Saturday, August 22, 2009

நறுக்குன்னு நாலு வார்த்த - 97

பான் கீ மூனின் செயற்பாடுகளினாலேயே பிரபாகரனை காப்பற்ற முடியாமல் போனது – மோனா யூல்

எல்லாருக்கும் தெரிஞ்சதுதான். ஆனா ஏன்னு தெரியலையே?
__________________________________________________________
இலங்கை விமானப் படையே உலகிலேயே சிறந்தது என்கிறார் கோத்தபாய

படையப்பா ரஜனி சொன்னா மாதிரி விமானம் உன்னோடது தான். ஓட்டுனது யாருடா?
__________________________________________________________
வடக்கில் உள்ள இராணுவ முகாம்கள் நிரந்தரமாக முகாம்களாக மாற்றப்படும் - அரசாங்கம்

சுத்தியும் இவன வெச்சி உள்ள சிங்களத்தான வச்சிடுவ. அதுக்குதானே இவ்வளவு நரபலி.
__________________________________________________________
சர்வதேச சமூகத்தின் உதவிகளை இலங்கை இழக்க நேரிடும் -அமெரிக்கா

மிதமிஞ்சி குடுத்ததே நெஞ்சுமுட்டும் அவனுக்கு. இன்னமும் என்ன குடுக்கப் போறீங்க?
__________________________________________________________
இடம்பெயர்ந்த மக்களை அழுத்தங்கள் காரணமாக மீள்குடியேற்றிவிட முடியாது. - லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன

அப்பப்ப இத சொல்லி வேற ஏண்டா வெறுப்பேத்துறீங்க? அந்த மாதிரி ஒரு நோக்கமே இல்லைன்னு தெரிஞ்சும் தானே அகில உலகமும் அள்ளிக் கொடுக்குது.
__________________________________________________________
இலங்கைத் தமிழர்களைப் பாதுகாக்க, புலம்பெயர் தமிழர்கள் ஒன்று திரண்டு, தமிழீழம் மலரச் செய்வார்கள்: வைகோ

அதாஞ்செரி. நாம ஒரு புண்ணாக்குக்கும் லாயக்கில்ல. காச வாங்கினமா. ஓட்டைப் போட்டமா, போனமானு இருக்கலாம்.
__________________________________________________________
விடுதலைப் புலிகளுடனான யுத்தத்திற்கு பிரித்தானியாவிடம் ஆயுதம் பெற்றுக்கொள்ளவில்லை: இராணுவத் தளபதி

கொக்கு சுடவா வாங்கின பின்ன? ஒண்ணொண்ணையும் பெத்தாங்களா செஞ்சாங்களா தெரியல.
__________________________________________________________
தமிழர் பிரச்சினைக்கு எதற்கு அரசியல் தீர்வு? : பாலித கோஹன பேட்டி

அது சரிவராது உங்ககிட்டன்னு தானே ஆயுதமெடுத்தாங்க? எடுக்க வெச்ச உங்கள உலகம் சீராட்டுது. தற்காத்த ஜனங்களை உலகம் அழிச்சது.
__________________________________________________________
புலிகளுடனான போரில் 14,000 இராணுவத்தினர் கால்களை இழந்துள்ளனர்

நீ குடுக்கிறது பொய் கணக்குன்னு தெரியும்டி. ஆனா கால் போனது மட்டுமே இவ்வளவுன்னா மத்த கணக்கு எப்படி இருக்கும்?
__________________________________________________________
முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியாவில் வெளிநாட்டுப் படையினருக்கு பயிற்சிகைள வழங்கும் படையப் பள்ளிகள்

இன அழிப்பு வல்லுனர்களாச்சே. ஐ.நா. படை கூட பயிற்சிக்கு வந்தாலும் வரும்டி. உங்க நேரம்.
__________________________________________________________
பிரபாகரன் திரைப்படம்:மாவீரர் தினத்திற்கு பிறகு படப்பிடிப்பு ஆரம்பம்

பாட்டு இல்ல, டேன்ஸ் இல்ல, பறந்து பறந்து பைட்டிங் இல்ல. கிளைமாக்ஸ் புரிலம்பான் தமிழ்நாட்டு தமிழன். இங்க ரிலீஸ் பண்ணாதீங்க. ஹிந்துல விமரிசனம் கூட ஒழுங்கா வராது.
__________________________________________________________
பாகிஸ்தான் ராணுவத்திற்கு இலங்கை பயிற்சி

இதென்னாங்கடா கூத்து. இனிமே அழிக்க ஆளில்லன்னதும் நாந்தான் உதவினேன்னான் பாகிஸ்தான். அவனுக்கே இவரு பயிற்சி தராராம்ல. எப்படா நிஜம் பேசினீங்க.
__________________________________________________________
புலிகளுக்கு ஆதரவாக பேசிய திருமாவளவன் மீது அரசு நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறேன்: தங்கபாலு

புலிகளுக்கு ஆதரவா இருந்த இந்திரா காந்தியை கண்டிக்கிறேன்னு சொல்லு பார்ப்பம். பொழப்பு ஓடுதான்னு. நம்புனவங்கள நாசம் பண்ணிட்டு பேசுறாரு.
__________________________________________________________
அரசு பிரசார படத்தில் நடிக்க அமீர்கான் மறுப்பு

ஒரு இன்கம் டாக்ஸ் ரெய்ட் பண்ணா ஒத்துக்குவாரு.
__________________________________________________________
திருப்பதி கோவில் நகைகள் அடகு. அர்ச்சகர் கைது!

அர்ச்சகர் நகைய வெச்சா அறங்காவலர் கோவிலையே வெச்ச்ருக்கப் போறாரு. சாமியவாவது விட்டு வைங்கப்பா.
__________________________________________________________

17 comments:

கதிர் - ஈரோடு said...

//ஒரு இன்கம் டாக்ஸ் ரெய்ட் பண்ணா ஒத்துக்குவாரு.//

நெத்தியடி போங்க

வானம்பாடிகள் said...

/கதிர் - ஈரோடு said...

நெத்தியடி போங்க//

நன்றி கதிர்:)

sakthi said...

புலிகளுக்கு ஆதரவாக பேசிய திருமாவளவன் மீது அரசு நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறேன்: தங்கபாலு

புலிகளுக்கு ஆதரவா இருந்த இந்திரா காந்தியை கண்டிக்கிறேன்னு சொல்லு பார்ப்பம். பொழப்பு ஓடுதான்னு. நம்புனவங்கள நாசம் பண்ணிட்டு பேசுறாரு.

சூப்பர் அப்பு

sakthi said...

விடுதலைப் புலிகளுடனான யுத்தத்திற்கு பிரித்தானியாவிடம் ஆயுதம் பெற்றுக்கொள்ளவில்லை: இராணுவத் தளபதி

கொக்கு சுடவா வாங்கின பின்ன? ஒண்ணொண்ணையும் பெத்தாங்களா செஞ்சாங்களா தெரியல.

அதானே

யூர்கன் க்ருகியர் said...

//பான் கீ மூனின் செயற்பாடுகளினாலேயே பிரபாகரனை காப்பற்ற முடியாமல் போனது//

பான் கீ மூன் ஒரு பாடு ...அவன்கிட்ட ஏது நல்ல செயல்பாடு?
பாடு = Baadu என்று படிக்க

யூர்கன் க்ருகியர் said...

//இலங்கை விமானப் படையே உலகிலேயே சிறந்தது என்கிறார் கோத்தபாய
//

Made in (India+china+pakistan+israel..) certified by UN ...MISUSED by third party troops in SL under surveilance of Indian Radars.

யூர்கன் க்ருகியர் said...

//சர்வதேச சமூகத்தின் உதவிகளை இலங்கை இழக்க நேரிடும் -அமெரிக்கா//

வாயில் மட்டும் அறிக்கை விடறவன நினச்சா "நல்லா வாயில வருது" .......

வானம்பாடிகள் said...

/யூர்கன் க்ருகியர் said...
Made in (India+china+pakistan+israel..) certified by UN ...MISUSED by third party troops in SL under surveilance of Indian Radars./

Super

வானம்பாடிகள் said...

யூர்கன் க்ருகியர் said...
வாயில் மட்டும் அறிக்கை விடறவன நினச்சா "நல்லா வாயில வருது" ......./

=))

யூர்கன் க்ருகியர் said...

//இலங்கைத் தமிழர்களைப் பாதுகாக்க, புலம்பெயர் தமிழர்கள் ஒன்று திரண்டு, தமிழீழம் மலரச் செய்வார்கள்: வைகோ
//

தமிழ்நாட்டு தமிழர்களால் ஒரு பிரயோஜனமும் இல்லை என்று தேர்தலிலேயே தெரிந்து விட்டது .... உங்களுக்கு இப்பதான் தெரிஞ்சதா ?

Kiruthikan Kumarasamy said...

பாலா,
கிட்டத்தட்ட அடுத்த ‘நறுக்கு' எப்போது என்று எதிர்பார்த்திருக்க வைத்து விட்டீர்கள். நூறாவது நறுக்கு காரமோ காரமா இருக்கணும் சொல்லிப்புட்டேன் ஆமா..

நீங்களாவது பரவாயில்லை...ஆனா நம்ம யூர்கன் க்ருகியர் மட்டும் நறுக்க ஆரம்பிச்சு யாராச்சும் அவங்களுக்கு மொழிபெயர்த்து சொன்னா... தற்கொலை தவிர வேற வழியே இல்ல அவனுங்களுக்கு....

Suresh Kumar said...

ஒவ்வெரு நறுக்குகளும் தனி தன்மையோடு காணப்படுகிறது மிக விரைவில் சதமடிக்க வாழ்த்துக்கள்

வானம்பாடிகள் said...

/Kiruthikan Kumarasamy said...
யூர்கன் க்ருகியர் மட்டும் நறுக்க ஆரம்பிச்சு யாராச்சும் அவங்களுக்கு மொழிபெயர்த்து சொன்னா... தற்கொலை தவிர வேற வழியே இல்ல அவனுங்களுக்கு....//

ரொம்ப சரி. செய்தி மட்டும் சேகரித்து கொடுத்துவிட்டு அவர நறுக்க விட்டா செமையா இருக்கும்.

வானம்பாடிகள் said...

/Suresh Kumar said...

ஒவ்வெரு நறுக்குகளும் தனி தன்மையோடு காணப்படுகிறது மிக விரைவில் சதமடிக்க வாழ்த்துக்கள்//

அன்புக்கு நன்றி!

லவ்டேல் மேடி said...

உங்க கமெண்ட்ஸ் எல்லாமே ரொம்ப அருமையா இருக்கு....!!

வானம்பாடிகள் said...

/லவ்டேல் மேடி said...

உங்க கமெண்ட்ஸ் எல்லாமே ரொம்ப அருமையா இருக்கு....!!/

நன்றி மேடி

ktmoorthy said...

இலங்கை விமானப் படையே உலகிலேயே சிறந்தது என்கிறார் கோத்தபாய

படையப்பா ரஜனி சொன்னா மாதிரி விமானம் உன்னோடது தான். ஓட்டுனது யாருடா?

Super,