Wednesday, August 12, 2009

நறுக்குன்னு நாலு வார்த்த - 91

மகிந்த ராஜபக்க்ஷ மனநோயால் பாதிக்கப்பட்டுள்ளார், சிகிச்சை பெற சிங்கப்பூருக்கு இரகசிய பயணம்

அது நிஜமானா கடவுள் இருக்காருன்னு கன்சிடர் பண்ணலாம். அடுத்த பைத்தியமும் சீக்கிரம் முத்தட்டும்.
_______________________________________________
அரசாங்கத்தின் முக்கிய பெண்மணியொருவரின் சகோதரரே கே.பி.யை அழைத்துச் சென்றார்:செய்தி

என்னா இழவுடா இதெல்லாம். எத்தனை உயிரைக் கேவலப் படுத்துவீங்க.
_______________________________________________
கே.பி. கைதுசெய்யப்பட்டாரா? தன்னிச்சையாக அரசாங்கத்துடன் இணைந்துகொண்டாரா?

இன்னொரு கருணாவா? ஏன்யா ஏன் இப்படியெல்லாம் நடக்குது?
_______________________________________________
இடம் பெயர்ந்தோர் நலன் பற்றி கருத்துக் கூறும் அருகதை அமெரிக்காவுக்கில்லை:ராம்புக்வெல‌

காசு வாங்குறப்ப கழுத குடுத்தாலும் வாங்குவான். வந்தியா குடுத்தியா போய்ட்டே இருன்னு துப்புறான் ஒருத்தனுக்கும் உறைக்குதா?
_______________________________________________
தமிழீழ விடுதலைப் புலிகளின் வங்கி கணக்குகளை முடக்குமாறு இலங்கை அரசு பத்து நாடுகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

அப்படியே அக்கவுண்ட் ஆரம்பிச்சி அதில போட்டு விட சொல்லுங்கடா அண்ணந்தம்பிங்க. செய்வானுவ.
_______________________________________________
சர்வதேச மன்னிப்புச் சபையின் கோரிக்கை அடிப்படையற்றது – மஹிந்த சமரசிங்க

அடிப்படை இருந்தா மட்டும் அப்படியே பரீசிலிப்பாரு.
_______________________________________________
கே.பி. எங்கள் ஹோட்டலில் வைத்து கைதானமைக்கான அறிகுறிகள் இல்லை : மறுக்கும் ஹோட்டல் நிர்வாக உறுப்பினர்

யாருமே இல்லை இல்லைன்னா பின்ன எப்படி? தானா வந்தா தயா மாஸ்டர் மாதிரி பேட்டி குடுத்திருக்கலாம்ல? என்னடா நடக்குது.
_______________________________________________
இலங்கை: புத்த விகாரமாகிறது கதிர்காமம் முருகன் கோயில்?

தமிழனுக்கு வாச்ச விதி தமிழ்க் கடவுளையும் விடலையா? தமிழனதான் காப்பாத்தல. தன்னையாவது காப்பாத்திக்கோ முருகா. நீ சாமின்னு தமிழக அரசு நிவாரணம் கூட அனுப்பாது.
_______________________________________________
இலங்கையில் ஒரு கிலோ மீட்டர் நிலப்பரப்புக்குள் ஒன்றரை லட்சம் மக்கள் தடுத்துவைப்பு

கின்னஸ்ல போடுங்கடா.
_______________________________________________
தள்ளாத வயதிலும் உழைக்கும் கலைஞர்: ப.சிதம்பரம்

யாருக்காக? இது பாராட்டா வயித்தெறிச்சலா?
_______________________________________________
வள்ளுவர் சிலைக்கு பேரமாக சர்வக்ஞர் சிலை: பாமக

அப்படியா? அப்போ கூவத்துக்கு பேரமா காவேரி தருவானாங்க? வள்ளுவர் கூவமான்னு குறுக்குசால் ஓட்டிறாதிய மருத்துவரையா. நம்மகிட்ட குடுக்க வேற ஆற்றில தண்ணி இல்லையே?
_______________________________________________
அரவாணிகளே நடத்தும் இட்லி கடை

ஏன்? அவங்க சுட்டா இட்டிலி வேகாதா? இல்ல பண்ணக்கூடாத தொழிலா? இதெல்லாம் ஒரு செய்தி.
_______________________________________________
ஈ ஆடும் தனியார் பி.இ. கல்லூரிகள்

ஏன் பி ஆடலயா? அவ்வளவு காசு வாங்குறானுவ. ஈ ஆடாம பதிக்கத் தெரியல பாரு. ஹய்யோ ஹய்யோ.
_______________________________________________

3 comments:

யூர்கன் க்ருகியர் said...

//நீ சாமின்னு தமிழக அரசு நிவாரணம் கூட அனுப்பாது.
//

:)

வானம்பாடிகள் said...

வாங்க யூர்கன்:)

Anonymous said...

"நீ சாமின்னு தமிழக அரசு நிவாரணம் கூட அனுப்பாது"

Good one :)