Wednesday, April 29, 2009

நறுக்குன்னு நாலு வார்த்த - 36

இலங்கை எம்.பி. சிவாஜிலிங்கத்தை நாடு கடத்த வேண்டும்: டி.சுதர்சனம்

அவர் சொல்றதெல்லாம் சொல்லுற தமிழ்நாட்டு ஜனங்களையும் கடத்திடலாமா?
_____________________________________________________
இலங்கை எம்.பி’யின் பிரச்சாரம் இந்திய சட்டத்துக்கு எதிரானது: வயலார் ரவி

நீங்க பண்ணுற அட்டூழியமெல்லாம் எத்தன சட்டத்துகு புறம்பானது தெரியுமா?
_____________________________________________________
ராஜபக்சே மீது கருணாநிதியும், காங்கிரசும் வழக்கு தொடரவேண்டும்: ராமதாஸ்

அப்ரூவரா மாறிடுவாருன்னு நப்பாசை போல. ஏன் கருணாநிதி மீதும் காங்கிரஸ் மீதும் மருத்துவரையா வழக்கலாமே?
_____________________________________________________
ஈழத்தமிழர்களை விட திமுக எதிர்ப்புதான் ராமதாஸ் வைகோவுக்கு முக்கியம்: திருமாவளவன்

சாவர சனங்களை விட தலைவருக்கு சொறியரதுதான் இவருக்கு முக்கியம்.
_____________________________________________________
ரவிசங்கர்ஜி கூறியதால்தான் இலங்கைப் பிரச்னை ஜெ.வுக்கு புரிந்ததா? கனிமொழி

சிதம்பரம் சொல்லி நைனாக்கு புரிஞ்சத விட இது மேலில்லயா அம்மணி!
_____________________________________________________
இலங்கையில் அறிவிக்கப்பட்டிருப்பது போர் நிறுத்தம்தான்: ராஜபக்சே

ஆமாம். ஐ.நா.ல போர் நிறுத்தம்னா என்னான்னு உன்ன கேட்டு மாத்த போராங்களாம். ஓடினவனுக்கு ஒன்பதில குருன்னு இருக்கியா மவனே?
_____________________________________________________
பிரபாகரன் சரண் அடைய வேண்டும்: ப.சிதம்பரம்

ரொம்ப முக்கியம். ஏன்? குவாட்ராச்சி சரண் அடைய வேண்டும்னு சொல்ல முடியுமா? கட்டின வேட்டியும் சொந்தமில்லன்னு ஆய்டும்.
_____________________________________________________
ராணுவ தாக்குதல் நடத்த உரிமை உண்டு: ராஜபக்சே

கேள்வி கேக்கதான் உரிமை இல்ல யாருக்கும்.
_____________________________________________________
ஒன்றரை லட்சம் மக்கள் மீது 5,000 குண்டுகள் வீழ்ந்து வெடித்ததில் நூற்றுக்கணக்கான தமிழர்கள் கோரக்கொலை (படங்களுடன்)

பொய். பொய். சண்டை நிறுத்தியாச்சி. அமைதிப் பூங்காவா நிக்குது. அறுவடை செய்யறது தான் பாக்கின்னு தலைவரே சொல்லுவாரு. இத யாரு நம்பறது?
_____________________________________________________
உங்களுடைய உண்ணாவிரதத்திற்கு ஏற்பட்ட பயன் உங்களுக்கு திருப்தி அளிக்கிறதா?

பதில்: திருப்தி அளிக்கிறது: கலைஞர். அதாவது மேல இருக்கிறது இவருக்கு திருப்தியாம்.
_____________________________________________________
மழை விட்டும் தூவானம் விடவில்லை என்பார்களே, அதைப் போல எல்லா போர் முனைகளிலும் கொஞ்சம் கொஞ்சம் இதுபோல நடக்கக் கூடும். : கலைஞர்

இனிமே ஜெ. போர்னா சகஜம்னு சொன்னாங்களேன்னு பேசுவாரு இவரு?
_____________________________________________________
நளினி விடுதலைகோரிய மனு தள்ளுபடி

வீண் முயற்சி.
_____________________________________________________
நாட்டை கூறு போடுவது பா.ஜ.க.: சோனியா காந்தி

மக்களை கொன்று போடுவது?
_____________________________________________________

2 comments:

கலகலப்ரியா said...

உலக‌த்‌திலேயே 3 ம‌ணி நேர‌ம் உ‌ண்ணா‌விரத‌ம் இரு‌ந்த ஒரே நப‌ர் கருணா‌‌நி‌தி: ஜெயல‌லிதா

கெக்கேபிக்கே..கெக்கேபிக்கே..

vasu balaji said...

வெள்ளச்சாமிங்க கேட்டப்போல்லாம் முடியாது போடான்னு சொன்ன பக்ஸே இவரு பண்ண அடாவடில உண்மை சொன்ன சாதனைய ஏங்க பாராட்ட மாட்டிங்க? மக்கள் சுடுராங்களா? இல்ல தானே? அவன் புலிகள் கூட சண்ட போடல. மக்கள போட்டு தள்ளுரேன். அது போர் நிறுத்தம் தானேன்னு தான் சொல்றான். அது சரிதானுங்களே. சாதனை தானுங்களே இது.