Saturday, January 9, 2010

நறுக்குன்னு நாலு வார்த்த V 4.2

யுத்தக் குற்ற விசாரணைக்கு உதவ நிபுணர் குழுவை ஜ.நா நியமிக்கும்: ஒளிநாடா உண்மை என்பதால் நடவடிக்கைக்கு வலியுறுத்து

உங்களுக்கு இன்னுமாடா இந்த வலி உறுத்தல. பன்னாடைங்களா! அவன் ஒத்துக்கிட்டு ஆமாம் சாரின்னு கூட சொல்லப் போறதில்லை.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப்புலிகள் இன்று விடுதலை செய்யப்படவுள்ளனர்

இன்னும் புலிகள்னு தானடா சொல்றீங்க அப்புறமென்ன புனர் வாழ்வு. பின்னயும் சாவடிக்கவா?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
திருவேங்கடம் வேலுப்பிள்ளையின் பூதவுடல்,வவுனியாவுக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது - பிரபாகரனின் தாயும் விடுவிப்பு

தேர்தலோ வோட்டோ இந்த மட்டுக்குமாவது மரியாதை இருக்கே.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
சனல் 4 தொலைக்காட்சி காணொளி உண்மை; அதுவே போர்க்குற்ற விசாரணைக்கு சாட்சியாக அமைந்துள்ளது : ஐ.நா.சபை

விசாரணை எப்ப. சாட்சிய வெச்சிகிட்டு சூப்பு வைக்கிறீங்களா?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
மஹிந்த ராஜபக்சவின் தேர்தல் பிரசாரத்திற்காக பாரியளவில் அரச சொத்துக்கள் விரயமாக்கப்படுகின்றன

நாட்ட மீட்டெடுத்தவராச்சே. அவங்களுக்கில்லாமலா?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
மட்டு. மேயர் சிவகீதா பிரபாகரனுக்கு வழங்கப்பட்ட இராணுவப் பாதுகாப்பு நீக்கம்

பின்ன. முதல்ல இல்லைன்னு அப்புறம் புண்சேகா பேச அனுமதி கொடுத்தா இதெல்லாம் போய்டும்னு தெரியவேணாம்?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இலங்கையின் மனித உரிமை மீறல்கள்: தனி விசாரணைக்குழுவுக்கு ஐ.நா. பரிசீலனை

பொகல்லாகமவ தலைவரா போட்டு, கோஹன்னவ சாட்சியா போட்டு திருப்தியளிக்கிறதுன்னு மூடிடுவானுங்க.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
நடேசன் கொலையில் பதிலளிக்க அவகாசம் தேவை: இலங்கை

உண்மைன்னா டக்குன்னு சொல்லலாம். கதைன்னா எழுதணுமில்ல.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ராஜபக்சேவிடமே அரசியல் கற்றேன்: பொன்சேகா

உருப்பட்டுடும். அவரு உன்கிட்ட ராணுவம் கற்றேன்னு சொல்லிக்குவாரு.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
சரத் பொன்சேகா தமிழில் ஆற்றிய உரை

தேர்தல்னா என்ன வேணா பண்ணலாம். சரி அதுக்கெதுக்கு இந்த படம் போட்டானுங்க. உள்குத்தோ?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
மதுரை ஆஸ்பத்திரியில் தானே பிரசவம் பார்த்துக் கொண்ட பெண்ணிடம் ஆண் குழந்தை பிறந்ததால் ரூ 1500 கேட்ட பெண் ஊழியர்.

அடிச்சது லக்கி ப்ரைஸ். சஸ்பென்ஷன். வேலை செய்யாம விசாரணை முடியற வரைக்கும் பாதி சம்பளம். அப்புறம் சாட்சியம் போறலைன்னு திரும்ப வேலை. மிச்ச சம்பளம் அரியர்ஸ்ல.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
புகழ்பாடுவதை நிறுத்துங்கள் : கலைஞர்

அப்புடி போடுங்கைய்யா. சொந்த காசு போட்டு விருது குடுக்க வக்கில்ல. சட்டசபைல அலம்பலா?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
போலீஸ்காரர்கள் கட்டிப்புரண்டு சண்டை

பங்குச் சண்டையோ?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
துணைமுதல்வர் எனக்கு அல்வா கொடுக்கவில்லை: எஸ்.வி.சேகர்

அல்வாக்கு அல்வா குடுக்க முடியுமா சேகரு. நீ என்னா சோக்கா தேத்திட்டு நழுவிட்ட!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
சட்டப்பேரவையில் ஜெயலலிதா: 10 நிமிடம் அமர்ந்திருந்து புறப்பட்டார்

அல்லோ. நோட் த பாயிண்ட். வெளிய இருந்தே கையெழுத்து போட்டு போகல.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
கடைகோடி மனிதனுக்கு உணவு இல்லை என்றால் சாதனைகள் செய்து பயன் இல்லை: மாதவன் நாயர்

அடிக்கடி ராக்கட் உட்டா திருஷ்டிக்கு உடைக்கிற சிதறுகாய்ல 10 பேரு பசியாருவாங்கய்யா. நடத்துங்க.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
அல்டிமேட் ஸ்டார் பட்டம் வேண்டாம்: அஜீத்

இந்த நேர்மைய நான் பாராட்டுறேன்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
சென்னையில் 2 நாள் நாய் கண்காட்சி

தண்டோரா அண்ணே. நாமள்ளாம் போணுமா?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
என்.டி.திவாரிக்கு மேலும் ஒரு தலைவலி!

யோவ். அதுக்கு ஒன்னு மஸாஜூக்கு வேணும்பாரு.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

51 comments:

ஸ்ரீ said...

கடைசியில பின்றீங்களே.:-)))))))))))))))))

Chitra said...

புகழ்பாடுவதை நிறுத்துங்கள் : கலைஞர்

அப்புடி போடுங்கைய்யா. சொந்த காசு போட்டு விருது குடுக்க வக்கில்ல. சட்டசபைல அலம்பலா? ..........எப்படிங்க உங்களா மட்டும் இப்படியெல்லாம் கமெண்ட் அடிக்க முடியுது? சூப்பர்!

இராகவன் நைஜிரியா said...

// என்.டி.திவாரிக்கு மேலும் ஒரு தலைவலி!

யோவ். அதுக்கு ஒன்னு மஸாஜூக்கு வேணும்பாரு.//

ஆஹா... எடுத்ததுக்கெல்லாம் ஒன்னு கேப்பாரு போலிருக்கே?

இராகவன் நைஜிரியா said...

// ஸ்ரீ said...
கடைசியில பின்றீங்களே.:-))))))))))))))))) //

எனக்கு தெரிஞ்சு தலையில் தானே பின்னூவாங்க..

இராகவன் நைஜிரியா said...

// சென்னையில் 2 நாள் நாய் கண்காட்சி

தண்டோரா அண்ணே. நாமள்ளாம் போணுமா? //

கூட துணைக்கு நானும் வரணுமா?

இராகவன் நைஜிரியா said...

// கடைகோடி மனிதனுக்கு உணவு இல்லை என்றால் சாதனைகள் செய்து பயன் இல்லை: மாதவன் நாயர்

அடிக்கடி ராக்கட் உட்டா திருஷ்டிக்கு உடைக்கிற சிதறுகாய்ல 10 பேரு பசியாருவாங்கய்யா. நடத்துங்க. //

இஃகி... இஃகி..

இராகவன் நைஜிரியா said...

// புகழ்பாடுவதை நிறுத்துங்கள் : கலைஞர் //

அவர் எப்பவெல்லாம் நிறுத்துன்னு சொல்றாரோ அப்ப எல்லாம் ஜால்ரா இன்னும் அதிகமா அடிக்கணும் அப்படின்னு அர்த்தம்...

இராகவன் நைஜிரியா said...

// இலங்கையின் மனித உரிமை மீறல்கள்: தனி விசாரணைக்குழுவுக்கு ஐ.நா. பரிசீலனை //

எப்ப பரிசீலைனை முடிஞ்சு... எப்ப விசாரனை ஆரம்பிச்சு...

ம்... என்னமோ நடக்குது மர்மமா இருக்குது..

இராகவன் நைஜிரியா said...

// போலீஸ்காரர்கள் கட்டிப்புரண்டு சண்டை //

பங்காளி சண்டையா கூட இருக்கலாமில்லையா?

இராகவன் நைஜிரியா said...

// போலீஸ்காரர்கள் கட்டிப்புரண்டு சண்டை //

திருடன் கூட எப்படி சண்டை போடணும் அப்படின்னு டிரெயினிங் எடுத்துகிட்டு இருந்தாங்க..

இராகவன் நைஜிரியா said...

// துணைமுதல்வர் எனக்கு அல்வா கொடுக்கவில்லை: எஸ்.வி.சேகர்

அல்வாக்கு அல்வா குடுக்க முடியுமா சேகரு. நீ என்னா சோக்கா தேத்திட்டு நழுவிட்ட! //

அப்ப யாருக்கு கொடுத்தாரு?

றமேஸ்-Ramesh said...

"நச்" ன்னு இருக்கு அண்ணே..
புனர்வாழ்வு விடுதலை..... ம்ம்...

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

நல்ல தகவல்கள்

Balavasakan said...

அத்தனையும் கலக்ககல் சார்...

பின்னோக்கி said...

என்னடா இது சார், திவாரி மேட்டர் எல்லாம் விரும்ம்ம்ம்ம்பி படிக்கிறவராச்சே, அவரப் பத்தி நியூஸ் இல்லையேன்னு நினைச்சேன். கடைசியா பூனைக்குட்டி வெளிய வந்துடுச்சு கடைசி மேட்டரா. வெட்கப்படாம முதல் மேட்டராவே போட்டுருக்காலாம். நாங்க தப்பா நினைக்க மாட்டோம் :)

பலா பட்டறை said...

செம நறுக்கு நறுக்கிட்டீங்க...
+++++++++++++++++++++++++++++++++++

இராகவன் நைஜிரியா said...
// சென்னையில் 2 நாள் நாய் கண்காட்சி

தண்டோரா அண்ணே. நாமள்ளாம் போணுமா? //

கூட துணைக்கு நானும் வரணுமா?//

என்னா வலி முடியல...:)))

கலகலப்ரியா said...

//சென்னையில் 2 நாள் நாய் கண்காட்சி

தண்டோரா அண்ணே. நாமள்ளாம் போணுமா?//

=)).. gnaan angittuthaan undu... loll... lol...

சங்கர் said...

எத வச்சு இப்பிடி நறுக்கிரிங்க .இப்பிடி ஓவரா நறுக்கினா உங்கட --------- நறுக்கி விடுவாங்க கவனம் .(நாக்க சொன்னான்)

வானம்பாடிகள் said...

ஸ்ரீ said...

/கடைசியில பின்றீங்களே.:-)))))))))))))))))/

வாங்க ஸ்ரீ:))

வானம்பாடிகள் said...

Chitra said...

/.........எப்படிங்க உங்களா மட்டும் இப்படியெல்லாம் கமெண்ட் அடிக்க முடியுது? சூப்பர்!//

கமெண்ட்தான் முடியும்:))

வானம்பாடிகள் said...

இராகவன் நைஜிரியா said...

/ ஆஹா... எடுத்ததுக்கெல்லாம் ஒன்னு கேப்பாரு போலிருக்கே?//

:))

/ எனக்கு தெரிஞ்சு தலையில் தானே பின்னூவாங்க../

சிலேடையா:))

/தண்டோரா அண்ணே. நாமள்ளாம் போணுமா? //

கூட துணைக்கு நானும் வரணுமா?/

தோடா! கேள்வியை பாரு. நாங்க குறைக்கிறப்ப பின்னூக்க வேற யாரு வருவா:))

வானம்பாடிகள் said...

இராகவன் நைஜிரியா said...

/ அவர் எப்பவெல்லாம் நிறுத்துன்னு சொல்றாரோ அப்ப எல்லாம் ஜால்ரா இன்னும் அதிகமா அடிக்கணும் அப்படின்னு அர்த்தம்...//

இப்படி வேறையோ

/எப்ப பரிசீலைனை முடிஞ்சு... எப்ப விசாரனை ஆரம்பிச்சு...

ம்... என்னமோ நடக்குது மர்மமா இருக்குது../

பங்கி எலக்சனுக்கு முன்னாடியாவது...

வானம்பாடிகள் said...

றமேஸ்-Ramesh said...

/ "நச்" ன்னு இருக்கு அண்ணே..
புனர்வாழ்வு விடுதலை..... ம்ம்.../

நன்றி றமேஸ்..ம்ம்

வானம்பாடிகள் said...

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

/நல்ல தகவல்கள்/

நன்றிங்க.

வானம்பாடிகள் said...

Balavasakan said...

/அத்தனையும் கலக்ககல் சார்.../

நன்றி வாசு

வானம்பாடிகள் said...

பின்னோக்கி said...

என்னடா இது சார், திவாரி மேட்டர் எல்லாம் விரும்ம்ம்ம்ம்பி படிக்கிறவராச்சே, அவரப் பத்தி நியூஸ் இல்லையேன்னு நினைச்சேன். கடைசியா பூனைக்குட்டி வெளிய வந்துடுச்சு கடைசி மேட்டரா. வெட்கப்படாம முதல் மேட்டராவே போட்டுருக்காலாம். நாங்க தப்பா நினைக்க மாட்டோம் :)//

ஆஹா இது வில்லங்கமா இருக்கே. அவருக்கே வெக்கமில்ல. சொல்றதுக்கு எனக்கெதுக்கு வெக்கம்:))

வானம்பாடிகள் said...

பலா பட்டறை said...

செம நறுக்கு நறுக்கிட்டீங்க...
+++++++++++++++++++++++++++++++++++

இராகவன் நைஜிரியா said...
// சென்னையில் 2 நாள் நாய் கண்காட்சி

தண்டோரா அண்ணே. நாமள்ளாம் போணுமா? //

கூட துணைக்கு நானும் வரணுமா?//

என்னா வலி முடியல...:)))//

நன்றி:)) நீங்களும் வரீங்கதானே

வானம்பாடிகள் said...

கலகலப்ரியா said...

/ =)).. gnaan angittuthaan undu... loll... lol...//

ஆஹா. ரிகர்ஸல் கூட ஆரம்பிச்சிட்டியா:)) சொல்லவே இல்ல!

வானம்பாடிகள் said...

சங்கர் said...

//எத வச்சு இப்பிடி நறுக்கிரிங்க .இப்பிடி ஓவரா நறுக்கினா உங்கட --------- நறுக்கி விடுவாங்க கவனம் .(நாக்க சொன்னான்)//

ம்கும். 142 நறுக்கியாச்சி தம்பி:))

பா.ராஜாராம் said...

:-))

கலகலப்ரியா said...

//வானம்பாடிகள் said...

கலகலப்ரியா said...

/ =)).. gnaan angittuthaan undu... loll... lol...//

ஆஹா. ரிகர்ஸல் கூட ஆரம்பிச்சிட்டியா:)) சொல்லவே இல்ல!//

ஏன் சார்... மீன் நீந்துறதுக்கு ஒத்திகை பாக்குதா... நான் குரைக்கிறதுக்கு ஒத்திகை பார்க்கணுமா.. சாரி சார்... ரொம்பக் கேனத்தனமா இருக்கு உங்க கேள்வி...

வானம்பாடிகள் said...

கலகலப்ரியா said...

// ஏன் சார்... மீன் நீந்துறதுக்கு ஒத்திகை பாக்குதா... நான் குரைக்கிறதுக்கு ஒத்திகை பார்க்கணுமா.. சாரி சார்... ரொம்பக் கேனத்தனமா இருக்கு உங்க கேள்வி...//

அட. காம்பெடிஷனாச்சேன்னு கேட்டனம்மா:))

வானம்பாடிகள் said...

பா.ராஜாராம் said...

/ :-))//

வாங்க பா.ரா.:))

கலகலப்ரியா said...

அது கண் காட்சிதானே... அதில குரைக்கிற போட்டி வேற வைக்கிறாங்களா... என்னோட competition லிஸ்ட்ல அது இல்லையே... க்யூட்டா ரிப்பன் கட்டிக்கிட்டு நின்னுட்டிருக்கணும்னுதான் சொன்னாங்க..

வானம்பாடிகள் said...

கலகலப்ரியா said...

//அது கண் காட்சிதானே... அதில குரைக்கிற போட்டி வேற வைக்கிறாங்களா... என்னோட competition லிஸ்ட்ல அது இல்லையே... க்யூட்டா ரிப்பன் கட்டிக்கிட்டு நின்னுட்டிருக்கணும்னுதான் சொன்னாங்க..//

அய். நீதான் லொள் லொல் போட்டியே:))

புலவன் புலிகேசி said...

//அல்டிமேட் ஸ்டார் பட்டம் வேண்டாம்: அஜீத்

இந்த நேர்மைய நான் பாராட்டுறேன்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
சென்னையில் 2 நாள் நாய் கண்காட்சி

தண்டோரா அண்ணே. நாமள்ளாம் போணுமா?//

அந்த நேர்மையை நானும் பாரட்டுறேன்.

நாய் கண்காட்சிக்கு போனா சொல்லுங்க நானும் வாரேன்.

முகிலன் said...

//சென்னையில் 2 நாள் நாய் கண்காட்சி

தண்டோரா அண்ணே. நாமள்ளாம் போணுமா?
//

நான் கூட வர்றேன். (புத்தக கண்காட்சிக்கு புத்தகம் மட்டும்தான் போகணுமா என்ன?)

ஜோதிஜி said...

கலைஞர் கேள்வி பதில் அதற்கு பிறகு ஆனந்த விகடன் கேள்வியும் நானே பதிலும் நானே என்ற இந்த இரண்டு முனைகளுக்குப் பிறகு அடுத்த தன்னம்பிக்கையின் தளராத முனை பாமரன் கேள்வி பதில்,

வாழ்த்துகள் ஐயா.

S.A. நவாஸுதீன் said...

ஹா ஹா ஹா. ஒவ்வொன்னும் சாக்கு தைக்கிற ஊசியில குத்துன மாதிரி இருக்கு.

Anonymous said...

//யுத்தக் குற்ற விசாரணைக்கு உதவ நிபுணர் குழுவை ஜ.நா நியமிக்கும்: ஒளிநாடா உண்மை என்பதால் நடவடிக்கைக்கு வலியுறுத்து//

விடுதலைபுலிகள் செய்த குற்றங்களுக்கு எந்த அமைப்பு விசாரணை செய்வது... உதாரனத்திற்க்கு சக போராளிகளை கொன்று குவித்தது மற்றும் மலையக தமிழர்களின் கதி.. this is just sample... No one can answer from Tamil Nadu... because.. You guys won't understand our feelings and pain... You need Sri Lankan issue for your day to day life. But for it's different..

வானம்பாடிகள் said...

புலவன் புலிகேசி said...
/நாய் கண்காட்சிக்கு போனா சொல்லுங்க நானும் வாரேன்./

:)). நன்றி புலிகேசி

வானம்பாடிகள் said...

முகிலன் said...

/ நான் கூட வர்றேன். (புத்தக கண்காட்சிக்கு புத்தகம் மட்டும்தான் போகணுமா என்ன?)//

இந்த லாஜிக் நல்லாருக்கு:))

வானம்பாடிகள் said...

ஜோதிஜி said...

கலைஞர் கேள்வி பதில் அதற்கு பிறகு ஆனந்த விகடன் கேள்வியும் நானே பதிலும் நானே என்ற இந்த இரண்டு முனைகளுக்குப் பிறகு அடுத்த தன்னம்பிக்கையின் தளராத முனை பாமரன் கேள்வி பதில்,

வாழ்த்துகள் ஐயா.//

நன்றிங்க தேவிஜி

thenammailakshmanan said...

அல்வாவும் பங்கு சண்டையும் சூப்பர் வானம்பாடிகள்

ஈரோடு கதிர் said...

//யோவ். அதுக்கு ஒன்னு மஸாஜூக்கு வேணும்பாரு.////

விடமாட்டீங்களா அந்த ஆள

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

உங்களோட "நறுக்" கமென்ட்டெல்லாம் சரிதான். ஆனா, பய புள்ளைங்க திருந்தறா மாதிரி தெரியலையே.

கிரி said...

//புகழ்பாடுவதை நிறுத்துங்கள் : கலைஞர் //

அது சரி

//என்.டி.திவாரிக்கு மேலும் ஒரு தலைவலி!

யோவ். அதுக்கு ஒன்னு மஸாஜூக்கு வேணும்பாரு. //

ஹி ஹி ஹி

வானம்பாடிகள் said...

thenammailakshmanan said...

/அல்வாவும் பங்கு சண்டையும் சூப்பர் வானம்பாடிகள்//

நன்றிங்க.

வானம்பாடிகள் said...

ஈரோடு கதிர் said...

/விடமாட்டீங்களா அந்த ஆள//

ஒரு எச்சரிக்கதான். வேற என்ன:))

வானம்பாடிகள் said...

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

/உங்களோட "நறுக்" கமென்ட்டெல்லாம் சரிதான். ஆனா, பய புள்ளைங்க திருந்தறா மாதிரி தெரியலையே.//

அதப் பார்த்தாவது நானும் திருந்தலையே:))

வானம்பாடிகள் said...

நன்றி கிரி.