Tuesday, August 11, 2009

நறுக்குன்னு நாலு வார்த்த - 90

என்ன விலை கொடுத்தாகிலும் தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக வலையமைப்பு மிக விரைவில் முற்றாகத் துடைத்தழிக்கபடும்: கோத்தபாய‌

நீ ஏன் ராசா விலை குடுக்கணும். விலையும் கொடுத்து உனக்கு அடியாளா நிக்க அகில உலகமும் காத்திருக்குதே.
_____________________________________________________________
பத்மநாதனை இலங்கை அரசு ஒருபோதும் இந்தியாவிடம் ஒப்படைக்காது: கெஹலிய ரம்புக்வெல

அதெல்லாம் உன்கிட்ட யாரு எதிர்பார்க்க முடியும்? நீயே வெச்சிக்க.
_____________________________________________________________
ஒரு விடுதலைப் போராட்ட இயக்கத்தின் பொறுப்பாளரை இரண்டு அரசுகள் கடத்தி‌ச் செல்கின்றன என்றால் சர்வதேச நீதிமுறைகள் எதற்காக?

என்ன நீதி முறை மீறப்பட்டதுன்னு தெரிய வேணாமா? அதுக்காகவாக இருக்கும்.
_____________________________________________________________
பயங்கரவாதத்தை ஒழிக்க உலகம் முன்வரவேண்டும் மகிந்தா அழைப்பு..!

அப்படியானால் முதல்ல உன்ன இல்லையா கவனிக்கணும். எவனும் வரமாட்டான்னு ஏத்தம் பய புள்ளைக்கு.
_____________________________________________________________
விடுதலைப் புலிகள் பிரித்தெடுக்கப்படும் வரை முகாம்களில் இருந்து மக்களை வெளியேற அனுமதிக்கப் போவதில்லை – அரசாங்கம்

தெரியும்டி. நிவாரணங்கள் கொட்டும் வரைன்னு நாங்க மாத்திப் படிச்சுப்பமில்ல.
_____________________________________________________________

முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வாவை குறிவைக்க றோவின் உதவியை நாடும் இலங்கையின் புலனாய்வுத்துறை

போற போக்கு பார்த்தா ரா என்றால் ராஜபக்சே அடியாட்கள் விங்னு ஆயிடும் போல.
_____________________________________________________________
கோத்தபாய ராஜபக்சேவின் பிரதமர் கனவு

இலங்கையோட தலை எழுத்து. வெறிபிடிச்ச கொலைகாரப் பாவிங்க கிட்ட மாட்டிக்கிட்டு தவிக்குது.
_____________________________________________________________
இலங்கையின் தரை, கடல் கண்காணிப்புப் பொறுப்பை கவனிக்கும் தமிழக நிறுவனம்?

பின்ன. காட்டிக் குடுக்கிறதில தமிழன மிஞ்ச எவனிருக்கான்.
_____________________________________________________________
விஸ்வநாதன் உருத்திரகுமாரனையும் பிடிப்போம்: கெஹெலிய ரம்புக்வெல்ல

வெள்ளை விமானம் தயாரா?
_____________________________________________________________
குற்றமிருந்தால் சொல்லுங்கள் திருத்திக் கொள்கிறோம்: ப.சிதம்பரம்

குற்றம்னு ஒத்துக்கிட்டாதானே! அவ்வளவு பேரை அடியோட அழிச்சிட்டு ஒண்ணுமே நடக்காத மாதிரி புளுகின ஆளாச்சே?
_____________________________________________________________
அனிதாவை அனுப்பி வைத்த அதிமுகவுக்கு நன்றி: கலைஞர்

பெருசுக்கு குசும்ப பாரு. முழுப்பேரை சொன்னா என்ன. வில்லங்கமா இல்லை?
_____________________________________________________________
இலங்கையில் திருமண வயது 18 ல் இருந்து 16 ஆகக் குறைப்பு

ஒரு நல்ல குணமாவது கிடையாதாடா உங்க கிட்ட? ரொம்ப அவசியம் இது இப்ப.
_____________________________________________________________

10 comments:

sakthi said...

பத்மநாதனை இலங்கை அரசு ஒருபோதும் இந்தியாவிடம் ஒப்படைக்காது: கெஹலிய ரம்புக்வெல

அதெல்லாம் உன்கிட்ட யாரு எதிர்பார்க்க முடியும்? நீயே வெச்சிக்க.

இதை விட கொடுமை என்ன உள்ளது
இருக்கும் கடைசி ஈழத்தமிழனின் உயிர் எடுத்து தான் விடுவார்களா???

இந்த கொடுமை எல்லாம் கண்டும் காணாதிருக்கும் நம் அரசாங்கம்

எல்லாம் நம் தலையெழுத்து பாலா

க. தங்கமணி பிரபு said...

பிரமாதம்! இந்த எழவெடுத்த பயலுகளை திட்டி திட்டி ட்யர்டாயிடுச்சு! உங்க பதிவு ஒரு மாற்று கூடவே நச்சுனு இருக்கு! வாழ்த்துக்கள்!!

வானம்பாடிகள் said...

sakthi said...
இந்த கொடுமை எல்லாம் கண்டும் காணாதிருக்கும் நம் அரசாங்கம்

எல்லாம் நம் தலையெழுத்து பாலா/

அங்கேயே இருக்கே சகோதரி. வேட்டை நாய் மாதிரி ராவிடம் உதவி கேக்க போறாங்கன்னு. இதில கண்டும் காணாம வேற இருக்கா நம்ம அரசாங்கம். அப்படி இருந்தாலாவது எத்தனையோ உயிர் பிழைச்சிருக்கலாம். நம்ம தலை எழுத்து எப்படி இருக்கோ தெரியலை. பாவம் அனியாமா அப்பாவி ஜனங்க தலை எழுத்தை மாத்தினது நாமதான்.

வானம்பாடிகள் said...

வரவுக்கும் பாராட்டுக்கும் நன்றி தங்கமணி பிரபு.

செயபால் said...

ரா இன் விளக்கம் சிரிப்போ சிரிப்பு

யூர்கன் க்ருகியர் said...

//குற்றமிருந்தால் சொல்லுங்கள் திருத்திக் கொள்கிறோம்: ப.சிதம்பரம்//

திருத்திக்கொள்கிற குற்றமா பண்ணிருக்கீங்க ?

Suresh Kumar said...

பயங்கரவாதத்தை ஒழிக்க உலகம் முன்வரவேண்டும் மகிந்தா அழைப்பு..!

அப்படியானால் முதல்ல உன்ன இல்லையா கவனிக்கணும். எவனும் வரமாட்டான்னு ஏத்தம் பய புள்ளைக்கு.////////////////

இதெல்லாம் உலகத்திற்கு எப்போது புரிய போகிறது

_________________________________________________

வானம்பாடிகள் said...

/செயபால் said...

ரா இன் விளக்கம் சிரிப்போ சிரிப்பு/

வாங்க செயபால். ஹி ஹி.

வானம்பாடிகள் said...

/யூர்கன் க்ருகியர் said...

திருத்திக்கொள்கிற குற்றமா பண்ணிருக்கீங்க ?/

குற்றம்னு ஒத்துக் கொண்ட பிறகு தானே திருந்துற கேள்வி.

வானம்பாடிகள் said...

/Suresh Kumar said...
இதெல்லாம் உலகத்திற்கு எப்போது புரிய போகிறது /

இவன் வெறி பிடிச்சி குடுத்த கையை கடிக்கிறப்ப புரியும்.