Sunday, April 5, 2009

தேர்தல் - Inside Story

இந்த தேர்தல் வந்தாலே அரசு ஊழியர்கள் பாடு கொஞ்சம் அல்லாட்டமாதான் போகும். அதிலயும் மாநில அரசு ஊழியர்கள் அது அவர்களுக்கு மக்களோட தினம் போராடி எகிறி பழக்கம். அவங்க பரவால்ல. இந்த மத்திய அரசு ஊழியர்கள் கோப்போட தான் பெரும்பாலும். அதனாலயே தேர்தல்னா கொஞ்ச பேத்துக்கு காலரா, மலேரியா, டெங்கு எல்லாம் சேர்ந்து வந்தா மாதிரி இருக்கும். அது என்னாமோ பாராளுமன்ற தேர்தல்னா மத்திய அரசு ஊழியர்கள களப்பலிக்கு. மாநில அரசு ஊழியர்கள் ஆவணம் வழங்க போகன்னு பாதுகாப்பு வலயத்துள்ள.

மாநகராட்சில நாய் பிடிக்க வருவாய்ங்க. பாத்திருக்கிங்களா? ஒரு நீண்ட கழில கம்பி சுருக்கு போட்டு. எனக்கு தெரிஞ்சி அரசு வாகனத்துல அதிகம் அடிபட்டது இதாத்தான் இருக்கும். அவ்ளோ சொட்ட. வாண்டுகளுக்கு இந்த நாய்வண்டிய கல்லால அடிக்கறதுன்னா அவ்ளோ குஷி. அப்பிடி வருவாரு. தாசில்தார். வரும்போதே விரைச்சிக்கிட்டு, யாரு கீழ்மட்டத்துல பொறுப்பான அதிகாரியோ அவர புடிக்கறது. ஹி ஹினு ஆரம்பிச்சி, அறிமுகப் படுத்திக்கிட்டு மெதுவா ஆட்கள் பட்டியல் வேணும், நீங்களே பண்ணுவிங்களா இல்ல மேலதிகாரிய பார்க்கறதான்னு(போய் பார்த்துக்க போய்யான்னா சரண்டராய்டுவாய்ங்க. அவ்ளோ சுளுவில பார்த்துட முடியுமா?). ஹி ஹி இதுக்கெதுக்கு. வழக்கமா பண்றது தானெ. நாமளே பண்றோம்னு சொல்லி, காபிய கீபிய குடுத்தா உறிஞ்சிட்டு, கிளம்பறப்போ வில்லன் ரேஞ்ச்ல ஒரு மிரட்டல், லிஸ்ட்லாம் பக்காவா இருக்கணும். நாம இன்கம்டாக்ஸ்ல வாங்கிட்டோம். ஒப்பு நோக்குறப்ப பிழை இருந்தா உனக்கு ஆப்புன்னு சொல்லிட்டு போவாய்ங்க. அவ்ளோதான். நாய் புடிக்கிற படலம் ஆரம்பிச்சிடும்.

தெரு நாயவாவது ஒரு மாட்டு ஒரு இளு. வண்டிக்குள்ள. இது அத விட கொடுமை. ஏங்க நீங்க சொல்லுங்க. ஒரு சாமானியனுக்கு, பால்பூத் தெரியும், ஓட்டல் தெரியும், மருந்து கட தெரியும். நம்ம வீடு எந்தக் காவல் நிலையக் கட்டுப்பாட்டில வருதுன்னு கேட்டா என்னாங்க தெரியும்.காவல் நிலயத்துக்கு எதிர்ல கொலை கொள்ளைன்னு கம்ப்ளைன்ட் பண்ண போனாலே, இது எங்க ஏரியா இல்ல. ஏழு கிலோ மீட்டர் தள்ளி இருக்கிற ஏதோ ஒண்ணிலனு சொல்லுவாய்ங்க. இப்படியான மிரட்டல் தகவலெல்லாம் கேட்டு ஒரு தகவல் பட்டியல குடுப்பாய்ங்க. நிரப்பி குடுன்னு. இவரு பங்குக்கு சேர்த்து மிரட்டுவாரு. தரலைன்னான்னு.

இப்படி எல்லாம் அடி பட்டு மிதிபட்டு வடிவேலு ரேஞ்சுக்கு கரம்பேரி, ஏரி எத்தன பார்த்ததுன்னு வில்லங்கமா ஒரு சொலவட இருக்கே. அப்படி கொள்ள பேரு இருப்பாய்ங்க. இவங்கதான் பெரிய ஆறுதல். வேணாம் வலிக்குது மாதிரி இருக்கறவங்களுக்கு இவங்க சொல்ற ஆறுதல் இருக்கே. அட அட. ஏங்க பயப்படுறீங்க. அத்தன பேத்தையுமா புடிச்சி போட போறான். அப்பிடி கெரகம் சரியா இல்லன்னா பதிலுக்கு ஆள தயார் பண்ணலாம் விடுங்கன்னு சமாதானம் பண்ணுவாய்ங்க.

இத நாடி விரும்பிப்போற கும்பல் ஒண்ணு இருக்கு. பதவிக்கு தக்கண படி. தேடி தேடி குழு குழுவா வெளியூருக்கு விரும்பிக் கேட்டுக்கிடுறது. வேணாம். வேணாம்னு எல்லாம் சொல்லிக்கிட்டிருந்தா அவனா மிச்சம் மீதி, உடஞ்சது உடயாததுன்னு பக்கத்து பஸ் ஸ்டேன்டுக்கு 15 கி.மீ தூரத்துல இருக்கிற ஊரா போட்றுவாய்ங்க.அங்க போனா வெளியூரா? கொஞ்சம் அலம்பல் பண்ணலாம். உள்ளூர்னா வாடி இருக்கு உனக்கு. அஞ்சாம் நம்பர் ஊட்டு மாடில தான கீரனு பாசமா மிரட்டுவாங்க. இப்பிடி போன இடத்துல கச்சி ஆளுங்க வந்து பொறுப்பா எல்லாம் வசதியா இருக்கா என்னான்னு கேட்டு, சண்ட சச்சரவில்லாம சாப்பாடு, ஊக்க‌ பான‌ம் எல்லாம் பொறுப்பா செய்வாய்ங்க‌. த‌க‌ராரு ப‌ண்ணி என்னா பண்ண‌ப் போற‌ம். வேணாம்னா வில்ல‌ங்க‌ம். அதுல‌யும் பொறுப்ப‌திகாரின்னா அல்லு க‌ண்டுடும். அது அது கூட‌ வ‌ந்த‌து பிரியாணியும் பிராந்தியும் அடிச்சிட்டு தனியா விட்டு உல்லாசத்துக்கு கிளம்பிடும். இவரு வடிவேலுக்கு ட்ராக்ல அடிபட்ட பாடிக்கு ராக்காவல் போட்டா மாதிரி உக்காந்திருப்பாரு.

இவிங்களுக்கு என்னா பண்ணணும்னு ஒரு அதிரடி பயிற்சி குடுத்து தான் அனுப்பறது. ஒரு பயத்துக்கும் தேர்தல் விதிமுறைன்னு ஒன்னு இருக்கே. அது என்னான்னு பாப்பம்னு ரோசனயே வராது. படிச்சென்ன பண்ண போறம். விதிய சொன்னா விதி முடிஞ்சாலும் முடிஞ்சிடும்னு நடுங்கறப்ப. எனக்கு மை வெக்கிற வேல. அது சொல்லிட்டாங்க ஆள்காட்டி விரல்ல வைக்கணும். எனக்கு பட்டியல் சரி பார்க்குற வேல. தொண்டர்கள் குத்திட்டோம். அடிச்சிக்கன்னா மரியாதயா அடிச்சா வேல முடிஞ்சது. அதுக்கும் மேல ஒரு அலம்பல் பார்டி வந்து நாந்தேன் கோவாலு. அதெப்டி என் ஓட்டு விளுகும். விரல பாருன்னு நீட்டினா எல்லாருமா எகிறி அவன ஆமாம் நான் ஓட்டு போட்டேன். மையாவது வெச்சி விடுங்கப்பா. இல்லாட்டி ஓட்டக் கூட பாதுகாப்பா வெச்சிக்க தெரியல உன்ன நம்பி எங்கப்பன் என்ன குடுத்தான்னு பொண்டாட்டி துப்புவான்னு வெச்சிக்கிட்டு போறது தான்.

கொஞ்சம் பட்டணமா இருந்தா பிடுங்கல். இந்தியன்ல வர க்ரேசி மோகன் மாதிரி தேர்தல் விதி சொல்லி ஹிந்துல எழுதறேன்னு சிலது வரும். 49-O, கள்ள ஓட்டுக்கெதிரா புகார்னு வந்தா, அது இங்க இல்ல வட்ட அதிகாரி அலுவலகத்தில. இல்லாட்டி ஒரு விண்ணப்பம் தான் இருக்கு. இருங்க ஜெராக்ஸ் எடுக்க அனுப்பறேன்னு அலக்கழிச்சா திட்டிண்டு போய்டுவாய்ங்க.

ஒரு மாதிரியா ஒப்பேத்தி களம் கண்டு வந்து அனுபவங்கள பகிந்துக்கற அழகே அழகு. இதுக்கு நேர்மாறா கைப்புள்ள கேஸ் சிலது இருக்கு. இது பெரும்பாலும் மகளிரணி. உசாரா தேர்தல் தேதி தெரிஞ்சதுமே சிங்கப்பூர்ல இருக்கிற தம்பிய பாக்க, துபாய்ல இருக்கற புருசன பார்க்க, எதுமில்லன்னா வெளிநாட்டு டூர்னு லீவ் வாங்கிடுவாய்ங்க. சிலது செரியா 2 நாளுக்கு முன்னாடி மாமனார் மாமியார அமுக்கி காசு போனா போச்சுன்னு அதி தீவிர சிகிச்சை பிரிவில சேர்த்து ஒரு சர்டிபிகேட். இன்னும் சிலது ரத்த தானம் குடுத்துட்டு நெம்ப வீக், நிக்கவே முடியாதுன்னு எல்லாம் வரும். நாய் சேகர் மாதிரி பேஸ்மட்டம் வீக் கேஸ் சிலது போனா என்னாகும், போவாட்டி என்னாகும்னு சோறு தண்ணி இல்லாம கிடந்து யோசிச்சே போகாம விடும்.

பாவப்பட்ட ஜென்மங்க இதுங்கதான். என்னமொ ரொம்ப ஒழுங்கா தேர்தல் நடந்தா மாதிரி, இதுங்க மேல ஒழுங்கு நடவடிக்கைன்னு அதிகாரிங்க ஒரு பக்கம். நாமல்லாம் போய்ட்டு வரல. இது 10வது தேர்தல். ஜாலியா போய்ட்டு வந்திருந்தா இப்படி குத்த கேசு ஆகாம இருக்குமா இல்லயான்னு வெறுப்பேத்துவாய்ங்க.

சரி. இவ்வளோ ராமாயணம் எதுக்குடா வெண்ணெய்னு கேக்கறிங்களா. நிஜம்மா சொல்லுங்க. இத படிக்கிறவங்கள்ள பாதிக்கப் பட்டவங்கள தவிர மத்த பேருக்கு இந்த உள்குத்து தெரியாது தானே.இந்த 49 -ஒ வேலைக்காவாதுன்னா பேசாம எல்லாத் தொகுதிலயும் யார்னே தெரியாம ஒரு சுயேச்சை நிக்கும். அதுக்கு குத்தினா அலம்பல் இல்லாம நாம நினைச்சத சாதிக்கலாம். அதுங்களும் டிபாசிடாவது வாங்கும்ல. அதான்.

3 comments:

பழமைபேசி said...

நீங்க சொல்லுறீங்க... கேட்டுகிடுறேன் அண்ணே!

கலகலப்ரியா said...

எனக்கு வழக்கம் போல எதுவும் புரியலிங்க.. (நிஜம்மாவே)

vasu balaji said...

சிதம்பர ரகசியம். புரியக் கஷ்டம்தான். கூட்டி கழிச்சி பார்த்தா புரியும். புரியணும். இதுவே கொஞ்சம் அதிகம்தேன்.