிங்கள கைதிகள்

ஆக சிங்களக் கைதிகள் கூட‌ சுதந்திரமாத்தான்யா இருக்காய்ங்க.

________________________________________________________________________________________________
ராஜபக்சே அதிரடி:பொன்சேகாவின் உறவினர்கள் பணிநீக்கம்

ஆர்மில கூட சட்டம், முறைன்னெல்லாம் கிடையாதாடா?

________________________________________________________________________________________________
நாட்டுக்கு நான் செய்த பங்களிப்பை மறந்து அரசுத் தரப்பு எனக்கு சூட்டிய பட்டம் "துரோகி" : சரத் பொன்சேகா

ஒரு பாதி வெளிய வந்துடுச்சி. மீதிய நீ சொல்லுடி!

________________________________________________________________________________________________
அரசாங்கத்தின் நடவடிக்கைகளை மியன்மார் ஜனாதிபதி பாராட்டியுள்ளாராம்

ரொம்ப பெருமை பட்டுக்க வேண்டியதுதான். உங்களுக்கு மூத்தவனாச்சே.

________________________________________________________________________________________________
எம்மவர்களின் கூற்றுக்கள் காரணமாகவே அமெரிக்க போர்க் குற்றச் செயல்கள் குறித்து விசாரணை நடத்துகிறது – கோதபாய

கூத்தடிச்சிட்டு கூறுனது தப்புன்னா எப்புடி?
________________________________________________________________________________________________
இலங்கை வருகிறார் ஐ.நா. மனிதாபிமானத் தலைவர்

வந்து? நூறாவது தடவையா கோரிக்கை விட்டு போவாரு. இவன் புளுவறான்னுவான்.

________________________________________________________________________________________________
இலங்கை அகதிகளுக்கு படிப்படியாக நிரந்தரக் குடியுரிமை: ஸ்டாலின்

இது சொல்லவே இவ்வளவு வருஷம். பேரன் பேத்திங்களுக்கு கிடைச்சிடுமா?

________________________________________________________________________________________________
கூட்டுப்படைகளின் கட்டளைத் தளபதி பதவிக்கு விமானப்படைத் தளபதியின் பெயர் பரிந்துரை

அடுத்த‌ ப‌லிக‌டாவா? இல்ல‌ செக் மேட்டா?
________________________________________________________________________________________________
சரத் பொன்சேகாவுக்கு இன்னும் உத்தியோகபூர்வ கடிதம் கிடைக்கவில்லையாம்

ம்கும். இனிமே உத்தியோக‌மே இல்லையாம். இதுதான் குறையோ?
________________________________________________________________________________________________
எவ்வாறான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்ட போதிலும் சர்வதேச நாணய நிதியம் கடன் வழங்குகின்றது: அரசாங்கம்

என்னா ஏத்தம் பாரு. எங்கூரு மார்வாடிங்களே தேவலையேடா? இப்பவாச்சும் உறைக்குமா?
________________________________________________________________________________________________
இலங்கை செல்லும் வழியில் சென்னை வந்த பிரணாப் முகர்ஜி: பொன்முடியுடன் சந்திப்பு

ஏன்? த‌லைவ‌ர‌ பார்க்க‌ முடிய‌லையோ?
________________________________________________________________________________________________
காங்கிரஸில் கறுப்பு ஆடுகள்:EVKS ஆவேசம்

எல்லாம் செம்மறியாடா இருந்துட்டா வ‌ச‌தி. இல்ல‌?
________________________________________________________________________________________________
பிரபாகரனுடன் 27 நாட்கள் தங்கி இருந்தேன்: வைகோ

இத‌யே சொல்லிட்டிருந்து ஆக‌ப் போற‌தென்ன‌?
________________________________________________________________________________________________
இலங்கையில் மீண்டும் அரசுக்கு எதிரான இயக்கங்கள் தோன்றும்:பொன்சேகா

இதுல‌ இருந்தே தெரிய‌ல‌. நீ ட‌ம்மி பீசு. ந‌ட‌த்துற‌துக்கு ஆளிருக்காங்க‌ அவ‌னுக்கு.
________________________________________________________________________________________________
கரீனாகபூர் வீட்டுக்கு சேலையுடன் குவிந்த சிவசேனா தொண்டர்கள்

குப்பத்துல மாத்து துணியில்லாம இருக்குறவங்களுக்கு குடுக்க மாட்டானுங்க.
________________________________________________________________________________________________
மதுகோடா தலைமறைவு:அதிகாரிகள் அதிர்ச்சி
  
விட்டுப் பாரு என்னா பண்றேன்னு வடிவேலு மாதிரி சொல்லிட்டு ஓடிட்டானா?
________________________________________________________________________________________________
ராணுவ ஆட்சி ஏற்பட்டுவிடும் என்று பயப்படுகிறார் ராஜபக்சே: பொன்சேகா

சான்ஸே இல்ல புண்ணு. பாதி பேரு பயத்துக்கும் மீதி பேரு காசுக்கும் வேலை செய்யுறதுக்கு பேரு ராணுவமில்லை. இதுல‌ புர்ச்சி வேற‌.
________________________________________________________________________________________________
மாணவிகளை ஈவ்டீசிங் செய்த போலீஸ் கைது

மாக் ட்ரில்னு சொல்லிடுவானுங்கோ

________________________________________________________________________________________________
தாமதிக்கப்பட்ட நீதி, மறுக்கப்பட்ட நீதி என்ற பழமொழி பலித்து விடாமல் இருக்க யாரிடம் நாம் முறையிடுவது என்றே தெரியவில்லை’’என்று கலைஞர் கூறியுள்ளார்.

காப்பாத்துங்கய்யானு எல்லாரும் கெஞ்சினப்ப சொக்கு பேசிட்டா, சிதம்பரம் பேசிட்டான்னு சொன்னபோது பழமொழி மறந்துடுச்சோ?
________________________________________________________________________________________________
இடைத்தேர்தலில் அனைத்து கட்சிகளும் வாக்காளர்களுக்கு பணம் தரமாட்டோம் என்று முடிவெடுத்தால் நாங்கள் போட்டியிடுவோம் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

ங்கொய்யாலே. ம‌த்த‌ தேர்த‌லுக்கு இப்புடி சொல்லுவாரா இவ‌ரு.
________________________________________________________________________________________________
நாளை டாக்டர் பட்டம் பெறுகிறார் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார்

ப‌ட‌ம் அறுவைன்னு யாரும் குறை சொல்ல‌ முடியாது இனிமே!
________________________________________________________________________________________________
இலங்கை பிரச்சனை குறித்து பாராளுமன்றத்தில் குரல் எழுப்புவோம்: வெங்கையா நாயுடு

அப்புடி போடு. எல்லாருக்கு சொறிய‌ற‌துக்கு இது ஒன்னு கிடைச்ச‌துடா. ப‌ர‌தேசிங்க‌ளா!
________________________________________________________________________________________________

96 comments:

கலகலப்ரியா said...

kaduppaa irukku..!

சூர்யா ௧ண்ணன் said...

//அப்புடி போடு. எல்லாருக்கு சொறிய‌ற‌துக்கு இது ஒன்னு கிடைச்ச‌துடா. ப‌ர‌தேசிங்க‌ளா!//

நச்! தலைவா!

பேநா மூடி said...

//பிரபாகரனுடன் 27 நாட்கள் தங்கி இருந்தேன்: வைகோ//

இந்த சொல்லி ஓட்டு கேக்குறதே இவனுங்களுக்கு வேலைய போச்சு...

அகல் விளக்கு said...

//அப்புடி போடு. எல்லாருக்கு சொறிய‌ற‌துக்கு இது ஒன்னு கிடைச்ச‌துடா. ப‌ர‌தேசிங்க‌ளா!//

அப்படிப்போடுங்க

S.A. நவாஸுதீன் said...

எல்லாமே சும்மா நச்சுன்னு சொல்லி இருக்கீங்க சார்.

//இலங்கை பிரச்சனை குறித்து பாராளுமன்றத்தில் குரல் எழுப்புவோம்: வெங்கையா நாயுடு

அப்புடி போடு. எல்லாருக்கு சொறிய‌ற‌துக்கு இது ஒன்னு கிடைச்ச‌துடா. ப‌ர‌தேசிங்க‌ளா!//

செவுள்ள செருப்பால அடிச்ச மாதிரி சொன்னீங்க

ஆரூரன் விசுவநாதன் said...

நறுக் பக்கங்கள் அருமை.......மிக ரசித்துப் படிக்கின்றேன்....

வாழ்த்துக்கள்

அன்புடன்
ஆரூரன்

நாஞ்சில் பிரதாப் said...

//இலங்கை அகதிகளுக்கு படிப்படியாக நிரந்தரக் குடியுரிமை: ஸ்டாலின்

இது சொல்லவே இவ்வளவு வருஷம். பேரன் பேத்திங்களுக்கு கிடைச்சிடுமா?//

கேட்டீங்க பாருங்க நாக்க புடுங்குறமாதிரி....

வானம்பாடிகள் said...

கலகலப்ரியா said...

/kaduppaa irukku..!/

ஆமம்மா. அதான் புலம்பிட்டேன்.

வானம்பாடிகள் said...

சூர்யா ௧ண்ணன் said..

/
நச்! தலைவா!/

நன்றி சூர்யா.

வானம்பாடிகள் said...

பேநா மூடி said...

/இந்த சொல்லி ஓட்டு கேக்குறதே இவனுங்களுக்கு வேலைய போச்சு.../

கூட்டம் கூட்டவே இதான்னு ஆக்கிட்டாங்க

வானம்பாடிகள் said...

அகல் விளக்கு said...
/
அப்படிப்போடுங்க/

ம்ம்

வானம்பாடிகள் said...

S.A. நவாஸுதீன் said...
/செவுள்ள செருப்பால அடிச்ச மாதிரி சொன்னீங்க/

பின்ன என்னாங்க. இப்போதான் இவனுங்களுக்கு தெரியுதா.

வானம்பாடிகள் said...

ஆரூரன் விசுவநாதன் said...

/நறுக் பக்கங்கள் அருமை.......மிக ரசித்துப் படிக்கின்றேன்....

வாழ்த்துக்கள்/

நன்றி ஆரூரன்.

வானம்பாடிகள் said...

நாஞ்சில் பிரதாப் said...

/கேட்டீங்க பாருங்க நாக்க புடுங்குறமாதிரி..../
ம்ம்.

ஸ்ரீ said...

:-)))))))

வானம்பாடிகள் said...

ஸ்ரீ said...

/:-)))))))/

:))

விந்தைமனிதன் said...

உள்ளத்தின் வேதனையை பகடி கலந்து எழுதி இருக்கிறீர்கள்.படிக்க அருமை.ஆனாலும் மனசு கனக்கிறது தோழரே!
//அப்புடி போடு. எல்லாருக்கு சொறிய‌ற‌துக்கு இது ஒன்னு கிடைச்ச‌துடா. ப‌ர‌தேசிங்க‌ளா!// ம்ம்ம். நெஞ்சு எரியுது! இதுபத்தி நானும் ஒரு பதிவு போட்டுருக்கேன். கொஞ்ஜம் படிச்சி பாருங்களேன் http://vinthaimanithan.blogspot.com/

வானம்பாடிகள் said...

விந்தைமனிதன் said...
/உள்ளத்தின் வேதனையை பகடி கலந்து எழுதி இருக்கிறீர்கள்.படிக்க அருமை.ஆனாலும் மனசு கனக்கிறது தோழரே!/

முதல் வரவுக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி. படிக்கிறேன் ஐயா.

பிரியமுடன்...வசந்த் said...

:(

வானம்பாடிகள் said...

பிரியமுடன்...வசந்த் said...

/ :(/

வா ராஜா.ம்ம்ம்

துபாய் ராஜா said...

இந்த சீற்றம் எல்லா தமிழருக்கும் இருந்தால் எமது இனத்தை சீண்டிப்பார்க்க எவரும் நினைப்பாரா....

லெமூரியன் said...

இவனுங்கள என்ன பன்றதுனே தெரியலைங்க.....

நாக்கப் புடுங்கற மாதிரி கேட்ட்ருக்கீங்க.

வானம்பாடிகள் said...

துபாய் ராஜா said...

/இந்த சீற்றம் எல்லா தமிழருக்கும் இருந்தால் எமது இனத்தை சீண்டிப்பார்க்க எவரும் நினைப்பாரா..../

வாங்க ராஜா:(

வானம்பாடிகள் said...

லெமூரியன் said...

/இவனுங்கள என்ன பன்றதுனே தெரியலைங்க.....

நாக்கப் புடுங்கற மாதிரி கேட்ட்ருக்கீங்க./

ஆமாங்க.

இராகவன் நைஜிரியா said...

அண்ணே அது என்ன அண்ணே.. எனக்காக ரிசர்வ் பண்ணி வச்ச மாதிரி.. 25 வது பின்னூட்டம் யாருமே போடம இருக்காங்க...

சரி வந்தாச்சு.. மீ த 25

இராகவன் நைஜிரியா said...

// பிரணாப் முகர்ஜி தீடீர் கொழும்பு பயணம் //

முதலில் கொழுப்பு பயணம் அப்படின்னு படிச்சுட்டேன்... என்னாடான்னு பார்த்தா... கொழும்பு..

இராகவன் நைஜிரியா said...

// ராஜபக்சே அதிரடி:பொன்சேகாவின் உறவினர்கள் பணிநீக்கம்

ஆர்மில கூட சட்டம், முறைன்னெல்லாம் கிடையாதாடா? //

அண்ணே ஆர்மி என்று சொல்லிகிட்டாங்க..

அது கொ....கூட்டம் அண்ணே... அங்க ஏது சட்டமும், முறையும்

இராகவன் நைஜிரியா said...

// நாட்டுக்கு நான் செய்த பங்களிப்பை மறந்து அரசுத் தரப்பு எனக்கு சூட்டிய பட்டம் "துரோகி" : சரத் பொன்சேகா //

அப்படி போடு... பங்களிப்பு ... அதுவும் நாட்டுக்கா... நல்லாவே நாடகம் போடறானுங்க

இராகவன் நைஜிரியா said...

// அரசாங்கத்தின் நடவடிக்கைகளை மியன்மார் ஜனாதிபதி பாராட்டியுள்ளாராம்
//

வேலிக்கு ஓணான் சாட்சி..

இராகவன் நைஜிரியா said...

// எம்மவர்களின் கூற்றுக்கள் காரணமாகவே அமெரிக்க போர்க் குற்றச் செயல்கள் குறித்து விசாரணை நடத்துகிறது – கோதபாய

கூத்தடிச்சிட்டு கூறுனது தப்புன்னா எப்புடி? //

அமெரிக்காவுக்கு சுய புத்தி இல்லை என்பதை இதைவிட அப்பட்டமா யாருமே சொன்னதில்லை.

நாகா said...

கிழிச்சு தோரணம் கட்டீட்டீங்களே ஐயா..!

இராகவன் நைஜிரியா said...

// இலங்கை வருகிறார் ஐ.நா. மனிதாபிமானத் தலைவர் //

மனிதாபிமானத் தலைவர் ???

இராகவன் நைஜிரியா said...

// இலங்கை அகதிகளுக்கு படிப்படியாக நிரந்தரக் குடியுரிமை: ஸ்டாலின் //

எத்தனை படி வச்சு கொடுக்க போறாங்க

இராகவன் நைஜிரியா said...

// சரத் பொன்சேகாவுக்கு இன்னும் உத்தியோகபூர்வ கடிதம் கிடைக்கவில்லையாம்

ம்கும். இனிமே உத்தியோக‌மே இல்லையாம். இதுதான் குறையோ? //

இது நச் நறுக்...

இராகவன் நைஜிரியா said...

// கூட்டுப்படைகளின் கட்டளைத் தளபதி பதவிக்கு விமானப்படைத் தளபதியின் பெயர் பரிந்துரை

அடுத்த‌ ப‌லிக‌டாவா? இல்ல‌ செக் மேட்டா? //

முதலில் செக் மேட்... அப்புறம் பலிகடா...

பலி கொடுக்கின்ற ஆட்டிற்கு முதலில் மாலை மரியாதை செய்வது மாதிரி

இராகவன் நைஜிரியா said...

// இலங்கையில் மீண்டும் அரசுக்கு எதிரான இயக்கங்கள் தோன்றும்:பொன்சேகா //

யார் யார் என்ன சொல்வது என்று விவஸ்தையில்லாம போயிடுச்சுங்க

இராகவன் நைஜிரியா said...

// தாமதிக்கப்பட்ட நீதி, மறுக்கப்பட்ட நீதி என்ற பழமொழி பலித்து விடாமல் இருக்க யாரிடம் நாம் முறையிடுவது என்றே தெரியவில்லை’’என்று கலைஞர் கூறியுள்ளார். //

தமிழக மக்களின் ஞாபகமறதியை நன்கு புரிந்த ஒரே தலைவர் இவருதானுங்க

இராகவன் நைஜிரியா said...

// மாணவிகளை ஈவ்டீசிங் செய்த போலீஸ் கைது //

வேலியே பயிரை மேய ஆரம்பிச்சுடுசுங்க

இராகவன் நைஜிரியா said...

// இடைத்தேர்தலில் அனைத்து கட்சிகளும் வாக்காளர்களுக்கு பணம் தரமாட்டோம் என்று முடிவெடுத்தால் நாங்கள் போட்டியிடுவோம் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். //

ஏங்க மருத்துவர் என்றால் ஜோக் அடிக்க கூடாதுங்களா?

இராகவன் நைஜிரியா said...

// பிரபாகரனுடன் 27 நாட்கள் தங்கி இருந்தேன்: வைகோ

இத‌யே சொல்லிட்டிருந்து ஆக‌ப் போற‌தென்ன‌? //

பாம்புகள், பல்லிகள் மத்தியிலே பிரபாகரணுடன் 27 நாட்கள் என்று இவரைப் பற்றி யாருமே பாடவில்லையாங்க

இராகவன் நைஜிரியா said...

// இலங்கை பிரச்சனை குறித்து பாராளுமன்றத்தில் குரல் எழுப்புவோம்: வெங்கையா நாயுடு //

ஆஹா...

இராகவன் நைஜிரியா said...

// நாளை டாக்டர் பட்டம் பெறுகிறார் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார்

ப‌ட‌ம் அறுவைன்னு யாரும் குறை சொல்ல‌ முடியாது இனிமே! //

இனி தமிழக பிரச்சனைகள் அனைத்தும் தீர்க்கப் பட்டு விடும்.

Kiruthikan Kumarasamy said...

///இலங்கை பிரச்சனை குறித்து பாராளுமன்றத்தில் குரல் எழுப்புவோம்: வெங்கையா நாயுடு

அப்புடி போடு. எல்லாருக்கு சொறிய‌ற‌துக்கு இது ஒன்னு கிடைச்ச‌துடா. ப‌ர‌தேசிங்க‌ளா!///

இதுதான் டாப்பு தலைவா.... வாழ்க. கன நாளா கடைப்பக்கம் வரமுடியேல்லை. மன்னியுங்கள்

வானம்பாடிகள் said...

இராகவன் நைஜிரியா said.
/அண்ணே அது என்ன அண்ணே.. எனக்காக ரிசர்வ் பண்ணி வச்ச மாதிரி.. 25 வது பின்னூட்டம் யாருமே போடம இருக்காங்க...

சரி வந்தாச்சு.. மீ த 25/

ஆஹா அதானா=))

வானம்பாடிகள் said...

இராகவன் நைஜிரியா said...

/முதலில் கொழுப்பு பயணம் அப்படின்னு படிச்சுட்டேன்... என்னாடான்னு பார்த்தா... கொழும்பு../

அதும் சரியாத்தான் இருக்கும்.ஹார்ட் நின்னு நின்னு அடிக்குது போல=))

வானம்பாடிகள் said...

இராகவன் நைஜிரியா said...

/அது கொ....கூட்டம் அண்ணே... அங்க ஏது சட்டமும், முறையும்/

=)).கோ..கூட்டம் கூட. இல்லைன்னா இத்தன பேரு காணாம ஓடி போய் இருப்பாங்களா?

வானம்பாடிகள் said...

இராகவன் நைஜிரியா said...

/அப்படி போடு... பங்களிப்பு ... அதுவும் நாட்டுக்கா... நல்லாவே நாடகம் போடறானுங்க/

நாட்டுல பங்களிப்பு வரைலைன்னுதான் சண்டையோ?

வானம்பாடிகள் said...

இராகவன் நைஜிரியா said...

/வேலிக்கு ஓணான் சாட்சி../

வேலி?...இத பார்த்து இவன் காபி அடிக்கப் போறான்.

வானம்பாடிகள் said...

இராகவன் நைஜிரியா said...

/அமெரிக்காவுக்கு சுய புத்தி இல்லை என்பதை இதைவிட அப்பட்டமா யாருமே சொன்னதில்லை./

சொல்லீட்டாலும்

வானம்பாடிகள் said...

நாகா said...

/கிழிச்சு தோரணம் கட்டீட்டீங்களே ஐயா..!/

ஹூம். இது 133வது தோரணம். கிழிஞ்சது என்னமோ மனசுதான்:(

வானம்பாடிகள் said...

இராகவன் நைஜிரியா said..

/மனிதாபிமானத் தலைவர் ???/

தலைவர்னா யார்மேலையும் அபிமானம் வைக்கக் கூடாதோ?

வானம்பாடிகள் said...

இராகவன் நைஜிரியா said...

/எத்தனை படி வச்சு கொடுக்க போறாங்க/

கடுப்’படி’க்கிறாய்ங்கண்ணே.

பா.ராஜாராம் said...

கிண்டி கெழங்கு எடுக்கிறீங்க சார்!

வானம்பாடிகள் said...

இராகவன் நைஜிரியா said...

/முதலில் செக் மேட்... அப்புறம் பலிகடா...

பலி கொடுக்கின்ற ஆட்டிற்கு முதலில் மாலை மரியாதை செய்வது மாதிரி/

அதாஞ்செரி. பங்கு சண்டைன்னு வந்தாச்சின்னா எல்லாம் ஒன்னுதான்.

வானம்பாடிகள் said...

இராகவன் நைஜிரியா said...

/தமிழக மக்களின் ஞாபகமறதியை நன்கு புரிந்த ஒரே தலைவர் இவருதானுங்க/

=)) சூப்பரு.

வானம்பாடிகள் said...

இராகவன் நைஜிரியா said...

/
வேலியே பயிரை மேய ஆரம்பிச்சுடுசுங்க/

அது வழமைதானுங்களே.

வானம்பாடிகள் said...

இராகவன் நைஜிரியா said...
/ஏங்க மருத்துவர் என்றால் ஜோக் அடிக்க கூடாதுங்களா?/

=)) சாமி முடியல

வானம்பாடிகள் said...

இராகவன் நைஜிரியா said...

/பாம்புகள், பல்லிகள் மத்தியிலே பிரபாகரணுடன் 27 நாட்கள் என்று இவரைப் பற்றி யாருமே பாடவில்லையாங்க/

எவனா இருந்தாலும் தம்பட்டத்துக்கு யூஸ் பண்ணீக்கிறானுவ.

வானம்பாடிகள் said...

Kiruthikan Kumarasamy said..

/இதுதான் டாப்பு தலைவா.... வாழ்க. கன நாளா கடைப்பக்கம் வரமுடியேல்லை. மன்னியுங்கள்/

நன்றி. பேந்து வாங்கோ.

வானம்பாடிகள் said...

பா.ராஜாராம் said...

/ கிண்டி கெழங்கு எடுக்கிறீங்க சார்!/

நன்றி

பழமைபேசி said...

இராக்கோழிக எல்லாம் போயி நல்ல பிள்ளையா தூங்குங்க!

வானம்பாடிகள் said...

பழமைபேசி said...

/இராக்கோழிக எல்லாம் போயி நல்ல பிள்ளையா தூங்குங்க!/

=))

பிரபாகர் said...

இத்போன்று எத்தனை முறை அந்த பரதேசிகளை திட்டினாலும் உரைக்காதய்யா...

பிரபாகர்.

cheena (சீனா) said...

நறுக்குன்னு நாலு வார்த்தை - செய்திகளுக்கு கருத்துகள் நல்லாத்தான் இருக்கு - நல்வாழ்த்துகள் பாலா

வெண்ணிற இரவுகள்....! said...

ஒவ்வொரு பதிலும் நச்சுனு இருக்கு ......ஐயா நீங்க ஏன் கட்சி ஆரபிக்க கூடாது ..........
நாங்க எல்லாம் பின்னாடி இருக்கோம்ல ஹ ஹ ஹ ........

தியாவின் பேனா said...

//
பிரணாப் முகர்ஜி தீடீர் கொழும்பு பயணம்

கலக்க ஆரம்பிச்சிடுச்சி டோய்!
______________________________

//

என்ன செய்வது ஈழத்தமிழன் வாழ்வு வியாபாரமாகி விட்டது

T.V.Radhakrishnan said...

நச்!

கதிர் - ஈரோடு said...

//பிரணாப் முகர்ஜி தீடீர் கொழும்பு பயணம்//

என்னாது... கொழுப்பு(!!!) பயணமா?

இவரு ஏங்க போறாரு...
போன ஆட்சியில வெளியுறவு மந்திரியா கொடுத்தற்கு, இந்த ஆட்சியில நிதி மந்திரியா வரவு செலவு கணக்கு பார்க்கவா?

//"துரோகி" : சரத் பொன்சேகா//
இது நல்லாயிருக்கு

//இலங்கை அகதிகளுக்கு படிப்படியாக நிரந்தரக் குடியுரிமை: ஸ்டாலின்//

எனக்கென்னமோ விரைவில் தேர்தல் வருமோனு தோணுது, போரை நிறுத்த கடிதம் எழுதினவர், திடீர்னு 300 கோடி ரூபாய் எடுத்துக்கொடுக்கிறாரே

எப்படியோ... எதன் பொருட்டாவது நல்லது ஏதேனும் நடந்தால் சரி...


//காங்கிரஸில் கறுப்பு ஆடுகள்:EVKS ஆவேசம்//

இவரு செவப்பாத்தான் இருக்காருங்க

//குப்பத்துல மாத்து துணியில்லாம இருக்குறவங்களுக்கு குடுக்க மாட்டானுங்க.//

இந்த நாய்கள யாருமே அடக்கமாட்டாங்களா?

பின்னோக்கி said...

ரவிக்குமார், கரீனா, வைகோ, மேட்டர் சூப்பர்.

எப்படித்தான் இவ்வளவு நியூஸ் படிக்குறீங்கன்னு தெரியலை.

சத்ரியன் said...

//இலங்கை பிரச்சனை குறித்து பாராளுமன்றத்தில் குரல் எழுப்புவோம்: வெங்கையா நாயுடு

அப்புடி போடு. எல்லாருக்கு சொறிய‌ற‌துக்கு இது ஒன்னு கிடைச்ச‌துடா. ப‌ர‌தேசிங்க‌ளா!//

பாலா,

இத இப்படியும் படிக்கலாமோ?

பார‌தே"சிங்க‌ளா"

வானம்பாடிகள் said...

பிரபாகர் said...

/இத்போன்று எத்தனை முறை அந்த பரதேசிகளை திட்டினாலும் உரைக்காதய்யா.../

நாம முடியாம புலம்பறது இது. :))

வானம்பாடிகள் said...

cheena (சீனா) said...

/நறுக்குன்னு நாலு வார்த்தை - செய்திகளுக்கு கருத்துகள் நல்லாத்தான் இருக்கு - நல்வாழ்த்துகள் பாலா/

நன்றிங்க சீனா

வானம்பாடிகள் said...

வெண்ணிற இரவுகள்....! said...

/ஒவ்வொரு பதிலும் நச்சுனு இருக்கு ......ஐயா நீங்க ஏன் கட்சி ஆரபிக்க கூடாது ..........
நாங்க எல்லாம் பின்னாடி இருக்கோம்ல ஹ ஹ ஹ ......../

ஹெ ஹெ வடிவேலு திரும்பிப்பார்த்தப்ப எப்புடீன்னு தெரியும்ல. நம்மகிட்டயேவா=))

வானம்பாடிகள் said...

தியாவின் பேனா said...

/என்ன செய்வது ஈழத்தமிழன் வாழ்வு வியாபாரமாகி விட்டது/

கேவலங்கெட்ட அரசியல்.

வானம்பாடிகள் said...

T.V.Radhakrishnan said...

/நச்!/

நன்றிங்க

வானம்பாடிகள் said...

கதிர் - ஈரோடு said...

/இவரு ஏங்க போறாரு...
போன ஆட்சியில வெளியுறவு மந்திரியா கொடுத்தற்கு, இந்த ஆட்சியில நிதி மந்திரியா வரவு செலவு கணக்கு பார்க்கவா?/

என்னா நடந்தாலும்செரி நம்ம பேரு நாறிரப்படாதுன்னு கெஞ்சவோ?

/எனக்கென்னமோ விரைவில் தேர்தல் வருமோனு தோணுது, போரை நிறுத்த கடிதம் எழுதினவர், திடீர்னு 300 கோடி ரூபாய் எடுத்துக்கொடுக்கிறாரே

எப்படியோ... எதன் பொருட்டாவது நல்லது ஏதேனும் நடந்தால் சரி.../

ம்கும். இதுலயும் கலர் டிவி பொட்டி, இதர ஓசி தான் பிரதானம்.
/
இவரு செவப்பாத்தான் இருக்காருங்க/

அதுக்காக செவப்பா இருக்கிறவன் பொய்சொல்ல மாட்டான்னு எல்லாம் ஒத்துக்கிறமுடியாது.

/இந்த நாய்கள யாருமே அடக்கமாட்டாங்களா?/

முடியூஊஊஊஊம்.ஆஆஆஆஆஆஅனாஆஆஆஆஆ முடியாஆஆஆஆஆஆஆது.

வானம்பாடிகள் said...

பின்னோக்கி said...

/ரவிக்குமார், கரீனா, வைகோ, மேட்டர் சூப்பர்.

எப்படித்தான் இவ்வளவு நியூஸ் படிக்குறீங்கன்னு தெரியலை./

:)

வானம்பாடிகள் said...

சத்ரியன் said...

/பாலா,

இத இப்படியும் படிக்கலாமோ?

பார‌தே"சிங்க‌ளா"/

பாரத தேசியங்களான்னே சொல்லலாம். எவன் விட்டு வெச்சான்.

கார்த்திகைப் பாண்டியன் said...

:-((((((((((

இப்படிக்கு நிஜாம்.., said...

நாக்கப் புடிங்கிக்கிற மாதிரி 4 வார்த்தன்னு சொல்லுங்கண்ணே!

இப்படிக்கு நிஜாம்.., said...

//காங்கிரஸில் கறுப்பு ஆடுகள்:EVKS ஆவேசம்//

இருந்தாலும் EVKSக்கு இவ்வளவு தற்புகழ்ச்சி ஆவாதன்ணே!

அன்புடன் மலிக்கா said...

செம நச், கலக்குறீங்க சூப்பர்

இப்படிக்கு நிஜாம்.., said...

அண்ணே! இப்பத்தான் ஒரு சேதி தெரிஞ்சது. நான் இன்னும் உங்களுக்கு பாலோயர் ஆகல. ஆனா ஆனதா நெனச்சிக்கிட்டு இருக்கேன். வெளிய்ய சொல்லிடாதீங்க..

வானம்பாடிகள் said...

கார்த்திகைப் பாண்டியன் said...

/:-((((((((((/

வாங்க பாண்டியன்

வானம்பாடிகள் said...

இப்படிக்கு நிஜாம்.., said...

/நாக்கப் புடிங்கிக்கிற மாதிரி 4 வார்த்தன்னு சொல்லுங்கண்ணே!/

/இருந்தாலும் EVKSக்கு இவ்வளவு தற்புகழ்ச்சி ஆவாதன்ணே!/

/அண்ணே! இப்பத்தான் ஒரு சேதி தெரிஞ்சது. நான் இன்னும் உங்களுக்கு பாலோயர் ஆகல. ஆனா ஆனதா நெனச்சிக்கிட்டு இருக்கேன். வெளிய்ய சொல்லிடாதீங்க../

=)). நன்றி நிஜாம்

வானம்பாடிகள் said...

அன்புடன் மலிக்கா said...

/செம நச், கலக்குறீங்க சூப்பர்/

நன்றி

யூர்கன் க்ருகியர் said...

//இலங்கை வருகிறார் ஐ.நா. மனிதாபிமானத் தலைவர் //

ந்ன்கொய்யாள ..மனிதாபிமானத் தலைவர் அப்படின்னு நீங்களே சொல்லிக்க வேண்டியது தான்.
வேணும்முன்னா மனித"ஆப்பு"மான தலைவர் அப்படின்னு வேணா சொல்லிக்கோங்க ..

யூர்கன் க்ருகியர் said...

//கூட்டுப்படைகளின் கட்டளைத் தளபதி பதவிக்கு விமானப்படைத் தளபதியின் பெயர் பரிந்துரை//

எந்த நாட்டு விமானப்படை தளபதியின் பெயராம் ? இந்தியாவா,, சீனாவா ,,,,பாகிஸ்தானா ??

யூர்கன் க்ருகியர் said...

//பிரபாகரனுடன் 27 நாட்கள் தங்கி இருந்தேன்: வைகோ//

பேர சொன்னாவே சும்மா அதிரும் இல்ல ?
வோட்டு விழாதா என்ன ??

யூர்கன் க்ருகியர் said...

//இலங்கை பிரச்சனை குறித்து பாராளுமன்றத்தில் குரல் எழுப்புவோம்: வெங்கையா நாயுடு
//

நாயுடு ...மொதல்ல நீ மூடு ..
கடுப்புல குரவளைய கடிச்சிரபோறேன்

ரோஸ்விக் said...

தல, இந்த மாதிரி ஒரு தொகுப்பான கேள்வி என் மனசுக்குள்ள எப்போதும் எழும்...(வலையுலத்திற்குள்ள அப்ப நான் வரல...) உங்க எழுத்த பாத்துட்டு....அப்பாடி ஒருத்தர்(ன்) நாளா கேக்குறார்(ண்)டானு ரொம்ப சந்தோசப்பட்டேன்.

நான் இந்த வாசகங்களுக்கு பரம ரசிகன்ய்யா...கலக்குங்க. :-))

வானம்பாடிகள் said...

யூர்கன் க்ருகியர் said...
/..மனிதாபிமானத் தலைவர் அப்படின்னு நீங்களே சொல்லிக்க வேண்டியது தான்.
வேணும்முன்னா மனித"ஆப்பு"மான தலைவர் அப்படின்னு வேணா சொல்லிக்கோங்க ../

யூர்கன் டச்:))

/எந்த நாட்டு விமானப்படை தளபதியின் பெயராம் ? இந்தியாவா,, சீனாவா ,,,,பாகிஸ்தானா ??/

அதொரு டம்மி பீசு சிக்கும்

/நாயுடு ...மொதல்ல நீ மூடு ..
கடுப்புல குரவளைய கடிச்சிரபோறேன்/

அது அது!

வானம்பாடிகள் said...

ரோஸ்விக் said...
/நான் இந்த வாசகங்களுக்கு பரம ரசிகன்ய்யா...கலக்குங்க. :-))/

நன்றி

ராஜ நடராஜன் said...

//சரத் பொன்சேகாவுக்கு இன்னும் உத்தியோகபூர்வ கடிதம் கிடைக்கவில்லையாம்//

Chief of Defence Staff General Sarath Fonseka was allowed to retire with immediate effect as he had lost faith in President Mahinda Rajapaksa as well as the government, the letter sent to the outgoing General yesterday by the President’s Secretary and made public today said.

The text of the letter sent by the Secretary to the President, Lalith Weeratunga, in response to the request made by Gen. Fonseka to retire from the post of Chief of Defence Staff was released by the government information department:

“I am directed by His Excellency the President to acknowledge receipt of your letter dated 12 November 2009 seeking permission to retire from the Regular Force of the Sri Lanka Army.

I have also been directed by His Excellency the President to inform you that in keeping with your wish to proceed on retirement without further delay as you have already over stayed your date of retirement by four years, you will be retired from the Sri Lanka Army with immediate effect. Consequently, you will cease to hold office as Chief of Defence Staff, also with immediate effect.

This decision has been arrived at having giving anxious consideration to the fact that you yourself believe that H.E. the President and the Government have lost the trust and faith bestowed upon you, as the senior most serving military officer in the country.

I have been further directed to inform you that you will also be provided with adequate security commensurate with the level of threat.

In regard to the numerous statements made by you in your letter under reference and Annex A, I’m directed by His Excellency the President to inform you that a further communication will follow setting out the position of the Government.”

Courtesy:Daily Mirror

ராஜ நடராஜன் said...

//நாட்டுக்கு நான் செய்த பங்களிப்பை மறந்து அரசுத் தரப்பு எனக்கு சூட்டிய பட்டம் "துரோகி" : சரத் பொன்சேகா

ஒரு பாதி வெளிய வந்துடுச்சி. மீதிய நீ சொல்லுடி!//

போர் குற்றங்களுக்கான காரணங்களாக போர் காலத்தின் ஆளுமையில் முந்திக் கொண்டது சரத் பொன்சேகாவா அல்லது ராஜபக்சே சகோதரர்களா என்பதில் இருக்கிறது சூட்சுமம்.

சரத்பொன்சேகாவின் காய் நகர்த்தல்கள் ராஜபக்சேகளுக்கு ஏதோ வில்லங்கம் தலைக்கு மேல் இருப்பதாகவே தெரிகிறது.தேசம் என்ற பெயரில் நரமாமிசம் தின்ற மனிதர்கள் இரு அணியாகிப் போனது காலத்தின் வினோதம்.

ஆனால் இதற்கெல்லாம் பக்க பலமாக என் தேசத்து தமிழக கள்ளனும்,மத்திய குள்ளனும் உறுதுணையாகி நின்றது,நிற்பதல்லவா மனதை வலிக்கச் செய்கிறது.

வானம்பாடிகள் said...

ராஜ நடராஜன் said...
/ஆனால் இதற்கெல்லாம் பக்க பலமாக என் தேசத்து தமிழக கள்ளனும்,மத்திய குள்ளனும் உறுதுணையாகி நின்றது,நிற்பதல்லவா மனதை வலிக்கச் செய்கிறது./

சரியாச் சொன்னீங்க நடராஜன். நிஜமாகவே நாயர் புடிச்ச புலிவால் ஆகிபோச்சு.