Monday, August 24, 2009

நறுக்குன்னு நாலு வார்த்த - 98

விடுதலைப் புலிகளுக்கு சொந்தமான கப்பல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணைகள்

அதான் தகவல் குடுத்தது யாருன்னு புத்தகமே வந்தாச்சாமே ! நாங்களே கண்டு பிடிச்சோம்னு சொல்லிக்கவா?
__________________________________________
புலிகளின் ஆயுதக் கப்பல்கள் பற்றிய புலனாய்வுத் தகவல்களை வழங்கியது உட்பட மிக முக்கியமான, மூடிமறைக்கப்பட்ட பங்களிப்பை இந்தியா வழங்கியுள்ளது : 'சிறிலங்கா - போரில் இருந்து அமைதிக்கு'

ஆஹா. வர ஆரம்பிச்சிடுசா? ஆமாம் பண்ணோம்னு சொன்னாலும் எங்காளுவளுக்கு கூட்டணிதான் முக்கியம்.
__________________________________________
கொரில்லா போருக்கு தயாராகும் விடுதலைப்புலிகள்

உங்க கிட்ட வந்து சொன்னாங்களா? சும்மாவே குரங்குப்பய. இவனுவ கொள்ளிக்கட்டைய வேற குடுப்பானுவ.
__________________________________________
நாம் புலிகளின் கெரில்லா தந்திரோபாயத்தினை பின்பற்றினோம் அதுதான் வெற்றிக்கு காரணம் - சரத் பொன்சேகா

எது? பாது காப்பு வலயதுக்குள்ள வர வெச்சி பச்ச புள்ளைங்கள சாவடிச்சதா? அதுக்கு உங்க அகராதில கெரில்லாவா? அது பேரு பச்ச துரோகம். போடாங்.
__________________________________________
என் தேர்தல் தோல்விக்கு ராஜபக்சே காரணமல்ல:மணிசங்கர் அய்யர்

இதுக்கு கூட அவன் காரணமில்லைன்னு சொல்லி கால நக்கறது எதுக்கு?
__________________________________________
நாம் தமிழர் இயக்கம் அரசியல் இயக்கமாக மாறும்: இயக்குநர் சீமான்

திருமாவ நம்பினோம். நாசமா போச்சி. அரசியல்னு போனா கடிவாளம் விழுமே ஐயா. நீங்களுமா?
__________________________________________
பாகிஸ்தானே எமது முதலாவது நண்பன் நாம் அவர்களிற்கு நிறைய கடமை பட்டிருக்கின்றோம் - சிறிலங்கா இராணுவம்

நாராயணா! சிவ சங்கரா! தேவையா? ஆமாம் நண்பனைச் சொல்லு உன்னை சொல்லுறேன்னு ஏதோ சொல்லுவாங்கல்ல?
__________________________________________
ஈழத்துக்காக அமைதி வழியில் போராடுவோம்: வைகோ

எப்படி. பொத்திக்கிட்டு கம்னு இருந்துடலாமா?
__________________________________________
காந்தி படம் போட்ட 100 ரூபாய், 500 ரூபாய் நோட்டுகளுக்குதான் இடைத் தேர்தலில் வெற்றி கிடைத்தது.

நாளைக்கு டங்குவாலு லபோ திபோன்னு அடிச்சிக்கும். காந்திக்கு பேரன் நாந்தானு.
__________________________________________
புலிகளுக்குச் சொந்தமான 10 சிறிய ரக வானூர்திகள் எரித்திரியாவில் தரித்து நிற்கின்றன: சிங்கள நாளேடு

எல்லாம் காலிபண்ணிட்டோம்னு அலட்டுனது என்ன?
__________________________________________
20 வருட காலத்திற்கு ஜனாதிபதி ஆட்சி நடத்துவார்: பந்துல குணவர்தன

விசுவாசத்துக்கு ஒரு அளவில்லையாடா? உன் நேரம் சரியில்லைன்னா அதுக்கப்புறம் நடத்தமாட்டனான்னு வேன் வரும் சாக்கிரத.
__________________________________________
திருவாங்கூர் ராஜவைத்திய சாலை டாக்டர் விடுதலை

அடப்பாவிங்களா! மோசடிய பெரிய ரேஞ்ச்ல பண்ணா சீக்கிரம் விட்றுவாய்ங்களோ ?
__________________________________________
விடுதலைப் புலியாருக்கு தடைவிதித்தது போன்று விடுதலை சிறுத்தையாருக்கும் தடை விதிக்க மத்திய அரசு ஆலோசனை

தோடா! ஆக தடை புலிக்கும் சிங்கத்துக்கும் இல்லை. விடுதலைதான் உறுத்தல். வாழ்க சனநாயகம்.
__________________________________________
சென்னை: நவீனமாகும் தொற்றுநோய் மருத்துவமனை

எது நவீனமாகுது? தொற்றுநோயா? மருத்துவமனையா?
__________________________________________
பெண் போதை சாமியாரின் வீட்டுக்கு சீல்வைக்கப்பட்டது

வீட்டுக்குத் தானே? பாட்டிலுக்கு இல்லைல்ல? பேரு வைக்கிறானுங்க பாரு போதை சாமியாராம்.
__________________________________________
இலங்கையின் அபிவிருத்தியில் சீனா பிரதான பங்குதாரர்: பசில் ராஜபக்ஷ

வித்துட்டிங்களாடா? வேற யாரெல்லாம் பங்கு?
__________________________________________
இலங்கையில் இடம்பெற்ற இன ஒடுக்குமுறைக்கு எதிராக சர்வதேச ரீதியில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் : பிரான்ஸிஸ் பொய்லி

கிழிஞ்சுடும். கண்டனத்துக்குரியது. எதிர்காலத்தில் இவ்வாறு நடக்காமல் எச்சரிக்கப் படுகிறார்கள்னு சொல்லிடுவாய்ங்க.
__________________________________________

15 comments:

கலகலப்ரியா said...

//விடுதலைப் புலியாருக்கு தடைவிதித்தது போன்று விடுதலை சிறுத்தையாருக்கும் தடை விதிக்க மத்திய அரசு ஆலோசனை

தோடா! ஆக தடை புலிக்கும் சிங்கத்துக்கும் இல்லை. விடுதலைதான் உறுத்தல். வாழ்க சனநாயகம்.//


இது நல்லா இருக்குங்க.. கொஞ்சம் நான் யோசிக்கிறாப்ல இருக்கு.. :P

கலகலப்ரியா said...

//ஈழத்துக்காக அமைதி வழியில் போராடுவோம்: வைகோ

எப்படி. பொத்திக்கிட்டு கம்னு இருந்துடலாமா?//
ஹும்.. ! அதேதானுங்க..

வானம்பாடிகள் said...

/கலகல said...
இது நல்லா இருக்குங்க.. கொஞ்சம் நான் யோசிக்கிறாப்ல இருக்கு.. :P/

:D நிஜம்மாவா. நன்றி ப்ரியா!

வானம்பாடிகள் said...

/கலகலப்ரியா said...

ஹும்.. ! அதேதானுங்க..//

அதான் செரி. சும்மா சவுன்ட் விட்டு ஆகப்போறது ஒண்ணுமில்லை.

ராஜ நடராஜன் said...

கலக்கறமா? குழப்பறமா?

கலக்!

வானம்பாடிகள் said...

/ ராஜ நடராஜன் said...

கலக்கறமா? குழப்பறமா?

கலக்!/

:)). வாங்க நடராஜன் சார். நல்லா இருக்கீங்களா?

Kiruthikan Kumarasamy said...

எத்தனை தரம் வேணும் எண்டாலும் திருப்பித்திருப்பிச் சொல்லுவன்.. நறுக்கென்று நாலு வார்த்தை சுருக்கென்று தைக்கிறது

வானம்பாடிகள் said...

/Kiruthikan Kumarasamy said...
எத்தனை தரம் வேணும் எண்டாலும் திருப்பித்திருப்பிச் சொல்லுவன்.. நறுக்கென்று நாலு வார்த்தை சுருக்கென்று தைக்கிறது/

:) நன்றி

யூர்கன் க்ருகியர் said...

//நாம் புலிகளின் கெரில்லா தந்திரோபாயத்தினை பின்பற்றினோம் அதுதான் வெற்றிக்கு காரணம் - சரத் பொன்சேகா
//

சூனியா குடுத்த எந்திர உபயத்தினை பின்பற்றினோம் - சரத் புண் சேகா..

யூர்கன் க்ருகியர் said...

//ஈழத்துக்காக அமைதி வழியில் போராடுவோம்: வைகோ
//

இந்த ஊரு இன்னுமுமா நம்புது.?.......

யூர்கன் க்ருகியர் said...

//நாம் தமிழர் இயக்கம் அரசியல் இயக்கமாக மாறும்: இயக்குநர் சீமான்
//

அய்யா.. நிரந்தர உறுப்பினரா என்னையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.

யூர்கன் க்ருகியர் said...

//என் தேர்தல் தோல்விக்கு ராஜபக்சே காரணமல்ல:மணிசங்கர் அய்யர்
//

அடிக்கடி காது பக்கம் " ங்கொய் ...ங்கொய்.." ன்னு சவுண்ட் வருது ...
ஏலே...பெல் பாய்,,, கொஞ்சம் எட்டி நில்லுலே!!

க. பாலாஜி said...

//திருவாங்கூர் ராஜவைத்திய சாலை டாக்டர் விடுதலை
அடப்பாவிங்களா! மோசடிய பெரிய ரேஞ்ச்ல பண்ணா சீக்கிரம் விட்றுவாய்ங்களோ ?//

அட அப்படிதான் பண்றாங்க...

//விடுதலைப் புலியாருக்கு தடைவிதித்தது போன்று விடுதலை சிறுத்தையாருக்கும் தடை விதிக்க மத்திய அரசு ஆலோசனை
தோடா! ஆக தடை புலிக்கும் சிங்கத்துக்கும் இல்லை. விடுதலைதான் உறுத்தல். வாழ்க சனநாயகம்.//

இது என்னவோ உண்மை என்றுதான் தோன்றுகிறது...

நல்ல பதிவிடல் அய்யா..
____________________________________

வானம்பாடிகள் said...

யூர்கன் க்ருகியர் said...

/சூனியா குடுத்த எந்திர உபயத்தினை பின்பற்றினோம் - சரத் புண் சேகா..//

ஆஹா. அடி தூள்.

/இந்த ஊரு இன்னுமுமா நம்புது.?.......//

அவரே நம்புறாரான்னே சந்தேகம்.

/அய்யா.. நிரந்தர உறுப்பினரா என்னையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.//

போச்சுடா. சீமானுக்கு சரியான ஆள் தான் நீங்க.

/அடிக்கடி காது பக்கம் " ங்கொய் ...ங்கொய்.." ன்னு சவுண்ட் வருது ...
ஏலே...பெல் பாய்,,, கொஞ்சம் எட்டி நில்லுலே!!//

=)) யப்பா சாமி. தாங்காது.

வானம்பாடிகள் said...

க. பாலாஜி said...
/அட அப்படிதான் பண்றாங்க.../

ஆமாங்க. அப்புறம் என்ன ஆகுதுன்னு யாருக்கும் தெரியறதில்லை.

/இது என்னவோ உண்மை என்றுதான் தோன்றுகிறது.../

ஆமாங்க.

வரவுக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி