Sunday, November 29, 2009

கால நேரம் !

நெருப்பில்லாம புகையாது! ரொம்பக்காலமா ஜனங்க கிருத்திரமமா பொரணி பேச்சுக்கு வலுவூட்ட சொல்லிட்டிருந்த பழமொழி பொய்னு ஆகிப்போச்சு போல. ஆமாங்க, மின்காந்த அடுப்பு (Induction Stove) வந்துடுச்சாம். நெருப்பே இல்லாம சமைக்குமாம்.


எனக்கு சிப்பு சிப்பா வருது. பின்ன என்னங்க? ஊருக்கு போய் இருக்கும்போது பார்த்திருக்கேன். ஒல்லிக்குச்சிக்  கிழவி, அதான் எங்க பாட்டி ஒத்த ஆள கிட்ட சேர்க்காது. தனியா, விறகு, சுள்ளி என்னமோ வெச்சி ஒரு 25 பேருக்கு கிட்ட சமைக்கும்.  அம்மில ஓட்டி ஓட்டி அரைக்கிற அழகிருக்கே. சும்மா வலயப்பட்டி தவில் கணக்கா தேங்கா நசுக்கற சத்தமும், அரைச்சு முடிச்சி நட்டுகுத்தா குழவிய சுத்தி, ஒரு விரல மடக்கி மேல இருந்து வழிக்கிற அழகும் இருக்கே. அரைச்ச தடமே இருக்காது.

சமையலோட வாசனை மெது மெதுவா நாசிய நெருடி சமையலறை பக்கமா இழுக்கும். அடுப்ப‌டியில‌ கெட‌ந்து சாவுறேன்னு முன‌கின‌தும் இல்லை. தீஞ்சி போன‌து, பொங்கி வ‌ழிஞ்ச‌துங்கற வ‌ர‌லாறும் இல்லை. விசுக்கு விசுக்குன்னு போய்ட்டு வந்து, விரட்டி, நடுவில ரெண்டு வாண்டுக்கு குளிப்பாட்டின்னு ஏதோ பண்ணிகிட்டு, சாப்பிட வாங்க பசங்களான்னு குரல் விடுறப்போ வயத்துல பசி ரெடியா இருக்கும்.

வந்தவங்க வழிச்சி நக்கிட்டாங்கன்னு, கொஞ்சம் இருங்க சாதம் 2 நிமிஷத்துல ஆயிடும்னோ, பொரியல் தீந்து போச்சின்னோ, குழம்பு ரசமெல்லாம் விளாத்துற வேலையோ கிடையாது. உப்பு தூக்கல், புளி அதிகம்னு ரிப்பேர் வேலையே கிடையாது.

பொழ‌ப்புன்னு ப‌ட்டிண‌ம் வ‌ந்தும், விற‌கு அடுப்பு கூடாதுன்னு க‌ண்டிஷ‌ன்ல‌தான் வீடுகிடைக்கும்னு ஆன‌ பொழுது கூட‌ கும‌ட்டி அடுப்பில் க‌ரி போட்டு ச‌மைய‌ல் நடக்கும். அப்ப‌வும் அம்மிதான். உர‌ல்தான். ச‌மைய‌ல் என்ன‌மோ அதே நேர‌ம்தான் எடுக்கும்.  ஒரு நாள் காட்டு க‌ரியை விட‌ லீக்கோ க‌ரி ரொம்ப‌ சூடு, கொஞ்ச‌மா ஆகும், விலை க‌ம்மி, சேமிப்புன்னு க‌தை விட்டான். சாம்ப‌ல் இல்லைன்னு அள‌ந்தான். அப்ப‌வும் சமையலுக்கு அதே நேர‌ம்தான்.

அப்புற‌ம் கெர‌சின் வ‌ந்திச்சி. வ‌த்தி ஸ்ட‌வ்வுன்னாங்க‌. ஜ‌ன‌ங்க‌ல்லாம் பாய்ஞ்சிகிட்டு அந்த‌ ப‌க்க‌ம் போன‌து. அந்த‌ வாச‌னை புடிக்க‌ல‌ன்னு முன‌கிக்கிட்டே அதுல‌ தான் ச‌மையல்னு மாறினாங்க‌. பாத்திர‌மெல்லாம் க‌ரி புடிச்ச‌து. செங்க‌ல் பொடி, புளின்னு தேயோ தேய்னு தேய்ச்சி கூடுத‌ல் வேலையாச்சி. ச‌மைய‌ல் என்ன‌மோ அதே நேர‌ம்தான்.

அப்புற‌ம் ப‌ம்ப் ஸ்ட‌வ் வ‌ந்துடிச்சி. க‌ரிபுடிக்காதுன்னு விள‌ம்ப‌ர‌ம். அதுக்கு பின்னு, ப‌க்க‌த்துல‌யே ஆளு இருக்க‌ணும். இல்லைன்னா தீய்ஞ்சிடும், பொங்கிடும். மேல‌ கொதிக்கிற‌ப்ப‌ ப‌ம்ப் ப‌ண்ணி அது சிந்திக் காய‌ம். இப்ப‌டி ப‌ல‌ பிர‌ச்சினைக‌ள் வ‌ந்தும் ச‌மைய‌ல் அதே நேர‌ம். இதனால கொஞ்ச மருமகள்கள் உயிர் போனதும் கூடுதல் பலன்.

பிற‌கு இண்டியன் ஆயில் நிறுவனம் ஒரு வ‌த்தி ஸ்ட‌வ் கொண்டு வந்து, அதுக்கு டில்லிக்கு போற‌வ‌ங்க‌ கிட்ட‌ சொல்லி, காத்திருந்து காசு மேல‌ குடுத்து வாங்கின‌து. ஒரு மாறுத‌லும் இல்லை. பிற‌கு, கேஸ், அதுக்கு காத்திருத்த‌ல், ப்ர‌ஷ‌ர் குக்க‌ர், மிக்ஸி, க்ரைண்ட‌ர், 2 பர்ன‌ர் போதாதுன்னு 4 ப‌ர்ன‌ர் ஸ்டவ்வு, குக்கிங் ரேஞ்ச், எலெக்ட்ரிக் ஸ்ட‌வ், எலெக்ட்ரிக் குக்க‌ர், மைக்ரோ வேவ்னு வந்துச்சி.

புகை போக்க என்னமோ மிசினு வேற எலக்ட்ரிக் சிம்னின்னு வந்துடுச்சி காசு புடுங்க போதாம‌ இப்போ இன்ட‌க்ஷ‌ன் ஸ்ட‌வ்வாம். அதுக்கு த‌னியா பாத்திர‌ங்க‌ள் வாங்கணுமாம். விளம்பரம் பார்த்தா சமைக்கப் போறேன்னு சொல்ற நேரத்துல சமைச்சிடலாமாம். தீச்சுட்ட காயம் இருக்காதாம்.

விளம்பரத்துல சொல்லாம விட்டது என்ன தெரியுமா. இதய நோய்க்கு பேஸ்மேக்கர் கருவி, டெஃபிப்ரிலேடர் கருவி இது இருக்கிறவங்க இந்த அடுப்புகிட்ட போனா அது தாறுமாறாயிடுமாம். கையில போட்டிருக்கிற மோதிரம், இப்பதான் நீளமா செயின் போடுறாங்கள்ள அதெல்லாம் சூடாயிடுமாம். ஈர பெயிண்டுன்னாலே தொடாம நம்பமாட்டான் நம்மாளு. இது என்னாதுன்னு தடவி பார்த்து கை பொரிஞ்சி போகும்.

நிஜ‌ம்மா சொல்லுங்க‌! அன்னைக்கு அடுப்ப‌டில‌ செல‌வுப‌ண்ண‌ நேர‌த்துல‌ இதெல்லாம் வ‌ந்து ஏதாவ‌து ப‌ல‌ன் இருக்குன்னா எப்ப‌டி ஃபாஸ்ட் ஃபுட், இன்ஸ்ட‌ன்ட் ஃபுட் எல்லாம் பிச்சிகிட்டு ஓடுமா? அப்போ விறகுல சமைச்சவங்கள விடுங்க. கிரசின் அடுப்பில இருந்து கேஸ் வாங்கினவங்க எவ்வளவு மிச்சம் புடிச்சாங்க. கேஸ்ல இருந்து மைக்ரோவேவ் வரைக்கும் படிப்படியா மாறினவங்க சேமிச்சது என்ன?

இன்னும் கிராம‌த்தில‌ வேர் இருக்கிற‌வ‌ங்க‌ ம‌ண்பானைத் த‌ண்ணி, ம‌ண் ச‌ட்டில‌ செய்த‌ சாப்பாடு, க‌ல்ச‌ட்டிக் குழ‌ம்புன்னு ஏங்காம‌ இருக்கோமா?சமைக்கிற உணவிலதான் ருசியும் ஆரோக்கியமும் இல்லையா? இல்ல முறையில இல்லையா? மிஞ்சி மிஞ்சிப் போனா சமைக்கிறதுக்கு ஒரு மணிநேரம் ஆகுமா? இதையும் சுருக்கி அந்த நேரத்துல இன்னோரு சீரியல் பார்க்கலாமா?

இதுக்கு ஒரு பட்டி மன்றம் வைக்கிற அளவுக்கு விஷயம் இருக்கு. அதெல்லாத்தையும் மீறி அவிய்ங்க வீட்டில இருக்கு. நம்ம வீட்டில இல்லைன்னா கௌரவக் குறைச்சலுங்கிற காரணம் தேவையோ தேவையில்லையோ, இதெல்லாம் வந்துகிட்டேதான் இருக்கும்.

73 comments:

தியாவின் பேனா said...

நான்தான் முதலா ?

தியாவின் பேனா said...

புதுமைப் பித்தன் "ஒருநாள் கழிந்தது " என்ற சிறுகதையை எழுதும்போது சென்னை வாழ்க்கை வேறு இப்ப வேறு .
காலம் மாறிப் போச்சு
நல்ல நடையில் நயக்கத்தக்கதாக எழுதியுள்ளீர்கள்

முடிந்தால் "ஒருநாள் கழிந்தது " சிறுகதை படித்துப் பாருங்கள்
வாழ்த்துக்கள்

இராகவன் நைஜிரியா said...

காலமும் நேரமும் அதேதாங்க..

மனுஷன் தான் ரொம்ப மாறிட்டான்.

இராகவன் நைஜிரியா said...

// ஆமாங்க, மின்காந்த அடுப்பு (Induction Stove) வந்துடுச்சாம். நெருப்பே இல்லாம சமைக்குமாம். //

ஆஹா.. நெருப்பில்லாமலா....

என்னமோ நடக்குது மர்மமா இருக்குது..

ஒன்னுமே புரியலை உலகத்திலே..

இராகவன் நைஜிரியா said...

// எனக்கு சிப்பு சிப்பா வருது. //

அண்ணே அது என்ன சிப்பு சிப்பு...

கேள்விப் பட்டதேயில்லேயே?

இராகவன் நைஜிரியா said...

அண்ணே உங்களுக்கு அம்மி, உரல் இதில் எல்லாம் அரைக்க தெரியுமாண்ணே?

எனக்கு இரண்டிலும் நல்ல அரைக்கத் தெரியும்.. அதான் கேட்டேன்.

இராகவன் நைஜிரியா said...

// இதனால கொஞ்ச மருமகள்கள் உயிர் போனதும் கூடுதல் பலன். //

இது... டிபிக்கல் அண்ணன் டச்.

இராகவன் நைஜிரியா said...

// புகை போக்க என்னமோ மிசினு வேற எலக்ட்ரிக் சிம்னின்னு //

ஆமாம் அண்ணே.. இது இல்லாத வீடு இப்ப பார்க்குறது அபூர்வம் அண்ணே..

இராகவன் நைஜிரியா said...

// ஈர பெயிண்டுன்னாலே தொடாம நம்பமாட்டான் நம்மாளு. இது என்னாதுன்னு தடவி பார்த்து கை பொரிஞ்சி போகும். //

அது சரி... அதை ஏன் தடவிப் பார்க்கணும்.. கையைச் சுட்டுகிடணும்...

தேவையில்லாத வம்புதானே?

இராகவன் நைஜிரியா said...

// விளம்பரத்துல சொல்லாம விட்டது என்ன தெரியுமா. இதய நோய்க்கு பேஸ்மேக்கர் கருவி, டெஃபிப்ரிலேடர் கருவி இது இருக்கிறவங்க இந்த அடுப்புகிட்ட போனா அது தாறுமாறாயிடுமாம். கையில போட்டிருக்கிற மோதிரம், இப்பதான் நீளமா செயின் போடுறாங்கள்ள அதெல்லாம் சூடாயிடுமாம். //

ஓ இந்த வம்பெல்லாம் வேற இருக்கா?

இராகவன் நைஜிரியா said...

// இன்னும் கிராம‌த்தில‌ வேர் இருக்கிற‌வ‌ங்க‌ ம‌ண்பானைத் த‌ண்ணி, ம‌ண் ச‌ட்டில‌ செய்த‌ சாப்பாடு, க‌ல்ச‌ட்டிக் குழ‌ம்புன்னு ஏங்காம‌ இருக்கோமா?//

அது ஒரு கனாக் காலம்..

கலகலப்ரியா said...

ரொம்ப அருமையா சொல்லி இருக்கீங்க...! அம்மியும்... அம்மம்மாவும்... அந்த லாவகமும்... சமையலும் ... வாசனையும்... ருசியும்.. ம்ம்ம்..!

பிரியமுடன்...வசந்த் said...

//எனக்கு சிப்பு சிப்பா வருது//

1GB யா? இல்ல 2GB யா?

பிரியமுடன்...வசந்த் said...

//அரைச்சு முடிச்சி நட்டுகுத்தா குழவிய சுத்தி, ஒரு விரல மடக்கி மேல இருந்து வழிக்கிற அழகும் இருக்கே.//

சான்ஸே இல்ல எவ்வளவு ரசனையா எழுதியிருக்கிங்க..

பிரியமுடன்...வசந்த் said...

//சமையலோட வாசனை மெது மெதுவா நாசிய நெருடி சமையலறை பக்கமா இழுக்கும். அடுப்ப‌டியில‌ கெட‌ந்து சாவுறேன்னு முன‌கின‌தும் இல்லை. தீஞ்சி போன‌து, பொங்கி வ‌ழிஞ்ச‌துங்கற வ‌ர‌லாறும் இல்லை. விசுக்கு விசுக்குன்னு போய்ட்டு வந்து, விரட்டி, நடுவில ரெண்டு வாண்டுக்கு குளிப்பாட்டின்னு ஏதோ பண்ணிகிட்டு, சாப்பிட வாங்க பசங்களான்னு குரல் விடுறப்போ வயத்துல பசி ரெடியா இருக்கும்.//

இதப்படிக்கும் போது எங்க யப்பத்தா ஞாபகம் வந்துச்சு நைனா :(

பிரியமுடன்...வசந்த் said...

//இது என்னாதுன்னு தடவி பார்த்து கை பொரிஞ்சி போகும். //

ஹ ஹ ஹா... கரெக்ட்டுதான்

பிரியமுடன்...வசந்த் said...

//மிஞ்சி மிஞ்சிப் போனா சமைக்கிறதுக்கு ஒரு மணிநேரம் ஆகுமா? இதையும் சுருக்கி அந்த நேரத்துல இன்னோரு சீரியல் பார்க்கலாமா?//

யம்மா நைனா என்னமோ சொல்லிட்டு இருக்கு என்னான்னு கேளுங்க :)))

ஸ்ரீராம். said...

அந்தந்த ஞாபகத்துல, அந்தந்த காலத்துல, அந்தந்த சமையல்களை ரசித்தவர்கள் அதை விட்டு வெளி வருவது கஷ்டம்.
மண்பானைச் சமையல், பிரஷர் குக்கர் இல்லாமல் கொதி சாதம் சுவைப்பவர்கள் இன்றும் அதிகம்.
எல்லோரும் மூன்று நான்கு என்று பின்னூட்டமிடுகிறார்களே, நான் ஒன்று மட்டும்தான்பா...தப்பு இல்லையே....!

வானம்பாடிகள் said...

தியாவின் பேனா said...

/நான்தான் முதலா ?/

ஆம். தியா.

/முடிந்தால் "ஒருநாள் கழிந்தது " சிறுகதை படித்துப் பாருங்கள்
வாழ்த்துக்கள்/

படித்திருக்கிறேன் தியா.நினைவூட்டியமைக்கு நன்றி.

வானம்பாடிகள் said...

இராகவன் நைஜிரியா said...

/மனுஷன் தான் ரொம்ப மாறிட்டான்./

ஆ.ஆ.சொல்லிட்டு தானே போனேன் வெளிய கிளம்பரேன்னு. இல்லாதப்போ கும்மியா?

அதாண்ணே. மாறி கண்டதுதான் என்ன?

வானம்பாடிகள் said...

இராகவன் நைஜிரியா said...

/ஆஹா.. நெருப்பில்லாமலா....

என்னமோ நடக்குது மர்மமா இருக்குது..

ஒன்னுமே புரியலை உலகத்திலே../

எக்ஸ்சேஞ்ச் எல்லாம் வந்தாச்சி. தெரியாதா?

வானம்பாடிகள் said...

இராகவன் நைஜிரியா said...

/அண்ணே அது என்ன சிப்பு சிப்பு...

கேள்விப் பட்டதேயில்லேயே?/

வடிவேலு கவனமா பார்க்கணும்னே.:)

வானம்பாடிகள் said...

இராகவன் நைஜிரியா said...

/அண்ணே உங்களுக்கு அம்மி, உரல் இதில் எல்லாம் அரைக்க தெரியுமாண்ணே?

எனக்கு இரண்டிலும் நல்ல அரைக்கத் தெரியும்.. அதான் கேட்டேன்./

இதல்லாம் சத்தமா கேக்கலாமா. லொல்லுதானே

வானம்பாடிகள் said...

இராகவன் நைஜிரியா said...

/ ஆமாம் அண்ணே.. இது இல்லாத வீடு இப்ப பார்க்குறது அபூர்வம் அண்ணே../

சண்டை போட புது காரணம். உன் வீட்டு கறைஎல்லாம் என் வீட்டு சுவத்திலன்னு.

வானம்பாடிகள் said...

இராகவன் நைஜிரியா said...

/அது சரி... அதை ஏன் தடவிப் பார்க்கணும்.. கையைச் சுட்டுகிடணும்...

தேவையில்லாத வம்புதானே?/

ஃபோடோ பார்த்தா அப்டிதானே இருக்கு.

வானம்பாடிகள் said...

இராகவன் நைஜிரியா said.

/ஓ இந்த வம்பெல்லாம் வேற இருக்கா?/

எப்படி அனுமதிக்கிறாங்க தெரியல.

வானம்பாடிகள் said...

இராகவன் நைஜிரியா said...

/அது ஒரு கனாக் காலம்../

இல்லண்ணே. இப்போல்லாம் ஹோட்டல்ல இத போட்டு செமையா காசு பார்க்கறாங்க. கூடுற கும்பல் நம்மள மாதிரி பெருசுங்க இல்லை. யூத்துங்க.

வானம்பாடிகள் said...

கலகலப்ரியா said...

/ரொம்ப அருமையா சொல்லி இருக்கீங்க...! அம்மியும்... அம்மம்மாவும்... அந்த லாவகமும்... சமையலும் ... வாசனையும்... ருசியும்.. ம்ம்ம்..!/

நன்றி. இப்போதான் எனக்கும் ஏதோ எழுதரேன்னு தோணுது.

வானம்பாடிகள் said...

பிரியமுடன்...வசந்த் said...

/ 1GB யா? இல்ல 2GB யா?/

அய்ய. இங்க செல்லு ஃபோன்ல 8gb கு கம்மியா இருந்தா எவனும் மதிக்க மாட்டானுவ. நீ எங்க இருக்க:))

வானம்பாடிகள் said...

பிரியமுடன்...வசந்த் said...

/சான்ஸே இல்ல எவ்வளவு ரசனையா எழுதியிருக்கிங்க..//

நிஜம்மாவா.

வானம்பாடிகள் said...

பிரியமுடன்...வசந்த் said...

/இதப்படிக்கும் போது எங்க யப்பத்தா ஞாபகம் வந்துச்சு நைனா :(/

ம்ம்.

அன்புடன் மலிக்கா said...

காலமும் நேரமும் தன் கடமைகளைச்சரிவரச்செய்கிறது ஆனால் மனிதன் அதன்மேல் தன்தவறுகளைத்தையும் போட்டுவிட்டு தப்பிக்கபார்க்கிறான்..

வானம்பாடிகள் said...

பிரியமுடன்...வசந்த் said...

/யம்மா நைனா என்னமோ சொல்லிட்டு இருக்கு என்னான்னு கேளுங்க :)))/

கேக்கறது என்னா. தெரியுமே.

கார்த்திகைப் பாண்டியன் said...

மாறத் தெரியாமல் முழிப்பவர்களில் நானும் ஒருவன்.. ஹ்ம்ம்..

வானம்பாடிகள் said...

ஸ்ரீராம். said...

/அந்தந்த ஞாபகத்துல, அந்தந்த காலத்துல, அந்தந்த சமையல்களை ரசித்தவர்கள் அதை விட்டு வெளி வருவது கஷ்டம்.//

இல்லைங்க. இப்படி பழங்கால சமையல் இல்லாத வீக் எண்ட் இருக்கா ஹோடல்ல. கூடுற கூட்டம் இதெல்லாம் சாப்பிட வாய்ப்பில்லாத தலைமுறை. திரும்ப திரும்ப போறாங்களே. ஸ்டைரோஃபோம் கப்புல குடுக்கிற குல்ஃபிக்கும் பானைல குடுக்கிற குல்ஃபிக்கும் எவ்வளவு வித்தியாசம்.

/மண்பானைச் சமையல், பிரஷர் குக்கர் இல்லாமல் கொதி சாதம் சுவைப்பவர்கள் இன்றும் அதிகம்./
உங்களுக்கு தெரியுமா தெரியாது. சாதம் அப்படித்தான் இருக்கணும். அதனாலதான் கோவில் நிவேதனத்துக்கும், இறந்தவர் திதிலயும் ஹவிசு என்னும் கொதிசாதம் தான்.

/எல்லோரும் மூன்று நான்கு என்று பின்னூட்டமிடுகிறார்களே, நான் ஒன்று மட்டும்தான்பா...தப்பு இல்லையே....!/

ஒரெ ஒரு பின்னோட்டமாவது போட்டே ஆகணும்:))

வானம்பாடிகள் said...

அன்புடன் மலிக்கா said...

/காலமும் நேரமும் தன் கடமைகளைச்சரிவரச்செய்கிறது ஆனால் மனிதன் அதன்மேல் தன்தவறுகளைத்தையும் போட்டுவிட்டு தப்பிக்கபார்க்கிறான்../

இது அதப்பத்தி இல்லையே. காலம் மாறி எவ்வளவோ வந்தும் சமையலுக்கு ஆகிற நேரம் அதே தான். பக்க விளைவுகளும் இழப்பும் அதிகம்னு சொல்ல வந்தேன்.

வானம்பாடிகள் said...

கார்த்திகைப் பாண்டியன் said...

/மாறத் தெரியாமல் முழிப்பவர்களில் நானும் ஒருவன்.. ஹ்ம்ம்../

சாம் ப்ளட்.

இராகவன் நைஜிரியா said...

// வானம்பாடிகள் said...
கார்த்திகைப் பாண்டியன் said...

/மாறத் தெரியாமல் முழிப்பவர்களில் நானும் ஒருவன்.. ஹ்ம்ம்../

சாம் ப்ளட். //

நான் Be positive.. அதாங்க .. B+. அப்ப நீங்க..

இராகவன் நைஜிரியா said...

// வானம்பாடிகள் said...
இராகவன் நைஜிரியா said...

/மனுஷன் தான் ரொம்ப மாறிட்டான்./

ஆ.ஆ.சொல்லிட்டு தானே போனேன் வெளிய கிளம்பரேன்னு. இல்லாதப்போ கும்மியா? //

வேக வேகம ஆ.ஆ. சொல்லிட்டுப் போனீங்களா... எதோ கோபம் போலிருக்குன்னு நினைச்சுட்டேன்.

கும்மி அடிக்க ”கால நேரம்” எல்லா உண்டா என்ன.. அது உங்க வலைப்பூவில் - எனக்கு இல்லாத உரிமையான்னு அடிச்சுட்டேன்..

இராகவன் நைஜிரியா said...

// வானம்பாடிகள் said...
இராகவன் நைஜிரியா said...

/ஆஹா.. நெருப்பில்லாமலா....

என்னமோ நடக்குது மர்மமா இருக்குது..

ஒன்னுமே புரியலை உலகத்திலே../

எக்ஸ்சேஞ்ச் எல்லாம் வந்தாச்சி. தெரியாதா? //

ஓ.. அப்படிங்களா.. நிஜமா தெரியாதண்ணே..

இராகவன் நைஜிரியா said...

// வானம்பாடிகள் said...
இராகவன் நைஜிரியா said...

/அண்ணே உங்களுக்கு அம்மி, உரல் இதில் எல்லாம் அரைக்க தெரியுமாண்ணே?

எனக்கு இரண்டிலும் நல்ல அரைக்கத் தெரியும்.. அதான் கேட்டேன்./

இதல்லாம் சத்தமா கேக்கலாமா. லொல்லுதானே //

சரி சத்தம் போடாம கேட்கிறேன் .. எனக்கு மட்டும் பதில் சொல்லுங்க என்ன..

இராகவன் நைஜிரியா said...

// வானம்பாடிகள் said...
இராகவன் நைஜிரியா said...

/அது சரி... அதை ஏன் தடவிப் பார்க்கணும்.. கையைச் சுட்டுகிடணும்...

தேவையில்லாத வம்புதானே?/

ஃபோடோ பார்த்தா அப்டிதானே இருக்கு. //

கண்ணால் காண்பது பொய்.
காதால் கேட்பதும் பொய்.
தீர விசாரித்தரிவதே மெய்.

வானம்பாடிகள் said...

இராகவன் நைஜிரியா said...
/ நான் Be positive.. அதாங்க .. B+. அப்ப நீங்க../

திரும்ப மிஸ். இல்லைண்ணே ஓ பாசிடிவ்

வானம்பாடிகள் said...

இராகவன் நைஜிரியா said...

/வேக வேகம ஆ.ஆ. சொல்லிட்டுப் போனீங்களா... எதோ கோபம் போலிருக்குன்னு நினைச்சுட்டேன்.//

வேக வேகமா சொல்லிட்டு போனா கோவமா? அவ்வ்வ்வ்வ்வ்.

/ கும்மி அடிக்க ”கால நேரம்” எல்லா உண்டா என்ன.. அது உங்க வலைப்பூவில் - எனக்கு இல்லாத உரிமையான்னு அடிச்சுட்டேன்../

நீங்க அடிக்கலாம்ணே. ஆனாலும் எதிர் கட்டையும் தட்டினாதானே கும்மி கும்மியா இருக்கும்=))

வானம்பாடிகள் said...

இராகவன் நைஜிரியா said...

/ ஓ.. அப்படிங்களா.. நிஜமா தெரியாதண்ணே..//

மைக்ரோவேவ் ரெடியெல்லாம் அவுட் ஆஃப் பேசனு. இண்டக்‌ஷன் ரெடிதான் இப்போ.

வானம்பாடிகள் said...

இராகவன் நைஜிரியா said...

/சரி சத்தம் போடாம கேட்கிறேன் .. எனக்கு மட்டும் பதில் சொல்லுங்க என்ன../

ஷ்ஷ்ஷ்ஷ்..தெரியும். வீட்டில ரெண்டுமே இருக்கு. மிக்ஸி ரிபேர் பண்ணிட்டு வேணும்னே அரைக்கவிட்றுவாய்ங்க.

ஈரோடு கதிர் said...

//அப்ப‌வும் அம்மிதான். உர‌ல்தான்.//

அல்ல்ல்ல்ல்லோ!!!! என்னண்ணே கற்காலம் மாதிரி பேசுறீங்க...

ஆனா... அம்மியில அரைச்சதில் கை ருசியும் கலந்திருக்குமே

ஈரோடு கதிர் said...

//ஈர பெயிண்டுன்னாலே தொடாம நம்பமாட்டான் நம்மாளு.//

இஃகிஃகி....

தேரான் தெளிவுங்க....

ஈரோடு கதிர் said...

//வானம்பாடிகள் said...
அய்ய. இங்க செல்லு ஃபோன்ல 8gb கு கம்மியா இருந்தா எவனும் மதிக்க மாட்டானுவ.//

என்ன்ன்ன்னாது.. மிதிக்கமாட்டானுவலா!!!??? அட மிதிக்கலன நல்லதுதானே...

ஓ.... மதிக்கமாட்டானுவலா!!!??? ஆமாங்க குறைஞ்சது 16gb யாபது போடனும்ங்க

ஈரோடு கதிர் said...

//இராகவன் நைஜிரியா said...
நான் Be positive.. அதாங்க .. B+. அப்ப நீங்க..//

ரொம்ம்ம்ம்ம்ப்ப்ப்ப்ப நல்லது...

அடுத்த வாட்டி ஊருக்கு வரும்போது, அப்படியே ஈரோடு வந்து இரத்த தானம் பண்ணிட்டு போங்கண்ணே

வானம்பாடிகள் said...

ஈரோடு கதிர் said...

/அல்ல்ல்ல்ல்லோ!!!! என்னண்ணே கற்காலம் மாதிரி பேசுறீங்க...//

இல்லாம என்னவாம்

/ஆனா... அம்மியில அரைச்சதில் கை ருசியும் கலந்திருக்குமே//

அது அது.

வானம்பாடிகள் said...

ஈரோடு கதிர் said...

/இஃகிஃகி.... தேரான் தெளிவுங்க....//

அப்பவும் தெளியமாட்டானே நம்மாளு

வானம்பாடிகள் said...

ஈரோடு கதிர் said...

/ என்ன்ன்ன்னாது.. மிதிக்கமாட்டானுவலா!!!??? அட மிதிக்கலன நல்லதுதானே...//

கோழி பண்ணுற வேலை.

// ஓ.... மதிக்கமாட்டானுவலா!!!??? ஆமாங்க குறைஞ்சது 16gb யாபது போடனும்ங்க//

ம்கும். இது வேற

வானம்பாடிகள் said...

ஈரோடு கதிர் said...

/ரொம்ம்ம்ம்ம்ப்ப்ப்ப்ப நல்லது...

அடுத்த வாட்டி ஊருக்கு வரும்போது, அப்படியே ஈரோடு வந்து இரத்த தானம் பண்ணிட்டு போங்கண்ணே/

ஏன். உங்க வங்கில 0+ எடுக்க மாட்டிங்களோ.

பின்னோக்கி said...

கேஸ் சரியாக் கிடைக்க மாட்டேங்குது. 21 நாள் டைம் கேட்குறதால, இத ஒண்னு வாங்கிட்டோம். நீங்க சொல்றத பார்த்த பயமாத்தான் இருக்கு

வானம்பாடிகள் said...

பின்னோக்கி said...

/கேஸ் சரியாக் கிடைக்க மாட்டேங்குது. 21 நாள் டைம் கேட்குறதால, இத ஒண்னு வாங்கிட்டோம். நீங்க சொல்றத பார்த்த பயமாத்தான் இருக்கு//

கவனமா இருந்துக்கணும் அவ்வளவுதானே.

சத்ரியன் said...

//இதுக்கு ஒரு பட்டி மன்றம் வைக்கிற அளவுக்கு விஷயம் இருக்கு. //

பாலா,

இருக்கு....இருக்கு...இருக்கு...!

எனக்கொரு உண்மை தெரிஞ்சாகனும். வீட்டுல கொழந்தை குட்டிகளோட நேரம் செலவிடறதே இல்லியா? இல்ல இந்த கம்ப்யூட்டர் பொட்டியே கொழந்த குட்டின்னு ஆகிப்போச்சா?

புலவன் புலிகேசி said...

//இன்னும் கிராம‌த்தில‌ வேர் இருக்கிற‌வ‌ங்க‌ ம‌ண்பானைத் த‌ண்ணி, ம‌ண் ச‌ட்டில‌ செய்த‌ சாப்பாடு, க‌ல்ச‌ட்டிக் குழ‌ம்புன்னு ஏங்காம‌ இருக்கோமா?சமைக்கிற உணவிலதான் ருசியும் ஆரோக்கியமும் இல்லையா?//

மண்சட்டி வத்த கொழம்பு நெனச்சாலே நாக்கு ஊறுது..ஆனா கெடைக்க மாட்டேங்குது.

வானம்பாடிகள் said...

சத்ரியன் said...

/ பாலா,

இருக்கு....இருக்கு...இருக்கு...!

எனக்கொரு உண்மை தெரிஞ்சாகனும். வீட்டுல கொழந்தை குட்டிகளோட நேரம் செலவிடறதே இல்லியா? இல்ல இந்த கம்ப்யூட்டர் பொட்டியே கொழந்த குட்டின்னு ஆகிப்போச்சா?//

நம்மள பார்த்தா எப்புடீ தெரியுது. நேரம் செலவிடுற வயசில குழந்தை குட்டி இருக்கிற வயசா? =))

வானம்பாடிகள் said...

புலவன் புலிகேசி said...

/ மண்சட்டி வத்த கொழம்பு நெனச்சாலே நாக்கு ஊறுது..ஆனா கெடைக்க மாட்டேங்குது./

இது ஒத்துக்க மாட்டன். கிடைக்குது. சாப்பாடு 1500ரூ ஆகும்=))

cheena (சீனா) said...

அன்பின் பாலா
நல்ல நினைவாற்றல் - வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் நடந்தவற்றை நினைவில் நிறுத்தி எழுத்தில் கொண்டு வரும் திறமை வாழ்க -

நட்டுக்குத்தா குழவியச் சுத்தி ஒரு விரலாலே வழிச்சி ..... அய்யொ நான் நெரெய பத்துருக்கேன் இதெல்லாம் - அந்த சுத்தம் இப்ப இல்லையே - மிக்ஸியக் கழுவி கீழே ஊத்தறோமே

ம்ம்ம்ம்ம் - அடுப்பு ஆரம்பிச்ச காலத்துலே இருந்து இன்னிக்கி மைக்ரோ அவன் வரைக்கும் விளாசுறீங்களே - ம்ம்ம்

நல்லாருக்கு - ரசிச்சிப் படிச்சேன் - மெது மெதுவா படிச்சேன்

நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா

வானம்பாடிகள் said...

cheena (சீனா) said...

/அன்பின் பாலா
நல்ல நினைவாற்றல் - வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் நடந்தவற்றை நினைவில் நிறுத்தி எழுத்தில் கொண்டு வரும் திறமை வாழ்க - /

நன்றிங்க சீனா.

ஹுஸைனம்மா said...

மாறவேண்டிய விஷயங்களில் காலத்திற்கேற்ப மாறுவதுதான் வளர்ச்சி. நீங்கள் இன்னும் அந்த டைப்ரைட்டரிலா தட்டிக் கொண்டிருக்கிறீர்கள்? நீங்கள் பொட்டி தட்ட வந்த கதையைப் பெருமையுடன் எழுதினீர்களே?

அது ஏனோ இன்னும் சில விஷயங்களில் பெண்களைக் குறை சொல்வது மட்டும் மாறவேயில்லை.

ஏற்கனவே மரங்களை அழித்ததின் விளைவுகளை அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். இப்போதிருக்கும் ஜனத்தொகைக்கு விறகு அடுப்பில் சமைக்க வேண்டுமென்றால்..?

(சீக்கிரம் சமையல் முடித்துவிட்டு சீரியல் பார்ப்பவர்களைப் பற்றி: நோ கமெண்ட்ஸ்; நான் சீரியல்கள் பார்ப்பதில்லை. ஆனாலும் சமையல் சீக்கிரம் முடிக்க நினைப்பேன்.)

தண்டோரா ...... said...

/பிற‌கு இண்டியன் ஆயில் நிறுவனம் ஒரு வ‌த்தி ஸ்ட‌வ் கொண்டு வந்து, அதுக்கு டில்லிக்கு போற‌வ‌ங்க‌ கிட்ட‌ சொல்லி, காத்திருந்து காசு மேல‌ குடுத்து வாங்கின‌து//

அதுக்கு பேரு நூடன் ஸ்டவ் தலைவரே

தண்டோரா ...... said...

///இன்னும் கிராம‌த்தில‌ வேர் இருக்கிற‌வ‌ங்க‌ ம‌ண்பானைத் த‌ண்ணி, ம‌ண் ச‌ட்டில‌ செய்த‌ சாப்பாடு, க‌ல்ச‌ட்டிக் குழ‌ம்புன்னு ஏங்காம‌ இருக்கோமா?சமைக்கிற உணவிலதான் ருசியும் ஆரோக்கியமும் இல்லையா?//

மண்சட்டி வத்த கொழம்பு நெனச்சாலே நாக்கு ஊறுது..ஆனா கெடைக்க மாட்டேங்குது//

புலிகேசி..எது கிடைக்கலை..மண்சட்டியா? எங்க வீட்டுல மண்சட்டி சமையல்தான்..

வானம்பாடிகள் said...

ஹுஸைனம்மா said...
/ அது ஏனோ இன்னும் சில விஷயங்களில் பெண்களைக் குறை சொல்வது மட்டும் மாறவேயில்லை./

எங்கே அம்மா பெண்களை குறை சொல்லி இருக்கிறேன். சுட்ட முடியுமா?

/ஏற்கனவே மரங்களை அழித்ததின் விளைவுகளை அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். இப்போதிருக்கும் ஜனத்தொகைக்கு விறகு அடுப்பில் சமைக்க வேண்டுமென்றால்..?/

இப்படி எங்கே சொல்லி இருக்கிறேன்.

/மாறவேண்டிய விஷயங்களில் காலத்திற்கேற்ப மாறுவதுதான் வளர்ச்சி. /

வளர்ச்சி இருக்கிறதா என்பது தான் இடுகையின் கேள்வி.

ஒன்று நீங்கள் தவறாகப் புரிந்து கொண்டிருக்கலாம். அல்லது முழுதும் படிக்காம இந்த பின்னூட்டம் இருக்கலாம்.

விறகு அடுப்பு காலத்திலிருந்து இன்றைய காலம் வரை, நேரச் சேகரிப்பு, பணச் சேமிப்பு என்று ஏதேதோ சொல்லி புதிது புதிதாய் விற்பனைக்கு வருகின்றனவற்றால் நேரச் சேகரிப்பு இருக்கிறதா? பணச் சேமிப்பாவது இருக்கிறதா? இதைச் சொல்லி இதன் பக்கவிளைவுகளைக் குறிப்பிடாமல் ஏமாற்றுகிறார்களே என்பது தான் இடுகையில் சொன்னது.

ஆமாம். சமையல் பெண்கள்தான் செய்கிறார்களா என்ன? ஆண்களுக்குத் தான் இதெல்லாம் தேவை என்று எங்கேயாவது குறிப்பிட்டிருக்கிறேனா?

வானம்பாடிகள் said...

தண்டோரா ...... said...

/ அதுக்கு பேரு நூடன் ஸ்டவ் தலைவரே//

சரியாச் சொன்னீங்க தலைவரே. நன்றி.

/புலிகேசி..எது கிடைக்கலை..மண்சட்டியா? எங்க வீட்டுல மண்சட்டி சமையல்தான்..//

அப்புடி போடுங்க!=)) புலிகேசி. நோட் த பாயிண்ட்.

க.பாலாசி said...

//எனக்கு சிப்பு சிப்பா வருது. பின்ன என்னங்க? ஊருக்கு போய் இருக்கும்போது பார்த்திருக்கேன். ஒல்லிக்குச்சிக் கிழவி, அதான் எங்க பாட்டி ஒத்த ஆள கிட்ட சேர்க்காது. தனியா, விறகு, சுள்ளி என்னமோ வெச்சி ஒரு 25 பேருக்கு கிட்ட சமைக்கும். அம்மில ஓட்டி ஓட்டி அரைக்கிற அழகிருக்கே. சும்மா வலயப்பட்டி தவில் கணக்கா தேங்கா நசுக்கற சத்தமும், அரைச்சு முடிச்சி நட்டுகுத்தா குழவிய சுத்தி, ஒரு விரல மடக்கி மேல இருந்து வழிக்கிற அழகும் இருக்கே. அரைச்ச தடமே இருக்காது.//

இவ்ளோ வேலையும் ஆரம்பத்திலேர்ந்து செஞ்சதுநாலத்தான் அந்த பாட்டி ஒல்லிக்குச்சியா இருந்தாலும் திடகாத்திரமா இருக்காங்க.

//இதய நோய்க்கு பேஸ்மேக்கர் கருவி, டெஃபிப்ரிலேடர் கருவி இது இருக்கிறவங்க இந்த அடுப்புகிட்ட போனா அது தாறுமாறாயிடுமாம். கையில போட்டிருக்கிற மோதிரம், இப்பதான் நீளமா செயின் போடுறாங்கள்ள அதெல்லாம் சூடாயிடுமாம். //

இதுவரை அறிந்திராத தகவல்கள்....

வானம்பாடிகள் said...

க.பாலாசி said...

/இவ்ளோ வேலையும் ஆரம்பத்திலேர்ந்து செஞ்சதுநாலத்தான் அந்த பாட்டி ஒல்லிக்குச்சியா இருந்தாலும் திடகாத்திரமா இருக்காங்க./

ஆமாம். அப்புடியே உடம்புக்கு சரியில்லன்னா அதுவே ஏதோ கஷாயம் வெச்சி அடிச்சிரும்.

/இதுவரை அறிந்திராத தகவல்கள்..../

ஆமாங்க. இத சொல்லாமத்தான் விக்குறான்.

சத்ரியன் said...

//நேரம் செலவிடுற வயசில குழந்தை குட்டி இருக்கிற வயசா? =))//

இத்தோடா.......ஆஆஆஆஆ......! நான் பேரப்புள்ளைகள கேட்டேன்.

வானம்பாடிகள் said...

சத்ரியன் said...

/இத்தோடா.......ஆஆஆஆஆ......! நான் பேரப்புள்ளைகள கேட்டேன்./

தோடா!=))

நசரேயன் said...

நேரம் நல்லாத்தான் இருக்கு

கிரி said...

கால மாற்றத்தில் இவை தவிர்க்க முடியாததே! என்ன சார் பண்ணுவது :-)