Wednesday, August 19, 2009

நறுக்குன்னு நாலு வார்த்த - 95

விடுதலைப் புலிகள் மீண்டும் தலைதூக்க முடியாது: மகிந்த ராஜபக்ஸ

துள்ளுற மாடு பொதி சுமக்கும்னு பழமொழி. அவனும் இவனும் பிச்ச போடுறான் பொழப்பு ஓடுதுன்னு இருக்கீரு. எல்லாத்துக்கும் ஒரு அளவிருக்கில்லடி. அப்போ தெரியும்!
_____________________________________________________
முகாம்களில் மக்கள் 'எலிகளைப் போல வாழ்கிறார்கள்': ஆனந்த சங்கரி

கிழத்துக்கு எதுகை மோனை வேற! வேளா வேளைக்கு உண்டு உறங்கி ஜனாதிபதிக்கு கால் நக்காத குறையா கடிதம் எழுதிதான் என்ன கிழிஞ்சது?
_____________________________________________________
இலங்கைக்கு கடந்த 24 மணி நேரத்தில் 31 பில்லியன் ரூபா கிடைத்துள்ளது - அமைச்சர் ஜீ.எல். பீரிஸ்

பணக்கார பிச்சக்காரனுங்கடா யப்பா. இத வெச்சி 3 ஹில்டன் ஹோட்டல் கட்டலாம்னு புத்தி போவுதே ஒழிய யாரைக் காட்டி எடுத்த பிச்சையோ அவங்களுக்கு என்ன பண்ணலாம்னு போவுதா?
_____________________________________________________
அகதி முகாமகளில் தமிழர்களுக்கு மற்றொரு முள்ளிவாய்க்கால் அவலம்: சர்வதேசம் இதனையும் வேடிக்கை பார்க்கப் போகிறதா?: சுரேஸ் பா.உ. கேள்வி

மாட்டாங்களே! கோரிக்கை, கண்டனம், தூதர அனுப்புறது எல்லாம் பண்ணிட்டு அப்புறம் பொத்திட்டு இருப்பாங்க.
_____________________________________________________
தவறு செய்யும் அதிகாரிகளை அரசாங்கம் பாதுகாக்காது: இலங்கை பிரதமர்

தவறு செய்யும் அரசை அகில உலகமும், ஐ.நா.வும் பாதுகாக்கும்.
_____________________________________________________
இடியமீன் ஆட்சி காலத்தில் கூட இவ்வாறான முகாம்கள் காணப்பட்டதா என்பது சந்தேகமே: புதிய சிஹல உறுமய

அவன் மனுசக்கறி தின்னாலும் மனுசனா இருந்தான். இவனுக்கு ராக்ஷச பக்சேன்னு பேரு வைக்கலாம்.
_____________________________________________________
வட இலங்கையில் கண்ணி வெடிகளை அகற்றுவதற்கு அமெரிக்கா 6 மில்லியன் டொலர் நிதியுதவி

இதயும் வாங்கிக்கிட்டு கொழுத்துப் போய் கன்னிங்களுக்கு வெடி வைப்பான். ஏண்டா இப்படி? அவ்வளவு அக்கறைன்னா எல்லாத்தையும் நீங்க வந்து புடுங்கி போட்டு இப்போ விடுடா ஜனங்களன்னு சொல்லிப் பாறேன்.
_____________________________________________________
செல்வராசா பத்மநாதன் இந்தியாவுக்கு நாடு கடத்தப்படலாம்?

என்னா டீலிங்கு?
_____________________________________________________
வெள்ளிமுள்ளிவாய்க்காலில் லட்சக்கணக்கான வெடி பொருட்கள் மீட்பு : உதய நாணயக்கார

நீ கொண்டு போனதுல வெடிச்சது எத்தன. மிச்சம் எத்தனைன்னு கணக்குப் பாரு ராசா. அவசரப்பட்டு இப்படி புளுவிட்டா அக்கவுன்டு இடிக்கும்.
_____________________________________________________
வேதம் படித்தால் வேலை வாய்ப்பு கிடைக்கும்: எஸ்.வி.சேகர்

படி சேகரு! இனிமேல்லாம் M.L.A. ஆக முடியுமா. பொழப்ப பார்க்க வேணாமா?
_____________________________________________________
சென்னை: விமானம் மீது லாரி மோதல்

லாரிக்கு விமான பெட்ரோலும், விமானத்துக்கு டீசலும் மாத்திப் போட்டுட்டாங்களா?
_____________________________________________________
ஜெ.வை மக்கள் புறக்கணித்து விட்டனர்: தங்கபாலு

இவ்வளவு நாளா சத்தமே காணோம். நாக்குல புண்ணா டங்குவாலு (காபிரைட்:யூர்கன்)
_____________________________________________________
கொட்டும் மழையில் கஞ்சி கலய ஊர்வலம்

அட்றா சக்க! கஞ்சித்தண்ணின்னு தானே சொல்லுவோம். இப்படி போனா கலயம் நிரம்பிடும். கவுண்டர் மாதிரி, தண்ணி இங்க இருக்கு. கஞ்சி எங்கன்னு கொடச்சல் குடுக்கலாம்.
_____________________________________________________
பீர் அருந்திய பெண்ணுக்கு பிரம்படி: மலேசிய கோர்ட்

வலி தெரியாம இருக்க பிராந்தி அடிக்கப் போவுது அந்தப் பொண்ணு.
_____________________________________________________

15 comments:

டவுசர் பாண்டி said...

//ஜெ.வை மக்கள் புறக்கணித்து விட்டனர்: தங்கபாலு

இவ்வளவு நாளா சத்தமே காணோம். நாக்குல புண்ணா டங்குவாலு (காபிரைட்:யூர்கன்)//

சோக்கா கீதுபா , அது இன்னா காப்பி ரைட்டு ,

sakthi said...

தவறு செய்யும் அதிகாரிகளை அரசாங்கம் பாதுகாக்காது: இலங்கை பிரதமர்

தவறு செய்யும் அரசை அகில உலகமும், ஐ.நா.வும் பாதுகாக்கும்.

100% உண்மை

வானம்பாடிகள் said...

/ டவுசர் பாண்டி said...
சோக்கா கீதுபா , அது இன்னா காப்பி ரைட்டு /

வா அண்ணாத்தே! எங்க ரொம்ப நாளா நம்ம ஊட்டாண்ட வரதில்ல. அது நம்ம யூர்கன் க்ரூகியர் குடுத்த பட்டம். நாம சுட்டமா. அதான் காபிரைட்டு. டாங்க்ஸ் அண்ணாத்த.

வானம்பாடிகள் said...

/ sakthi said...
100% உண்மை

வாங்க சக்தி.

இது நம்ம ஆளு said...

அருமையான தகவலுடன் உங்கள் நறுக்குனு நாலு வார்த்த.

வானம்பாடிகள் said...

நன்றிங்க!

யூர்கன் க்ருகியர் said...

//வட இலங்கையில் கண்ணி வெடிகளை அகற்றுவதற்கு அமெரிக்கா 6 மில்லியன் டொலர் நிதியுதவி
//

மொதல்ல மக்களை நல்லபடியா விடுவிப்பதற்கு உதவி பண்ணுங்கையான்னா ...அத செய்ய மாட்டேன்றாங்க....

யூர்கன் க்ருகியர் said...

//தவறு செய்யும் அரசை அகில உலகமும், ஐ.நா.வும் பாதுகாக்கும்.//

இத நினைத்தாதான் நெஞ்செல்லாம் கொதிக்குது ...

யூர்கன் க்ருகியர் said...

டங்குவாலு ..... காப்பிரைட்டில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
யாரு வேண்டுமானாலும் உண்மைய சொல்லலாம் :) இதுக்கு எதுக்கு காப்பிரைட்...??

வானம்பாடிகள் said...

/யூர்கன் க்ருகியர் said...
மொதல்ல மக்களை நல்லபடியா விடுவிப்பதற்கு உதவி பண்ணுங்கையான்னா ...அத செய்ய மாட்டேன்றாங்க....//

அளவுக்கு மீறி கொஞ்சுறானுங்க!என்ன எழவு டிப்ளமஸி இது!

வானம்பாடிகள் said...

/ யூர்கன் க்ருகியர் said...
இத நினைத்தாதான் நெஞ்செல்லாம் கொதிக்குது ...//

இந்த அமைப்பு என்னதான் பண்ணும்னு தெரியல. வெறும் கண்டன அறிக்கை விடுறதோட சரி

வானம்பாடிகள் said...

/ யூர்கன் க்ருகியர் said...

டங்குவாலு ..... காப்பிரைட்டில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
யாரு வேண்டுமானாலும் உண்மைய சொல்லலாம் :) இதுக்கு எதுக்கு காப்பிரைட்...??/

இவ்வளவு பொருத்தமா பேரு கண்டு பிடிச்சதுக்கு. நன்றி யூர்கன்.

Ram said...

ஒரே ஒரு Add-தமிழ் விட்ஜெட் பட்டன் போதும் , உங்கள் பதிவுகள்
அல்லது இணையதள பக்கத்தினை அனைத்து முதன்மை தமிழ் திரட்டிகளிலும் வெளியிடலாம்.

உங்கள் பதிவுகள் அதிக வாசகர்களை சென்றடைய இப்போதே Add-தமிழ் பட்டன் இணையுங்கள் !
விட்ஜெட் தரவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யுங்கள்

Kiruthikan Kumarasamy said...

பாலா... உங்களோட நறுக்ஸை மட்டும் சம்பந்தப்பட்டவங்க படிச்சா....
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.

ம்ஹூம் ஒண்ணுமே நடக்காது... மனுஷனுக்குத் தானே ரோசம் மானம் அப்பிடியான சமாசாரங்கள்.. இவங்களுக்கு இல்லையே

வானம்பாடிகள் said...

/Kiruthikan Kumarasamy said..

ம்ஹூம் ஒண்ணுமே நடக்காது... மனுஷனுக்குத் தானே ரோசம் மானம் அப்பிடியான சமாசாரங்கள்.. இவங்களுக்கு இல்லையே//

வாஸ்தவம்தான்.