Tuesday, August 4, 2009

நறுக்குன்னு நாலு வார்த்த - 85

தமிழர்களுக்கு அதிகாரத்தை பகிர்ந்து கொடுக்க முடியாது: மகிந்த ராஜபக்சே அறிவிப்பு

அதுக்குதான் நாங்களே எடுத்துக்குறோம்னு போராட வேண்டியதா போச்சு. கை தூக்கின கனவான்களே. இதுக்கென்ன சொல்லப் போறீங்க?
_________________________________________
இலங்கையில் இந்திய மருத்துவ குழுவின் சேவைக்காலம் மேலும் இரு மாதங்கள் நீடிப்பு!

5000 பேரு ஆளு போனாங்களாம். இவிங்க இரு மாதம் நீடிக்கிறாங்களாம். என்னமோ நடக்குது. மர்மமாய் இருக்குது! ஒன்னுமே புரியலே.....
_________________________________________
ஈழத்தமிழர்களுக்கு 4-வது கட்டமாக ரூ.15 கோடி நிவாரணப் பொருட்கள் நாளை மறுநாள் அனுப்பப்படுகிறது

குடுத்ததெல்லாம் என்னாச்சின்னு கேட்டுட்டு குடுங்களேன். ஆத்தில போட்டாலும் அளந்து போடுன்னு இருக்கா இல்லையா?
_________________________________________
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் தீர்வுத் திட்டம் தயாரிப்பு! தீர்வுத்திட்டத்துடன் விரைவில் இந்தியா பயணம்

தீர்ந்தே போயிடும். கிளம்பறதுக்குள்ள அடிச்சிட்டு சாவாங்க.
_________________________________________
இலங்கைக்கு பாரியளவில் நிதி உதவி தேவைப்படுகிறது - கோத்தபாய

இலங்கைக்கா. இவனுங்களுக்கா? அதான் கடன் வருதே. அடிங்கடா.
_________________________________________
தமிழ் மக்களுக்கு சுயநிர்ணய அதிகாரம் தேவை என்பதை தேர்தல் மூலம் சர்வதேசத்துக்கு அறிவியுங்கள்: சம்பந்தன்.

ஓட்டு போடவாவது கம்பிக்கு வெளிய விடுவானா? பதவி பதவின்னு பறக்குதுங்க.
_________________________________________
மனிதாபிமான அவலம் ஏற்பட்டுள்ளதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களை மறுக்கிறார் கெஹலிய ரம்புக்வெல

இவனுங்கள ஒரு நாள் இப்படி நிறுத்தினா தெரியும். குற்றவாளி எப்போ ஒத்துக்கிட்டிருக்கான்?
_________________________________________
தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்

தமிழ்நாட்டையே தாக்கினாலும் யாருக்கென்னா? இடைத் தேர்தல் வருது இப்போ போய் இதெல்லாம் பேசிகிட்டு.
_________________________________________
நிர்வாணமாக்கி தமிழக மீனவர்கள் சித்ரவதை:இலங்கை கடற்படை அட்டூழியம்

தமிழன் இடுப்பு துணிய உருவலன்னா இவனுக்கு பொழைப்பு நடக்காது போல.
_________________________________________
பாதிக்கப்பட்ட தமிழர்கள் முகாமில் சக்தி அம்மா

சமூக சேவகர்களால முடியாததும் சாமியாரால முடியும் .
_________________________________________
எந்திரன் படத்திற்கு பிறகு ரஜினி அரசியல் பிரவேசம்

ஏங்க. படம் சரியா வரலையா?
_________________________________________
எலக்ட்ரானிக் நிபுணர் குழு ஒன்று ஓட்டு எந்திரத்தில் முறைகேடு செய்யலாம் என்பதை நிரூபிப்போம் என்று அறிவித்து உள்ளது.

இதுக்கு ஒரு பள்ளிக்கூடம் வெச்சி காசு பார்த்துடுவானுங்களே.
_________________________________________
மாயாவதிக்கு சிலை வைக்க 556 கோடி:வறட்சியை சமாளிக்க 250கோடி மட்டும்

வறட்சி மக்களுக்குத்தான்யா. மாயாவதிக்கில்லை. போவிங்களா.
_________________________________________
12 ஆயிரத்து 515 பேரில் மணமகனை தேர்ந்து எடுத்தார் நடிகை ராக்கிசவந்த்

12 ஆயிரத்து 514 பேருக்கு ராக்கி கட்டி அனுப்பிட்டாங்களா? ரொம்ப தேவை.
_________________________________________

14 comments:

கிரி said...

//எந்திரன் படத்திற்கு பிறகு ரஜினி அரசியல் பிரவேசம்

ஏங்க. படம் சரியா வரலையா?//

:-))))

ஜெகநாதன் said...

செம நறுக்! சுவாரஸியமா, சுருக்கமா நடப்பு செய்திகள் அறிஞ்சிக்கிட்ட உணர்வு! நம்ம மீடியாக்காரங்க ஏன் இது மாதிரி முயற்சி பண்ணமாட்டேங்கிறாங்க?? நன்றி பாமரன்!

இது நம்ம ஆளு said...

2 ஆயிரத்து 514 பேருக்கு ராக்கி கட்டி அனுப்பிட்டாங்களா?

எப்படி இப்புடி

அருமை

Maheswaran Nallasamy said...

மாயாவதிக்கு சிலை வைக்க 556 கோடி:வறட்சியை சமாளிக்க 250கோடி மட்டும்

நம்ம ஒரு அம்மாவுக்கு இந்த மேட்டர் தெரியுமா? ;)

sakthi said...

மாயாவதிக்கு சிலை வைக்க 556 கோடி:வறட்சியை சமாளிக்க 250கோடி மட்டும்

வறட்சி மக்களுக்குத்தான்யா. மாயாவதிக்கில்லை. போவிங்களா.

பாமரன் போதுமா????

வானம்பாடிகள் said...

வாங்க கிரி=))

வானம்பாடிகள் said...

/ ஜெகநாதன் said...

செம நறுக்! சுவாரஸியமா, சுருக்கமா நடப்பு செய்திகள் அறிஞ்சிக்கிட்ட உணர்வு! நம்ம மீடியாக்காரங்க ஏன் இது மாதிரி முயற்சி பண்ணமாட்டேங்கிறாங்க?? நன்றி பாமரன்!/

வரவுக்கும் பாராட்டுதலுக்கும் நன்றி ஜெகநாதன்.

வானம்பாடிகள் said...

/ இது நம்ம ஆளு said...

2 ஆயிரத்து 514 பேருக்கு ராக்கி கட்டி அனுப்பிட்டாங்களா?

எப்படி இப்புடி

அருமை/

ஹி ஹி நன்றிங்க.

வானம்பாடிகள் said...

/ Maheswaran Nallasamy said...

மாயாவதிக்கு சிலை வைக்க 556 கோடி:வறட்சியை சமாளிக்க 250கோடி மட்டும்

நம்ம ஒரு அம்மாவுக்கு இந்த மேட்டர் தெரியுமா? ;)/

இடைத் தேர்தல்ல நின்னாலே காசுக்கு நட்டம்னு கம்னு இருக்காங்க. இதுல வேற இப்போ சிலைன்னா கைக்காசில்ல போகும். பதவிக்கு வந்து எனக்கு சிலை வைக்க வேண்டாம்னு பிட்ட போட்டா நாம போராட்டம் தீக்குளிபெல்லாம் பண்ணி ஒத்துக்கிட வைப்போம்ல.

வானம்பாடிகள் said...

/மாயாவதிக்கு சிலை வைக்க 556 கோடி:வறட்சியை சமாளிக்க 250கோடி மட்டும்

வறட்சி மக்களுக்குத்தான்யா. மாயாவதிக்கில்லை. போவிங்களா.

பாமரன் போதுமா????/

அரசு திட்ட நிதில ஒதுக்கினது எப்போங்க அதுக்குள்ளையே நடந்திருக்கு. அது ஆவும் 1500 கோடி கூட.

ராஜ நடராஜன் said...

//எந்திரன் படத்திற்கு பிறகு ரஜினி அரசியல் பிரவேசம்

ஏங்க. படம் சரியா வரலையா?//

ரஜனி அரசியல் பிரவேசம் பற்றி எனக்கு ரொம்ப நாளாவே ஒரு அது என்னமோ Hunch ன்னு சொல்வாங்களே அந்த மாதிரி ஒரு அசரிரீ குரல் ரொம்ப வருசமா கேட்டுகிட்டே இருக்குது.
இந்த அசரிரீ குரலுக்கும் நான் எப்ப வருவேன் எப்படி வருவேன்னு யாருக்கும் தெரியாது பஞ்ச் டயலாக்குக்கும் ஒரு சம்பந்தம் இருக்குது.பலிச்சா இந்தப் பின்னூட்டத்தை முன் ஆதாரமா வச்சிகிட்டு நேரம் வரும்போது ஒரு பதிவு போட்டுட வேண்டியதுதான்.பலிக்கலென்னா கிரி கூட பல்லிங் சடுகுடு சடுகுடு மட்டும்தான்:)

ராஜ நடராஜன் said...

//12 ஆயிரத்து 515 பேரில் மணமகனை தேர்ந்து எடுத்தார் நடிகை ராக்கிசவந்த்//

என்னது கல்யாணம் ஆயிடுச்சா?சொல்லவேயில்லை!

ராஜ நடராஜன் said...

//இலங்கைக்கு பாரியளவில் நிதி உதவி தேவைப்படுகிறது - கோத்தபாய//

சொந்தமா காசு கொடுக்கற வக்கு இருக்கிறவனையெல்லாம் சண்டைக்காரனா மாத்திப்புட்டு இப்படி பிச்சை கேட்கறது சரியில்லன்னு தோணுது.எங்களோட வரிப்பணம் தான் கஜானாவில நிறையுதே.டெல்லிக்கு ஒரு எட்டுப் போயிட்டுத்தான் வர்றது.

வானம்பாடிகள் said...

/ராஜ நடராஜன் said...
நேரம் வரும்போது ஒரு பதிவு போட்டுட வேண்டியதுதான்.பலிக்கலென்னா கிரி கூட பல்லிங் சடுகுடு சடுகுடு மட்டும்தான்:)

அய்யோ முடியல:))))

/என்னது கல்யாணம் ஆயிடுச்சா?சொல்லவேயில்லை!/

இபோதைக்கு சுயம்வரம்தான் ஆகியிருக்கு. கூப்பிடுவாங்க.:))

/எங்களோட வரிப்பணம் தான் கஜானாவில நிறையுதே.டெல்லிக்கு ஒரு எட்டுப் போயிட்டுத்தான் வர்றது./

அதுக்கெல்லாம் அவசிய்மே இல்லாம நீட்டிகிட்டு நிக்கிறானுவளே.