Monday, April 27, 2009

நறுக்குன்னு நாலு வார்த்த - 34

நீங்களே முடிவு பண்ணுங்க:

அ. 48மணி நேரத்தில் நல்லது நடக்கும்.
ஆ. போர் நிறுத்தம்: ஓரிரவு பொறுத்திருப்போம்: கலைஞர்
இ. இலங்கையில் போரை நிறுத்த வலியுறுத்தி கலைஞர் உண்ணாவிரதம்
ஈ. பிரதமர் கோரிக்கை கருணாநிதி நிராகரிப்பு
உ.போரை நிறுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன: வாசன்
ஊ.மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் போர் நிறுத்தப் பட்டுவிட்டது எனக்கூறியதால் உண்ணாவிரதம் முடித்துக்கொள்ளப்பட்டது.
எ:நாங்கள் போர் நிறுத்தத்தை அறிவிக்கவில்லை:இலங்கை அரசு அதிரடி
ஏ:கனரக ஆயுதங்கள், விமான தாக்குதல்களை நடத்த மாட்டோம் என அறிவித்த இலங்கை அரசு விமானத் தாக்குதலை மேற்கொண்டுள்ளது.

தலைவரே அவங்ககூட சேர்ந்து எங்கள ஏமாத்தினீங்களா? இல்ல எங்களோட சேர்ந்து நீங்களும் ஏமாந்தீங்களா? என்ன பண்ணப் போறீங்க?
_______________________________________________________________
ஈழப்பிரச்சனை:ஜெ.வின் அரசியல் சந்தர்ப்பவாதம்:காங்.

இன்னைக்கு நீங்க பண்ணது மோசடி இல்லையா?
_____________________________________________________
தனி ஈழத்திற்கு ஆதரவு கிடையாது: பா.ஜ.க.

உனக்கும் தமிழர் ஓட்டு கிடையாது. பரதேசிங்களா? ஏன் ராவண ஜன்ம பூமியா?
_____________________________________________________
தனி ஈழம் குறித்து இதுவரை குரல் கொடுக்காதது ஏன்?: ஜெ.வுக்கு விஜயகாந்த் கேள்வி

நீயெல்லாம் இப்படி கேக்கணும்னுதான். போய்யா.
________________________________________________
தனித் தமிழ் ஈழம் தான் தீர்வு என்று ஜெ. கூறுவது தேர்தலுக்காகத்தான்: இல.கணேசன்

நீங்க பேசறதெல்லாம் வேற எதுக்கோவா?
______________________________________________
இலங்கை: பொது வேலைநிறுத்தத்தால் ஏற்பட்ட பலன்கள் என்ன?: கலைஞர் விளக்கம்

சாதனைல ஒண்ணு ஏறிச்சி. நாம இன்னோரு வாட்டி ஏமாந்தோம்.
________________________________________________
இலங்கை பிரச்சனையில் இந்தியா தலையிட முடியாது: வீரமணி

அப்புறம் ஏன் உங்க தலைவர் பட்டியல் போடுறாரு. 48 மணிநேரம், ஒரு இரவு, அரைநாள் உண்ணாவிரதமெல்லாம் எதுக்கு?
________________________________________________
சேலம்: காங். தலைவர் தங்கபாலு உண்ணாவிரதம்

அதுக்கிருக்கிற மரியாதையே போச்சி.
________________________________________________
முதல்வர் உண்ணாவிரதம் காலம் கடந்த நடவடிக்கை: ராமதாஸ்

இல்லையே. சாப்பாட்டு நேரத்துக்கு முன்னாடியே முடிச்சிட்டாரு.
_______________________________________________
இலங்கையில் போர் நிறுத்தப்படவில்லை: சிதம்பரத்துக்கு ராஜா கண்டனம்

அது சிதம்பர ரகசியம்.
____________________________________________________
விடுதலைப்புலிகள் கடும் தாக்குதல்:முன்னேற முடியாமல் திக்குமுக்காடும் ராணுவம்

அழுதாலும் பிள்ளை அவள்தான் பெறணும். நடத்துங்க ராசாக்களா.
______________________________________________________
தே.பா.சட்டதில் இருந்து கொளத்தூர் மணி விடுதலை

தலைவருக்கு இன்னொரு ஆப்பு.
______________________________________________________

8 comments:

இராகவன் நைஜிரியா said...

இன்னிக்கு போட்ட நாலுவாத்தைக்கு நான் பின்னூட்டமே போட போவதில்லீங்க... என்ன போடவது என்று தெரியல அதனால... ஓட்டு மட்டும் போட்டுட்டு ஜகா வாங்கிறேன்.

இராகவன் நைஜிரியா said...

வேறு ஒன்னுமில்ல, அப்படின்னு நினைச்சு, ஒரு அரை மணி நேரம் பின்னூட்டம் போடம இருந்தேன். எலோரும் கேட்டுக் கொண்டதற்கு இணங்க இப்ப ஒரு பின்னூட்டம் போட்டு, அதுக்கு துணையா இன்னொரு பின்னூட்டமும் போட்டுட்டேன்.

இராகவன் நைஜிரியா said...

//தலைவரே அவங்ககூட சேர்ந்து எங்கள ஏமாத்தினீங்களா? இல்ல எங்களோட சேர்ந்து நீங்களும் ஏமாந்தீங்களா? என்ன பண்ணப் போறீங்க? //

உலகம் உருண்டை...

இராகவன் நைஜிரியா said...

//ஈழப்பிரச்சனை:ஜெ.வின் அரசியல் சந்தர்ப்பவாதம்:காங்.

இன்னைக்கு நீங்க பண்ணது மோசடி இல்லையா? //

சந்தர்ப்பவாதம் என்ற வார்த்தையே வெட்கப்படும் அளவுக்கு இவங்க அடிக்கிற ரவுசு தாங்களப்பா..

vasu balaji said...

/இன்னிக்கு போட்ட நாலுவாத்தைக்கு நான் பின்னூட்டமே போட போவதில்லீங்க.../

அதிர வெச்சிட்டீங்க இராகவன் சார்

பழமைபேசி said...

கடுமையான ஏமாற்றம் அண்ணே! உலகத்துல கேள்வி கேட்பார் இல்லையா?

கலகலப்ரியா said...

எதிரிங்க எவ்ளோ தேவலாம் சார்.. கூட இருக்கிற மாதிரி குழி பறிக்கிற இந்த ஜென்மங்கள சகிச்சுக்கவே முடியாது!

vasu balaji said...

அதிர்ச்சிக்கு மேல அதிர்ச்சி. ஏமாத்தினதுக்கு பாராட்டு மாதிரி இவ்வளவு அவசரமா 100 கோடி ரூபாய் உதவியாம். உதவியா பண்ணுவான். ஆயுதம் வாங்குவான். அவமானமா இருக்கு.