Tuesday, September 15, 2009

நறுக்குன்னு நாலு வார்த்த V 2.5

மகிந்தவின் வீழ்ச்சி ஆரம்பமா?; அமர்ந்திருந்த நாற்காலியில் இருந்து திடீரென கீழே விழுந்தார்

இப்படி சொல்லி ஏமாத்திக்க வேண்டியதுதான். அதென்னா விக்கிரமாதித்தன் சிம்மாசனமா?
________________________________________________________________________________________
இரவும் பகலும் பெண்களை துன்புறுத்தும் இலங்கை படையினர்; ஆண்கள் எதிர்த்துப் பேசினால் துப்பாக்கியால் தாக்குதல்: விடுதலையான இளம்பெண்

மனித உரிமைக் கழகம் விளக்கம் கேட்கும். எல்லாம் நாசமானதும் விசாரணைன்னு ஜுரம் வந்தா மாதிரி அனத்திட்டு கிடக்கலாம்.
________________________________________________________________________________________
பாலித கோஹன, பான் கீ மூனை சந்தித்துள்ளார்

டீ சாப்பிட்டு வந்துடுவாரு. வேற ஒண்ணும் நடக்க போறதில்லை.
________________________________________________________________________________________
இந்தியாவும் இலங்கையும் புதிய வர்த்தக உடன்படிக்கையில் கைச்சாத்திடவுள்ளன

எல்லாம் உடன்படிக்கை கைச்சாத்தோடதான் நடந்துச்சோ?
________________________________________________________________________________________
தமிழர்கள் படும் அவலத்தை பார்த்துக் கொண்டு மௌனம் சாதிக்க முடியாது: இலங்கைத் தமிழர் பற்றிய கேள்விக்கு விஜய் மழுப்பலான பதில்

இவரு குரல்தான் குறைச்சலா இருந்திச்சின்னு அட்டூழியம் பண்ணிட்டிருக்கான். இனிமே பண்ணமாட்டான்.
________________________________________________________________________________________
சட்ட திட்டங்களை மீறும் எவரும் நாட்டில் தங்கியிருக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள்: ரோஹித போகொல்லாகம

அடங்கொன்னியா. அப்படி இருந்தா நீங்க ஒரு பய அங்க இருக்க முடியாதேடா? கிளம்பி பாரு? உனக்கு முட்டு குடுத்தவன் ஒருத்தனாவது உன்ன சேர்க்கிறானான்னு.
________________________________________________________________________________________
தனிமைப்படுத்தப்படும் அபாயத்தை எதிர்நோக்கும் இலங்கை அரசு

நடக்கணும். அடைச்சு வச்சா என்ன கொடுமைன்னு புரியணும் நாய்ங்களுக்கு.
________________________________________________________________________________________
மீள்குடியமர்வு விடயத்தில் பொறுப்பிலிருந்து அரசு விலகாது - கெஹெலிய ரம்புக்வெல

நேத்துதானே யார் சொன்னாலும் பண்ணமாட்டேன்னான். குடிச்சிட்டுதான் பேசுவானா?
________________________________________________________________________________________
ராணுவத்தின் அதிகாரத்தைப் பறிக்க ராஜபட்சே முடிவு

கட்டம் சரியில்லைன்னு நினைக்கிறேன்.
________________________________________________________________________________________
ஒளிந்திருக்கும் ஜெயலலிதாவை கண்டுபிடியுங்கள்: அழகிரி

கண்ணா மூச்சி ஆடுறாய்ங்கப்பா. நல்ல அரசியல்டா சாமி.
________________________________________________________________________________________
மாநில சுயாட்சிக்கு குரல் கொடுப்போம்: கலைஞர்

ஃபூ ஃபூ. எவ்வளவு தூசி. அய்யா இறையாண்மை பாதிக்காதுங்களா? டங்குவாலுகிட்ட கேட்டீங்களாய்யா?
________________________________________________________________________________________
ராகுல் அழைத்ததாக விஜய் கூறுவது சுத்த பொய்: எஸ்.வி.சேகர்

சொருகி வெச்ச அகப்பைங்கறது இதுதான். இதுக்கு ஒண்றதுக்கு நிழலில்ல, இது அவருக்கு வக்காலத்து வாங்குது.  நீ வா சேகரு. ட்ராமா போட்டு பொழப்ப பார்க்கலாம்.
________________________________________________________________________________________
பெண் சிங்கம் படத்தின் ரூ.50 லட்சத்தை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கினார் கலைஞர்

பெண் புலின்னு வெச்சா சுவாமி புலிகள் கிட்ட பணம்னு அலறும்னு சிங்கம்னு வெச்சீங்களா. சிங்களவன் கிட்ட வாங்கிட்டாரு. அதுக்கு ஆதாரம் இருக்குன்னு சொல்லும் லூசு.
________________________________________________________________________________________
ஆளும்கட்சியினர் சொந்த பணத்தில் நல்லகாரியங்களை செய்கிறார்களா?: விஜயகாந்த் கேள்வி

ஏஞ்சாமி. தெரியாம கேக்குறேன். உங்க காலேஜ்ல எத்தன தகுதியான ஏழைப் பிள்ளைகளுக்கு இலவசமா இடம் குடுத்திருக்கீங்க. குவார்டரும் பிரியாணியும் நல்ல காரியமா?
________________________________________________________________________________________
பாக். வழங்கும் நிதியை அமெரிக்கா கண்காணிக்க வேண்டும்: சசி தரூர்

525 கோடி குடுத்தீங்களே. என்னாடா புடிங்கினன்னு கேப்பீங்களாடா. அடுத்தவன் முதுகுல அழுக்கு காட்றதுக்கு ரெடி. நாறப் பயலுவ.
________________________________________________________________________________________
டிவியில் ஆபாச நிகழ்ச்சி ஒளிபரப்ப திட்டம்!

அட பன்னாடைங்களே. இருக்கிறது போறாதுன்னு இது வேறயாடா? இப்போ 'காட்றதே' தாங்காதே.
________________________________________________________________________________________
உறவினர்கள் கறுப்பாக இருந்ததால் திருமணம் நிறுத்தம்

பெண்ணும் பையனும் பார்த்து கலியாணம் பண்றதே பெருங்கஷ்டம். இதில சொந்தக்காரன் கருப்பா இருக்கான்னு வேறயாடா? எந்த கருவாப்பய நிறுத்தினது?
________________________________________________________________________________________

24 comments:

ஹேமா said...

உலகத்தை ஊரைச் சரியாப் புரிஞ்சு வச்சிருக்கீங்க.

இராகவன் நைஜிரியா said...

// உறவினர்கள் கறுப்பாக இருந்ததால் திருமணம் நிறுத்தம்

பெண்ணும் பையனும் பார்த்து கலியாணம் பண்றதே பெருங்கஷ்டம். இதில சொந்தக்காரன் கருப்பா இருக்கான்னு வேறயாடா? எந்த கருவாப்பய நிறுத்தினது? //

பையனோட அம்மாத்தான்... 2009 லும் இப்படிபட்ட மனிதர்கள்... ஜனநாயகம்???

இராகவன் நைஜிரியா said...

// பெண் சிங்கம் படத்தின் ரூ.50 லட்சத்தை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கினார் கலைஞர்

பெண் புலின்னு வெச்சா சுவாமி புலிகள் கிட்ட பணம்னு அலறும்னு சிங்கம்னு வெச்சீங்களா. சிங்களவன் கிட்ட வாங்கிட்டாரு. அதுக்கு ஆதாரம் இருக்குன்னு சொல்லும் லூசு. //

நீங்களே சொல்லிக் கொடுப்பீங்க போலிருக்கே...

ஆரூரன் விசுவநாதன் said...

//மாநில சுயாட்சிக்கு குரல் கொடுப்போம்: கலைஞர்//

ஃபூ ஃபூ. எவ்வளவு தூசி. அய்யா இறையாண்மை பாதிக்காதுங்களா? டங்குவாலுகிட்ட கேட்டீங்களாய்யா?

//பாலித கோஹன, பான் கீ மூனை சந்தித்துள்ளார்

டீ சாப்பிட்டு வந்துடுவாரு. வேற ஒண்ணும் நடக்க போறதில்லை.//

அனைத்தும் அருமை..

செய்திக்கு ஒரு கலரும், உங்கள் நையாண்டிக்கு வேறு ஒரு கலரும் கொடுத்தால் படிப்பதற்கு ஏதுவாக இருக்கும். முயற்சி செய்யுங்களேன்.
வாழ்த்துக்கள்

அன்புடன்
ஆரூரன்.

இராகவன் நைஜிரியா said...

// மாநில சுயாட்சிக்கு குரல் கொடுப்போம்: கலைஞர்

ஃபூ ஃபூ. எவ்வளவு தூசி. அய்யா இறையாண்மை பாதிக்காதுங்களா? டங்குவாலுகிட்ட கேட்டீங்களாய்யா? //

கூட்டணி மாறப் போகுதுங்களா? இல்லாட்டி இந்த சத்தம் வராதே?

வானம்பாடிகள் said...

ஹேமா
/உலகத்தை ஊரைச் சரியாப் புரிஞ்சு வச்சிருக்கீங்க./

நன்றிங்க

வானம்பாடிகள் said...

இராகவன் நைஜிரியா
/பையனோட அம்மாத்தான்... 2009 லும் இப்படிபட்ட மனிதர்கள்... ஜனநாயகம்???/

இப்போ இப்படி நிறைய செய்தி வருது. விளையாட்டா போச்சி இதுங்களுக்கு.

வானம்பாடிகள் said...

இராகவன் நைஜிரியா
/நீங்களே சொல்லிக் கொடுப்பீங்க போலிருக்கே.../

:)).

வானம்பாடிகள் said...

ஆரூரன் விசுவநாதன்
/அனைத்தும் அருமை..

நன்றிங்க.
/செய்திக்கு ஒரு கலரும், உங்கள் நையாண்டிக்கு வேறு ஒரு கலரும் கொடுத்தால் படிப்பதற்கு ஏதுவாக இருக்கும். முயற்சி செய்யுங்களேன்./

பண்றேங்க. நன்றி

வானம்பாடிகள் said...

இராகவன் நைஜிரியா
/கூட்டணி மாறப் போகுதுங்களா? இல்லாட்டி இந்த சத்தம் வராதே?/

ராகுல் வந்து பேசினதோட எஃபெக்ட். ஸ்டாலின் லண்டன்ல இருந்து வந்ததும் ஏதோ நடக்கலாம்.

பிரியமுடன்...வசந்த் said...

//டிவியில் ஆபாச நிகழ்ச்சி ஒளிபரப்ப திட்டம்!

அட பன்னாடைங்களே. இருக்கிறது போறாதுன்னு இது வேறயாடா? இப்போ 'காட்றதே' தாங்காதே.//

அவங்கள`நறுக்`கணும்ன்னு சொல்லுங்க சார்

வானம்பாடிகள் said...

பிரியமுடன்...வசந்த்

/அவங்கள`நறுக்`கணும்ன்னு சொல்லுங்க சார்/

:)). தோஹால முடியும். இங்க நடக்குமா?

லவ்டேல் மேடி said...

// உறவினர்கள் கறுப்பாக இருந்ததால் திருமணம் நிறுத்தம் //

அடங்கொன்னியா.... எல்லோருமே சப்ப மூக்கு சைனா காரனுங்க மாதிரி இருந்தா கல்யாணத்துக்கு ஓக்கே சொல்லீருப்பாங்களோ.....?

அகல் விளக்கு said...

//ராகுல் அழைத்ததாக விஜய் கூறுவது சுத்த பொய்: எஸ்.வி.சேகர்

சொருகி வெச்ச அகப்பைங்கறது இதுதான். இதுக்கு ஒண்றதுக்கு நிழலில்ல, இது அவருக்கு வக்காலத்து வாங்குது. நீ வா சேகரு. ட்ராமா போட்டு பொழப்ப பார்க்கலாம்.//

:) செம காமெடியா இருக்கு

கதிர் - ஈரோடு said...

//நடக்கணும். அடைச்சு வச்சா என்ன கொடுமைன்னு புரியணும் நாய்ங்களுக்கு.//

கண்டிப்பாக

// நீ வா சேகரு. ட்ராமா போட்டு பொழப்ப பார்க்கலாம்.//

அம்மா டிவிலேயே போடச் சொல்லுங்க

வானம்பாடிகள் said...

லவ்டேல் மேடி

/அடங்கொன்னியா.... எல்லோருமே சப்ப மூக்கு சைனா காரனுங்க மாதிரி இருந்தா கல்யாணத்துக்கு ஓக்கே சொல்லீருப்பாங்களோ.....?/

அப்பவும் மூக்கு கொஞ்சம் தூக்கலா இருக்குன்னு ஏதோ செய்வாங்க.

வானம்பாடிகள் said...

அகல் விளக்கு
/:) செம காமெடியா இருக்கு/

ஹி ஹி. நன்றிங்க

வானம்பாடிகள் said...

கதிர் - ஈரோடு
/அம்மா டிவிலேயே போடச் சொல்லுங்க/

ரொம்பதான் குசும்பு. :))

Ram said...

Add-தமிழ் விட்ஜெட் பட்டன், உங்கள் பதிவுகள்
அல்லது இணையதள பக்கத்தினை அனைத்து முதன்மை தமிழ் திரட்டிகளிலும் வெளியிடுவதை மிகவும் எளிமையாக்குகிறது.

உங்கள் பதிவுகள் அதிக வாசகர்களை சென்றடைய இப்போதே Add-தமிழ் பட்டன் இணையுங்கள் !

விட்ஜெட் தரவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யுங்கள்

வானம்பாடிகள் said...

நன்றி ராம்

SUBBU said...

:))))))))

வானம்பாடிகள் said...

SUBBU

/:))))))))/

:>

கிரி said...

சார் விஜயகாந்த் டிவி திருமணம் அனைத்தும் அருமை.. :-)))

வானம்பாடிகள் said...

கிரி

/சார் விஜயகாந்த் டிவி திருமணம் அனைத்தும் அருமை.. :-)))/

:)) நன்றி கிரி