Sunday, November 1, 2009

கடவுள் கைக்கூலியா?

கடந்த சில மாதங்களாக குஞ்சு குளுவான், கருவிலிருக்கிறது, நடக்க முடியாத வயோதிகர்கள், ஆவினம் என்று அழிக்கப் பட்ட போதே கடவுள் இருக்கிறாரா என்ற வேதனையுடன் கூடிய எரிச்சல் மிகுந்து என்னதான்யா பண்ற என்று திட்டி, அது சரியின் நான் கடவுள் இடுகை படித்து, நன்றாக வேண்டும் என்று சந்தோஷப்படும் மனநிலை வந்தது நிஜம்.

சென்ற வாரம் முதல் நடைபெறும் சில நிகழ்ச்சிகள், சரி கடவுளே நீ எங்களைக் காக்க வேண்டாம். சூடு சுரணை இருந்தால் உன் பெயரையாவது காப்பாற்றிக் கொள் என்று அவரையே வேண்டுமளவு பக்தனாக்கி விட்டது.

அறிவியலும் மத நம்பிக்கையும் எப்பொழுதும் இணை கோடுகளாகவே இருந்து வந்திருக்கிறது. ஆனாலும் இந்தியாவைப் பொறுத்த மட்டில் சந்திரனுக்கு விண்கலம் அனுப்புவது கூட சந்திர ஹோரை பார்த்துத் தான் என்பதும், பூஜை, ஹோமம் இத்யாதி  புண்ணாகுகளுக்கு பின் தான் என்பதும் தெளிவு.

ஆனால் ஒரு பதவி, அதுவும் தலைவர் பதவி முழுக்க முழுக்க தகுதி அடிப்படையில் மட்டுமே இருக்க வேண்டும் என்பது விதி. ஹி ஹி. வருடாந்தர ரகசிய அறிக்கையில் கடவுளுக்கு நேர்த்திக் கடன் இருக்கிறதா? எந்தக் கடவுள்? அவர் பவர்ஃபுல்லா என்றெல்லாம் பார்க்கிறார்கள் போல இப்போது.

அது அவர் தனிப்பட்ட மதச் சுதந்திரம் என்ற கருத்து முன்வைக்கப் படுமேயானால், பத்திரிகையில் விளம்பரமாக வந்திருக்க வேண்டுமே தவிர செய்தியாக இல்லை. பாருங்கள் படத்தை:‍‍‍‍

அடுத்ததாக இதுவும் பதவிக்காக கடவுள் வாங்கிய லஞ்சமா? காரியம் நடக்குமா? அட்வான்ஸா? நீங்கள்தான் சொல்லுங்களேன்.


இது மஹா கேவலம். ஒரு அடியாள் ரேஞ்சுக்கு, போன வருடம் வந்த போது வேண்டிக் கொண்டேன். நல்ல படியாக குழந்தை, குட்டி, கிழவன், கிழவி எல்லாரையும் போட்டுத் தள்ளியதோடல்லாமல், ஒரு புடுங்கியும் ஒன்னும் பண்ண முடியாமல் முடித்துக் கொடுத்தற்கு நேர்த்திக் கடன் என்று பேட்டி கொடுக்கும் பேயைப் பாருங்கள்.


இதெல்லாம் சகஜமப்பா என்கிறீர்களா? அப்படியானால் மீண்டும் படியுங்கள். உங்கள் வாழ்க்கை அரசியல் வாதியின் கையிலும் அரசு இயந்திரத்தின் கையிலும் நசுங்கும் கரும்புச் சக்கை. முதலாவது தன் திறமையின் மீது மட்டுமே நம்பிக்கையற்ற அரசு இயந்திரத்தின் பல்சக்கரம். இரண்டாவது தன் கட்சியையே சரிவர கட்டிக் காக்கத் தெரியாத அரசியல் வாதி செய்யும் பேரம். கடவுள் தரகனாகி விட்டான். ஆர்.டி.ஓ. ஆஃபீசில், மொபட்  மட்டுமே  ஓட்டத் தெரிந்த ஒருவனுக்கு கார் ஓட்ட அனுமதி பெற்றுத் தந்த தரகனுக்கு நிகராகி விட்டானா கடவுள்?

மூன்றாவது அரக்க நாய், கடவுளை ஒரு கூலிப்படைத் தலைவனாக்கி விட்டானே. கடவுளை அடையாளம் காட்டும் வேதம் சொல்கிறது,  ஹத்தி (கொல்வது) என்பது, ப்ரம்மஹத்தி (விமோசனமே இல்லை) என்னும் கருத்தரித்த பெண்ணை கருவோடு கொல்லுதல், சிசு ஹத்தி (கடினமான தண்டனைக்கானது) என்னும் குழந்தைக் கொலை, பசு ஹத்தி என்னும் மிருகக் கொலை போன்றவை மிகக் கடுமையான பாதகச் செயல்கள் என்று.

இது ஒன்றைக்கூட விடாமல் செய்த ஒரு பாவி அந்தக் கோவிலுக்கு வந்து நல்ல படியாக நடத்திக் கொடுத்த கடவுளுக்கு நன்றி சொல்கிறான் என்றால் கடவுளுக்கு கடவுளைக்காட்ட எந்த வேதம் இருக்கிறது?

கைக்குழந்தை சிறுநீர் கழித்து விட்டால் பரிகார பூசை என காசு பிடுங்கும் கோவில்களில் இத்தனை ஹத்தி செய்த புறம்போக்கு வந்து போன தோஷம் கழிய என்ன செய்யப் போகிறீர்கள். பரிகாரமே இல்லை என வேதம் சொன்ன ப்ரம்மஹத்திக்கு பை-லா எதாவது இருக்கிறதா?

மாற்று மதத்தினருக்கு அனுமதியில்லை என்று போர்ட் வைத்திருக்குமே அறநிலையத் துறை. பௌத்தனான மகிந்தா எப்படி ஐயா போனான். கூலிப் படைத் தலைவனுக்கு காசுதான் முக்கியமென்கிறானா? ஒன்னு பண்ணுங்கடே. கடவுளே காசு பார்க்கும் போது நீங்க பார்த்தா என்ன தப்பு? நெஞ்சு முட்ட நீங்க தின்னாலும் கொஞ்சமாவது மக்களுக்கு கிடைக்கும்.

1. மனித வள மேம்பாட்டுத் துறை, அந்தந்த தொழில் துறை,  சமயத் துறை கூட்டாக ப்ரமோஷன் நேர்த்தி பேக்கேஜ் வைக்கலாம். அரசுத் துறை ஊழியருக்கு கட்டணத்தில் தள்ளுபடி தரலாம். கிடைக்கும் வருமானத்தை அந்தந்த‌த் துறையின் அபிவிருத்திக்குப் பயன்படுத்தலாம்.  கூடுதல் வருவாய் கிடைப்பதால், குப்பன் சுப்பனின் கூலியில் வருமான வரி குறையலாம்..

2. வெளியுறவுத்துறை சமயத்துறையோடு கூட்டாக அயல் நாட்டு அதிபர்கள், ஆயுத வியாபாரிகள், போதைப் பொருள் விற்பவர்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லாமல் அவர்கள் நினைத்ததை முடிக்க நேர்த்தி பேக்கேஜ் அறிவிக்கலாம்.  அந்நியச் செலாவணி அபரிமிதமாக வருமாதலால், பொருளாதாரம் பிச்சிகிட்டு கிளம்பிடும்.

அவன் அவன் எடுக்குற முடிவு உனக்கு சாதகமாத்தாண்டா இருக்கு கடவுளே!

57 comments:

யூர்கன் க்ருகியர் said...

பக்கி ..செத்துருவான்னு நினைச்சேன் ..

பிரபாகர் said...

இருக்கும் கொஞ்ச நஞ்ச கடவுள் நம்பிக்கையும் இப்போ போயிடுச்சிங்கய்யா...

இயலாமையை எண்ணி மனம் வெதும்புகிறது, எல்லையில்லா கோபமுறுகிறது... வேறேண்ண செய்ய...

பிரபாகர்.

நாஞ்சில் பிரதாப் said...

இது ஒன்றைக்கூட விடாமல் செய்த ஒரு பாவி அந்தக் கோவிலுக்கு வந்து நல்ல படியாக நடத்திக் கொடுத்த கடவுளுக்கு நன்றி சொல்கிறான் என்றால் கடவுளுக்கு கடவுளைக்காட்ட எந்த வேதம் இருக்கிறது?//

சரியா சொன்னீங்க சார்.

//மாற்று மதத்தினருக்கு அனுமதியில்லை என்று போர்ட் வைத்திருக்குமே அறநிலையத் துறை. பௌத்தனான மகிந்தா எப்படி ஐயா போனான். கூலிப் படைத் தலைவனுக்கு காசுதான் முக்கியமென்கிறானா? ஒன்னு பண்ணுங்கடே. கடவுளே காசு பார்க்கும் போது நீங்க பார்த்தா என்ன தப்பு? நெஞ்சு முட்ட நீங்க தின்னாலும் கொஞ்சமாவது மக்களுக்கு கிடைக்கும்.//

நெத்தியடி...

நாகா said...

எத்தன பேரு இப்பவாவது கடவுள் கைக்கூலிதான்னு நம்புவாங்க? வேற மதம்னு சொல்றீங்களே, இன்னும் நம்ம ஊருல வேற சில சாதிக்காரங்கள கோயிலுக்குள்ள விடறதில்லையே? அப்புறம் என்னங்க மதம்? காசுதாங்க ஒலகத்துல சாமி.. காசு இருந்தா எல்லா சாமியும் வீடு தேடி தானா வரும்.. நடக்கற ஒவ்வொரு நிகழ்வையும் பாத்து அழுகையா வருது.. இனி எந்த சாமி வந்து இந்த சனங்களக் காப்பாத்தும்? எல்லாக் கல்லையும் சம்மட்டியால அடிச்சு ஒடைக்கணும்னு ஆத்திரம் வருது.. இப்பவும் சில பேரு வந்து வேதாந்தம் பேசுவாங்க - தர்மம் ஒரு நாள் வெல்லும்னு..

கோவி.கண்ணன் said...

//மாற்று மதத்தினருக்கு அனுமதியில்லை என்று போர்ட் வைத்திருக்குமே அறநிலையத் துறை. பௌத்தனான மகிந்தா எப்படி ஐயா போனான். கூலிப் படைத் தலைவனுக்கு காசுதான் முக்கியமென்கிறானா? ஒன்னு பண்ணுங்கடே. கடவுளே காசு பார்க்கும் போது நீங்க பார்த்தா என்ன தப்பு? நெஞ்சு முட்ட நீங்க தின்னாலும் கொஞ்சமாவது மக்களுக்கு கிடைக்கும்./

செருப்பால் அடிக்கும் கேள்விகள்.

மகிந்தாவை உள்ளே விடும் அதே ஓணான்கள் அவருடைய வெளிநாட்டுக் கூட்டணியில் உள்ள சோனியாவை வெள்ளைகாரி, மிசனரிகளில் கைக்கூலி என்று உள்ளே விடுவதில்லை. இங்கும் 'இந்து' அரசியல் போல

பின்னோக்கி said...

இல்லைங்க..இவங்க..கடவுள் தன்பக்கம்னு நினைச்சுக்கிட்டு இருக்காங்க..ஆனா அதுபோல கடவுளும் நினைக்கனும்ல.. நினைக்கமாட்டர் என நம்புகிறேன்

வானம்பாடிகள் said...

யூர்கன் க்ருகியர் said...

/பக்கி ..செத்துருவான்னு நினைச்சேன் ../

ம்ம்.

வானம்பாடிகள் said...

பிரபாகர் said...

/இருக்கும் கொஞ்ச நஞ்ச கடவுள் நம்பிக்கையும் இப்போ போயிடுச்சிங்கய்யா...

இயலாமையை எண்ணி மனம் வெதும்புகிறது, எல்லையில்லா கோபமுறுகிறது... வேறேண்ண செய்ய.../

ஆமாங்க.

வானம்பாடிகள் said...

நாஞ்சில் பிரதாப் said...

/சரியா சொன்னீங்க சார்./

/நெத்தியடி.../

நன்றி பிரதாப்.

வானம்பாடிகள் said...

நாகா said...

/இன்னும் நம்ம ஊருல வேற சில சாதிக்காரங்கள கோயிலுக்குள்ள விடறதில்லையே? அப்புறம் என்னங்க மதம்? காசுதாங்க ஒலகத்துல சாமி.. காசு இருந்தா எல்லா சாமியும் வீடு தேடி தானா வரும்.. நடக்கற ஒவ்வொரு நிகழ்வையும் பாத்து அழுகையா வருது.. இனி எந்த சாமி வந்து இந்த சனங்களக் காப்பாத்தும்? எல்லாக் கல்லையும் சம்மட்டியால அடிச்சு ஒடைக்கணும்னு ஆத்திரம் வருது.. இப்பவும் சில பேரு வந்து வேதாந்தம் பேசுவாங்க - தர்மம் ஒரு நாள் வெல்லும்னு../

புரிகிறது நண்பா.
அப்படியாவது இவர்கள் சொல்வதுதான் சரி என்பதற்காகவாவது தர்மம் வென்றாலும் போதும்.

இராகவன் நைஜிரியா said...

நீங்க சொன்ன மாதிரி இவங்க எல்லாம் கடவுளை இடைத் தரகனாக ஆக்க்கிவிட்டனர்.

இது எங்க போய் முடியும் என்றுத் தெரியவில்லை.

வானம்பாடிகள் said...

கோவி.கண்ணன் said...

/செருப்பால் அடிக்கும் கேள்விகள்.

மகிந்தாவை உள்ளே விடும் அதே ஓணான்கள் அவருடைய வெளிநாட்டுக் கூட்டணியில் உள்ள சோனியாவை வெள்ளைகாரி, மிசனரிகளில் கைக்கூலி என்று உள்ளே விடுவதில்லை. இங்கும் 'இந்து' அரசியல் போல/

வாங்க கோவி. ஆமாம். இதிலும் ஏதாவது பை-லா, சப்-லா சொல்லுவானுங்க. நன்றிங்க வரவுக்கும் பின்னூட்டத்திற்கும்.

இராகவன் நைஜிரியா said...

தமிழ் மணம் லொள்ளு பண்ணுது. அப்பாலிக்கா ஓட்டு போட்டுவிடுகின்றேன்

வானம்பாடிகள் said...

பின்னோக்கி said...

/இல்லைங்க..இவங்க..கடவுள் தன்பக்கம்னு நினைச்சுக்கிட்டு இருக்காங்க..ஆனா அதுபோல கடவுளும் நினைக்கனும்ல.. நினைக்கமாட்டர் என நம்புகிறேன்/

நாம நம்பலாமுங்க. நம்பிட்டுதான் இருந்தோம். ஏதாவது நடக்காதா. இத்தனை உயிர் போகுதேன்னு. நடக்கலை. போயிடுச்சு. இவ்வளவு கொடுமை பண்றானே. இவனை யாருமே கேக்காமலா போய்டுவானுங்கன்னு நம்பினோம். கேக்கலை. மிச்சம் மீதியாவது நல்லா இருக்கணுமேன்னு நம்புவதைத் தவிர வேறு வழியில்லை. அது நடப்பதற்கு இவர்கள் மிஞ்சவேண்டும்.

நன்றிங்க கருத்துக்கு.

வானம்பாடிகள் said...

இராகவன் நைஜிரியா said...

/தமிழ் மணம் லொள்ளு பண்ணுது. அப்பாலிக்கா ஓட்டு போட்டுவிடுகின்றேன்/

வாங்கண்ணே. :)

வானம்பாடிகள் said...

இராகவன் நைஜிரியா said...

/நீங்க சொன்ன மாதிரி இவங்க எல்லாம் கடவுளை இடைத் தரகனாக ஆக்க்கிவிட்டனர்.

இது எங்க போய் முடியும் என்றுத் தெரியவில்லை./

நம்ம தலையிலதான்.:))

அன்புடன் மலிக்கா said...

சத்தியம் நிச்சயம் வெல்லும்.
நல்ல பகிர்வு....

S.A. நவாஸுதீன் said...

அதிரடியான பதிவு சார்.

புலவன் புலிகேசி said...

அருமை ஐயா...சமீபத்தில் காஞ்சிபுரத்தில் ஒரு புரோகிதர் கோவிலில் செய்த லீலைகளை நக்கீரனில் படித்தேன்..அதைப் பார்த்துக்கொண்டிருப்பது தான் கடவுளா??? என்னக் கடவுளோ???

கதிர் - ஈரோடு said...

நெருப்புக்கு நிகரான வரிகள்

எனக்கு கடவுள் நம்பிக்கை பெரிதாக கிடையாது... ஆனாலும் எப்போதாவது நான் செல்லும் கோவில் திருப்பதி, மிக முக்கியக் காரணம் அந்த சூழல், அது மிக மிக பிடித்த ஒன்று....

அந்த நாய் சொகுசாக வந்து போன திருப்பதியை நினைக்கையில் அப்படியே நெஞ்சு பதறுகிறது....

நான் தெரிந்தோ தெரியாமலோ வணங்கிய அந்த சாமி மீது கோபம், வெறுப்பு வருகிறது...

எப்படி அந்தக் கொலைகாரன் சிரித்துக் கொண்டே வந்து போகிறான், நாமெல்லாம் அதை டிவியில் பார்த்து புலம்பும் நிலையில் இருக்கிறோம்... என்ன தான் முடிவு...

வானம்பாடிகள் said...

அன்புடன் மலிக்கா said...

/ சத்தியம் நிச்சயம் வெல்லும்.
நல்ல பகிர்வு..../

நன்றிங்க.

வானம்பாடிகள் said...

S.A. நவாஸுதீன் said...

/அதிரடியான பதிவு சார்./

மனக்குமுறல் நவாஸுதீன். வேறென்ன சொல்ல.

வானம்பாடிகள் said...

புலவன் புலிகேசி said...

/அருமை ஐயா...சமீபத்தில் காஞ்சிபுரத்தில் ஒரு புரோகிதர் கோவிலில் செய்த லீலைகளை நக்கீரனில் படித்தேன்..அதைப் பார்த்துக்கொண்டிருப்பது தான் கடவுளா??? என்னக் கடவுளோ???/

ஆமாங்க அதுக்கும் புலம்பிட்டேனே.:)

வானம்பாடிகள் said...

கதிர் - ஈரோடு said...

/நெருப்புக்கு நிகரான வரிகள்/

நன்றி கதிர்.

கூட இருக்கிற பரதேசிங்க முகத்துல என்னமோ கடவுளே வந்தா மாதிரி இருக்கே தவிர ஒரு இனப்படுகொலையின் நாயகன் என்ற வெறுப்பில்லையே. சை.

தீப்பெட்டி said...

//மகிந்தாவை உள்ளே விடும் அதே ஓணான்கள் அவருடைய வெளிநாட்டுக் கூட்டணியில் உள்ள சோனியாவை வெள்ளைகாரி, மிசனரிகளில் கைக்கூலி என்று உள்ளே விடுவதில்லை.//

இதைக்கூட இங்கிருக்கும் காங்கிரஸார் கேட்பதிலையே.. பத்திரிக்கைகள், இந்துத்துவ உயர் அமைப்புகள் எதும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை..

:(

எல்லா தரப்புகளும் தமிழனுக்கு எதிராகவே இருக்கின்றன..

நெத்தியடி முஹம்மத் said...

கடவுள் நம்பிக்கை கொண்டோரில் நல்லோர்-தீயோர் இருவரும் உண்டு. கடவுள் நம்பிக்கை கொண்ட தீயோர், இவ்வுலகில், நன்றாக வாழ்ந்தால், கடவுள் நம்பிக்கை கொண்ட நல்லோருக்கு தங்கள் கடவுள் மேல் ஆற்றாமையும், மனக்குமுறலும், அவநம்பிக்கையும் வருகின்றது-முஸ்லிம்களை தவிர! இது ஏன்? இங்குதான் நாம் சற்று ஆழமாய் சிந்திக்க வேண்டும். இஸ்லாமிய நம்பிக்கைப்படி, இவ்வுலகில் தீயோருக்கு எந்த தண்டனையும் இல்லை. எல்லாமே மறு உலகில் தான். அவரவர் செயல்களுக்கு ஏற்ப சொர்க்கம்/நரகம் உண்டு. தீயோருக்கு நரக வேதனையும் நல்லோருக்கு சொர்க்க இன்பமும் நிச்சயம். 'இவ்வுலகம் மட்டுமே உண்மை' -'மறுமை கிடையாது' என்று நம்பும் கடவுள் நம்பிக்கை அற்றவர்களுக்கு இதெல்லாமே கேலியாகவும் 'கடவுள் இல்லை' என்ற தன் கருத்தை உறுதி செய்யும் ஆதாரமாகவுமே அமையும். இதுவும் இயல்பே. ஆலயத்துக்குள்ளே மட்டுமே கடவுள் சக்தி பெற்றவர் என்று நினைக்கும் கடவுள் நம்பிக்கையும் கேலிக்கூத்து. நன்றி.

T.V.Radhakrishnan said...

நல்ல பகிர்வு....

[ஞானப்]-[பி]-[த்]-[த]-[ன்] said...

-:)

துபாய் ராஜா said...

நியாயமான அறச்சீற்றம்...

நெஞ்சு பொறுக்குதில்லை
இந்த நீதி மறந்த
கடவுளரை நினைந்துவிட்டால்....

பழமைபேசி said...

கடவுளுக்குக் கண்ணில்லை!

வானம்பாடிகள் said...

தீப்பெட்டி said...
/எல்லா தரப்புகளும் தமிழனுக்கு எதிராகவே இருக்கின்றன../

ம்ம்

வானம்பாடிகள் said...

நெத்தியடி முஹம்மத் said...
கருத்துக்கு நன்றிங்க முஹம்மத்.

வானம்பாடிகள் said...

T.V.Radhakrishnan said...

/நல்ல பகிர்வு..../

நன்றிங்க.

வானம்பாடிகள் said...

[ஞானப்]-[பி]-[த்]-[த]-[ன்] said...

-:)

முதல் வரவுக்கு நன்றி.

வானம்பாடிகள் said...

துபாய் ராஜா said...

/நியாயமான அறச்சீற்றம்...

நெஞ்சு பொறுக்குதில்லை
இந்த நீதி மறந்த
கடவுளரை நினைந்துவிட்டால்..../

நன்றி ராஜா.

வானம்பாடிகள் said...

பழமைபேசி said...

/கடவுளுக்குக் கண்ணில்லை!/

மனுசனுக்கு மனசுமில்ல்லை.:(

கலகலப்ரியா said...

shiraanthi nallaa pose kodukkuthu...!

வானம்பாடிகள் said...

கலகலப்ரியா said...

/shiraanthi nallaa pose kodukkuthu...!/

:)). வாலு. ஜோக் அடிக்கிறியா. அவ்வ்வ்.

கலகலப்ரியா said...

//கடவுள் கைக்கூலியா?//

பிரகாஷ்ராஜ் கிட்ட கேக்கலாம்..

வானம்பாடிகள் said...

கலகலப்ரியா said...

/பிரகாஷ்ராஜ் கிட்ட கேக்கலாம்..//

நல்ல ஐடியாதான். கருத்துபூர்வமா, நேர்மையா பேசுற மனுஷன். விளக்கம் கிடைக்கலாம்.

கலகலப்ரியா said...

//
நல்ல ஐடியாதான். கருத்துபூர்வமா, நேர்மையா பேசுற மனுஷன்//

அப்டியா... நான் அவர்தான் கடவுள்ன்னு நினைச்சுக்கிட்டிருக்கேன்.. இது என்ன கன்பீசன் சார்..

வானம்பாடிகள் said...

கலகலப்ரியா said...

/அப்டியா... நான் அவர்தான் கடவுள்ன்னு நினைச்சுக்கிட்டிருக்கேன்.. இது என்ன கன்பீசன் சார்../

இப்போதைக்கு மனுசன் யாராவது இருப்பானான்னு தேடுறேனம்மா. கடவுள் எல்லாம் நமக்கு பதில் சொல்லுவாரான்னு டவுட்.

பிரியமுடன்...வசந்த் said...

:(

வானம்பாடிகள் said...

பிரியமுடன்...வசந்த் said...

/:(/

ம்ம்.

பழமைபேசி said...

//வானம்பாடிகள் Says:
November 2, 2009 12:29 AM
பிரியமுடன்...வசந்த் said...

/:(/

ம்ம்.
//

.க்கும்!

வானம்பாடிகள் said...

பழமைபேசி said...
//:(/

ம்ம்.
//

.க்கும்!/

.ம்கூம்!:))

தமிழ் நாடன் said...

உங்களின் ஆதங்கம் புரிகிறது!
மீன் விற்ற காசு நாறவா போகிறது? கொன்றால் பாவம் தின்றால் போச்சு!
மக்கள்தான் சிந்திக்க வேண்டும்! ஆனால் அவர்களை சிந்திக்கவே விடாமல் செயவதற்கு என்னவெல்லாம் உண்டோ அவ்வளவையும் செய்கிறான் அரசியல்வாதி!
என்னக்குத்தான் நம் மக்களுக்கு சொரணை வருகிறதோ பார்க்கலாம்!பார்ப்பதற்கு நாமிருந்தால்!

வானம்பாடிகள் said...

தமிழ் நாடன் said...

/உங்களின் ஆதங்கம் புரிகிறது!
அவர்களை சிந்திக்கவே விடாமல் செயவதற்கு என்னவெல்லாம் உண்டோ அவ்வளவையும் செய்கிறான் அரசியல்வாதி! /

ஆமாங்க.

ஜோதிஜி. தேவியர் இல்லம். said...

அப்படியானால் மீண்டும் படியுங்கள். உங்கள் வாழ்க்கை அரசியல் வாதியின் கையிலும் அரசு இயந்திரத்தின் கையிலும் நசுங்கும் கரும்புச் சக்கை. முதலாவது தன் திறமையின் மீது மட்டுமே நம்பிக்கையற்ற அரசு இயந்திரத்தின் பல்சக்கரம். இரண்டாவது தன் கட்சியையே சரிவர கட்டிக் காக்கத் தெரியாத அரசியல் வாதி செய்யும் பேரம்.//

ஒவ்வொரு முறையும் அடுச்சு ஆடுங்க என்று சொல்லும் போதெல்லாம் நான் படித்தவுடன் மனம் விட்டு சிரித்து விடுவதுண்டு.

ஆனால் இந்த வரிகளை இன்னும் பல மாதங்களுக்கு மனதிற்குள் சிந்தனைகளை கிளறிக்கொண்டே இருக்கும்.

ஏன் எல்லோருக்கும் இத்தனை கோபம். ஏன் எனக்கே படத்தை பார்த்ததும் பல மணி நேரம் உணர்ச்சி பெருவாகமாகத்தான் இருந்தது. ஆனால் மொத்தமாய் யோசித்துப் பார்க்கும் போது?

1. இந்து மதம் என்பதும் அதனை காத்துக்கொண்டுருக்கும் அமைப்புகள் என்பது உண்மையிலேயே தன்னுடைய கடமைகளை சரிவர செய்கிறதா?

2. கோவில் என்பது புனிதம் என்ற வார்த்தைகளுக்குள் அடங்கி இருக்கிறதா?

3. புனிதம் மட்டும் எங்கள் வாழ்க்கை என்று "உயர்சக்தி" அருகில் இருப்பவர்கள் அதற்கு தகுதியானவர்கள் தானா?

4. அரசாங்கம் என்பதன் கைக்கு போனால் மதம் சார்ந்த விசயங்கள் எவ்வாறு மாற்றம் பெறும்?

5. பாதுகாப்பு படையினருடன் யாரையும் அனுமதிக்காகத "சாஸ்திரம்" என்பது வளைக்கப்படுகிறது என்றால் "வர்ணாசிரமம்" தத்துவங்கள் இன்று வரையிலும் வாழ்ந்து கொண்டுருக்கிறதா?

6. சூழல் மட்டும், தெய்வம் மட்டும், அந்த கோவில் மட்டும் என்று பிடிக்கும் என்ற வார்த்தைகள் கொண்டு போய் சேர்க்கும் அத்தனை பேர்களும் கட உள் என்பதை உணர்ந்தவர்களா?

7. நெரிசலும், பணமும், பகட்டும் ஒவ்வொரு மாதமும் வருடமும் மூச்சு திணற வைத்துக்கொண்டுருப்பது அங்கு இருக்கும் அந்த தெய்வம் விரும்புகிறதா? ஏன் செயல்பாட்டில் இறங்க மாட்டேன் என்கிறது என்று கதறும் மனம் அத்தனையும்?

எந்த தெய்வமும் பலி கேட்கவில்லை. கூலி கேட்கவில்லை. தண்டணை தருவேன் என்று பயமுறுத்தியதும் இல்லை.

அதனால் தான் சுருக்கமாக "கற்பித்தவன் அயோக்கியன்" என்று துப்புவது போல் சொல்லிவிட்டு போய்விட்டார்.

பண்டாரம் முதல் ஒத்தைக்கண் பெண்மணி வரைக்கும் வாழும் போதே அதற்கான கூலியை பெற்று விட்டனர். இவருக்கும் சற்று தாமதம் ஆகும். ஆனால் இது மதம் ஆகாது.

அது தான் நம்பிக்கையாளர்களுக்கும் நம்பாதவர்களுக்கும் இது விவாத பொருள்.

உங்கள் கைக்குள் வாழ்க்கை முழுவதும் என்ன செய்து சேமித்து வைத்து இருக்கிறீர்களோ அதற்கான கூலி வாழும் போது கிடைக்கும் அல்லது இறக்கும் தருவாயில் கிடைக்கும். இதிலும் தப்பி விட்டால் உங்கள் வழித்தோன்றல்கள் கணக்கு சரிசெய்து மூன்றாவது தலைமுறை என்பது நிர்மூலமாகும் போது வாழ்பவர்களுக்கு, பார்த்தவர்களுக்கு புரிய வைக்கும். அது தான் கைக்கூலி?

நிறைய யோசிக்க வைத்துக்கொண்டுருக்கும் உங்கள் எழுத்துக்கள் & உங்களின் மின் அஞ்சல் முகவரி ஒரு முறை கூட வரமாட்டேன் என்கிறது. சோதனை முயற்சியை அனுப்பவும்.

texlords@gmail.com

வானம்பாடிகள் said...

ஜோதிஜி. தேவியர் இல்லம். said.
/நிறைய யோசிக்க வைத்துக்கொண்டுருக்கும் உங்கள் எழுத்துக்கள் & உங்களின் மின் அஞ்சல் முகவரி ஒரு முறை கூட வரமாட்டேன் என்கிறது. சோதனை முயற்சியை அனுப்பவும்./

நன்றிங்க. அனுப்பியிருக்கிறேன்.

ஈ ரா said...

அதற்காக கோடிக்கணக்கான பக்தர்களின் மனதைக் காயப்படுத்துவது தவறு என்றே நினைக்கிறேன்..

வானம்பாடிகள் said...

ஈ ரா said...

/அதற்காக கோடிக்கணக்கான பக்தர்களின் மனதைக் காயப்படுத்துவது தவறு என்றே நினைக்கிறேன்../

புரியவில்லை ஈ.ரா. எது காயப் படுத்துமென்று கருதுகிறீர்கள்.
/சரி கடவுளே நீ எங்களைக் காக்க வேண்டாம். சூடு சுரணை இருந்தால் உன் பெயரையாவது காப்பாற்றிக் கொள் என்று அவரையே வேண்டுமளவு பக்தனாக்கி விட்டது./

இது காயப் படுத்த நியாயமில்லை. இது இயலாமையின் உச்சகட்ட வெளிப்பாடு என்பது தெளிவு.

பல லட்சம் அப்பாவி மக்களை, குழந்தைகளைக் கொன்று இந்த வெற்றிக்கு கடவுள் காரணம். அதற்கு நன்றி செலுத்த வந்தேன் என்று கூறுவது காயப் படுத்தாது எனில் வேறெதுவும் காயப் படுத்த நியாயமில்லை.

கடனை உடனை வாங்கி நேர்த்திக் கடன் என்று கோவிலுக்குப் போகும் பக்தனின் கைக் குழந்தை இயற்கை நியதிக்குட்பட்டு மலம் கழித்தாலோ, சிறுநீர் கழித்தாலோ, திரும்ப ஊருக்குப் போக காசிருக்கிறதோ இல்லையோ, பரிகாரத்துக்கு பணம் பிடுங்கும் செயல் காயப் படுத்தாதா? கடவுளா கேட்டார்?

நீங்கள் யாருக்கோ உதவும் நிலையில் இருக்கிறீர்கள். உதவி கோருபவர், தன் நிலை கூறி உதவுங்கள் எனக் கேட்பதில் தவறே இல்லை. கண்டுக்கறேன் நீ கண்டுக்கோ என்றாலோ, யெல்ப் பண்ணதுக்கு டாங்க்ஸ்பா என்று லஞ்சம் கொடுத்தாலோ காயப் படுவது யார்?

நன்றி.

ஈ ரா said...

எனது முந்திய பின்னூட்டம் முழுவதுமாக வரவில்லையே? நான் கூகுளில் இருந்து காப்பி பேஸ்ட் செய்ததில் ஏதாவது கோளாரா அல்லது வேறு எவருக்கேனும் அந்த பின்னூட்டம் போய்விட்டதா என்று தெரியவில்லை....மன்னிக்கவும்..

மீண்டும் ஓரளவிற்கு அதையே திரும்ப அனுப்புகிறேன்..

ராஜ பக்ஷே விஷயத்தில் எனக்கு இருவேறு கருத்து இல்லை.. அந்த ஆளுக்கே கூசி இருக்க வேண்டும் அல்லது இங்கு உள்ளவர்களுக்காவது கொஞ்சம் மனசாட்சி இருக்க வேண்டும்.

கோவிலுக்குள் நுழைந்து திருடன் சாமி சிலையை தூக்கிச் சென்று காசு பார்ப்பதால் கடவுள் நம்பிக்கை சிதைந்துவிடாது..

கடவுள் நம்பிக்கையும், சடங்குகளும் அவரவர் நம்பிக்கை..

//பூஜை, ஹோமம் இத்யாதி புண்ணாகுகளுக்கு பின் தான் என்பதும் தெளிவு. //

இந்த வரிகளுக்காகததான் நான் அவ்வாறு கூறி இருந்தேன்.

அப்துல் கலாம் சமீபத்தில் நடிகர் விவேக்கிடம் (தலைவிதி) கொடுத்த பேட்டியில் தனது பணியில் நடந்த சுவாரசியமான சம்பவம் என்று எதைக்கூரினார் தெரியுமா ? ஏவுகனை சோதனைக்கு முன் அவரது அறையில், மாதவன் அவர்கள் பகவத் கீதையும், கலாம் அவர்கள் குரானையும், இன்னொரு சீக்கிய முக்ய விஞானி (பெயர் தெரியவில்லை, மன்னிக்கவும் ) குரு கீதையயயும் சொல்லி மனதை ஒருமுகப்படுத்தி பிரார்த்தனை செய்தார்களாம்...இது போன்ற விஷயங்களில் தவறு இருப்பதாக நான் நினைக்கவில்லை..

எல்லோரையும் நேசிக்கும் ஆன்மீகமும், நேர்மையான பகுத்தறிவும் என்றும் சோடை போனதில்லை.

மற்றபடி தங்கள் எழுத்துக்களை மறுப்பதற்காக நான் பின்னூட்டம் இடவில்லை. (ஐயா நான் உங்கள் ரசிகன் )

பேநா மூடி said...

எப்போதுமே கடவுள் என்னும் பாத்திரம் காசு வங்கி கொண்டு வேலை செய்யும் கூலியாக தான் மக்கள் மனதில் பதிந்துள்ளது என்பது என்னுடைய கருத்து.........

வானம்பாடிகள் said...

ஈ ரா said...
/மற்றபடி தங்கள் எழுத்துக்களை மறுப்பதற்காக நான் பின்னூட்டம் இடவில்லை. (ஐயா நான் உங்கள் ரசிகன் )/

இது ஆரோக்கியமானதல்ல ஈ.ரா. விவாதம் மறுப்பில்லை. கென்னடி பற்றி அறிந்திருப்பீர்கள். போப்பைப் பார்க்கச் சென்றபோது அவரை வணங்கவில்லை, கிருத்துவராக இருந்தும். தாய்நாட்டில் வந்திறங்கியதும் வந்து விழுந்த கேள்விக் கணைகளுக்கு பதில் இது. நான் அமெரிக்க ஜனாதிபதியாகப் போனேன். பல்வேறு மொழி, மத, இனக் காரர்களின் ஜனாதிபதியாகப் போனபோது என் மதக் கோட்பாடு மற்றவர்களின் மத நம்பிக்கைக்கு எதிராக அமைவதை நான் விரும்பவில்லை என்பது.

வெறும் குர்ரான், பைபிள், கீதை அல்லது ஏதோ ஒரு மதத்தைச் சார்ந்தவர்களின் ப்ரதிநிதிகளல்ல விஞ்ஞானிகள். நான் சொல்ல வந்தது சந்திரன் ஒரு தேவன் என இந்துமதம் நம்புவதை மதிக்கும் பட்சத்தில் சந்திரனின் இறங்க ராக்கெட் அனுப்பும் விஞ்ஞானி இரண்டையும் நம்புகிறேன் என்பது சரியா?

விஞ்ஞானம் வேறு எனும் பட்சத்தில் மத நம்பிக்கையற்றவர்களுக்காகவும் பணிபுரியும் ஒரு நபர் தனியாக ஒரு மதமின்றி பல மதச் சடங்குகளையும் செய்வதால் மட்டும் சரியாகாது. எந்த மதமும் இதை எதிர்பார்க்கவுமில்லை என்பது என் கருத்து. நல்ல விவாதத்துக்கு வழி கொடுத்தமைக்கு நன்றி ஈ.ரா.

வானம்பாடிகள் said...

பேநா மூடி said...

/எப்போதுமே கடவுள் என்னும் பாத்திரம் காசு வங்கி கொண்டு வேலை செய்யும் கூலியாக தான் மக்கள் மனதில் பதிந்துள்ளது என்பது என்னுடைய கருத்து........./

ஆமாங்க. முதல் வரவுக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.

அருண்முல்லை said...

நாய் விளக்குக் கம்பதைப் பார்த்தால்
காலைத்தூக்கி ஒண்ணுக்குப்போகும்.
அது கோவிலுக்குள் சாமியைப்
பார்த்தாலும் அதைத்தான் செய்யும்.