Thursday, June 24, 2010

சாதல்



போதையை முன்னிறுத்தி...

கூலி வாங்கினான்
தண்ணியடித்தான்

அடமானம் வைத்தான்
ஆஸ்தியை விற்றான்

கம்பெனி கொடுத்தவனிடமும்
கடன் வாங்கிக் குடித்தான்

பூசாரிக்கு எடுபிடியாகி
சரக்கு பிரித்து அடித்தான்

ஏறவில்லை என சபித்தான்
திருடனென்று தூற்றினான்

குவார்ட்டர் குவார்டராய் ஊற்றிக் கொண்டான்
குப்புறப் படுத்து உருண்டான்

வேண்டுதலுக்கு சேர்த்த
உண்டியல் உடைத்தும் குடித்தான்

கடைசியாக...

கூரை வீட்டின் முன்
கட்டிய பந்தலின் கீழ்
காலி போத்தல்கள் நடுவே
கட்டையாகக் கிடந்தான்.
***
எதிரெதிர் இங்கே..

46 comments:

சூர்யா ௧ண்ணன் said...

சபாஷ்! சரியான போட்டி!..

சூர்யா ௧ண்ணன் said...

ஊறுகாய் தின்றான்
உளறி தீர்த்தான்..

க‌ரிச‌ல்கார‌ன் said...

ச‌பாஷ் ச‌ரியான‌ போட்டி

கலகலப்ரியா said...

ஆ... சாவடிச்சிட்டீங்க சார்..

அசல்க் கவுஜ போட்டவரு ஆள் எஸ்கேப்பா...

கலகலப்ரியா said...

||சூர்யா ௧ண்ணன் said...

ஊறுகாய் தின்றான்
உளறி தீர்த்தான்..||

சூர்யா என்ன கவுஜ கவுஜயாக் கொட்டுதா... அப்டியே துறுத்தல்ல ஒரு எதிரெதெரெதிர்க்கவுஜ போடறதுதானே..

க‌ரிச‌ல்கார‌ன் said...

//ஏறவில்லை என சபித்தான்
திருடனென்று தூற்றினான்//

இங்கேயும் த‌லைவ‌ருக்குத் திட்டா????????

(ஏதோ என்னால‌ முடிஞ்ச‌து)

vasu balaji said...

கலகலப்ரியா said...

//ஆ... சாவடிச்சிட்டீங்க சார்..

அசல்க் கவுஜ போட்டவரு ஆள் எஸ்கேப்பா...//

அசல்க் கவுஜ போட்டவரு செந்தமிழ் மாநாட்டுல பேச போயிட்டாரு:))

Ashok D said...

:)

க.பாலாசி said...

ஒரு பச்சக்கொழந்தையப்போட்டு இந்தளவுக்கா அடிக்கறது...

//காலி போத்தல்கள் நடுவே
கட்டையாகக் கிடந்தான்.//

இம்புட்டும் உள்ளப்போனப்பெறவு என்னாத்துக்கு ஆவும் அந்த கட்ட...

Jey said...

என்ன சார் , இப்போதான் காதல்-னு ஒரு அம்மணி எழுதுன கஜய படிச்சேன், உங்க வூட்டுக்கு வந்தா சாதல்-னு ஒரு கவுஜய எழுதிரிக்கீங்க, இன்னா சார் நடக்குது இங்க, என்னவோ போ சார், நீ நம்ம சாதின்ரதால(ஆண் சாதி) ஒனக்குதான் சார் என் சப்போர்ட்டு.

Paleo God said...

http://palaapattarai.blogspot.com/2010/06/blog-post_24.html

ஒரு முட்டுக்கொடுக்கலாம்னு! :))

க ரா said...

அசத்தல்.

பழமைபேசி said...

தாவல்


http://maniyinpakkam.blogspot.com/2010/06/blog-post_23.html

அன்புடன் நான் said...

செம போதைங்கைய்யா!

ராஜ நடராஜன் said...

மேடைல இருக்குறவங்களையெல்லாம் வம்புக்கு இழுத்துகிட்டு.

VELU.G said...

ஆஹா கிளம்பிட்டாங்கய்யா... கிளம்பிட்டாங்க..

ஜெட்லி... said...

நாவல்...னு ஆரம்பிக்கலாம்னு இருக்கேன்....
ஆனா எங்க பக்கத்துக்கு வுட்டு ஆயா என்கிட்ட கவிதை
எழுத கூடாது சத்தியம் வாங்கி இருக்காங்க...அதான்
யோசிக்கிறேன்.....

dheva said...

ஹா...ஹா...ஹா....ஹா..அருமை...அருமை...! ஆக மொத்ததுல கவுஜ எழுதக் கூடாது ..எழுதினாலும் ரோசனை பண்ணி...எழுதணும் போலயே...

சரி பைனலா இருக்கானா...இல்ல போய்சேந்துட்டான...அதுக்குன்னு இப்படியா மொடா குடி குடிக்கிறது.....!

*இயற்கை ராஜி* said...

kalakareenga sir

*இயற்கை ராஜி* said...

@ ஈரோடு கதிர் naan podamateneee...:-)

நசரேயன் said...

சரக்கு அடிக்க ஆசையே விட்டுப் போச்சி

புலவன் புலிகேசி said...

எதிர் கவுஜ எழுதறதுல நீங்கதான் கிங்.

Chitra said...

சூர்யா ௧ண்ணன் said...

சபாஷ்! சரியான போட்டி!..


....... REPEATTU!

பிரேமா மகள் said...

கொலை வெறிக்கு அர்த்தம் என்ன?

Kumky said...

ஈரோடு கதிர் said...

அடச்சீ.... வெறும் அஞ்சு பேர்தானா!!! நம்ம வொர்த் அம்புட்டுதானா!!!!???

அடங்கவே மாட்டீங்களா சாமீ...

இதுல ஆதங்கம் வேற....

ஆறகளூர் பொன்.வெங்கடேசன் said...

எங்கும் ஒரே தண்ணீர் தேசம்...?

Jey said...

சார் எனக்கு கவுஜ பிரியலனாலும், விடாம உங்க கடையில வந்து கத்துகிட்டு இருக்கேன், கவுஜ எழுதுறதுக்கு ஏதாவது சார்ட் கட் மெத்தெட் இருக்கு?.
( முதல் பதி போட்டிருக்கென் வந்து படித்து அறிவுரை சொல்லவும்)

கமலேஷ் said...

மிகவும் நன்றாக இருக்கிறது நண்பரே..

வாழ்த்துக்கள்...

பனித்துளி சங்கர் said...

//////குவார்ட்டர் குவார்டராய் ஊற்றிக் கொண்டான்
குப்புறப் படுத்து உருண்டான்
///////

பாவம் அவர்கள் இதற்குத்தான் குடிகாரர்கள் குழந்தை என்று ஒரு கவிஞன் சொன்னானோ !

vasu balaji said...

@@நன்றி சூர்யா
@@நன்றி கரிசல்காரன்

vasu balaji said...

கலகலப்ரியா said...
||சூர்யா ௧ண்ணன் said...

ஊறுகாய் தின்றான்
உளறி தீர்த்தான்..||

சூர்யா என்ன கவுஜ கவுஜயாக் கொட்டுதா... அப்டியே துறுத்தல்ல ஒரு எதிரெதெரெதிர்க்கவுஜ போடறதுதானே..//

ஆஹா! போட்டுட்டாரே. :))

vasu balaji said...

@@நன்றி அசோக்
@@சூப்பர்! நன்றி ஷங்கர்
@@நன்றி இராமசாமி கண்ணன்
@@நன்றிங்க பழமை. அதான் எதிரெதிர் சுட்டி
@@நன்றி கருணாகரசு
@@நன்றிங்க வலையகம்
@@நன்றிங்க வேலு:))

vasu balaji said...

க.பாலாசி said...

//ஒரு பச்சக்கொழந்தையப்போட்டு இந்தளவுக்கா அடிக்கறது... //

ம்கும். அவரு! பச்சப் புள்ள

//காலி போத்தல்கள் நடுவே
கட்டையாகக் கிடந்தான்.//

இம்புட்டும் உள்ளப்போனப்பெறவு என்னாத்துக்கு ஆவும் அந்த கட்ட...//

போய் சேர வேண்டியதுதான்:))

vasu balaji said...

ராஜ நடராஜன் said...


//மேடைல இருக்குறவங்களையெல்லாம் வம்புக்கு இழுத்துகிட்டு.//

பின்ன:))

vasu balaji said...

ஜெட்லி said...
நாவல்...னு ஆரம்பிக்கலாம்னு இருக்கேன்....
ஆனா எங்க பக்கத்துக்கு வுட்டு ஆயா என்கிட்ட கவிதை
எழுத கூடாது சத்தியம் வாங்கி இருக்காங்க...அதான்
யோசிக்கிறேன்.....//

ப்ரியா சொன்ன பதிலுக்கு ரிப்பீட்டிக்கறேன்.

vasu balaji said...

dheva said...
ஹா...ஹா...ஹா....ஹா..அருமை...அருமை...! ஆக மொத்ததுல கவுஜ எழுதக் கூடாது ..எழுதினாலும் ரோசனை பண்ணி...எழுதணும் போலயே...//

என்ன எழுதினாலும் எதிர் போடுவோமில்ல:))

சரி பைனலா இருக்கானா...இல்ல போய்சேந்துட்டான...அதுக்குன்னு இப்படியா மொடா குடி குடிக்கிறது.....!//

சங்குதான்:))

vasu balaji said...

ஈரோடு கதிர் said...

//அடச்சீ.... வெறும் அஞ்சு பேர்தானா!!! நம்ம வொர்த் அம்புட்டுதானா!!!!???//

டாப்பிக்கு அப்புடி. சாமி கண்ண குத்திரும்னு பயந்திருப்பாங்க:))

vasu balaji said...

@@நன்றிங்க இராஜி
@@நன்றி புலிகேசி
@@நன்றிங்க சித்ரா
@@இதாங்க ப்ரேமா மகள்:)
@@நன்றிங்க தமிழ் வெங்கட்
@@நன்றிங்க கமலேஷ்
@@நன்றிங்க பனித்துளி சங்கர்.

vasu balaji said...

கும்க்கி said...



//ஈரோடு கதிர் said...

அடச்சீ.... வெறும் அஞ்சு பேர்தானா!!! நம்ம வொர்த் அம்புட்டுதானா!!!!???

அடங்கவே மாட்டீங்களா சாமீ...

இதுல ஆதங்கம் வேற....//

பாருங்க என்னா லொள்ளு மனுசனுக்கு. நன்றிங்க கும்க்கி

AkashSankar said...

அருமையான கவிதை...வாழ்த்துக்கள்...

priyamudanprabu said...

என்ன சார்??
ஏன் இப்படி??

எதிர் எதிர்??

priyamudanprabu said...

என்ன சார்??
ஏன் இப்படி??

எதிர் எதிர்??

priyamudanprabu said...

நல்லாத்தான் இருக்கு நடத்துங்க

அது சரி(18185106603874041862) said...

பாலாவின் குடிவெறிக் கவிதைகள்னு ஒரு புத்தகம் கொண்டு வரலாம்
போலருக்கே :)))

//
குவார்ட்டர் குவார்டராய் ஊற்றிக் கொண்டான்
குப்புறப் படுத்து உருண்டான்
//

:)))
குடிக்கிறதுக்கு புதுசோ? ஆரம்பத்தில அப்படித் தான் இருக்கும்..ஒண்ணும் பயந்து போக வேணாம்..பின்னாடி எல்லாம் சரியாயிடும்னு சொல்லுங்க.

vasu balaji said...

@@நன்றிங்க ராஜ ராஜ சோழன்
@@நன்றி பிரபு. நட்பாகத்தான்:)

vasu balaji said...

// அது சரி said...


பாலாவின் குடிவெறிக் கவிதைகள்னு ஒரு புத்தகம் கொண்டு வரலாம்
போலருக்கே :)))//

வாங்க சார். எதிர் கவுஜன்னா தண்ணியிருக்கணுமாமே. தலைவர் பிள்ளையைக் கொஞ்சிட்டு பிஸியா இருக்காரு. அதான்:)

//
குவார்ட்டர் குவார்டராய் ஊற்றிக் கொண்டான்
குப்புறப் படுத்து உருண்டான்
//

:)))
குடிக்கிறதுக்கு புதுசோ? ஆரம்பத்தில அப்படித் தான் இருக்கும்..ஒண்ணும் பயந்து போக வேணாம்..பின்னாடி எல்லாம் சரியாயிடும்னு சொல்லுங்க.//

நல்லா குடுக்குறாய்ங்கப்பா அட்வைஸூ:o))