Saturday, April 11, 2009

நம்பிக்கை நட்சத்திரங்கள்

இறையாண்மை, ஓரளவு, தந்தி, தபால், தொலைபேசி, சவடால், ஷோ காட்ட உண்ணாவிரதம், ஆரம்பிக்கும் போதே உள் பூசல், என் தாவல் கேவலமா, உந்தாவல் உசத்தியா பட்டிமன்றம், மனித சங்கிலி இத்தியாதி பிலிமெல்லாம் காட்டி கால்ல விழுந்தேன், கை புடிச்சி கெஞ்சினேன்னு கதை அளக்கும் அரசியல் தலைவர்களே! என்னமோ நாமெல்லாம் காட்டுக்குள்ள இருந்து நீங்க‌ சொல்ற கதையத்தான் நம்பறோம்னு நினைச்சிருக்கீங்க போல. வலைமனை இருக்குங்கய்யா. பத்திரிகை எல்லாம் விளம்பரத்துக்கும், மணியடிக்கவும், ஆளும் கட்சி போராட்டம்னு சொல்றப்போ மட்டும் அப்பாவி தமிழர்கள் கொலைச் செய்தியும், மற்ற நேரம் புலி பிடிச்ச கணக்கும் போட்டாலும். எனக்கு பிரமிப்பா இருக்கு. அரசியல் தலையீடு இல்லாததே பெரிய நிம்மதி. இளைஞர்கள் முன்னெடுக்க, பொடியனுகளுக்கு என்ன தெரியும்னு இல்லாம பெருசுகள் கூடி மாணவ இனத்துக்கே வழிகாட்டியாய் அகில உலகத்தில அதும் தமிழ்க்குடிகள் செய்யும் அறப்போர். காந்திக்கு நிகராக அஹிம்சா வழியில், தடியடியோ, நாய் மிரட்டலோ, தண்ணீர் பீரங்கியோ, கொட்டும் மழையோ, கூசும் குளிரோ உள்ளிருக்கும் சுதந்திர வேள்வித்தீக்கு முன்பாக எதுவும் பொருட்டில்லை என்ற இந்த சாதனைக்கு, இயலாமல் இங்கு தவிக்கும் ஒவ்வொருவரும் தலை வணங்க வேண்டும். நடத்துங்க ராசாக்களா. உங்கள் மண்ணில் உங்கள் வேர் பதியும். விருட்சமாய் வளர்வீர்கள். அடுத்த தலைமுறை நன்றாகவே இருக்கும் என உணர்த்தும் நம்பிக்கை நட்சத்திரங்களே! வாழ்க நீங்கள். வெற்றி உங்களுக்கே. இயலாதுன்னு ஒதுங்கி நின்றிருந்தால், இங்கும் மாணவ மணிகள் நடத்திக் காட்டி இருப்பார்கள். ஒரு செருப்பால் சாதிக்க முடிந்ததை சொல்ல வெட்கமாக இருந்தாலும் சொல்லத்தான் வேண்டி இருக்கிறது. எதற்கு இத்தனை புலம்பல் எனக் கேட்பவர்களுக்கு
:1. பிரித்தானியாவில் இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்டோர் போராட்டம்.
2. உண்ணாவிரதம் இருந்த இரண்டு மாணவர்களின் கோரிக்கையை ஏற்று பிரிட்டிஷ் அரசு ஒருவரை ஐநா சபையில் 7 நாட்டுத் தலைவர்கள் முன்னிலையில் வன்னி நிலவரத்தினை விளக்கி ஐந்தம்சக் கோரிக்கையை விவாதிக்க ஏற்பாடு.
3. ஆஸ்திரேலியா சிட்னி, மெல்போர்னில் இளைஞர்கள் முன்னெடுக்க பெரும் போராட்டம்.
4. ஃப்ரான்ஸில் நான்கு மாணவர்கள் உண்ணாவிரதம்
5. நோர்வேயில் போராட்டம் மாணவர்கள் முன்னெடுப்பில்
6. சுவிஸ்ஸில் தொடர் போராட்டம்.
பிரியாணி, தண்ணி, கூலி பேசி லாரியில அடைஞ்சி வந்த கூட்டமில்லை. உயிர்ப்போராட்டம். உறவுகளுக்கான போராட்டம்.
தொடுப்பு:
செய்திகள்:
1. http://www.tamilwin.com/view.php?2a26QVF4b3499E824dbSWnPeb0217GGc4d3iYpD3e0dVZLucce03g2hF2ccdHj0o0e
2.http://www.tamilwin.com/view.php?2a26QVF4b3499E824dbSWnPeb0217GGc4d3iYpD3e0dLZLumce03g2hF2ccdHj0o0e
3.http://www.tamilwin.com/view.php?2a08E99F20be1DpYi30ecbo0jH42ccdPZLumc4d3cSWnPd4b34FVQ6obd42iGG71ed0e3Fh2g80e
4.http://swissmurasam.net/news/breakingnews-/13524-2009-04-11-16-40-49.html
5.http://www.tamilwin.com/view.php?2a36QVF4b3499E824dbSWnPeb0217GGc4d3iYpD3e0dTZLucce03g2hF2ccdHj0o0e

காணொளி :(நேரடி ஒளிபரப்பு)
http://www.ustream.tv/channel/tamil-protests
மலர்க தமிழீழம். மாவீரர்கள் கனவு நனவாகட்டும்.

6 comments:

ஆ.ஞானசேகரன் said...

உங்கள் ஆதங்கள்தான் எனக்கும்

சவுக்கடி said...

உயிர்ப்போராட்டம். உறவுகளுக்கான போராட்டம்.///

கயவர்களும் காட்டிக் கொடுத்தான்களும் கவனிக்க!

கலகலப்ரியா said...

அது ஏன் சார் உங்க பதிவோ.. நம்ம பதிவோ.. யாரும் தமிழ் மணம் இணையதளத்திற்கு பரிந்துரைக்க மாட்டேங்கிறாங்க.. தமிழ்/ தமிழன்/ தமிழ் குழந்தை /தமிழ்த்தாய்/தமிழ்க் கரு.. என்று எல்லாமாக அழிந்து கொண்டிருப்பதை எடுத்துச் சொல்ல எல்லாருக்கும் ஒரு தயக்கம்.. எடுத்துச் சொல்றதுக்கு ஆதரவா கூட யாரும் இல்ல.. இதில கூட நண்டுக் கதைதான்.. ம்ம்ம்.. தமிழன் புதிதா பிறக்கணும்னுதான் தோணறது.. சோனியா மற்றும் ராஜபக்ச குடும்பம் அதற்கு உதவும் என நம்புவோம்..

vasu balaji said...

/அது ஏன் சார் உங்க பதிவோ.. நம்ம பதிவோ.. யாரும் தமிழ் மணம் இணையதளத்திற்கு பரிந்துரைக்க மாட்டேங்கிறாங்க../

தமிழ்மணம் தேர்தலுக்கு 49‍-0ஹி ஹி

vasu balaji said...

வாங்க சவுக்கு.

vasu balaji said...

/உங்கள் ஆதங்கள்தான் எனக்கும்/

காலம் கனியும். நம்புவோம்.