வாழ்ந்த நேரம் மட்டும்
வயதுக் கணக்கானால்
நான் இன்னும் கைக்குழந்தைதான்
அப்படி இருக்க முடிந்தால்
எவ்வளவு நன்றாக இருக்கும்
ஆசையாய் தூக்குவாய்
அள்ளி அணைப்பாய்
எப்பொழுதும் உன் மடியில்
இருத்திக் கொள்வாய்
கொஞ்சுவாய்
செல்லமாய் கிள்ளுவாய்
ஏக்கமாய்த்தான் இருக்கிறது
ஆயினும் வேண்டாம்.
மெதுவாய் வந்தென்
மார்பில் சாய்ந்து
மடியில் படுத்து
என் கை பிரித்து
கன்னத்தில் வைத்துக் கொள்வாயே!
அதிகாலை வேளை
கண் பிரிக்காமல்
கை பிரித்து வந்து
கட்டிக் கொள்வாயே!
காலர் பிடித்திழுத்து
மார்பில் புதைந்து
மூச்சிழுத்து
ப்தூ விடு என்பாயே!
காத்திருந்தாலும்
இது வேண்டுமெனக்கு
எப்போதும்
உன்னுடன்.
******
பூக்கடையில் ஓர் நாள்
புதிய பூ ஒன்று பார்த்தேன்.
மனோரஞ்சிதமாம்
நினைத்த வாசனை
வருமென்றாள் பூக்காரி
மெல்லச் சிரித்தபடி
நகர்ந்தேன்
உன் வாசனை
வேறெந்த மலர் தரமுடியும்.
____/\____
71 comments:
ஹ ஹ ஹா..
கலி முத்திடுச்சு...
வலையுலக.... வாலு
ச்ச்ச்சீ இல்ல இல்ல...ம்ம்ம் வாலி
வாழ்க
பிரியமுடன்...வசந்த் said...
/ஹ ஹ ஹா..
கலி முத்திடுச்சு.../
தலை எழுத்து என்னா பண்றது. வயசு பசங்க கத்திரிக்கா தக்காளிய கடத்திக்கிட்டு போற கவிதை எழுத ஆரம்பிச்சா நாங்க பூந்துறமாட்டமா?
//ஏக்கமாய்த்தான் இருக்கிறது//
இதை படித்தவுடன் எனக்கும் தான்........
//ஏக்கமாய்த்தான் இருக்கிறது
ஆயினும் வேண்டாம்.
மெதுவாய் வந்தென்
மார்பில் சாய்ந்து
மடியில் படுத்து
என் கை பிரித்து
கன்னத்தில் வைத்துக் கொள்வாயே!//
//மெல்லச் சிரித்தபடி
நகர்ந்தேன்
உன் வாசனை
வேறெந்த மலர் தரமுடியும்.//
ம்ம்ம்......அழகான வரிகள்......ரசித்தேன். ஆனாலும் 60 லும் ஆசைவரத்தான் செய்கிறது.
கதிர் - ஈரோடு said...
/வலையுலக.... வாலு
ச்ச்ச்சீ இல்ல இல்ல...ம்ம்ம் வாலி
வாழ்க/
அதுக்காக கலைஞர திட்டி கூட கவிதை எழுதமாட்டன்..அவ்வ்வ்வ்வ்வ்வ்
ஊடகன் said...
/இதை படித்தவுடன் எனக்கும் தான்......../
ஆஹா. ஏங்குங்க ஏங்குங்க ஏங்கிக்கிட்டே இருங்க=))
க.பாலாசி said...
/ம்ம்ம்......அழகான வரிகள்......ரசித்தேன். ஆனாலும் 60 லும் ஆசைவரத்தான் செய்கிறது./
பாலாசி இது ரொம்ப ஓவரு. எனக்கு இன்னும் 3 பதினெட்டு கூட ஆவலை. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்
இத எதிர்பார்க்கலை.. சூப்பர்..
அருமையான கவிதை
பின்னோக்கி said...
/இத எதிர்பார்க்கலை.. சூப்பர்../
ஹி ஹி. நன்றிங்க
Thirumathi Jaya Seelan said...
/அருமையான கவிதை/
நன்றிங்கம்மா.
அருமையான கவிதைகள்.
நடக்கட்டும்ம்..நடக்கட்டும்.. நல்லா இருங்க...
ஸ்ரீ said...
/அருமையான கவிதைகள்./
நன்றி ஸ்ரீ.
ஈ ரா said...
/நடக்கட்டும்ம்..நடக்கட்டும்.. நல்லா இருங்க.../
ஏஞ்சாமி=))
/இத எதிர்பார்க்கலை.. சூப்பர்../
இதேதான் நானும் ...!
மீள் கவிதையா சார்? இப்படி பின்றீங்களே சார். அருமை போங்க
ஜீவன் said...
/இதேதான் நானும் ...!/
நன்றி ஜீவன்
S.A. நவாஸுதீன் said...
/மீள் கவிதையா சார்? இப்படி பின்றீங்களே சார். அருமை போங்க/
நன்றிங்க.:))
அருமையான கவிதை சார்.கடைசி பாரா,மனதை மீட்டுகிறது!
பா.ராஜாராம் said...
/அருமையான கவிதை சார்.கடைசி பாரா,மனதை மீட்டுகிறது!/
நன்றிங்க.:)
azhaga irukku sir..!
கலகலப்ரியா said...
/azhaga irukku sir..!/
ம்ம். நன்றி!
//பூக்கடையில் ஓர் நாள்
புதிய பூ ஒன்று பார்த்தேன்.
மனோரஞ்சிதமாம்
நினைத்த வாசனை
வருமென்றாள் பூக்காரி
மெல்லச் சிரித்தபடி
நகர்ந்தேன்
உன் வாசனை
வேறெந்த மலர் தரமுடியும்.//
ஓ வானம்பாடி,
சிற்பம்!
வயசானாலும் சேட்டை இன்னும் போகல உங்களுக்கு. நன்றாக இருந்தது...
எடிட்டிங்கில் மேட்ச் கட் என்று ஒரு விஷயம் உண்டு.உங்கள் நேற்றைய கவிதையும்,இதுவும் பொருந்துகிறது.
//மெல்லச் சிரித்தபடி
நகர்ந்தேன்
உன் வாசனை
வேறெந்த மலர் தரமுடியும்//
மலரும் நினைவுகளா சார்? கலக்குங்க!!! அழகு கவிதை! இளமை உணர்வுகளுடன்..!
//காத்திருந்தாலும்
இது வேண்டுமெனக்கு
எப்போதும்
உன்னுடன்.//
அருமையான வரிகள் தலைவா!
அண்ணே என்னாச்சு...ஒன்னுமே பிரியலை..
வந்தேன் அடையாளத்துக்கு ஒட்டுப் போட்டுவிட்டு, ஒரு பின்னூட்டமும் போட்டாச்சு..
ஏக்கம் நல்லாத்தான் வெளிப்பட்டு இருக்குண்ணே..:-)))
சூப்பர்..
என்ன சொல்ல, இன்றைய இளைஞருக்கும், இளமைப் பருவத்தை இப்போதுதான் கடந்தாருக்கும் வராத வார்த்தை புனைவுகள்....என் அன்பு அய்யாவுக்கு மிக சுளுவாய்...
வணங்குகிறேன் அய்யா....
பிரபாகர்.
அட...அட...மனொரஞ்சிதம்..அருமை. உங்க பொண்ணும், மனைவியும் என்ன சொன்னாங்க.
சத்ரியன் said...
/ஓ வானம்பாடி,
சிற்பம்!/
நன்றிங்க சத்ரியன்
புலவன் புலிகேசி said...
/வயசானாலும் சேட்டை இன்னும் போகல உங்களுக்கு. நன்றாக இருந்தது.../
வயசெங்க வந்திச்சி இங்க=))
தண்டோரா ...... said...
/எடிட்டிங்கில் மேட்ச் கட் என்று ஒரு விஷயம் உண்டு.உங்கள் நேற்றைய கவிதையும்,இதுவும் பொருந்துகிறது./
புரியலண்ணே.:))
நெல்லை எஸ்.ஏ.சரவணக்குமார் said...
/மலரும் நினைவுகளா சார்? கலக்குங்க!!! அழகு கவிதை! இளமை உணர்வுகளுடன்..!/
மலர்ந்த கனவுகளா இருக்கலாம்ல=))
சூர்யா ௧ண்ணன் said...
/அருமையான வரிகள் தலைவா!/
நன்றி தலைவா.
இராகவன் நைஜிரியா said...
/அண்ணே என்னாச்சு...ஒன்னுமே பிரியலை..
வந்தேன் அடையாளத்துக்கு ஒட்டுப் போட்டுவிட்டு, ஒரு பின்னூட்டமும் போட்டாச்சு../
எனக்கு புரிஞ்சிடுத்து. அண்ணனுக்கு இந்த மாதிரி கவிதை பிடிக்கலை=))
கார்த்திகைப் பாண்டியன் said...
/ஏக்கம் நல்லாத்தான் வெளிப்பட்டு இருக்குண்ணே..:-)))/
எல்லார் மனசுலயும் இப்படி இருந்திருக்கும்தானே:)
T.V.Radhakrishnan said...
/ சூப்பர்../
நன்றிங்க.
பிரபாகர் said...
/என்ன சொல்ல, இன்றைய இளைஞருக்கும், இளமைப் பருவத்தை இப்போதுதான் கடந்தாருக்கும் வராத வார்த்தை புனைவுகள்....என் அன்பு அய்யாவுக்கு மிக சுளுவாய்...
வணங்குகிறேன் அய்யா./
ஆஆஆ. கவிதை எழுதி வயசை மறக்க விடமாட்டங்குறாங்கப்பா=))
வாத்துக்கோழி said...
/அட...அட...மனொரஞ்சிதம்..அருமை. உங்க பொண்ணும், மனைவியும் என்ன சொன்னாங்க./
என்னா வில்லத்தனம்=))
பொருத்தமாதான் பேரு வெச்சிருக்காங்க படத்துக்கு 'பா'(மரன்) - ன்னு ஹிந்தில - வயசு ஏற ஏற இளமை திரும்புதாமில்ல..., அட அத வுடுங்க புதுசா ஒரு சென்ட் விளம்பரம் பாத்துட்டு 'பாமரத்தனமா இருக்கேன்னு தெரியாம சொல்லிட்டேன் சார்... :-)
அருமையான கவிதை ஐயா.கடைசி வரி மிக அருமை,ஓட்டுக்கள் போட்டாச்சு
அருமையான ஏக்கம், தாகம்....இன்னும் எல்லாம்.
முதல்ல போட்டோ-வை மாத்துங்க. உங்க மனசோட வயசு என்னைய விட சின்னதா இருக்கு. அப்புறம் ஏன் உங்க வயசான போட்டோ?
மர தமிழன் said...
/பொருத்தமாதான் பேரு வெச்சிருக்காங்க படத்துக்கு 'பா'(மரன்) - ன்னு ஹிந்தில - வயசு ஏற ஏற இளமை திரும்புதாமில்ல..., /
கவிதையே இளமைதானே.
கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் said...
/அருமையான கவிதை ஐயா.கடைசி வரி மிக அருமை,ஓட்டுக்கள் போட்டாச்சு/
நன்றிங்க.
ரோஸ்விக் said...
/அருமையான ஏக்கம், தாகம்....இன்னும் எல்லாம்.
நன்றி ரோஸ்விக்.
/முதல்ல போட்டோ-வை மாத்துங்க. உங்க மனசோட வயசு என்னைய விட சின்னதா இருக்கு. அப்புறம் ஏன் உங்க வயசான போட்டோ?/
மாத்திட்டாலும். இதாஞ்செரி. இல்லைன்னா வயசுக்கோளாரும்பாய்ங்க=))
அன்பின் பாலா
அருமையான கவிதை - மலரும் மலர்ந்த மலரப்போகும் நினைவுகள் - அருமை அருமை.
நச்சென்று மனோரஞ்சிதம் தராத வாசனை யெனக் கூறியது அருமை.
படிக்கும் போது பலப்பல நினைவுகள் வருகின்றன
நல்வாழ்த்துகள் பாலா
ஜூப்பர். முதல் காரியமாக உங்க போட்டோ மாத்துங்க சார். எல்லோரும் உங்க வயசு பத்தியே பேசுறாங்க பாருங்க (சின்ன வயசு போட்டோ இல்ல?) .
cheena (சீனா) said...
/படிக்கும் போது பலப்பல நினைவுகள் வருகின்றன
நல்வாழ்த்துகள் பாலா/
நன்றிங்க சீனா
Maheswaran Nallasamy said...
/ஜூப்பர். முதல் காரியமாக உங்க போட்டோ மாத்துங்க சார். எல்லோரும் உங்க வயசு பத்தியே பேசுறாங்க பாருங்க (சின்ன வயசு போட்டோ இல்ல?) ./
=)). அதெதுக்கு மாத்துறது. கவிதையை வயசோடு சம்பந்தப் படுத்தினா என்ன பண்ண?
அருமையான கவிதை
கடைசில இப்டி தான் எதாவது பண்ணுவீங்கனு நெனச்சேன்.. நெனைச்ச மாறியே பண்ணிடீங்க ...
ஆசைக்கு ஏது வயது,
அன்பான ஏக்கம்
அத்தனையும் நடந்தேரட்டும் ..
//பூக்கடையில் ஓர் நாள்
புதிய பூ ஒன்று பார்த்தேன்.
மனோரஞ்சிதமாம்
நினைத்த வாசனை
வருமென்றாள் பூக்காரி
மெல்லச் சிரித்தபடி
நகர்ந்தேன்//
அண்ணே! எப்புடி இதெல்லாம். எல்லா வரிகளையும் விட இதல்லவோ அருமை.
//பூக்காரி//
//மெல்லச் சிரித்தபடி
நகர்ந்தேன்//
//உன் வாசனை
வேறெந்த மலர் தரமுடியும்.//
அண்ணே இந்த வரி பூக்காரியப் பாத்து சொன்னதா??? (ஹிஹிஹி)..
கதிர் சொன்னது தான் சரி...
வலையுலக வாலி....அவர்களே.....வாழ்க
Tamilparks said...
/அருமையான கவிதை/
நன்றிங்க
பேநா மூடி said...
/கடைசில இப்டி தான் எதாவது பண்ணுவீங்கனு நெனச்சேன்.. நெனைச்ச மாறியே பண்ணிடீங்க .../
எப்புடீ:))
அன்புடன் மலிக்கா said...
/ஆசைக்கு ஏது வயது,/
ஆ. இது வில்லத்தனம்.
/அன்பான ஏக்கம்
அத்தனையும் நடந்தேரட்டும் ../
இதுக்கு நன்றி
இப்படிக்கு நிஜாம்.., said...
/அண்ணே! எப்புடி இதெல்லாம். எல்லா வரிகளையும் விட இதல்லவோ அருமை./
நன்றி.
/அண்ணே இந்த வரி பூக்காரியப் பாத்து சொன்னதா??? (ஹிஹிஹி)../
இப்படியெல்லாம் வரும்னு தெரிஞ்சிதான் ஆரம்பத்திலயே வருமென்றாள் பூக்காரின்னு சொல்லிடமே=))
ஆரூரன் விசுவநாதன் said...
/கதிர் சொன்னது தான் சரி...
வலையுலக வாலி....அவர்களே.....வாழ்க/
=)) நன்றி ஆரூரன்
//மெல்லச் சிரித்தபடி
நகர்ந்தேன்
உன் வாசனை
வேறெந்த மலர் தரமுடியும்..//
அரளி மலரா?
ஐம்பதிலும் ஆசை வரும்.... :))
//மெதுவாய் வந்தென்
மார்பில் சாய்ந்து
மடியில் படுத்து
என் கை பிரித்து
கன்னத்தில் வைத்துக் கொள்வாயே!
அதிகாலை வேளை
கண் பிரிக்காமல்
கை பிரித்து வந்து
கட்டிக் கொள்வாயே!
காலர் பிடித்திழுத்து
மார்பில் புதைந்து
மூச்சிழுத்து
ப்தூ விடு என்பாயே!
காத்திருந்தாலும்
இது வேண்டுமெனக்கு
எப்போதும்
உன்னுடன்.//
ஏகத்துக்கு ஏக்கம் காட்டும் அருமையான அழகு வரிகள்....
******
//பூக்கடையில் ஓர் நாள்
புதிய பூ ஒன்று பார்த்தேன்.
மனோரஞ்சிதமாம்
நினைத்த வாசனை
வருமென்றாள் பூக்காரி
மெல்லச் சிரித்தபடி
நகர்ந்தேன்
உன் வாசனை
வேறெந்த மலர் தரமுடியும்.//
இது எங்க ஏரியா..... உள்ள வந்துட்டீங்க..... :))
துபாய் ராஜா said..
/ஐம்பதிலும் ஆசை வரும்.... :))/
:))
/ஏகத்துக்கு ஏக்கம் காட்டும் அருமையான அழகு வரிகள்..../
நன்றி ராஜா.
/இது எங்க ஏரியா..... உள்ள வந்துட்டீங்க..... :))/
இப்போ ஏரியா வேற பிரிச்சிட்டாங்களா? அய்ங்=))
நசரேயன் said...
/அரளி மலரா?/
அண்ணாச்சி. இப்புடி இருந்தா லால்பாக்ல வடக்கூராள் கிட்ட வாங்கி கட்டிக்காம என்ன பண்ண? துண்டு இல்ல பெட்ஷீட் போட்டாலும் வேலைக்காவாது. அரளிப்பூ கொண்டு போனீயளோ:))
Post a Comment