Saturday, August 22, 2009

கொஞ்சம் ஜோக் - கொஞ்சம் அலட்டல்

ஆபிஸ் ஜோக்ஸ் என்றால் முதலில் வருவது லீவ் லெட்டர் தான். அதிலும் எங்கள் அலுவலகத்தில் மக்கள் ரொம்ப சோம்பேறிகள். மாதிரி வைத்திருப்பார்கள். காஷுவல் லீவுக்கு, ஏர்ன்ட் லீவுக்கு, மெடிகல் லீவுக்கு என்று வகை வகையாக. தேதி மட்டும் மாற்றிக் கொடுப்பார்கள். மாதிரியில் தலை வலி என்றிருந்தால் அதேதான் காரணமாக இருக்கும். மாற்றக் கூட மாட்டார்கள். சில சந்தர்ப்பங்கள் மாட்டிவிடும் தருணங்களில் சும்மா அதிருதில்ல.

ஒரு அம்மணி, தன் தம்பிக்கு உபநயனம் என்று விடுமுறை எடுத்தார். வெள்ளைக்காரன் பூணூல் போட்டிருந்தால் அதற்குப் பெயர் இருக்கும். இதற்கெங்கே போவது. கேட்டால் மட்டும் யார் சொல்ல முடியும். ஆங்கில மனுவில் உபநயனம் என்று எழுதினால் நல்லாவா இருக்கும்? அந்தமா எழுதியது இப்படி: As i have to attend my brother's "Flower thread maarriage" on. என்னமோன்னு நினைச்சி குழம்பிடாம, தம்பிக்கு பூணல் கலியாணமாம். பத்திரிகையோட நீட்டுச்சி.

இன்னோரு ப்யூன் அய்யா அக்கா பெண் பெரியவளாகி வீட்டுக்கு அழைக்கிற விழான்னு சொல்லி தமிழில் எழுதி கொண்டு போய் கொடுத்தாரு. அதிகாரிக்கு தமிழ் தெரியாது. ஆங்கிலத்தில் எழுதி கொண்டு வர சொல்லிட்டாரு. இவரும் ஒரு எழுத்தரிடம் போய் எழுதித் தரக் கேட்டார். அந்தாளு வீட்டுக்கு அழைக்கிறதுன்னு போட்டா சரி வருமான்னு குழம்பி எழுதிக் கொடுத்தது " Yellow water shaking function" . அதாங்க மஞ்சள் நீராட்டு விழா.

ஒரு அம்மணி பேறுகால விடுமுறைக்கு எழுதிக் கொடுத்தது இது. மருத்துவர் ஒரு குத்து மதிப்பா எப்பொழுது குழந்தைப் பிறப்பிருக்கும் என்று சொன்னதை வைத்து எழுதியது இது. "As I have to deliver my child during next 10 days "

பெண்களுக்கு மட்டும் பேறுகால விடுமுறையான்னு மத்திய அரசு ஆண்களுக்கும் 15 நாள் விடுமுறை அறிவித்த‌து. சாதனையில பங்கு வேண்டாமா? அவர் எழுதினது இப்படி: "Since my wife has delivered a baby"

இன்னோரு ஊழியர் சென்னையை அடுத்த சூளூர்பேட்டையிலிருந்து தினமும் வந்து செல்பவர். ஆந்திரமாகையால் தமிழ் சரியாக‌ வராது. எப்படியோ தடுமாறி எழுதுவார். அவர் நிலத்தில் விவசாயமும் செய்து வந்தார். ஒரு நாள் லீவோ, பத்து நாள் லீவோ ஒரே ஒரு போஸ்ட்கார்ட் தான். ஒரே காரணம்தான். அதுவும் இப்படி:

"உயர்திரு எப்பனசிஒ அவர்கள சமுகம்
ஜயா
இப்பவும் நான் நாய கடிது விட்டதால் ஆபீஸ் வரமுடியாது. மன்னிக்கவும். ..... தேதி to ......... நான் ..... லீவ் வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்
அன்புள்ள தங்கள் உண்மை ஊழியன்
...''

எப்பனசிஒ=FA &CAO.
கார்ட் வந்து சேருமுன்னே இவர் லீவே முடிந்து வந்துவிடுவார்.

***********************************************************************************
நட்பு பாராட்டி நண்பர் சூர்யா:

அன்பு பாராட்டி நண்பர் சூர்யா கொடுத்த விருதை நானும் சூர்யாவுக்கு நன்றியுடன் பகிர்ந்து கொள்கிறேன்:
விருது பற்றிய விளக்கம்:
It is the Scrumptious Blog Award -a blog award given to people who:
Inspire you
Encourage you
May give Fabulous information
A great read
Has Scrumptious recipes
Any other reasons you can think of that make them Scrumptious!

அவார்ட் வாங்கிய அனைவரும் மேலும் இதனை 10 ப்ளாக் நண்பர்களுக்கு வழங்கவும்.

நான் கொடுக்க விழைபவர்கள்:
1. கலகலப்ரியா (http://kalakalapriya.blogspot.com)
2. மாதேஷ் (http://madydreamz.blogspot.com/)
3.ராசா(http://aveenga.blogspot.com/)
4.Kricons (http://kricons.blogspot.com/)
5.குமாச்சி (http://kummacchi.blogspot.com/)
6.கதிர்‍‍-ஈரோடு ( http://maaruthal.blogspot.com/)
7.சுரேஷ் குமார்(http://www.sureshkumar.info/)
8.கிருத்திகன் குமாரசாமி (http://kiruthikan.blogspot.com/)
9.யூர்கன் க்ரூகியர் (http://inthiyaa.blogspot.com/)
10.வணக்கம் தமிழன் (http://vanakamtamilan.blogspot.com/)

22 comments:

ஈரோடு கதிர் said...

தங்கள் தரமான அன்பு பாராட்டும் விருதிற்கு நன்றி...

உங்களை எனக்கு அறிமுகப்படுத்திய பழமைபேசிக்கும் நன்றிகள்

ஈரோடு கதிர் said...

உடன் விருதுபெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்

Unknown said...

நன்றிங்க பாலா... என்ன இன்னும் 'கொஞ்சம் பொறுப்பா எழுதுடா' என்கிற பயத்தை உண்டுபண்ணுவதும் இந்த விருதுகளின் ஒரு குணாதிசயம்.. தலைவணங்கி ஏற்றுக் கொள்கிறேன்

அவிய்ங்க ராசா said...

Thanks Anna..All friend like you are encouraging me to write good things..
Thanks for the award.

Aveenga raja

Suresh Kumar said...

உங்கள் அன்பிற்கும் விருதிற்கும் நன்றிகள் பல . விருது பெற்ற உங்களுக்கும் மற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்

கும்மாச்சி said...

உங்கள் விருதுக்கு மிக்க நன்றி. உங்கள் ஆதரவு மேலும் பொறுப்புடன் எழுதத் தூண்டுகிறது. விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

கலகலப்ரியா said...

//வானம்பாடிகள் said...

என்னை எழுத வைத்த பிரம்மாவுக்கு குரு தட்சிணை. நம்ம திண்ணைக்கு வாங்கம்மா.//

guru thatchinaikku nanri ethukku..! aaseervatham vangikkoppaa..:p!

sakthi said...

இவரும் ஒரு எழுத்தரிடம் போய் எழுதித் தரக் கேட்டார். அந்தாளு வீட்டுக்கு அழைக்கிறதுன்னு போட்டா சரி வருமான்னு குழம்பி எழுதிக் கொடுத்தது " Yellow water shaking function" . அதாங்க மஞ்சள் நீராட்டு விழா.

ஹ ஹ ஹ

அருமையான ஆங்கில ஆக்கம்

sakthi said...

விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்

Jawahar said...

"Since my wife has delivered a baby"

and i am the only one responsible at home.....

http://kgjawarlal.wordpress.com

vasu balaji said...

கதிர், கிருத்திகன், சுரேஷ்குமார், ராஜா, கும்மாச்சி நன்றியும் வாழ்த்துகளும்.

vasu balaji said...

/கலகலப்ரியா said...

guru thatchinaikku nanri ethukku..! aaseervatham vangikkoppaa..:p!//

அது அது. அதத்தேன் எதிர் பார்த்தேன். நன்றி நாம சொல்லுவோம்ல.

vasu balaji said...

/sakthi said...

அருமையான ஆங்கில ஆக்கம்//

=))

vasu balaji said...

/ Jawarlal said...

"Since my wife has delivered a baby"

and i am the only one responsible at home.....//

Thanks and welcome

இராகவன் நைஜிரியா said...

விருது பெற்றதற்கும், கொடுத்ததற்கும் வாழ்த்துகள்.

vasu balaji said...

/இராகவன் நைஜிரியா said...

விருது பெற்றதற்கும், கொடுத்ததற்கும் வாழ்த்துகள்./

சஷிகா உங்களுக்கு கொடுக்கிறதில முந்திக்கிட்டாங்க. உங்களுக்கும் பாராட்டுகள்.

யூர்கன் க்ருகியர் said...

ஜோக்குங்க எல்லாம் பிரமாதம் ........
பதிவ காமெடியா ஆரம்பிச்சு சீரியஸ்ஸா அவார்டை கொடுத்து முடிச்சிருக்கீங்க ....

உங்க செலேச்சன் லிஸ்ட்ல என்னையும் சேர்த்ததுக்கு ரொம்ப நன்றி ..நன்றி & நன்றி

vasu balaji said...

/யூர்கன் க்ருகியர் said...
உங்க செலேச்சன் லிஸ்ட்ல என்னையும் சேர்த்ததுக்கு ரொம்ப நன்றி ..நன்றி & நன்றி//

:>

Unknown said...

நெம்ப நன்றிங்க.....!!

vasu balaji said...

/லவ்டேல் மேடி said...

நெம்ப நன்றிங்க.....!!/

பாராட்டுக்கள்.

இது நம்ம ஆளு said...

நன்றி அண்ணா.

உடன் விருதுபெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்

விருது பெற்ற உங்களுக்கும் வாழ்த்துகள்

vasu balaji said...

/ இது நம்ம ஆளு said...

நன்றி அண்ணா./
:).பாராட்டுக்கள்.