Saturday, July 3, 2010

கேரக்டர் - கண்ணன்.

என்றாவது தங்கசாலை வீதிவழியே செல்ல நேர்ந்தால் இரயில்வே அலுவலகத்தின் கிழக்கு வாயிலோரம் நடைபாதையின் அருகில் இருக்கும் தேனீர்க் கடையருகே சற்றே நில்லுங்கள்.

யாருடனாவது பேசுகையில் குழந்தைபோல் சிரிப்பும், தனித்திருக்கையில் ஒரு ஞானியின் தெளிவும் காட்டும் முகத்துடன் ஐந்தடி மூன்றங்குலத்தில் கருப்பாக டீ கொடுத்துக் கொண்டிருக்கும் ஒருவரைப் பார்க்க நேரிடின் மனதிற்குள் ஒரு சல்யூட் வையுங்கள். ஆம் அவர் அதற்கு முற்றிலும் தகுதியானவர். சாதனையாளர்.

உருவத்துக்கேற்ற பெயர், கண்ணன். சற்றேறக் குறைய முப்பது வருடங்களுக்கு மேலானது எங்கள் நட்பு. எனக்கு மட்டுமல்ல, எங்கள் அலுவலகத்தின் மூவாயிரத்து சொச்சம், மற்றும் இதர அலுவலகங்களிலிருந்து வருவோர் போவோர், தங்கசாலைத் தெரு கடை வாடிக்கையாளரெனெ அவரின் நட்பூத் தோட்டம் மிகப் பெரியது.

79-80ல் என நினைக்கிறேன். சுயவேலை வாய்ப்பு இளைஞர்களின் தேசியக் குழுமம் என்ற பெயரில் தேநீர்க் கடைகள் தெருவெங்கும் முளைத்திருந்த காலம். அலுவலக ஓரம் ஆரம்பித்தது இவர்கள் தேனீர்க்கடை.

மொத்த ரயில்வே அலுவலகத் தொழிலாளர் ஆதரவும் இவர்கள் பக்கம் சாய, வாழ விட்டுவிடுவார்களா என்ன? எத்தனையோ காரணம் சொல்லலாம். ஒரு நாள் கடை தடை செய்யப் பட்டது. சற்றும் மனம் தளராமல் எதிர்ப்புறம் ஒரு தடுப்பில் தேநீர் தயாரித்து ட்ரம்மில் வீதியோரம் வியாபாரம் தொடர்கிறது, பதினைந்து வருடங்களுக்கும் மேல்.

மழையோ வெயிலோ புயலோ கண்ணன் காலோய உட்கார்ந்து பார்த்ததில்லை. உழைப்பு என்ற வார்த்தையின் அர்த்தம் அவர். தினமும் பார்ப்பதில்லை. பேசுவதில்லை. பார்க்க நேரிடின் பேசாமல் போனதில்லை. ஆனால் ஒரு நாள் நான் லீவ் என்றால் அடுத்த முறை பார்க்கையில் லீவில் போனீர்களா? நலம்தானே என விசாரிக்காமல் இருந்ததில்லை.

மூத்த மகள் சென்னை பெண்கள் கிருத்துவக் கல்லூரியில் வேதியியல் படித்தார். பரதநாட்டியத்தில் சிறந்த பயிற்சியுடையவர். பதின்ம வயதுக்கே உரித்தான ஆர்வமும் சேர கண்ணன் சற்றே கவலைப்பட்ட நாட்கள். சாதிக்கப் பிறந்தவள் என்ற நினைப்பை மனதில் ஊட்டிய முறையோ, தந்தையின் உழைப்பை உணர்ந்த பொறுப்போ முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார்.

அண்ணா பல்கலைக் கழகத்தில் அப்ளைட் கெமிஸ்ட்ரியில் பட்ட மேற்படிப்பு படித்தார். முதன்மையான மாணவியாய்த் திகழ்ந்தவளுக்கு உமி கொண்டுவா! அவல் நான் தருகிறேன் என்ற அளவில் வந்த லண்டன் ஆராய்ச்சி வாய்ப்புக்கு தேவையான தொகையில் அவளுக்கு திருமணம் முடிக்கக் கூடும் என்பதால் ஏற்க இயலவில்லை.

புன்னகையுடன் புறந்தள்ளி, தைவானில் ஆராய்ச்சி மாணவியாகச் சேர்ந்து, அங்கும் பரதநாட்டியக் கலைக்குழு ஆரம்பித்து, ஒரே வருடத்தில் உழைப்பின் பயனாய் நியூஸிலாந்தில் ஆராய்ச்சிப் படிப்பைத் தொடர்ந்தார்.

விரிவுரையாளருக்கான வாய்ப்பையும் புறந்தள்ளி ஆராய்ச்சிக் கட்டுரை சமர்ப்பிக்கும் மும்மரத்தில் இருக்கும் இவர், இன்று மருத்துவ வேதியியலில் எடுத்துக் கொண்டுள்ள ஆராய்ச்சி மனித இனத்துக்கு பெரும் வரமாகும். என்றோ ஒரு நாள் இவரின் பங்களிப்பை உலகம் பேசக் கூடும்.

தக்க நேரத்தில் அவளுக்கேற்ற கணவனாக ஒரு மருத்துவரை மணமுடித்து ஒரு நிறைவான தகப்பனாய், ‘நம்ம கையில என்ன இருக்கு சார்!’ என்று  சிரிக்கும் போது இந்த மனதுக்குத்தானே அய்யா அவனவன் கோவில், குளம், இமய மலைன்னு போறாங்க என்று தோன்றும்.

அடுத்த மகளும் HCLல் பணிபுரிந்தபடி MBA தொடர்கிறார். B.Com படிக்கும் மகன் தன்காலில் நின்றால், நான் கொஞ்சம் உட்காருவேன் என்று, சாதனை தலைக்கேறாமல் சாமானியனாய்  5 டீ ரெண்டு ராகி, கப கபன்னு க்ளாஸ் சுத்தமா கழுவி வை, நாலாவது மாடிக்கு 25 டீ மூணு மணிக்கு கொண்டு போயாச்சா?  என்றபடி காலை முதல் மாலை வரை உழைக்கும் இந்தத் தேனீ!
~~~~~~~~~~~~

50 comments:

நேசமித்ரன் said...

தேனீ தான் அவர் எங்கிருந்து எங்கு பயணித்திருக்கிறது கிராஃப்!!

விழுதுகளை பலப் படுத்தி இருக்கும் வேர்

க ரா said...

அருமையான இன்ஸ்பிரேஷன் சார். ஒரு முறையேனும் நேரில் சந்திக்க வேண்டும் அவரை கண்டிப்பாக. பகிர்வுக்கு நன்றி.

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

கலக்கிப்புட்டீங்க சாரே,...

sriram said...

பாலாண்ணா,
பதினேழு வருஷ Salesman வாழ்க்கையில் பல தரப்பட்ட Client ஐ பார்த்திருக்கிறேன். எல்லா விதமான ஆட்களையும் டீல் பண்ணியிருக்கேன்னு கொஞ்சம் இருமாப்போடு இருந்தேன் (வேலுர் கலெக்டர் Payment Delay வுக்கு என்னிடம் மன்னிப்பு கேட்ட அனுபவமெல்லாம் உண்டு). நீங்க பாத்த ஆட்களுக்கு முன்னால் நானெல்லாம் தூசு எனத் தெளிந்தேன். நெறய எழுதுங்கண்ணா..
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

sriram said...

போன பதிவின் follow up

//வானம்பாடிகள் said... sriram said... பாலாண்ணா.. பதிவுலக ப்ரோட்டோகால் பத்தியும் சொல்லுங்களேன்.. அப்புறம் - அரசு அலுவலகங்களின் கடிதப் போக்குவரத்துக்களில் பேர் போடாம பதவி மட்டும் போடும் காரணம் பத்தி சொல்றேன்னு சொன்னீங்களே - எப்ப சொல்வீங்க? என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்//
சொல்றேனே:)//

பாலாண்ணா..
மொதோ மேட்டர் (பதிவுலக ப்ரோட்டோகால்) எப்போ சொல்வ்றீங்க, ரெண்டாவது மேட்டர் (அரசாங்க கடிதப் போக்குவரத்து) எப்போ சொல்றீங்கன்னு என் கையில் அடித்து (கிள்ளி) சத்தியம் பண்ணி சொல்லுங்க, அப்போதான் நம்புவேன்.

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

புலவன் புலிகேசி said...

உண்மையில் அவர் ஒரு தேனீதான். இதேபோல் கேரக்டர் எங்கள் அலுவலக அருகில் கடை போடும் ஷங்கர் அண்ணன்.

http://rkguru.blogspot.com/ said...

அருமை

VISA said...

கேரக்டர் மனசுல நிக்குது சூப்பர்

cheena (சீனா) said...

அன்பின் பாலா

நல்லாவர்கள் இப்படியும் இருக்கிறார்கள் உலகத்தில் - கடமையினைச் செவ்வனே செய்வதொன்றே குறிக்கோளாகக் கொண்டவர்கள். நல்லவர்களை அடையாளம் காட்டும் நல்லதொரு இடுகை பாலா. விழுதுகளைப் பலப்படுத்தி இருக்கும் வேர் - உண்மை உண்மை நேசமித்ரன்.

நல்வாழ்த்துகல் பாலா
நட்புடன் சீனா

T.V.ராதாகிருஷ்ணன் said...

கலக்கிப்புட்டீங்க

Jey said...

ரியல் லைஃப் ஹீரோவை அறிமுகப்படுத்திருக்கீங்க சார்.

நிஜாம் கான் said...

அண்ண! கண்ணன் சார பாக்கவேனும் என ஆசை வந்திடுச்சி!!!தன் பொருப்புகளை சரியாக உணர்ந்தவர்....இன்னமும்....

Unknown said...

இவரை நேரில் சந்திக்க எனக்கு வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி சார்..

(வந்து சேந்தாச்சி...)

Cable சங்கர் said...

ஹீரோக்கள், பறந்து பறந்து அடிப்பதில்லை. இம்மாதிரி நின்று வாழ்ந்து காட்டுகிறார்கள்.

Paleo God said...

//முகிலன் said...
இவரை நேரில் சந்திக்க எனக்கு வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி சார்..//

அறிமுகத்தின் போது கூட வாங்க டீ சாப்பிடலாம்னு அன்போடு அழைத்தாரே!

நானும் உங்களுக்கு ஒரு நன்றி சொல்லிக்கிறேன் சார்!

நாடோடி said...

ம‌ன‌தில் நிற்கும் கேர‌க்ட‌ர்.. ப‌கிர்விற்கு ந‌ன்றி.

dheva said...

நீங்கள் கவனித்த கேரக்டர்கள் எல்லாம் படிப்பவர்களுக்கு ஒரு படிப்பினையாக இருப்பது தவிர்க்கமுடியாத ஒன்றாகிவிட்டது பாலாண்ணே...!

எல்லா கேரக்டர்களும் உள்ளே ஒளிந்து கொண்டு அவ்வப்போது எட்டிப் பார்க்கிறார்கள்...!

நம்பிக்கை கொடுக்கிறார்ணே... கண்ணன்!

க.பாலாசி said...

படிக்கறச்சயே மனசெல்லாம் ஆனந்தமயமாவுதுங்க. அப்பனுக்கு பிறக்கிற பிள்ளைகளும் இந்தமாதிரி பொறுப்போட நடந்துகிட்டா இதவிட ஆனந்தம் வேறென்ன வேணும்... உட்காந்து வேலபாக்கவே ஒரு சங்கடம் மனசுல வர்றது. தேனீயா இல்லாட்டாலும் ஒரு எறுபாவாவது நானெல்லாம் இருக்கணும்... நல்ல படிப்பினை கொடுப்பதற்கு நன்றி...

பெசொவி said...

தேனீ(ர்) கடைக்காரரைப் பற்றி சூப்பரா எழுதியிருக்கீங்க, சார்!

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

கண்ணன் மனதில் நிற்கிறார். நிறைவாக...

பிரேமா மகள் said...

சத்தியமாய் சாதனை மனிதர் இவர்..

Anonymous said...

வாவ். அவரோட படத்தையும் போட்டிருந்தீங்கன்னா, ஒரு தடவை வணங்கிவிட்டு சென்றிருப்பேன்.

அது சரி(18185106603874041862) said...

//

அடுத்த மகளும் HCLல் பணிபுரிந்தபடி MBA தொடர்கிறார். B.Com படிக்கும் மகன் தன்காலில் நின்றால், நான் கொஞ்சம் உட்காருவேன் என்று, சாதனை தலைக்கேறாமல் சாமானியனாய் 5 டீ ரெண்டு ராகி, கப கபன்னு க்ளாஸ் சுத்தமா கழுவி வை, நாலாவது மாடிக்கு 25 டீ மூணு மணிக்கு கொண்டு போயாச்சா? என்றபடி காலை முதல் மாலை வரை உழைக்கும் இந்தத் தேனீ!
//

மேட்டர் இங்க தான் பாஸ் இருக்கு..

ஒரு கண்ணன் இல்லை, இது மாதிரி கோடிக் கண்ணன்கள் விடாம உழைச்சி அடுத்த ஜெனரேஷனை மேல கொண்டு வந்துக்கிட்டு தான் இருக்காங்க..1940ல இருந்ததை விட 1970 பெட்டர். 1970ஐ விட 1990 பெட்டர்...1990ஐ விட 2010 பெட்டெர்...இதுக்கு காரணம் கவர்மென்ட் இல்லை, இந்த மாதிரி ஜெனரேஷன் ஜெனரேஷனா உழைச்சிக்கிட்டே இருக்கவங்க தான் காரணம்..

ஆனா, அவன் இது கொடுக்கணும், இவன் அது கொடுக்கணும், அவனால தான் முன்னேறலைன்னு எதுக்கெடுத்தாலும் அடுத்தவங்களை குறை சொல்றவங்க அப்படியே தான் இருக்காங்க...அடுத்த ஜெனரேஷனை இன்னும் கீழ தள்ளிவிட்டுட்டு போயிடறாங்க...

சிநேகிதன் அக்பர் said...

இங்கு விவரிக்கும் கேரக்டர்களின் மூலம் உங்களின் கேரக்டரும் பளிச்சென்று தெரிந்து விடுகிரது பாலா சார்.

விரைவில் புத்தகமாக வெளிவர வாழ்த்துகள்.

பத்மா said...

பாலாசி சொன்ன மாறி பசங்க இவரோட அருமையா புரிஞ்சுக்கணும் ....
நல்ல ஓய்வு காலத்தை தரணும்.
நல்ல எழுத்து வானம்பாடிகள் சார்

ஈரோடு கதிர் said...

இந்த மாதிரி ஆட்களைப் பார்க்கும் போது மனசு பட்டாம்பூச்சியாய் வர்ணச் சிறகு விரிகிறது..

கலகலப்ரியா said...

ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க சார்... அவங்க தேநீர்க்கடை இருக்கும் இடம் பார்த்திருக்கேன்னு நினைக்கறேன்..?!

இந்த எளிமை போற்றப்பட வேண்டிய விஷயம்தான் சார்..

vasu balaji said...

@@ஆமாங்க நேசன். நன்றி

vasu balaji said...

@@நன்றிங்க இராமசாமி கண்ணன்
@@நன்றி பட்டாபட்டி

vasu balaji said...

sriram said...
பாலாண்ணா,
பதினேழு வருஷ Salesman வாழ்க்கையில் பல தரப்பட்ட Client ஐ பார்த்திருக்கிறேன். எல்லா விதமான ஆட்களையும் டீல் பண்ணியிருக்கேன்னு கொஞ்சம் இருமாப்போடு இருந்தேன் (வேலுர் கலெக்டர் Payment Delay வுக்கு என்னிடம் மன்னிப்பு கேட்ட அனுபவமெல்லாம் உண்டு). நீங்க பாத்த ஆட்களுக்கு முன்னால் நானெல்லாம் தூசு எனத் தெளிந்தேன். நெறய எழுதுங்கண்ணா..
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்//

நன்றி ஸ்ரீராம்.

vasu balaji said...

sriram said...
போன பதிவின் follow up

//வானம்பாடிகள் said... sriram said... பாலாண்ணா.. பதிவுலக ப்ரோட்டோகால் பத்தியும் சொல்லுங்களேன்.. அப்புறம் - அரசு அலுவலகங்களின் கடிதப் போக்குவரத்துக்களில் பேர் போடாம பதவி மட்டும் போடும் காரணம் பத்தி சொல்றேன்னு சொன்னீங்களே - எப்ப சொல்வீங்க? என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்//
சொல்றேனே:)//

பாலாண்ணா..
மொதோ மேட்டர் (பதிவுலக ப்ரோட்டோகால்) எப்போ சொல்வ்றீங்க, ரெண்டாவது மேட்டர் (அரசாங்க கடிதப் போக்குவரத்து) எப்போ சொல்றீங்கன்னு என் கையில் அடித்து (கிள்ளி) சத்தியம் பண்ணி சொல்லுங்க, அப்போதான் நம்புவேன்.

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்//

ம்கும் பெருசா வருது. இடுகை தேத்திடுவேன். இருங்க:))

vasu balaji said...

@@நன்றி புலிகேசி
@@நன்றிங்க குரு
@@நன்றிங்க விசா
@@நன்றிங்க சீனா
@@நன்றிங்க டி.வி.ஆர்
@@நன்றிங்க ஜெய்

vasu balaji said...

இப்படிக்கு நிஜாம் ..., said...
அண்ண! கண்ணன் சார பாக்கவேனும் என ஆசை வந்திடுச்சி!!!தன் பொருப்புகளை சரியாக உணர்ந்தவர்....இன்னமும்....//

ரயில்வே ஆஃபீசுக்கும் மெமோரியல் ஹாலுக்கும் நடுவில போகிற வீதி தங்கசாலை வீதி. பார்க்கலாம்.

vasu balaji said...

முகிலன் said...
இவரை நேரில் சந்திக்க எனக்கு வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி சார்..

(வந்து சேந்தாச்சி...0

நன்றி! பென்குவின பார்க்க முடியலை. எப்படி இருக்கார்.

vasu balaji said...

Cable Sankar said...

//ஹீரோக்கள், பறந்து பறந்து அடிப்பதில்லை. இம்மாதிரி நின்று வாழ்ந்து காட்டுகிறார்கள்.//

ஆமாம் சார்:)

vasu balaji said...

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...
//முகிலன் said...
இவரை நேரில் சந்திக்க எனக்கு வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி சார்..//

அறிமுகத்தின் போது கூட வாங்க டீ சாப்பிடலாம்னு அன்போடு அழைத்தாரே!

நானும் உங்களுக்கு ஒரு நன்றி சொல்லிக்கிறேன் சார்!//

:). நன்றி சங்கர்.

vasu balaji said...

@@நன்றிங்க நாடோடி
@@ஆமாங்க தேவா. நன்றி.
@@நன்றி பாலாசி.
@@நன்றிங்க பெ.சொ.வி.
@@நன்றிங்க செந்தில்
@@நன்றிங்க ப்ரேமாமகள்.
@@நன்றிங்க அனாமிகா.

vasu balaji said...

அது சரி said...
//

அடுத்த மகளும் HCLல் பணிபுரிந்தபடி MBA தொடர்கிறார். B.Com படிக்கும் மகன் தன்காலில் நின்றால், நான் கொஞ்சம் உட்காருவேன் என்று, சாதனை தலைக்கேறாமல் சாமானியனாய் 5 டீ ரெண்டு ராகி, கப கபன்னு க்ளாஸ் சுத்தமா கழுவி வை, நாலாவது மாடிக்கு 25 டீ மூணு மணிக்கு கொண்டு போயாச்சா? என்றபடி காலை முதல் மாலை வரை உழைக்கும் இந்தத் தேனீ!
//

மேட்டர் இங்க தான் பாஸ் இருக்கு..

ஒரு கண்ணன் இல்லை, இது மாதிரி கோடிக் கண்ணன்கள் விடாம உழைச்சி அடுத்த ஜெனரேஷனை மேல கொண்டு வந்துக்கிட்டு தான் இருக்காங்க..1940ல இருந்ததை விட 1970 பெட்டர். 1970ஐ விட 1990 பெட்டர்...1990ஐ விட 2010 பெட்டெர்...இதுக்கு காரணம் கவர்மென்ட் இல்லை, இந்த மாதிரி ஜெனரேஷன் ஜெனரேஷனா உழைச்சிக்கிட்டே இருக்கவங்க தான் காரணம்..

ஆனா, அவன் இது கொடுக்கணும், இவன் அது கொடுக்கணும், அவனால தான் முன்னேறலைன்னு எதுக்கெடுத்தாலும் அடுத்தவங்களை குறை சொல்றவங்க அப்படியே தான் இருக்காங்க...அடுத்த ஜெனரேஷனை இன்னும் கீழ தள்ளிவிட்டுட்டு போயிடறாங்க...//

Very true. அதோடு கூடவே இப்படி சாதனையாளர்களை ஏதோ சொல்லி இழிவுபடுத்துவதும் கூட. :(

vasu balaji said...

@@நன்றி அக்பர்
@@நன்றிங்க பத்மா
@@நன்றி கதிர்.

vasu balaji said...

கலகலப்ரியா said...
ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க சார்... அவங்க தேநீர்க்கடை இருக்கும் இடம் பார்த்திருக்கேன்னு நினைக்கறேன்..?!

இந்த எளிமை போற்றப்பட வேண்டிய விஷயம்தான் சார்..//

நன்றிம்மா. ஆமாம் நீ பார்த்திருக்க.

எறும்பு said...

////முகிலன் said...
இவரை நேரில் சந்திக்க எனக்கு வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி சார்..//

அறிமுகத்தின் போது கூட வாங்க டீ சாப்பிடலாம்னு அன்போடு அழைத்தாரே!

நானும் உங்களுக்கு ஒரு நன்றி சொல்லிக்கிறேன் சார்!///

Ayya! you left me..

காமராஜ் said...

ஆமா பலாண்ணா இந்த மாதிரி உழைப்பாளிகளைப்பார்க்கும் போதெல்லாம் நாம ரொம்பச்சின்னதா மாறிப்போக நேர்கிறது. அதுவும் அத்தணை பேரையும் சமாளிக்கும் லாவகம் இருக்கே அதுக்கு கூட ரெண்டு ரெட்சல்யூட் வைக்கலாம்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

இதுபோல் அருமையான மனிதர்களும் இருக்கிறார்கள் என்பதே நிறைவைத் தருகிறது. நல்ல பதிவு சார்!

பா.ராஜாராம் said...

புளி போட்டு விலக்கிய விளக்கு போல, மனிதர்கள் ஜொலிக்கிறார்கள் பாலாண்ணா, உங்கள் கையில்!

vasu balaji said...

எறும்பு said...
////முகிலன் said...
இவரை நேரில் சந்திக்க எனக்கு வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி சார்..//

அறிமுகத்தின் போது கூட வாங்க டீ சாப்பிடலாம்னு அன்போடு அழைத்தாரே!

நானும் உங்களுக்கு ஒரு நன்றி சொல்லிக்கிறேன் சார்!///

Ayya! you left me..//

oops. sorry ராஜகோபால். அடுத்த முறை பார்ப்போம்.

vasu balaji said...

காமராஜ் said...
ஆமா பலாண்ணா இந்த மாதிரி உழைப்பாளிகளைப்பார்க்கும் போதெல்லாம் நாம ரொம்பச்சின்னதா மாறிப்போக நேர்கிறது. அதுவும் அத்தணை பேரையும் சமாளிக்கும் லாவகம் இருக்கே அதுக்கு கூட ரெண்டு ரெட்சல்யூட் வைக்கலாம்.//

ஆமாங்க காமராஜ். நன்றி

vasu balaji said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//இதுபோல் அருமையான மனிதர்களும் இருக்கிறார்கள் என்பதே நிறைவைத் தருகிறது. நல்ல பதிவு சார்!//

நன்றிங்க ராமசாமி:)

vasu balaji said...

பா.ராஜாராம் said...

//புளி போட்டு விலக்கிய விளக்கு போல, மனிதர்கள் ஜொலிக்கிறார்கள் பாலாண்ணா, உங்கள் கையில்!//

நன்றிங்க பா.ரா.:)

நசரேயன் said...

உழைப்பின் வெற்றி

ஓலை said...

Uzhaippaal uyarntha kudumbam. Kaiyeduththu oru kumbidu avarukku.