Friday, September 11, 2009

நறுக்குன்னு நாலு வார்த்த V 2.3

சாட்சியங்கள் முன்வைக்கப்பட்டால் உருத்திரகுமாரனுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்: அமெரிக்கா அறிவித்துள்ளதாக திவயின தகவல்

ஃபெய்ன், பாய்ல்லாம் முன் வைத்ததை முதல்ல பார்த்துட்டு வருவாங்கப்பு. சரிதானே?
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஈழத்தமிழர் விடயத்தில் ராகுல் காந்தி கூறுவதெல்லாம் தவறு: வைகோ

நீங்களெல்லாம் சரியாச் சொல்லிதான் என்னாச்சி?
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இந்திய விவசாய குழு ஒன்று இலங்கை வரவுள்ளது

ஏன்டா! உள்ளூர்ல ஓணான் புடிக்க வழியில்லை. இறக்குமதின்னு சாவறீங்க. அவனுக்கு இடுப்பு பிடிக்க ஆளனுப்புறாராம்ல.
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜீ.எஸ்.பி.பிளஸ் ரத்து தொடர்பில், இலங்கை அரசாங்கம் கண்டனம்

அதிகாரப் பிச்சைன்னு சொல்லத்தான் கேள்விப் பட்டிருக்கேன், இதானா அது?
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------
காவலில் உள்ள ஐ.நா. சபை ஊழியர்கள் துன்புறுத்தப்படும் பட்சத்தில், அரசு சட்டத்தை மீறியுள்ளதாக கணிக்கப்படும்: ஐ.நா.சபை கண்டனம்

ஏனோ? ஒரே நாள்ள எத்தனை உயிர் போச்சி. அதெல்லாம் மீறினதில்லைன்னு தானடா இருக்கீங்க.
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------
புலிகளை இராணுவ ரீதியாக தோற்கடித்தாலும், அதன் சர்வதேச தொடர்புகள் அச்சுறுத்தலாகவே உள்ளன: ஜீ எல் பீரிஸ்

ரொம்பத்தான்டா அஞ்சுறீங்க. மொத்தமா அழிச்சாச்சின்னு டாக்டர் பட்டமெல்லாம் குடுத்துக்குறீங்க. அப்புறம் யாருடா தொடர்பு வைக்கிறா? ஒய்ஜா போர்ட்ல ஆவி கூடதான் வெச்சிக்கணும்.
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------
யுத்தக் குற்ற நாடுகள் தொடர்பான ஐ.நாவின் வரைபடத்தில் இலங்கை

இதத்தான் படம் காட்றதுன்னு சொல்லுவாங்க போல.
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------
பொட்டம்மான் கொல்லப்பட்டதாக இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை பாதுகாப்பு அமைச்சு

எல்லாத்தையும் ரொம்ப உறுதியா சொல்லிட்டீங்களோ. இது மட்டும் ஏன் சொல்ல முடியாது?
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------
பிரபாகரனின் மரண சான்றிதழ் இன்னமும் இந்தியாவுக்கு வழங்கப்படவில்லை : இந்து நாளிதழ்

மறைவுக்கு விளம்பரம் குடுக்க சொல்லி இவன்ட வந்தாங்களா? வெறி புடிச்சி அலையுது நாயி.
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------
அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்ற புலிகளுக்கு உயிரூட்டி பூச்சாண்டி காட்டுகிறது அரசாங்கம் : சம்பந்தம்

இவங்க அபிலாஷைக்கு அது தடையா இருக்கிறது தான் பிரச்சினை. இல்லாத ஊருக்கு  இலுப்பைப் பூ சர்கரைன்னு அப்படியாவது நாம ஒரு பதவி புடிச்சிடணும்.
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------
"சனல்-4" வீடியோ குறித்த சர்வதேச விசாரணை:அரசு ஒருபோதும் சம்மதிக்காது என்கிறார் ஜி.எல்.பீரிஸ்

அது எங்களுக்கு தெரியுமே? உங்கண்ணன் ஏதோ கதை சொல்றான் பாரு தம்பி. பேசிக்கிங்கடா. ஆளாளுக்கு உளறாம.
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------
சேனல் 4 இல் ஒளிபரப்பான வீடியோ உருவாக்கியது யார் என கண்டுபிடித்துள்ளோம் - மஹிந்த சமரசிங்க

மகா கேவலமா இருக்கு தம்பி கதை. இப்புடியே ஊரை ஏமாத்த முடிஞ்சா நல்லாத்தான் இருக்கும். லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வரும்டி ஆப்பு.
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இலங்கை முகாம்களில் தமிழ்ப் பெண்களின் கற்பப் பையை அகற்றுகிறார்கள்: தா.பாண்டியன்

இதான் 3 மாசமா அலறிக்கிட்டிருக்காங்களே. நீங்க தேர்தல் துக்கத்துல இதெல்லாம் எங்க பார்த்திருக்கப் போறீங்க?
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இலங்கை தமிழர்களை காப்பாற்ற நடவடிக்கை மேற்கொள்கிறோம்:ராகுல்

இப்படி சொல்லி அனுப்பி வெச்சது போறாதா தம்பி. விடுப்பா. அவங்களுக்கே விதி முடிஞ்சி போய்டுவாங்க.
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இலங்கை தமிழர் பிரச்சனையில் என் பாட்டி,தந்தை, தாயார் அக்கறை செலுத்தினர்:ராகுல்

ம்ம்கும். பாட்டி பேரை கெடுக்கறதுக்குன்னே இருக்கு போல பேராண்டி.  மத்த ரெண்டு பேரு செலுத்தின அக்கறை எல்லாருக்கும் தெரியும்.
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------
தமிழ்ப்பாட்டு பாடி அசத்திய மத்திய அமைச்சர்!

ஆகக்கூடி தமிழனுக்கு பாட்டும் கதையும் சொல்லி விளுத்திடலாம். போங்கடாங்கொய்யாலே.
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இந்தியாவின் இளம் தலைவர் ராகுல்தான்: வாசன்

பாடைய புடிச்சி தொங்கறதெல்லாம் பதவிய விட மனசில்லாம இருக்கிற கட்சியில 50 வயசு ஆனாலும் இளைஞர்தான். பதினெட்டு வயசில சேர்ந்தா பாலர் அணியாங்க வாசண்ணா?
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------
பாரதியார் இல்லத்தை சீரமைக்காவிட்டால் போராட்டம்: இல.கணேசன்

ங்கொய்யாலே. பாரதி அரசாங்க சொத்தா? ஓட்டுக்கு எவ்வளவு காசு குடுக்குறீங்க. அக்கறை இருந்தா நீங்க பண்ணலாம்ல?
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஜாமீன் கேட்டு மான்கறி வைத்தியர் மனு

பிணையா பணம் கட்டுறானாமா? இல்ல தங்கபஸ்பம் தரானா?
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------
நான் ராசி இல்லாதவளா?: நடிகை ரோஜா ஆவேசம்!

ராஜ் டிவிய பாருங்கம்முனி. ராசிக்கல்லு போட்டுக்கலாம்.

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------

26 comments:

லவ்டேல் மேடி said...

எல்லாமே செம பன்ச் தலைவரே ...!! அதும் இந்த ராகுல் காந்தி தார் ரோட்டு மண்டையனோட பேர கேட்டாவே .... கோவம் தலைக்கு மேல ஏறுது...!! மட்டு கொட்டைகைல தங்குகிறது... கல்லு தூக்குறது... அப்புடீன்னு மூதேவி ஓவர் சீன போடும்...!!

வானம்பாடிகள் said...

லவ்டேல் மேடி
/எல்லாமே செம பன்ச் தலைவரே ...!! அதும் இந்த ராகுல் காந்தி தார் ரோட்டு மண்டையனோட பேர கேட்டாவே .... கோவம் தலைக்கு மேல ஏறுது...!! மட்டு கொட்டைகைல தங்குகிறது... கல்லு தூக்குறது... அப்புடீன்னு மூதேவி ஓவர் சீன போடும்...!!/

வாங்க மேடி. எங்க ஆளயே காணோம். அவுங்கப்பாரு அப்படிதான் சீன் போடுவாரு. இவரு இப்போ பிலிம்.:))

இராகவன் நைஜிரியா said...

// நான் ராசி இல்லாதவளா?: நடிகை ரோஜா ஆவேசம்!

ராஜ் டிவிய பாருங்கம்முனி. ராசிக்கல்லு போட்டுக்கலாம். //

ஓ இது வேறவா... ஸ்டார் விஜய் டிவிக்கூட பார்கச் சொல்லுங்க.. இன்னும் நிறைய விசயம் அங்கேயும் உண்டு.. நியூமராலஜி, அந்த ஜி இந்த ஜி அப்படின்னு சொல்லிகிட்டு திரிவாங்க

இராகவன் நைஜிரியா said...

// ஜாமீன் கேட்டு மான்கறி வைத்தியர் மனு

பிணையா பணம் கட்டுறானாமா? இல்ல தங்கபஸ்பம் தரானா? //

இல்ல மான் கறிய கொடுக்கிறானாம்... நாய்கள் இவங்கள என்ன பண்ணாத் தேவலாம்...

இராகவன் நைஜிரியா said...

// பாரதியார் இல்லத்தை சீரமைக்காவிட்டால் போராட்டம்: இல.கணேசன்

ங்கொய்யாலே. பாரதி அரசாங்க சொத்தா? ஓட்டுக்கு எவ்வளவு காசு குடுக்குறீங்க. அக்கறை இருந்தா நீங்க பண்ணலாம்ல? //

அரசியல் பண்ணுவதற்கு கிடைச்சது இப்போதைக்கு பாரதி போலிருக்கு. வெட்கம் கெட்டவங்க..

இராகவன் நைஜிரியா said...

// இந்தியாவின் இளம் தலைவர் ராகுல்தான்: வாசன்

பாடைய புடிச்சி தொங்கறதெல்லாம் பதவிய விட மனசில்லாம இருக்கிற கட்சியில 50 வயசு ஆனாலும் இளைஞர்தான். பதினெட்டு வயசில சேர்ந்தா பாலர் அணியாங்க வாசண்ணா? //

பதவிக்காக வயசான காலத்தில், வேன் கம்பிய பிடிச்சு தொங்கினவங்களை நாம பார்க்கவில்லையா என்ன? அது மாதிரித்தான் இதுவும்.

இராகவன் நைஜிரியா said...

// தமிழ்ப்பாட்டு பாடி அசத்திய மத்திய அமைச்சர்!

ஆகக்கூடி தமிழனுக்கு பாட்டும் கதையும் சொல்லி விளுத்திடலாம். போங்கடாங்கொய்யாலே. //

கொஞ்சம் சினிமாவுல நடிச்சுக்கூட கவுத்திடலாம் ... !! :-)

இராகவன் நைஜிரியா said...

// இலங்கை தமிழர் பிரச்சனையில் என் பாட்டி,தந்தை, தாயார் அக்கறை செலுத்தினர்:ராகுல்

ம்ம்கும். பாட்டி பேரை கெடுக்கறதுக்குன்னே இருக்கு போல பேராண்டி. மத்த ரெண்டு பேரு செலுத்தின அக்கறை எல்லாருக்கும் தெரியும்.//

அதிசயம் ஒன்னுமில்ல... உலகமே இப்படித்தாங்க இருக்கு...

இராகவன் நைஜிரியா said...

// யுத்தக் குற்ற நாடுகள் தொடர்பான ஐ.நாவின் வரைபடத்தில் இலங்கை

இதத்தான் படம் காட்றதுன்னு சொல்லுவாங்க போல. //

சரியாச் சொன்னீங்க

இராகவன் நைஜிரியா said...

என்னால முடிஞ்ச அளவுக்கு பின்னூட்டமிட்டு, தமிழிஷ், தமிழ் மணத்தில் ஓட்டுப் போட்டுட்டேன் அண்ணே..

இங்க எக்கச்சக்க வேலை. அதான் பின்னூட்டம் போட ரொம்ப லேட்டாயிடுச்சுங்க..

வானம்பாடிகள் said...

இராகவன் நைஜிரியா

/ஓ இது வேறவா... ஸ்டார் விஜய் டிவிக்கூட பார்கச் சொல்லுங்க.. இன்னும் நிறைய விசயம் அங்கேயும் உண்டு.. நியூமராலஜி, அந்த ஜி இந்த ஜி அப்படின்னு சொல்லிகிட்டு திரிவாங்க/

யாராவது செண்டிமெண்ட் டிவினு ஆரம்பிச்சி அதுல இதெல்லாத்தையும் காட்டினா நல்லது.:((

கதிர் - ஈரோடு said...

//மறைவுக்கு விளம்பரம் குடுக்க சொல்லி இவன்ட வந்தாங்களா? வெறி புடிச்சி அலையுது நாயி.//

வெ(சொ)றி புடிச்சி அலையுது நாயி

வானம்பாடிகள் said...

இராகவன் நைஜிரியா

/இல்ல மான் கறிய கொடுக்கிறானாம்... நாய்கள் இவங்கள என்ன பண்ணாத் தேவலாம்.../

இந்த நாயி விசாரிச்ச போலீஸ் கிட்டயே தங்கபஸ்பம் பண்ணித்தரேன் விட்டுடுன்னு பேரம் பேசிச்சாம். இது குடுத்த பஸ்பத்தால சீரியஸ் ஆயிடுச்சின்னு கேஸ்னோ என்னமோ அமுக்கிட்டாங்க:))

வானம்பாடிகள் said...

இராகவன் நைஜிரியா
/அரசியல் பண்ணுவதற்கு கிடைச்சது இப்போதைக்கு பாரதி போலிருக்கு. வெட்கம் கெட்டவங்க../

ஏதொ ஒரு குடைச்சல் குடுத்து தான் இருக்கிறதா காட்டிக்கணும்.

வானம்பாடிகள் said...

இராகவன் நைஜிரியா

/கொஞ்சம் சினிமாவுல நடிச்சுக்கூட கவுத்திடலாம் ... !! :-)/

அது நடிக்க வரும்போதே அந்தக் கனவுலதான் வருவாங்க போல:))

வானம்பாடிகள் said...

இராகவன் நைஜிரியா
/பதவிக்காக வயசான காலத்தில், வேன் கம்பிய பிடிச்சு தொங்கினவங்களை நாம பார்க்கவில்லையா என்ன? அது மாதிரித்தான் இதுவும்./

அத அடிச்சிக்க ஆளே கிடயாது.

வானம்பாடிகள் said...

இராகவன் நைஜிரியா
/என்னால முடிஞ்ச அளவுக்கு பின்னூட்டமிட்டு, தமிழிஷ், தமிழ் மணத்தில் ஓட்டுப் போட்டுட்டேன் அண்ணே..

இங்க எக்கச்சக்க வேலை. அதான் பின்னூட்டம் போட ரொம்ப லேட்டாயிடுச்சுங்க../

:)). நன்றி சார்.

வானம்பாடிகள் said...

கதிர் - ஈரோடு

/வெ(சொ)றி புடிச்சி அலையுது நாயி/

:)). கை குடுங்க கதிர். வேற எதுவும் இல்லைன்னா அந்த ஓனாய்கிட்ட பேட்டி (இவன் நிஜம்மாவே எடுத்தானோ இல்ல எழுதிட்டு ஃபோடோ போடுவானோ. என்னமா சொறியரான்.

SUBBU said...

:))))))))

வானம்பாடிகள் said...

SUBBU

/:))))))))/

வாங்க ராசா. எங்க ஆளைக் காணோம்?

SUBBU said...

நான் அப்பப்ப வந்துட்டு ஓடிடுவேன் :((((((

வானம்பாடிகள் said...

SUBBU

/நான் அப்பப்ப வந்துட்டு ஓடிடுவேன் :((((((/

=)). தெரியுது தெரியுது

Kiruthikan Kumarasamy said...

வழமை போலவே கலக்கல் பாலா

வானம்பாடிகள் said...

Kiruthikan Kumarasamy

நன்றி கிருத்திகன்.

கிரி said...

//ஜாமீன் கேட்டு மான்கறி வைத்தியர் மனு

பிணையா பணம் கட்டுறானாமா? இல்ல தங்கபஸ்பம் தரானா?//

:-))))

சார் இப்ப நறுக்குன்னு நாலு வார்த்த இடுகைகள் குறைந்து விட்டதே ஏன் சார்?

மற்ற பதிவுகள் அதிகம் ஆகி விட்டதுனாலயா!

வானம்பாடிகள் said...

கிரி
/சார் இப்ப நறுக்குன்னு நாலு வார்த்த இடுகைகள் குறைந்து விட்டதே ஏன் சார்?

மற்ற பதிவுகள் அதிகம் ஆகி விட்டதுனாலயா!/

ஆமாம். இது மட்டுமே போட்டுண்டிருக்கணும். பார்க்கலாம். நன்றி கிரி.