Friday, April 10, 2009

கத கேளு கத கேளு-8

காலைல எழுந்து வழக்கம்போல பத்திரிகை பார்த்துத் தொலைஞ்சன். கருணாநிதி சொன்ன கதையெல்லாம் கேட்டு நொந்து நூலாகி நிக்கிறப்ப நமக்குன்னே கவனம் வருது கதை. நம்ம தெனாலிராமன் கதை.

ராஜா கூட மாறு வேடத்துல ஒரு நாள் அந்தி சாய ஊர் நிலவரம் பார்க்க போனாங்களாம். ஒரு ஆல மரத்தடியில ஒரு ஆளு துண்ட விரிச்சி படுத்திருந்ததாம். ஆரோக்கியமாதான் இருந்திச்சி ஆளு. தலைக்கு கப்பரை. கால் மேல கால் போட்ட படி கொஞ்ச நேரம் அமைதியா படுக்கறது, அப்புறம் விசுக்குன்னு எழுந்து உக்காந்து கப்பரைய தட்டிய படி பாட்டு, அப்புறம் தானே ஏதோ புலம்பல், திரும்ப பாட்டுனு இருந்து அக்கடான்னு தூங்கிட்டான். பைத்தியம் மாதிரியும் இல்ல. கப்பரைய பார்த்தா தெரியுது பிச்சக்காரன்னு. ராஜா அலட்டலா சொன்னாரு. என் ராச்சியத்துல பிச்சக்காரன் கூட சந்தோசமா கவல இல்லாம இருக்கான் பாருன்னு. இக்கு பிடிச்ச தெனாலி சும்மா இருப்பாரா. அதெல்லாம் இல்ல. அவன் அவன் சந்தோசமா இருக்கறது அவன் மனச பொருத்த விடயம்னாரு. ராஜாக்கு கோவம் வந்திடிச்சி. எப்பொ நான் எது சொன்னாலும் உடனே மறுப்பா? ஒரு மாச அவகாசம். நீ சொன்னது நிரூபிக்கலன்னா தல தப்பாதுன்னாரு.

சரின்னு போய்ட்டு, அடுத்த நாள் ஆளனுப்பி அந்த பிச்சக்காரன கூட்டியார சொன்னாங்க. அவன் நடுங்கியபடி வந்து ஓன்னு அளுறான். நான் எந்த தப்பு தண்டாக்கும் போகலனு. அட இர்ரான்னு, தெனாலி ஆள கூப்டு இவனுக்கு தாடி மீசை எல்லாம் சரி பண்ணி, நல்லா குளுப்பாட்டி, வேளா வேளைக்கு சாப்பாடு, காலமுக்கு கை அமுக்க ஆளுன்னு பெரிய மனுசங்களுக்கு என்னால்லாம் பணிவிடை உண்டோ எல்லாம் பண்ணி தங்க வைக்கணும்னு சொன்னாரு. இவனுக்கு தல சுத்திப்போச்சி. இதெல்லாம் கனவா? என்னான்னு. இருந்தாலும் அது அது நடக்க நடக்க ஆனந்தமா இருந்திச்சி. சாப்பிட போனா வக வகய பார்த்தது பார்க்கததெல்லாம் இருக்கு. எல்லாத்துலயும் ஒரு கை அள்ளிபோட்டு கலந்தடிச்சி சாப்பாடுன்னு இப்படி எல்லாம் இருக்கான்னு அலமந்து போனான். கனவுல போறா மாதிரி போய் அப்பாடான்னு ஒரு இடத்துல படுக்க போனா அய்யா அங்க இல்ல இங்கன்னு கட்டில காட்டுறாங்க. சரின்னு போய் விளுந்தவன் அய்யோ முங்கிட்டேன்னு அலறுரான். அவ்ளோ மெத்துன்னு படுக்க. ஒண்ணு காலமுக்க ஒண்ணு கை பிடிச்சி விட ஒண்ணு மடில இவர படுக்க வெச்சி தலய பிடிச்சிவிடன்னு நடக்குது. இருக்கேனா. செத்துபோய் சொர்க்கம்பாங்களே அதுவான்னு அப்டியே தூங்கிட்டான். இப்பிடியே பத்து நாள் போச்சி. அன்னைக்கு ராத்திரி படுத்தவன் காலைல எழும்பி பார்க்க பழயபடி அரசமரத்தடில கப்பர தலைக்கு வெச்சி கிடக்கான். தூக்கத்துல வந்துட்டேன் போலன்னு அரண்மனைக்கு போனா ஓடு நாயேன்னு விரட்டுராங்க. தலவிதியேன்னு வந்தான்.

ஒரு மாசம் ஆகபோக ராஜா கேட்டாரு. என்னா சொல்ற இப்போன்னு. சரி வாங்கன்னு பழயபடி மாறு வேடத்துல வந்தா மரத்தடில தோ சாவரேன்னு ஒரு ஆளு. விலா எலும்பெல்லாம் தெரிய, கண்ணு உள்ளுக்கு போக ஓன்னு அழுது அனத்துது. போய் மெதுவா என்னா ஏதுன்னு விசாரிச்சா ஊர்ல ஒருத்தியும் ஒழுங்கா சமைக்கிறதில்லயாம். சாப்பாடுன்னு கண்ட கருமத்த பண்ணி அதுலயும் கெட்டு போனது மிஞ்சி போனதுன்னு தராங்களாம். படுக்க மெத்த இல்ல. காலமுக்க ஆளில்ல. வாசன தண்ணியில்லாம குளிக்க பிடிக்கல. இப்பிடி இருக்கறதுக்கு சாவரதே மேலு. என்னா ராஜா இந்தாளு. மக்கள சுகமா வெச்சிருக்கத் தெரியலன்னு.

ராஜா அசந்து போய் நீ சொன்னது சரிதான்னாரு.

நாமளும் அப்படி தானங்க இருந்தோம். ஏதோ தின்னு, தூங்கி, பேப்பர் பார்த்து அய்யோ இப்பிடி சாக்காட்டுரானே, யாராவது இத தடுக்க மாட்டாங்களான்னு பெருமூச்சு விட்டு, அய்யோ பாவம்னு அழுது எப்டியோ போய்க்கிருந்தோம். ஐநால இருந்து ஆளுங்க, அண்ட தேசத்து ஆளுங்கன்னு வந்தப்ப பரவால்லயேன்னு இருந்தோம். ஒண்ணா குரல், உண்ணாவிரதம், கடைசி சாதனை, போராட்டம் அது இதுனு ஏத்தி விட்டு அவன மாதிரி ஏதோ நம்மாளுங்க முயற்சி பண்ணி இவங்களுக்கு ஒரு விடிவு வரும்னு இருந்தா, கட்சி மாறி கூட்டணி மாறி அவங்களையும் மறந்து, நீ திருடன் நான் திருடன்னு அடிச்சி, அசலூர்க்காரனெல்லாம் நம்மள விட கேவலமா அநியாயம் நடக்குது. ஆனா நான் ஒண்ணும் பண்ண மாட்டேன்னு நம்மள அம்போன்னு விட்டுட்டுட்டாங்க. சுகம் கண்டு அது போனதும் இருந்ததெல்லாம் ந்ரகமா தெரிஞ்சிதே அந்த பிச்சக்காரனுக்கு எம் பொழப்பும் அப்படிதான் ஆகிப்போச்சு. ஏலாம.


3 comments:

ஆ.ஞானசேகரன் said...

நல்லாவே கதை சொல்லுரிங்க.. பராட்டுகள்

vasu balaji said...

வாங்க. நன்றி ஞானசேகரன்.

அ. நம்பி said...

//ஆனா நான் ஒண்ணும் பண்ண மாட்டேன்னு நம்மள அம்போன்னு விட்டுட்டுட்டாங்க.//

தொடக்கத்திலிருந்தே இதுதான் உண்மை.