வாடுற மல்லி தரையில
ஊதுற பீடி கடையில
காய் கறிங்க தெருவுல
காலணியெல்லாம் குளுகுளு கடையில
மூலக் குத்துன்னு சாமி வெளியில
மூத்திரம் போற இடம் நடுவூட்டுல
காதம் இருக்க கண்ணுக்கு ஷேடு போட்டு கந்தம்பேரனாடாம்பாரு பெருசு அப்ப
கவிதா மவன் மாமான்னா எந்த கவிதான்னு கேக்குறான் தாய்மாமன் இப்ப
செங்கல்லு வெல எங்கயோ
செல்ஃபோன் மாத்திரம் ஒன்னு வாங்கினா ரெண்டு
அரிசி பருப்பு வெல ஆகாசத்துல
அளகான டிவி பொட்டி அடிமாட்டு விலையில
கடனாளியாயிட்டமுன்னு கயித்துல தொங்கினது ஒரு காலம்
க்ரெடிட் ரேட்டிங் எகிறிப் போச்சுன்னு காலரைத் தூக்கி விட்டுக்குறது இக்காலம்
கோவில் தரிசனம் கோடி புண்ணியமாம்
செல்ஃபோன் டவர் தரிசனத்துக்கு என்ன பெலன்னு யாரு சொல்வா?
பொச்சு நாக்குட்டிய தவறாம வாக்கிங்கு
பெத்த புள்ள கையில ரிமோட்டோட சிட்டிங்கு
ரெகமண்டேசன் லெட்டரு, ப்ளாக்குல டிக்கட்டு வாங்கி பெருமாளுக்கு நேர்த்தி
பெத்த தாய் தகப்பன சுமையின்னு இல்லத்துல சேர்த்தி
மின்சாரம் சிக்கனம்னு கோடியா செலவு பண்ணி வெளம்பரம்
ஊட்டுக்கு ஊடு ஓசில அரசு தொலைக்காட்சிப் பொட்டி
பேசாதிருன்னு சொல்லிட்டு போச்சு பெருசு
பேசிட்டே இருன்னு விளம்பரம்போடுது அரசு
செவிட்டு மிசின வெக்கணுமேடான்னு வெக்கப்பட்டது அப்போ
கருவண்டு மிசின காதில மாட்டாதவன் மனுசனேயில்லை இப்போ
ஃபிட்டிங் சரியில்லைன்னு ஃபிட்ஸ் வந்தா மாதிரி டெய்லரை கிழிச்சது அப்போ
தொள தொளன்னு வாங்கி ஆல்ட்ரேசன் பண்ணி லூஸ் ஃபிட்டிங்னு ஃபேசனாச்சு இப்போ
சுத்தி சுத்தி வந்து அந்த சீலைய காண்பி, இந்த வேட்டியக் காண்பின்னு சொல்லுவாரு மொதலாளி அப்ப
சுத்திலும் காமெரா வச்சு வாங்கவந்தவன் திருடுறானான்னு நோட்டம் விடுறாரு இப்ப
சொகமா இருக்கியளான்னு சாரிக்கிறது போச்சே
எனக்கு சக்கரை உனக்கு ப்ரசரான்னு அலட்டிக்கறதாச்சே
ஆனா ஒன்னுடே.. சுகமெல்லாம் குறைஞ்சாலும்
இப்படி நாப்பொழைப்பு பொழைக்க சாவுற வயசு மட்டும் கூடிப்போச்சு மாத்திரை மருந்து புண்ணியத்துல..

(பொறுப்பி: மொத ரெண்டு பொலம்பலுக்கு சொந்தக்காரரு பழமைபேசி. மிச்சம் நீ பொலம்பு பார்க்கலாம்னு ஏத்திவிட்டாரு..அவ்வ்வ்)
~~~~~~~~~~~~~~
69 comments:
nacch
///அரிசி பருப்பு வெல ஆகாசத்துல
அளகான டிவி பொட்டி அடிமாட்டு விலையில///////
நல்ல இருக்கு . மேட்டர் தெரிந்தது என்றாலும் சொன்னவிதம் ரசிக்க வைக்கிறது
அரிசி பருப்பு வெல ஆகாசத்துல
அளகான டிவி பொட்டி அடிமாட்டு விலையில.
பொன்னான நாடு நம் நாடு!
Nice
இப்படி நாப்பொழைப்பு பொழைக்க சாவுற வயசு மட்டும் கூடிப்போச்சு மாத்திரை மருந்து புண்ணியத்துல..//
போலி மருந்து காலத்துலயுமா!!
Chumma Nachunnu irukku..
எல்லாத்தையும் படிக்கும்போதுகூட நான் இப்படி சிரிக்கல...
//பொச்சு நாக்குட்டிய தவறாம வாக்கிங்கு
பெத்த புள்ள கையில ரிமோட்டோட சிட்டிங்கு//
செம...செம...கலக்கல்...
//மொத ரெண்டு பொலம்பலுக்கு சொந்தக்காரரு பழமைபேசி. மிச்சம் நீ பொலம்பு பார்க்கலாம்னு ஏத்திவிட்டாரு..அவ்வ்வ்//
ஐ திங்க், உங்க ரெண்டுபேருக்கும் இந்தகாலத்து யூத்துகளப்பாத்து பொறாமை..... அதான் இப்டி பொங்கி வழியிறீங்க...ஹி..ஹி...
நச் நச் நச்!
//பேசாதிருன்னு சொல்லிட்டு போச்சு பெருசு
பேசிட்டே இருன்னு விளம்பரம்போடுது அரசு//
மிகக் கவர்ந்த ஒன்று...
என்ன, வழக்கம் போல் நல்லாருக்குங்கய்யா!...
அற்புதம், அருமை, சொல்ல வார்த்தையில்லை, பாலா சார், வழக்கம்போல கலக்கிட்டீங்க!
பாலாண்ணனா, கொக்கா?? ஆனா, நம்ம முதிரிளைஞர் பாலாசிக்கு எங்களை மாதிரியான இளைஞர்களைக் கண்டு இளக்காரம்!!
ஒவ்வொரு வரிப் புலம்பலிலும் ”வாழ நினைத்தால் வாழலாம்” என்ற ஒரு வாழ்க்கை ரகசியம் தெரிகிறது.
//ஆனா ஒன்னுடே.. சுகமெல்லாம் குறைஞ்சாலும்
இப்படி நாப்பொழைப்பு பொழைக்க சாவுற வயசு மட்டும் கூடிப்போச்சு மாத்திரை மருந்து புண்ணியத்துல..//
போலி மருந்துகள் போல இல்லாமல், ஒத்துக்கொள்ள வேண்டிய உண்மையான வரிகளே. பாராட்டுகள்!
:)
படிச்சு முடிச்சு ரொம்ப நேரம் ஆகியும் புலப்பம் தீரலண்ணே...!
சூப்பர் சார்.
கோவில்ல போடுவான் கோடி.
வேலைக்காரன் கேட்டா வைப்பான் அடி.
கலக்கல் தலைவா!
ரெகமண்டேசன் லெட்டரு, ப்ளாக்குல டிக்கட்டு வாங்கி பெருமாளுக்கு நேர்த்தி
பெத்த தாய் தகப்பன சுமையின்னு இல்லத்துல சேர்த்தி................சார் தூள். காமெடியிலயும் எத்தணை மெசேஜ்.....வாய்விட்டு சிரிச்சு நோய் விட்டு[தலைவலி] போச்சு.....சூப்பர்...
@Sethu
கோவில்ல போடுவான் கோடி!
அடுத்தவன் தலையில போடுவான் துண்டு!!
ஆஹா..
இப்படியும் போட்டு அடிக்கலாம் போல
மாப்பு கம்னே இருக்கமாட்டாரு
நீங்க கலக்குங்கண்ணே
அருமை பாலாண்ணா
சூப்பர் பாலா செவிட்டு மிசின வெக்கணுமேடான்னு வெக்கப்பட்டது அப்போ
கருவண்டு மிசின காதில மாட்டாதவன் மனுசனேயில்லை இப்போ
நல்வாழ்த்துகள் பாலா - நட்புடன் சீனா
சூப்பர் பழமை.
வாழ்க்கையில் சந்திக்கும் காரணிகளாய் இருந்தாலும் சொன்ன விதம் எகனை மொகனையாய்.... ரொம்ப அருமை.
நச் வரிகள்.
நல்லாயிருக்குங்க.
ரேகா ராகவன்.
கடைசி பொலம்பல் டாப் சார் :)
அக்மார்க் நக்கல் ...
என்ன ஒரே டெர்ரர்ரா இருக்கு....
superb saar
அரிசி பருப்பு வெல ஆகாசத்துல
அளகான டிவி பொட்டி அடிமாட்டு விலையில
......கலக்கல் பதிவு! சூப்பர்!
நாட்டு நடப்ப நச்சுன்னு சொல்லிட்டீங்க.... அருமை. வாழ்த்துக்கள்
சூப்பர் பாலாண்ணா..
சூப்பரா இருக்கு சார்
பாலா சார் : குசும்பலுடன் கூடிய புலம்பல்கள்.........
இதையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.
இணைய நட்புகளுக்கு மறக்காமல்
பின்னூட்டம் பதிவிடுவார்.
இணைந்த உறவின்
பின்கோட்'ஐ மறப்பர்.
தெரிந்த உண்மைகளை,மனதில்
மீண்டும் பார்க்க வைத்திருக்கிறீர்கள்.
பளிச்.
vஎல்லாத்தையும் சேர்த்து வச்சு நங்கு நங்குன்னு குட்டிட்டு எங்களக் குட்டச்சொன்னா எப்படிங்னா.
குட்டுப்பட எதுவாச்சும் விட்டு போச்சான்னு பாத்தேன்.
முடியல.
சூப்பரூங்க! கலக்கோகலக்கு!
// (பொறுப்பி: மொத ரெண்டு பொலம்பலுக்கு சொந்தக்காரரு பழமைபேசி. மிச்சம் நீ பொலம்பு பார்க்கலாம்னு ஏத்திவிட்டாரு..அவ்வ்வ்) //
கவிதையை விட இந்த டிஸ்கிதான் எனக்கு ரொம்ப பிடிச்சு இருக்கு அண்ணே..
// வாடுற மல்லி தரையில
ஊதுற பீடி கடையில //
கரெக்ட்டு... சூப்பர் அண்ணே.. ஆரம்ப வரிகள் எங்கோயோ கொண்டு போகுது..
// காய் கறிங்க தெருவுல
காலணியெல்லாம் குளுகுளு கடையில //
உலகமயமாக்கம்?? # டவுட்டு
// மூலக் குத்துன்னு சாமி வெளியில
மூத்திரம் போற இடம் நடுவூட்டுல //
இடப் பற்றாக்குறை?? # டவுட்டு
// கோவில் தரிசனம் கோடி புண்ணியமாம்
செல்ஃபோன் டவர் தரிசனத்துக்கு என்ன பெலன்னு யாரு சொல்வா? //
செல்ஃபோன் டவர் தரிசனம் - சில பல பறவைகள் அழிந்ததுதான் மிச்சம்.
// சொகமா இருக்கியளான்னு சாரிக்கிறது போச்சே
எனக்கு சக்கரை உனக்கு ப்ரசரான்னு அலட்டிக்கறதாச்சே //
பணம் பத்தும் செய்யும் என்பது இதுதானோ?
// ஆனா ஒன்னுடே.. சுகமெல்லாம் குறைஞ்சாலும்
இப்படி நாப்பொழைப்பு பொழைக்க சாவுற வயசு மட்டும் கூடிப்போச்சு மாத்திரை மருந்து புண்ணியத்துல..//
:-)
அடடா! எவ்வளோ நாளாச்சு அண்ணா பின்னூட்டம் போட்டு. :))
nadamurai varathaikalil..
@@நன்றி எல்.கே.
@@நன்றி சங்கர்
@@நன்றிங்க குணசீலன்
@@நன்றி சார்
@@நன்றி ஸ்ரீராம்
@@நன்றிங்க வெறும்பய
@@நன்றி பாலாசி
@@நன்றிங்க பாலாஜி சரவணா
@@நன்றி பிரபா
@@நன்றி பெ.சொ.வி
@@நன்றி பழமை
@@நன்றி கோபாலகிருஷ்ணன் சார்
@@நன்றி ராமசாமி கண்ணன்
@@நன்றி தேவா
@@நன்றி சேது
@@நன்றி சூர்யா
@@நன்றிங்க ம்ம்ம் சை தளபதி:))
@@நன்றிங்க நித்திலம்
@@நன்றி மாப்பு
@@நன்றிம்மா சக்தி
@@நன்றி சீனா சார்
@@நன்றி குமார்
@@நன்றி அன்பரசன்
@@நன்றி ராகவன்சார்
@@நன்றி ஷங்கர்
@@நன்றிங்க செந்தில்
@கலகலப்ரியா
@@தோடா! நோக்கே டெர்ரரா:))
@Mahi_Granny
நன்றிங்க
@Chitra
நன்றிங்க சித்ரா
@மதுரை சரவணன்
நன்றிங்க சரவணன்
@Starjan ( ஸ்டார்ஜன் )
நன்றிங்க ஸ்டார்ஜன்
@முகிலன்
நன்றி முகிலன்
@வழிப்போக்கன் - யோகேஷ்
நன்றிங்க யோகேஷ்
@வல்லிசிம்ஹன்
நன்றிங்க வல்லிசிம்ஹன்
@காமராஜ்
ஹி ஹி. நன்றிங்க காமராஜ்
@என்னது நானு யாரா?
நன்றிங்க:))
@Thanglish Payan
வரவுக்கும் கருத்துக்கும் நன்றிங்க.
என்ன சார்! அடுத்த ஸ்பெஷலுக்கு ரெடி ஆகிட்டீங்களா?
பழமை தயார் பண்ணிக்கிட்டு இருக்கார் (FETNA). நீங்க எப்போ வரீங்க சார்?
@Sethu
hi hi. எனக்கு பாஸ்போர்ட்டே கிடையாதே:))
முதல்ல அத வாங்குங்க சார். ரொம்ப முக்கியமான ஒன்னு சார்.
:))
வார்த்தைகளின் யதார்த்தம் சுடுகிறது!
அன்புடன்,
ஆர்.ஆர்.ஆர்.
http://keerthananjali.blogspot.com/
சார்! தீபாவளி மத்தாப்பு, பட்டாசு ரெடியா? நாளைக்கு தான் ரிலீஸ் ஆகுமா?
இன்னைக்கு ஒன்னு வெடிக்கலாம்னு பார்க்கறேன். கேப்பா ஆட்டம்பாமா இல்ல புஸ்ஸான்னு தெரியலை:))
கோபத்தையும் கூட நையாண்டியாக வெளிப்படுதிவிடமுடிகிறது.நொந்து போன தேசத்தில் ,,,,,,
ரொம்ப சிரிக்கவும் சிந்திக்கவும் வச்சிட்டிங்களே !நன்றிங்க.
Post a Comment