Thursday, August 27, 2009

நறுக்குன்னு நாலு வார்த்த - 99

"சானல் 4" வெளியிட்ட காட்சிகள் குறித்து இந்திய மத்திய அரசு அதிக கரிசனை

ஐய்ய்ய்யோ! புல்லரிக்குது. யார் மேல கரிசனை? மாட்டிகிட்டானேன்னா? ஒட்டப்பாலம் ஒண்ணா கூடி ஏதோ சொல்லிக் கொடுக்கும். செத்தது சிங்களவன். சுட்டது புலி. சீருடை டுபாக்குருன்னு. போங்கடா உங்க கரிசனை.
________________________________________________
வவுனியா முகாம்களில் உள்ள சிறுவர்கள்,பாலியல் துன்புறுத்தல்களுக்கு உட்பட்டுள்ளனர்: அவுஸ்திரேலிய தொண்டு நிறுவனம்

ஆமாங்க. இந்தப் புள்ளிவிவரமெல்லாம் சரியா வச்சிருங்க. நாள பின்ன இவனுக்கு அப்பன் ஒருத்தன் வருவான். அவன் இவ்வளவு பேரை நாசம் பண்ணப்பவே சும்மா இருந்தீங்க. நான் பண்ணது ஒண்ணுமே இல்லைன்னு.
________________________________________________
இலங்கையில் முறையற்ற நிர்வாகமே காணப்படுகிறது: ஆசிய அபிவிருத்தி வங்கி

எல்லாம் சொல்றீங்க. ஆனா கொட்டிக் குடுக்குறீங்களே பரதேசிங்களே.
________________________________________________
ராஜபக்சவின் தமிழின அழிப்பை இந்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

கும்பகர்ணன் தம்பி இவரு. ஆறுமாசம் தூங்கி இப்போதான் விழிச்சிருக்காரு. இன்னும் தடுத்து நிறுத்த என்ன இருக்கு?
________________________________________________
இலங்கையில் பொதுமக்கள் கொல்லப்பட்டமை தொடர்பில் சர்வதேச விசாரணை அவசியம்: சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம்

ஆமாம்! ரொம்ப அவசியம். அதுலையும் எல்லாருமா சேர்ந்து கைய தூக்கிட்டா அப்படியெல்லாம் ஒண்ணுமே நடக்கலைன்னு தீர்ப்பாயிடும்.
________________________________________________
படகோட்டிகளால் கைவிடப்பட்டு தமிழக மீனவர்களிடம் நகைகளை இழந்த அகதிகள்

இதுக்கு வேற எப்படியோ பிழைக்கலாம். இன்னும் நம்மாளுங்களை நம்பி வராங்களே. இந்த கொடுமைய எங்க போய் சொல்ல?
________________________________________________
ஜனாதிபதி தேர்தலில் 1 .75 லட்சம் மக்களின் வாக்குகளை பறிப்பதற்காகவே மீள்குடியேற்றத்தை அரசு தாமதிக்கிறது: மனோ கணேசன்

ஏங்ணா? உங்களுக்கு மனுசனெல்லாம் ஓட்டாதான் தெரியுமா?
________________________________________________
சரத்பொன்சேகா தொடர்பிலான செய்திகளை வெளியிட உள்ளகத் தடையாம்

அவனையும் வலையத்துக்குள்ள அனுப்புங்கப்பா. கொஞ்சம் ஆறுதலா இருக்கும்.
________________________________________________
ராகுலைச் சந்தித்தார் விஜய்! காங்கிரசில் இணைவு?

படம் ஓடலைன்னு இப்படியா பழிவாங்குவ. அது என்னா சாபமோ, தமிழச் சொல்லியே தமிழச் சாவடிக்கிறாய்ங்கப்பா.
________________________________________________
செட்டிக்குள தடுப்பு முகாமில் நாளாந்தம் தமிழர்கள் வெள்ளை வானில் கடத்தல் - பி.பி.சி சிங்கள சேவை

சே சே. உள்ளையே இருந்தா வெறுப்பா இருக்கும்னு பிக்னிக் கூட்டிட்டு போனேன்னு சொல்லுவான்.
________________________________________________
இலங்கை முகாம்களில் அனாதையாக சுற்றும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறுவர்கள்

தமிழனென்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா. பேசாம சுரணைக்கு க்ளோபல் டெண்டர் விட்டு காசு பார்க்கலாம்.
________________________________________________
இலங்கையில் 300 கண்ணிவெடிகளை அகற்றினோம்:இந்தியக் குழு

இதுக்காடா 1200 பேரு போனீங்க. அடுத்த ஆப்பும் பக்ஸேக்கு வச்சாச்சி. அண்ணனே சொல்லிட்டான் இனியும் ஏண்டா அடைச்சி வச்சிருக்கன்னு எந்தக் கபோதிப் பயலாவது கேப்பானா?
________________________________________________
முகாமிலிருந்து 800 பூசாரிகளை விடுவிக்கும் இலங்கை

ஏன். சாமி வந்து கனவில சொல்லிச்சோ. இவங்கள மட்டும் விடுன்னு.
________________________________________________
மக்களை சந்திக்க ஜெ.வுக்கு பயம்: EVKS இளங்கோவன்

நீ வெளிய வந்து சொல்லு முதல்ல.
________________________________________________
ஓட்டுக்குப் பணம்: தமிழகத்துக்கு பெருத்த அவமானம்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்

அப்படி நினைச்சித்தான் மொத்தமா லவட்டிட்டு ஊத்திக்கிச்சோ?
________________________________________________
மலேசிய ஓட்டலில் தமிழர்களுக்கு சித்ரவதை

பாஸ்போர்ட்ல இவன் நல்லவன்னு எழுதிடுறானோ. எவனப் பார்த்தாலும் அடிக்கிறான்?
________________________________________________
தமிழை மத்திய ஆட்சி மொழியாக்கவேண்டும்:ராமதாஸ்

தமிழன் தொலைக்காட்சியை அரசாங்கத் தொலைக்காட்சியாக்க வேண்டும்!
________________________________________________
அதிக அளவில் சிகரெட் பிடிக்கும் பெண்களுக்கான பட்டியலில் இந்தியாவுக்கு 3வது இடம்

ஸ்டைலு ஸ்டைலுதான். சூப்பர் ஸ்டைலுதான்.
________________________________________________
ஏழை மாணவர்களின் கல்விக் கடன் வட்டி ரத்து!

ஆமாம். விளம்பரத்துலதேன். நேர்ல போனா கல்வியும் வட்டியும் தூக்கிட்டு கடன் ரத்தும்பான்.
________________________________________________
லஞ்ச, ஊழல் வழக்குகளில் சிக்கும் பெரிய மனிதர்களை நழுவவிடக் கூடாது: பிரதமர் மன்மோகன் சிங்

பூட்டாசிங்கைத் தவிரவாங்கைய்யா?
________________________________________________
நண்பரை திருமணம் செய்ய மாலையுடன் வந்த வாலிபர்:மந்திரம் சொல்ல மறுத்த அர்ச்சகருக்கு அடி

ஏண்டா. லொள்ளுக்கு அளவில்லையா? இப்பதானே கோர்ட்ல தப்பில்லன்னாங்க. இனிமேதான் மந்திரம் மாத்தணும். அதுக்குள்ளயேவா அடிக்கறது ?
______________________________________________
தோழியை திருமணம் செய்யும் டென்னிஸ் வீராங்கனை

இவங்க மட்டைய வேற வேச்சிருப்பாங்களே! யாரு அடி வாங்க போறாங்களோ ?
________________________________________________

24 comments:

Kiruthikan Kumarasamy said...

///ராஜபக்சவின் தமிழின அழிப்பை இந்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி///

இதை செய்தியாக வாசிச்சபோதே நினைச்சேன்... ஆஹா..பாலாகிட்ட மாட்டப்போறாங்களே என்று. மாட்டிட்டங்க.... நறுக்கிட்டீங்க

வானம்பாடிகள் said...

Kiruthikan Kumarasamy said..
/இதை செய்தியாக வாசிச்சபோதே நினைச்சேன்... ஆஹா..பாலாகிட்ட மாட்டப்போறாங்களே என்று. மாட்டிட்டங்க.... நறுக்கிட்டீங்க/

பின்ன என்னாங்க. சும்மாவானாலும் இருந்து தொலையராங்களா. குத்தி குத்திப் புண்ணாக்குறானுவ.

லவ்டேல் மேடி said...

செம கமெண்ட்ஸ்...!! கலக்கல்....

பழமைபேசி said...

100க்கு வாழ்த்துகள் அண்ணே!

கதிர் - ஈரோடு said...

//பூட்டாசிங்கைத் தவிரவாங்கைய்யா//

ஆமாங்கைய்யா

வானம்பாடிகள் said...

லவ்டேல் மேடி said...

/ செம கமெண்ட்ஸ்...!! கலக்கல்....//

நன்றி மேடி!

வானம்பாடிகள் said...

பழமைபேசி said...

/ 100க்கு வாழ்த்துகள் அண்ணே!//

நன்றி பழமை!

வானம்பாடிகள் said...

கதிர் - ஈரோடு said...

//பூட்டாசிங்கைத் தவிரவாங்கைய்யா//

ஆமாங்கைய்யா

:)). இதான் பெரிய மீனுங்க

யூர்கன் க்ருகியர் said...

//ராகுலைச் சந்தித்தார் விஜய்! காங்கிரசில் இணைவு?
//

குருவி படம் நடித்து பல பேர கொன்னபோதே லைட்டா ஒரு டவுட் ...நீ காங்கிரஸ் காரனா இருப்பியோன்னு..

யூர்கன் க்ருகியர் said...

//சரத்பொன்சேகா தொடர்பிலான செய்திகளை வெளியிட உள்ளகத் தடையாம்
//

ஒரு வேளை சரத்புண்சேகா செத்துருப்பானோ ?

யூர்கன் க்ருகியர் said...

//ராஜபக்சவின் தமிழின அழிப்பை இந்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
//
கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்..

யூர்கன் க்ருகியர் said...

//இலங்கையில் முறையற்ற நிர்வாகமே காணப்படுகிறது: ஆசிய அபிவிருத்தி வங்கி
//

குறையற்ற வகையில் நிதியை குடுத்துட்டு முறையற்ற நிர்வாகம்னு இப்ப கூவி என்ன பிரயோஜனம் சாமீ .

யூர்கன் க்ருகியர் said...

//"சானல் 4" வெளியிட்ட காட்சிகள் குறித்து இந்திய மத்திய அரசு அதிக கரிசனை//

இந்திய மத்திய அரசு இல்ல... தமிழனின் முதுகில் குத்திய அரசு.
கத்திய எடுத்து குத்திப்புட்டு ....ஐயோ பாவம் உனக்கு ரத்தம் வருதுன்னானாம்..

யூர்கன் க்ருகியர் said...

//மக்களை சந்திக்க ஜெ.வுக்கு பயம்: EVKS இளங்கோவன்//

கேட்டுக்கங்கப்பா... நாட்டுக்கு முக்கியமான மேட்டர் சொல்லியிருக்காரு..இளங்"கூவம்.

யூர்கன் க்ருகியர் said...

//மலேசிய ஓட்டலில் தமிழர்களுக்கு சித்ரவதை
//
நாம எப்பவும் இப்படித்தான் பாஸ் ...அடி வாங்கிகிட்டே இருப்போம்.
ஒரு சேஞ்சுக்கு திருப்பி அடிக்கலாம்னு பார்த்தா வீரன் ஒருத்தன் கூட இல்ல..
அல்லாரும் பேனாவும் நோட்டுமா லெட்டரு எழுதி போஸ்ட் பண்ணிக்கிட்டும் இல்லனா லேப்டாப் ஐ தூக்கிக்கிட்டு ப்லோக் ல போஸ்ட் பண்ணிக்கிட்டும் இருக்காக...

யூர்கன் க்ருகியர் said...

//லஞ்ச, ஊழல் வழக்குகளில் சிக்கும் பெரிய மனிதர்களை நழுவவிடக் கூடாது: பிரதமர் மன்மோகன் சிங்
//

பாகிஸ்தான் தீவிரவாதி இன்னொரு முறை பார்லிமென்டை குறி வச்சு அடிச்சான்னா உங்க கோரிக்கை நிறைவேறிடும் மண்ணு மொக்க சிங்கு .....

யூர்கன் க்ருகியர் said...

//தமிழை மத்திய ஆட்சி மொழியாக்கவேண்டும்:ராமதாஸ்
//
இந்த மாதிரி அறிக்கை விடுவதற்கு பதிலாக நீங்க கம்முன்னு " ப்ரெசென்ட் சார் " அப்படின்னு ஒரு அறிக்கை விட்டிருக்கலாம் .
நானும் அரசியல்வாதி தான்னு கான்பிக்கரதுக்கு என்னன்னலாவோ பண்ண வேண்டி இருக்கு...ஸ்ஸ்ஸ் ஷப்பா....
குறிப்பு : நீங்க பீல் பண்ணாம இருங்க ..அடுத்த தேர்தல் வருவதற்கு முன்னாடி ஒரு ஸ்ப்ரிங் வச்ச செருப்பு வாங்கி தாரேன். தாவுவதற்கு ஈஸி ஆ இருக்கும்

யூர்கன் க்ருகியர் said...

///சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம//

கொல்ற வரை பேசாம வேடிக்கை பார்த்து இருந்துட்டு செத்து போன பிறகு கொலை கொலை ன்னு கத்துனானாம்.

நாய் நரி, மான், மயில் ,,ஏன் பண்ணிய கொன்னா மட்டும் நம்மாளுக கூட்டமா கெளம்பி வருவானுக..மனுஷன் செத்தா மட்டும் சிங்குளா கெளம்பி போயடுராங்கையா....

யூர்கன் க்ருகியர் said...

சார் எப்ப 100 ?

யூர்கன் க்ருகியர் said...

சார் ..... நூறை சாதாரணமா நறுக்காதீங்க..... வீச்சருவாளால நறுக்குங்க... :)
ஒரே நறுக்குல நூறு துண்டா போகோணும்.. : ஆமா ...

இது நம்ம ஆளு said...

இலங்கையில் முறையற்ற நிர்வாகமே காணப்படுகிறது: ஆசிய அபிவிருத்தி வங்கி

கொல்லப்பட்டமை தொடர்பில் சர்வதேச விசாரணை அவசியம்: சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம்

ஆமாம்! ரொம்ப அவசியம். அதுலையும் எல்லாருமா சேர்ந்து கைய தூக்கிட்டா அப்படியெல்லாம் ஒண்ணுமே நடக்கலைன்னு தீர்ப்பாயிடும்.


என்னவென்று கூறுவது ?

வானம்பாடிகள் said...

யூர்கன் க்ருகியர் said...

/சார் ..... நூறை சாதாரணமா நறுக்காதீங்க..... வீச்சருவாளால நறுக்குங்க... :)
ஒரே நறுக்குல நூறு துண்டா போகோணும்.. : ஆமா .../


வாங்க யூர்கன். மாட்டினா வீசறதுதான். ஆனாலும் உங்க மாதிரி வருமா? அசத்துறீங்க நிஜம்மா.

வானம்பாடிகள் said...

இது நம்ம ஆளு said...

/என்னவென்று கூறுவது ?/

வாங்க! அதாங்க தெரியல.

Suresh Kumar said...

//லஞ்ச, ஊழல் வழக்குகளில் சிக்கும் பெரிய மனிதர்களை நழுவவிடக் கூடாது: பிரதமர் மன்மோகன் சிங்

பூட்டாசிங்கைத் தவிரவாங்கைய்யா?
//
நம்ப கலைஞ்சரை விட்டுட்டிங்கலே அண்ணே.