Sunday, June 27, 2010

கேரக்டர்-சுப்புப் பாட்டி.

அரக்காணி நிலத்துக்கு அண்ணந்தம்பிக்குள்ள வெட்டு குத்து நடக்குற யுத்த பூமி அது. விசுவாசம் பெருசுன்னு அண்ணி தாலிய அறுக்கிறதும், அண்ணன் தம்பி வம்சத்தை குடிசையோட கொளுத்தறதும் அடிக்கடி நடக்கும் பூமி. 

அட்சரம் படிக்க பள்ளிக்கூடம் போறதாவது பொட்டச்சிறுக்கின்னு ஒம்பது வயசுல கட்டிக் கொடுத்து முப்பத்தஞ்சு வயசுல போனதுக்கு கணக்கு தெரியாம, இருக்கிற ரெண்டு ஆம்பிளப் புள்ளையளையும், நாலு பொட்டப் புள்ளையளையும், அறுத்தவளா ஒத்தப் பொம்பளையா காடு கழனிய காப்பாத்தி, இதுங்களையும் கரை தேத்தி, ஊருக்கெல்லாம் நாயம் சொல்லுற மூத்த பையனை அவருடைய அறுபத்தைந்தாவது வயதில் 'ஒக்க பனி சரிக்கா செய்யடு. ஊரிகி ந்யாயம் செப்புதாடு, தொங்க சச்சினோடு’ (ஒரு வேலை ஒழுங்கா செய்யமாட்டான். ஊருக்கு நீதி சொல்லுவான், திருட்டு சாவுகிராக்கி) எனத் திட்டும் ஒருத்தியை காலம் எனக்குக் காட்டிக் கொடுத்தது. 

ஆச்சாரம் என்ற தன்னார்வச் சிறை, சிறை தாண்டிய மனிதம், கண்டிப்பு, பாசம் பாசம் என்று ரெக்கைக்குள் பொத்தி வளர்த்த தாய்ப்பறவை சுப்புப் பாட்டி. முதல் முறை பார்க்கப் போகிறேன். பெரியவர்களை பார்க்கப் போகையில் மாதுளம் பழம் கொண்டு போவது மரியாதை என்று எங்கோ படித்தது நினைவிருக்க, வழியில் சரியாக தள தளவென மாதுளம் பழம் விற்க இரண்டு பழம் கொண்டு போய் கையில் கொடுத்து நமஸ்கரித்தேன்.

ஒரு வார்த்தை கேட்டிருந்தால் தோப்பையே வாங்கிப் போடும் வசதியுள்ள மகன்களிடம்,  ‘சூடண்டரா! நாகு நா மனவடு தானிம பண்டு தெச்சினாடு. ஒக்க ரோஜு மீரு கொனிச்சினாருடா? சக்ககா உண்டு நாயனா’ (பாருங்கடா! எனக்கு என் பேரன் மாதுளம் பழம் வாங்கிக் கொண்டுவந்தான். ஒரு நாளாவது நீங்க வாங்கி கொடுத்தீங்களாடா? நன்றாயிரு அப்பா) என்று ஆசீர்வதித்தாள். 

ஐந்தடிக்குக் குள்ளமான உருவம், காவிக்கலர் முரட்டுத் துணியில் முக்காட்டுச் சீலை, வெறும் கையில் சோறு போட்டால் புள்ளைகளுக்காகாது என்ற சம்பிரதாயத்துக்கு காப்பு. பொக்கை வாய் நிறைய வாஞ்சையும் வசவும். நூத்திநாலு ஜூரமடித்தாலும், கருக்கலில் எழுந்து குளித்து அடுக்களை புகுபவள், மதிய உணவுண்டு மணையில் தலைசாய்க்கும் நேரம் மதியம் பன்னிரெண்டு.  பேரன் பெயர்த்திகளை ‘பப்பன்னம்’ (பருப்பு சாதம்) கொடுக்க ஆரம்பிக்கும் வரை தொட்டுக் கொஞ்சியவள், அதே வாஞ்சையுடன் எட்ட நின்று ( ‘மடுகு’-மடி) என்று ஒதுங்கி நின்று கொஞ்சும் மனசுக்காரி.

‘தேவுடு சல்லகா சூடனி’ (கடவுள் ஆதரவாயிருக்கட்டும்) என்ற சொல் தவிர வீட்டிலோ கோவிலென்றோ போய் பூஜை புனஸ்காரம் என்று பார்த்ததில்லை. கங்கேச யமுனேசைவ என்று கிணத்தடியில் நீரூற்றிக் கொள்கையில் முணு முணுக்கும் ஸ்லோகம் சமைக்கையில், ஒரேய்க்கும் ஒசேய்க்கும் (அடேய், அடியேய்) இடம் விட்டு விட்டு சாப்பிட உட்கார்ந்து கைகூப்பி முதலன்னம் ஒதுக்கும் வரை தொடரும்.

சின்ன மகன் வாங்கிய பழங்கால வீட்டை விரிவுபடுத்தும் பொறுப்பு கிழவி தலையில் விழுந்தபோதுதான் அவளை முதலில் பார்க்க நேர்ந்தது. பூமி பூஜைக்கும் கிரக ப்ரவேசத்துக்கும், நடுவில் ஒரு முறையுமான மூன்று நாட்களில் எத்தனை படித்தேன் அவளிடம். 

முதல் நாள் இரவு லாரியில் வந்திரங்கிய கொத்தாள் சித்தாளுக்கு முதல் வேலை, தெற்கு வடக்காய் ஒரு அளவான கூரையும், குறுக்காக ஒரு கனமான மூங்கில் கட்டையும் அமைப்பது. அது முடிந்தவுடன் தலமைக் கொத்தனாரிடம் சாப்பாட்டுக்கு பணம் கொடுத்து ‘எவரன்னா தாகி வச்சினாரோ சம்பி படேஸ்தான் ஜாக்ரதா!’ (யாராவது குடிச்சிட்டு வந்தீங்களோ கொன்னு போட்றுவேன் ஜாக்கிரதை) என்று அனுப்பியவளிடம் கேட்டேன், எதற்கு இந்தக் கூரை என்று. 

வேலை செய்ய வருபவர்கள் பாவம். கைக்குழந்தையோடு வருவார்கள். பாழப்போற ஊரில மரமில்லையேப்பா. வெய்யில்ல குழந்தைகள் அல்லாடுமே. அதுக்குதான் தெற்கு வடக்காக கூரை போட்டால், குழந்தையை தூளியில் வெயில் படாம விட்டு வேலை பார்க்க வசதியென்றாள். 

அடுத்த நாள் பூஜை. பாட்டியைக் காணோம். அடுக்களையில் ஒத்தை மனுஷியாய் விருந்து சமைக்கிறாள். பூஜைக்கு வரலையா என்றேன். அறுத்தவள் வரக்கூடாதுப்பா. எங்கே இருந்தால் என்ன? என் ஆசிகள் அவனுக்குத்தானே என்றவளிடம் வாதாட எனக்கு பயம். 

பூஜை ஒரு புறம் நடக்க, புறக்கடையில் ஒரு சித்தாள் பெண்ணை அழைத்து ஒரு அளவான அண்டா நிறைய கேப்பைக் கூழும், மோர் மிளகாய் ஒரு கூடையிலும் வைத்து ‘அந்தரு தீஸ்கோண்டி’ என்ற போது பெருமையாய் இருந்தது. ஒரு சில ரூபாய்த்தாள் கொடுத்து எங்கேயோ உண்ணச் சொல்லியிருக்கலாம். முப்பது பேருக்கு விருந்து சமைக்கும் வேளையில், வேலைக்கு வந்தவர்களுக்கு கூழ் காய்ச்சும் வேலை செய்யும் வயதில்லை அவளுக்கு.

பூஜை முடிந்து, விருந்து பரிமாற ஆரம்பித்ததும், அடுக்களை மூலையில் ஒரு தையல் இலையில் கைப்பிடி சாதம் உண்டதை பார்க்கையில் கண்கலங்கிப் போனது. சாப்பாடு முடிந்து மற்றவர்கள் தலை சாய்க்க, ஒரு தேர்ந்த சூபர்வைசராக கடைக்கால் தோண்டும் பணியை மேற்பார்வை பார்த்தபடி ஒரு சுற்று வந்தவள், சாப்பிட அழைத்தாள். 

பப்பன்னமும், பாயசமும் தாயாகச் சாப்பிடக் கொடுத்து சரியாக அரைமணியில்  ‘அன்னம் கடுப்புலோ படுதே ராஜுலைப் போதாரு தொங்க சச்சினோள்ளு! லேவண்ட்ரா! போள்ளந்த பனி பெட்டுகோனி நிதுர போய் சாவகண்டி’ ( சோறு வயத்தில விழுந்தா ராஜாவாயிடுவானுங்க திருடனுங்க. எழுந்திருங்கடா. எத்தனை வேலை இருக்க தூங்கி சாவாதீங்க) என்று வார்டனாய் மாறிய போது பிரமித்துப் போனேன். 

காலையில் நீராகாரமும், கேப்பைக் கூழும், களியும், நீர் மோரும் வேளா வேளைக்குத் தருவதும், எங்கோ நின்றபடி ‘ஒசேய் சொர்ணம்மா! நீ பிட்ட ஏடுபு மொதலு பெட்டமுந்து சமுதாய்ச்சுவே! கஃப்ஃபாலு கொட்டி சாவொத்து’(அடியே சொர்ணம்மா! உன் குழந்தை அழுமுன் பாலூட்டு! அரட்டை அடித்துக் கொண்டு சாவாதே) என்று அவள் தாய் பரிந்து சொல்லாத பாசத்துக்கு சொந்தக்காரி. 

தார் ட்ரம்முக்குள் ஒவ்வொரு செங்கலாய் முக்க வேண்டும், குமிழ் வருவது நிற்கும் வரை என்று பார்ப்பதும் (இல்லாட்டி சுவத்தில் விரிசல் விழும்), கலவை கணக்கு, பின்னொரு நாளில் மட்டப் பலகை பிடிக்கச் சொல்லி துடைப்பக் குச்சியை கேப்பில் சொருகி இழுத்து பூச்சு வேலைக்காரனுக்கு எச்சரிக்கை என்று ஒரு தேர்ந்த எஞ்சினியராக சுத்திச் சுத்தி வந்தாள். 

‘ஆதிவாரம் ஒக ரோஜு நேனு அன்னம் பெட்டனு நாயனா! டப்பு இச்சேஸ்தானு. எந்த மனம் பப்பன்னம் பெட்டினா, மாம்ஸம் தின்னேவாள்ளு. ஆ ஆச உண்டுந்தி காதா! ஹோட்டல்லோ ஏமன்ன திண்டாரு’ (ஞாயிறு ஒரு நாள் நான் சாப்பாடு போடமாட்டேனப்பா. காசு கொடுத்து விடுவேன். என்னதான் நாம பருப்பு சாதம் கொடுத்தாலும், மாமிசம் தின்பவர்களுக்கு அதன் மேல் ஆசையிருக்கும் இல்லையா? ஹோட்டலில் ஏதாவது சாப்பிடுவாங்க) என்றாள். 

கிரகப் ப்ரவேசம். பூஜைகள் முடிந்து, தலைமைக் கொத்தனாரை தம்பதி சகிதம் அழைத்து, வேட்டி புடவையுடன், ஒரு சின்னத் தங்கக் காசுடன் மரியாதை செய்து, இதையும் பிடுங்கிக் குடிக்காதே. பெண் வளர்ந்து வருகிறாள். சேர்த்து வைக்கப் பார் என்ற போது எங்களிடம் காட்டும் அதே வாஞ்சையும் கண்டிப்புமே தெரிந்தது. 

அவர்கள் கிளம்பிப் போக ஒவ்வொருவராய் ‘போயொஸ்தாமவ்வா’ கண்ணீருடன் சொன்னபோது சுருக்கம் விழுந்த முகத்தில் தன் சொந்தங்கள் பிரியும் இறுக்கம் மறைத்த புன்னகை. 

சில வருடங்கள் கழிய, சறுக்கி விழுந்து காலொடிந்த நிலையில் இறக்கையில் தன் ஊரில் தன் பெரிய மகன் வீட்டில் தான் சாவு என்ற பிடிவாதத்தில் அங்கு போனவள், சில நாட்களில் வைத்தியம் அனுபவித்தாள். 

அன்னமிட்டே பழகிய கை அன்னத்துக்கு நீளும் நிலை. ஒரு காலை வேளையில் ‘ ஒரேய் பில்லலக்கு, கடுப்பு தோ உன்ன வாள்ளக்கு அன்னம் பெட்டண்டரா’ (டேய், குழந்தைகளுக்கு, கர்ப்பிணிப் பெண்களுக்கு சாப்பாடு போட்டுவிடு) என்றவள், அவர்கள் சாப்பிடக் காத்திருந்தவள் போல் கண்மூடினாள். 

‘நுவ்வு தொரகா ஒக இல்லு சேஸ்கோ நான்னா. நேனு பக்கனுண்டி கட்டிபிஸ்தானு’ (நீயும் விரைவில் ஒரு வீடு கட்டிக்கோப்பா. நான் பக்கத்தில் இருந்து கட்டித் தருகிறேன்) என்றவளின் வரமேனோ எனக்குக் கிட்டாமலே போனது. 

நேசமும் நெருப்புமாய் இருந்தவளை நேசிக்க மட்டுமே முடிந்தது அந்த ரண பூமியிலும். ஆச்சாரங்கள் அவளுக்கு மட்டுமே சிறையாய் இருந்தன. அவள் மனிதத்துக்கல்ல. 


68 comments:

அன்புடன் நான் said...

அய்யா வணக்கம்....

vasu balaji said...

வணக்கம் கருணாகரசு:) நலமா?

பழமைபேசி said...

சதவண்டரா... அண்ணகாரு எந்த்த மஞ்ச்சிக செப்பேரு...சதவண்டரா....

அன்புடன் நான் said...

நலமே...
வாழ்வில் இவர்கள் உயிர் பாடம்.
நாம் கற்றுகொள்ள வேண்டும்.
ஒற்றை உயிரில் எத்தனை பரிணாமங்கள்......

திருவேங்கடம் போல
சுப்புப் பாட்டி போல
வியப்பதற்கு... இன்னும் எத்தனை உயிர் பாடங்களே?

பகிர்வுக்கு நன்றிங்கைய்யா.

பழமைபேசி said...

//நறுக்குன்னு நாலு வார்த்த //

இந்த “நறுக்”ன்னு நாலு வார்த்த என்ன ஆச்சுங்க பாலாண்ணே??

Starjan (ஸ்டார்ஜன்) said...

மூணாவது வணக்கம்.

*இயற்கை ராஜி* said...

இது போன்ற பெரியவர்களுடன் வாழும் வாழ்வுதான் வரும் தலைமுறை இழக்கப் போகும் மிகப் பெரிய சொத்து

க ரா said...

நெகிழ்வான எழுத்து சார். ரொம்ப நன்றி ஒங்களுக்கு.

Ramesh said...

எழுத்துக்களாலே நீங்கள்... வருகையை உறுதிப்படுத்திட்டன்

பின்னோக்கி said...

சுப்புப் பாட்டி சூப்பரு

பத்மா said...

அருமையான characterisation .. சில இடங்களில் கண்கள் குளமாகிறது.
well done sir

பா.ராஜாராம் said...

என்ன பாலாண்ணா... இந்தா கொல்லு கொல்லுறீங்க.

அபாரம் அண்ணா!

சிநேகிதன் அக்பர் said...

தரமான ஆட்களை பற்றி தரமான எழுத்தில்!

நல்லாயிருக்கு ஐயா.

nellai அண்ணாச்சி said...

எங்க ஆச்சி ஞாபகம்

dheva said...

பாலாண்ணே......படிச்சு முடிச்சிட்டேன்....சுப்பு பாட்டி மனச விட்டு போகாம மனசிலேயே உக்காந்திருக்கு பாலாண்ணே.....! அற்புதமான கேரக்டர் அறிமுகம் அண்ணா....!

Chitra said...

நேசமும் நெருப்புமாய் இருந்தவளை நேசிக்க மட்டுமே முடிந்தது அந்த ரண பூமியிலும். ஆச்சாரங்கள் அவளுக்கு மட்டுமே சிறையாய் இருந்தன. அவள் மனிதத்துக்கல்ல.

.... நேர்த்தியாக சொல்லி இருக்கிறீங்க..... மனதில் ஒட்டி கொண்டு விட்ட பாட்டி.

Santhappanசாந்தப்பன் said...

நெகிழ்வு

செ.சரவணக்குமார் said...

பாட்டி மனசுல நிக்கிறாங்க பாலா சார்.

திருவேங்கடம் பதிவுல நம்ம பா.ரா சொன்ன மாதிரி கேரக்டர் தொகுப்பாகணும் சார்.

நேசமித்ரன் said...

சார் தொகுப்பு ஒரு பக்கம் இருக்கட்டும்.
ஏன் எல்லா கேரக்டரையும் சேர்த்து ஒரு நாவலாக்கக் கூடாது ???

சிலாகிப்புக்காக இல்லை கேள்வியின் அழுத்தம் உங்களுக்குப் புரியும் என்று நினைக்கிறேன்

தாராபுரத்தான் said...

வணக்கமுங்க..

Mahi_Granny said...

படித்து முடித்த பின் பேச்சு வரவில்லை. சுப்புபாட்டி கூழ் காய்ச்சுவது கண் முன்னே தெரிகிறது போல் இருக்கு. அருமைங்க .

புலவன் புலிகேசி said...

:))

நாடோடி said...

கேர‌க்ட‌ரின் மொழி ந‌டையில்(தெலுங்கு) அருமை... ந‌ல்லா இருக்கு சார்..

மணிஜி said...

:)):))

ஆடுமாடு said...

நல்லா எழுதியிருக்கீங்க ஐயா

கலகலப்ரியா said...

ஆகா... இவங்கள பத்தி இன்னும் ரொம்ப எழுதி இருக்கலாமே...

ம்ம்.. எழுதின வரைக்கும் ஆரம்பத்தில இருந்து... சாலா பாகுந்தி...

க.பாலாசி said...

அடப்போங்க... என்னச்சொல்றதுன்னே தெரியல..

ஸ்ரீராம். said...

நெகிழ்ச்சியாய் சொல்லியிருக்கிறீர்கள். அருமை. இவை எல்லாம் கற்பனையில் வருவதா, வாழ்வில் பார்த்தவையா...?

சென்னை பித்தன் said...

ஜெயகாந்தனின் கௌரிப்பாட்டியை(யுகசந்தி) நினைவு படுத்தி விட்டாள் இந்தச் சுப்புப் பாட்டி.அருமை.

Paleo God said...

ஆமாங்க சார். அசை போட கண்டிப்பாய் ஒரு முழு தொகுப்பு வேண்டும்!

தொடருங்கள்..

VELU.G said...

SUPER சுப்பு பாட்டி

அருமை

ராஜ நடராஜன் said...

"‘போயொஸ்தாமவ்வா’"

மஞ்ச்சி மாட்ல செப்பேரண்டி!

vasu balaji said...

பழமைபேசி said...

/சதவண்டரா... அண்ணகாரு எந்த்த மஞ்ச்சிக செப்பேரு...சதவண்டரா....//

க்ருதக்ஞதலண்டி!

vasu balaji said...

சி. கருணாகரசு said...
நலமே...
வாழ்வில் இவர்கள் உயிர் பாடம்.
நாம் கற்றுகொள்ள வேண்டும்.
ஒற்றை உயிரில் எத்தனை பரிணாமங்கள்......

திருவேங்கடம் போல
சுப்புப் பாட்டி போல
வியப்பதற்கு... இன்னும் எத்தனை உயிர் பாடங்களே?

பகிர்வுக்கு நன்றிங்கைய்யா.//

நன்றிங்க கருணாகரசு

vasu balaji said...

பழமைபேசி said...

//நறுக்குன்னு நாலு வார்த்த //

இந்த “நறுக்”ன்னு நாலு வார்த்த என்ன ஆச்சுங்க பாலாண்ணே??//

“நறுக்”னு கேக்க வந்து “நறுக்”னு நாக்க கடிச்சிட்டு சும்மா இருக்கிறனுங்க. பார்க்கலாம்.:)

vasu balaji said...

வணக்கம் ஸ்டார்ஜன்:)

vasu balaji said...

*இயற்கை ராஜி* said...
இது போன்ற பெரியவர்களுடன் வாழும் வாழ்வுதான் வரும் தலைமுறை இழக்கப் போகும் மிகப் பெரிய சொத்து//

ஆமாங்க.

vasu balaji said...

இராமசாமி கண்ணண் said...

//நெகிழ்வான எழுத்து சார். ரொம்ப நன்றி ஒங்களுக்கு.//

நன்றிங்க:)

vasu balaji said...

றமேஸ்-Ramesh said...

எழுத்துக்களாலே நீங்கள்... வருகையை உறுதிப்படுத்திட்டன்//

:). நன்றி றமேஸ்

vasu balaji said...

@@நன்றிங்க பின்னோக்கி
@@நன்றிங்க பத்மா
@@நன்றிங்க ஆறுமுகம் முருகேசன்.

vasu balaji said...

பா.ராஜாராம் said...

என்ன பாலாண்ணா... இந்தா கொல்லு கொல்லுறீங்க.

அபாரம் அண்ணா!//

நன்றி பா.ரா.:)

vasu balaji said...

அக்பர் said...
தரமான ஆட்களை பற்றி தரமான எழுத்தில்!

நல்லாயிருக்கு ஐயா.//

நன்றிங்க அக்பர்.

vasu balaji said...

nellai அண்ணாச்சி said...

//எங்க ஆச்சி ஞாபகம்//

அப்படிங்களா. ரொம்ப சந்தோஷம்.நன்றிங்க.

vasu balaji said...

dheva said...
பாலாண்ணே......படிச்சு முடிச்சிட்டேன்....சுப்பு பாட்டி மனச விட்டு போகாம மனசிலேயே உக்காந்திருக்கு பாலாண்ணே.....! அற்புதமான கேரக்டர் அறிமுகம் அண்ணா....!//

நன்றி தேவா. அப்படி மனுஷி அவள்.:)

vasu balaji said...

@@நன்றிங்க சித்ரா
@@நன்றிங்க சாந்தப்பன்.

vasu balaji said...

செ.சரவணக்குமார் said...

பாட்டி மனசுல நிக்கிறாங்க பாலா சார்.

திருவேங்கடம் பதிவுல நம்ம பா.ரா சொன்ன மாதிரி கேரக்டர் தொகுப்பாகணும் சார்.//

கூடி வந்தா பண்ணுவோம் சரவணா:)

vasu balaji said...

நேசமித்ரன் said...

//சார் தொகுப்பு ஒரு பக்கம் இருக்கட்டும்.
ஏன் எல்லா கேரக்டரையும் சேர்த்து ஒரு நாவலாக்கக் கூடாது ???

சிலாகிப்புக்காக இல்லை கேள்வியின் அழுத்தம் உங்களுக்குப் புரியும் என்று நினைக்கிறேன்//

புரியறதுங்க. ஆனா எவ்வளவு நேர்த்தி வேணும். திகைப்பாயிருக்கு நினைக்கவே:)

vasu balaji said...

@@அண்ணே வணக்கம்
@@நன்றிங்க மஹி க்ரேன்னி
@@நன்றிங்க நாடோடி
@@நன்றிங்க ஆடுமாடு

vasu balaji said...

@@நன்றி புலிகேசி
@@நன்றி மணிஜி

என்னா அப்படி சிரிக்கிறீங்க?

vasu balaji said...

கலகலப்ரியா said...

//ஆகா... இவங்கள பத்தி இன்னும் ரொம்ப எழுதி இருக்கலாமே... //

ஒரு குறுநாவலாயிடுமே:)

//ம்ம்.. எழுதின வரைக்கும் ஆரம்பத்தில இருந்து... சாலா பாகுந்தி...//

ச்சால சந்தோஷமம்மா. அந்த நச்சிந்தா தல்லி?

vasu balaji said...

க.பாலாசி said...

/அடப்போங்க... என்னச்சொல்றதுன்னே தெரியல../

ம்ம்

vasu balaji said...

சென்னை பித்தன் said...
ஜெயகாந்தனின் கௌரிப்பாட்டியை(யுகசந்தி) நினைவு படுத்தி விட்டாள் இந்தச் சுப்புப் பாட்டி.அருமை.//

நன்றிங்க சென்னைப் பித்தன் முதல் வரவுக்கும் பின்னூட்டத்திற்கும்.

vasu balaji said...

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...
ஆமாங்க சார். அசை போட கண்டிப்பாய் ஒரு முழு தொகுப்பு வேண்டும்!

தொடருங்கள்..//

பார்க்கலாம் ஷங்கர். நன்றி

vasu balaji said...

நன்றிங்க வேலு.

vasu balaji said...

ராஜ நடராஜன் said...

"‘போயொஸ்தாமவ்வா’"

மஞ்ச்சி மாட்ல செப்பேரண்டி!//

ஏமன்னய்யா! எகதாலி சேஸ்துன்னட்டுந்தி:). நிஜங்க பாகுந்தா?

vasu balaji said...

/ஸ்ரீராம். said...

நெகிழ்ச்சியாய் சொல்லியிருக்கிறீர்கள். அருமை. இவை எல்லாம் கற்பனையில் வருவதா, வாழ்வில் பார்த்தவையா...?/

நான் சந்தித்த மனிதர்கள், உறவுகள், நட்புகள். எதுவும் கற்பனையில்லை ஸ்ரீராம்.

பனித்துளி சங்கர் said...

ஒவ்வொரு பதிவிலும் இடத்திற்கு தகுந்தாற்போல் வார்த்தைகளை தொடுக்கும் விதம் என்னை மிகவும் ரசிக்க வைக்கிறது . மிகவும் அருமை .

////////////பெரியவர்களை பார்க்கப் போகையில் மாதுளம் பழம் கொண்டு போவது மரியாதை என்று எங்கோ படித்தது நினைவிருக்க, ///////

அய்யா இதுவரை நான் இப்படி ஒரு மேட்டரைக் கேள்விப்பட்டதே இல்லை இது உண்மைதானா ?

ஈரோடு கதிர் said...

நாம பேசின மேட்டர

நிறையப் பேர் சொல்லிட்டாங்க

ஒழுங்கா அதுல கவனம் செலுத்துங்க... இல்லாட்டி டமால் டுமீல் தான்

காமராஜ் said...

பாலாண்ணா தினுசு தினுசா அசத்துறீங்க.
இதுல ரெண்டு உபயோகம் ஒன்னு மனசு ஒன்றி கேரக்டர்.அத்தோடு மொழிப்பரிச்சயம்.

நல்லாருக்குங்கண்ணா.

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

அந்த சுப்புப் பாட்டி கேரக்டர் போர்ட்ரெய்ட்
சூப்பர்! பாட்டி ஒரு எழுதாத சித்திரம் போல் மனதில் தங்கக் காரணம்-தங்களின் எழுத்தின் வீச்சு!!

vasu balaji said...

!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...
ஒவ்வொரு பதிவிலும் இடத்திற்கு தகுந்தாற்போல் வார்த்தைகளை தொடுக்கும் விதம் என்னை மிகவும் ரசிக்க வைக்கிறது . மிகவும் அருமை .

////////////பெரியவர்களை பார்க்கப் போகையில் மாதுளம் பழம் கொண்டு போவது மரியாதை என்று எங்கோ படித்தது நினைவிருக்க, ///////

அய்யா இதுவரை நான் இப்படி ஒரு மேட்டரைக் கேள்விப்பட்டதே இல்லை இது உண்மைதானா ?//

ஆமாங்க. பரீட்சித்து மஹாராஜா கதையில வருமே. எலுமிச்சம்பழம் கொண்டு தந்தது.

vasu balaji said...

ஈரோடு கதிர் said...

நாம பேசின மேட்டர

நிறையப் பேர் சொல்லிட்டாங்க

ஒழுங்கா அதுல கவனம் செலுத்துங்க... இல்லாட்டி டமால் டுமீல் தான்//

ம்ம்

vasu balaji said...

காமராஜ் said...

பாலாண்ணா தினுசு தினுசா அசத்துறீங்க.
இதுல ரெண்டு உபயோகம் ஒன்னு மனசு ஒன்றி கேரக்டர்.அத்தோடு மொழிப்பரிச்சயம்.

நல்லாருக்குங்கண்ணா.//


நன்றிங்க காமராஜ்

vasu balaji said...

ஆரண்யநிவாஸ் ஆர் ராமமூர்த்தி said...

அந்த சுப்புப் பாட்டி கேரக்டர் போர்ட்ரெய்ட்
சூப்பர்! பாட்டி ஒரு எழுதாத சித்திரம் போல் மனதில் தங்கக் காரணம்-தங்களின் எழுத்தின் வீச்சு!!//

மிக்க நன்றிங்க வரவுக்கும் பின்னூட்டத்திற்கும்.

"உழவன்" "Uzhavan" said...

நெகிழ்வான பதிவு..
 
பனையோலைச் சத்தம் கேக்கும்போது
பதநீ குடிச்ச ஞாபகம்
சுடுகாடு வரும்போது
சுருக்குப்பை காசு தந்த
சுப்பம்மா பாட்டி ஞாபகம்
 
என ஏற்கனவே எழுதியிருக்கிறேன் :-)

vasu balaji said...

நன்றிங்க உழவன்

அப்பாதுரை said...

wow!

ரிஷபன் said...

ஆஹா.. சுப்புப் பாட்டி மனசில் நிற்கிறார் இப்போது. அருமையான கேரக்டர்.