மகிந்த சிந்தனை
மணியடிக்கும் கருணாக்கள்
பலியாடுகள் எத்தனை!
ஆயுதம் ஏந்தா
அரும்புகளின் போராட்டம்
ஐநா வேரோட்டம்!
ஆட்சி மாறினும்
காட்சி மாறாது
அரசியல் வாதிகள் இறையாண்மை!
தமிழெரித்து
குளிர்காயும்
கே( கோ)வலத் தலைவன்!
விருட்சங்கள்
பதுங்கு குழிகளில்
விதைகளாக!
கடன் வாங்கிக்
கருவருக்கும் கம்ஸன்
மஹிந்த!
விரல் பிடித்து நடந்த எம் பிஞ்சுகள்
விரல் பிடித்து இட்டுச் செல்கின்றனர்
எம் விடியல் நோக்கி!
கையறு நிலை
கபட நாடகம்
கலைஞர்!
ஈழ வியாபாரம்
இனிதே முடிந்தது
எங்களுக்கே வெற்றி!
அடிக்கத் தூண்டிய கைகளுக்கு
அணைக்கத் தடையானது
இறையாண்மை!
( என்னை ஊக்குவித்த கலகலப்ரியா, பழமைபேசிக்கு என் நன்றிகள்)
**********************************************************************
10 comments:
சிந்தைச் சிதறலில்
சிரற்றிய சாரம்
சித்தச் சிதட்டில்
சிலுகியின் சீத்தல்..!
சிரற்றிய, சிதடு, சிலுகி, சீத்தல்:((. மொத்தமே 8 வார்த்த தான். அதில 4 தெரியல. அப்போ நான் அரைவேக்காடு தானா? அர்த்தம் சொல்லுங்கப்பு.
கடல்த் தமிழில்
கற்றது கடுகளவு
பாதிக்
கொதிப்பில்
திமிறிய
திவலை
அரையெனில் அவர்..
அவதார ஆணன்
ஞானபண்டிதர்
ஞாபகத்தில்
ஞஞ்சையானேன்
ஞான்..
சிலுகி அடியேள் கலகப்பிரியை.. கிளறி விடுதல்.. என் பணி..
மற்றபடி.. சிதறல்.. சிரறல்..
சிதடு இங்கு குருடு என்று அர்த்தம்..
/ஆணன், ஞஞ்சையானேன்,ஞான்/
இந்த விளையாட்டுக்கு நான் வரல:((
/கலகப்பிரியை/
வசதிக்கெல்லாம் பேர் மாத்துறதா?
மனிதருள் எத்தனை வகை.. ஒரு மனிதனுள் எத்தனை வகை.. நம்ம தாத்தாவையே பாருங்க.. நான் ஞானபண்டிதர சொல்லல.. கலை-ஞர் அவர்களை சொன்னேன்.. குறிப்பிட்ட காலத்தில் அவருக்கு கிடைத்த பெயர்கள்தான் எத்தனை எத்தனை.. பூமி தாங்குமா..!
அஃகஃகா! நல்ல துவக்கம்... அடிச்சு ஆடுங்கண்ணே!! வாழ்த்துகள்!!!
எனக்கு கொஞ்சம் சுகவீனம், கூடவே இந்த இடுகையைக் கவனிக்கலை. ஒரு நாளைக்கு ஒன்னு இடுங்க... ஏன்னா, கடைசியாப் போடுறது மட்டுமே, பட்டியல்ல காண்பிக்கும்... இதுவும் ஒரு காரணம்.
கவிதையின் கரு மனசை மேலும் வருத்தத்துக்கு........
/அஃகஃகா! நல்ல துவக்கம்... அடிச்சு ஆடுங்கண்ணே!! வாழ்த்துகள்!!!/
இஃகிஃகி. நன்றி
/ஒரு நாளைக்கு ஒன்னு இடுங்க... ஏன்னா, கடைசியாப் போடுறது மட்டுமே, பட்டியல்ல காண்பிக்கும்... இதுவும் ஒரு காரணம்./
தகவலுக்கு நன்றி.
/எனக்கு கொஞ்சம் சுகவீனம்/
ஓய்வெடுங்க.
/கவிதையின் கரு மனசை மேலும் வருத்தத்துக்கு....../
ஆமாம். ரொம்ப அடைஞ்சி வச்சிருந்தது..
Post a Comment