Sunday, November 8, 2009

தங்கமணி காமெடி பீஸா?

தமிழ் சினிமா பார்ப்பதில் உள்ள ரிஸ்கினாலும், அலுவலகத்திலிருந்து அவசர வேலை என்று சொல்லி போய்வரும் தூரத்தில் இருந்த திரையரங்குகளில் ஆங்கிலப் படங்களே ஓடியதாலும், அரை வாக்கியம் முழுதாய்ப் புரியாவிட்டாலும், சிரிப்பவர்களோடு சிரித்து, சீட்டியடிப்பவர்களோடு அடித்து ஒரு மார்க்கமாக ஆங்கிலப் படங்களின் ரசிகனானேன்.

ப்ரொமோஷனில் கர்நாடக வனப்பகுதியான சக்லேஷ்பூரில் பணியிலிருந்தபோது ரங்கமணியாக நேர்ந்தது. வெள்ளிக்கிழமை இரவில் கிளம்பி சனி மாலை வந்து, ஞாயிறு மதியம் கிளம்பும் மாதம் ஒரு முறை விசிட்டில் வீட்டுத் தேவைகளை கவனிக்கவும், 2 வேளை வீட்டுச் சாப்பாடு சாப்பிடவும் தவிர வேறொன்றுக்கும் நேரமில்லாமல் போனது.

ஒன்பது மாதத்திற்குப் பிறகு மாற்றலில் சென்னை வந்த பிறகு மெதுவாய்த் தங்கமணியின் நச்சரிப்பு துவங்கியது.வீடு ஆஃபீஸ்னே இருந்தா எப்படி. வெளிய வாசல்ல கூட்டிட்டு போகமாட்டிங்களான்னு. அதுக்கென்னாம்மா வாக்கிங் போகலாம்னு ஒரு நாள் கூட்டிட்டு போனப்பதான் வாசல்லன்னா சினிமா, பீச் இத்யாதிங்கற ரகசியம் புரிஞ்சது.

கேள்வி, கெஞ்சலாகி, கெஞ்சல் கோபமாகி, கோபம் அழுகையாகி ஒரு கட்டத்தில் தப்பாது என்ற நிலையில், சரி சினிமா போகலாமா என்று கேட்டே விட்டேன். இந்தக் காதிலிருந்து அந்தக் காது வரைக்கும் வாய் நீள என்.டி.ஆர், ஸ்ரீதேவி நடித்த வேடகாடு போகவேண்டும் என்ற விருப்பத்தை கிட்டத்தட்ட மிரட்டலாகவே சொன்னார் தங்கமணி.

ஒரு போறாத நாளில் டிக்கட் ரிஸ்ர்வ் செய்து கொண்டு சத்யம் தியேட்டரில் அந்தப் படத்துக்கு போனோம். நான் பார்க்கும் முதல் தெலுங்குப்படம் என்பதாலும், மொழியறிவு போதாது என்பதாலும், கொஞ்சம் டென்ஷனிருந்தாலும், ஆங்கிலப் பட உத்தி கை கொடுக்கும் என்ற தைரியமும் இருந்தது.

என் நம்பிக்கையைத் தவிடு பொடியாக்குவது போல் படம் ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே என்.டி.ஆர் வசனம் பேசும்போது மேல் பல் செட் அவிழ்வதும், பொறையைக் கவ்விப்பிடிப்பது போல் அவ் என்று கவ்விக் கொண்டு அதே ஃப்ளோவில் அவர் வசனம் பேசுவதும் பார்த்ததும் சிரித்து விட்டேன்.

ஹக் என்ற சத்தத்தோடு என் சிரிப்பு நிற்கவும்தான் தங்கமணி முழங்கையால் இடுப்பில் இடித்ததையும் சுற்றி இருப்பவர்கள் ஏன் சிரிச்சான் லூசு என்று பார்ப்பதையும் உணர்ந்தேன். சின்னத்தம்பி கவுண்டர் மாதிரி சிரிக்கக் கூடாத இடத்தில் சிரிப்பதும் சிரிக்க வேண்டிய இடத்தில் சிரிக்காமலும் இருந்தேன். அப்புறம் காமெடி சீன் வர இன்னொரு இடி. எல்லாரும் சிரிக்கவும் நானும் சிரித்தேன். ஆஹா, இனிமேல் இடிச்சா சிரிக்கணும்னு இருக்க, இடிச்ச இடத்துலயே பொக்கு பொக்குன்னு இடி விழவும் கையை மறைவாக வைத்து உட்கார்ந்தேன்.

அந்த இருட்டிலும் திரையை விட்டு கண்ணெடுக்காமல், எப்படித்தான் விலாவில் இடித்தாள் என்று எனக்கு இன்னும் பிடி படவில்லை. ஒரு சீனில் ஸ்ரீதேவியை கொஞ்சிக் கொண்டு பேசும்போது மூன்றுமுறை பல்செட் அவிழ்ந்ததும், கவ்வியதும் அதைப் பார்த்து ஸ்ரீதேவியே சிரித்தது போல் தோன்ற அடக்க மாட்டாமல் சிரித்து விட்டேன்.

ஒரு பாடல் காட்சியில் மழையில் நனைந்த படி ஸ்ரீதேவியும் என்.டி. ஆரும் ஆட அந்தம்முணி ஆடினா மாதிரி அடுத்த வரியில் என்.டி. ஆர் சற்றே குனிந்த படி ஆடுவதை பின்புறம் காட்ட, யானை அன்டர்வேர் போட்டுக் கொண்டு நடப்பது போல் எனக்கு கற்பனை விரிய மனுசன் சிரிக்காம இருக்க முடியுமா?

இன்டர்வெலில் அத்தனை ரசிகர்களும் கொலை வெறியோடு என்னைப் பார்க்க, தங்கமணி கோபமாய் ஏன் சிரிச்சீங்க எனக் கேட்க சொல்லியே விட்டேன். வேணும்னுதான் பண்றீங்கன்னு சண்டைக்கு வரவும், இனிமே சினிமான்னு கேட்டா பாருங்கன்னு எகிறவும், என்.டி. ஆருக்கு தேங்க்ஸ் சொன்னேன்.

பிறகு வீட்டில், டி.வியில் சினிமா பார்க்கும் போது காமெடி சீன் வந்தால் பளார் பளார் என்று தொடை முதுகு என்று அறை கொடுத்தபடி தங்கமணி சிரிக்கவும் மெதுவாக சந்தேகம் வந்தது. அடிக்கிறதுக்கு சாக்குன்னு அடிக்கிறாளா, இல்லை ரசிக்கிற அழகா என்று. டிவி பார்க‌ற‌த‌ நிப்பாட்டிட்டு ப‌டிக்க‌ற‌ ப‌ழ‌க்க‌த்துக்கு எஸ்கேப் ஆயிட்டேன்.

காமெடிக்கெல்லாம் ர‌சிச்சி அடிச்சி சிரிக்கிற‌ ஆளாச்சே. காமெடி பீஸ்னு நினைச்சு ஒரு முறை குமுத‌த்தில் ஒரு ஜோக் ப‌டிச்சிட்டிருக்கிற‌ப்ப‌ கூப்பிட்டு சொன்னேன். இங்க‌ பாரு, ஒருத்த‌ன் கேக்குறான், 2 டாக்ட‌ர் பார்த்து நான் பூட்ட‌ கேஸுனு சொல்லியும் நீங்க‌ ம‌ட்டும் எப்ப‌டி டாக்ட‌ர் வைத்திய‌ம் ப‌ண்றீங்க‌ன்னா, அவ‌ரு அவ‌ங்க ஹாஸ்பிட‌ல் க‌ட்ட‌ல‌யேங்குறாருன்னு சொல்லி சிரிச்சா, ம‌ர‌ம் மாதிரி நிக்குது.

என்னாம்மான்னேன். இதில‌ எங்க‌ ஜோக் இருக்குன்னுச்சி. கிட்ட‌த் த‌ட்ட‌ கோனார் நோட்ஸ் மாதிரி விள‌க்கியும், என்ன‌மோ என‌க்கு சிரிப்பு வ‌ர‌லைன்னு நொடிச்சிகிட்டு போனா என்ன‌ ப‌ண்ண‌? அப்புற‌ம் ஒரு இர‌ண்டு மூன்று முறை அரைநிமிட‌ ஜோக்குக்கு அரை ம‌ணி விள‌க்க‌ம்னு ஆக‌ இது எப்புடின்னு பிடிப‌ட‌வே இல்லை.

சும்மா சொல்ல‌க் கூடாது. கொஞ்ச‌மும் சிரிக்காம‌ த‌ங்க‌ம‌ணி சில‌ ச‌ம‌ய‌ம் போடுற‌பிட்டு இருக்கே. உல‌க‌ம‌கா காமெடிங்க‌.

என‌க்கே பேர் த‌க‌றாரிருக்க‌, கோவில்ல‌ அர்ச்ச‌னைக்கு பேரு கேட்க‌, என் பேரு ம‌ற‌ந்து போய் ம‌க‌ள்ட‌ உங்க‌ப்பா பேரு சொல்லுடின்னு சொல்ல‌, அர்ச்ச‌க‌ர் சீரிய‌ஸா இந்த‌க் கால‌த்துல‌ புருச‌ன் பேரு சொல்ல‌மாட்டேன்னு இருக்கியேம்மா, க்ரேட்னு ச‌ர்டிஃபிகேட் கொடுத்த‌த‌ சொல்லுற‌தா?

ஒக‌ன‌க்க‌ல் போய் ச‌றுக்கி விழுந்து கை ஃப்ரேக்ச‌ர் ஆகி டாக்ட‌ர் எங்க‌ம்மா எப்ப‌டி விழுந்தீங்க‌ன்னா ஒக‌ன‌க்க‌ல்ல‌  தொப்புன்னு ஊந்துட்டேன்னு சொன்ன‌த‌ கேட்டு அந்தாளு சிரிச்ச‌த‌ சொல்ற‌தா?

மின‌ர‌ல் வாட்ட‌ர் தீந்து போச்சின்னு க‌டைக்கார‌னுக்கு ஃபோன் ப‌ண்ணி அந்தாளு திங்க‌க் கிழ‌மை போடறேன்னு சொல்லிட்டு செவ்வாய்க் கிழ‌மை வ‌ர‌, என்ன‌ங்க‌ ம‌ண்ட‌ய‌ போட்டுடுவேன்னீங்க‌ன்னு சொல்ல‌ அந்தாளு அடுத்த‌ அடி வைக்காம‌ சிலையா நிக்க‌, இன்னைக்கு செவ்வாய்க் கிழ‌மை வ‌ந்தும் நான் சொல்ற‌ வ‌ரைக்கும் போட‌ல‌யேன்னு சொன்ன‌ப்புற‌ம் உசிர் வ‌ந்து ந‌ட‌ந்த‌த‌ சொல்ற‌தா?

எப்புடியோ வடிவேலு ஜோக் மட்டும் சரியா புரிஞ்சிடும். டைமிங்கறது இதுதானோ?

74 comments:

கலகலப்ரியா said...

=))..... Thankamani vs. Rangamani... super sir...

பிரபாகர் said...

அருமை அய்யா... சகோதரி சொன்னதையே நானும் வழிமொழிகிறேன்.

பிரபாகர்.

S.A. நவாஸுதீன் said...

//என் நம்பிக்கையைத் தவிடு பொடியாக்குவது போல் படம் ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே என்.டி.ஆர் வசனம் பேசும்போது மேல் பல் செட் அவிழ்வதும், பொறையைக் கவ்விப்பிடிப்பது போல் அவ் என்று கவ்விக் கொண்டு அதே ஃப்ளோவில் அவர் வசனம் பேசுவதும் பார்த்ததும் சிரித்து விட்டேன்.//

ஹா ஹா ஹா. சான்ஸே இல்ல சார்

S.A. நவாஸுதீன் said...

//ஆஹா, இனிமேல் இடிச்சா சிரிக்கணும்னு இருக்க, இடிச்ச இடத்துலயே பொக்கு பொக்குன்னு இடி விழவும் கையை மறைவாக வைத்து உட்கார்ந்தேன்.//

சார் என்னால முடியலை. கொஞ்சம் பிரேக் கொடுங்க சார்

S.A. நவாஸுதீன் said...

//மூன்றுமுறை பல்செட் அவிழ்ந்ததும், கவ்வியதும் அதைப் பார்த்து ஸ்ரீதேவியே சிரித்தது போல் தோன்ற அடக்க மாட்டாமல் சிரித்து விட்டேன்.//

மூனாவது பால் மூனாவது சிக்ஸர். கலக்குறீங்க சார்

S.A. நவாஸுதீன் said...

//அவ‌ரு அவ‌ங்க ஹாஸ்பிட‌ல் க‌ட்ட‌ல‌யேங்குறாருன்னு சொல்லி சிரிச்சா, ம‌ர‌ம் மாதிரி நிக்குது.//

தப்பித்தவறி அவங்க இதைப் படிச்சாங்க, இனி ஹோட்டல் சாப்பாடுதான் உங்களுக்கு.

S.A. நவாஸுதீன் said...

//என‌க்கே பேர் த‌க‌றாரிருக்க‌, கோவில்ல‌ அர்ச்ச‌னைக்கு பேரு கேட்க‌, என் பேரு ம‌ற‌ந்து போய் ம‌க‌ள்ட‌ உங்க‌ப்பா பேரு சொல்லுடின்னு சொல்ல‌, அர்ச்ச‌க‌ர் சீரிய‌ஸா இந்த‌க் கால‌த்துல‌ புருச‌ன் பேரு சொல்ல‌மாட்டேன்னு இருக்கியேம்மா, க்ரேட்னு ச‌ர்டிஃபிகேட் கொடுத்த‌த‌ சொல்லுற‌தா?//

ஹா ஹா ஹா. சும்மா பிண்றீங்களே சார். என்னால முடியலை

S.A. நவாஸுதீன் said...

ரொம்ப நால் ஆச்சு சார். இப்படி ஒரு கலக்கலான காமெடிப்பதிவு படிச்சு. எக்ஸெலெண்ட்.

நாகா said...

//மின‌ர‌ல் வாட்ட‌ர் தீந்து போச்சின்னு க‌டைக்கார‌னுக்கு ஃபோன் ப‌ண்ணி அந்தாளு திங்க‌க் கிழ‌மை போடறேன்னு சொல்லிட்டு செவ்வாய்க் கிழ‌மை வ‌ர‌, என்ன‌ங்க‌ ம‌ண்ட‌ய‌ போட்டுடுவேன்னீங்க‌ன்னு சொல்ல‌ அந்தாளு அடுத்த‌ அடி வைக்காம‌ சிலையா நிக்க‌, //

ஹா ஹா ஹா கிழியேஷ்..... நெறய நேரம் தங்கமணிகளோட காமெடிகளாலதான் வாழ்க்கை சுவாரஸ்யமா போகுதுங்க சார். எங்க வூட்டம்மா இதப் பாத்துட்டு, உங்க எல்லாருக்கும் எங்கள நக்கலடிக்கறதே வேலயாப் போச்சுன்னு ஒரு குத்து வுட்டுட்டுப் போவுது.

கதிர் - ஈரோடு said...

//2 டாக்ட‌ர் பார்த்து நான் பூட்ட‌ கேஸுனு சொல்லியும் நீங்க‌ ம‌ட்டும் எப்ப‌டி டாக்ட‌ர் வைத்திய‌ம் ப‌ண்றீங்க‌ன்னா, அவ‌ரு அவ‌ங்க ஹாஸ்பிட‌ல் க‌ட்ட‌ல‌யேங்குறாருன்னு சொல்லி சிரிச்சா, //

இதுக்குச் சிரிப்பா.... எழுகொண்டலவாடா... திரும்பவும் என்.டி.ஆர் படம் காட்டுப்பா... இவருக்கு

கதிர் - ஈரோடு said...

//ம‌ண்ட‌ய‌ போட்டுடுவேன்னீங்க‌ன்னு //

அடப்பாவமே.... தண்ணி கொண்டு வந்தவருக்கே தண்ணி காட்டியாச்சா?

கதிர் - ஈரோடு said...

எங்கண்ணே.... தெலுங்குப் படத்துக்கு போயிட்டீங்களா.... ஒன்னும் பதிலையே காணமே

வானம்பாடிகள் said...

கலகலப்ரியா said...

/=))..... Thankamani vs. Rangamani... super sir.../

நன்றியம்மா. லொல்ல பாரு

வானம்பாடிகள் said...

பிரபாகர் said...

/அருமை அய்யா... சகோதரி சொன்னதையே நானும் வழிமொழிகிறேன்.

பிரபாகர்./

நன்றி பிரபாகர்.

வானம்பாடிகள் said...

S.A. நவாஸுதீன் said...

/ஹா ஹா ஹா. சான்ஸே இல்ல சார்/

/சார் என்னால முடியலை. கொஞ்சம் பிரேக் கொடுங்க சார்/

/மூனாவது பால் மூனாவது சிக்ஸர். கலக்குறீங்க சார்/
/ஹா ஹா ஹா. சும்மா பிண்றீங்களே சார். என்னால முடியலை/

ஹி ஹி.

/தப்பித்தவறி அவங்க இதைப் படிச்சாங்க, இனி ஹோட்டல் சாப்பாடுதான் உங்களுக்கு./

நான் சமைப்பேங்க. =))

/ரொம்ப நால் ஆச்சு சார். இப்படி ஒரு கலக்கலான காமெடிப்பதிவு படிச்சு. எக்ஸெலெண்ட்./

நன்றி நவாஸ்

வானம்பாடிகள் said...

நாகா said...

/ஹா ஹா ஹா கிழியேஷ்..... நெறய நேரம் தங்கமணிகளோட காமெடிகளாலதான் வாழ்க்கை சுவாரஸ்யமா போகுதுங்க சார். எங்க வூட்டம்மா இதப் பாத்துட்டு, உங்க எல்லாருக்கும் எங்கள நக்கலடிக்கறதே வேலயாப் போச்சுன்னு ஒரு குத்து வுட்டுட்டுப் போவுது./

ஹா ஹா. நமக்கு அந்த பயமில்லைங்க. இங்க பாரு படின்னாலும் இதெல்லாம் யாரு படிப்பாங்கன்னு போய்டுவாங்க=))

வானம்பாடிகள் said...

கதிர் - ஈரோடு said...

/இதுக்குச் சிரிப்பா.... எழுகொண்டலவாடா... திரும்பவும் என்.டி.ஆர் படம் காட்டுப்பா... இவருக்கு/

தோ. அதான் இதுக்கே சிரிச்சேனே. திருப்பி என்.டி.ஆர் படம் வேற எதுக்கு.

/அடப்பாவமே.... தண்ணி கொண்டு வந்தவருக்கே தண்ணி காட்டியாச்சா?/

=))திகைச்சி போய் நின்னுட்டாருங்க. நெசமாத்தான்.

/எங்கண்ணே.... தெலுங்குப் படத்துக்கு போயிட்டீங்களா.... ஒன்னும் பதிலையே காணமே/

அட இடுகைய போட்டு அமுக்கிட்டு அமுக்கிட்டு உக்காந்தா யாரையும் காணோம். சரின்னு பேப்பர் பார்த்துகிட்டிருந்தேன்.

நாஞ்சில் பிரதாப் said...

அதுக்கென்னாம்மா வாக்கிங் போகலாம்னு ஒரு நாள் கூட்டிட்டு போனப்பதான் வாசல்லன்னா சினிமா, பீச் இத்யாதிங்கற ரகசியம் புரிஞ்சது. //

ஹஹஹஹஹஹ .நல்ல வேளை எனக்கும் புரிய வச்சீங்க, வரப்போறவ இப்படி ஏதாவது சொன்னா இனிமே புரிந்துவிடும்...

கலக்கல் தனியா உக்காந்து சிரிக்க வச்சீட்டீங்களே சார்...

வானம்பாடிகள் said...

நாஞ்சில் பிரதாப் said...

/கலக்கல் தனியா உக்காந்து சிரிக்க வச்சீட்டீங்களே சார்.../

=)). நன்றி ப்ரதாப்

பிரியமுடன்...வசந்த் said...

//அடிக்கிறதுக்கு சாக்குன்னு அடிக்கிறாளா, இல்லை ரசிக்கிற அழகா என்று. டிவி பார்க‌ற‌த‌ நிப்பாட்டிட்டு ப‌டிக்க‌ற‌ ப‌ழ‌க்க‌த்துக்கு எஸ்கேப் ஆயிட்டேன். //

ஹ ஹ ஹா..

நைனா ஏகப்பட்ட வீரத்தழும்பு வாங்கியிருப்ப போலியே..

சூப்பரு...கலக்கல் காமெடி...

வானம்பாடிகள் said...

பிரியமுடன்...வசந்த் said...

/நைனா ஏகப்பட்ட வீரத்தழும்பு வாங்கியிருப்ப போலியே..

சூப்பரு...கலக்கல் காமெடி.../

ம்ம். நீ ரெடி ஆய்க்கடி.=))

SUREஷ் (பழனியிலிருந்து) said...

என்.டி.ஆரின் அது போன்ற படங்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும்.

இராகவன் நைஜிரியா said...

// ஒரு மார்க்கமாக ஆங்கிலப் படங்களின் ரசிகனானேன். //

ஒரு மார்க்க ஆங்கிலப் படங்களின் ரசிகரா? என்ன சொல்ல வர்றீங்க அண்ணே.. பார்த்து சொல்லுங்கண்ணே... அர்த்தம் அனர்த்தமா இருக்கு.. :-)

இராகவன் நைஜிரியா said...

// ப்ரொமோஷனில் கர்நாடக வனப்பகுதியான சக்லேஷ்பூரில் பணியிலிருந்தபோது ரங்கமணியாக நேர்ந்தது. //

வனப் பகுதியில் ரங்கமணியா ஆனீங்களா... அதான் அப்ப அப்ப இடையில் இடி வாங்கறீங்க போலிருக்கு

இராகவன் நைஜிரியா said...

// ஒன்பது மாதத்திற்குப் பிறகு மாற்றலில் சென்னை வந்த பிறகு மெதுவாய்த் தங்கமணியின் நச்சரிப்பு துவங்கியது. //

முதல் 9 மாசம் ஜாலியா இருந்திருக்கீங்களே.. அதுவே உலக மகா அதிசயம் அண்ணே..

இராகவன் நைஜிரியா said...

ஹை... மீ த 25

தியாவின் பேனா said...

கலக்கலான காமெடிப்பதிவு ,

சிரிப்பு சிரிப்பா வருது.

(சிரிப்பு சிரிப்பாதான் வரும் அலுகையா வராது என்று சொல்ல கூடாது.)

வானம்பாடிகள் said...

SUREஷ் (பழனியிலிருந்து) said...

/என்.டி.ஆரின் அது போன்ற படங்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும்./

ஆமாங்க வெள்ளிவிழாப் படமுங்க அது.

வானம்பாடிகள் said...

இராகவன் நைஜிரியா said...
/ஒரு மார்க்க ஆங்கிலப் படங்களின் ரசிகரா? என்ன சொல்ல வர்றீங்க அண்ணே.. பார்த்து சொல்லுங்கண்ணே... அர்த்தம் அனர்த்தமா இருக்கு.. :-)/

மார்க்கமாகன்னா மார்க்கன்னு மாத்தினா அநர்த்தம்தாங்க வரும்ணே..அவ்வ்

வானம்பாடிகள் said...

இராகவன் நைஜிரியா said..

/முதல் 9 மாசம் ஜாலியா இருந்திருக்கீங்களே.. அதுவே உலக மகா அதிசயம் அண்ணே../

இது வேறயா=))

வானம்பாடிகள் said...

தியாவின் பேனா said...

/கலக்கலான காமெடிப்பதிவு ,

சிரிப்பு சிரிப்பா வருது./

=)) நன்றி தியா.

இராகவன் நைஜிரியா said...

// கேள்வி, கெஞ்சலாகி, கெஞ்சல் கோபமாகி, கோபம் அழுகையாகி ஒரு கட்டத்தில் தப்பாது என்ற நிலையில், சரி சினிமா போகலாமா என்று கேட்டே விட்டேன்.//

அது சரி விதி வலியது, கொடியது.. நீங்களே வாய் கொடுத்து மாட்டிகணும் அப்படின்னு விதி இருக்கும் போது யார் காப்பாத்த முடியும் சொல்லுங்க

இராகவன் நைஜிரியா said...

// கேள்வி, கெஞ்சலாகி, கெஞ்சல் கோபமாகி, கோபம் அழுகையாகி ஒரு கட்டத்தில் தப்பாது என்ற நிலையில், சரி சினிமா போகலாமா என்று கேட்டே விட்டேன்.//

அது சரி விதி வலியது, கொடியது.. நீங்களே வாய் கொடுத்து மாட்டிகணும் அப்படின்னு விதி இருக்கும் போது யார் காப்பாத்த முடியும் சொல்லுங்க

இராகவன் நைஜிரியா said...

// வானம்பாடிகள் said...
இராகவன் நைஜிரியா said...
/ஒரு மார்க்க ஆங்கிலப் படங்களின் ரசிகரா? என்ன சொல்ல வர்றீங்க அண்ணே.. பார்த்து சொல்லுங்கண்ணே... அர்த்தம் அனர்த்தமா இருக்கு.. :-)/

மார்க்கமாகன்னா மார்க்கன்னு மாத்தினா அநர்த்தம்தாங்க வரும்ணே..அவ்வ் //

ஒரு சிறிய மாறுதலுக்கே இப்படி எல்லாம் அழுதா எப்படி?

இராகவன் நைஜிரியா said...

// இந்தக் காதிலிருந்து அந்தக் காது வரைக்கும் வாய் நீள என்.டி.ஆர், ஸ்ரீதேவி நடித்த வேடகாடு போகவேண்டும் என்ற விருப்பத்தை கிட்டத்தட்ட மிரட்டலாகவே சொன்னார் தங்கமணி.//

ஆஹா... வசமாகத்தான் மாட்டிடீங்க..

இராகவன் நைஜிரியா said...

// தங்கமணி முழங்கையால் இடுப்பில் இடித்ததையும் //

உங்களை நினைச்சா ரொம்ப பாவமாகத்தான் இருக்குது அண்ணே... இடுப்புல எல்லாம் முழங்கையால் இடி வாங்கியிருக்கீங்க..

ஐயோ பாவம்..

இராகவன் நைஜிரியா said...

// இடிச்ச இடத்துலயே பொக்கு பொக்குன்னு இடி விழவும் கையை மறைவாக வைத்து உட்கார்ந்தேன்.//

இதை கற்பனைப் பண்ணி பார்த்தேன் அண்ணே... உடனே சிரிச்சுட்டேன்..

நீங்க இடி வாங்கியது கூட மத்தவங்களை சிரிக்க வைக்குதுன்னா...

அண்ணே... நீங்க ரொம்ப நல்லவர்.

இராகவன் நைஜிரியா said...

// அந்த இருட்டிலும் திரையை விட்டு கண்ணெடுக்காமல், எப்படித்தான் விலாவில் இடித்தாள் என்று எனக்கு இன்னும் பிடி படவில்லை. //

அதெல்லாம் பெண்களுக்கு உரிய திறமைங்க... நமக்கெல்லாம் என்றும் புரியாது

இராகவன் நைஜிரியா said...

// யானை அன்டர்வேர் போட்டுக் கொண்டு நடப்பது போல் எனக்கு கற்பனை விரிய மனுசன் சிரிக்காம இருக்க முடியுமா? //

கற்பனையின் உச்ச கட்டம்..

வானம்பாடிகள் said...

இராகவன் நைஜிரியா said...

/அது சரி விதி வலியது, கொடியது.. நீங்களே வாய் கொடுத்து மாட்டிகணும் அப்படின்னு விதி இருக்கும் போது யார் காப்பாத்த முடியும் சொல்லுங்க/

அது அது. பாம்பின் கால் பாம்பறியும்

வானம்பாடிகள் said...

இராகவன் நைஜிரியா said...

/ஒரு சிறிய மாறுதலுக்கே இப்படி எல்லாம் அழுதா எப்படி?/

நேத்து ஹெட்மாஸ்டர் வந்து கெள்றின்னு சொன்னத கெளரின்னு சொல்லிட்டேன்னு கலயாச்சாரு. இன்னைக்கு அஸிடெண்ட் எச்.எம் நீங்க=))

வானம்பாடிகள் said...

இராகவன் நைஜிரியா said...

/ஆஹா... வசமாகத்தான் மாட்டிடீங்க../

ஆமாண்ணே.

வானம்பாடிகள் said...

இராகவன் நைஜிரியா said...
/உங்களை நினைச்சா ரொம்ப பாவமாகத்தான் இருக்குது அண்ணே... இடுப்புல எல்லாம் முழங்கையால் இடி வாங்கியிருக்கீங்க..

ஐயோ பாவம்../

முதுகுல வாங்குறவங்கள நினைச்சி தேத்திகிட்டேண்ணே.

வானம்பாடிகள் said...

இராகவன் நைஜிரியா said...

/நீங்க இடி வாங்கியது கூட மத்தவங்களை சிரிக்க வைக்குதுன்னா...

அண்ணே... நீங்க ரொம்ப நல்லவர்./

நம்ம பிட்டு நம்மளுக்கேவா!

வானம்பாடிகள் said...

இராகவன் நைஜிரியா said...

/அதெல்லாம் பெண்களுக்கு உரிய திறமைங்க... நமக்கெல்லாம் என்றும் புரியாது/

நீங்களும் சேம் ப்ளட்டாண்ணே.

வானம்பாடிகள் said...

இராகவன் நைஜிரியா said...
/
கற்பனையின் உச்ச கட்டம்../

இல்லண்ணே ரெண்டு ஸ்டெப் முன்ன ரெண்டு ஸ்டெப் பின்னனு ஆடினப்ப சர்க்கஸ் யானை கவனம் வந்துச்சு.

கலகலப்ரியா said...

//வானம்பாடிகள் said...

கலகலப்ரியா said...

/=))..... Thankamani vs. Rangamani... super sir.../

நன்றியம்மா. லொல்ல பாரு//

compliment sir athu.. !

வானம்பாடிகள் said...

கலகலப்ரியா said...
/compliment sir athu.. !/

ஆ. போட்டு தாக்குறாளே. இது கூட புரியாமலா காமெடி பீசுன்னு இடுகை போட்டேன். அடிவாங்குனது நான். எனக்குதான் கப்புன்னு அண்ணன் சொன்னா மாதிரி ரங்கமணி Vs தங்கமணின்னு போடலன்னு சொன்னேன்.

aalaivasi said...

i could not control myself. i laughed aloud while reading. as it was 11. 30 p.m. i escaped from others noticing me.

வானம்பாடிகள் said...

aalaivasi said...

/i could not control myself. i laughed aloud while reading. as it was 11. 30 p.m. i escaped from others noticing me./

Welcome. =)).Thanks for the complement.

இப்படிக்கு நிஜாம்.., said...

அண்ணே! அல்லாரும் என்டிஆர் காருவை கடவுளாப் பாக்கும் போது நீங்க மட்டும் அவரு பல்செட் மேட்டர பாத்திருக்கீங்க. ரொம்ப நக்கல் தான் போங்க. அண்ணே! பாத்து இந்த இடுகைய அண்ணி படிச்சிறப் போறாங்க. அப்பறம்??? தெய்வம் தந்த வீடு வீதியிருக்கு... ஹாஹாஹா வரிக்கு வரி.‌

வானம்பாடிகள் said...

இப்படிக்கு நிஜாம்.., said...

/அண்ணே! பாத்து இந்த இடுகைய அண்ணி படிச்சிறப் போறாங்க. அப்பறம்??? தெய்வம் தந்த வீடு வீதியிருக்கு... ஹாஹாஹா வரிக்கு வரி.‌/

அவ்ளோ பொருமைல்லாம் கிடையாதுண்ணே. சேஃப்=))

துபாய் ராஜா said...

விடிய விடிய சாப்பிட,தூங்க நேரம் இல்லாம வேலை. அர்த்தராத்திரியில் அலுத்துப்போய் சரி கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணலாம்ன்னு உங்க பக்கம் வந்தேன்.

ஆரம்பம் முதல் இறுதிவரை பல இடங்களில் வாய்விட்டு சிரித்தேன். அலுப்பும், களைப்பும் ஓடிப்போய் உடலும், உள்ளமும் உற்சாகம் அடைந்தது. மிக்க நன்றி அய்யா.

இதுபோன்ற சொந்த நகைச்சுவை அனுபவங்களை எங்களோடு நிறைய பகிர்ந்து கொள்ளுங்கள். :))

துபாய் ராஜா said...

//திரையரங்குகளில் ஆங்கிலப் படங்களே ஓடியதாலும், அரை வாக்கியம் முழுதாய்ப் புரியாவிட்டாலும், சிரிப்பவர்களோடு சிரித்து, சீட்டியடிப்பவர்களோடு அடித்து ஒரு மார்க்கமாக ஆங்கிலப் படங்களின் ரசிகனானேன். //

நம்மாளுங்க நிறைய பேரு இந்த டெக்னிக்குதான் கடைப்பிடிக்கிறாங்க.
:))

துபாய் ராஜா said...

//என் நம்பிக்கையைத் தவிடு பொடியாக்குவது போல் படம் ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே என்.டி.ஆர் வசனம் பேசும்போது மேல் பல் செட் அவிழ்வதும், பொறையைக் கவ்விப்பிடிப்பது போல் அவ் என்று கவ்விக் கொண்டு அதே ஃப்ளோவில் அவர் வசனம் பேசுவதும் பார்த்ததும் சிரித்து விட்டேன்.

ஹக் என்ற சத்தத்தோடு என் சிரிப்பு நிற்கவும்தான் தங்கமணி முழங்கையால் இடுப்பில் இடித்ததையும் சுற்றி இருப்பவர்கள் ஏன் சிரிச்சான் லூசு என்று பார்ப்பதையும் உணர்ந்தேன். சின்னத்தம்பி கவுண்டர் மாதிரி சிரிக்கக் கூடாத இடத்தில் சிரிப்பதும் சிரிக்க வேண்டிய இடத்தில் சிரிக்காமலும் இருந்தேன். அப்புறம் காமெடி சீன் வர இன்னொரு இடி. எல்லாரும் சிரிக்கவும் நானும் சிரித்தேன். ஆஹா, இனிமேல் இடிச்சா சிரிக்கணும்னு இருக்க, இடிச்ச இடத்துலயே பொக்கு பொக்குன்னு இடி விழவும் கையை மறைவாக வைத்து உட்கார்ந்தேன்.

அந்த இருட்டிலும் திரையை விட்டு கண்ணெடுக்காமல், எப்படித்தான் விலாவில் இடித்தாள் என்று எனக்கு இன்னும் பிடி படவில்லை. ஒரு சீனில் ஸ்ரீதேவியை கொஞ்சிக் கொண்டு பேசும்போது மூன்றுமுறை பல்செட் அவிழ்ந்ததும், கவ்வியதும் அதைப் பார்த்து ஸ்ரீதேவியே சிரித்தது போல் தோன்ற அடக்க மாட்டாமல் சிரித்து விட்டேன்.

ஒரு பாடல் காட்சியில் மழையில் நனைந்த படி ஸ்ரீதேவியும் என்.டி. ஆரும் ஆட அந்தம்முணி ஆடினா மாதிரி அடுத்த வரியில் என்.டி. ஆர் சற்றே குனிந்த படி ஆடுவதை பின்புறம் காட்ட, யானை அன்டர்வேர் போட்டுக் கொண்டு நடப்பது போல் எனக்கு கற்பனை விரிய மனுசன் சிரிக்காம இருக்க முடியுமா?

இன்டர்வெலில் அத்தனை ரசிகர்களும் கொலை வெறியோடு என்னைப் பார்க்க, தங்கமணி கோபமாய் ஏன் சிரிச்சீங்க எனக் கேட்க சொல்லியே விட்டேன். வேணும்னுதான் பண்றீங்கன்னு சண்டைக்கு வரவும், இனிமே சினிமான்னு கேட்டா பாருங்கன்னு எகிறவும், என்.டி. ஆருக்கு தேங்க்ஸ் சொன்னேன். //

அருமையான ஃபுளோவுல அழகா சொல்லியிருக்கீங்க. ஹைதராபாத்ல
வேலைபார்க்கும்போது இந்த பாட்டை நிறைய தடவை டி.வி.ல பார்த்திருக்கேன். ரொம்ப காமெடியா இருக்கும்.

துபாய் ராஜா said...

//பிறகு வீட்டில், டி.வியில் சினிமா பார்க்கும் போது காமெடி சீன் வந்தால் பளார் பளார் என்று தொடை முதுகு என்று அறை கொடுத்தபடி தங்கமணி சிரிக்கவும் மெதுவாக சந்தேகம் வந்தது. அடிக்கிறதுக்கு சாக்குன்னு அடிக்கிறாளா, இல்லை ரசிக்கிற அழகா என்று. டிவி பார்க‌ற‌த‌ நிப்பாட்டிட்டு ப‌டிக்க‌ற‌ ப‌ழ‌க்க‌த்துக்கு எஸ்கேப் ஆயிட்டேன். //

எவ்வளவு நாள்தான் வலிக்காத மாதிரியே நடிக்கிறது.... :))

துபாய் ராஜா said...

//காமெடிக்கெல்லாம் ர‌சிச்சி அடிச்சி சிரிக்கிற‌ ஆளாச்சே. காமெடி பீஸ்னு நினைச்சு ஒரு முறை குமுத‌த்தில் ஒரு ஜோக் ப‌டிச்சிட்டிருக்கிற‌ப்ப‌ கூப்பிட்டு சொன்னேன். இங்க‌ பாரு, ஒருத்த‌ன் கேக்குறான், 2 டாக்ட‌ர் பார்த்து நான் பூட்ட‌ கேஸுனு சொல்லியும் நீங்க‌ ம‌ட்டும் எப்ப‌டி டாக்ட‌ர் வைத்திய‌ம் ப‌ண்றீங்க‌ன்னா, அவ‌ரு அவ‌ங்க ஹாஸ்பிட‌ல் க‌ட்ட‌ல‌யேங்குறாருன்னு சொல்லி சிரிச்சா, ம‌ர‌ம் மாதிரி நிக்குது.

என்னாம்மான்னேன். இதில‌ எங்க‌ ஜோக் இருக்குன்னுச்சி. கிட்ட‌த் த‌ட்ட‌ கோனார் நோட்ஸ் மாதிரி விள‌க்கியும், என்ன‌மோ என‌க்கு சிரிப்பு வ‌ர‌லைன்னு நொடிச்சிகிட்டு போனா என்ன‌ ப‌ண்ண‌? அப்புற‌ம் ஒரு இர‌ண்டு மூன்று முறை அரைநிமிட‌ ஜோக்குக்கு அரை ம‌ணி விள‌க்க‌ம்னு ஆக‌ இது எப்புடின்னு பிடிப‌ட‌வே இல்லை.

சும்மா சொல்ல‌க் கூடாது. கொஞ்ச‌மும் சிரிக்காம‌ த‌ங்க‌ம‌ணி சில‌ ச‌ம‌ய‌ம் போடுற‌பிட்டு இருக்கே. உல‌க‌ம‌கா காமெடிங்க‌.//

நீங்க ரொம்ப நல்லவர்ர்ர்ர்ர்ர்ர்ருருரு சார்.... :))

துபாய் ராஜா said...

//என‌க்கே பேர் த‌க‌றாரிருக்க‌, கோவில்ல‌ அர்ச்ச‌னைக்கு பேரு கேட்க‌, என் பேரு ம‌ற‌ந்து போய் ம‌க‌ள்ட‌ உங்க‌ப்பா பேரு சொல்லுடின்னு சொல்ல‌, அர்ச்ச‌க‌ர் சீரிய‌ஸா இந்த‌க் கால‌த்துல‌ புருச‌ன் பேரு சொல்ல‌மாட்டேன்னு இருக்கியேம்மா, க்ரேட்னு ச‌ர்டிஃபிகேட் கொடுத்த‌த‌ சொல்லுற‌தா?..//

கொடுமை, கொடுமைன்னு கோயிலுக்குப் போனா அங்க ரெண்டு கொடுமை குதிச்சு, குதிச்சு ஆடுச்சாம்ன்னு சொல்றது இதைத்தான் ..... :))

துபாய் ராஜா said...

//ஒக‌ன‌க்க‌ல் போய் ச‌றுக்கி விழுந்து கை ஃப்ரேக்ச‌ர் ஆகி டாக்ட‌ர் எங்க‌ம்மா எப்ப‌டி விழுந்தீங்க‌ன்னா ஒக‌ன‌க்க‌ல்ல‌ தொப்புன்னு ஊந்துட்டேன்னு சொன்ன‌த‌ கேட்டு அந்தாளு சிரிச்ச‌த‌ சொல்ற‌தா?//

ஆனாலும் இது ஓவருங்க.. நல்லவேளை அம்மா பயங்கர கடுப்பாகி இப்படித்தான் உடைஞ்சதுன்னு டாக்டர் கையை உடைக்காம இருந்தாங்களே.... :))

துபாய் ராஜா said...

//மின‌ர‌ல் வாட்ட‌ர் தீந்து போச்சின்னு க‌டைக்கார‌னுக்கு ஃபோன் ப‌ண்ணி அந்தாளு திங்க‌க் கிழ‌மை போடறேன்னு சொல்லிட்டு செவ்வாய்க் கிழ‌மை வ‌ர‌, என்ன‌ங்க‌ ம‌ண்ட‌ய‌ போட்டுடுவேன்னீங்க‌ன்னு சொல்ல‌ அந்தாளு அடுத்த‌ அடி வைக்காம‌ சிலையா நிக்க‌, இன்னைக்கு செவ்வாய்க் கிழ‌மை வ‌ந்தும் நான் சொல்ற‌ வ‌ரைக்கும் போட‌ல‌யேன்னு சொன்ன‌ப்புற‌ம் உசிர் வ‌ந்து ந‌ட‌ந்த‌த‌ சொல்ற‌தா?//

டென்சனாகி உங்க மண்டைல போடாமப் போனாரே..... :))

துபாய் ராஜா said...

//எப்புடியோ வடிவேலு ஜோக் மட்டும் சரியா புரிஞ்சிடும். டைமிங்கறது இதுதானோ?//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..... :))

துபாய் ராஜா said...

கண்ணைக் கட்டுகிறது. கழண்டுக்கிறேன்.

தொடரட்டும் நகைச்சுவைப் பதிவுகள்.

வாழ்த்துக்கள். வணக்கம்.

cheena (சீனா) said...

அன்பின் பாலா

அருமையான காமெடி இடுகை - யானைக்கு அண்டர்வேர் - அய்யோ அய்யோ - நெனெச்சிப் பாத்தேன் - சிரிச்ச சிரிப்புலே எங்க தங்க்ஸ் என்னாச்சு இவருக்குன்னு அடுப்படிலேந்து வந்து பாக்கறாங்க

ம்ம்ம்ம் - எழுத்துத் திறமை பளிச்சிடுகிறது'


நன்று நன்று நல்வாழ்த்துகள்

வானம்பாடிகள் said...

துபாய் ராஜா said...
/ஆரம்பம் முதல் இறுதிவரை பல இடங்களில் வாய்விட்டு சிரித்தேன். அலுப்பும், களைப்பும் ஓடிப்போய் உடலும், உள்ளமும் உற்சாகம் அடைந்தது. மிக்க நன்றி அய்யா.
/

ஆஹா. சந்தோஷமாயிருக்கு ராஜா.

/நம்மாளுங்க நிறைய பேரு இந்த டெக்னிக்குதான் கடைப்பிடிக்கிறாங்க.
:))/

பின்ன=))

/அருமையான ஃபுளோவுல அழகா சொல்லியிருக்கீங்க. /
நன்றி

/எவ்வளவு நாள்தான் வலிக்காத மாதிரியே நடிக்கிறது.... :))/

ஆஹா. இது நானும் நினைச்சேன். ஆனா வடிவேலு பீசாயிடுவேன்னு விட்டேன்.

/கொடுமை, கொடுமைன்னு கோயிலுக்குப் போனா அங்க ரெண்டு கொடுமை குதிச்சு, குதிச்சு ஆடுச்சாம்ன்னு சொல்றது இதைத்தான் ..... :))/

=))

/ஆனாலும் இது ஓவருங்க.. நல்லவேளை அம்மா பயங்கர கடுப்பாகி இப்படித்தான் உடைஞ்சதுன்னு டாக்டர் கையை உடைக்காம இருந்தாங்களே.... :))/

அய்யோ சாமி முடியல

/டென்சனாகி உங்க மண்டைல போடாமப் போனாரே..... :))/

=))

/கண்ணைக் கட்டுகிறது. கழண்டுக்கிறேன்.

தொடரட்டும் நகைச்சுவைப் பதிவுகள்.

வாழ்த்துக்கள். வணக்கம்/

நன்றிங்க. வணக்கம்,

வானம்பாடிகள் said...

cheena (சீனா) said...
/எங்க தங்க்ஸ் என்னாச்சு இவருக்குன்னு அடுப்படிலேந்து வந்து பாக்கறாங்க

ம்ம்ம்ம் - எழுத்துத் திறமை பளிச்சிடுகிறது'


நன்று நன்று நல்வாழ்த்துகள்/

நன்றிங்க=))

க.பாலாசி said...

//சும்மா சொல்ல‌க் கூடாது. கொஞ்ச‌மும் சிரிக்காம‌ த‌ங்க‌ம‌ணி சில‌ ச‌ம‌ய‌ம் போடுற‌பிட்டு இருக்கே. உல‌க‌ம‌கா காமெடிங்க‌.//

அப்ப உங்க ஃபேமலியே மசாலா ஃபேமிலின்னு சொல்லுங்க...ஆனாலும் நகைச்சுவைத்திறமைங்கறத ஆண்டவன் சிலபேருகிட்டத்தான் கொடுத்திருக்கான். அது உங்களுக்கும் உங்களவங்களுக்கும் வாய்ச்சிருக்கு....உங்க மூலமா எங்களுக்கும்....

புலவன் புலிகேசி said...

சூப்பரு...

வானம்பாடிகள் said...

க.பாலாசி said...

/நகைச்சுவைத்திறமைங்கறத ஆண்டவன் சிலபேருகிட்டத்தான் கொடுத்திருக்கான். அது உங்களுக்கும் உங்களவங்களுக்கும் வாய்ச்சிருக்கு....உங்க மூலமா எங்களுக்கும்..../

நன்றி பாலாசி

வானம்பாடிகள் said...

புலவன் புலிகேசி said...

/சூப்பரு.../

நன்றி.

சூர்யா ௧ண்ணன் said...

சனிக்கிழைமை மாலை முதல் பேய்மழை இங்கு அப்போ போன மின்சாரம் இப்பதான் வந்தது. இடையில் வந்த பொழுது ஓட்டு மட்டும் போட முடிந்தது. இப்பத்தான் படித்தேன்.

கலக்கலான சூப்பர் காமெடி தலைவா!

வானம்பாடிகள் said...

சூர்யா ௧ண்ணன் said...

/ கலக்கலான சூப்பர் காமெடி தலைவா!/

நன்றி தலைவா.

தியாவின் பேனா said...

ஆஹா
சிரிப்பு வருது

ஈ ரா said...

//வாக்கிங் போகலாம்னு ஒரு நாள் கூட்டிட்டு போனப்பதான் வாசல்லன்னா சினிமா, பீச் இத்யாதிங்கற ரகசியம் புரிஞ்சது.
//

//ஒக‌ன‌க்க‌ல்ல‌ தொப்புன்னு ஊந்துட்டேன்னு //

//ம‌ண்ட‌ய‌ போட்டுடுவேன்னீங்க‌ன்னு //

--) --) --)

செம டாப்பு

வானம்பாடிகள் said...

@@தியா

@@ ஈ.ரா

நன்றிங்க.