Thursday, August 20, 2009

நறுக்குன்னு நாலு வார்த்த - 96

ஐ.நா.வின் சான்றிதழ் கிடைத்ததும் மீள்குடியேற்றம் -அரசாங்கம் அறிவிப்பு

பாராட்டுப் பத்திரமே தருவான் பங்கி மூன். வாங்கி மாட்டிக்க.
_________________________________________
திருப்தியாக வாழும் ஆசிய நாடுகளில் இலங்கை முதலிடம்

எந்தக் கம்மினாட்டி கண்டு புடிச்சான். அவன புடிச்சி அனுப்பணும். போய் திருப்தியா வாழ்ந்துக்கன்னு.
_____________________________________________
இடம்பெயர் மக்கள் தங்கியிருந்த காணிகளை அரசியல்வாதிகள் மோசடி செய்துள்ளனர்

விக்கிற நாய்க்கு விவஸ்தை வேணாம். வாங்குற பேய் விளங்காம போகும். எல்லாம் வித்து போச்சி. எங்க குடியமர்த்துறது. உள்ளயே இருன்னு வச்சிடுவான்..
_____________________________________________

இலங்கை விவகாரத்தில் பான் கீ மூன் தமது கடமையை சரிவரச் செய்யவில்லை

அந்தாளுக்கு என்னா போச்சி. அவனவனும் பொழைக்க வேணாமா? அது கைப்புள்ள பாவம்.
________________________________________________

வவுனியாவில் இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு அவர்கள் விரும்பினால் முகாம்களில் தங்கியிருப்பதற்கும் அல்லது வேறெங்கும் செல்வதற்கும் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என அமெரிக்கா கோரிக்கை விடுத்துள்ளது

உக்காந்த இடத்துல இருந்து உளறணுமேன்னு உளறுரான் படு பாவி. ஒரு மிருகம் கூட அடைச்சி வச்சா உள்ள இருக்க விரும்புமா? எப்ப‌டித்தான் பேசுரானுவளோ தெரியல.
_____________________________________________
அகதி முகாம் ஊழல், மோசடியில் அமைச்சர், உறவினர்களுக்கு தொடர்பு: சபையில் ஹக்கீம் குற்றச்சாட்டு

இல்லைன்னா தான் ஆச்சரியம். பாவம் பங்கு வரலையோ?
_____________________________________________
பல இலட்சம் ரூபா பெறுமதியான நகைகள் நல்லை கந்தன் இரதோற்சவத்தில் அபகரிப்பு

கந்தனுக்கு கவனம் கவட்டியிலன்னு சொலவடை இருக்கே. உங்களுக்கு உங்க நகை மேல இருக்க வேணாமா?
_____________________________________________
புலம் பெயர் தமிழ் மக்கள் விடுதலை புலிகளின் செயற்பாடுகளுக்கு வழங்கப்பட்ட பணத்தை இடம்பெயர் மக்களுக்கு வழங்கப்பட வேண்டும் : ரிசாட் பதியூதீன்

நீ வெளிய விடு நாயே! மத்தவங்க பார்த்துப்பாங்க. எப்படியெல்லாம் காசு பாக்க அலையுறான் பரதேசி நாயி.
_____________________________________________
பான் கீ மூனின் இலங்கை விஜயம் தோல்வி கண்டுள்ளது: நோர்வேயின் ஐ.நா. தூதுவர் தெரிவிப்பு

எதுக்கு விஜயம் போனாரு? என்ன தோல்வியாச்சி. எதுவுமே வெளிய வராதே? எவனாவது கண்டு புடிச்சி புக் போட்டா அப்பொதான் தெரியும்.
_____________________________________________
வரவு செலவுத் திட்டத்தின் போது பாதுகாப்பு செலவீன ஒதுக்கீடு குறைக்கப்படமாட்டாது: கோத்தபாய

அப்புறம் நீ எதுல ஒதுக்குவ. விட்றுவீங்களா?
_____________________________________________
பிறக்கும் குழந்தைகளுக்கு பிரபாகரனின் பெயரை சூட்டுங்கள்: வைகோ

அதுங்களையும் கைது பண்ணிடுவாங்க வாலாட்டிங்க. 6 மாசம் கழிச்சி கோர்ட் தப்புன்னு சொல்லும். பசங்களுக்கு அம்மா அப்பா யாருன்னே தெரியாது. ஜெயில்ல அன்னைன்னா சோனியான்னு சொல்லி குடுத்துடுவானுங்கோ. தேவையா இதெல்லாம்?
_____________________________________________
பிரித்தானிய ஆயுதங்கள் முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தில் உபயோகிக்கப்பட்டதா?

அவனே ஐ.நா. பொருப்புன்னு சொல்லிட்டிருக்கான். இதில வேற இப்படி ஆராய்ச்சி பண்ணா ஆமாம், அவன் குடுக்காம இருந்தா நான் அடிச்சிருக்க மாட்டேன். அவன கேளும்பான்.
_____________________________________________
சுவிஸ்சில் கருணா களியாட்ட மங்கையுடன் அட்டகாசம்

அரிப்பெடுத்த நாயீ. அதுக்குதானே சோரம் போனது. விசா எப்படிக் குடுத்தாங்க?
_____________________________________________
விடுதலைப் புலிகளை வழிநடத்தக் கூடிய ஆளுமை மிக்க எவரும் தற்போதில்லை

அப்படியே இல்லாம நாசமா போனாலும் உன்னை மட்டும் கூப்பிட மாட்டாங்க. நீ புட்டி குட்டின்னு கெட.குறி தப்பி எத்தன வெடிச்சது. உம்மேல ஒண்ணு விழாம போச்சே!
_____________________________________________
கே.பி.யை கைது செய்வதற்கு மலேசியாவிடம் உத்தியோகபூர்வமாக கோரப்படவில்லை – அரசாங்கம்

கடத்துறதுக்கு உத்தியோக பூர்வமா வேற கேப்பீங்களாடா?
_____________________________________________
தமிழர்களை உடனே விடுதலை செய்யுங்கள்: இலங்கைக்கு அமெரிக்கா எச்சரிக்கை

நம்பிட்டம். உடனே செய்துடுவான்.
_____________________________________________
விடுதலைப்புலிகளிடம் ரஜினிகாந்த் பணம் பெற்றாரா?: இலங்கை அமைச்சர்

தமிழனுக்குதான் சொரண இல்லாம கெடந்துட்டோம். தலைவனையா சொன்னன்னாவது பொங்குவமா?
_____________________________________________
அதிகாரம் மிக்க பெண்கள் பட்டியலில் சோனியா

அந்தம்மா பேரு மட்டும்தானே இருக்கும். அதையுமா பட்டியல்னு சொல்றது?
_____________________________________________
ஸ்னேகாவுக்கு தொந்தரவு கொடுத்த ராகவேந்திராவின் குற்றால லீலைகள்:

குற்ற லீலை போறாதா? குற்றால லீலை வேற.
_____________________________________________
பன்றிக் காய்ச்சல் குறித்து தெரிந்திருந்தால் ஜெயலலிதா எச்சரிக்கை விடுத்திருக்கலாம்: வீரபாண்டி ஆறுமுகம்

அப்புறம் அரசாங்கத்தோட சுகாதாரத் துறை எதுக்காம்.
_____________________________________________
புதுப்பேட்டையில் இருந்து நக்சலைட்டுகளுக்கு என்ஜின்கள் கடத்தல்

அடங்கொன்னியா! அங்க நாராயணன் வாங்கினா என்ன நக்ஸலைட் வாங்கினா என்ன? எல்லாருக்கும் தானெ விப்பான்.
எவனோ முக்கிய புள்ளியோட கார் போச்சோ, இல்ல புள்ளையாண்டான் பைக் போச்சோ. இப்ப தான் கண்டுபுடிச்சா மாதிரி சீன் போடுறானுவ.
_____________________________________________
முகமூடிகளை இலவசமாக வழங்க வேண்டும்: ஐகோர்ட்

அதுக்குள்ள பன்னிக் காய்ச்சல் போயிடும். இல்லைன்னா பாதி ஜனங்க போய்டுவாங்க. ஊழலுக்கு இவங்களே வழிகாட்டுறாங்களே.
_____________________________________________

41 comments:

யூர்கன் க்ருகியர் said...

//திருப்தியாக வாழும் ஆசிய நாடுகளில் இலங்கை முதலிடம்
//

யாரை திருப்தி படுத்துவதற்கு இந்த செய்தி வெளியீடு ?

யூர்கன் க்ருகியர் said...

//அதிகாரம் மிக்க பெண்கள் பட்டியலில் சோனியா
//

"அகங்காரம் மிக்க " என்றல்லவா இருக்க வேண்டும் ?

யூர்கன் க்ருகியர் said...

//பான் கீ மூனின் இலங்கை விஜயம் தோல்வி கண்டுள்ளது://

மிஸ்டர் .மங்கி மூன்,,, நீங்க எப்பதான் மனிதாபிமானமாய் வேலை செய்வீங்க ?

கலகலப்ரியா said...

//ஐ.நா.வின் சான்றிதழ் கிடைத்ததும் மீள்குடியேற்றம் -அரசாங்கம் அறிவிப்பு//

இப்பொழுது தற்காலிகமாகக் குடி அமர்த்தி இருக்கும் சிங்கள அப்பாவிகளைத்தானே..! வளர்க உங்கள் தொண்டு!

கலகலப்ரியா said...

//திருப்தியாக வாழும் ஆசிய நாடுகளில் இலங்கை முதலிடம்

எந்தக் கம்மினாட்டி கண்டு புடிச்சான். அவன புடிச்சி அனுப்பணும். போய் திருப்தியா வாழ்ந்துக்கன்னு.//

அட ஏன் சார் டென்ஷன்? இலங்கை சிங்கங்களின் நாடு! மான்களை எல்லாம் முழுங்கி ஏப்பம் விட்டு செம திருப்தியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்! மிகவும் சரியாகச் சொல்லி இருக்கிறார்கள்.. இதில உங்களுக்கு என்னய்யா சந்தேகம்?

கலகலப்ரியா said...

//
வவுனியாவில் இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு அவர்கள் விரும்பினால் முகாம்களில் தங்கியிருப்பதற்கும் அல்லது வேறெங்கும் செல்வதற்கும் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என அமெரிக்கா கோரிக்கை விடுத்துள்ளது//

joke or false interpretation? God damnit... wanna kill em all..

கலகலப்ரியா said...

//பான் கீ மூனின் இலங்கை விஜயம் தோல்வி கண்டுள்ளது: நோர்வேயின் ஐ.நா. தூதுவர் தெரிவிப்பு//
முந்தி வாயடைக்கிறதுக்கு இலவசமா கொடுக்கிறேன்னு சொன்ன நிலத்தை, இப்போ விலைக்கு கூட விக்க மாட்டேங்கிறான் போல.. (அதுதான் மொத்தமும் வித்தாச்சே..)

கலகலப்ரியா said...

//கருணா//

*vomits*....

கலகலப்ரியா said...

//விடுதலைப் புலிகளை வழிநடத்தக் கூடிய ஆளுமை மிக்க எவரும் தற்போதில்லை//
எப்பவும்.. எங்கயும் இருக்கப் போவதும் இல்லை.. (அந்தாளு திரும்பி வந்தா தவிர..!)

கலகலப்ரியா said...

//விடுதலைப்புலிகளிடம் ரஜினிகாந்த் பணம் பெற்றாரா?: இலங்கை அமைச்சர்

தமிழனுக்குதான் சொரண இல்லாம கெடந்துட்டோம். தலைவனையா சொன்னன்னாவது பொங்குவமா?//

எங்கயோ பொங்கி இருந்தது.. கண்ணில பட்டது..!!! இந்த விஷயத்தில நம்மாளுங்க விட்டு கொடுக்க மாட்டாங்கையா..!

கலகலப்ரியா said...

//அதிகாரம் மிக்க பெண்கள் பட்டியலில் சோனியா//

அதிகாரம் முன்னாடி.. "சர்வ" மிஸ்ஸிங்..!
(காங்கிரஸ் ஆதரவாளர்கள் என்னை மன்னிக்க வேண்டாம்!)

கலகலப்ரியா said...

//பன்றிக் காய்ச்சல் குறித்து தெரிந்திருந்தால் ஜெயலலிதா எச்சரிக்கை விடுத்திருக்கலாம்: வீரபாண்டி ஆறுமுகம்//

Dr.J.Jayalalitha.. enra muraila solraanga pola.. !

கலகலப்ரியா said...

//முகமூடிகளை இலவசமாக வழங்க வேண்டும்: ஐகோர்ட்

ஊழலுக்கு இவங்களே வழிகாட்டுறாங்களே.//

அதுக்காக காய்ச்சல காசு கொடுத்து வாங்க சொல்றீங்களா..?

க. பாலாஜி said...

//ஐ.நா.வின் சான்றிதழ் கிடைத்ததும் மீள்குடியேற்றம் -அரசாங்கம் அறிவிப்பு
பாராட்டுப் பத்திரமே தருவான் பங்கி மூன். வாங்கி மாட்டிக்க.//

ஹா..ஹா...


நல்லாருக்கு அன்பரே...

வானம்பாடிகள் said...

/க. பாலாஜி said...

ஹா..ஹா...
நல்லாருக்கு அன்பரே...//

வரவுக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.

வானம்பாடிகள் said...

/கலகலப்ரியா said...

அதுக்காக காய்ச்சல காசு கொடுத்து வாங்க சொல்றீங்களா..?//

இல்லிங். காய்ச்சல் நமக்குங். காசு மந்திரிக்குங். முகமூடி யாருக்குங்?

வானம்பாடிகள் said...

/கலகலப்ரியா said...

Dr.J.Jayalalitha.. enra muraila solraanga pola.. !//

அடப்பாவிங்களா. பின்னூட்டத்தில தாக்குற தாக்கில எம்பொழப்புக்கு வேட்டு வந்துடும் போலயே? நிஜம்ம ரொம்ப அருமை.

Suresh Kumar said...

எல்லாமே நறுக்குன்னு இருக்கு தல

வானம்பாடிகள் said...

/கலகலப்ரியா said...
அதிகாரம் முன்னாடி.. "சர்வ" மிஸ்ஸிங்..!
(காங்கிரஸ் ஆதரவாளர்கள் என்னை மன்னிக்க வேண்டாம்!)/

சரியாச் சொன்னீங்க. இவனுங்களுக்கு அந்த தகுதி வேற இருக்கா.

வானம்பாடிகள் said...

/கலகலப்ரியா said...
எங்கயோ பொங்கி இருந்தது.. கண்ணில பட்டது..!!! இந்த விஷயத்தில நம்மாளுங்க விட்டு கொடுக்க மாட்டாங்கையா..!/

மன்னிப்புக் கேள்னு கத்திட்டு போவாய்ங்க.

வானம்பாடிகள் said...

/ கலகலப்ரியா said...

//விடுதலைப் புலிகளை வழிநடத்தக் கூடிய ஆளுமை மிக்க எவரும் தற்போதில்லை//
எப்பவும்.. எங்கயும் இருக்கப் போவதும் இல்லை.. (அந்தாளு திரும்பி வந்தா தவிர..!)/

இவனுங்களுக்காகவே வரணும். அவனவனும் பைத்தியமா அலையணும்.

வானம்பாடிகள் said...

/ கலகலப்ரியா said...

//கருணா//

*vomits*..../
அவன் மொடாக்குடியங்க. வாமிட்லாம் பண்ணமாட்டான்.

வானம்பாடிகள் said...

/ கலகலப்ரியா said...

முந்தி வாயடைக்கிறதுக்கு இலவசமா கொடுக்கிறேன்னு சொன்ன நிலத்தை, இப்போ விலைக்கு கூட விக்க மாட்டேங்கிறான் போல.. (அதுதான் மொத்தமும் வித்தாச்சே..)//

இப்படி கொள்ளயடிச்சிதான் என்ன காணப் போறானுவ.

வானம்பாடிகள் said...

/ கலகலப்ரியா said...

joke or false interpretation? God damnit... wanna kill em all..//

Just damn formality. idiots

வானம்பாடிகள் said...

/ கலகலப்ரியா said...
அட ஏன் சார் டென்ஷன்? இலங்கை சிங்கங்களின் நாடு! மான்களை எல்லாம் முழுங்கி ஏப்பம் விட்டு செம திருப்தியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்! மிகவும் சரியாகச் சொல்லி இருக்கிறார்கள்.. இதில உங்களுக்கு என்னய்யா சந்தேகம்?//

டென்ஷனில்லீங்க. சொன்ன பரதேசி அங்க போலாம்ல.

வானம்பாடிகள் said...

/ கலகலப்ரியா said...

இப்பொழுது தற்காலிகமாகக் குடி அமர்த்தி இருக்கும் சிங்கள அப்பாவிகளைத்தானே..! வளர்க உங்கள் தொண்டு!//

அதேதான்.

வானம்பாடிகள் said...

/யூர்கன் க்ருகியர் said...
"அகங்காரம் மிக்க " என்றல்லவா இருக்க வேண்டும் ?//

நறுக்னா இது.

வானம்பாடிகள் said...

/யூர்கன் க்ருகியர் said...
மிஸ்டர் .மங்கி மூன்,,, நீங்க எப்பதான் மனிதாபிமானமாய் வேலை செய்வீங்க ?//

அடுத்த டெர்ம்கு டைம் வரும்போது!

வானம்பாடிகள் said...

யூர்கன் க்ருகியர் said...

யாரை திருப்தி படுத்துவதற்கு இந்த செய்தி வெளியீடு ?

இத சொல்லி கடன் வாங்குவானுங்க.

பழமைபேசி said...

இன்னும் நாலே நாலு.... முன்கூட்டிய வாழ்த்துகள்!

Maheswaran Nallasamy said...

இன்னும் நாலே நாலுதான் பாக்கி .. சிலை வைக்க...;)

Maheswaran Nallasamy said...

இல்லிங். காய்ச்சல் நமக்குங். காசு மந்திரிக்குங். முகமூடி யாருக்குங்?...

அதுவும் மந்திரிக்குதான்....இவ்வளவு நாள் முக முடி போடாம கொள்ளை அடிச்சாங்க.. இப்போ முகமுடிய வச்சு கொள்ளை அடிப்பாங்க ..அவவளவுதான்.

Maheswaran Nallasamy said...

//பான் கீ மூனின் இலங்கை விஜயம் தோல்வி கண்டுள்ளது://

பான் கி மூன் இடத்தில சசி தரூர் ( இப்போ காங்கிரஸ் மந்திரி) வந்து இருந்தா
என்ன ஆகி இருக்கும்?.... கொய்யால அவன் ஐ. நா. படையே அனுப்பி ஸ்ரீலங்கா-க்கு வேலையே இல்லாம பண்ணி இருப்பான்.

எப்படித்தான் நம்மள ரவுண்டு கட்டி அடிக்கிறாங்களோ?..

வானம்பாடிகள் said...

/பழமைபேசி said...
இன்னும் நாலே நாலு.... முன்கூட்டிய வாழ்த்துகள்!//

முன் கூட்டிய‌ ந‌ன்றி!

வானம்பாடிகள் said...

/ Maheswaran Nallasamy said...
இன்னும் நாலே நாலுதான் பாக்கி .. சிலை வைக்க...;)//


பதிலுக்கு வாட்டாள் நாகராஜ் சிலை வைக்கணும்பான். பரவால்லயா=))

வானம்பாடிகள் said...

/ Maheswaran Nallasamy said...
இவ்வளவு நாள் முக முடி போடாம கொள்ளை அடிச்சாங்க.. இப்போ முகமுடிய வச்சு கொள்ளை அடிப்பாங்க ..அவவளவுதான்.//

முகமூடி போட்டு ஒரு வாட்டி அடிச்சிட்டு, முகமூடி போடாம ஒரு வாட்டி அடிப்பாங்க!

வானம்பாடிகள் said...

/அவன் ஐ. நா. படையே அனுப்பி ஸ்ரீலங்கா-க்கு வேலையே இல்லாம பண்ணி இருப்பான்.

எப்படித்தான் நம்மள ரவுண்டு கட்டி அடிக்கிறாங்களோ?..//

சரியா சொன்னீங்க. அய்யோ சத்தமா சொல்லாதீங்க. இப்படித்தான்னு ஒரு வாட்டி அடிச்சி காட்டுவான்.

இது நம்ம ஆளு said...

அருமை :)

வானம்பாடிகள் said...

/ இது நம்ம ஆளு said...

அருமை :)//
வாங்க ஐயா. நன்றி

ktmoorthy said...

//அதிகாரம் மிக்க பெண்கள் பட்டியலில் சோனியா
//

Elatamilanin rathakaraikal sonia mugathil, pattial oru keda.

வானம்பாடிகள் said...

வாங்க மூர்த்தி.