Thursday, January 7, 2010

நறுக்குன்னு நாலு வார்த்த V 4.1

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் தந்தையார் வேலுப்பிள்ளை காலமானார்.

படுபாவிங்க.அடக்கம் பண்ணவாவது குடுப்பானுங்களா? இதையும் எவனும் கேக்கப் போறதில்லை.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~.
வடக்கு-கிழக்கை ஒருபோதுமே இணைக்கப் போவதில்லை: திட்டவட்டமாகத் தெளிவுபடுத்துகிறார் ஜனாதிபதி

நீ என்னைக்கும் பிரச்சனை தீக்கப் போறதுமில்லை. ஆமாம். நீயே குழம்பிபோயிருக்கன்னு தானே வைத்தியம். இதில என்னாத்த நீ தெளிய வைக்கிறது எச்ச?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~.
தலைவர் பிரபாகரனின் தனிப்பட்ட ஆயுதங்கள் மீட்கப்பட்டதாக சிங்கள ஊடகம் தகவல்

அந்த நேரத்துல இதெல்லாம் புதைச்சி வைக்கறதுக்கு நேரம் வேற இருந்திச்சா? கைத்துப்பாக்கி கூட ஒளிச்சி வச்சிட்டு கல்யாணத்துக்கா வந்தாங்க.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~.
சனல் 4 தொலைக்காட்சி வீடியோ தொடர்பிலான நிபுணர்களின் அறிக்கை இன்று சமர்ப்பிப்பு

அத வெச்சி ஒரு கண்டனம். ஒரு மறுப்பு. அதுக்கு மேல ஒரு மண்ணாங்கட்டியும் நடக்காது. போங்கடே.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~.
வேறு தெரிவற்ற நிலையில் சரத் பொன்சேகாவை ஆதரிக்க வேண்டிய நிலைமையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு

அதும் சரிதான். எரியற கொள்ளியில் எந்த கொள்ளி நல்ல கொள்ளின்னு தேடுறது.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~.

இலங்கை ஜனாதிபதி தேர்தலில் கண்காணிப்பு பணிகளுக்காக வரமுடியாது என ஐ.நா.சபை தெரிவிப்பு

இதுல ஏதும் உள்குத்து இருக்கோ?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~.
சரத் பொன்சேகாவின் ஆயுதக் கொடுக்கல் வாங்கல் விவகாரம் குறித்து சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: அரசாங்கம்

அப்புடியே எல்லா கொடுக்கல் வாங்கலுக்கும் இருக்குமா? ஆமா யாரு குடுத்தா? யாரு வாங்கினா?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~.
தமிழ்க் கூட்டமைப்புடன் ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்தம் குறித்த தகவல்கள் வெளிப்படுத்தப்பட வேண்டும்:யாப்பா

அட போப்பா! நீங்க சொல்ல வேண்டிய தகவலையெல்லாம் சொல்லுங்கப்பா.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~.
ஆயிரம் புலி உறுப்பினர்கள் நாளை மறுதினம் விடுதலை

தேர்தல் முடிஞ்சதும் திரும்ப புலிகளை ஒழிப்போம்னு கல்லா கட்டவா?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~.
ஈழ விடுதலைக்காக சட்டக்கல்லூரியில் படித்த போதே கவிதை எழுதினேன்: திருமாவளவன்

நாங்கோட 52 வயதில எழுதினேன். ஒரு மயித்துக்கும் ஆகல. வேலைய பாருங்க சாமி. வந்துட்டாரு.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~.
பென்னாகரத்தில் பாமகவை ஒழிக்க முடியாது: ராமதாஸ்

ஏன்? அங்க இல்லவே இல்லையா?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~.
கவர்னர் உரை மேலும் ஒரு மைல்கல்: திருமா

அப்புடி ஒரு ஓரமா இருக்கும் அவ்ளோதானே?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~.
மாணவர்கள் எப்படியிருக்ககூடாது என்பதற்கு நான் உதாரணம்: நடிகர் பாக்யராஜ்

மனுசன் எப்படி இருக்கக்கூடாதுங்கறதுக்கும்தான். ராயப்பேட்டை ஃப்ண்டாபீஸ் லோனு கட்டிட்டீங்களா சார். எனக்கும் காசு வரணும்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~.
மனசாட்சிப்படி வாக்களியுங்கள்: ராமதாஸ் பிரச்சாரம்

நிஜம்மா சொல்லுங்க. அப்படி பண்ணா ஒரு ஓட்டாவது விழும்?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~.
ஹேமலதாவை நான் கற்பழிக்கவில்லை: எனக்கு மசாஜ் மட்டுமே செய்வார்: சாமியார் ஈஸ்வர் ஸ்ரீகுமார்

அங்கதானே வில்லங்கம். ஏஞ்சாமி. ஆம்பள மஸாஜ் பண்ணா ஒவ்வாமையோ?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~.

62 comments:

ஈரோடு கதிர் said...

//விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் தந்தையார் வேலுப்பிள்ளை காலமானார்.//

வேதனையான செய்தி

Subankan said...

பதில்கள்தான் இன்றய யதார்த்தம்

வெற்றி-[க்]-கதிரவன் said...

இறுதியில் சில கலக்கல்

முகிலன் said...

//பென்னாகரத்தில் பாமகவை ஒழிக்க முடியாது: ராமதாஸ்

ஏன்? அங்க இல்லவே இல்லையா?//

நல்ல குசும்பு.

முகிலன் said...

//ஈழ விடுதலைக்காக சட்டக்கல்லூரியில் படித்த போதே கவிதை எழுதினேன்: திருமாவளவன்

நாங்கோட 52 வயதில எழுதினேன். ஒரு மயித்துக்கும் ஆகல. வேலைய பாருங்க சாமி. வந்துட்டாரு.//

உணர்ச்சிவசப்பட்டு வயச சொல்லி யூத்து ஸ்டேட்டஸ் இழந்துட்டிங்களே.

முகிலன் said...

//விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் தந்தையார் வேலுப்பிள்ளை காலமானார்.//

இதுக்காக வேதனப் படுறதா இல்ல இந்த நாயிங்க கொடுமையில இருந்து தப்பிச்சிட்டாருன்னு சந்தோசப்படுறதா தெரியல.

முகிலன் said...

//வேறு தெரிவற்ற நிலையில் சரத் பொன்சேகாவை ஆதரிக்க வேண்டிய நிலைமையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு

அதும் சரிதான். எரியற கொள்ளியில் எந்த கொள்ளி நல்ல கொள்ளின்னு தேடுறது//

எல்லா ஊர்லயும் தேர்தல் இப்பிடித்தான் இருக்கும் போல.

க.பாலாசி said...

//விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் தந்தையார் வேலுப்பிள்ளை காலமானார்.//

வருந்தத்தக்க செய்தி...

க.பாலாசி said...

//ஈழ விடுதலைக்காக சட்டக்கல்லூரியில் படித்த போதே கவிதை எழுதினேன்: திருமாவளவன்

நாங்கோட 52 வயதில எழுதினேன். ஒரு மயித்துக்கும் ஆகல. வேலைய பாருங்க சாமி. வந்துட்டாரு.//

அடிச்சீங்க பாருங்க நச்சின்னு...

ஸ்ரீ said...

//விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் தந்தையார் வேலுப்பிள்ளை காலமானார்.//

:-((((((

க.பாலாசி said...

//பென்னாகரத்தில் பாமகவை ஒழிக்க முடியாது: ராமதாஸ்

ஏன்? அங்க இல்லவே இல்லையா?//

ஹா..ஹா...

க.பாலாசி said...

//கவர்னர் உரை மேலும் ஒரு மைல்கல்: திருமா

அப்புடி ஒரு ஓரமா இருக்கும் அவ்ளோதானே?//

ஆட்டுக்கு தாடி ஓரமா இருந்தா என்ன நடுவுல இருந்தா என்ன?

க.பாலாசி said...

//ஹேமலதாவை நான் கற்பழிக்கவில்லை: எனக்கு மசாஜ் மட்டுமே செய்வார்: சாமியார் ஈஸ்வர் ஸ்ரீகுமார்

அங்கதானே வில்லங்க. ஏஞ்சாமி. ஆம்பள மஸாஜ் பண்ணா ஒவ்வாமையோ?//

ஓ... அப்ப மஜா சாமியார்னு சொல்லுங்க...

கலகலப்ரியா said...

:(..

கிரி said...

//பென்னாகரத்தில் பாமகவை ஒழிக்க முடியாது: ராமதாஸ்

ஏன்? அங்க இல்லவே இல்லையா?//

ஹா ஹா ஹா

//கவர்னர் உரை மேலும் ஒரு மைல்கல்: திருமா

அப்புடி ஒரு ஓரமா இருக்கும் அவ்ளோதானே?//

டாப்பு :-))))

//மனசாட்சிப்படி வாக்களியுங்கள்: ராமதாஸ் பிரச்சாரம்

நிஜம்மா சொல்லுங்க. அப்படி பண்ணா ஒரு ஓட்டாவது விழும்?//

சார் ராமதாசை டோட்டல் டேமேஜ் பண்ணிட்டீங்களே! :-)))

ராமதாஸ் இன்னொன்னு சொன்னாரு! அண்ணா பெரியார் பெரியாரை வைத்து.. அது உலக காமெடி

க.பாலாசி said...

அப்பாடி... எனக்கு மட்டும் மைனஸ் உழுந்திருச்சேன்னு இருந்தேன். இங்கயும் சேம்டைம்ல அட்டாக் ஆயிருக்கு.

ஜெரி ஈசானந்தா. said...

இந்த இனத்திற்கு ஒரு மாவீரனை தந்த வேலு பிள்ளைக்கு என் அஞ்சலி.

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

நல்ல தகவல்கள் பாலா சார்

றமேஸ்-Ramesh said...

நல்லா கேட்டிருக்கீங்க... கேட்க மட்டுமே முடியும்.. ம்ம்

///எரியற கொள்ளியில் எந்த கொள்ளி நல்ல கொள்ளின்னு தேடுறது.///
சரிதாங்க..

Chitra said...

கவர்னர் உரை மேலும் ஒரு மைல்கல்: திருமா

அப்புடி ஒரு ஓரமா இருக்கும் அவ்ளோதானே?
..........பாமரன் பஞ்ச்.

அக்பர் said...

யதார்த்தம் கலந்த உண்மை.

T.V.Radhakrishnan said...

//விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் தந்தையார் வேலுப்பிள்ளை காலமானார்.//

:-((((((

பின்னோக்கி said...

ராமதாஸ் என்றாலே உங்களின் கமெண்ட்டில் சிரிப்பு தெரிக்கிறது. அவருக்கு மட்டும் ஸ்பெஷலா எழுதுவிங்களோ ?

கமலேஷ் said...

வலி, அரசியல், அல்சல்ன்னு எல்லாம் கலந்து தந்து இருக்கீங்க...பகிர்வுக்கு மிக்க நன்றி....

செ.சரவணக்குமார் said...

அருமை

பா.ராஜாராம் said...

பிரபாகரன் அப்பா..

:-(

பிரபாகர் said...

மனம் கனக்கிறது அய்யா!

பிரபாகர்.

ரோஸ்விக் said...

//விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் தந்தையார் வேலுப்பிள்ளை காலமானார்.//

படுபாவிங்க.அடக்கம் பண்ணவாவது குடுப்பானுங்களா? :-(((

என் கேள்வியும் இதே....

எல்லாம் நறுக்குன்னு தான் இருக்கு.... நீங்க நல்லா கேளுங்க... நறுக் நறுக்குன்னு...

நசரேயன் said...

//நாங்கோட 52 வயதில எழுதினேன். ஒரு மயித்துக்கும் ஆகல. வேலைய பாருங்க சாமி. வந்துட்டாரு.//

அப்படியா அங்கிள்

வானம்பாடிகள் said...

ஈரோடு கதிர் said...

வேதனையான செய்தி

ம்ம்

வானம்பாடிகள் said...

Subankan said...

/ பதில்கள்தான் இன்றய யதார்த்தம்/

விடிவேயில்லையா சுபாங்கன்.

வானம்பாடிகள் said...

வெற்றி-[க்]-கதிரவன் said...

இறுதியில் சில கலக்கல்//

ம்ம்

வானம்பாடிகள் said...

முகிலன் said...

// உணர்ச்சிவசப்பட்டு வயச சொல்லி யூத்து ஸ்டேட்டஸ் இழந்துட்டிங்களே.//

அல்லோ. எந்த ஜன்மத்துலன்னு சொன்னனா:))

வானம்பாடிகள் said...

க.பாலாசி said...

/ அடிச்சீங்க பாருங்க நச்சின்னு...//

அப்பாரு அடியவிடவா:))

வானம்பாடிகள் said...

ஸ்ரீ said...

/ :-((((((//

ம்ம்:(

வானம்பாடிகள் said...

க.பாலாசி said...

/ ஆட்டுக்கு தாடி ஓரமா இருந்தா என்ன நடுவுல இருந்தா என்ன?//

போட்டியே ஒரு போடு:))

/ஓ... அப்ப மஜா சாமியார்னு சொல்லுங்க../

ம்கும்.

வானம்பாடிகள் said...

கலகலப்ரியா said...

:(..//

ம்ம்:(

வானம்பாடிகள் said...

கிரி said...

/ராமதாஸ் இன்னொன்னு சொன்னாரு! அண்ணா பெரியார் பெரியாரை வைத்து.. அது உலக காமெடி/

பார்த்தேன்:))

வானம்பாடிகள் said...

ஜெரி ஈசானந்தா. said...

/இந்த இனத்திற்கு ஒரு மாவீரனை தந்த வேலு பிள்ளைக்கு என் அஞ்சலி./

ஆமாங்க சார்.

வானம்பாடிகள் said...

க.பாலாசி said...

/அப்பாடி... எனக்கு மட்டும் மைனஸ் உழுந்திருச்சேன்னு இருந்தேன். இங்கயும் சேம்டைம்ல அட்டாக் ஆயிருக்கு./

அல்லோ. உனக்கு ஒன்னு விழுந்த்தா கண்ண மூடிகிட்டு, கதிருக்கொண்ணு, வானம்பாடிக்கொண்ணு, அரூரனுக்கு ஒன்னு, கலகலாக்கு ஒண்ணுன்னு இரு. தேடவே வேணாம். வஞ்சனையில்லாத நாதாரி அது.

வானம்பாடிகள் said...

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

/நல்ல தகவல்கள் பாலா சார்/

வாங்க. நன்றிங்க.

வானம்பாடிகள் said...

Chitra said...

கவர்னர் உரை மேலும் ஒரு மைல்கல்: திருமா

அப்புடி ஒரு ஓரமா இருக்கும் அவ்ளோதானே?
..........பாமரன் பஞ்ச்.//

நன்றிங்க.

வானம்பாடிகள் said...

அக்பர் said...

யதார்த்தம் கலந்த உண்மை.//

நன்றி அக்பர்.

வானம்பாடிகள் said...

T.V.Radhakrishnan said...

:-((((((//

ஆமாம் சார்.பெரிய கொடுமையிது.

வானம்பாடிகள் said...

பின்னோக்கி said...

ராமதாஸ் என்றாலே உங்களின் கமெண்ட்டில் சிரிப்பு தெரிக்கிறது. அவருக்கு மட்டும் ஸ்பெஷலா எழுதுவிங்களோ ?//

நம்ம கையில என்ன இருக்கு சார். அது அவர் திறமை.:))

வானம்பாடிகள் said...

கமலேஷ் said...

//வலி, அரசியல், அல்சல்ன்னு எல்லாம் கலந்து தந்து இருக்கீங்க...பகிர்வுக்கு மிக்க நன்றி....//

வாங்க கமலேஷ். நன்றி.

வானம்பாடிகள் said...

பா.ராஜாராம் said...

பிரபாகரன் அப்பா..

:-(//

ஆம் பா.ரா.:((

வானம்பாடிகள் said...

செ.சரவணக்குமார் said...

அருமை//

நன்றி சரவணக்குமார்.

வானம்பாடிகள் said...

பிரபாகர் said...

மனம் கனக்கிறது அய்யா!

பிரபாகர்.//

ம்ம்.

வானம்பாடிகள் said...

ரோஸ்விக் said...

//விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் தந்தையார் வேலுப்பிள்ளை காலமானார்.//

படுபாவிங்க.அடக்கம் பண்ணவாவது குடுப்பானுங்களா? :-(((

என் கேள்வியும் இதே....

எல்லாம் நறுக்குன்னு தான் இருக்கு.... நீங்க நல்லா கேளுங்க... நறுக் நறுக்குன்னு...//

ம்ம்

வானம்பாடிகள் said...

நசரேயன் said...

அப்படியா அங்கிள்//

ஆமா அங்கிளண்ணே:))

குடுகுடுப்பை said...

இந்தமாதிரி கேக்கறதனால நமக்குதான் மன உலைச்சல், அதுனாலதான் நான் வேற பாதையை தேர்ந்தெடுத்துட்டேன்:)

நேசமித்ரன் said...

நெற்றிப் பொட்டில் ஆணி அடிக்கும் பதில்கள் சார்

பத்திரிக்கைகள் செய்யத்தயங்கும் சமூக அலசலை மனசாட்சியின் குரலை பதிவு செய்திருக்கிறீர்கள்

வானம்பாடிகள் said...

குடுகுடுப்பை said...

// இந்தமாதிரி கேக்கறதனால நமக்குதான் மன உலைச்சல், அதுனாலதான் நான் வேற பாதையை தேர்ந்தெடுத்துட்டேன்:)//

அதுக்குதான் உங்க கட்சில சேர்ந்தா சேத்துக்க மாட்டன்னுடிங்களே. :))

வானம்பாடிகள் said...

நேசமித்ரன் said...

/நெற்றிப் பொட்டில் ஆணி அடிக்கும் பதில்கள் சார்

பத்திரிக்கைகள் செய்யத்தயங்கும் சமூக அலசலை மனசாட்சியின் குரலை பதிவு செய்திருக்கிறீர்கள்//

வாங்க நேசன். வேற என்ன பண்றது. அப்புறம் சார் வேணாமே:)).

மோகன் குமார் said...

//பென்னாகரத்தில் பாமகவை ஒழிக்க முடியாது: ராமதாஸ்

ஏன்? அங்க இல்லவே இல்லையா?//

உடனே சிரித்து விட்டேன்.. ஆனால் அதிசயமாய் பா. ம. க சற்று presence உள்ள தொகுதிகளுள் இது ஒன்று. ஒரு முறை தனியாக (??!!) நின்று ஜெயித்திருக்கிறார்கள்

ஸ்ரீராம். said...

அங்கதானே வில்லங்கம். ஏஞ்சாமி. ஆம்பள மஸாஜ் பண்ணா ஒவ்வாமையோ//

இருங்க...என்.டி திவாரியைக் கேட்டு சொல்றேன்...

S.A. நவாஸுதீன் said...

தைரியமா, சும்மா பின்னி பெடெலெடுக்குறீங்க சார். ஒவ்வொன்னும் திருக்க வாலைக்கொண்டு அடிச்சமாதிரி இருக்கு.

வானம்பாடிகள் said...

மோகன் குமார் said...

//பென்னாகரத்தில் பாமகவை ஒழிக்க முடியாது: ராமதாஸ்

ஏன்? அங்க இல்லவே இல்லையா?//

உடனே சிரித்து விட்டேன்.. ஆனால் அதிசயமாய் பா. ம. க சற்று presence உள்ள தொகுதிகளுள் இது ஒன்று. ஒரு முறை தனியாக (??!!) நின்று ஜெயித்திருக்கிறார்கள்//

ஆமாம். பகிடிக்கு சொன்னது:))

வானம்பாடிகள் said...

ஸ்ரீராம். said...

/ இருங்க...என்.டி திவாரியைக் கேட்டு சொல்றேன்...//

அவரு வேறயா:))

வானம்பாடிகள் said...

S.A. நவாஸுதீன் said...

/தைரியமா, சும்மா பின்னி பெடெலெடுக்குறீங்க சார். ஒவ்வொன்னும் திருக்க வாலைக்கொண்டு அடிச்சமாதிரி இருக்கு.//

நன்றி நவாஸ்

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

நறுக்குன்னு நாலு வார்த்த......
ஒவ்வொன்னும் நச்சுன்னு இருக்கு.
ஆனா, கொடுமை பாருங்க.....எவனும் திருந்தப் போறதில்லை.
(உங்களுக்கு மைனஸ் வோட்டு போடறவனையும் சேர்த்துதான் சொல்றேன்)