வடிவேலு: நாளை நமதே நாஆஆஆளை நமதே...
பார்த்தி:ஏய். இங்க வா. என்ன? ஆள பார்த்ததும் பம்முவ. இன்னைக்கு பாட்டு, துபாய் டிரஸ்ஸூ. ஏறிப்போச்சா.
வடிவேலு:ஏய். மரியாத மரியாத.இந்த மிரட்டலெல்லாம் வேணாம். நம்ம ரேஞ்சே வேற.
பார்த்தி:அப்டிங்களா. இப்பொ என்னா டுபாக்குரு நான் தெரிஞ்சிக்கலாமா?
வடிவேலு:தம்பி. அய்யா இப்போ சுஸ்ஸுக்கு போய்க்கிருக்கேன். வந்து பார்க்கலாம்.
பார்த்தி: ஏன் அங்க மாட்டுக்கு கழுவ ஆளெடுக்கறாங்களா. அலம்பாம சொல்லிட்டு அப்புறம் நவுரு.
வடிவேலு:நக்கலு.ம்ம்ம். சரி. அண்ணன் சொல்லலைன்னா வருத்தப் படுவ. சொல்றேன். நவனீதம் நவனீதம்னு ஒரு புள்ள. நம்ம ஊருதான். சின்னபுள்ளல பார்த்தது. பாசக்கார புள்ள. இப்போ சுஸ்ஸுல பெரிய வேலைல இருக்கு. இலங்க பிரச்சன அந்தம்மா பார்க்குதாம். அன்னைக்கு யூ டீப்ல நாம இங்க தமிழ்நாட்டுக்கு அதிக அதிகாரம் கிடைக்க வழி சொன்னம்ல. இங்க இருக்கற கேனப்பய புல்லா சோக்குனு நினைச்சி சிரிச்சிட்டு போட்ட்டாக. நம்ம ஐடியா புரியாம. அந்தம்மா பார்த்துட்டு அடுத்த ப்ளேன் புடிச்சி ஓடியாந்து, அண்ணே அசந்து போய்ட்டண்ணே. இந்த ஐடியா நல்லா இருக்கண்ணே. இலங்கல பண்ண முடியாதான்னு கேட்டுச்சி. ஏம்மா முடியாது. அனுமாரு அங்க தான பண்ணாரு. வன்னி வட தொங்கல்ல. கொளும்பு தென் தொங்கல்ல. அவனுக்கும் வேணாம் இவனுக்கும் வேணாம். அலுங்காம நகர்த்தி நடு சென்டர்ல ரென்டயும் பக்கத்து பக்கத்துல வெச்சிட்டா சம அதிகாரம்னு சொன்னது தான். காலைல போனு. அதுக்கு சரியா சொல்ல தெரியலையாம். பான்கிமூனோ எவனோ நம்மள கூட்டியார சொல்லி எலிகாப்டர் அனுப்பறாய்ங்களாம். இன்னும் அரமணில உசிலம்பட்டி பஸ் ஸ்டேன்ட்ல நான் இருக்கணும். வரட்டா.
பார்த்திபன்: பார்த்துடா. நீ அனுமார மாதிரியே இருக்கன்னு உன்னயே பண்ண சொல்லிட போறாங்க.
---------------------------------------------------------------------------------------------
வடிவேலு: ஏம்பா. ஒண்ணு கேக்கவா. குண்டக்க மண்டக்க பதில் சொல்லாம ஒளுங்கா சொல்லுவியா?
சத்யராஜ்: என்னா கேளு.
வடிவேலு: இல்ல. நீயும் சும்மா இருந்த என்ன புடிச்சி ஸ்போர்ட்ஸ் பார்க்கலாம்னு கூட்டியாரயே. ஒண்ணு கூடவா உருப்படியா ஸ்போர்ட்ஸ் தெரியாது உனக்கு. இப்பொ பாரு. கலியாணத்துக்கு போய்கிருந்த ஆள கூட்டியாந்து இங்க பீச்சு மண்ணுல கைப்பந்து மேச்சுன்னு உக்கார வெச்சிருக்க. வேட்டி அளுக்காயிருமேன்னு தூக்கி விட்டு அன்ராயரோட உக்காந்து பார்க்கவே இந்த அரிப்பு அரிக்குதே. இவிங்க எப்டிப்பா சொரியாம கொள்ளாம பந்த அடிச்சிட்டிருக்காய்ங்க?
---------------------------------------------------------------------------------
வடிவேலு:நீ ஆயிரந்தான் சொல்லு வெள்ளக்காரன் வழியே தனி!
சத்யராஜ்: அப்டி என்னா வழிய கண்ட.
வடிவேலு:அங்க பாரு. வாழ்க்கைல விரக்தி அடைஞ்சி தற்கொல பண்ணிக்க போற கேஸெல்லாம் ஒண்ணாக் கூட்டி கால்ல கயத்த கட்டி விட்டு, அதல பாதாளத்துல குதி. விதி முடிஞ்சா செத்துபோவ. இல்லாட்டி பொத்திட்டு போய் பொழைக்கற வழிய பாருன்னு. அங்க பாரு. அது அது வௌவால் கணக்கா தொங்குறத. இப்போ அவனுக்கு புரியுமா இல்லயா. நமக்கு ஆயுசு கெட்டினு.
சத்யராஜ்: அட கெரகம் புடிச்சவனே . இதும் ஒரு விளையாட்டு. பங்கி ஜம்பிங்.
வடிவேலு: மன்கி வால்ல தொங்கறா மாதிரி தொங்கறான். அப்றமென்ன பங்கி. மங்கினு வெச்சிட்டு போவ வேண்டியது தான.
---------------------------------------------------------------------------------------
வடிவேலு: ஏம்பா. நீ என்ன வெச்சி காமெடி கீமெடி பண்ணலயே?
சத்யராஜ்: அது உன் தொழிலு. நான் ஏன்டா பண்ணப்போறேன்.
வடிவேலு: அட சும்மா இருப்பா. எப்போ பாரு விளையாட்டு. பின்ன என்னா. ஃபுட்பால் மேட்ச் பார்க்கலாம்னு கூட்டியாந்து இங்க உக்கார வெச்ச. அப்போவே நினைச்சேன். என்னாடா வலய காணோம். மெதுவா கட்டுவாய்ங்க போலன்னு இருந்தா, முகமூடி கொள்ளக்காரன் மொத்த பயலும் ஒண்ணா சேர்ந்து வாராய்ங்க. அவங்களுக்குள்ளயே பந்த லவட்டிட்டு போக பார்க்குது ஒரு மூதேவி. கேட்டா ஃபுட்பாலுங்கற.
சத்தியராஜ்: அடேய் வெண்ண. இது அமெரிக்கன் ஃபுட்பால்டா.
வடிவேலு: யோவ் விட்டா அமெரிக்கால காலுக்கு பேரு கைன்னு சொல்லுவ. போய்யா.
----------------------------------------------------------------------------------------------
7 comments:
வடிவேல நல்லா வாட்ச் பண்ணீயிடுக்கீங்க போல!
//பான்கிமூனோ எவனோ நம்மள கூட்டியார சொல்லி எலிகாப்டர் அனுப்பறாய்ங்களாம். இன்னும் அரமணில உசிலம்பட்டி பஸ் ஸ்டேன்ட்ல நான் இருக்கணும்//
பஸ் ஸ்டேன்ட்ல எலிகாப்டரா? புட்போட்டுல தொங்கிட்டுப் போவாரோ?? நல்லாத்தான்யா யோசிக்கிறீங்க..
//நம்மள கூட்டியார சொல்லி எலிகாப்டர் அனுப்பறாய்ங்களாம். இன்னும் அரமணில உசிலம்பட்டி பஸ் ஸ்டேன்ட்ல நான் இருக்கணும். வரட்டா.//
ஐயே !! நீ எவ்ளோ நேர இர்ந்தாலும், வண்டி வராது நைனா !!! நேரா, ஏராப்பிலேனு ஸ்டாண்டுக்கு போவியா ? அத்த வுட்டுட்டு, அப்பால ட்டைமு ஆயி பூட்சினா ?
பஸ் ஸ்டேன்ட்ல தான ரை ரைட்னு சொல்லிட்டு போக முடியும். அதான்.
ஹா ஹா ஹா
வடிவேலு வந்தாலே
வெடிதான் சிரிப்பு வெடி
வாங்க ஜமால்.நன்றி.
ம்ம்.. இந்த வழிலேயே போங்க.. வடிவேலு ஐயா உங்கள புடிச்சி வசனம் எழுத கூப்டாலும் கூப்டுவாரு.. விஜயகாந்த் பத்தி செவ்வி கொடுக்கவும் உங்க வசனம் தேவைப் படலாம்.. யோசிச்சி வைங்க..
Post a Comment