Friday, August 28, 2009

நறுக்குன்னு நாலு வார்த்த - 100

இராணுவத்திற்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் வீடியோக்கள் சிங்கள புலிகளால் விநியோகம்: திவயின

ஆமாம்டா. உண்மை சொல்றவனெல்லாம் அந்த அந்தமொழிப் புலி. உனக்கு எடுபிடி எல்லாம் நீ வளக்குற நாக்குட்டி. உன் இராணுவத்துக்கு அபகீர்த்தி வேறயா?
_________________________________________________
பிரபாகரன் குறித்த விசாரணைக்காக இந்திய முகவர் அமைப்பு விரைவில் இலங்கை விஜயம்

இவ்வளவு நாள் சத்தமே காணோம். காட்டுனதெல்லாம் காணாம போகட்டும்னு காத்திருந்தா மாதிரி இருக்கு. அதென்ன முகவர் அமைப்பு. ஒட்டப்பால கும்பல்போய் ஓதிக் கொடுத்துட்டு வருமா?
_________________________________________________
இலங்கை மீது போர்க்குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும்: நோர்வே அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம்

நோர்வேப் புலின்னு நக்கலடிப்பான் சிங்களவன். பான் கி மூன் காதில 2 புல்லட் சொருகி அனுப்பிட்டானா பக்ஸே. எனக்கு என்னா போச்சின்னே இருக்கானே அந்தாளு.
_________________________________________________
யுத்தத்தில் ஈடுபடாதவர்கள் தடுப்பு முகாமிலிருந்து வெளியேற அனுமதிக்க வேண்டும் – உச்ச நீதிமன்றம்

அதெல்லாம் சரிங்கையா. சண்டை நடந்த இடத்தில இருந்தவங்க எல்லாமே ஈடுபட்டவங்கன்னு சொல்வானே!
_________________________________________________
சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து அரசாங்கம் புற்றுநோயை கடனாக பெற்றுள்ளது: சிரேஷ்ட விரிவுரையாளர்.

இந்த அரசாங்கம் பிழைச்சிதான் என்ன பண்ணப்போகுது. இவனே புற்றுநோய் மாதிரிதான். அழியட்டும்.
_________________________________________________
பாரிய பட்டாளத்துடனான ஜனாதிபதியின் அமெரிக்க விஜயம் ரத்து

ஏனோ? என்னமோ புதுசு புதுசா வெடிக்குதே. அங்க போய் நிக்கிறப்ப ஆப்பு வெச்சிடுவாங்கன்னா?
_________________________________________________
இலங்கையில் அரசியல் தீர்வை மீண்டும் வலியுறுத்துகிறார்: ரொபேர்ட் ஓ பிளேக்

ஆமாம். சொல்லிட்டே இருங்க. வலியெல்லாம் சனங்களுக்குதான். அவனுக்கு உறுத்தல் கூட இல்ல. இவரு வலியுறுத்துறாராம்.
_________________________________________________
23 அமைச்சர்களுக்கு 13 கோடி ரூபா வாகனக் கூலியாக செலுத்தப்படுகிறது: ரோசி சேனாநாயக்க

இதுக்கும் எவனாவது நிவாரணம் குடுப்பாங்கம்மா.
_________________________________________________
ஈழத்தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட காட்சிகள் பற்றி மத்திய அரசு விசாரணை நடத்தும்: எஸ்.எம். கிருஷ்ணா

என்னா கொழுப்பு இவருக்கு. கொல்லப்பட்டது பற்றி இல்லையாம் காட்சி பற்றி விசாரிக்கவாம். மவனே. மாட்டணும்டா. இப்படி பயந்தே சாவப் போறீங்க.
_________________________________________________
மின்னணு வாக்குப்பதிவு முறைகேடு புகார்: நிரூபிக்க பா.ம.க.வுக்கு தேர்தல் ஆணையம் மீண்டும் வாய்ப்பு

தோடா! அப்புறம் நாங்க எப்படி போடுறது. முடிஞ்சா கண்டு பிடிங்க.
_________________________________________________
உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு தங்கபாலு பாராட்டு

அடுத்தவன் சொத்துக் கணக்கு குடுத்தா பாராட்டுறதுக்கென்னா ? இவரு குடுக்கமாட்டாரே!
_________________________________________________
கலைஞரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தை வரவேற்கிறோம்: ராமதாஸ்

மருத்துவக் காப்பீடுன்னா பில்லே மாறிடும்ல. தொழில் வேற! கொள்கை வேற!
_________________________________________________
பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு செல்வோர் ரூ.500 க்கு மேல் வைத்திருக்கக்கூடாது: அரசு உத்தரவு

ஒரு ஒரு வாட்டியா போகும் போதெல்லாம் ரூ 500 வெச்சிருக்கலாம்தானே! நல்லா குடுக்குறாய்ங்கப்பா அகிடியா!
_________________________________________________
திமுக இல்லாமல் மத்தியில் ஆட்சி நடத்த முடியும்: காங்கிரஸ் எம்.எல்.ஏ.,ஞானசேகரன்

தலீவா! மம்மிக்கு போன் போட்டாச்சா? இல்லைன்னா நாளைக்கு முரசொலில கேள்வி பதிலா?
_________________________________________________
இரட்டை கொலை வழக்கு: விஜயகாந்துக்கு சி.பி.சி.ஐ.டி.,சம்மன்

நொந்து நூலாகப் போறானுங்க ஏண்டா கூப்டோன்னு. சாரின்னு சொல்லக்கூட விடமாட்டாரே. எனக்குப் பிடிக்காத வார்த்தைன்னு.
_________________________________________________
3 1/2 மணி நேரத்தில் 14 பேருக்கு அறுவை சிகிச்சை: மதுரை அரசு மருத்துவமனை மீது புகார்

திருப்பதில மொட்டையடிக்கிறா மாதிரி கீறி விட்டுட்டு நெக்ஸ்ட்ம்பாய்ங்களோ?
_________________________________________________
டைகர் பவுண்டேஷன்: புலிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க அரசு புது முயற்சி

என்னாது? நிஜம்மாவா? இந்தக் குழப்பம் வரக்கூடாதுன்னு புது வருடம் மாத்திவிட்டா மாதிரி புலிக்கு பேரு மாத்திடுங்க தலைவா?
_________________________________________________
இந்தியாவின் தேசிய இயக்கங்களில் ஒன்றாக தி.மு.க. மாறும்: கலைஞர்

அதுக்காகதான் இந்தி படிக்கணுமோ!
_________________________________________________
சென்னை வக்கீல்களுடன் மும்பை போலீஸ் மோதல்

சென்னை போலீஸ் மோதின விவகாரமே முடியல. நீங்க வேறயா?
_________________________________________________
சல்மான் கான் டவல் 62,000க்கு ஏலம்

நல்லா வருது வாயில. கோடி ரூபாய்க்கு கோவணத்த கூட எடுப்பானுங்க போல ஏலத்துல.
_________________________________________________
அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைக்க வேண்டும்: பிரதமருக்கு சோனியா கடிதம்

ஏம்மா. இதெல்லாம் அரிசி பருப்பை சொல்றீங்களா! அந்த நாய்க்கு அத்யாவசியம்னு கொடுத்த ஆயுதத்த சொல்றீங்களா?
_________________________________________________

21 comments:

கலகலப்ரியா said...

நறுக் நூறுக்கு வாழ்த்துக்கள்.. !

வானம்பாடிகள் said...

/ கலகலப்ரியா said...

நறுக் நூறுக்கு வாழ்த்துக்கள்.. !/

எழுத வைத்து, ஊக்குவித்த உங்களுக்குத்தான் நான் நன்றி சொல்லணும்.

பிரியமுடன்...வசந்த் said...

நூறாவது நறுக்கு நச்

வாழ்த்துக்கள் பாலா

Kiruthikan Kumarasamy said...

ஹே ஹே.... 100 வது நறுக்கு ஏமாற்றவில்லை

பழமைபேசி said...

பாலாண்ணே, சதம் போட்டாச்சு... மிக்க மகிழ்ச்சி!

Maheswaran Nallasamy said...

இதெல்லாம் சேர்த்து ஒரு புத்தகமா போட்ட என்ன? :) நறுக்குன்னு நாலு வார்த்தை - பாகம் ஒன்னு..எப்படி யோசனை.?

கதிர் - ஈரோடு said...

சதத்துக்கு வாழ்த்துகள்

//கோடி ரூபாய்க்கு கோவணத்த கூட எடுப்பானுங்க போல ஏலத்துல.//

அடக் கருமமே

SUBBU said...

100 -க்கு வாழ்த்துகள் :)))))))

koh said...

greate

சூர்யா ௧ண்ணன் said...

நூறாவது நறுக்குக்கு

வாழ்த்துக்கள் தலைவா!

வானம்பாடிகள் said...

பிரியமுடன்...வசந்த் said...

/ நூறாவது நறுக்கு நச்

வாழ்த்துக்கள் பாலா/

நன்றி வசந்த்.

வானம்பாடிகள் said...

Kiruthikan Kumarasamy said...

/ ஹே ஹே.... 100 வது நறுக்கு ஏமாற்றவில்லை/

நன்றி கீத்!

வானம்பாடிகள் said...

பழமைபேசி said...

/பாலாண்ணே, சதம் போட்டாச்சு... மிக்க மகிழ்ச்சி!/

நன்றி பழமை!

வானம்பாடிகள் said...

Maheswaran Nallasamy said...

/இதெல்லாம் சேர்த்து ஒரு புத்தகமா போட்ட என்ன? :) நறுக்குன்னு நாலு வார்த்தை - பாகம் ஒன்னு..எப்படி யோசனை.?/

மூணு காபி ப்ரின்ட் பண்ணுவாங்களா?:))

வானம்பாடிகள் said...

கதிர் - ஈரோடு said...

சதத்துக்கு வாழ்த்துகள்

//கோடி ரூபாய்க்கு கோவணத்த கூட எடுப்பானுங்க போல ஏலத்துல.//

அடக் கருமமே

நன்றிங்க கதிர்.

வானம்பாடிகள் said...

SUBBU said...

/ 100 -க்கு வாழ்த்துகள் :)))))))/

நன்றி. ஸ்மைலி சரியா போட்டதுக்கும்:)))

வானம்பாடிகள் said...

koh said...

great

Thanks

வானம்பாடிகள் said...

சூர்யா ௧ண்ணன் said...

/நூறாவது நறுக்குக்கு

வாழ்த்துக்கள் தலைவா!/

நன்றி சூர்யா.

வேந்தன் said...

நூறாவது நறுக்குன்னு நாலு வார்த்தைக்கு வாழ்த்துக்கள்.

வானம்பாடிகள் said...

நன்றி வேந்தன்.

கிரி said...

சாதாரணமாக ஆரம்பித்து அதிரடியாக 100 வந்த பாலாவிற்கு என் வாழ்த்துக்கள்..

பட்டய கிளப்ப என் அன்பான வாழ்த்துக்கள்