முதலைகள்:
இந்துமாக்கடல் இரண்டடி உயர்ந்தது
ஈழத்தமிழருக்காய் எம் தலைவர்கள்
முதலைக் கண்ணீர்..
தனிக்கட்சி:
தாய்க்கட்சிக்கு திரும்ப நினைக்கையில்
தோழமைக் கட்சி அழைப்பு
தனிக்கட்சி தொடங்கினார் தலைவர்..
வேண்டுகோள்:
பதவிக்காய் அலையும்
எதிர்கட்சியை ஒழிக்க
எங்களுக்கே வாக்களியுங்கள்...
அல்வா:
வாக்காளர்களுக்கு
இம்முறை லட்டில்லை அல்வா
தங்கம் விலைஅதிகம்...
ஒற்றுமை!:
இன ஒழிப்புக்கெதிராய்
ஓரணியில் குரல் கொடுப்போம்
எதிரணியழைப்பை புறக்கணியுங்கள்!
அஹிம்சை வழி!
அனைத்துலகமும் கூடி ஆலோசித்துச் சொன்னது
செத்து மடிய வேண்டாம்
கொத்தடிமைகளாய் இருங்கள்..
ஜனநாயகம்:
மக்களே தேர்ந்தெடுக்கலாம்
பாதுகாப்பு வலயமா நலன்புரிநிலயமா
எங்கே சாவதென்று!
ஈனத்தமிழர்:
ஈழத்தமிழர் துயரத்தில்
ஓட்டுப் பொறுக்கும்
ஈனத்தமிழர்கள்
வாக்குறுதி:
அரசிடம் சரணடையும் மக்கள்
சுதந்திரமாக வாழ்வது உறுதி!
கம்பி வேலிகளுக்குள்...
________________________________________________________
12 comments:
//ஈழத்தமிழர் துயரத்தில்
ஓட்டுப் பொறுக்கும்
ஈனத்தமிழர்கள்//
நன்று.
அவர்கள் துயரம் பெருகப் பெருக இவர்களுக்குப் பொறுக்கும் வேலை எளிதாகும்.
//ஜனநாயகம்:
மக்களே தேர்ந்தெடுக்கலாம்
பாதுகாப்பு வலயமா நலன்புரிநிலயமா
எங்கே சாவதென்று!//
இப்போது அதற்கும் அனுமதியில்லையாம். கொல்வதைத் தற்காலிகமாக நிறுத்துகிறோம். மரியாதையாக நலன்புரி(வதை)நிலையத்துக்கு வரவும் என்று அன்பான வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
ஓட்டுப் போட்ட ப்ரியா
பின்னூட்டம் போடாதது
சுருக்கெனத் தைக்கிறது!!!
//அஹிம்சை வழி!
அனைத்துலகமும் கூடி ஆலோசித்துச் சொன்னது
செத்து மடிய வேண்டாம்
கொத்தடிமைகளாய் இருங்கள்..//
இதேதான் சார்...! குழந்தைகளுக்கு பெற்றோர்கள் அடிக்கப்டாது.. அது வன்முறை என்று கூவி குழந்தைகளை வேறிடத்தில் பத்திரப்படுத்த துடிக்கும் மேற்குலகம்.. பிறந்து வளர்ந்த இடத்தை விட்டு அந்நியரிடத்தில் அடிமைகளாய் சித்திரவதைப் பட அனுமதிப்பதை அஹிம்சை எனப் பெருமையாகப் பீற்றிக் கொண்டிருக்கிறது..!
பொறுத்தார் ப்லோக் ஆழ்வார்னு பெரியவங்க சொல்லி இருக்காங்க சார்..
தங்களுக்காக போட்ட சட்டம் அது. இது ஊரார் பிள்ளைதானே. உபதேசம் போதும்.
அட போங்க. காலைல எழும்பி கவிக்கோ ரேஞ்சுக்கு நினைச்சிண்டு இத பதிஞ்சி தேவுடு காக்கறேன் காக்கறேன். சரி நீங்க வந்தாலாவது நம்பர் மாறுமானு இருக்க வரல. அதான் பின்னூட்டதுக்கு முன்னாடி முன்னூட்டம் போட்டது. அழுத பிள்ளை தானே பால் குடிக்குமாம். அதுமில்லாம தேர்தல் வேறயா. போடுங்கமா ஓட்டுன்னு கேட்டு கேட்டு அனிச்சையா வருது.
பட்டாசா இருக்குங்க :-) இதுக்கு பேர் தானே ஹைக்கூ
வாங்க கிரி:)) இல்ல. இது மைகூ. அவ்ளோதான்
மைகூ....
அதுலயும் ஒரு எள்ளல்!!!
எனக்கு சைகூ நு படுறதுங்க :-s
முதல்ல 'கலக்'கூனு சொல்லலாம்னு தான் நினைச்சேன். அப்புறம் என் பேருல நீ எப்டி எழுதப்போச்சுன்னு கிழிபடணும்னு மைகூனு சொல்லிட்டேன். கூச்சப்பட்டு எழுதினது அதனால 'ஷை'கூனு சொல்லிக்கலாம்.
Post a Comment