Thursday, November 26, 2009

ஹீரோ!

என் பேரு. அது எதுக்கு உங்களுக்கு? நான் ரொம்ப மென்மையானவன்.  பார்க்கத்தான் கொஞ்சம் கரடு முரடா தெரிவேன். ஆனா ரொம்ப சாஃப்ட் நானு. எங்க போனாலும் ஒரு ஓரமா நான் பாட்டுக்கு ஒழுங்கா இருப்பேன். வெள்ளையா வேற இருப்பேன்.

இந்தப் பொண்ணுங்க‌ இருக்காங்களே! எம்பாட்டுக்கு இருக்க விடமாட்டாளுங்க. என்ன பார்த்துட்டா போறும். பாய்ஞ்சி ஓடி வந்து தூக்கி கொஞ்சம் கூட வெக்கமில்லாம உதடு அழுந்த முத்தம் குடுப்பாங்க. சில பேரு சாப்ட வாய் கூட துடைக்காம முத்தம் குடுப்பாங்க. எனக்கு எப்புடி எரியும் தெரியுமா?

சில பேருக்கு அப்புடி என்னா வெறி வருமோ அப்புடியே மூஞ்சி,கன்னம்னு பொரட்டி எடுப்பாங்க.ச்சீ தூ.வியர்வை நாத்தம் வாந்திவரும். எல்லாம் என்னோட தப்பு. இவ்வளவு வெறுப்பிருந்தாலும், யாராசும் அழுதா என்னால தாங்க முடியாது. முதல்ல போய் கண்ணு துடைப்பேன். அதெல்லாம் யாருங்க நினைச்சி பார்க்குறாங்க.

நேத்து வ‌ரைக்கும் மூக்கு ஒழுகிக்கினு இருந்த‌ மீனா, மைனா வாய் ம‌கி பொண்ணு அதான் மொச்சு மொச்சுன்னு அசைபோட்டு போட்டு வாயோர‌ம் புண்ணு வ‌ந்திருக்குமே மைனா வாய் மாதிரி அந்த‌ ம‌கி பொண்ணு இவ‌ளுங்க‌ ச‌க‌வாச‌மே இல்லாம‌ நான் பாட்டுக்கு இருந்தேன். காலேஜுல‌ சேர்ந்துட்டாங்க‌ளாம். இவ‌ங்க‌ளுக்கும் என்ன‌ப் பார்த்தா இப்போ லவ்ஸூ. என்னா? எம் பொழப்ப பார்த்தா பொறாமையா இருக்கா?

இவ‌ங்க‌ளாவ‌து ப‌ர‌வால்ல‌. ஆம்பிளைங்களுக்கென்ன? உவ்வ்வே. வெக்க‌மில்லாம‌ அவ‌ங்க பொண்டாட்டிகிட்ட சொல்லி என்ன‌ க‌ட‌த்தி கொண்டு வ‌ந்து மீசை குத்த‌ குத்த‌ அழுத்தி முத்த‌ம் குடுப்பானுங்க‌ பாரு. ப‌த்திக்கிட்டு வரும்.

ஆம்பளையோ பொம்பளையோ எல்லாம் ஒரே மாதிரிதான். இத்தினி பாசமும் கொஞ்ச நேரம்தான். அப்புறம் கெடாசிட்டு போயிட்டே இருப்பாங்க. ஒரு ஆறுதல் என்னன்னா அது எந்த விசேஷமா இருக்கட்டும். எவ்ளோ பெரிய வி.ஐ.பியா இருந்தாலும் முதல்ல நான் இருக்கனான்னு தேடுவாங்க.

என்னைக் காணலைன்னா திட்டுவாங்க. சிலரு சண்டை கூட போடுவாங்க, இவ்ளோ செஞ்சி என்ன? இவன கூப்புடலையான்னு. யாருடா இந்த ஹீரோன்னு தானே பார்க்கரீங்க. நாந்தாங்க டிஷ்யூ பேப்பர். சரிங்களா. பிடிச்சிருந்தா பிடிச்சிருக்குன்னு சொல்லுங்க. பிடிக்காட்டி பிடிக்கலன்னு சொல்லுங்க. எதுனாலும் பின்னூட்டத்தில சொல்லிட்டு போங்க. எனக்கு பின்னாடி போய் பேசுனா பிடிக்காது. சரியா?

டிஸ்கி 1: இது வசந்த் மாதிரி எழுதியிருக்கேன். சரியா இருக்கான்னு பின்னூட்டத்தில சொல்லுங்க. மெஜாரிடி முடிவை ஏற்றே ஆக வேண்டும். அதனால போட்டு குடுக்க வேணாம். சரின்னா மட்டும் வசந்த் மாதிரின்னு சொல்லுங்க.

டிஸ்கி 2: இந்த மாதிரி அவர் எழுத வேண்டிய எழுத்து கதிர், பாலாசி, இது போக அவருக்கு விருப்பமான முடியுமென்று தோன்றக் கூடிய வேறு யாருடைய எழுத்தாகிலும்.

118 comments:

ஜீவன் said...

;;;)) me than 1st tu ...!

ஈரோடு கதிர் said...

பிரியமுடன் வசந்த்.... said

ஏ... நைனா...இதுக்குத்தான் நேத்துல இருந்து தம் கட்டினியா.... கிரியேட்டிவிட்டினாலும் ஒழுங்கா எழுதனும்டி...

என்னை மாதிரி எழுத தெரியுதே... தில் இருந்தா எங்க... கலகல மாதிரி எழுதுடி....

அப்பத்தெரியும் உன்னோட டங்குவாரு....
அந்துறும்ல

இப்படிக்கு நிஜாம்.., said...

me the III

வானம்பாடிகள் said...

ஜீவன் said...

/ ;;;)) me than 1st tu ...!/

ஹா ஹா. வாங்க ஜீவன்

இப்படிக்கு நிஜாம்.., said...

அண்ணே! என்ன சொல்றதுண்ணே பிரியலையே!பின்ன நோக்காம்.

இப்படிக்கு நிஜாம்.., said...

வழக்கம் போல இதிலும் தமிழ்மண ஓட்டு உங்களுக்கு இல்லை,

Mrs.Menagasathia said...

நல்லாயிருக்கு உங்க நகைச்சுவை..

ஈரோடு கதிர் said...

செல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்லாது... டிஸ்கி-2எல்லாம் செல்லாது....

அதிலும் என்னோட பேர டேமேஜ் ஆக்கியதை மென்மையாக கண்டிக்க்க்க்க்க்க்கிறேனுங்கோவ்வ்வ்வ்வ்வ்

வானம்பாடிகள் said...

ஈரோடு கதிர் said...

/பிரியமுடன் வசந்த்.... said

ஏ... நைனா...இதுக்குத்தான் நேத்துல இருந்து தம் கட்டினியா.... கிரியேட்டிவிட்டினாலும் ஒழுங்கா எழுதனும்டி...

என்னை மாதிரி எழுத தெரியுதே... தில் இருந்தா எங்க... கலகல மாதிரி எழுதுடி....

அப்பத்தெரியும் உன்னோட டங்குவாரு....
அந்துறும்ல/

ஐ. அதெப்புடி விடுவேன். கதிர் மாதிரியேவும் எழுதப் பார்க்கறேன்.

இப்புடி அடுத்தவங்களுக்கு ப்ராக்ஸி குடுத்தா யூத்துன்னு ஒத்துப்பாங்களா. நீங்க சொல்லுங்க சாஆஆஆஆர்

வானம்பாடிகள் said...

இப்படிக்கு நிஜாம்.., said...

/அண்ணே! என்ன சொல்றதுண்ணே பிரியலையே!பின்ன நோக்காம்./

/வழக்கம் போல இதிலும் தமிழ்மண ஓட்டு உங்களுக்கு இல்லை,/

ஆக பின்னூட்டமுமில்லை ஓட்டுமில்லையா? அவ்வ்

வானம்பாடிகள் said...

Mrs.Menagasathia said...

/ நல்லாயிருக்கு உங்க நகைச்சுவை../

இல்லீங்க வசந்து=))

வானம்பாடிகள் said...

ஈரோடு கதிர் said...

/செல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்லாது... டிஸ்கி-2எல்லாம் செல்லாது....

அதிலும் என்னோட பேர டேமேஜ் ஆக்கியதை மென்மையாக கண்டிக்க்க்க்க்க்க்கிறேனுங்கோவ்வ்வ்வ்வ்வ்/

அதெல்லாம் யார கேட்டு. இப்புடியெல்லாம் அடாவடி அடிச்சா உங்களுக்கு வர ஆளு டெர்ரரா இருப்பாரு சொல்லிபுட்டேன்.

தண்டோரா ...... said...

ஹீரோவாய்ட்டுதான் வர்றீங்க

வானம்பாடிகள் said...

தண்டோரா ...... said...

/ஹீரோவாய்ட்டுதான் வர்றீங்க/

ம்கும். குறும்படத்துல குறுக்க போகக்கூட விடமாட்டாங்க=))

ஈரோடு கதிர் said...

//வானம்பாடிகள் said...
உங்களுக்கு வர ஆளு டெர்ரரா இருப்பாரு சொல்லிபுட்டேன்.//

இது பயங்கரவாதம்... இப்பிடியெல்லாம் மெரட்டக்கூடாது


ஆத்தா.... மகமாயிதான் காப்பாத்தனும்

தண்டோரா ...... said...

கதிர்.. ஒரு தொடர் பதிவுக்கு உங்களை கூப்பிடறேன் நாளைக்கு..நான் ஆரம்பிக்கிறேன்.. கொஞ்சம் வித்தியாசமா(யிருக்கும்னு நம்பறேன்)

ஈரோடு கதிர் said...

//தண்டோரா ...... Says:
November 26, 2009 7:20 PM
கதிர்.. ஒரு தொடர் பதிவுக்கு உங்களை கூப்பிடறேன்/

இது....ஏன்? நல்ல்ல்ல்த்தானே போயிட்டிருக்கு

க.பாலாசி said...

காலையில வசந்த் இடுகைக்குக்கு போட்டிருந்த பின்னூட்டத்த பார்க்கும்போதே நெனச்சேன். இன்னைக்கு சாயந்தரம் காப்பியடிக்கப்போறாருன்னு....

நான் ஆரம்பத்திலேயே கண்டுபிடிச்சிட்டேனே.

சத்ரியன் said...

//எங்க போனாலும் ஒரு ஓரமா நான் பாட்டுக்கு ஒழுங்கா இருப்பேன். வெள்ளையா வேற இருப்பேன். //

பாலா,

னான் படிக்க ஆரம்பிச்சதுமே நெனைச்சேன். வசந்த் அண்ணன் "ப்ளாக்" பக்கம் வந்துட்டமான்னு.இறங்கி வந்து பாத்தா பின் குறிப்புல வேற ...கேக்குறீக ...ம்ம்ம்ம்!

வானம்பாடிகள் said...

தண்டோரா ...... said...

/கதிர்.. ஒரு தொடர் பதிவுக்கு உங்களை கூப்பிடறேன் நாளைக்கு..நான் ஆரம்பிக்கிறேன்.. கொஞ்சம் வித்தியாசமா(யிருக்கும்னு நம்பறேன்)/

ஆஹா. அப்புடி போடு. ஹீரோ இடுகையில ஹீரோ சான்ஸ் அடிச்சிட்டாரு கதிர்.

வானம்பாடிகள் said...

க.பாலாசி said...

/காலையில வசந்த் இடுகைக்குக்கு போட்டிருந்த பின்னூட்டத்த பார்க்கும்போதே நெனச்சேன். இன்னைக்கு சாயந்தரம் காப்பியடிக்கப்போறாருன்னு....

நான் ஆரம்பத்திலேயே கண்டுபிடிச்சிட்டேனே./

என்னாத்த. வேணாம்! சொல்லிட்டேன். சண்ட போட்ட பொண்டாட்டிக்கு சாம்ந்திப்பூ வாங்கிட்டு போறான்னு நினைச்ச ஆளு. இது டிஷ்யூ பேப்பர்னு கண்டு பிடிச்சிட்டியாக்கு!

வானம்பாடிகள் said...

சத்ரியன் said...
/னான் படிக்க ஆரம்பிச்சதுமே நெனைச்சேன். வசந்த் அண்ணன் "ப்ளாக்" பக்கம் வந்துட்டமான்னு.இறங்கி வந்து பாத்தா பின் குறிப்புல வேற ...கேக்குறீக ...ம்ம்ம்ம்!/

அவ்வ்வ்வ்வ்வ். எனக்கு திக்கு திக்குங்குது. தினம் இன்னேரம் பின்னூட்டம் போடுவான் புள்ளாண்டான். இன்னைக்கு இன்னும் காணோம்.

க.பாலாசி said...

//அவ்வ்வ்வ்வ்வ். எனக்கு திக்கு திக்குங்குது. தினம் இன்னேரம் பின்னூட்டம் போடுவான் புள்ளாண்டான். இன்னைக்கு இன்னும் காணோம்.//

அவரோட அடுத்த இடுகையை நீங்க சுட்டுட்டீங்க. எங்க உட்கார்ந்து அழறாரோ?

அகல்விளக்கு said...

சூப்பர் சாரு...
சூப்பர் பேரு...
சூப்பர் பேப்பரு...

நானும் முயற்சி பண்றேன்..

:-)

கலகலப்ரியா said...

me the 23rd.... hvn't read yet... hvn't voted yet... wt plz...

கலகலப்ரியா said...

oh... 25th...

கலகலப்ரியா said...

bbbbbayangara speeddddddd..

ஈரோடு கதிர் said...

//கலகலப்ரியா said...
bbbbbayangara speeddddddd....//

How r u Priya?

புலவன் புலிகேசி said...

மொதல்ல படிச்சப்ப குழந்தையா இருக்குமோன்னு யோசிச்சேன்..ஆனா கடைசில வச்சீங்கலே அந்த டிஷ்யூ டுவிஸ்ட்..நல்லாத்தான் யோசிக்கிறீங்க...

முகிலன் said...

வானம்பாடிகள் சார், உங்க களத்துலயே நீங்க பூந்து விளயாடிட்டித்தான இருக்கீங்க? அப்புறம் எதுக்கு வசந்த் மாதிரி முயற்சி? அவரு மாதிரி எழுதுறதுக்கு தான் அவரே இருக்காரே?

வானம்பாடிகள் said...

க.பாலாசி said...

/அவரோட அடுத்த இடுகையை நீங்க சுட்டுட்டீங்க. எங்க உட்கார்ந்து அழறாரோ?/

அவனா. ஈர பேனாக்கி பேன பெருமாளாக்குவான். இதுக்கு அழுறானா.

வானம்பாடிகள் said...

அகல்விளக்கு said...

/சூப்பர் சாரு...
சூப்பர் பேரு...
சூப்பர் பேப்பரு...

நானும் முயற்சி பண்றேன்..

:-)/

அட உங்க முறை வரட்டும்=))

வானம்பாடிகள் said...

முகிலன் said...

/வானம்பாடிகள் சார், உங்க களத்துலயே நீங்க பூந்து விளயாடிட்டித்தான இருக்கீங்க? அப்புறம் எதுக்கு வசந்த் மாதிரி முயற்சி? அவரு மாதிரி எழுதுறதுக்கு தான் அவரே இருக்காரே?/

ம்ம். ஒரு சோதனை முயற்சிதான்.

வானம்பாடிகள் said...

கலகலப்ரியா said...

/bbbbbayangara speeddddddd../

ம்ம்ம்..ஆமாமா.

வானம்பாடிகள் said...

ஈரோடு கதிர் said...

//கலகலப்ரியா said...
bbbbbayangara speeddddddd....//

How r u Priya?

கூட்டத்துல ஒளியற ஆட்டத்தான் முதல்ல இழுப்பாங்கடி=))

வானம்பாடிகள் said...

புலவன் புலிகேசி said...

/மொதல்ல படிச்சப்ப குழந்தையா இருக்குமோன்னு யோசிச்சேன்..ஆனா கடைசில வச்சீங்கலே அந்த டிஷ்யூ டுவிஸ்ட்..நல்லாத்தான் யோசிக்கிறீங்க.../

நான் யோசிக்கறதில்லை. வசந்த் மாதிரி யோசிச்சிருக்கனா=))

வானம்பாடிகள் said...

கலகலப்ரியா said...

/ me the 23rd.... hvn't read yet... hvn't voted yet... wt plz.../

அவ்வ்வ்வ்வ்.. யாருமே இல்லாத கடைல யாருக்கும்மா வெயிட் சொல்ற.

இராகவன் நைஜிரியா said...

வணக்கம்.. வந்தனம்... நமஸ்கார்... சுஸ்வாகதம்...

அனைவருக்கும்...

ஓட்டு போட்டாச்சு...

படிச்சாச்சு,,,

எனபடி தேர் ஃபார் கும்மி..

இராகவன் நைஜிரியா said...

// என் பேரு. அது எதுக்கு உங்களுக்கு? //

சொன்னா கூப்பிட வசதியா இருக்குமில்ல..

இராகவன் நைஜிரியா said...

// நான் ரொம்ப மென்மையானவன். பார்க்கத்தான் கொஞ்சம் கரடு முரடா தெரிவேன். //

ஓ அப்படீங்களா..

பலாப்பழம் மாதிரி..

இராகவன் நைஜிரியா said...

// ஆனா ரொம்ப சாஃப்ட் நானு. //

ஆமாம்... நீங்களே உங்களைப் பத்தி இப்படிச் சொல்லக்கூடாது.. அத நாங்கதான் சொல்லணும்..

இராகவன் நைஜிரியா said...

// எங்க போனாலும் ஒரு ஓரமா நான் பாட்டுக்கு ஒழுங்கா இருப்பேன். வெள்ளையா வேற இருப்பேன். //

வெள்ளையா -- ரொம்ப பெருமை அடிச்சிகிறாப்பல இருக்கு..

இராகவன் நைஜிரியா said...

// இந்தப் பொண்ணுங்க‌ இருக்காங்களே! //

யாரோ இல்லேன்னு சொன்னமாதிரி சொல்றீங்க... இருக்காங்க.. யாரு இல்லேன்னா?

இராகவன் நைஜிரியா said...

// இந்தப் பொண்ணுங்க‌ இருக்காங்களே! எம்பாட்டுக்கு இருக்க விடமாட்டாளுங்க. //

உங்களையுமா?

இராகவன் நைஜிரியா said...

// என்ன பார்த்துட்டா போறும். பாய்ஞ்சி ஓடி வந்து தூக்கி கொஞ்சம் கூட வெக்கமில்லாம உதடு அழுந்த முத்தம் குடுப்பாங்க. //

அப்படி போடு... உங்களுக்கு ஒன்னும் ஆகக்கூடாதேன்னு ஆண்டவனை வேண்டிகிறேன்..

இராகவன் நைஜிரியா said...

// சில பேரு சாப்ட வாய் கூட துடைக்காம முத்தம் குடுப்பாங்க. எனக்கு எப்புடி எரியும் தெரியுமா?//

பூண்டு, மசாலா சாப்பாடு சாப்பிட்டுவிட்டு கொடுத்தா தாங்காதே..

அய்யோ பாவம் நீங்க

இராகவன் நைஜிரியா said...

// சில பேருக்கு அப்புடி என்னா வெறி வருமோ அப்புடியே மூஞ்சி,கன்னம்னு பொரட்டி எடுப்பாங்க.//

அது பொண்ணுங்க உங்களுக்கு முத்த கொடுத்ததால் வந்த கோபமா இருக்கு

வானம்பாடிகள் said...

இராகவன் நைஜிரியா said...

/வணக்கம்.. வந்தனம்... நமஸ்கார்... சுஸ்வாகதம்...

அனைவருக்கும்...

ஓட்டு போட்டாச்சு...

படிச்சாச்சு,,,

எனபடி தேர் ஃபார் கும்மி../

வாங்க சார்.

வானம்பாடிகள் said...

இராகவன் நைஜிரியா said...

// என் பேரு. அது எதுக்கு உங்களுக்கு? //

//சொன்னா கூப்பிட வசதியா இருக்குமில்ல..//.

சொல்லுவோமில்ல

இராகவன் நைஜிரியா said...

// எல்லாம் என்னோட தப்பு. இவ்வளவு வெறுப்பிருந்தாலும், யாராசும் அழுதா என்னால தாங்க முடியாது. முதல்ல போய் கண்ணு துடைப்பேன். அதெல்லாம் யாருங்க நினைச்சி பார்க்குறாங்க.//

நீங்க உதவிக் கரம் நீட்டினா மத்தவங்க உங்களை எட்டி உதைக்கிறாங்க...

ஐயோ பாவம் நீங்க

இராகவன் நைஜிரியா said...

மீ த 50

இராகவன் நைஜிரியா said...

அண்ணே தனக்குத்தானே திட்டப் படி 50 போட முடியாதபடி உங்களுக்கு வடை போச்சே..

இராகவன் நைஜிரியா said...

// வெக்க‌மில்லாம‌ அவ‌ங்க பொண்டாட்டிகிட்ட சொல்லி என்ன‌ க‌ட‌த்தி கொண்டு வ‌ந்து மீசை குத்த‌ குத்த‌ அழுத்தி முத்த‌ம் குடுப்பானுங்க‌ பாரு.//

அண்ணே பொண்டாட்டி இல்லாதவங்க என்ன பண்ணுவாங்க

இராகவன் நைஜிரியா said...

// அப்புறம் கெடாசிட்டு போயிட்டே இருப்பாங்க. //

வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்...

இராகவன் நைஜிரியா said...

// நாந்தாங்க டிஷ்யூ பேப்பர். சரிங்களா.//

இஃகி...இஃகி...

சூப்பர் அண்ணே...

தூள் கிளப்பிட்டீங்க..

இராகவன் நைஜிரியா said...

// டிஸ்கி 1: இது வசந்த் மாதிரி எழுதியிருக்கேன். சரியா இருக்கான்னு பின்னூட்டத்தில சொல்லுங்க. மெஜாரிடி முடிவை ஏற்றே ஆக வேண்டும். அதனால போட்டு குடுக்க வேணாம். சரின்னா மட்டும் வசந்த் மாதிரின்னு சொல்லுங்க. //

சரியா வசந்த் மாதிரியே எழுதியிருக்கீங்க..

அதுல சந்தேகமா வேணாம்..

வினை, எதிர்(ரி) வினை மாதிரி இதுக்கு என்னா பேர் அண்ணே?

பிரியமுடன்...வசந்த் said...

ம்க்கும் இதுக்குத்தான் நேத்துருந்து இம்பூட்டு பில்டப்பா?

நாங்கூட என்னைய டரியலாக்கி தொங்கவிடப்போறேன்னு நினைச்சேன்..

//சில பேருக்கு அப்புடி என்னா வெறி வருமோ அப்புடியே மூஞ்சி,கன்னம்னு பொரட்டி எடுப்பாங்க.ச்சீ தூ.வியர்வை நாத்தம் வாந்திவரும். எல்லாம் என்னோட தப்பு. இவ்வளவு வெறுப்பிருந்தாலும், யாராசும் அழுதா என்னால தாங்க முடியாது. முதல்ல போய் கண்ணு துடைப்பேன். அதெல்லாம் யாருங்க நினைச்சி பார்க்குறாங்க.//

இங்கயே கர்சீப்ன்னு தெரிஞ்சுபோகுதுடியோ...

என்னைமாதிரியே யோசிக்கணும்னு நினைச்சு எழுதுனதுக்கு உன்னால எனக்கு பெருமைதான்...

வானம்பாடிகள் said...

இராகவன் நைஜிரியா said...

/ அப்படி போடு... உங்களுக்கு ஒன்னும் ஆகக்கூடாதேன்னு ஆண்டவனை வேண்டிகிறேன்../

அண்ணே டிஷ்யூக்கு.

இராகவன் நைஜிரியா said...

// டிஸ்கி 2: இந்த மாதிரி அவர் எழுத வேண்டிய எழுத்து கதிர், பாலாசி, இது போக அவருக்கு விருப்பமான முடியுமென்று தோன்றக் கூடிய வேறு யாருடைய எழுத்தாகிலும். //

அப்படி போடு... தம்பி பிரியமானவரே...

காண்பிங்க உங்க திறமையை அண்ணனுக்கு..

பிரியமுடன்...வசந்த் said...

கர்சீப் டிஷ்ய்ய்யூ பேப்பர் எல்லாம் ஒண்ணுதானே என்ன கர்சீப்ப் தோச்சு தோச்சி பொண்டாட்டி மாதிரி வச்சுக்குவோம் டிஷ்யூ பேப்பர் காதலி மாதிரி குப்பையில போட்ருவோம்...

இராகவன் நைஜிரியா said...

// ஈரோடு கதிர் said...
பிரியமுடன் வசந்த்.... said

ஏ... நைனா...இதுக்குத்தான் நேத்துல இருந்து தம் கட்டினியா.... கிரியேட்டிவிட்டினாலும் ஒழுங்கா எழுதனும்டி...

என்னை மாதிரி எழுத தெரியுதே... தில் இருந்தா எங்க... கலகல மாதிரி எழுதுடி....

அப்பத்தெரியும் உன்னோட டங்குவாரு....
அந்துறும்ல //

அப்படி போடுங்க அருவாள...

கதிர் அண்ணன் சூப்பரா பின்னூட்டுயிருக்காரு..

வானம்பாடிகள் said...

பிரியமுடன்...வசந்த் said...

/ம்க்கும் இதுக்குத்தான் நேத்துருந்து இம்பூட்டு பில்டப்பா?

நாங்கூட என்னைய டரியலாக்கி தொங்கவிடப்போறேன்னு நினைச்சேன்..//

வா ராஜா. ஹி ஹி


/என்னைமாதிரியே யோசிக்கணும்னு நினைச்சு எழுதுனதுக்கு உன்னால எனக்கு பெருமைதான்.../

அப்படி நான் பெருமை பட வேணாமா? நீ மாத்தி எழுதிப் பாரு. யார் மாதிரியும் இல்லாமன்னாலும் சரி. இல்ல என்ன மாதிரின்னாலும் சரி.

வானம்பாடிகள் said...

பிரியமுடன்...வசந்த் said...

/கர்சீப் டிஷ்ய்ய்யூ பேப்பர் எல்லாம் ஒண்ணுதானே என்ன கர்சீப்ப் தோச்சு தோச்சி பொண்டாட்டி மாதிரி வச்சுக்குவோம் டிஷ்யூ பேப்பர் காதலி மாதிரி குப்பையில போட்ருவோம்.../

நீ என்கிட்ட வாங்கி கட்டிக்காத

வானம்பாடிகள் said...

இராகவன் நைஜிரியா said...

/அண்ணே தனக்குத்தானே திட்டப் படி 50 போட முடியாதபடி உங்களுக்கு வடை போச்சே../

அசந்தாப்ல இருந்துட்டேன்.

இராகவன் நைஜிரியா said...

// வானம்பாடிகள் said...
இராகவன் நைஜிரியா said...

/ அப்படி போடு... உங்களுக்கு ஒன்னும் ஆகக்கூடாதேன்னு ஆண்டவனை வேண்டிகிறேன்../

அண்ணே டிஷ்யூக்கு.//

ஆமாம் அண்ணே டிஷ்யூக்கு... வேக வேகமா பின்னூட்டம் போட்டதால் வந்த அனர்த்தம்.

ஈரோடு கதிர் said...

//இராகவன் நைஜிரியா Says:

கதிர் அண்ணன் சூப்பரா பின்னூட்டுயிருக்காரு..//


க்குஹூம் நீங்க வேற... ரெண்டு நாளா பின்னு மட்டுந்தா ஊட்றேன்...

இடுகைக்கு ஒன்னும் சரக்கில்லண்ணே

இராகவன் நைஜிரியா said...

// வானம்பாடிகள் said...
இராகவன் நைஜிரியா said...

/அண்ணே தனக்குத்தானே திட்டப் படி 50 போட முடியாதபடி உங்களுக்கு வடை போச்சே../

அசந்தாப்ல இருந்துட்டேன். //

அட நீங்களுமா?

வானம்பாடிகள் said...

இராகவன் நைஜிரியா said...

// டிஸ்கி 1: இது வசந்த் மாதிரி எழுதியிருக்கேன். சரியா இருக்கான்னு பின்னூட்டத்தில சொல்லுங்க. மெஜாரிடி முடிவை ஏற்றே ஆக வேண்டும். அதனால போட்டு குடுக்க வேணாம். சரின்னா மட்டும் வசந்த் மாதிரின்னு சொல்லுங்க. //

சரியா வசந்த் மாதிரியே எழுதியிருக்கீங்க..

அதுல சந்தேகமா வேணாம்..

வினை, எதிர்(ரி) வினை மாதிரி இதுக்கு என்னா பேர் அண்ணே?//

hi hi

இராகவன் நைஜிரியா said...

// ஈரோடு கதிர் said...
//இராகவன் நைஜிரியா Says:

கதிர் அண்ணன் சூப்பரா பின்னூட்டுயிருக்காரு..//


க்குஹூம் நீங்க வேற... ரெண்டு நாளா பின்னு மட்டுந்தா ஊட்றேன்...

இடுகைக்கு ஒன்னும் சரக்கில்லண்ணே //

அண்ணே இதை எங்கிட்ட போய் சொல்றீங்களே..

சரக்கே இல்லாமா, பின்னூட்டம் மட்டும் போட்டு நான் ஒரு வருஷத்தை இங்க ஓட்டிட்டேன்...

உங்களுக்கு என்ன அண்ணே.. நீங்க இடுகையில தூள் கிளப்பறீங்க..

இராகவன் நைஜிரியா said...

// வானம்பாடிகள் said...
இராகவன் நைஜிரியா said...

// டிஸ்கி 1: இது வசந்த் மாதிரி எழுதியிருக்கேன். சரியா இருக்கான்னு பின்னூட்டத்தில சொல்லுங்க. மெஜாரிடி முடிவை ஏற்றே ஆக வேண்டும். அதனால போட்டு குடுக்க வேணாம். சரின்னா மட்டும் வசந்த் மாதிரின்னு சொல்லுங்க. //

சரியா வசந்த் மாதிரியே எழுதியிருக்கீங்க..

அதுல சந்தேகமா வேணாம்..

வினை, எதிர்(ரி) வினை மாதிரி இதுக்கு என்னா பேர் அண்ணே?//

hi hi//

ஓ இதுக்கு பேரு hi hi... சிரிக்கிற மாதிரின்னா இருக்கு

இராகவன் நைஜிரியா said...

// பிரியமுடன்...வசந்த் said...
கர்சீப் டிஷ்ய்ய்யூ பேப்பர் எல்லாம் ஒண்ணுதானே என்ன கர்சீப்ப் தோச்சு தோச்சி பொண்டாட்டி மாதிரி வச்சுக்குவோம் டிஷ்யூ பேப்பர் காதலி மாதிரி குப்பையில போட்ருவோம்... //

தம்பி கல்யாணத்திற்கு பின்னாடி இது மாதிரி எதுவும் வாய் விட்டு தொலைச்சுடாதீங்க...

நீங்களாகவே வம்பை விலை கொடுத்து வாங்கிட்ட மாதிரி ஆகிவிடும்

பிரியமுடன்...வசந்த் said...

//ஈரோடு கதிர் said...
பிரியமுடன் வசந்த்.... said

ஏ... நைனா...இதுக்குத்தான் நேத்துல இருந்து தம் கட்டினியா.... கிரியேட்டிவிட்டினாலும் ஒழுங்கா எழுதனும்டி...

என்னை மாதிரி எழுத தெரியுதே... தில் இருந்தா எங்க... கலகல மாதிரி எழுதுடி....

அப்பத்தெரியும் உன்னோட டங்குவாரு....
அந்துறும்ல//

யேம்பா நான் பாட்டுக்க என் வழியில போயிட்டு இருக்கேன்..
எங்கக்காவ ஏன் இழுக்குறீங்க..
அவ்வ்வ்வ்வ்...

இதுக்கு வந்து என்னைய என்ன சொல்லி திட்டப் போறாங்கன்னு தெரியலியே..
அவ்வ்வ்வ்வ்...

வானம்பாடிகள் said...

இராகவன் நைஜிரியா said...

/ஓ அப்படீங்களா..

பலாப்பழம் மாதிரி../

அதே அதே

எம்.எம்.அப்துல்லா said...

//என்னை மாதிரி எழுத தெரியுதே... தில் இருந்தா எங்க... கலகல மாதிரி எழுதுடி....

அப்பத்தெரியும் உன்னோட டங்குவாரு....
அந்துறும்ல

//

:))))))))))))))

வானம்பாடிகள் said...

எம்.எம்.அப்துல்லா said...

/ :))))))))))))))/

:))))))

ஈரோடு கதிர் said...

//வானம்பாடிகள் Says:
November 26, 2009 10:09 PM
எம்.எம்.அப்துல்லா said...

/ :))))))))))))))/

:))))))
//
:)))

போதுமா?

என்ன விளையாட்டு இது சின்னப் புள்ளத்தனமா......

வானம்பாடிகள் said...

இராகவன் நைஜிரியா said.

/நீங்க உதவிக் கரம் நீட்டினா மத்தவங்க உங்களை எட்டி உதைக்கிறாங்க...

ஐயோ பாவம் நீங்க/

நமக்கு இது புதுசில்லையேண்ணே.

வானம்பாடிகள் said...

இராகவன் நைஜிரியா said...

/அண்ணே பொண்டாட்டி இல்லாதவங்க என்ன பண்ணுவாங்க/

இதென்னா வில்லங்கம்..அவ்வ்வ்வ்

ஈரோடு கதிர் said...

////என்னை மாதிரி எழுத தெரியுதே... தில் இருந்தா எங்க... கலகல மாதிரி எழுதுடி....

அப்பத்தெரியும் உன்னோட டங்குவாரு....
அந்துறும்ல

//

:))))))))))))))//

க்க்க்க்கும்... எல்லாரு இதையே நோட் பண்றாங்களே....

இது ரொம்ப தப்பாச்சே..

கலகலகிட்டே யாராவது போட்டு குடுத்துறுவாய்ங்களோ...

அடி.... ஆத்தா அது வேற வந்து படிச்சா... நம்மள லகலகலகலக பண்ணிப்புடுமே...

இப்போ வேற கமெண்ட்டெ டெலிட் பண்ணமுடியாதே...

சரி... சரி.... பிரச்சனைனு வந்தா சரண்டர் ஆயிடுவோம்.. அது வரைக்கும் வெறப்பா நில்லுடா கைப் புள்ள... அட்டென்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்சன்

பழமைபேசி said...

Enjoy... my laptop is dead; so no Thamizh.... just came here to establish my presence...

பிரியமுடன்...வசந்த் said...

//டிஸ்கி 2: இந்த மாதிரி அவர் எழுத வேண்டிய எழுத்து கதிர், பாலாசி, இது போக அவருக்கு விருப்பமான முடியுமென்று தோன்றக் கூடிய வேறு யாருடைய எழுத்தாகிலும். //

இப்போதான் கூர்ந்து வாசிச்சேன் தொடரணுமா ஆத்தாடி அவங்க எல்லாம் சூப்பர்ஸ்டார்ஸ்..

நான் அவங்கள மாதிரி எழுதி அவங்களோட பேரை கெடுக்க விரும்பலை...

நீங்க எல்லாம் எழுதுறதுக்குனே பொறந்தவங்க அதான் கரெக்ட்டா நான் என்ன மிஸ்டேக் பண்ணுவேனோ அதே மாதிரி எழுதியிருக்கீங்க :))))

ஈரோடு கதிர் said...

பழமைபேசி said...
Enjoy... my laptop is dead; so no Thamizh.... just came here to establish my presence...


வாங்க மாப்பு... நல்லாயிருக்கீங்களா....

நேத்து பாலாண்ணன் இடுகை படிக்கலையோ.....

பிரியமுடன்...வசந்த் said...

150 பின் தொடர்பவர்கள் யப்பா....

வாழ்த்துக்கள் நைனா

பிரியமுடன்...வசந்த் said...

//சத்ரியன் said...
//எங்க போனாலும் ஒரு ஓரமா நான் பாட்டுக்கு ஒழுங்கா இருப்பேன். வெள்ளையா வேற இருப்பேன். //

பாலா,

னான் படிக்க ஆரம்பிச்சதுமே நெனைச்சேன். வசந்த் அண்ணன் "ப்ளாக்" பக்கம் வந்துட்டமான்னு.இறங்கி வந்து பாத்தா பின் குறிப்புல வேற ...கேக்குறீக ...ம்ம்ம்ம்!//

ம்க்கும்...கல்யாணமாகி குழந்தை வேற பொறந்து மூஞ்சியில் மூத்திரமடிக்குது இதுல நானு அண்ணனாம்ல...

இருங்கடி என்னிக்குனாலும் ஊருபக்கம் வரும்போது மாட்டுவீங்க தான அன்னிக்கு வச்சுக்கிறேன்..

பிரியமுடன்...வசந்த் said...

//செல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்லாது... டிஸ்கி-2எல்லாம் செல்லாது....

அதிலும் என்னோட பேர டேமேஜ் ஆக்கியதை மென்மையாக கண்டிக்க்க்க்க்க்க்கிறேனுங்கோவ்வ்வ்வ்வ்வ்//

கதிரண்ணே கண்டிப்பா டேமேஜ் ஆவாது நம்பிக்கையோட இருங்க...

பிரியமுடன்...வசந்த் said...

// தண்டோரா ...... said...
ஹீரோவாய்ட்டுதான் வர்றீங்க//

சூப்பர்ஹீரோன்னு சொல்லுங்க மணிகண்டன்...

பிரியமுடன்...வசந்த் said...

//க.பாலாசி said...
//அவ்வ்வ்வ்வ்வ். எனக்கு திக்கு திக்குங்குது. தினம் இன்னேரம் பின்னூட்டம் போடுவான் புள்ளாண்டான். இன்னைக்கு இன்னும் காணோம்.//

அவரோட அடுத்த இடுகையை நீங்க சுட்டுட்டீங்க. எங்க உட்கார்ந்து அழறாரோ?//

அடப்பாவிகளா...

என்னை ஒண்ணுமே சிந்திக்கதெரியாத மண்ணுன்னே முடிவு பண்ணிட்டீங்களா?
அவ்வ்வ்வ்வ்வ்.....

வானம்பாடிகள் said...

பிரியமுடன்...வசந்த் said...

/150 பின் தொடர்பவர்கள் யப்பா....

வாழ்த்துக்கள் நைனா/

நன்றி ராஜா.

வானம்பாடிகள் said...

பழமைபேசி said...

/Enjoy... my laptop is dead; so no Thamizh.... just came here to establish my presence...//

வாங்க பழமை. ப்ளாக் ஃப்ரைடே சேல்ஸ் இருக்கே=))

வானம்பாடிகள் said...

ஈரோடு கதிர் said...

//வானம்பாடிகள் Says:
November 26, 2009 10:09 PM
எம்.எம்.அப்துல்லா said...

/ :))))))))))))))/

:))))))
//
:)))

போதுமா?

என்ன விளையாட்டு இது சின்னப் புள்ளத்தனமா......

=))அய்யோ அய்யோ முடியல

வானம்பாடிகள் said...

ஈரோடு கதிர் said...
/இது ரொம்ப தப்பாச்சே..

கலகலகிட்டே யாராவது போட்டு குடுத்துறுவாய்ங்களோ...

அடி.... ஆத்தா அது வேற வந்து படிச்சா... நம்மள லகலகலகலக பண்ணிப்புடுமே...

இப்போ வேற கமெண்ட்டெ டெலிட் பண்ணமுடியாதே...

சரி... சரி.... பிரச்சனைனு வந்தா சரண்டர் ஆயிடுவோம்.. அது வரைக்கும் வெறப்பா நில்லுடா கைப் புள்ள... அட்டென்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்சன்//

இன்னைக்கு என்னா டாப் கியர்ல போகுது=))..என்னால நிஜமா முடியல

வானம்பாடிகள் said...

பிரியமுடன்...வசந்த் said.

/அடப்பாவிகளா...

என்னை ஒண்ணுமே சிந்திக்கதெரியாத மண்ணுன்னே முடிவு பண்ணிட்டீங்களா?
அவ்வ்வ்வ்வ்வ்...../

யோவ். உன் படைப்ப திருடினா உனக்கு பக்குன்னு இருக்காதா. அது சொன்னா என்னமோ சொல்ற=))

வானம்பாடிகள் said...

ஈரோடு கதிர் said...

/ வாங்க மாப்பு... நல்லாயிருக்கீங்களா....

நேத்து பாலாண்ணன் இடுகை படிக்கலையோ...../

இங்கார்ரா வீரத்த=))

வானம்பாடிகள் said...

பிரியமுடன்...வசந்த் said...

//சூப்பர்ஹீரோன்னு சொல்லுங்க மணிகண்டன்...//

ம்கும். நக்கலா போச்சு உனக்கு.

வானம்பாடிகள் said...

பிரியமுடன்...வசந்த் said...

/கதிரண்ணே கண்டிப்பா டேமேஜ் ஆவாது நம்பிக்கையோட இருங்க...//

அது அது. அது இருக்கில்ல. அப்புறம் என்ன? அடிச்சி ஆடு பையா.

வானம்பாடிகள் said...

பிரியமுடன்...வசந்த் said...

/ம்க்கும்...கல்யாணமாகி குழந்தை வேற பொறந்து மூஞ்சியில் மூத்திரமடிக்குது இதுல நானு அண்ணனாம்ல...

இருங்கடி என்னிக்குனாலும் ஊருபக்கம் வரும்போது மாட்டுவீங்க தான அன்னிக்கு வச்சுக்கிறேன்../

பக்கத்துல தான. ஒரு எட்டு போய் பார்த்துட்டு வா.

வானம்பாடிகள் said...

பிரியமுடன்...வசந்த் said...

/இப்போதான் கூர்ந்து வாசிச்சேன் தொடரணுமா ஆத்தாடி அவங்க எல்லாம் சூப்பர்ஸ்டார்ஸ்../

சரி. இருக்கட்டும். நீயும் ஒரு ஸ்டார்தான். எழுது.

/நான் அவங்கள மாதிரி எழுதி அவங்களோட பேரை கெடுக்க விரும்பலை.../

வாணாம். சொந்தமாவே எழுது!

/நீங்க எல்லாம் எழுதுறதுக்குனே பொறந்தவங்க அதான் கரெக்ட்டா நான் என்ன மிஸ்டேக் பண்ணுவேனோ அதே மாதிரி எழுதியிருக்கீங்க :))))//

இது பாராட்டா? நக்கலா?

வானம்பாடிகள் said...

இராகவன் நைஜிரியா said..

/தம்பி கல்யாணத்திற்கு பின்னாடி இது மாதிரி எதுவும் வாய் விட்டு தொலைச்சுடாதீங்க...

நீங்களாகவே வம்பை விலை கொடுத்து வாங்கிட்ட மாதிரி ஆகிவிடும்//

சமாளிச்சிக்குவான்.

வானம்பாடிகள் said...

மி த 100=))

தியாவின் பேனா said...

வழமைபோல் நகைச்சுவை கலந்த நல்ல நடை

ஆதிமூலகிருஷ்ணன் said...

நானே ஒரு பேக்கு.

எனக்கே இரண்டாவது பாராவிலேயே தெரிந்துவிட்டது என்றால் அதன் பின் வந்தவை போர் என்றுதான் அர்த்தம். ஹிஹி..

வானம்பாடிகள் said...

தியாவின் பேனா said...

/வழமைபோல் நகைச்சுவை கலந்த நல்ல நடை//

நன்றி தியா.

கலகலப்ரியா said...

இந்தக் கொடுமைக்கெல்லாம் நான் பின்னூட்டம் ... ஓட்டு எல்லாம் போடணும்னு தலை எழுத்தா...

வானம்பாடிகள் said...

ஆதிமூலகிருஷ்ணன் said...

/நானே ஒரு பேக்கு.

எனக்கே இரண்டாவது பாராவிலேயே தெரிந்துவிட்டது என்றால் அதன் பின் வந்தவை போர் என்றுதான் அர்த்தம். ஹிஹி..//

முதல்ல வரவுக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி ஆதி சார். ஆனாலும் இந்த அதிரடி பின்னூட்டம் அசத்தல். பிட்டடிக்க தெரியாம அடிச்சா மாதிரி மாட்டிக்கிட்டேன்.

வானம்பாடிகள் said...

கலகலப்ரியா said...

/இந்தக் கொடுமைக்கெல்லாம் நான் பின்னூட்டம் ... ஓட்டு எல்லாம் போடணும்னு தலை எழுத்தா.../

அட தருமம் பண்ணதா நினைச்சிக்கம்மா=))

கலகலப்ரியா said...

//ஈரோடு கதிர் said...

பிரியமுடன் வசந்த்.... said

ஏ... நைனா...இதுக்குத்தான் நேத்துல இருந்து தம் கட்டினியா.... கிரியேட்டிவிட்டினாலும் ஒழுங்கா எழுதனும்டி...

என்னை மாதிரி எழுத தெரியுதே... தில் இருந்தா எங்க... கலகல மாதிரி எழுதுடி....

அப்பத்தெரியும் உன்னோட டங்குவாரு....
அந்துறும்ல//

கதிரு... இது நக்கலா... இல்ல பாராட்டான்னு தெரியல... நாம எப்பவும் பாசிடிவ்வாதான் எடுத்துப்போம்... நன்றி நன்றி நன்றி...

கலகலப்ரியா said...

//பிரியமுடன்...வசந்த்


இதுக்கு வந்து என்னைய என்ன சொல்லி திட்டப் போறாங்கன்னு தெரியலியே..
அவ்வ்வ்வ்வ்...//

ஈரோடு கதிர் said...
/இது ரொம்ப தப்பாச்சே..

கலகலகிட்டே யாராவது போட்டு குடுத்துறுவாய்ங்களோ...

அடி.... ஆத்தா அது வேற வந்து படிச்சா... நம்மள லகலகலகலக பண்ணிப்புடுமே...

இப்போ வேற கமெண்ட்டெ டெலிட் பண்ணமுடியாதே...

சரி... சரி.... பிரச்சனைனு வந்தா சரண்டர் ஆயிடுவோம்.. அது வரைக்கும் வெறப்பா நில்லுடா கைப் புள்ள... அட்டென்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்சன்//

பயபுள்ளைக நல்லாத்தான் பயப்படுர்ர்றாய்ங்கடி.... சனி ஞாயிறு வச்சிருக்கிறேண்டி கச்சேரிய... எல்லாம் நேரம்..

கலகலப்ரியா said...

//ஈரோடு கதிர் said...

//கலகலப்ரியா said...
bbbbbayangara speeddddddd....//

How r u Priya?//

baagane unnaanu..! mavane irunga..!

கலகலப்ரியா said...

// வானம்பாடிகள் said...

கலகலப்ரியா said...

/இந்தக் கொடுமைக்கெல்லாம் நான் பின்னூட்டம் ... ஓட்டு எல்லாம் போடணும்னு தலை எழுத்தா.../

அட தருமம் பண்ணதா நினைச்சிக்கம்மா=))//

இது தர்மமா...? கடல்ல போட்ட சக்கர...!

வானம்பாடிகள் said...

கலகலப்ரியா said...

/கதிரு... இது நக்கலா... இல்ல பாராட்டான்னு தெரியல... நாம எப்பவும் பாசிடிவ்வாதான் எடுத்துப்போம்... நன்றி நன்றி நன்றி.../

ஆஆஆ. மாப்பு எஸ்கேப்பு. என்னா லக்கு.கவுத்துட்டியேம்மா.

வானம்பாடிகள் said...

கலகலப்ரியா said...

/பயபுள்ளைக நல்லாத்தான் பயப்படுர்ர்றாய்ங்கடி.... சனி ஞாயிறு வச்சிருக்கிறேண்டி கச்சேரிய... எல்லாம் நேரம்../

ஆஹா. இந்த சினிமால தேதி குறிச்சாச்சின்னு மிரட்றது இதானோ..அண்ணனுக்கு வேற மூணு நாள் லீவாம்ல. ஆல் த மீஜிக் ஸ்டார்ட். பார்த்து. சிக்கன் குனியா வந்த உடம்பு.

வானம்பாடிகள் said...

கலகலப்ரியா said...

/baagane unnaanu..! mavane irunga..!/

அய்யோ. ஒரிஜினல் லகலக. தெலுங்குல மிரட்டுது=)).

cheena (சீனா) said...

ஆகா ஆகா பாலா

சஸ்பென்ஸ் கடசில நச்சுன்னு டிஷ்யூ பேப்பர்னு சொன்னது அட்டகாசம்

நான் கூட மழலைச் செல்லம்னு நினைச்சிட்டேன்

நல்ல நகைச்சுவை - நல்வாழ்த்துகள் பாலா

பின்னோக்கி said...

கடைசி வரை சஸ்பென்ஸ்ச கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு வசந்த் மாதிரியே எழுதியிருக்கீங்க. பாராட்டுக்கள்.

நாஞ்சில் பிரதாப் said...

ஹஹஹ நான் ஆரம்பத்துல நினைச்சது சரியாப்போச்சு... தல வசந்த் மாதிரியே ஐயா எழுத ஆரம்பிச்சட்டாரேன்னு சரியாத்தான் இருக்கு....

வானம்பாடிகள் said...

cheena (சீனா) said...

/ஆகா ஆகா பாலா

சஸ்பென்ஸ் கடசில நச்சுன்னு டிஷ்யூ பேப்பர்னு சொன்னது அட்டகாசம்

நான் கூட மழலைச் செல்லம்னு நினைச்சிட்டேன்

நல்ல நகைச்சுவை - நல்வாழ்த்துகள் பாலா//

நன்றி ஐயா.

வானம்பாடிகள் said...

நாஞ்சில் பிரதாப் said...

/ஹஹஹ நான் ஆரம்பத்துல நினைச்சது சரியாப்போச்சு... தல வசந்த் மாதிரியே ஐயா எழுத ஆரம்பிச்சட்டாரேன்னு சரியாத்தான் இருக்கு..../

ஹி ஹி

வானம்பாடிகள் said...

பின்னோக்கி said...

/கடைசி வரை சஸ்பென்ஸ்ச கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு வசந்த் மாதிரியே எழுதியிருக்கீங்க. பாராட்டுக்கள்./

நன்றி.