Tuesday, April 14, 2009

லொள்ளுவதெல்லம் லொள்ளல்ல - 7

தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள் !

தாயும் புள்ளயுமின்னாலும் வாயும் வயிறும் வேறே
தொப்புள் கொடின்னு அளந்தாலும் தமிழ்நாடும் ஈழமும் வேறே

ஆயுதமும் காகிதமும் பேச முடியாது : அமைச்சர்
அமைச்சரும் செருப்பும் பேச முடியும்: சீக்கியர்

உடன்பிறப்புக்குச் சொல்லுவது மக்கள் சேவை
உள்ளுக்குள் இருப்பது மகன்களின் தேவை.

மருந்து குடிக்கும்போது குரங்கை நினைக்காதே:‍ பழமொழி
மருத்துவரை நினைக்கும்போது குரங்கை மற‌க்காதே: புதுமொழி

கடன்பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் ஆயுதமிழந்த இராவணன்
கடன் பட்டுப் பட்டே ஆயுதம் வாங்குறான் மகிந்தன்.

சைனாக்காரன் வேணான்னா
ஐநாக்காரன் ஏன் கேக்கணும்?

ஓட்டுப் போடுங்கோ: வேட்பாளர்
ஓ போடுவேன்: வாக்காளர்

நல்ல மாட்டுக்கு ஒரு சூடு
நம்ம சாமிக்கு கொஞ்சம் முட்டை

பிள்ளையார் பிடிக்கப் போய் குரங்காய் முடிஞ்சதாம்
உண்ணாவிரதம் இருக்கப் போய் விசுவாசத்தில் விடிஞ்சதாம்.

சாட்சிக்காரன் கால்ல விழுறத விட சண்டக்காரன் கால்ல விழுறது மேல்
இந்திரா காங்கிரஸ இழுக்கிறத விட இலங்கைத் தமிழருக்கு ஆதரவு மேல்

வீடு ரெண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்
இலங்கை ரெண்டு பட்டால் காங்கிரசுக்குத் திண்டாட்டம்

கொள்ளைக்குப் போனாலும் கூட்டாப் போகாதே!
ஓட்டுக்கு போனா ஒத்தையா போகாதே!
____________________________________________________

6 comments:

பழமைபேசி said...

அஃகஃகா! பலே பலே!!

இவன் said...

அக்கட அக்கட

இராகவன் நைஜிரியா said...

சூப்பர் லொள்ளுங்கண்ணே...

கலகலப்ரியா said...

mmm.. pinnunga sir.. namakkenga puththaandu.. and vaazhthu..

வழிப்போக்கன் said...

லொள்ளீட்டீங்கண்ணோவ்...
:)))

vasu balaji said...

அனைவருக்கும் நன்றி.