Tuesday, August 11, 2009

என்னா டெக்குனிக்கு?

என்னா சாபக்கேடோ தெரியாதுங்க. அரசு அதிகாரிங்களுஞ்செரி அவிங்க தங்கமணிங்களுஞ்செரி எவ்வளவுக்கு உசரத்தில இருக்காங்களோ அவ்வளவு மோசமா இருப்பாய்ங்க. அதுங்க அடிக்கிற அலம்பல கொஞ்சம் பாருங்க. அந்தகாலத்து ராஜாங்களுக்கு கூட இவ்வளவு கெத்து இருந்த்திருக்குமா தெரியாது. இதுங்க கிட்ட படுற அவஸ்தை இருக்கே. அப்படியே அப்பலாம் போல வரும். கொஞ்ச கேரக்டர பார்ப்பம் வாங்க.

ஐயா ஒண்ணு: ஒரு பெரிய மத்திய அரசு நிறுவனத்தின் தலைவரா இருந்து ஓய்வு பெற்றவர் இந்த ஐயா. இவர் யாருன்னே தெரியாம உலகம் முழுதும் இவர் பெயர் சொல்லும். ஆரம்ப நாள்ள வெள்ளி வெங்காயம் விலைக்கு வித்த நாள்ள திறப்பு விழா நடந்தா வெள்ளித் தட்டில பட்டுத் துணி போர்த்து வெள்ளிக் கத்தரியில் வெட்டித் துவக்குவாங்க போல. எல்லாமே வெட்டித் துவக்குறாங்களா? சிலது கொடியாட்டித் துவக்குவாங்க. சந்தனக் கழியில பட்டுக் கொடி சொருகி ஆட்டினாதான் துவங்குனா மாதிரி. அப்போவே சபதம் எடுத்திருப்பாரு போல. இதெல்லாம் விட்ரப்படாதுன்னு.

காலப் போக்கில துவக்க விழாவுக்கு ஏற்பாடு பண்ணுற நிலை உயர்ந்து துவக்கவிழாத் தலைவராகிற நிலைக்கு உசந்தாரு. துவக்கி வெச்சிட்டு கத்திரியை தட்டில் வைத்து விட்டு திரும்பிப் பார்க்காம போறதும், கொடியசைச்சிட்டு அசால்டா திரும்பக் கொடுக்கிறதும் பார்க்கிற யாருக்கும் சந்தேகம் வராது. அதெல்லாம் காருக்கு போவலைன்னா உதவியாளர் கந்தலாயிடுவாரு. கொடிக்கட்டைய பார்த்தா நகக்கீறலா இருக்கும். கொடியை கையில வாங்கின பொறவு பொடி போடுறவன் மாதிரி ரெண்டு விரலும் மூக்குக்கு போய்ட்டு வந்துகிட்டிருக்கும். சொரண்டி சந்தன வாசன வருதான்னு செக்கப்பு. அப்புராணி மனுசன் எல்லாத்தையும் கொண்டு பேங்க் லாக்கரில வெச்சி வாடகையும் கட்டிகிட்டு வருசம் ஒரு நாள் கிலோ கணக்கில திருநீரை போட்டு தேய்ச்சி பாலிஷ் பண்ணிட்டிருக்காம். தரமே இல்லைன்னு சலிப்பு வேற. வெள்ளி விக்கிற விலையில அரசு கணக்கில வாங்க முடியுமா? எல்லாம் வெள்ளீயம்/கன்மெடல்ல பண்ண தட்டும் கத்திரியும். சைனா சில்க் துணியை நல்லிப் பட்டுன்னு நினைச்சா என்ன பண்ண? தேக்கு கட்டையில சந்தன எண்ணெய் தடவி குடுத்ததும் தெரியல வெண்ணைக்கு. என்னா டெக்குனிக்கு?
_________________________________________________
_________________________________________________
தங்கமணி ஒண்ணு: நிஜம்மாவே பரம்பரையா பெரிய ஆளுங்க. புத்தி மட்டும் மகா கேவலம். திடீர்னு குளிக்க போறப்ப இங்க வெச்சிருந்த மோதிரத்த காணோம். மூக்குத்திய காணோம். பரம்பரை நகை. வைரம். யாரு எடுத்தான்னு ஒரு பீதிய கெள‌ப்பும். பாவம் வீட்டில வேல செய்ய நிறைய ஆளுங்க இருக்கும். போலீசுன்னு போய் நின்னா அடி பட்டு சாவணுமேன்னு அலறி புடைச்சி வீடு மொத்தம் புரட்டிப் போடுவாங்க. அம்மணி கிடைச்சதா கிடைச்சதான்னு அப்பப்ப எஃபெக்ட் குடுத்துகிட்டு அப்படியே எல்லாம் துடைச்சி இருந்தது இருந்த படி வைன்னு அதிகாரம் பண்ணும். பய புள்ளைய பாவம். சாப்பாட்டுக்கு போனா அந்த கேப்ல வித்துட்டன்னு சொல்லுவாங்களோன்னு மாய்ஞ்சு மாய்ஞ்சு தேடி, சுத்தம் பண்ணின்னு இருப்பாங்க. சொன்னா நம்ப மாட்டிங்க. பழய டூத் ப்ரஷ் வெச்சி தரையோரம் ஸ்கர்ட்டிங் மேலல்லாம் சுத்தம் பண்ணுவாங்க. சாப்பிட்டியா, தண்ணி குடிச்சியான்னு கூட கேக்காது. பொழுது சாய எல்லாம் ஓரளவு முடிஞ்சிருக்கும். வெளிய இருட்டுதோ இல்லையோ வேலைக்காரங்க முகம் இருட்டி இருக்கும்.இன்னும் கிடைக்கலையேன்னு. மெதுவா சரி சரி எல்லாம் சீக்கிரம் ஏறக்கட்டுங்க. ஜிம்மி மசுருல கிடைச்சுடுத்து. எப்படி அங்க போச்சிங்கும். இத்தனைக்கும் ஜிம்மி டாபர்மேன். என்னா டெக்குனிக்கு?
_________________________________________________
ரொம்ப பெருசா இருக்கு போல. குறைச்சிட்டேன். ஒன்னுமில்லைங்க. திறப்பு விழாக்கு ரிப்பன் வெட்ட குடுத்த கத்திரி, அது வெச்சிருந்த தட்டு எல்லாம் வெள்ளின்னு, கொடி சொருகுன கழி சந்தனக் கட்டைன்னு நினைச்சி சுட்டுகிட்டு போய் லாக்கர்ல வெச்சு பாது காக்குற ஒரு அப்புறாணியோட டெக்குனிக்கு. அது உண்மைல வெள்ளீயம். தேக்கு மரம்.

அடுத்தது சும்மா வீட்ட சுத்தம் பண்ணுன்னா சரியா பண்ணமாட்டங்கன்னு நகையக்கணோம்னு பீதியக் கிளப்பி விட்டா இண்டு இடுக்கெல்லாம் சுத்தம் பண்ணுவாங்கன்னு அம்மணி டெக்குனிக்கு. சுத்தம் பண்ணப்புறம் தன் வீட்டு நாயோட முடியில ஒட்டி இருந்ததுன்னு சொல்லும். அது டாபர்மேன் நாயீ. அதுக்கெங்க முடி மூக்குத்தி பதுங்கற அளவுக்கு.

12 comments:

யூர்கன் க்ருகியர் said...

ஒரு நாள் கழித்து வந்து பின்னூட்டங்களை படித்தால்தான் முழுதும் விளங்கும போலிருக்கு ! ஹும்..

காடுவெட்டி said...

எனக்கும் புரியல அதனால அப்பீட்டு பாலா :))))))

வானம்பாடிகள் said...

/ யூர்கன் க்ருகியர் said...

ஒரு நாள் கழித்து வந்து பின்னூட்டங்களை படித்தால்தான் முழுதும் விளங்கும போலிருக்கு ! ஹும்../

காடுவெட்டி said...

எனக்கும் புரியல அதனால அப்பீட்டு பாலா :))))))/


அது சரி. ரெண்டு பேருக்கும் வீட்டுக்கு கிளம்புற அவசரமாட்ருக்குது. அரக்காசு உத்தியோகம்னாலும் அரமண உத்தியோகம்னு சொலவடை இருக்கில்ல. அந்த பவருக்கு பின்னாடி இருக்கிற அல்பம் இது.

சூர்யா ௧ண்ணன் said...

//கொடிக்கட்டைய பார்த்தா நகக்கீறலா இருக்கும். கொடியை கையில வாங்கின பொறவு பொடி போடுறவன் மாதிரி ரெண்டு விரலும் மூக்குக்கு போய்ட்டு வந்துகிட்டிருக்கும். சொரண்டி சந்தன வாசன வருதான்னு செக்கப்பு.//

இப்படியெல்லாம் யோசிப்பாய்ங்களோ!

துபாய் ராஜா said...

ஒண்ணும் பிரியல..... :(

வானம்பாடிகள் said...

:)) வாங்க சூர்யா.

இராகவன் நைஜிரியா said...

அல்பத்துக்கு பவுசு வந்தா இப்படித்தான் போலிருக்கு.

எப்படியெல்லாம் திருடுடராங்கப்பா...

உழைப்பு சுரண்டலும் ஒரு விதத்தில் திருட்டுத்தான்..

வானம்பாடிகள் said...

/இராகவன் நைஜிரியா said...

உழைப்பு சுரண்டலும் ஒரு விதத்தில் திருட்டுத்தான்../

சரியாச் சொன்னீங்க‌

பிரியமுடன் பிரபு said...

"என்னா டெக்குனிக்கு?"

Maheswaran Nallasamy said...

சிறுபுள்ளதனமாள்ள இருக்கு!!!!..டெக்குனிக்கு இருந்து என்ன பிரயோசனம்? கட்டை காடு போறப்போ எல்லாத்தையும் உருவிட்டு அம்மனகட்டயாதான் அனுப்ப போராய்ங்க.. அதுக்குள்ள ஏன்னா ஆட்டம்? ராஸ்கல்ஸ்!!!

வானம்பாடிகள் said...

/ பிரியமுடன் பிரபு said...
"என்னா டெக்குனிக்கு?"/

கிடைச்சத அடிக்கிறதும், ஏழை பாழைங்களை வாட்டி வதக்குறதும்தான்.

வானம்பாடிகள் said...

/கட்டை காடு போறப்போ எல்லாத்தையும் உருவிட்டு அம்மனகட்டயாதான் அனுப்ப போராய்ங்க.. அதுக்குள்ள ஏன்னா ஆட்டம்? ராஸ்கல்ஸ்!!!/

அப்பவும் நடக்குற பந்தால்லாம் கேட்டா இப்பிடியெல்லாமா நடக்குதுன்னு அசந்து போவீங்க மகேஸ். அது தனி உலகம்.