Thursday, June 10, 2010

பஞ்சரா ஹில்ஸ் ப்ரேமா..

(அல்லோ! அண்ணாச்சி! ச்ச்சும்மா எழுதறேன்னு சவுண்ட் விடுறதும், அப்புறம் எழுதிட்டேன்னு இடுகை போடாம இருக்கறதும் இல்ல. தட்டச்சினமா, இடுகை போட்டமாதான்..எப்புடீ)

சுந்தரி டாட்டா காட்டிட்டு போன பெறவு கைக்கான் குப்பம் நரகமாகி போனது. ஒரு சனிக்கிழமை காலை பதினோரு மணிக்கு எழுந்து, பல் விளக்கினதும் பசி எடுக்க ஆரம்பித்தது. கையில் சல்லி காசு இல்லாட்டியும், நண்பனை மதியம் பன்னிரண்டரை மணிக்கு நகராட்சி பூங்காவில் சந்திக்கிறதா சொல்லி இருந்தேன். இருந்ததில் நல்ல உடும்பா பார்த்து போட்டுகிட்டு நடையை கட்டினேன். 

வழியில் ஒரு கட்டிடத்துல கார் நிறுத்துற இடத்துல சாமியானா போட்டு இருந்தாங்க. ஆணும் பெண்ணுமா இளைஞர்கள் வரிசையில நின்னு இருந்தாங்க. மோர் பந்தல் வச்சி இருக்காங்க, ரெண்டு மோர் அடிச்சிட்டு போகலாம். வெட்டியா அலையாம, இங்க துண்டு போட்டாமாதிரியும் ஆச்சின்னு நானும் நின்னேன்.

அதுக்குள்ள ஒரு கலர் குடைய விரிச்சி, அதி கீழ ஒரு மேசைய போட்டு வாங்க வாங்கன்னு கைய காட்டினாங்க. நான் ஓடி போய் முதல் ஆளா நின்னேன். மோர் பானை இன்னும் வரலைன்னு பார்த்து கொண்டு இருக்க ஒரு கார் வந்து நின்றது. அதில இருந்து ஒரு வெள்ளைச்சாமி இறங்கினான். இறங்கினவன் கார் கதவை திறந்து ஏதோ பேச, ஒரு அழகான வெள்ளச்சி இறங்கினாங்க. அவங்க பேசிக்கிட்டே கார் கதவை விட அது மூடும் போது வெள்ளச்சியோட கவுன் சிக்கிக்கிட்டது.

காரை எடுத்தா வெள்ளச்சி உசிருக்கு ஆபத்துன்னு பதறினாலும், வரிசையை விட்டு போனா மோர் கிடைக்காது என்ற பயமும் இருந்தது. அப்போதான் மேசையில ஒரு ஆள் வந்து உக்காந்து ஆங்கிலத்தில என்னமோ கேட்டான். என் கவனமெல்லாம் எங்க வெள்ளச்சிக்கு அடி படுமோ என்று இருந்ததால நான் கவுனு என்றேன். அவன்  “மனவாடா”  என்றான். திரும்பவும் கவுனு என்றேன். அப்புறம் அவன் ஏதோ மொழியில கேட்க கேட்க நான் கவுனு என்றே சொல்லிக் கொண்டிருந்தேன்.

திடீரென காரோட்டி காரைக் கிளப்பவும் ஒரு அழகான பெண்ணுக்கு அடிபடுவதை தடுப்பதைவிட மோர் முக்கியமில்லை என்று ஒரே பாய்ச்சலில் போய் காரைத்தட்டி  ‘கவுனு’  என்று காட்டினேன். வெள்ளச்சாமி ‘ஓ மை காட்’ என்ரு இதான் சாக்கு என்று நொங்கு தின்ன பார்த்தான். அந்த பெண் என்னைக் காட்டி ஏதோ ஆங்கிலத்தில் சொல்லிவிட்டு அழகாக புன்னகைத்து விட்டு காரில் ஏறிவிட்டாள்.

பிறகுதான் தெரிந்தது அது ஒரு ஆந்திர சாஃப்ட்வேர் கம்பெனி என்பதும், அதற்கு ஆளெடுக்கிறார்கள் என்பதும், என்னை நேர்முகம் செய்தவன் கொல்டி என்பதும். நான் அவன் கேட்ட போதெல்லாம் கவுனு என்று சென்னதை அவன் அவுனு (ஆமாம்) என்று நினைத்து கொண்டு, கணினியில் எத்தனை மொழி உண்டோ எல்லாம் எனக்கு தெரியும் என்று நினைத்திருக்கிறான்.

வெள்ளைச்சாமி எனக்கு வேலை கொடுக்க முடியுமா என அவனை கூப்பிட்டு கேட்க அவன் இவனுக்கு எல்லா கணினி மொழியும் தெரியுமாம் என்று சொல்லி இருக்கிறான். எப்படியோ எனக்கு டேமேஜர் வேலை கொடுத்து ஐதராபாத் போக சொல்லிவிட்டார்கள். 

நண்பன் உனக்கு தமிழே வராது இதில கணினி மொழின்னு வேற சொல்லி இருக்க. எப்படி சமாளிக்க போகிறாய் என்றான். டேமேஜேர்தானே. மேய்க்கிற வேலை நமக்கு தெரியாதா என்று சொல்லிவிட்டு ஐதராபாத் வந்தேன். 

மின் தூக்கிக்காக காத்திருந்த போதுதான் அவளைப் பார்த்தேன். பக்கத்து மின் தூக்கி வரிசையில் அவள் நின்றிருந்தாள். மஞ்சள் நிற சூடிதார், ஊதா நிறா துப்பட்ட, பச்சை நிறத்தில் செருப்பு, ரோஸ் பவுடர் போட்டிருந்தாள். ஆரஞ்சு வண்ண நகப்பூச்சும், பஞ்சு மிட்டாய் உதட்டுச் சாயமும் போட்டு, ஒரு வெள்லை ரோஜா காதோரம் வைத்திருந்தாள். பார்த்ததும், ரயில் நிலைய வாசல் போஸ்டரில் பார்த்த தெலுங்கு பட கதாநாயகி கவனம் வந்தது. என் சட்டைப்பையில் இருந்த கைக்குட்டை, துண்டாய் மாறவா என்றது.

அதற்குள் பின்னால் இருந்தவன் “போரா” என்றான். நான் இல்லை இருக்கா என்றேன். திரும்பவும் “போரா” என்றான். எங்கே என் ஆளை இவன் துண்டு போடுவானோ என்று கண்டிக்க திரும்புகையில் அவள் மின் தூக்கியும் வர அவள் உள்ளே நுழைந்தாள். அப்போதுதான் தெரிந்தது. என் மின் தூக்கி வந்தும் நான் உள்ளே போகாததால் அவன் கோபத்தில் என்னை போரா(போடா) என்று தெலுங்கில் சொல்லியிருக்கிறான். 

ஆறாவது மாடியில் இறங்கி அவசரமாய் வெளியே வர அவளும் இறங்கியிருந்தாள். எப்படியோ என் அதிர்ஷ்டம் நான் டேமேஜராகவும், அவள் என் குழு தலைவியாகவும் அமைந்தது. மதியம் அகோரப் பசியுடன் அலுவலக கேண்டீனுக்குப் போனபோது அவளும் வந்திருந்தாள். சரியாக இரண்டே இருக்கைகள் எதிர் எதிரில் காலியாக இருந்தன. 

நான் கை காட்ட அவளும் நாணத்துடன் சிரித்துக் கொண்டே அங்கு அமர்ந்தாள். நான் எதிரில் அமர்ந்தேன். இருவரும் சூப்பும், சாப்பாடும் ஆர்டர் செய்ய பரிமாறுபவர் ஒரு கிண்ணத்தை என் முன் வைத்தார். எடுத்து சர்ரென்று உரிந்த பிறகுதான் தெரிந்தது அது சூப் இல்லை. படு காரமான ஆந்திரா ஆவக்காய் ஊறுகாய்.

ஒரு புறம் ஒரு வருசத்து சைட் டிஷ்ஷை ஒரே மூச்சில் காலியாக்கிவிட்ட வருத்தமிருந்தாலும், ஆசிட் குடித்தாற்போல் வாயிலிருந்து வயிறு வரை எறிந்தாலும், காதலி என்ன நினைப்பாளோ என்று சிரித்தபடி பார்த்தேன். அவள் கண்ணில் பிரமிப்பு தெரிந்தது. எதுவும் பேசாமல் உணவு முடித்து வேலைக்குத் திரும்பினோம்.

நான் என் அறையிலிருந்து அவளையே பார்த்துக் கொண்டும், அவள் அவ்வப்போது என்னைப் பார்த்துக் கொண்டும் எங்கள் வேலையில் மும்முறமாக இருந்தோம். அலுவலகம் முடிந்து கிளம்புகையில் நான் அவளை ஏக்கமாக பார்க்க, அவள் நாணமாய் சிரித்துக் கொண்டே, தலை குனிந்து நின்றாள். கம்பெனி பஸ் வரவும், இருவரும் பக்கத்து பக்கது இருக்கையில் அமர்ந்தபடி எங்கள் தங்குமிடத்துக்கு வந்தோம். இறங்கிப் போகையில் என்னை பார்த்து ‘நல்லோடா’ என்று சொல்லிவிட்டு ஓடிவிட்டாள்.

என் அறையில் என் சக ஊழியன் ஏபிசிடி(Akkumalla Bangaru Chinna Dorasami சுருக்கமாக) ரெட்டி நண்பனானான். அவன் ஏற்கனவே ஒரு பெண்ணைத் துண்டு போட்டிருந்தான். அவள் பெயர் அஸ்கா. என் ஆளும் அஸ்காவும் தோழிகள். பேருந்தில் வருகையில் நான் என் ஆளைப் பார்த்துக் கொண்டே வருவதைப் பார்த்து என் நண்பன் நீ அவளுக்குத் துண்டு போடுகிறாயா என்றான். நான் ஆம் என்று சொல்லி, அவன் ஆளிடம் சொல்லி என் துண்டை ஏற்றுக் கொள்ள உதவ வேண்டும் எனக் கேட்டேன். 

அவன் அவளும் உன் துண்டை ஏற்றுக் கொண்டாள் என்று எப்படி தெரியும் என்றான். அவள் என்னைப் பார்த்து சிரித்து ‘நல்லோடா’ என்று சொல்லிவிட்டு ஓடினாள் என்றேன். அவன் வயிற்றைப் பிடித்துக் கொண்டு சிரித்து பிறகு சொன்னான். நல்லோடா என்றால் நான் நினைத்தாற்போல் நல்லவன் என்ற அர்த்தம் இல்லையாம். கருப்பா என அர்த்தமாம். அவள் செல்லமாய்த்தான் சொன்னாள் என்று சொல்லி சம்மதிக்க வைத்தேன். 

அன்றும் மதியம், உணவுக்குப் போகும் போது இரண்டே இருக்கைகள் காலியிருந்தன. எதிர் எதிரில் அமர்ந்து அவள் சோறு சாப்பிட்டாள். நான் அவளைக் கண்ணால் சாப்பிட்டபடி ஏதோ கொரித்தேன். அவள் வழக்கத்தை விட ரொம்பவும் அழகாக இருந்தாள். சாப்பிட்டு முடித்ததும், மெதுவாக கிசு கிசு குரலில் ப்ரேமா? என்றாள். அப்போது அந்த வார்த்தையின் விபரீதம் எனக்கு தெரியவில்லை. அவளை அப்படி செல்லமாக அழைக்கச் சொல்கிறாள் என நினைத்து நானும் கிசுகிசு குரலில் ப்ரேமா என்றேன். ச்ச்ச்சீ என்றபடி ரொம்பவும் வெட்கத்துடன் சிரித்தால்.

ரெட்டி? என்றாள். நானும் ரெடி என்று எழுந்துக் கொண்டேன். அவளும் என்னுடன் கிளம்பி வர ஜோடியாக நடக்கத் தொடங்கினோம். பாரதி ராஜா படத்தில் வருவது மாதிரி வெள்ளை உடைதேவதைகள் சுற்றி வருவது போல் எங்கள் இருக்கைக்குத் திரும்பினோம். பார்வையாலேயே எங்கள் காதல் வளர்ந்தது. நான் அவளுடன் பேசுவதற்காகவே மொக்கை தெலுங்கு படங்களெல்லாம் பார்த்து மொழி அறிவை வளர்த்துக் கொண்டதில் ப்ரேமா என்றால் காதல் என்று புரிந்து கொண்டிருந்தேன்.

இரண்டு மாதங்கள் சென்றதும், அஸ்கா மூலம் என் ஆளின் அப்பன் அதான் என் மாமா, அவளைப் பார்க்க வருவதாகவும், அப்போது அவரிடம் எங்கள் காதலை சொல்லி திருமணத்துக்கு சம்மதம் வாங்க வேண்டும் என்றும் சொல்லி இருந்தாள். நானும் அவர் வந்த உடன் போய் பார்த்தேன். ‘மீரு ரெட்டியா’ என்றார். அட எவ்வளவு நல்ல மாமா என்று சந்தோசத்தில், நானும் ‘அவுனு! ரெடி’ என்றேன். 

‘ப்ரேமிஸ்தாவா’ (காதலிக்கிறாயா) என்றார். நான் அவர் சம்மதிக்க மறுத்து அவர் மகளின் காதலைத் திரும்ப கேட்கிறார் என நினைத்து ‘இஷ்டம் லேது’ (விருப்பமில்லை) என்று சொன்னதும், அவர் என்னை வெளியே போகச் சொல்லி விரட்டினார். என் ஆள் அழுது கொண்டு ஓடி விட்டாள். ரெட்டியும் அஸ்காவும் என் மீது கோபமாகி பேசுவதை நிறுத்திக் கொண்டார்கள். என் ஆளும் வேலைக்கு வரவில்லை.

பதினைந்து நாட்களில், என் ஆளின் திருமணம் அவள் மாமா பையனுடன் நடப்பதாக அறிந்தேன்.  உயிரே போனாலும் பரவாயில்லை. என் ஆளைக் கடத்தியாவது திருமணம் செய்ய வேண்டும் என்ற முடிவோடு, அதிகாலை மூன்று மணிக்கு சத்திரத்தில் நுழைந்து என் ஆளின் அறைக்குச் சென்றேன். அவள் கழுத்தில் புதுத் தாலியோடு படுத்திருந்தாள். 

அப்புறம்தான் தெரிந்தது, இரவு 12.11க்கு கலியாணம் முடிந்திருந்ததும் நான் லேட்டாக மூன்று மணிக்கு சென்றதும். அவள் கோபமாக ‘கருப்பா! என்ன திமிர் இருந்தால் காதலித்து விட்டு என் அப்பா காதலிக்கிறாயா என்றால் விருப்பமில்லை என்று சொல்வாய்’ என சீறினாள். காதலைத் திருப்பிக் கொடுக்க சொல்கிறார் என நினைத்து விருப்பமில்லை எனச் சொன்னதை சொல்ல முடியாமல் நொறுங்கிய இதயத்தை அவள் காலடியில் போட்டு விட்டு, வேறு இதயத்துடன் அமெரிக்கா வந்துவிட்டேன். 

(டிஸ்கி: எழுத்துப் பிழைகள் அண்ணாச்சியின் ஒரிஜினாலிட்டிக்காக:)))

இதையும் ஒருக்கா படிங்களேன்

34 comments:

பழமைபேசி said...

இரயிலடி ரங்கப்பன் வாழ்க!

கலகலப்ரியா said...

ம்ம்.. உடும்பு... உரிந்து... ஸ்ஸ்ஸ்பெல்லோவால எங்க என்ன ஆகுமோன்னு பயந்துக்கிட்டே படிக்க வேண்டியதா போச்சு..

என்னதான் நீங்க நம்ம நசரேயன் அவர்களை காப்பி அடித்தாலும்.. எழுத்துப்பிழையில் அவரை அடிக்க யாராலும் முடிய்ய்யாஆஆது...

பனித்துளி சங்கர் said...

எதார்த்தம் கலந்த எழுத்து நடை . ரசிக்கும் வகையில் இருந்தது .

நசரேயன் said...

அண்ணே இது ஒரு காதல் காவியம்

நசரேயன் said...

//(டிஸ்கி: எழுத்துப் பிழைகள் அண்ணாச்சியின் ஒரிஜினாலிட்டிக்காக:)))//

என் கிட்ட அனுப்பி வையுங்க நான் வகுப்பு எடுக்கிறேன்

vasu balaji said...

நசரேயன் said...

/அண்ணே இது ஒரு காதல் காவியம்//

இன்னைக்காச்சும் வானம்பாடிய பறக்க விடுவீரோ:))

சாந்தி மாரியப்பன் said...

எழுத்துப்பிழைகளை தேட வேண்டியிருக்கு. இதுவே நசரேயனோட இடுகையாயிருந்தா அது மட்டும்தான் கண்ணுல படும்... இருந்தாலும், நல்ல முயற்சி.:-))

நசரேயன் said...

இன்னொரு துண்டு இருக்கு, முடிச்சிட்டு ஏத்துறேன்

நசரேயன் said...

//நசரேயனோட இடுகையாயிருந்தா அது
மட்டும்தான் கண்ணுல படும்...//

எதிரிகள் ரெம்ப அதிகமா இருக்கங்கண்ணே எனக்கு

Chitra said...

நசரேயன் சார், உங்கள் எழுத்துப் பிழைகள் கூட, இப்பொழுது அழியாக் காவியம் ஆகி விட்டன...... ஹா,ஹா,ஹா,ஹா,ஹா.....

சத்ரியன் said...

அண்ணாச்சிய எதிர்த்து நீங்க விட்டிருக்கிற சவாலை நான் ஆமோதிக்கிரேன். (அட! இங்கயும் எதோ எழுத்துப்பிழை இருக்கிற மாதிரி தெரியுது.)

காமராஜ் said...

//மின் தூக்கிக்காக காத்திருந்த போதுதான் அவளைப் பார்த்தேன். பக்கத்து மின் தூக்கி வரிசையில் அவள் நின்றிருந்தாள். மஞ்சள் நிற சூடிதார், ஊதா நிறா துப்பட்ட, பச்சை நிறத்தில் செருப்பு, ரோஸ் பவுடர் போட்டிருந்தாள். ஆரஞ்சு வண்ண நகப்பூச்சும், பஞ்சு மிட்டாய் உதட்டுச் சாயமும் போட்டு, ஒரு வெள்லை ரோஜா காதோரம் வைத்திருந்தாள்//

பாலாண்ணா இவ்வளவு சொன்னப்புறம் எங்களால் ஊகிக்க முடியாமலா போய்விடும் ? அது தெலுங்கு பட கதாநாயகின்னு.நல்லவேளை படம் போடாமப்போனீங்னா.

கதைய ஆரம்பிச்சுட்டு அப்டியே பாதியில உட்டுட்டு போய்ட்டீங்களே பாலாண்ணா.

//ஆசிட் குடித்தாற்போல் வாயிலிருந்து வயிறு வரை எறிந்தாலும், காதலி என்ன நினைப்பாளோ என்று சிரித்தபடி பார்த்தேன்.//

எங்களுக்கும் அப்டித்தான் சிரிச்சு சிரிச்சு வயிறு ஆசிட் குடித்தாற்போலானது.

சத்ரியன் said...

//ஆசிட் குடித்தாற்போல் வாயிலிருந்து வயிறு வரை எறிந்தாலும், காதலி என்ன நினைப்பாளோ என்று சிரித்தபடி பார்த்தேன்.//

எந்த எஅடத்துல இருந்து காதலியானாங்கன்னு கண்டு புடிக்கவே முடியலியே.

சத்ரியன் said...

//அவன் “மனவாடா” என்றான்.//

நான் கூட இது எதோ “மானாட மயிலாட’ மாதிரி புது ப்ரோக்ராமா இருக்கும்னு நெனைச்சிட்டேன்.

சத்ரியன் said...

//ரயில் நிலைய வாசல் போஸ்டரில் பார்த்த தெலுங்கு பட கதாநாயகி கவனம் வந்தது. என் சட்டைப்பையில் இருந்த கைக்குட்டை, துண்டாய் மாறவா என்றது.//

அந்தக்காலத்துல எல்லாம் ‘ஆள்’ புடிக்கிறத ‘சீட்’ போடறதுன்னுதான் சொல்லுவீயளோ?

சத்ரியன் said...

பாலா அண்ணே,

அம்பிகாபதி அமராவதி காதலுக்கு அப்புறம், என்னை கலங்கடிச்ச காதல் காவியம் இது மட்டும் தாண்ணே.!

AkashSankar said...

தமிழ் மற்றும் தெலுங்கு படம் பார்த்த திருப்தி....லாஜிக்....அதெலாம் எதிர்பார்க்கலாமா....

சத்ரியன் said...

//எதிரிகள் ரெம்ப அதிகமா இருக்கங்கண்ணே எனக்கு//

விரும்பி ஏத்துக்கிட்டவய்ங்கள எதிரின்னு சொல்லப்படாதுங்க.

நட்பு முறிஞ்சி போயிடும்.

AkashSankar said...

தமிழ் மற்றும் தெலுங்கு படம் பார்த்த திருப்தி....லாஜிக்....அதெலாம் எதிர்பார்க்கலாமா....

பிரபாகர் said...

எப்பூடி?

புலவன் புலிகேசி said...

ஐயா, நீண்ட நாட்களுக்கு பிறகு வந்து படிச்ச முதல் கதை. சூப்பரு. என்ன காதல்ல தோத்தாலும் அமெரிக்கா போனான் பாருங்க அதுதான் தைரியம். அப்பறம் சாஃப்ட்வேர்ல டேமேஜர் ஆகறது அவ்வளவு ஈஸியா? நான் இன்னும் சாஃப்ட்வேர் எஞ்சினியராவே இருக்கனே. முயற்சி பண்ணிப் பாப்பம்.............அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

பிரபாகர் said...

இப்படியும் ஒரு காதல் கதையை சொல்ல முடியுமா?....

ஆசானே! என் சிரம் தாழ்ந்த வணக்கம்! அந்த பொண்ண வர்ணிக்கிறப்போ கலர் கலரா கலக்கியிருக்கீங்க! எல்லா நவரசங்களோடயும்.... சான்ஸே இல்லை.

பிரபாகர்...

Unknown said...

எல்லா ஓட்டும் நசரேயனுக்குப் போயிரனும் ஆமா..

க.பாலாசி said...

//நான் அவளைக் கண்ணால் சாப்பிட்டபடி ஏதோ கொரித்தேன்//

இதெல்லாம் நல்லால்ல ஆமாம்... என்னமாதிரி வர்ணிக்கிறாய்ங்கப்பா...சாமீ... முடியல.... ஸ்ஸ்ஸ்ஸ்.... இப்பவே கண்ணகட்டுதே...

//மஞ்சள் நிற சூடிதார், ஊதா நிறா துப்பட்ட, பச்சை நிறத்தில் செருப்பு, ரோஸ் பவுடர் போட்டிருந்தாள். ஆரஞ்சு வண்ண நகப்பூச்சும், பஞ்சு மிட்டாய் உதட்டுச் சாயமும் போட்டு, ஒரு வெள்லை ரோஜா காதோரம் வைத்திருந்தாள் //

அட..அட..அட... என்னான்னு சொல்றது... இப்டில்லாம் சொல்றதப்பாத்தா ஃபிகர் நல்லாதான் இருந்திருக்கும்போலருக்கு...

கடைசில வடப்போச்சே....

T.V.ராதாகிருஷ்ணன் said...

எதார்த்த எழுத்து நடை

செ.சரவணக்குமார் said...

சாமீய்ய்ய்.... முடியல.

செம்ம கலக்கல்.

என்ன ஒரு நடை. கிரேட் பாலா சார்.

Jey said...

நல்லா இருக்குன்னே!!!, கலக்குங்க.

settaikkaran said...

சால பாக உந்தி! :-)

ஈரோடு கதிர் said...

அப்பாடா

எதிர் இடுகை வன்கொடுமையில இருந்து நான் தப்பிச்சேன்!!!

ஈரோடு கதிர் said...

என்னைக் காப்பாற்றிய நசரேயன் வாழ்க...

Unknown said...

வலையுலகில் இன்றைய டாப் ட்வென்டி பதிவுகளை WWW.SINHACITY.COM இல் வாசியுங்கள்

vasu balaji said...

@@நன்றி பழமை
@@சரியாச் சொன்னம்மா. அண்ணாச்சிய அடிச்சிக்க ஆளில்ல
@@ஆஹா! இல்லையா பின்ன அண்ணாச்சி

vasu balaji said...

நசரேயன் said...
//(டிஸ்கி: எழுத்துப் பிழைகள் அண்ணாச்சியின் ஒரிஜினாலிட்டிக்காக:)))//

என் கிட்ட அனுப்பி வையுங்க நான் வகுப்பு எடுக்கிறேன்//

:)). இது வேறயா

vasu balaji said...

@@நன்றிங்க அமைதிச்சாரல்
@@நன்றிங்க சித்ரா
@@நன்றிங்க காமராஜ்
@@நன்றிங்க ராஜராஜசோழன்
@@நன்றி பிரவு
@@நன்றி புலிகேசி
@@நன்றி முகிலன்
@@நன்றி பாலாசி
@@நன்றி டி.வி.ஆர் சார்
@@நன்றி சரவணா
@@நன்றி ஜே
@@நன்றி சேட்டை
@@நன்றிங்க கதிரண்ணா
@@நன்றிங்க இராமசாமி கண்ணன்