Saturday, August 29, 2009

ஒன்று எங்கள் சாதியே..

கதிர்,நர்சிம், தங்கமணி பிரபு, காமராஜ், இரும்புத்திரை அரவிந்த் இன்னும் பலர் சிங்களவனின் வெறியாட்டத்தை எதிர்த்துக் குரல் கொடுத்திருக்கிறார்கள். ராஜ நடராஜன், யூர்கன் ஆகியோர் மனம் வெறுத்து இடுகையை நிறுத்தி வைத்திருக்கிறார்கள். பாமரன்..ஆகிய நான் என்ன செய்யப் போகிறேன்?

கதிர் தன் இடுகையில் "நல்ல இதயங்களே இந்த அவலம் பற்றி ஒரு இடுகை உடனே உங்கள் வலைப்பூவில் எழுதுங்கள் என அன்போடு வேண்டுகிறேன்" ; "இப்போது நாம் இடும் இடுகையின் மூலம் இதுவும் ஒரு நாள் வெடிக்கும் என்ற நம்பிக்கை கீற்று எனக்குண்டு." என்கிறார். விரக்தியில் பின்னூட்டம் இட்டு காத்திருந்த வேளையில் கலகலப்ரியா கொடுத்த ஒரு சுட்டி நம்பிக்கையளிக்கிறது. ஆம். வலைப்பூவின் தாக்கம் பெரிது தான் போல. அதிலிருந்து சில துளிகள் இதோ:

"பிளாக் என்று சொல்லப்படும் வலைப்பூக்கள் கணிசமான வாசகர் வட்டாரத்தை கொண்டிருக்கிறது. இங்கே எழுதப்படும் சினிமா விமர்சனங்கள் பற்றிதான் இப்போது பெரும் கவலையோடு பேச ஆரம்பித்திருக்கிறார்கள் திரையுலகத்தில்."

"எங்கோ ஒரு மூலையில் உட்கார்ந்து கொண்டு உதிரத்தை சிந்தி படம் எடுக்கும் படைப்பாளிகளையும், கோடி கோடியாக கொட்டிவிட்டு தவிக்கும் தயாரிப்பாளர்களையும் பீதிக்குள்ளாக்குகிற இவர்கள் கொஞ்சம் மனிதாபிமானத்தோடு விமர்சனங்கள் எழுத வேண்டும் என்பதே நமது வேண்டுகோள்."

இதோ இலங்கையில் நடந்த இனப்படுகொலை பற்றி அயல் நாட்டுத் தொலைக்காட்சியில் வெளியாகிய விடியோ வந்து 4 நாட்களாகிவிட்டது. ஏதாவது ஒரு தொலைக்காட்சியில் காட்டப் பட்டதா? எடுபிடிகளாகிவிட்ட பத்திரிகையில் வந்ததா? வந்ததும் சிங்களவனுக்குச் சாதகமான அண்டர்லைன் பத்திரிகையின் பொய் பிரசாரம் தானே. எவனாவது இந்தச் செய்தியை போட்டானா? தனி ஈழக் குல்லாய் போடப் பார்த்த அரசியல் வாதிகள் எங்கே தொலைந்தார்கள்? தமிழக மீனவர்களைக் கடத்துவதும், சுடுவதும் பெயரளவுக்கு எதிர்ப்பைக் காட்டியே புதைக்கிறீர்களே? ஏன்? ஒட்டு மொத்தமாக ஏன் இப்படி அடிமையானோம்? என்னவெல்லாம் சொன்னார்கள் என்று ஒரு மீள் பார்வை பார்ப்போமா?

ராஜபிச்ச: "பாதுகாப்பு வலையம் ஐ.நா. குறிப்பிட்டதல்ல. எமது ராணுவத்தின் யுத்தோபாயம்"
ஃபொன்சேகா: "கெரில்லா யுத்தியினாலேயே வெற்றி பெற்றோம்"
ராம்புக்வெல: "வெற்றி பெற்றவர்கள் மீது விசாரணை நடந்ததாக சரித்திரமில்லை"

இந்த நாய் எல்லாம் இப்படித்தான் பேசும். கலைஞருக்கு என்னாயிற்று? ஒரு பத்திரிகையாளர் இந்தியா ராணுவத் தடவாளங்களை அளித்திருக்கிறது எனப் புத்தகம் வெளியிட்ட பின்பும், ராணுவத்துறை இணை அமைச்சர் புலிகளுக்கு எதிராக ஆயுதம் கொடுக்கவில்லை, இலங்கை அரசைத் தற்காத்துக் கொள்ளத்தான் ஒப்பந்தப்படி ஆயுதம் அளித்தோம் என அறிவித்த பின்பும் பத்திரிகையாளரின் கேள்விக்கு கலைஞரின் பதில் இது:

"ஆயுதங்களோ, போருக்குத் தேவையான கருவிகளோ எதையும் இந்திய அரசு அனுப்பவில்லை என்று பல முறை மத்தியிலே உள்ள பிரதமர் உட்பட அமைச்சர்கள் சொல்லியிருக்கிறார்கள்." மே 18க்கு முன்பும் இதையே தான் சொன்னீர்கள் ஐயா. நடந்தது என்ன? இப்படி வெட்ட வெளிச்சமான பிறகும் ஏன் இப்படி பேசுகிறீர்கள். தமிழாய் வாழ்ந்து தமிழால் வளர்ந்து இத்துணை காலமும் கடந்த பின்னர் உங்கள் காலத்தில் தமிழுக்கு இப்படி சாபக்கேடு வரலாமா? இருக்கும் மீதித் தமிழர்களை வாழவைக்க எதிர்த்துக் குரல் கொடுத்துப் பாருங்கள். எதிர்ப்பவர்களை தமிழன் எட்டி உதைப்பான். இதோ இன்னோரு செய்தியும் ஐயா.

"இந்திய கடலோரக் காவல் படையினர் இதுவரை பயன்படுத்தி வந்த விக்ரஹா என்ற கடலோர ரோந்துக் கப்பல், இலங்கைக் கடற்படைக்கு வழங்கப்பட்டுள்ளது. இலங்கைப் போருக்குப் பின்னர் இந்தியா வழங்கியுள்ள முதல் பகிரங்க உதவி இது என்பது குறிப்பிடத்தக்கது."

என்றோ ஒரு நாள் சிங்கள நாய் தமிழக மீனவனைச் சுட இதைப் பயன்படுத்தும் அப்போது என்ன சொல்லப் போகிறீர்கள்?

எனவே வலைப்பூத்தோழர்களே கட்சி மறந்து, வேறுபாடு மறந்து கலைஞரை வேண்டுவோம். ஐயா இப்பொழுதாவது ஏதாவது செய்யுங்கள் என்று. இந்தக் கொடுமையை எதிர்க்க பின்னிருப்போம் என்று. நிச்சயம் குரல் எட்டும். சினிமா என்ற மீடியாவே பாதிக்கப் படும்போது, தாக்கம் வலுவானது தான். இணைவோம். எழுதுவோம், இறைஞ்சுவோம், போராடுவோம் இல்லையெனில் கிழிப்போம்.

பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள்: தங்கள் இடுகைகளை label ஈழம் என்று வகைப்படுத்தினால் நம் அத்தனை இடுகைகளும் திரட்டிகளில் ஈழத்தின் கீழ் வரும்.

19 comments:

ஈரோடு கதிர் said...

நன்றி அய்யா....

இந்த இடுகை மௌனமாய் இருக்கும் மக்கள் மனதை தட்டும்

vasu balaji said...

நல்ல தொடக்கத்துக்கு நன்றி கதிர்.

சூர்யா ௧ண்ணன் said...

//என்றோ ஒரு நாள் சிங்கள நாய் தமிழக மீனவனைச் சுட இதைப் பயன்படுத்தும் அப்போது என்ன சொல்லப் போகிறீர்கள்?//

இதை அனைத்து தர மக்களையும் சென்றடைய வழி செய்ய வேண்டும்.
நிச்சயம் பதிவர்களால் முடியும்.

இது பற்றிய பதிவுகளுக்கு சக பதிவர்கள் தங்கள் பிளாக்கில் இணைப்பு கொடுத்தால் நன்று!

vasu balaji said...

நன்றி சூர்யா.

க.பாலாசி said...

//போராடுவோம் இல்லையெனில் கிழிப்போம்.//

ஆம்...உண்மைதான், உரக்கத்தட்டுவோம் இல்லையேல் உடைப்போம்...உங்களது பதிவு பதிவர்களின் நெஞ்சங்களை கிளர்தெழசெய்யட்டும...

vasu balaji said...

http://www.paristamil.com/tamilnews/?p=29996

இது சி.என்.என். ஒளிபரப்பிய விடியோ சுட்டி. அந்த நாய்கள் சிங்களத்தில் சொன்னதன் மொழி பெயர்ப்போடு. உதய நாணயக்கரா கூசாமல் பொய் என்று புழுகும் கேவலம். குமட்டிக் கொண்டு வருகிறது.

அடுத்த கொடுமையான காட்சியும் வெளியாகி இருக்கிறது. பார்த்தே தீருவேன் என்பவர்கள் மட்டும் பாருங்கள். முதல் படம் ஒன்றே போதும். உலகில் எந்த ராணுவம் இப்படி நடந்துக் கொள்ளும். இவர்களிடம் மனிதாபிமானமாவது மண்ணாவது. இதுவும் பொய்யோ நாய்களா:http://www.athirvu.com/target_news.php?subaction=showfull&id=1251539986&archive=&start_from=&ucat=15&

யூர்கன் க்ருகியர் said...

சிங்கள இனவாத அரசு எந்த அளவு முடியுமோ அந்தளவு தமிழர்களை கொன்று குவிக்கிறது இந்திய மத்திய அரசு சிங்கள அரசுக்கு தேவையான உதவிகளை முறைமுகமாகவோ நேரிடையாகவோ செய்தது... செய்து கொண்டும் வருகிறது.
தமிழக அரசியல்வாதிகளால் ஒரு அணுவையும் அசைக்கமுடியவில்லை ...சில பேர் அதை கண்டு கொள்ளவும் இல்லை. உலகமே வேடிக்கை பார்க்க ,,,ஈழ தமிழர்கள அங்கு சாக, மனிதத்துவம் உள்ளவர்கள் ஓரளவேனும் அதைப்பற்றி கம்ப்யூட்டர் இல் தட்ட .....கடைசியில் நம் போன்ற சாதரண மக்களால் சாகும் ஒரு உயிரை கூட காப்பாற்ற முடியவில்லை என்பதுதான் நிச்சலனமான உண்மை.

இப்பொழுது நாம் என்ன செய்ய போகிறோம் என்பதுதான் என்னுள் இருக்கும் மிகப்பெரிய கேள்வி .. ????

மாற்றம் தேவை :

நிராகரியுங்கள் ...... ஆம் எவன் ஒருவன் உண்மையை மறைத்து தன் கடமையை மறுக்கிறானோ அவனை முற்றிலும் நிராகரியுங்கள்... எடுத்துக்காட்டு : தினமலர், சில தேசிய/தமிழக சுயநல அரசியல்வாதிகள்.,தமிழக தொலை காட்சி சேனல்கள்... இவற்றை நிராகரிப்பதால் நம் செத்து போய் விட போவதில்லை. மாறாக மற்றவர்களுக்கு நாம் இதைப்ப்பற்றிய விழிப்புணர்வை ஏற்படத்தலாம்.

நாம் கணினியை மட்டும் தட்டி எழுதுவதோடு மட்டுமல்லாமல் .... காசு வாங்கி ஜனநாயகத்தை விற்ற மக்களையும் ... இன உணர்வின்றி உறுத்தலின்றி மத்திய அரசின் கபடத்திற்கு சோரம் போன தமிழக அரசியல்வாதிகளின் மரத்து போன மனங்களையும் தட்டி இருந்தால் ஓரளவாவது நாம் இப்பேரவலத்தை தவிர்த்திருக்கலாம்.

பின்னூட்ட நாகரீகம் கருதி சுருக்கமாக முடிக்கிறேன்

vasu balaji said...

யூர்கன் க்ருகியர் said...
/ காசு வாங்கி ஜனநாயகத்தை விற்ற மக்களையும் ... இன உணர்வின்றி உறுத்தலின்றி மத்திய அரசின் கபடத்திற்கு சோரம் போன தமிழக அரசியல்வாதிகளின் மரத்து போன மனங்களையும் தட்டி இருந்தால் ஓரளவாவது நாம் இப்பேரவலத்தை தவிர்த்திருக்கலாம். //

உண்மைதான்.

vasu balaji said...

துபாய் ராஜா said...

தமிழர்தமை
இழிவு செய்து
அழித்திடும்
கயமைதனை
பதிவிட்டு
பழித்திடுவோம்.

நன்றி. ராஜா

அ. நம்பி said...

//...கலைஞரை வேண்டுவோம். ஐயா இப்பொழுதாவது ஏதாவது செய்யுங்கள் என்று.//

இன்னுமா?

இன்னுமா உங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது?

இந்த `இப்பொழுதாவது' என்பது புதியது அன்று; முதன்முறையும் அன்று.

இன்றுவரை இந்த `இப்பொழுதுகள்' எத்தனை முறை வீணாயின என்பது உங்களுக்கு நன்கு தெரியும்?

இன்னுமா ஐயா இந்த வேடதாரியை நம்புகிறீர்கள்?

vasu balaji said...

அ. நம்பி said...

/இன்றுவரை இந்த `இப்பொழுதுகள்' எத்தனை முறை வீணாயின என்பது உங்களுக்கு நன்கு தெரியும்?

இன்னுமா ஐயா இந்த வேடதாரியை நம்புகிறீர்கள்?/

நம்பத்தான் வேண்டும் ஐயா. அவரை மீறி எதுவும் யாரும் செய்ய முடியாது. நல்லது நடந்தால் சரி.

அ. நம்பி said...

ஈழத் தமிழர் பிரச்சினையில் தமிழக அரசியல் தலைவர்கள் தொழில்முறை நடிகர்களைவிட மிக மிக நன்றாக நடித்தார்கள்; நடிக்கிறார்கள்; நடிப்பார்கள்.

எந்த அரசியல்வாதியும் இதற்கு விதிவிலக்கு ஆனவர் அல்லர்;

ஆனால் தமிழக முதல்வரை நடிப்பில் வெல்ல வேறெந்த அரசியல்வாதியாலும் இயலாது என்பது முற்றிலும் உண்மை.

Unknown said...

பாலா.. நீங்கள் உண்மையான உணர்வோடு எழுதுகிறீர்கள்.. வெகுஜன ஊடகங்களின் முகத் திரைகள் வலு வேகமாகக் கிழிக்கப்படுகின்றன, வலைப்பூக்களில் எழுதும் கருத்துக்கள் இப்போது மக்களைச் சென்றடைய ஆரம்பித்திருக்கின்றன... என்ன, இந்தக் கொடுமைகள் எல்லாம் நடக்கிறது என்று காட்ட முடியும்..அதைப் பார்க்கிற மக்களுக்கு உணர்வூட்ட முடியும்.. ஆனால் அதிகாரவர்க்கம் வாழாவிருந்தால் என்ன செய்யமுடியும்?

vasu balaji said...

அ. நம்பி said...

/ஆனால் தமிழக முதல்வரை நடிப்பில் வெல்ல வேறெந்த அரசியல்வாதியாலும் இயலாது என்பது முற்றிலும் உண்மை./

கலைஞர்.

vasu balaji said...

Kiruthikan Kumarasamy said...

/அதைப் பார்க்கிற மக்களுக்கு உணர்வூட்ட முடியும்.. ஆனால் அதிகாரவர்க்கம் வாழாவிருந்தால் என்ன செய்யமுடியும்?//

மக்கள் உணர்வு உணர்ச்சிபூர்வமாக மட்டுமே இல்லாமல் உணர்வுபூர்வமாக இருந்துவிடுமேயானால் எவனும் அவர்களை மீறி அரசியல் செய்ய முடியாது. அது இல்லாமல்தான் இப்படி எல்லாரும் மேய்த்துவிட்டுப் போகிறார்கள்.

Prem said...

வென்றவன் மீது எங்காவது விசாரணை இருந்திருக்கின்றதா? - உண்மை...
வென்றோம் என்று கொக்கறித்தவர்கள் நாளை அழும் நிலை வரும். இதுவும் சரித்திரம்!
ஆனால் இந்த கெடுகெட்ட அரசியல், ஊடக, சினிமா பிணந்தின்னிப்பேய்களை ஒதுக்கித்தள்ள தமிழனுக்கு துணிவிருக்கிறதா முதலில்?
இடையில் நல்ல கவிகள் இருக்கிறார்கள் நம்மிடம் உலகின் சிறந்த ஒப்பாரி எழுத!... அது மட்டும் தானே தெரியும் இந்த தமிழனுக்கு?!!!!

vasu balaji said...

Prem said...

/நம்மிடம் உலகின் சிறந்த ஒப்பாரி எழுத!... அது மட்டும் தானே தெரியும் இந்த தமிழனுக்கு?!!!!/

உங்கள் ஆதங்கம் புரிகிறது ப்ரேம். எழுத்துக்கள் மட்டுமே சரித்திரம் படைத்துவிட முடியாது. மாற்றம் வரும். நிச்சயம் வரும்.

RAGUNATHAN said...

எழுதி எழுதி என்ன ஆகுதுங்க...எல்லாரும் வெளி நாட்டுல இருக்காங்க...மவுச புடிச்சு தேக்கிறோம்...இருந்தாலும் நம்மால ஆனதை பண்ணிட்டுதான் இருக்கோம்.

vasu balaji said...

ரகுநாதன் said...

/எழுதி எழுதி என்ன ஆகுதுங்க...எல்லாரும் வெளி நாட்டுல இருக்காங்க...மவுச புடிச்சு தேக்கிறோம்...இருந்தாலும் நம்மால ஆனதை பண்ணிட்டுதான் இருக்கோம்./

வரவுக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.