Sunday, August 30, 2009

வெற்றிடம்.

காலை எழுந்திருக்கும் போதே மனது சரியில்லை.
குடித்த தேநீர் சூடில்லை.
பத்திரிகை வரவில்லை
குளிக்கையில் பாதியில் நீரில்லை.
நேரமானதில் காலை உணவில்லை.
அவசரத்தில் கைபேசி எடுக்கவில்லை.
புகுந்து போகவில்லையென ஆட்டோக்காரன் ஏசியது உறைக்கவில்லை.
அலுவலகத்தில் சொன்ன காலை வணக்கத்தில் உற்சாகமில்லை.
வலைத் தொடர்பில்லாததால் வேலையில்லை.
வேலை சேருமே என்ற பதைப்பில் பொறுமையில்லை.
நைந்த மனதில் மதிய உணவும் செல்லவில்லை.
கொடுத்த ஆணையை மறந்து எகிறும் அதிகாரியை எதிர்க்கத் துணிவில்லை.
முடியாத இலக்கை நிர்ணயிக்கும்போது பொங்க முடியவில்லை.
அவசரப் பணி இருந்தும் ஐந்து நாள் விடுமுறை கேட்பவனை அறையவில்லை.
களைத்துச் சலித்து வீடு திரும்புகையில் உட்கார இடமில்லை.
மௌனமாய் உணவுண்டு கண்மூடித் துயில முயல்கையில் நித்திரை வரவில்லை.

மனது கேட்கிறது!
எத்தனை முறை இப்படி இருந்திருக்கிறேன்?
சுயநல உலகில்
பர்கின்ஸன்ஸால் நினைவழிந்து
கடந்தகாலத்துக்கும் நிகழ்காலத்துக்கும்
ஊசலாடிய உணர்விலும் கூட‌
கடந்து போகையில் கை பிடித்து
தவறாமல் என் வலியுணர்ந்து
ஏனடா? ஏதோ மாதிரி இருக்கிறாய்
என்று கேள்வியடுக்கிய என் அம்மாவுக்கு
சலிப்பாய் சொன்ன பதில் எல்லாம்
தெரிந்து என்ன செய்யப் போகிறாய்? தூங்கு என்பதுதான்.

பாவி மனது இப்போது பரிதவிக்கிறது
ஒன்றும் சொல்லாமல்
மூப்பும் நோவும்
மருந்தும்,அம்மாவுமாய்
கலவையான‌ வாசனையில்
அவள் மடி புதைந்து
மீண்டும் குழந்தையாக
வழியிருந்தபோது தொலைத்த நாட்கள்!

அம்மா இல்லை!
ஆறுதல் இல்லை
தொலைத்த வலியோ
தொலையவில்லை!
_________________________________

46 comments:

கயல் said...

அருமை!

kavi said...

sema super a irukku, touching

வானம்பாடிகள் said...

கயல் said...

/அருமை!/

நன்றிங்க சகோதரி.

வானம்பாடிகள் said...

kavi said...

/sema super a irukku, touching/


நன்றிங்க

கலகலப்ரியா said...

//வலைத் தொடர்பில்லாததால் வேலையில்லை.//
இல்லைன்னா மட்டும்.. !

//வேலை சேருமே என்ற பதைப்பில் பொறுமையில்லை.//
நல்ல கற்பனை..

//அம்மாவுக்கு
சலிப்பாய் சொன்ன பதில் எல்லாம்
தெரிந்து என்ன செய்யப் போகிறாய்? தூங்கு என்பதுதான்.//
ச்சே.. இந்த பதிவை இங்க போடாம அம்மா கிட்ட படிச்சிருந்தா இவ்ளோ கஷ்டம் வருமா..

//அம்மா இல்லை!
ஆறுதல் இல்லை
தொலைத்த வலியோ
தொலையவில்லை!//
கடைக்காரரே ஒரு பீடிங் பாட்டில் கொடுப்பா..

இன்னாதிது நைனா.. ஒரே பொலம்பலு.. வீட்டுக்கு வீடு வாசப்படி.. !

வானம்பாடிகள் said...

கலகலப்ரியா said...

/இல்லைன்னா மட்டும்.. !/
/நல்ல கற்பனை.. /

கவிதைக்கு மட்டும்தான் பொய்யழகா?

/ச்சே.. இந்த பதிவை இங்க போடாம அம்மா கிட்ட படிச்சிருந்தா இவ்ளோ கஷ்டம் வருமா../

இது படிச்சி முடிக்கறதுக்குள்ளயே தூங்கி இருப்பாங்க:(

/கடைக்காரரே ஒரு பீடிங் பாட்டில் கொடுப்பா..

இன்னாதிது நைனா.. ஒரே பொலம்பலு.. வீட்டுக்கு வீடு வாசப்படி.. !/

ஃபீலிங்க்ல அழுதா ஃபீடிங்குக்கு அழுறேன்னு நினைச்சிட்டீங்க போல. மம்மீ:))

கலகலப்ரியா said...

இல்லைங்க.. அஜித் சார்.. ஒரு பிலிம்-ல இட்லி கேட்டேன் கிடைக்கவில்லை.. சட்னி கேட்டேன் தரவில்லை.. சாம்பார் சாம்பார் சாம்பார் கேட்டேஏஏஏஏன் என்று பாடுவாரே அந்த எபெக்க்டு.. இருக்கு.. புதுசா ட்ரை பண்ணலாம்னு பார்த்திங்களோ.. :P விடமாட்டோம்ல..

வானம்பாடிகள் said...

கலகலப்ரியா said...

/அந்த எபெக்க்டு.. இருக்கு.. புதுசா ட்ரை பண்ணலாம்னு பார்த்திங்களோ.. :P விடமாட்டோம்ல../

அடங்கொன்னியா. அம்மா சென்டிமென்டுன்னா சினிமாதான் கவனம் வருமோ? நம்மளபாத்து அஜித் கவனம் வந்ததுக்கு பெருமைப் படுறதா? நொந்து போறதா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

கலகலப்ரியா said...

//வானம்பாடிகள் said...

கலகலப்ரியா said...

/அந்த எபெக்க்டு.. இருக்கு.. புதுசா ட்ரை பண்ணலாம்னு பார்த்திங்களோ.. :P விடமாட்டோம்ல../

அடங்கொன்னியா. அம்மா சென்டிமென்டுன்னா சினிமாதான் கவனம் வருமோ?//
அட ஆமாம்ல.. அம்மான்னா அரசியல்தான் ஆனா அவங்களும் சினிமால இருந்தவங்கதானுன்களே.. ரொம்ம்ம்ம்ப பீல் பண்றாய்ங்கப்பா..

//நம்மளபாத்து அஜித் கவனம் வந்ததுக்கு பெருமைப் படுறதா? நொந்து போறதா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்
//
ஏனுங்க தெருவில பீடா விக்கறவன் வாய்ஸ் ஆடு கத்துற மாதிரி இருக்குன்னா.. அந்தாளு ஆடு மாதிரி இருக்கான்னு அர்த்தமா..! (இப்போ ஈஸியா முடிவெடுங்க.. பெருமைப் படுறதா.. நொந்து போறதான்னு..)

வானம்பாடிகள் said...

கலகலப்ரியா said...

/ஏனுங்க தெருவில பீடா விக்கறவன் வாய்ஸ் ஆடு கத்துற மாதிரி இருக்குன்னா.. அந்தாளு ஆடு மாதிரி இருக்கான்னு அர்த்தமா..!/

பீடா ஆடு ஏன் இந்தக் கொலவெறி! கூவாத விக்கிற வியாபாரத்துல ஒன்னு பீடா.

கலகலப்ரியா said...

ithellaam yaarukku theriyum.. ungala maathiri aadu maathiri beedaa thinra aalukkuthaan theriyum.. aala vidunga saami..! kozhantha azhuvuthennu aaruthal solla poi.. ipdi aagi pochi..!

வானம்பாடிகள் said...

கலகலப்ரியா said...

/aadu maathiri beedaa thinra aalukkuthaan theriyum../


வடிவேலு செஞ்சனா செஞ்சனானு சோலிய முடிச்சா மாதிரி எல்லாம் சொல்லிட்டீங்களே. ஏன்யா ஏன்?

/aaruthal solla poi.. ipdi aagi pochi..!/

ஆறுதலாங்க இது. வாருதல். அவ்வ்வ்வ்வ்வ்

கலகலப்ரியா said...

//கலகலப்ரியா said...

/aadu maathiri beedaa thinra aalukkuthaan theriyum../


வடிவேலு செஞ்சனா செஞ்சனானு சோலிய முடிச்சா மாதிரி எல்லாம் சொல்லிட்டீங்களே. ஏன்யா ஏன்?/

அப்டி வேற ஒண்ணு இருக்கோ...:-?

வானம்பாடிகள் said...

கலகலப்ரியா said...

/அப்டி வேற ஒண்ணு இருக்கோ...:-?/

நம்மள அஜித்தாக்கப் போய் நீங்க வடிவேலு ஆய்ட்டீங்களா?:))))

இராகவன் நைஜிரியா said...

கலகலப்ரியா, உங்களோட பின்னூட்டங்கள் ரொம்ப நல்லா இருக்கு.

கவிதையைப் படிக்கும் போது ப்ரியா அவங்க சொன்ன மாதிரி, அஜித் படப்பாட்டு ஞாபகம் வந்துச்சுங்க. தவிர்க்க முடியவில்லை.

வானம்பாடிகள் said...

இராகவன் நைஜிரியா said

/கவிதையைப் படிக்கும் போது ப்ரியா அவங்க சொன்ன மாதிரி, அஜித் படப்பாட்டு ஞாபகம் வந்துச்சுங்க. தவிர்க்க முடியவில்லை./

வாங்க இராகவன் சார். :)). சரியான வாலு கலகலா. எவ்வளவு கலக்கமா இருந்தாலும் 2 நிமிஷம் பேசினா வயத்தைப் பிடிச்சின்டு சிரிக்க வைக்கும். நீங்களுமா.

கலகலப்ரியா said...

//Blogger வானம்பாடிகள் said...

கலகலப்ரியா said...

/அப்டி வேற ஒண்ணு இருக்கோ...:-?/

நம்மள அஜித்தாக்கப் போய் நீங்க வடிவேலு ஆய்ட்டீங்களா?:))))//

இன்னது... நான் வடிவேலாட்டம்தான் இருக்கேன்.. அது இருக்கட்டு.. உங்கள அஜித் ஆக்க போறதா.. ஏது plastic surgery வரைக்கும் போய்.. ஸ்ரேயா கூட டூயட் ஆடிட்டிருக்கிற மாதிரில்ல இருக்கு.. அஜித்துன்னு பேரு வேணா மாத்தி வைக்கலாம்..

கலகலப்ரியா said...

//இராகவன் நைஜிரியா said...

கலகலப்ரியா, உங்களோட பின்னூட்டங்கள் ரொம்ப நல்லா இருக்கு.

கவிதையைப் படிக்கும் போது ப்ரியா அவங்க சொன்ன மாதிரி, அஜித் படப்பாட்டு ஞாபகம் வந்துச்சுங்க. தவிர்க்க முடியவில்லை.//

ரொம்ப ரொம்ப நன்றிங்க ராகவன்.. (வானம்பாடிட நொந்த வயித்தில யூகலிப்டஸ் தயிலத்த "வாலி" வாளியா ஊத்துறீங்களே..)

வானம்பாடி.. எனக்கு காலர் தூக்கி விட்டு விட்டு கை வலிக்குது.. இப்போ புரியுதா நான் எதுக்கு பின்னூட்டம் போடாம இருக்கிறதுன்னு.. :P

வானம்பாடிகள் said...

கலகலப்ரியா said...

/அஜித்துன்னு பேரு வேணா மாத்தி வைக்கலாம்../

பார்த்திங்களா. உங்களுக்கே தெரியுதில்ல. இந்த முயற்சி வேஸ்ட்னு. :))

வானம்பாடிகள் said...

கலகலப்ரியா said...

/வானம்பாடி.. எனக்கு காலர் தூக்கி விட்டு விட்டு கை வலிக்குது.. இப்போ புரியுதா நான் எதுக்கு பின்னூட்டம் போடாம இருக்கிறதுன்னு.. :P/

கை வலிச்சா நான் யூகலிப்டஸ் ஆயில் தறேன். நீங்க பின்னூட்டம் போட்டுண்டே இருங்கோ.

இராகவன் நைஜிரியா said...

ஆஹா... தாங்க முடியலடா சாமி. இந்த ஆட்டத்துக்கு நான் வரலை... வரலை...

அண்ணே... வானம்பாடி அண்ணே... நான் எஸ்கேப்.....!!!!:-)

துபாய் ராஜா said...

உற்சாகமில்லா ஒருநாளை கண்முன் கொண்டுவந்துவிட்டீர்கள்.

கலகலப்ரியாவின் கமெண்டுகளும்
'கலகல' கலக்கல்தான்.

கலகலப்ரியா said...

//Blogger வானம்பாடிகள் said...

கலகலப்ரியா said...

/அஜித்துன்னு பேரு வேணா மாத்தி வைக்கலாம்../

பார்த்திங்களா. உங்களுக்கே தெரியுதில்ல. இந்த முயற்சி வேஸ்ட்னு. :))//

எது பேரு மாத்தி வைக்கிறதா.. ஏன் இதுக்கு ஜோஸ்யர் ஆரூடம் சொல்லணுமோ.. வானம்பாடிய கடாசிட்டு அஜித்-னு வச்சிட்டா போச்சி..

கலகலப்ரியா said...

// ஆஹா... தாங்க முடியலடா சாமி. இந்த ஆட்டத்துக்கு நான் வரலை... வரலை...

அண்ணே... வானம்பாடி அண்ணே... நான் எஸ்கேப்.....!!!!:-)

August 30, 2009 5:40 PM
Delete
Blogger துபாய் ராஜா said...கலகலப்ரியாவின் கமெண்டுகளும்
'கலகல' கலக்கல்தான்.//

ufff.. apple juice please..!

இராகவன் நைஜிரியா said...

// கலகலப்ரியா said...

ufff.. apple juice please..! //


with ice or without ice?

கலகலப்ரியா said...

// வானம்பாடிகள் said..

கை வலிச்சா நான் யூகலிப்டஸ் ஆயில் தறேன். நீங்க பின்னூட்டம் போட்டுண்டே இருங்கோ.//

உங்க நோக்கம் தெரியும்டி... ராகவன் சாரே நானும் ஜூட்டு.. புள்ளதான் அழுகைய நிறுத்திடிச்சில்ல... ஜூட்....

கலகலப்ரியா said...

//இராகவன் நைஜிரியா said...

// கலகலப்ரியா said...

ufff.. apple juice please..! //


with ice or without ice?//

ice jaasthi aaidichippaa... saathaa porum..

வானம்பாடிகள் said...

இராகவன் நைஜிரியா said...

/ஆஹா... தாங்க முடியலடா சாமி. இந்த ஆட்டத்துக்கு நான் வரலை... வரலை...

அண்ணே... வானம்பாடி அண்ணே... நான் எஸ்கேப்.....!!!!:-)//

சார் நீங்களேவா:))

வானம்பாடிகள் said...

துபாய் ராஜா said...

/ உற்சாகமில்லா ஒருநாளை கண்முன் கொண்டுவந்துவிட்டீர்கள்.

கலகலப்ரியாவின் கமெண்டுகளும்
'கலகல' கலக்கல்தான்./

ஆமாங்க. காலைல வந்து இடுகை போடுறப்ப அப்படித்தான் இருந்தேன். கலகலா பண்ண லொள்ளுல இப்போ :)))

வானம்பாடிகள் said...

இராகவன் நைஜிரியா said...

// கலகலப்ரியா said...

ufff.. apple juice please..!


with ice or without ice?//

=)). சரியா கேட்டீங்க.

வானம்பாடிகள் said...

கலகலப்ரியா said...

/ice jaasthi aaidichippaa... saathaa porum..//

அடங்கொய்யாலே. அடிச்ச கூத்துக்கு ஆப்பிள் ஜூஸா உங்களுக்கு. ஃபீடிங் பாட்டில் போய் பீடாவாகி இப்போ எனக்கு ஒண்ணுமில்லையா.

கலகலப்ரியா said...

// வானம்பாடிகள் said...

கலகலப்ரியா said...

/ice jaasthi aaidichippaa... saathaa porum..//

அடங்கொய்யாலே. அடிச்ச கூத்துக்கு ஆப்பிள் ஜூஸா உங்களுக்கு. ஃபீடிங் பாட்டில் போய் பீடாவாகி இப்போ எனக்கு ஒண்ணுமில்லையா./

ninaichchen.. tube lightungalaache.. naama solrathu puriyumaannu..

vantha idathla evlo fans.. as a celebrity.. konjam banthaa pannaa.. thatta vachchindu ammaa thayennu alarra maathirilla azhuraainga...

porumdaa saami..

வானம்பாடிகள் said...

கலகலப்ரியா said...
/thatta vachchindu ammaa thayennu alarra maathirilla azhuraainga...

porumdaa saami../

யம்மா. முடியலையே. எந்தூர்ல தட்டு வெச்சிண்டு அம்மாதாயேன்னு ஆப்பிள் ஜூஸ் கேப்பாங்க. கவுண்டர் கூட சுடு சோறுனுதான் கேட்டாரு. கோயமுத்தூர் குசும்ப விட இது பெரிய குசும்புடா சாமியோவ்.

கலகலப்ரியா said...

// வானம்பாடிகள் said...

யம்மா. முடியலையே//

ithu yaaru appo..?

கலகலப்ரியா said...

samiyov .. vera... !

வானம்பாடிகள் said...

கலகலப்ரியா said...

/யம்மா. முடியலையே//

ithu yaaru appo..?

samiyov .. vera... !//

:)))))))). நிஜம்மா வயத்தை பிடிச்சிண்டு வெடிச்சிரிப்பு சிரிக்கிறேன்.

பிரியமுடன்...வசந்த் said...

நல்லாயிருக்குங்க பாலா

வானம்பாடிகள் said...

பிரியமுடன்...வசந்த் said...

/நல்லாயிருக்குங்க பாலா/

நன்றிங்க வசந்த்

கதிர் - ஈரோடு said...

மனதைக் குடையும் வரிகள்
அம்மா சும்மா தூங்கு... சொல்ல ஒன்றும் இல்லை

//வலைத் தொடர்பில்லாததால் வேலையில்லை.//
இது காமெடி பீஸ்

வானம்பாடிகள் said...

கதிர் - ஈரோடு said...

/மனதைக் குடையும் வரிகள்
அம்மா சும்மா தூங்கு... சொல்ல ஒன்றும் இல்லை//

ஆமாங்க. கொடுமையான வியாதிங்க. சொல்றது புரிஞ்சா அந்த மனநிலையில அழுதுட்டே இருப்பாங்க. புரியலன்னா சம்பந்தமில்லாம வேறே நினைப்பு வந்து அது பேசுவாங்க. அதுக்கு பதில் சொல்லவும் முடியாது. சலிச்சிருக்கிறப்ப என்ன பண்ண முடியும். இப்படி இருந்திருக்கலாமேன்னு இப்போ ஏங்குது மனசு. ஆயிரம் வார்த்தைய விட அம்மாக்கு இது புரியும் இல்லிங்களா?

/இது காமெடி பீஸ்/

அய்யோ இல்லிங்க. இன்ட்ராநெட் அப்பப்ப புட்டுக்கும். பில் பாஸ் பண்ண முடியாதுன்னு உக்காந்துருவாய்ங்க.

இது நம்ம ஆளு said...

"வெற்றிடம்."
நிரப்புவது கொஞ்சம் கஷ்டம்

வானம்பாடிகள் said...

இது நம்ம ஆளு said...

/ "வெற்றிடம்."
நிரப்புவது கொஞ்சம் கஷ்டம்//

முடியவே முடியாதுங்க.

க.பாலாஜி said...

//பாவி மனது இப்போது பரிதவிக்கிறது
ஒன்றும் சொல்லாமல்
மூப்பும் நோவும்
மருந்தும்,அம்மாவுமாய்
கலவையான‌ வாசனையில்
அவள் மடி புதைந்து
மீண்டும் குழந்தையாக
வழியிருந்தபோது தொலைத்த நாட்கள்!//

அனுபவம் பேசுகிறது....நன்றாகவே...

வானம்பாடிகள் said...

க.பாலாஜி said...
அனுபவம் பேசுகிறது....நன்றாகவே...

ஆமாங்க. அடிமனதில் நீங்காமல் அவ்வப்போது தலை தூக்கும் ஏக்கம்.

கிரி said...

பாலா ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க.. இதை போலவும் அவ்வப்போது எழுதலாம்

வானம்பாடிகள் said...

கிரி said...

/ பாலா ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க.. இதை போலவும் அவ்வப்போது எழுதலாம்/

வாங்க கிரி. நன்றி. முயற்சிக்கிறேன்