Sunday, September 20, 2009

நறுக்குன்னு நாலு வார்த்த V 2.6

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை மேலும் கடுமையாக்குமாறு மகிந்த உத்தரவு

இது உனக்கே வினையா முடியணும்டா பிச்ச.
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------
விடுதலைப் புலிகளுக்கு ரஷ்ய விசேட படையினர் பயிற்சி: இலங்கை புலனாய்வு பிரிவு

நிவாரணப் பிச்சை போடாதவனெல்லாம் பயங்கரவாதி இந்த எச்ச நாய்க்கு. உனக்கு கை தூக்கினான் பாரு. இன்னும் வேணும்.
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------
மனித உரிமை விசாரணைகள் தொடர்பான ஐ.நாவின் கோரிக்கை நிராகரிப்பு

கோழியை கேட்டு மசாலா அரைக்கறதுன்னா குழம்பு வெச்சா மாதிரிதான். எந்த கோழி, சரி அரைச்சிக்கோன்னு சொல்லும். போங்கடா.
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இந்த வருடம் வரவு செலவுத் திட்ட யோசனை முன்வைக்கப்பட மாட்டாது: லங்காதீப

கோடி கோடியா வந்ததுல போனது யாருக்கு எங்கன்னு குழப்பமாத்தான் இருக்கும். டைம் வேணாமா கள்ளக் கணக்கெழுத.
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------
முகாம் மக்கள் பகல் வேளைகளிலாவது வெளியே சென்றுவர அனுமதிக்கப்பட வேண்டும்: ஐ.நா. கோரிக்கை

இதைக் கேக்க ஒரு ஐ.நா. எதற்கு? மனிதர்களா என்ன? வெக்கம் கெட்ட பிழைப்பு. அதுக்கு ஒரு அமைப்பு.
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இடம்பெயர்ந்த மக்களின் நடமாட்ட சுதந்திரத்திற்காக நாம் தொடர்ந்தும் பாடுபடுவோம்: அமெரிக்க புதிய தூதுவர்

தொடர்ந்து? கோடி கொடுத்தது தவிர என்ன பாடுபட்டீங்க அம்முனி. வலயத்துகுள்ள நடமாடிகிட்டுதான் இருக்காங்க.
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------
மீள்குடியேற்றம் தொடர்பான இலங்கை அரசின் வாக்குறுதி கூர்ந்து கவனிக்கப்படும்: லின் பாஸ்கோ

சந்தோஷம். கவனிச்சிகிட்டே இருங்க. இனிமே அதற்கு அவசியமில்லைன்னு ஆயிடும். போர் நடக்கறப்போவும் கூஊஊர்ந்து தானே கவனிச்சிங்க. கொத்து கொத்தா போய் சேரலையா?
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------
வவு. முகாமிலிருந்து மக்கள், அதே போன்ற மாற்று முகாமிற்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர்

மீள் குடியமர்த்தணும்னு தான் கோரிக்கை. வலையத்துக்கு வெளியன்னு யாராவது சொன்னாங்களா?
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஈழத்தமிழர்கள் படும் துன்பத்திற்கு பிரதமர் மன்மோகன் சிங்கும், முதல்வர் கருணாநிதியும் தான் காரணம்: பழ. நெடுமாறன்

இதுங்க அம்புங்கையா. எய்தது யார்னு அரனும் சிவனும் அறிவான். பதவிக்கும் பதவி நீட்டிப்புக்கும் பலியானது தமிழினம்.
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------
எனக்கு முடிவு கட்ட பழ.நெடுமாறன் கோஷ்டியினர் சதி .'வீழ்வது நாமாக இருப்பினும், வாழ்வது தமிழாக இருக்கட்டும்' : கலைஞர்

அய்யா! இந்த சீனை சன் பிக்சர்ஸ் எடுத்தாக் கூட ஆதித்யா சேனல்லதான் போடுவங்க.
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------

‘’பிரபாகரன் உயிருடன் இருப்பதற்கான ஆதாரம் என்ன?என்று செய்தியாளர்கள் சீமானிடம் கேட்டனர்.

எலும்புத் துண்டுக்கு அலையுதுங்க பரதேசிங்க. இறந்ததற்கு ஆதாரம் கேளுங்களேண்டா உங்க எஜமானன் கிட்ட.
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------
தமிழர்களின் நலன்களை காக்க இந்தியா, இலங்கை அரசை நிர்பந்திக்க வேண்டும்: அமெரிக்கா

எங்க பொழப்பு எல்லாப் பயலுக்கும் நக்கலாப் போச்சி. பொத்திட்டாவது இருக்கானுவளா?
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------
எந்த நடிகர் வந்தாலும் விடுதலை சிறுத்தைகளை அழிக்க முடியாது: திருமாவளவன்

நீங்களே போதுமா? பதவி தான் அழிக்க முடியும்.
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------
சீன நல்லுறவு பாதிக்கப்படலாம்: எம்.கே. நாராயணன்

கெடுவான் கேடு நினைப்பான். அடுத்தவன அழிச்சா நல்லுறவு. இவனுக்கு வந்தா பாதிப்பு.
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இந்தியாவுடன் நட்புறவையே விரும்புகிறோம்: பாக்.

இவனுங்க அகராதில அப்பாவி ஜனங்கள சாவடிக்கிறதுக்கு பேறு நட்புறவு போல. சேர்ந்தானுங்க மொத்த அரக்கனும் ஒண்ணா.
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------

33 comments:

ஹேமா said...

பதவிக்கும் பதவி நீட்டிப்புக்கும் பலியானது தமிழினம்.

பாமரன் ஐயா,என்ன சொல்ல.வலிக்குது.

அ. நம்பி said...

//ஈழத்தமிழர்கள் படும் துன்பத்திற்கு பிரதமர் மன்மோகன் சிங்கும், முதல்வர் கருணாநிதியும் தான் காரணம்: பழ. நெடுமாறன்

இதுங்க அம்புங்கையா. எய்தது யார்னு அரனும் சிவனும் அறிவான். பதவிக்கும் பதவி நீட்டிப்புக்கும் பலியானது தமிழினம்.//

எய்தவர் யார் என்று இவரைக் கேளுங்கள்: Edvige Antonia Albina Maino.

அ. நம்பி said...

அந்தோணியா மைனோவின் அடிமை ஆடுகள்!

http://nanavuhal.wordpress.com/2009/09/07/thodarnthu/

பழமைபேசி said...

//
மதிப்பீடு நல்லாருக்கு சுமார் மொக்கை
//

பாலாண்ணே வணக்கம்! நல்லாருக்கு....

’சுமார்’ படிச்சதும், குமார் மாதிரியான சராசரி ஞாவகம் வந்திட்டது. சுமார் என்டால் அது பாரிசிச் சொல் பாருங்கோ; பரவாயில்லை என்டு சொல்ல வெளிக்கிட்டா, அது பர்வா வந்து வட சொல் பாருங்க... வந்த எடத்துல எதோ ஒன்டைக் கதைப்பமுன்டு நான் இதைக் கதைக்க வெளிக்கிட்ட நான்... எதுக்கும் எனக்கு வயிறு காயுது...போயிச் சம்பலும் பாணும் வாங்கி வாறனென்ன?

பிரியமுடன்...வசந்த் said...

//இந்தியாவுடன் நட்புறவையே விரும்புகிறோம்: பாக்.

இவனுங்க அகராதில அப்பாவி ஜனங்கள சாவடிக்கிறதுக்கு பேறு நட்புறவு போல. சேர்ந்தானுங்க மொத்த அரக்கனும் ஒண்ணா.//

எத்தன வாட்டி நறுக்குனாலும் திருந்த மாட்டேன்றாய்ங்களே சார்...

வானம்பாடிகள் said...

பழமைபேசி
/பாலாண்ணே வணக்கம்! நல்லாருக்கு..../

வணக்கம். வாங்க பழமை. நன்றி.
/போயிச் சம்பலும் பாணும் வாங்கி வாறனென்ன?/

வாருங்கோ. பாண் இருக்கும் சம்பலும் குடுக்குறாங்களோ?

வானம்பாடிகள் said...

அ. நம்பி

வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி ஐயா

வானம்பாடிகள் said...

ஹேமா

ஆமாங்க. என்ன சொல்றது.

Rajkumar said...

Dear Sir

Today only I came to know about your blog....it has lot of things to learn..I finished reading aug and sep 09 articles...I bow my heads for sharing your experience all the way happened in your life....you know...lot of informations are hidden inside thousands of words...it will be great if your present in simple manner (sorry if I crossed my limit)

Please write in simple format, you can change the template or font or color and also break into small paragraphs, so that it will be easy to read.

We have to learn lot of things from you....frankly I am straining too much to read your articles...

Regards

Raj
Sharjah

வானம்பாடிகள் said...

பிரியமுடன்...வசந்த்
/எத்தன வாட்டி நறுக்குனாலும் திருந்த மாட்டேன்றாய்ங்களே சார்.../

நாமதான் வசந்த் திருந்திக்கணும் போல. நன்றி

கலகலப்ரியா said...

//Dear Sir

Today only I came to know about your blog....it has lot of things to learn..I finished reading aug and sep 09 articles...I bow my heads for sharing your experience all the way happened in your life....you know...lot of informations are hidden inside thousands of words...it will be great if your present in simple manner (sorry if I crossed my limit)

Please write in simple format, you can change the template or font or color and also break into small paragraphs, so that it will be easy to read.

We have to learn lot of things from you....frankly I am straining too much to read your articles...

Regards

Raj
Sharjah//

நூறாவது தடவையாக வழி மொழிகிறேன்...

வானம்பாடிகள் said...

Dear Mr. Rajkumar

First of all thanks for visiting my blog.

I really am very glad to see your comment. It is so motivating. Thanks for pointing out my mistakes. I have been trying to improve my writing skills for ages and i am struggling a bit still. Comments like yours will surely help me a lot. I will try my best.

Do not hesitate to feed back!

Thanks again and keep reading...

Yours
Balaji..

வானம்பாடிகள் said...

கலகலப்ரியா

/நூறாவது தடவையாக வழி மொழிகிறேன்.../

நன்றிம்மா. நீயும் குறையிருந்தா சொல்லணும்மா. அதான் பரிட்சை வெச்சிருக்கியே. அதுல தேறுறா மாதிரி எழுதப் பார்க்கிறேன்.

rajesh said...

தலைய நறுக்கிடுவோம்னு சொன்னாலே, ஐயோ காமெடின்னு சிரிப்பானனுக. நறுக்குன்னு நாலு வர்ர்த்தைன்னு சொன்னா சொரண கெட்ட சென்மங்களுக்கு ஒரைக்கவா போதுது..

வானம்பாடிகள் said...

rajesh

/தலைய நறுக்கிடுவோம்னு சொன்னாலே, ஐயோ காமெடின்னு சிரிப்பானனுக. நறுக்குன்னு நாலு வர்ர்த்தைன்னு சொன்னா சொரண கெட்ட சென்மங்களுக்கு ஒரைக்கவா போதுது../

நம்ம இயலாமைக்குப் புலம்பறது தான். நன்றி ரஜேஷ்

இராகவன் நைஜிரியா said...

// இந்தியாவுடன் நட்புறவையே விரும்புகிறோம்: பாக்.

இவனுங்க அகராதில அப்பாவி ஜனங்கள சாவடிக்கிறதுக்கு பேறு நட்புறவு போல. சேர்ந்தானுங்க மொத்த அரக்கனும் ஒண்ணா. //

அதானே... செய்றதெல்லாம் செஞ்சுட்டு.. இப்ப வேஷம் போடறானுங்க...

இராகவன் நைஜிரியா said...

// .'வீழ்வது நாமாக இருப்பினும், வாழ்வது தமிழாக இருக்கட்டும்' : கலைஞர் //

தாங்க முடியலைடா சாமி...

வானம்பாடிகள் said...

இராகவன் நைஜிரியா

/அதானே... செய்றதெல்லாம் செஞ்சுட்டு.. இப்ப வேஷம் போடறானுங்க.../

வாங்க சார். திருட்டுப் பய புள்ளைங்க.இவனுங்கள என்ன பண்றது

வானம்பாடிகள் said...

இராகவன் நைஜிரியா
/தாங்க முடியலைடா சாமி.../

முடியலைன்னா விட்டுடுமா. பட்டுத்தான் கழிக்கணும் ஐயா. அவ்வ்வ்

அகல் விளக்கு said...

//எனக்கு முடிவு கட்ட பழ.நெடுமாறன் கோஷ்டியினர் சதி .'வீழ்வது நாமாக இருப்பினும், வாழ்வது தமிழாக இருக்கட்டும்' : கலைஞர்

அய்யா! இந்த சீனை சன் பிக்சர்ஸ் எடுத்தாக் கூட ஆதித்யா சேனல்லதான் போடுவங்க.//

உண்மையச் சொன்னீங்க...

வானம்பாடிகள் said...

அகல் விளக்கு
/உண்மையச் சொன்னீங்க.../

வாங்க ஐயா. நன்றி

Anonymous said...

"வீழ்வது நாமாயினும் வாழ்வது எனது குடும்பமாகட்டும்" இதுவே கொலைஞனின் இன்றைய போக்கு. இவனுக தமிழ மட்டுமல்ல தமிழனையுயும் வித்து பிழைப்புநடத்துறங்கப்பா.

ஜனா

கிரி said...

//இது உனக்கே வினையா முடியணும்டா பிச்ச. //

உண்மை..இதை விரைவிலேயே உணர்வார்கள்

//எலும்புத் துண்டுக்கு அலையுதுங்க பரதேசிங்க. இறந்ததற்கு ஆதாரம் கேளுங்களேண்டா உங்க எஜமானன் கிட்ட.//

;-)

//கெடுவான் கேடு நினைப்பான். அடுத்தவன அழிச்சா நல்லுறவு. இவனுக்கு வந்தா பாதிப்பு.//

நச் னு கேட்டீங்க

//break into small paragraphs, so that it will be easy to read.//

சார் இதை நானும் கூற நினைத்தேன் ..

இது நம்ம ஆளு said...

அருமை
ரம்ஜான் வாழ்த்துக்கள் !

கதிர் - ஈரோடு said...

//அய்யா! இந்த சீனை சன் பிக்சர்ஸ் எடுத்தாக் கூட ஆதித்யா சேனல்லதான் போடுவங்க.//

முடியல! அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

வானம்பாடிகள் said...

நன்றி ஜனா

வானம்பாடிகள் said...

கிரி
/சார் இதை நானும் கூற நினைத்தேன் ../

நன்றி கிரி.

வானம்பாடிகள் said...

இது நம்ம ஆளு
/அருமை
ரம்ஜான் வாழ்த்துக்கள் !/

நன்றிங்க. உங்களுக்கும் என்னுடைய வாழ்த்துகள்.

வானம்பாடிகள் said...

கதிர் - ஈரோடு
/முடியல! அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்/

:)). எங்க மாப்புவ ஆளக் காணோம். திரும்ப கோட்டைய பார்க்க கிளம்பி கோழிக்கு கட்டம் சரியில்லையோன்னு நினைச்சேன்.:))

க.பாலாஜி said...

//ஈழத்தமிழர்கள் படும் துன்பத்திற்கு பிரதமர் மன்மோகன் சிங்கும், முதல்வர் கருணாநிதியும் தான் காரணம்: பழ. நெடுமாறன்
இதுங்க அம்புங்கையா. எய்தது யார்னு அரனும் சிவனும் அறிவான்.

அரனும் சிவனும் மட்டுமில்லிங்கய்யா....எல்லாரும் அறிவர்.

//பதவிக்கும் பதவி நீட்டிப்புக்கும் பலியானது தமிழினம்.//

இதுதான் உண்மை....

எல்லாமே நறுக்....

வானம்பாடிகள் said...

க.பாலாஜி

/அரனும் சிவனும் மட்டுமில்லிங்கய்யா....எல்லாரும் அறிவர்./

அரன்:நாராயணன் சிவன்:சிவசங்கரன் :))
/எல்லாமே நறுக்..../
நன்றி

Kiruthikan Kumarasamy said...

///இது உனக்கே வினையா முடியணும்டா பிச்ச///
எங்க பிடிச்சீங்க பாலா இந்த ‘பிச்ச' என்ற சொல்லை??? கலக்கல்

வானம்பாடிகள் said...

Kiruthikan Kumarasamy
/எங்க பிடிச்சீங்க பாலா இந்த ‘பிச்ச' என்ற சொல்லை??? கலக்கல்/

ஐ.நா.முன்றில்ல ஒரு அம்மா அடி வயித்திலிருந்து அவ்வளவு வெறுப்பு கொப்பளிக்க ஏ ராஜ பட்ச நீ ஒரு எச்சனு கத்தினது பார்த்ததிலிருந்து நானும் சொல்லிகிட்டு திரிஞ்சன். அப்புறம் அவன் நிவாரணப் பிச்சை எடுக்க பிச்ச சரியா வந்துச்சி.:))