நேத்து ஆப்பு பத்தி எழுதினதுக்கே கொல மிரட்டல் விடாத குறையா அலப்பறையா போச்சு. இராகவன் சார் வேற நமக்கு நூற்றாண்டு விழா கடந்திருக்குமோன்னு பிட்டப் போட்டுட்டாரு. அதனால இன்னைக்கு சோப்பு போட்டு எஸ் ஆயிடணும்.
சின்ன வயசில பள்ளிக்கூடத்துக்கு எதிர்லயே வீடு. அஞ்சாவது படிக்கிறப்ப ஊரு மாறி வந்ததில அப்பா ஆஃபீசுக்கு பின்னாடி பள்ளிக்கூடம். அதனால நண்பர்கள், விளையாட்டெல்லாம் தெரியாத விஷயமா போச்சு. இந்த அழுத்தமெல்லாம் கரைக்கிறதுக்கு வருசத்துக்கு ரெண்டு அல்லது சில நேரம் மூணு முறை புகலிடம் பெரியம்மா வீடு, ஈரோடுதான். பெரியப்பா பவானி திட்டத்துல வேலை பார்த்ததால ரொம்ப சின்ன வயசில அவங்க இருந்த சிவகிரி, அரச்சலூர்(முதல் முதலா சேமியா ஐஸ் சாப்பிட்டது அங்கதான்) அதெல்லாம் கொசுவத்தி புகையாத்தான் கவனமிருக்கு.
ஸ்டேஷன ஒட்டி இருக்கிற குடியிருப்பில இருந்துதான் கொசுவத்தி. அரையாண்டு பரீட்சை லீவுக்கும் முழுப் பரீட்சை லீவுக்கும் என்ன வித்தியாசம்னு அந்த வயசில கேட்டிருந்தா என்னோட பதில் இதுவாத்தானிருக்கும். காலையில ப்ளூ வந்த பிறகு அரைப் பரிட்சை லீவுக்கு எல்லாரும் பக்கெட்ல போய் வென்னீ புடிச்சிண்டு வருவாங்க எஞ்சின்ல இருந்து (குளிர்காலம்). முழுப் பரிட்சை லீவுக்கு நல்ல தண்ணி புடிச்சிண்டு வருவாங்க (தண்ணீர் பஞ்சம். வெயில் காலம்). அங்க போகாத, இங்க நோண்டாதன்னு கேக்க நாதியில்லாம அண்ணந் தம்பிங்க அவங்க சினேகிதனுங்கன்னு போன காலம் அங்கதான்.
கும்மிருட்டில ரயில் போறப்போ அந்த விளக்கு வெளிச்சமிருக்கே.ஆஹா. சின்ன நிலா மாதிரி ஆரம்பிச்சி கடந்து போக டன்னல் மாதிரி எஞ்சின் வெளிச்சம், கட்டம் கட்டமா ஜன்னல் வெளிச்சம். ஒரு நாள் கூட மிஸ் பண்ணதில்ல. வாயுத் தொல்லை இருக்கிற தலைமை வரைவாளரை எச்டின்னு அறிமுகப் படுத்தினாங்க. சரியான சவுண்ட் பார்ட்டி. எல்லாருமா சேர்ந்து என்னை ஏத்தி விட்டு அவர் வீட்டு சுவத்தில கரியால டர்புர் சாமியார்னு எழுதினா கடலை உருண்டை வாங்கித் தரேன்னானுவ. இதுக்கென்னாடா கஷ்டம்னு எழுதிட்டிருக்க அவர் பையன் ஓடிவந்து காலர புடிச்சிட்டான். கைய புடிச்சி கடிச்சி வெச்சிட்டு சிட்டா பறந்துட்டேன். விதி விதிங்கறமே. அது அந்த வயசிலயே எனக்கு ஹலோ சொன்னது.
ரெண்டு மூணு வருசம் கழிச்சி அந்தாளோட பெரிய பையனுக்கு எங்கக்காவ சம்பந்தம் பேசிட்டாங்க. அக்கா நிச்சயதார்த்தத்துக்கு போறதா வேணாமான்னு அந்த வயசுல எனக்கு குழம்பணும்னு விதிக்குமா? அதும் அவங்க வீட்டில நிச்சயதார்த்தம். அந்த புட்டிக்கண்ணன் என்ன மறந்திருக்கணுமே கடவுளேன்னு போனேன். பய புள்ளைக்கு அக்கான்னா அவ்வளவு பாசம் போல, நிச்சயதார்த்ததுக்கே இப்படி சோகமா இருக்கான்னு நினைச்சிருப்பாங்க எல்லாரும். அப்புடி இருந்தேன். கோழித்திருடன் மாதிரி கூட்டத்துல பம்மி பம்மி நான் பட்ட கஷ்டம் எனக்குதான் தெரியும். நல்ல காலம் அந்த புட்டிக்கு பரீட்சைன்னு ரூமுக்குள்ள போய் அடஞ்சிட்டான்.
எப்படா விடியும்னு காத்திருந்த காலம் ஈரோட்டிலதான். கண்ணு விழிக்கிறதே பச்சு பச்சுன்னு வாழத்தோப்பு, அதத்தாண்டி வயலுன்னு. ஒரு தூக்க எடுத்துக்கிட்டு கோவாலு பல்லுப் பொடி வாய்ல கொட்டிக்கிட்டு நேர கோண வாய்க்கா. முகம் கழுவி கரையோரமா நடந்து காடு கரடுன்னு சின்ன சின்ன கூழாங்கல்லு குத்த போறது. கிடைக்கிற ஓட்டாஞ்சில்லு பொறுக்கி டவுசர் பாக்கட்ல நிரப்பிக்கிட்டு ஓடணும். நீலகிரி பால் பண்ணை ஃபேக்டரில காலைல மோரு விப்பாங்க. அதுக்குத்தான் அந்த ஓட்டம்.

லேட்டானா தீந்துடும். அப்புடி ஒரு மோரு தயிர் கடைஞ்சாலும் வந்ததில்ல வீட்டில. 3 ரூபாய்க்கு வாங்க சொன்னா 2 ரூபாய்க்கு வாங்கிட்டு மிச்சம் ஒரு ரூபாய் ஆட்டைய போடுவானுங்க. கமிசனடிக்கறதுன்னு பேரு அதுக்கு. கடல முட்டாய், குச்சி ஐஸ் வாங்க காசு ஏது பின்ன? திரும்பி வரப்ப ரொப்பிட்டு போன ஓட்டாஞ்சில்ல வாய்க்கால்ல நேக்கா எறிஞ்சு என்னுது 5 தத்துச்சி உன்னுது 3 தான்னு எக்காளம்.
என்னைக்காவது முழுசுக்கும் வாங்கினா அளவு தெரியும். தோராயமா கையால பம்ப்செட் தண்ணிய கலந்து மாட்டாத நாளில்ல. சின்னண்ணன் ஒரு மாதிரி சீன் போட்டு எஸ்சாயிடுவான். பெருசு திருட்டு சிரிப்பு சிரிச்சி தானே மாட்டிக்கும். என் கிட்ட நீ சொல்லு கண்ணூ, எவ்வளவுக்கு வாங்கினதுன்னா கண்ணூக்கு மடியறதா? கடல முட்டாய்க்கு விசுவாசமா இருக்கிறதா? கடலமுட்டாய் தான் ஜெயிக்கும். அப்புறம் திரும்ப கோணவாய்க்கால்ல குளியல். முட்டிக்கால் அளவுக்கு மேல இறங்க மாட்டமே. இப்போ உறைக்குது. ஊருசனம் மொத்தமும் சோப்பப் போட்டு குளிச்சி, துணி துவைச்சி பண்ண அட்டூழியம் வெறுந்தரையா போச்சோன்னு.
குளிச்சிட்டு தறிக்காரர் ஊட்டுக்கு ஓடுனா சாப்பாட்டுக்கு போகவே மனசிருக்காது. அவரு சாப்புட போற நேரம் ஓடிப்போய் தின்னுட்டு வந்து அங்க நூலு பொறுக்குவோம். தரையில ஒரு நூல் இழை இருக்காது. ஹெ ஹெ. எதுக்கா? அதெல்லாம் குடுத்தா குச்சி ஐஸ், பிஸ்கோத்து எல்லாம் பண்டமாற்று. பசங்க காசு குடுத்து வாங்கி நான் பார்க்கலை. பசங்களுக்கு மட்டுமா. வீட்டு பொம்பளைங்க தறியில போய் துண்டு, ஜமுக்காளம், பெட்ஷீட்லாம் கொண்டு வந்து சுங்கு முடிப்பாங்க. சிறுவாட்டுக்கு காசாச்சி. வெட்டிப்பேச்சு, விவகாரம்னு யாரும் இருக்க மாட்டாங்க. இப்போ எல்லாம் போயிருக்கும்.
இவ்வளவும் சொல்லிட்டு ரஸ்தாளி வாழைய சொல்லாம விட்டா பெரும் துரோகம். ரெண்டு கடல உருண்டை, ஒரு ரஸத்தாளி சாப்பிட்டா விருந்து சாப்பிட்டா மாதிரி. ஹி ஹி. நம்ம வெண்ண இருக்கானே. பய புள்ளைக்கு ஈரோடுன்னா அவ்வளவு பாசம். இப்பவும் நெய்யில்லாம இருந்தாலும் இருப்பானே தவிர, இங்க வாங்க மாட்டான். ஏற்காடு எக்ஸ்ப்ரஸ் ட்ரைவர்கிட்ட சொல்லி விட்டு, மழையோ, குளிரோ பெரம்பூர் ஸ்டேஷன்ல அந்த 3 மணிக்கு போய் காத்திருந்து வெண்ணை வாங்கி, வீட்டுல நெய் காய்ச்சுவான்.

பழமை வெட்டாப்பு விட்டதால மாப்புக்கு வேலை. டிச்சு(சாக்கடை), எச்சு(அதிகம்), ப்ளசரு(கார்) இதுக்கெல்லாம் ஏன் எப்புடி இந்தப் பேருன்னு விளக்குங்க மாப்பு.