Tuesday, August 18, 2009

நறுக்குன்னு நாலு வார்த்த - 94

தமிழர் படும் துயரை துடைப்பதற்கு இலங்கை அரசுக்கு, இந்தியா நெருக்கடி கொடுக்க வேண்டும்: கலைஞர்

பாலுக்கும் காவல். அட இரண்டு நாளுக்கு முன்னாடிதானே சுமுக நிலைன்னு சொன்னீங்க? இது எதுக்கு இப்ப?
_______________________________________________
தடை செய்யப்பட்ட இயக்கங்களை ஆத‌‌ரித்தால் நடவடிக்கை: மிழக அரசு ச்சரிக்கை

பூனைக்கும் தோழன். எத்தனை முறை கோர்ட்டில் செருப்படி பட்டாலும் தொங்கு சொல்ற ஆள புடிச்சி அனுப்பறது தான்.
_______________________________________________
குடாநாட்டிற்கான பாதுகாப்பு படையினரின் எண்ணிக்கை இரண்டு மடங்காக உயர்த்தப்படும்: சரத் பொன்சேகா

இவரு பங்குக்கு இவரு காசு தேத்த வேணாமா? மொத்த பேருமே ராணுவம்னு சொல்லிடு.
_______________________________________________
எவர் என்ன சொன்னாலும் அகதிகளை உடனடியாக மீளக்குடியமர்த்த முடியாது: சரத் பொன்சேகா

நீயே அகதியாகப் போறன்னு செய்தி வந்திச்சே. நீ குடியேற இடமில்லாம சாவணும்டா நாயீ. திமிரப் பாரு.
_______________________________________________
உள்நாட்டு, வெளிநாட்டு அழுத்தங்களுக்காக முகாம் மக்களை விடுவிக்க முடியாது: கோத்தபாய திட்டவட்டமாக தெரிவிப்பு

பேச விட்டு வேடிக்கை பார்க்குறானுங்களே பெரியண்ணனுங்க. இதை விட காலம் முழுதும் வலைக்குள்ள தான்னு எப்படி விளங்க வைக்க முடியும்?
_______________________________________________
அதிகாரங்கள் பகிரப்படாவிட்டால் புலிகளின் தமிழீழ போராட்டத்திற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி கொடுக்கும்: ரொபட் பிளக்

அய்யா வெள்ளச்சாமி! நீர் ஆதரவா பேசுறீரா? போட்டுக் குடுக்கிறீரா? அமெரிக்காவே சொல்லிட்டான். நான் விடமாட்டேன்னு கொட்டடிலயே வைக்கவா? ஏன்யா இந்தக் கொலை வெறி?
_______________________________________________
இலங்கை அகதிகள் முகாம்களில் வெள்ளம் ஏற்பட்டதற்கு .நா. நிறுவனங்களே பொறுப்பு!

இதுக்கு மேலயும் சொல்லுவான். அய்யோ நான் இல்லன்னு அலறுவானுங்களே தவிர, நீதாண்டா பொறுப்புன்னு நடவடிக்கை எடுப்பானுங்களா?
_______________________________________________
தனித் தமிழ் ஈழத்தை சர்வதேச நாடுகள் அங்கீகரிக்க வேண்டும்: விடுதலைச் சிறுத்தைகள் கட்சி

முதல்ல உங்க கூட்டணி அங்கீகரிக்குதா பாருங்க. அப்புறம் உலகத்துக்கு குரல் விடலாம். மெரீனால பேசினீங்களே ஒரு வாட்டி கேட்டுப் பாருங்க.
_______________________________________________
யுத்த நிறுத்த காலத்தில் பாதுகாப்பு தரப்பினர் புலிகளுடன் தொடர்பினைப் பேணியுள்ளனர்: கோத்தபாய ராஜபக்ஷ

யார் யாருக்கெல்லாம் வெள்ளை வேன் வருதோ தெரியல. புள்ளி வெச்சிட்டான் போல.
_______________________________________________
விடுதலை சிறுத்தைகள் இன்றி எந்த அணியும் வெற்றி பெறமுடியாது: திருமா

ஓவராத் தெரியல?
_______________________________________________
அமெரிக்காவில் ஷாருக்கானிடம் விசாரணை நடத்தியது அத்து மீறிய செயல்: .சிதம்பரம்

அய்யா. பக்கத்து நாட்டில நாம நடத்தியது எத்தை மீறிய செயல்? இதெல்லாம் பேச முடியும்?
_______________________________________________
அரசுகளின் சாதனைகளுக்கு எதிராக ஓராயிரம் ஜெயலலிதா வந்தாலும் அரசியல் நடத்த முடியாது: தங்கபாலு

ஆமாம். கொஞ்ச நஞ்ச சாதனையா? பாதி படம் எரிஞ்சதுக்கு பதறின பரதேசி பச்சைக் குழந்தைங்க எறிஞ்சப்ப இறையாண்மை பேசின சாதனை ஒண்ணு போறாது?
_______________________________________________
சபரிமலையில் பூசைக் கட்டணம் பன்மடங்கு உயர்வு: செய்தி

சாமியெல்லாம் சம்பாதிக்க ஆரம்பிச்சா ஆசாமிங்க எங்க போறது?
_______________________________________________
தன் பெற்றோர்களை விஷம் வைத்துக் கொன்று விடுவேன் என்றதால் மனைவியை வெட்டிக் கொன்ற கணவர் கைது!

செருப்பால அடிச்சா 5 ரூ தண்டனை. அடிப்பேன்னா 50ரூ தண்டனைன்னு சொல்றத நிஜம்னு நம்பிட்டாரோ?
_______________________________________________

10 comments:

யூர்கன் க்ருகியர் said...

//தனித் தமிழ் ஈழத்தை சர்வதேச நாடுகள் அங்கீகரிக்க வேண்டும்: விடுதலைச் சிறுத்தைகள் கட்சி//

பனமரத்துக்கு அடில நின்னுக்கிட்டு பால் குடிக்கிறேன்னு சொல்றதும் ஒண்ணு...காங்கிரஸ் இல இருந்துக்கிட்டு தனி ஈழம்னு சொல்றதும் ஒண்ணு :(

யூர்கன் க்ருகியர் said...

//விடுதலை சிறுத்தைகள் இன்றி எந்த அணியும் வெற்றி பெறமுடியாது: திருமா
//

அணின்னா ...கபடி அணியா ? அதுலதான் அசந்தா கால வாரி உடுவாங்க !

யூர்கன் க்ருகியர் said...

//அமெரிக்காவில் ஷாருக்கானிடம் விசாரணை நடத்தியது அத்து மீறிய செயல்: ப.சிதம்பரம்
//

இந்த மாதிரி சப்பை மேட்டருக்கு மட்டும் கூவுங்க .. மற்ற விசயம்னா காங்கிரஸ் கட்சியில இருக்குற "கை" உங்க முகத்துக்கு நேரா வந்து "பொத்து" அப்படின்னு சொல்லிரும்.

வானம்பாடிகள் said...

/யூர்கன் க்ருகியர் said...
பனமரத்துக்கு அடில நின்னுக்கிட்டு பால் குடிக்கிறேன்னு சொல்றதும் ஒண்ணு...காங்கிரஸ் இல இருந்துக்கிட்டு தனி ஈழம்னு சொல்றதும் ஒண்ணு :(/

அதாவது நம்பலாம். இது அறவே முடியாது.

வானம்பாடிகள் said...

அதாவது நம்பலாம். இது அறவே முடியாது.

=)))

வானம்பாடிகள் said...

/யூர்கன் க்ருகியர் said...
இந்த மாதிரி சப்பை மேட்டருக்கு மட்டும் கூவுங்க .. மற்ற விசயம்னா காங்கிரஸ் கட்சியில இருக்குற "கை" உங்க முகத்துக்கு நேரா வந்து "பொத்து" அப்படின்னு சொல்லிரும்.//

அசத்தல்.

யூர்கன் க்ருகியர் said...

//அரசுகளின் சாதனைகளுக்கு எதிராக ஓராயிரம் ஜெயலலிதா வந்தாலும் அரசியல் நடத்த முடியாது: தங்கபாலு
//

இந்த டங்குவாலு தொந்தரவு தாங்க முடியலடா சாமி... எதை சொன்னாலும் ஆமாஞ்சாமி சொல்ற அல்லக்கைகள் இருக்கும் வரை உங்க சாதனைகள் சாரி வேதனைகள் தொடரும்.

sakthi said...

தனித் தமிழ் ஈழத்தை சர்வதேச நாடுகள் அங்கீகரிக்க வேண்டும்: விடுதலைச் சிறுத்தைகள் கட்சி

முதல்ல உங்க கூட்டணி அங்கீகரிக்குதா பாருங்க. அப்புறம் உலகத்துக்கு குரல் விடலாம். மெரீனால பேசினீங்களே ஒரு வாட்டி கேட்டுப் பாருங்க.

பாலா நறுக்குன்னு நல்லாவே கேட்கறீங்க

வானம்பாடிகள் said...

/யூர்கன் க்ருகியர் said...
இந்த டங்குவாலு

ஆஹா. இது எனக்கு தோணாம போச்சே:))

வானம்பாடிகள் said...

/sakthi said...

நறுக்குன்னு நல்லாவே கேட்கறீங்க//
நன்றிங்க.