
சிவனும் எமனும் சந்திப்பு
நடு(த்தெரு)வில் நாராயணன்
நாடகம் முடிந்தது!
பிரமனின் கணினியில்
பக்சே வைரஸ்
தமிழரழிவு!
பக்ஸே எமனுக்கு
பங்கி மூன் சித்திரகுப்தன்
கணக்குத் தவறாத ஐ.நா!
தமிழீழமே ஒரே வழி
தலைவி பேச்சு
தலைவர்க்கு தூக்கம் போச்சு!
ஈழத் தமிழர் ஓட்டு
இங்கு செல்லுபடியானால்
எத்தனை உயிர் பிழைத்திருக்கும்?
ஒன்றுக்குப் போவதை
உளவு பார்க்கும் செய்மதிகள்
உயிர்க் கொலையைப் பதியாதா?
சொக்கு சூத்திரதாரி
சிவசங்கரன் வேடதாரி
தலைவரு நாதாரி!
போராடும் தாய்மாரின்
போர்வை விலக்கிப் பார்க்கும்
காவல்துறைக் கண்ணியம்.
பதிமூணு பேரு உயிர்த்தியாகம்
பதிமூணாம் தேதி தேர்தல்
பகுத்தறிவுக்கு சவால்?
புலிப்பக்கமிருந்து
எலிப்பக்கம் போன திருமா
போன மானம் வருமா?
__________________________________________________________________
5 comments:
கவிதைய விட படம் சோக்கா கீது... எச்சய பாரு சோளக்கொல்ல பொம்மை மாதிரி.. எங்க புடிச்சானோ இந்த எளவெடுத்த டிரெஸ்ஸ.. செவப்பு துணிய கழுத்தில சுத்தினா ஈழத்தில ரத்தமா கொட்டும்னு சொன்னாங்க போல இலங்கை இனவாதப் பிக்குமார்.. வர்ற கோபத்துக்கு அவன் மூஞ்சிய குண்டூசி வச்சே குதறிடுவேன்.... +*ç%&/(/&%ç......
:)))))).
// பிரமனின் கணினியில்
பக்சே வைரஸ்
தமிழரழிவு! //
சரியாகச் சொன்னீர்கள் பாலா..
இதற்கு ஒரு ஆண்டி வைரஸ் வரும் என்று நம்புவோமாக...
:(( இல்லயே இராகவன் சார். ஆண்டி தானே வைரஸே. இவன் கேரியர் தானே.
நறுக்கு கூட நக்கலா .. அசத்துங்க
Post a Comment