Wednesday, August 5, 2009

நறுக்குன்னு நாலு வார்த்த - 86

ராஜ‌ப‌க்ஸே மீது அதிருப்தி. பொன்சேகா நாட்டை விட்டு வெளியேறி அமெரிக்கா செல்கிறார்: செய்தி

ஒழியிற‌ ச‌னிய‌ன் முன்னாடியே தொலைஞ்சிருக்க‌க் கூடாதா? எத்த‌னை உயிரை தின்னுட்டான் பாவி. ப‌ய‌ புள்ளைய‌ புடிச்சி அவ‌ன் அவ‌ல‌த்தை அவ‌னுக்கே குடுக்க‌ணும். ஒபாமாவால‌ இதாவ‌து ப‌ண்ண‌ முடியாதா?
________________________________________________
வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு வடக்கு - கிழக்கு மாகாண காணிகள் வழங்கப்படும்: காணி அமைச்சர் ஜீவன் குமாரதுங்க

அடப்பாவிங்களா! அட்வான்ஸ் வாங்கி ரியல் எஸ்டேட் பிஸினசுக்கா இவ்வளவு பேரை கொலை பண்ணது?
________________________________________________
சீனாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்த நடவடிக்கை: ரோஹித்த போகொல்லாகம

பாலுக்கும் காவல். பூனைக்கும் தோழனா?
________________________________________________
சீனா, இலங்கையை பாதுகாப்பு ரீதியில் முடக்குவதற்கு இந்தியா புதிய திட்டம்

எல்லாம் நானே தாரேன். அவ‌ன்கிட்ட‌ போகாத‌ன்னு கால‌ ந‌க்க‌வா?
________________________________________________
தமிழகத்தில் 300 வரையிலான விடுதலைப்புலிகள் பதுங்கியிருக்கலாம் என சந்தேகம்:செய்தி

தமிழகத்தில் புலிகள் ஊடுருவல் இல்லை: மத்திய அமைச்சர். அவ‌ன் க‌வ‌லைப் ப‌ட‌க்கூடாதேன்னு என்னா அக்க‌றை.
________________________________________________
இலங்கை தமிழர் அகதிகள் முகாமில் அகதிகள் மோதல்

இருக்கிற‌ அவ‌ல‌ம் போறாதா? குடித்த‌ன‌ம்தான் போச்சு குடி போக‌லைன்னு இந்த‌ ச‌னிய‌ன் வேறையா?
________________________________________________
ஆலடி அருணா கொலை வழக்கில் எஸ்.ஏ.ராஜாவுக்கு இரட்டை ஆயுள்

ஒரு ஆயுள் இந்தா இருக்கு. இன்னொரு ஆயுள் எங்கன்னு வெறுப்பேத்த போறாரு.
________________________________________________
போலி பத்திரம் தயார் செய்து நிலம் மோசடி: ஜி.கே.மணியின் சம்மந்தி கைது

விக்கிற‌துக்கு முன்னாடி போலின்னு க‌ண்டு பிடிக்க‌ முடியாதா?
________________________________________________
சென்னை துறைமுக கழகத்தின் முன்னாள் தலைவர் வீட்டில் சோதனை: 2 கோடி ரூபாய் பறிமுதல்

எண்ணுற‌துக்குள்ள‌ புடிச்சிட்டாங்க‌ போல‌.
________________________________________________
எனது பிரச்சாரம் அதிமுகவின் தேர்தல் புறக்கணிப்பை மையமாக கொண்டிருக்கும்: எஸ்.வி.சேகர்

என்னைப் புற‌க்க‌ணிக்கிறாங்க‌ன்னு ஆர‌ம்பிச்சி இப்போ தேர்த‌ல் புற‌க்க‌ணிப்புன்னு புற‌க்க‌ணிப்புல‌யே பொழ‌ப்பு ஓடுதுல்ல‌ சேக‌ரு.காமெடிக்கு வ‌ந்த‌ ட்ராஜிடிய‌ பாரேன்.
________________________________________________
பிரதமர் மன்மோகன் சிங் ரக்ஷாபந்தன் கொண்டாடினார்

ராஜ‌ப‌க்சேக்கு க‌யிறு க‌ட்டினாரா?
________________________________________________
ராஜினாமா செய்ய கோரினால் உயிர் துறப்பேன்: பூட்டா சிங்

யோவ்! த‌ருவிசில்லாத‌ புள்ளைய‌ பெத்துட்டு நீயும் பூட்டா அடிச்ச‌ கொள்ளையெல்லாம் யாரு காப்பாத்துற‌து? பொருப்பில்லாம‌ பேசிகிட்டில்லாம‌ பொத்திக்கிட்டு உக்காரு.
________________________________________________
மருமகளை மாமியார் உதைப்பது குற்றம் அல்ல: சுப்ரீம் கோர்ட்

அட்றா ச‌க்க‌ அட்றா ச‌க்க‌! ஐயாவுக்கு இவ்வளவு கொலைவெறி வர ‌ அள‌வுக்கா த‌ங்க‌ம‌ணி ந‌ட‌த்துது?
________________________________________________
ஆசிரியை ஜன்னல் ஜாக்கெட்டும் அணிய தடை: பள்ளி கல்வித்துறை உத்தரவு

திரை வெச்சி தெச்சிட்டு அணியலாம்ல. ப‌ள்ளிக்குள்ள‌ இழுத்து விட்டுக்க‌லாம் . காற்றுக்கு கூட‌ த‌டையா?
________________________________________________

7 comments:

லவ்டேல் மேடி said...

சூப்பரு .....!!!

வானம்பாடிகள் said...

நன்றி மேடி

Suresh Kumar said...

narukk..........

யாசவி said...

:-)

வானம்பாடிகள் said...

வாங்க யாசவி, சுரேஷ்குமார்.

ராஜ நடராஜன் said...

ஒரு பய புள்ள!ஒரே ஒரு பய புள்ள நறுக் கேள்விகள கேட்டு திருந்தாட்டியும் பரவாயில்ல!கண்ணுல பார்த்தா கூடப் போதும்.நான் படிச்சதோட பலனை அடைவேன்:)

வானம்பாடிகள் said...

/ ராஜ நடராஜன் said...

ஒரு பய புள்ள!ஒரே ஒரு பய புள்ள நறுக் கேள்விகள கேட்டு திருந்தாட்டியும் பரவாயில்ல!கண்ணுல பார்த்தா கூடப் போதும்.நான் படிச்சதோட பலனை அடைவேன்:)/

நன்றி ஐயா.