எனக்கு ரொம்ப வருசமா ஒரு வருத்தம். அரசு ஊழியனுக்கும் கரண்டு கம்பத்துக்கும் வித்தியாசமே இல்லாம பாக்குறாங்க. நம்ம சுஜாதா கூட மட்டமாத்தான் பேசிட்டாருன்னு அவரு மேல கோவிச்சிகிட்டு கொஞ்சநாள் அவரை ஓரம் கூட கட்டினதுண்டு. இப்புடியே உள்ளுக்குள்ளயே வெச்சி வெதும்பி வெதும்பி என்னா பண்ண? புரிய வைக்க வேணாமா?
அதும் ஆஃபீஸ் நேரத்துல உக்காந்து வேல பார்த்துகிட்டே மண்டைல கொஞ்ச ஓரம் டெடெகேடட் மெமரி யோசிக்க, கேப் கிடைக்கிற நேரத்துல ரெண்டு ரெண்டு வரியா தட்டி இடுகை போடுற நாம சொல்லாட்டி யாரு சொல்லுறதுன்னு ஒரு பொறுப்புணர்ச்சி இருக்கிறவன் சும்மா இருக்க முடியுமா?
அரசு ஊழியன்னா என்னமோ மத்த பேரு அலுவலகத்துக்கு சோத்து பையக் கொண்டு போறதாகவும் அரசு ஊழியர் சூட்கேஸ் கொண்டு போறதாகவும் தப்பான ஒரு அபிப்பிராயம் கொள்ள பேத்துக்கு இருக்குறது உண்மை. அதுக்கு அடிப்படைக் காரணம் அரசு ஊழியரோட அவங்களுக்கிருக்கிற தொடர்பு உண்டாக்குற மாயை.

ஒரு சர்டிபிகேட் வாங்கப் போனா அங்க இருக்கிற அரசு ஊழியர் காசு குடுத்தாத்தான் பண்றாரு. அதனால கிம்பளம் மிதமிஞ்சிப் போகுதுங்கற தப்பான அபிப்பிராயம் பரவிப்போச்சு.
அடுத்த முறை அரசு அலுவலகத்துல ஏதாவது வேலைன்னு போக நேர்ந்தா ஆபீசு உள்ள கொஞ்சம் பாருங்க. ஒரே ஒரு நாள் அந்த குப்பைக்கும், ஒட்டடைக்கும், மழையில நனைஞ்சி வெயில்ல காஞ்சி மொச நாத்தம் அடிக்கிற வாசனைக்குள்ள உக்காருவீங்களா?
தண்ணி குடிக்கலாம்னு போய் அங்க இருக்கிற கூலர் (அது கூட இருக்காது சில இடத்துல) அதப்பாருங்க. குடிச்சி உசிரோட இருக்க நம்பிக்கையிருக்கா? பன்னிக்காய்ச்சலோ, டெங்கோ, இன்னும் பேர் தெரியாத வியாதியோ அந்தத் தண்ணிய புடிச்சி குடிக்கிறானே அவன் மனுசனா, தேவனா?
மும்முரமா எழுதிட்டிருக்கிறவன் டேபிள்ள மூஸ் மூஸ் எச்சூஸ்மி. அந்தப்பக்கம் போய்க்கிறேன். சாரின்னு மொசக்குட்டி சைஸ்ல ஒரு பெருச்சாளி ஓடும் ஸார். ஹலோ! எங்க ரெண்டு நாளா காணோம்னு விசாரிக்கிற அளவுக்கு ஃப்ரெண்ட்ஸாயிருப்போம் சார். அதே டேபிள்ளதான், எலிக்காய்ச்சல் வந்துடுமோன்னு பயப்படாம, மதியம் கொண்டு போற தயிர்சாதம் தின்னுறது.
400 பேர் படம் பார்க்கிற தியேட்டர்ல இத்தனை யூரினல் இருக்கணும், இத்தனை டாய்லட் இருக்கணும். இந்த இடைவெளியில சுத்தம் பண்ணனும்னு ரூல் இருக்கு. அதப் பார்க்க ஆளிருக்கு. ஆனா 1000 பேர் இருக்கிற அரசு அலுவலகத்தில டாய்லட்ட போய் பாருங்க. 5 யூரினல் இருக்கும். 4 கக்கூசு இருக்கும். குழாய் இருக்காது. காலையில ஒரு வாட்டி மதியம் ஒரு வாட்டி கழுவி விடுவான். இவ்வளவு ஏன்? உலகத்துல வேற எங்கியாவது கக்குசுக்கு பூட்டு போட்டு பார்த்திருக்கீங்களா?
அரசு அலுவலகத்தில பார்க்கலாம். அதிகாரி மட்டும் பன்னீர் போவாரு. மத்தவங்க சிறுநீர் போவாங்கன்னு பூட்டி வெச்சிருக்கும் சார். பாதிக்கு மேல பெண்கள் வேலை செய்யிற இடத்திலையும் இதே நிலமைதான். வீடு வாங்குறீங்களே, அல்லது மனை வாங்குறீங்களே, வில்லங்கச் சான்றிதழ் வாங்குறீங்கல்ல?

நோவாம போய் படிவத்த நிரப்பிக் கொடுத்துட்டு,எப்போ தர்றியோ தான்னா வரீங்க. சொரண்டி, ஓரம் கட்டி ஒரு மணி நேரத்துல கிடைக்குமான்னு கேட்டு பேரம் பேசி 2 நாள்ளன்னு சொல்லிட்டான்னு வந்து திட்டுறீங்களே, அனியாயத்துக்கு லஞ்சம் பெருகிப் போச்சுன்னு.
எழுதித் தரேன். யாராவது வில்லங்கச் சான்றிதழ் படிச்சி பார்த்திங்களா ஐயா? மாட்டீங்க. ஆவணத்தைச் சுயமாக பரிசோதித்து நீங்களே உறுதிப் படுத்திகிட்டதா எழுதி இருக்கும் அதில. ஏன்? கேட்டுப் பாருங்க. இப்புடி இருக்கே. நானே பார்த்துக்கறேன்னு.

கொண்டுபோய் ரிகார்ட் ரூம்ல விடுவான். 3 மாசமானாலும் கண்டு பிடிக்க முடியாது உங்களுக்கு. ஒரு குண்டு பல்ப் வெளிச்சத்தில மலை மலையா குவிஞ்சிருக்கிற ரிகார்ட்ல உங்களோடது மட்டும் தேடி எடுக்க முடியாது உங்களால. அவன் உங்கள மாதிரி 100 பேருக்கு தேடணும் சார்.
மூச்சடைக்கும். ஆஸ்மா வந்தவன் மாதிரி விசிலடிக்கும். கை கால்லாம் தடி தடியா அலர்ஜி வரும். டாக்டர் கிட்ட போறதுன்னு முடிவெடுத்தா நீங்க குடுக்கிற காசில அவன் டாக்டர் கிட்ட போக முடியாது. அட மாத்திரை மருந்து சாப்பிட்டு நாளைக்கும் இதே தானேன்னு அந்த வேலையில இருக்கிறவன் தண்ணியடிச்சிட்டு போதையில மயங்குறதுக்கு பேரு தூக்கமுங்க.
சின்ன வயசில இருந்து புத்தகம் சரசுவதின்னு சொல்லி சொல்லி மனசுல பதிஞ்சி போய், அலுவலகத்துக்கு போனா உட்கார்ர சேர்ல ஒயர் பிஞ்சி தொங்கும். சரி பண்ண முடியாது சார். டெண்டர் விடணும். அது வரைக்கும் பழைய ரிஜிஸ்டர் போட்டு அதுமேல உட்கார்ரப்ப, எம்புள்ள படிப்புல கை வெச்சிறாத சரஸ்வதின்னு மனசு கெஞ்சும்.
பஸ் புடிச்சி, ரயில் புடிச்சி, ஆட்டோக்கு அழுது அட்டண்டென்ஸ் போயிடுமேன்னு ஓடி வருவான். ஒரு மேல் அதிகாரி எழுந்து வாய்ல ப்ரஷ் வெச்சிகிட்டு கக்கூசு போயிருக்காருன்னு வீட்டில இருந்து தகவல் வந்ததும் லிஃப்ட நிப்பாட்டி அவரு வராருன்னு போர்டு தொங்க விட்டுடுவான். கண்ணு தெரியாதவங்க, காலில்லாதவங்க எல்லாம் தடவி, தடுமாறி ஆறாவது மாடின்னாலும் ஏறிப்போவாங்க.
சாயந்திரம் 4.30 மணிக்கு கூப்பிட்டு, 20 வருஷத்துக்கு முன்னாடியில இருந்து முட்டைக்கு மசுரு புடுங்க எவ்வளவு செலவுன்னு மந்திரி கேட்டிருக்காரு. 20 நிமிஷத்தில என் டேபிள்ள தகவல் இருக்கணும்னு கேப்பாரு அதிகாரி.மனுசனால முடியுமாய்யான்னு கேக்க முடியாது.

எப்படி சார் 20 நிமிஷத்திலன்னு முனகுவான். உன்னால முடியும்யா. இல்லன்னா உன்ன ஏன் கேக்குறேன்னு சொல்ற அதிகாரின்னா 15 நிமிஷத்தில குடுப்பான். அவனுக்குத் தெரியும். இப்படி எழவெடுப்பானுங்கன்னு. கேக்குறானோ இல்லையோன்னு வித விதமா தகவல் வெச்சிருப்பான் சார்.
தொலைச்சிடுவேன், மந்திரி கேக்குறாருங்கறேன் முடியாதுன்னா சொல்ற? தண்ணியில்லாத காட்டுக்கு மாத்திடுவேன்னு எகிறுனா, நடுங்கிப் போயி வாடி உனக்கிருக்கு ஆப்புன்னு சாப்புடாம, தண்ணி குடிக்காம, அங்க இங்க நகராம, பார்த்துகிட்டு தான சார் இருக்கிங்க. பண்ணிகிட்டு தானே இருக்கேன். மந்திரத்தில வருமா. மந்திரி கேட்டதாச்சே சார். ஒரு சின்ன தப்பு வந்தா உங்க வேலைக்கே வேட்டாயிடும்னு தானே பண்றேன்னு விடிய விடிய சாவடிக்கவும் தெரியும் அவனுக்கு.
காலையில சீக்கிரம் வந்து புள்ளைங்க தூங்க வீட்டுக்கு போயி, சனி, ஞாயிறு அலுவலகத்தில சாவுற சதவீதம் அதிகம் ஸார். பொண்டாட்டிய ஆஸ்பத்திரில சேர்த்துட்டு ஆபீஸ் சாவி கையில இருக்கும்மா. குடுத்துட்டு வரேன்னு வந்தவன, அதக்கேட்டு இதக்கேட்டு அரை நாள் கழிச்சி அனுப்புவாங்க சார்.
வட்டிக்கு பணம் குடுக்குறது, சைட்ல கட கண்ணி வெச்சிருக்கறது, தவணையில ஜட்டியில இருந்து சகலமும் விக்கிற கும்பல் இருக்கத்தான் செய்யுது. அவனுக்கு தொழிற்சங்கம் துணை நிக்கும். இல்லைன்னா அதிகாரிக்கு கப்பம் கட்டுவான். அவனும் சின்ன சதவீதம்தான். அவன் வேலையும் சேர்த்து சம்பளத்துக்கு மட்டும் வேலை செய்யுற அரசு ஊழியர் அதிகம்.
இத்தனை கஷ்டமும் போறாதுன்னு அரைவேக்காட்டு அட்மினிஸ்ட்ரேட்டர ஏமாத்தி கூகிள் ரீடர்ல பின்னூட்டம் பார்க்குறதும், உணவு நேரத்துல சாப்பாட்டை விழுங்கியோ விழுங்காமலோ அதுக்கு பதில் போடுறதும், மத்தவங்க இடுகைக்கு ஓட்டு போடுறதும், பின்னூட்டம் போடுறதும், அலுவலக நேரத்துக்குள்ள இடுகை எழுதி வெச்சி, அலுவலக நேரம் முடிய அரை மணி முன்னாடி அனுமதிக்கிறப்ப பப்ளிஷ் பண்றதும் அரசு ஊழியனுக்கு சின்ன ரிலாக்சேஷன்.
சரி சரி, மணி அஞ்சாகப் போகுது. இப்போ இடுகை போட்டாதான், ஆபீஸ் முடிய முன்னாடி படிச்சி பார்த்து பின்னூட்டம் போடுவாங்க. வெள்ளிக்கிழமையாச்சா, இல்லாட்டி கறிக்கடை வாசல்ல எலும்பு துண்டுக்கு காத்து கிடக்கிற நாய் மாதிரி யாராவது பின்னூட்டம் போட்டாங்களா? ஓட்டு விழுந்துச்சான்னு (முக்கியமா மைனஸ் ஓட்டு) திங்கள் வரை பார்த்துகிட்டே இருக்கணும்.