Friday, August 14, 2009

நறுக்குன்னு நாலு வார்த்த - 93

இலங்கையின் நீண்டகாலத் திட்டத்தின் பிரகாரமே பத்மநாதனின் கைது: கோத்தபாய

என்னாமா சீன போடுறாண்டா சாமி. என்னைக்காவது கத்தரிக்கா கடைக்கு வரும்டி.
_____________________________________________________
கிழக்கு மாகாணத்தை கட்டியெழுப்புவதற்காக இளைஞர், யுவதிகள் மத்தியில் புரட்சி அவசியம் - முதலமைச்சர் சந்திரகாந்தன்

அதுமட்டும் வந்திச்சோ நீயெல்லாம் காணாம போய்டுவியே ராசா. இனிமே காட்டிக்குடுக்க ஆளில்லைன்னு புரட்சி அவசியமாச்சோ?
_____________________________________________________
தமிழ் பேசுவோரை அகதிகளாக ஏற்றதற்காக கனடா வருத்தப்படும் -கனடாவிலுள்ள இலங்கைத் தூதுவர் தெரிவிப்பு

தான் கெட்ட குரங்கு வனத்தையும் கெடுத்ததாம்னு சொலவடை. எங்கயும் தமிழன் வாழ்ந்துடப்படாது. உனக்கு கடன் குடுத்ததுக்கே வருத்தப்படலையேங்க.
_____________________________________________________
தமிழர்களின் துயரம் நீக்கப்படும்வரை இலங்கைக்கு விஜயம் செய்யப்போவதில்லை - இந்திய விஞ்ஞானி சுவாமிநாதன் திட்டவட்டம்.

இதுக்கே இன்னொரு நோபல் தரலாம்யா.
______________________________________________________
கொழும்பில் மறைத்து வைத்துள்ள ஆயுதங்களை மீட்டு அழிக்கும்வரை சமாதானம் ஏற்பட்டுவிட்டது என கூறமுடியாது: பிரதமர் ரத்னசிறி

வேற இடத்தில இருந்தா பரவால்லயா? ஜெ. வி. பி. ஆயுதமும் சேர்த்துதானே?
______________________________________________________
விடுதலைப் புலிகளிடம் இருந்து கைப்பற்றிய ஆயுதங்களை விற்கமுயலும் இலங்கை அரசு

அட நன்னாறிப்பயலே! எடுத்ததே பிச்சை. அதையும் அங்க குடுத்து திரும்ப எடுத்து காசாக்க பாக்குறான் பாரு.
_________________________________________________

அவசர நோளர்களைக் கூட அடையாள காண முடியாத நிலையில் வவுனியா முகாம் - எல்லைகள் அற்ற மருத்துவர்கள் அமைப்பு

காப்பாத்த நினைச்சாதானே அடையாளமெல்லாம். தானா ஒழிஞ்சதுன்னு விடுவான்.
__________________________________________________
1,750 கோடி திட்டம்:சீன வங்கியுடன் இலங்கை அரசு ஒப்பந்தம்

போற போக்கு பார்த்தா அவன் இவன் குடுக்கறதெல்லாம் வாங்கி இவனே ஒரு போட்டி உலக வங்கி ஆரம்பிச்சிடுவான் போலயே. கண்ணு மண்ணு தெரியாம குடுக்கிறானுவளே.
__________________________________________________
இரவு 10 மணிக்குத்தான் காலை ஆகாரம்: மிக மோசமான நிலையில் வவுனியா முகாம்

அடுத்த நாள் காலை ஆகாரம் முன்னாடியே குடுக்குரோம்பான். ராத்திரி குடுத்தா அப்புறமென்ன காலை ஆகாரம்?
_________________________________________________
பன்றிக்காய்ச்சலை கட்டுப்படுத்தக்கோரி சென்னையில் 16 ந்தேதி அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்: ஜெயலலிதா

இவிங்க இருந்தப்ப எலிக்காய்ச்சல் என்ன பாடு படுத்திச்சி? எல்லா வசதியும் பண்ணித்தறோம். நீ கட்டுப் படுத்துன்னா கத தெரியும்.
_________________________________________________
விடுமுறை நாட்களில் மகளிர் ரயில் ஓடாது!

அன்னைக்கு மகளிர் யாரும் வெளிய போறதில்லைன்னு சொல்லிட்டாங்களா?
_________________________________________________
ஓட்டுப்போடக்கூடாது என ஜெ., கூறுவது தேசத் துரோகம்: கனிமொழி

ஓட்டுப் போடுங்கன்னு நீங்க சொன்னது இனத் துரோகம்னு கத்தினமே. கேட்டிங்களா என்ன?
_________________________________________________
திருவள்ளுவர்-சர்வக்ஞரின் கருத்துக்கள் ஒன்றுதான்: அன்பழகன்

மனசாட்சியோட சொல்லுங்க பேராசிரியர் அய்யா? இப்படி ஒரு ஆள் இருக்கறதாவது தெரியுமா உங்களுக்கு ரெண்டு வாரத்துக்கு முன்ன?
__________________________________________________
தமிழக, கர்நாடக மக்களுக்காக சகோதர பாசத்தோடு பாடுபடுவோம்: கலைஞர்

அதான் பங்கு பிரிச்சிக்கிட்டு காவேரி எனக்கு, ஹோகேனக்கல்லும் வேணும்னு நிக்கிறானோ? பாடுதான் படணும்.
___________________________________________________16 comments:

செயபால் said...

//தமிழ் பேசுவோரை அகதிகளாக ஏற்றதற்காக கனடா வருத்தப்படும் -கனடாவிலுள்ள இலங்கைத் தூதுவர் தெரிவிப்பு//
தமிழ் பேசுவோரை அகதிகளாக ஆக்கியதற்கு சிங்களம் எப்பவாவது வருத்தப் படுமா?

வானம்பாடிகள் said...

/தமிழ் பேசுவோரை அகதிகளாக ஆக்கியதற்கு சிங்களம் எப்பவாவது வருத்தப் படுமா?/

ஒரு நாள் படும். படணும்.

Kiruthikan Kumarasamy said...

ஏங்க.. அங்கதான் வாழ விடறதில்லை.. இங்க வந்தபிறகுமா?? இலங்கையிலிருந்து வந்து கனடாவில் அகதிக் கோரிக்கை கேட்டவர்களின் கோரிக்கைகளை Expedited Hearing மூலம் விரைவாக அங்கீகரிக்குமாறு கனடாவின் குடிவரவு மற்றும் அகதிகள் பாதுகாப்பு ஆணையத்துக்கு அறிவிக்கப் பட்டிருக்கிறது... அதுதான் வயிறெரியிறானுங்க..

sakthi said...

விடுதலைப் புலிகளிடம் இருந்து கைப்பற்றிய ஆயுதங்களை விற்கமுயலும் இலங்கை அரசு

அட நன்னாறிப்பயலே! எடுத்ததே பிச்சை. அதையும் அங்க குடுத்து திரும்ப எடுத்து காசாக்க பாக்குறான் பாரு.
என்ன சொல்ல பாலா

சொல்ல வார்த்தையில்லை இக்கொடுமையை

யூர்கன் க்ருகியர் said...

//தமிழர்களின் துயரம் நீக்கப்படும்வரை இலங்கைக்கு விஜயம் செய்யப்போவதில்லை - இந்திய விஞ்ஞானி சுவாமிநாதன் திட்டவட்டம்.
//

many thanks to him!

வானம்பாடிகள் said...

/Kiruthikan Kumarasamy said..

அகதிக் கோரிக்கை கேட்டவர்களின் கோரிக்கைகளை Expedited Hearing மூலம் விரைவாக அங்கீகரிக்குமாறு கனடாவின் குடிவரவு மற்றும் அகதிகள் பாதுகாப்பு ஆணையத்துக்கு அறிவிக்கப் பட்டிருக்கிறது... அதுதான் வயிறெரியிறானுங்க../

அடப் பரதேசிங்களா!

வானம்பாடிகள் said...

/Kiruthikan Kumarasamy said..

அதெல்லாஞ்சரி. வாக்களிக்கறத பத்தி அழகா புள்ளி விவரத்தோடு இடுகை போட்டு இங்க வாக்களிக்காம போனா சாமி குத்தமாகாதா?அவ்வ்வ்வ்..

வானம்பாடிகள் said...

/sakthi said...

சொல்ல வார்த்தையில்லை இக்கொடுமையை/

வெட்கக் கேடு.

வானம்பாடிகள் said...

/யூர்கன் க்ருகியர் said...
many thanks to him!/

YES!

கலகலப்ரியா said...

//என்ன சொல்ல பாலா

சொல்ல வார்த்தையில்லை இக்கொடுமையை//

கொடுமையிலும் கொடுமைங்க .. ! இததான் சொல்லுவாய்ங்க போல.. கொடுமை கொடுமைன்னு கோயிலுக்கு போனா அங்க ஆறேழு கொடுமை ஜிங்கு ஜிங்குன்னு ஆடிச்சாம்னு..

கலகலப்ரியா said...

////பன்றிக்காய்ச்சலை கட்டுப்படுத்தக்கோரி சென்னையில் 16 ந்தேதி அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்: ஜெயலலிதா//

பார்த்துய்யா.. ஆர்ப்பாட்டத்தில பன்னிக் காய்ச்சல் பரவிட போறது..

ஒரு வேளை வீட்டுக்குள்ள பூட்டிண்டு உக்காந்துண்டு பண்றாளோ.. இது எவ்விதம்னு தெரியாம வாயைக் கொடுத்து மாட்டிக்கப்டாது..

வானம்பாடிகள் said...

/கலகலப்ரியா said...
கொடுமை கொடுமைன்னு கோயிலுக்கு போனா அங்க ஆறேழு கொடுமை ஜிங்கு ஜிங்குன்னு ஆடிச்சாம்னு../

சரியாச் சொன்னீங்க. இதுங்களுக்கு உரைக்கவே உரைக்காதா?

கலகலப்ரியா said...

//விடுமுறை நாட்களில் மகளிர் ரயில் ஓடாது!//

நல்லா பாருங்க.. "மகளிர் ரயிலில்" னு இருக்க போறது..

வானம்பாடிகள் said...

/ஒரு வேளை வீட்டுக்குள்ள பூட்டிண்டு உக்காந்துண்டு பண்றாளோ.. இது எவ்விதம்னு தெரியாம வாயைக் கொடுத்து மாட்டிக்கப்டாது../

செஞ்சாலும் செய்யும்.

வானம்பாடிகள் said...

/நல்லா பாருங்க.. "மகளிர் ரயிலில்" னு இருக்க போறது../

அப்போ பஸ்ல ஓடுவாய்ங்களோ?

Suba said...

ம்!

இந்தியா 2020ல் வல்லரசாகும்மாம்!?

வாத்தியாரின் வகுப்பறை என்னும் வலையிலே 600+ followers. ஆனால் மனித நேயத்துடன் (http://classroom2007.blogspot.com/2009/08/blog-post_14.html)பின்னூட்டம் இட்டிருப்பவர்கள் இரண்டே பேர் (RSM, THIRUNARAYANAN). மற்றவர்கள் (http://classroom2007.blogspot.com/2009/08/blog-post_15.html)இலவசத்தை (மிட்டாய்களை) பெற அடித்துக் கொண்டிருக்கிறார்கள்! இந்தியர்களின் இந்த குணம் திருந்தும் வரை இந்தியா ஒருபோதும் முன்னேறாது. வாத்தி(யார்) இது சம்பந்தமாக ஒரு பதிவு போடலாமே!?

- இது ஒரு அப்பாவி இந்தியனின் குரல்/வேண்டுகோள்.