வணக்கம்பா! நல்லாருக்கியா. என்ன தெரியுதா என்றபடி வந்தார் ரிடையரான என் சீனியர். வாங்க சார். உட்காருங்க என்று அமரச் செய்து ஏதாவது உதவ முடியுமா என்றேன். பெரிய உதவி பண்ணணும்பா. ரொம்ப புண்ணியமா போகும் என்றார். அதுக்கென்ன சார் பண்ணா போச்சு என்று வாய் விட்டு விட்டேன், வேதாளம் கேட்கும் கேள்வி வருமெனெத் தெரியாமல்.
கிருஷ்ணன்* தெரியுமில்லையாப்பா. அவர் இறந்து 6 மாசமாச்சிப்பா. அவங்க மனைவியும் 5 வருஷத்துக்கு முன்னாடி இறந்துட்டாங்க. 3 பசங்க 2 பெண் அவருக்கு. 3வது பையனுக்கு 47 வயசாதுப்பா. M.A.படிச்சிட்டு ஒரு கம்பெனில வேல செஞ்சிட்டிருந்தாம்பா. இவுங்க முதலியாரு. கூட வேலை செஞ்சிட்டிருந்த ஒரு செட்டியார் பொண்ண லவ் பண்ணிட்டாம்பா.எவ்ளோ சொல்லி பார்த்தாங்க. புடிவாதமா இருந்தான். அவுங்கம்மா சூசைட் பண்ணிக்கப் போய் காப்பாத்த பட்ட பாடு பெரும்பாடா போச்சி. ஒழிஞ்சி போடான்னு விட்டிருக்கலாம்.
இவங்களும் ஒத்துக்கல. மென்டலாய்ட்டான். அடிக்கறது, உடைக்கறதுன்னு பெரிய தலவலியாய்டிச்சி. அவங்களும் கோயில்,குளம், பரிகாரம்னு என்னல்லாமோ பண்ணிட்டாங்க. கலியாணமானா சரியாய்டும்னு ஒரு ஜோசியன் சொன்னான்னு ஜாதகம் பார்த்து, ஒரு ஏழை பெண்ணை கலியாணம் பண்ணாங்க. ஒரு 2 மாசம் நல்லா இருந்தாம்பா. அந்த பொண்ணும் உண்டாயிடுச்சி.
அப்புறம் பழையபடி முரடனாய்ட்டான். கீழ்பாக்கம் ஆசுபத்திரிலதான் இருந்தான் கிட்ட கிட்ட 12 வருஷம். நல்லாயிட்டான்னு டிஸ்சார்ஜ் பண்ணாங்க. வந்து 3 மாசம் நல்லா இருந்தான். இரண்டாவது குழந்தை உண்டாச்சி. ஒரு கடை வெச்சி குடுத்தாங்க. திடீர்னு முன்ன விட மோசமா மென்டலாய்ட்டான். அப்போல இருந்து கீழ்பாக்கத்துலதாம்பா இருக்கான். குணமாவாதுன்னுட்டாங்க. கை, கால் அவுத்து விட்டா காயம் பண்ணிக்கிறது, யாராவது கிட்ட இருந்தா அடிக்கிறதுன்னு ரொம்ப மோசமாயிடுச்சிப்பா.
அந்தப் பொண்ணுக்கு யாரும் இல்லை. 2 பேரன் பேத்திங்க, இந்தம்மா எல்லாம் இவரு கூடதான் இருந்தாங்க. அவரும் போய் சேர்ந்துட்டாரு. அண்ணன் தம்பிங்க வீட்ட வித்து காசு தரோம்னு கையெழுத்து வாங்கிகிட்டு விரட்டி விட்டானுங்க. ஆதரவில்லாம நிக்குது. மென்டல் டிஸார்டர் இருக்கிற பையன்னா பென்ஷன் கிடைக்குமாமே. பார்த்து ஹெல்ப் பண்ணுப்பான்னாரு.
நோண்டி நொங்கெடுத்து பார்த்துட்டேன். கலியாணமான பையனுக்கு மென்டல்னா பென்ஷன் குடுக்க வழியே இல்லை. கடவுள் எழுதுன விதியே சரியில்லையே. மனுஷன் எழுதினது சரியாவா இருந்துடும். பாருப்பா பாருப்பாங்கறாரு. என்ன பண்ணாலும் வழியே இல்லைங்க. நான் என்னங்க பண்ண?
பைத்தியம் புடிக்கிற அளவுக்கு லவ் இருக்கிற பரதேசின்னா யாரோ ஒரு பொண்ண கட்டினப்ப புள்ள குடுக்க மட்டும் லவ் போய்டுமா? மென்டலானாலும் பரவால்ல ஜாதிதான் முக்கியம்னு ஒரு ஏழைப் பெண் வாழ்க்கையும் நாசமாக்கிட்டாரே பாவி மனுஷன். அதோட சேர்ந்து 2 குழந்தைகளும் தெருவில நிக்குது. பெத்தவங்க, தம்பியால ஒரு குடும்பம் வீதில நிக்கறது கூட உறைக்காம சொத்துக்கு ஆட்டைய போட்ட நாய்ங்க நாசமா போகாதான்னு கோவம் வந்துச்சி.
எல்லாரும் உன்னதாம்பா கை காட்டினாங்க. அதான் உங்கிட்ட வந்தேன். நீ முடியாது வழியில்லைன்னா அது ஃபைனல்னு சொன்னாங்கப்பா. நம்ம பையனாச்சா அதான் நேரிலயே வரலாம்னு வந்தேன். அதுங்க விதி அப்புடின்னா நாம என்ன பண்ண என்று தளர்ந்து கிளம்பியபோது இயலாமையில் என் மீதே கோபம் வந்தது.
கடவுளுக்கு என் மேல் என்ன கோபமோ தெரியவில்லை. மனதிற்குள் வண்டாய் இந்த இயலாமை குடைய அமர்ந்திருக்க, சலூன் ஸ்ப்ரே வாசனையோடு ஹேர்டூவும், லிப்ஸ்டிக்கும் நுனிநாக்கு தங்கிலிஷூமாய் வந்தார் ஒரு அம்மணி.
யூர் மிஸ்டர் மண்ணாங்கட்டி*. ஐம் சுப்ரஜா. ஐம் 57 நவ். மை ஃபாதர் வாஸ் எ ரிடையர்ட் புண்ணாக்கு. மை மதர் பாஸ்ட் அவே 5 இயர்ஸ் பேக். ஐம் தி ஒன்லி டாடர். மை ஹஸ்பன்ட் வாஸ் எ ஜெனரல் மானேஜர் இன் (பெரிய கம்பெனிங்க). ஹி டூ பாஸ்ட் அவே 2 இயர்ஸ் பேக். தென் மை சன் ஹூ இஸ் ஒர்க்கிங் இன் ஸ்டேட்ஸ் டுக் மீ தேர், நீ ஏம்மா தனியா இங்க இருக்கன்னு.
லாஸ்ட் மந்த் ஃபாதர் தவறிட்டார். இனிமே இங்க என்ன இருக்கு? கொஞ்சம் ப்ராபர்ட்டி எல்லாம் செட்டில் பண்ண வேண்டி இருக்குன்னு ஐ ஸ்டேய்ட் பேக். ஃப்யூன்ரலுக்கு வந்திருந்த அப்பாவோட ஃப்ரெண்ட் சொன்னார். சின்ஸ் யூர் ய விடோ நவ், யூர் எலிஜிபிள் ஃபார் அப்பா'ஸ் பென்ஷன்மான்னுட்டு.ஹி டோல்ட் மி டு கான்டாக்ட் யுர் ஆஃபீஸ், வில் யூ ஹெல்ப் மி அவுட் மிஸ்டர் மண்ணாங்கட்டி*ன்னுச்சி.
என்ன பண்ண விதி சார் விதி. அட அலுவலக விதியத்தான் சார் சொன்னேன். நீங்க வேலை செஞ்சிட்டிருந்தீங்களா? பென்ஷன் ஏதாவது வாங்கறீங்களா என்றேன். நோ சார், ஐ நெவர் வர்க்ட் பிகாஸ் தேர் வாஸ் நோ நீட் டுன்னிச்சி. அந்தாளு பென்ஷன் பேப்பர்ல பார்த்தா இந்தம்மா பேரு இருக்கு, கலியாணம் கட்டின பொண்ணுன்னு.
எந்த நாய்க்கு ஹெல்ப் பண்ணவோ ரூல் போட்டிருக்கான் சார். கட்டி குடுத்த பொண்ணுன்னாலும் விதவையானா அவங்க கோடீசுவரியா இருந்தாலும், புள்ள பில்கேட்ஸா இருந்து கூடவே வெச்சி பார்த்தாலும், அப்பனோ, ஆயியோ பென்ஷன் வாங்கிட்டிருந்து டிக்கட் வாங்கிட்டா அம்மா வூட்டுக்கு திரும்பி வந்துட்டதால (விதவையானா அம்மா ஊட்டுக்கு வந்துடுவாங்கன்னு எந்த நாயி சொல்லிச்சோ) பென்ஷன் உண்டுன்னு. அப்பன் ஆத்தா போனப்புறம் அம்மா ஊடுன்னு ஒன்னு ஏதுங்க?
ஒரு செட் ஃபார்ம் குடுத்து, எல்லாம் நிரப்பி கொண்டு வந்து கொடுங்கம்மா. பென்ஷன் வரும்னேன். ஊஊஊஊ. தேங்க் யூ சோ மச். இஃப் யூ டோன் மைன்ட் ஹவ் மச் வில் ஐ கெட்? இட்ஸ் நாட் த மனி தட் மேட்டர்ஸ் (அப்புறம் எதுக்குடி கேட்ட) இட்ஸ் ஆல் அபவுட் சென்டிமென்டல் அட்டாச்மென்ட்(ங்கொய்யாலே. அப்பன் கட்டுன வீட்ட வித்து காசாக்கி பேங்க்ல போட்டுட்டு அட்டாச்மென்ட்டா). பைல்ஸ்ல பச்சை மிளகாய் அரைச்சி தடவினா மாதிரி இருந்திச்சி. குத்து மதிப்பா மாசம் சுமார் இருவந்தஞ்சாயிரம் வரும்னேன்.
இதுக்காகவே எமன் வந்து கூப்டாலும் சாவமாட்டன்டா நானுன்னு ஒரு சந்தோசம் மூஞ்சில தெரிய, ப்ச்.அப்பாவே போய்ட்டாரு, இது வந்து என் துக்கம் தீந்துடுமாங்கற குரல்ல தட்ஸ் நாட் எ பேட் அமவுன்ட் (அட பன்னாடயே. மாசம் ஃபுல்லா உழைச்சாலும் பாதி பேத்துக்கு இந்த சம்பளம் வராதுடி) இன் ஃபேக்ட் இட்ஸ் கொய்ட் எ டீசன்ட் அமவுன்ட்டுன்னு போச்சி.
ரொம்பப் பாவமா, அடுத்த வேளை சோத்துக்கில்லாம நிர்கதியா நிக்கிற குடும்பத்துக்கு உதவ சட்டமில்லை. அமெரிக்கால கோடில புரண்டாலும், பாழாப்போற சமூக மூட நம்பிக்கையை ஆதாரமா வெச்சி தேவையே இல்லாதவங்களுக்கு மேல மேல காசு. ஆம்பிளையா பொறக்கறதும், அரசுத் துறையில வேலை செய்யிறதும் அம்புட்டு சுலபமில்லீங்கோவ். இந்த மாதிரி சில நாள்ள மனசாட்சி இருக்கிறவன்னா கொலக்குத்தம் பண்ணவன் மாதிரி தின்ன தூங்க முடியாதுங்கோவ்.

(ஹி ஹி. உண்மைச் சம்பவம்னா பேரு மறைச்சி போடணும்னு எழுதப் படாத சட்டம் இருக்குங்களே. மீற முடியுமா? அதான் என் பேரு மண்ணாங்கட்டி)