தினசரி வாழ்க்கையின் அவசரங்களுக்கு நடுவேயும் என்னை பாதித்த, பாதிக்கும் சில நிகழ்வுகள்
Thursday, April 30, 2009
நறுக்குன்னு நாலு வார்த்த - 37
இது கூட "எங்களுடைய சொல்லைக் கேட்கும் புதிய மத்திய அரசு அமைந்தால்"னு ஒரு கொசுறு வைக்கிறீங்களே?
____________________________________________
இவர்களுக்கெல்லாம் மனசாட்சியே இல்லையா? தமிழ்நாடு என்றால் அவ்வளவு இளக்காரமாக நினைத்துவிட்டார்களா? :ஜெ
இருந்தா அரசியல்ல இருக்க முடியுமாங்க?
____________________________________________
வீட்டில் யாருக்கும் சொல்லாமல் முதல்வர் உண்ணாவிரதம் இருந்தார்:கனிமொழி
அதான் போர் நிறுத்தம்னு யாரும் சொல்லாமலே உண்ணாவிரதம் முடிச்சிட்டாரோ?
____________________________________________
தூக்கத்திலேயே மரணம்:58 சிறுவர்கள் -278 தமிழர்கள்!
தூங்கிட முடியுமா. பசி மயக்கம். இத்தனையும் சேர்ந்து அடிக்கறப்போ தெரியும் இப்ப அடிக்கிற கூத்தெல்லாம்.
____________________________________________
ராஜபக்சேவுடன் நடத்திய பேச்சுக்கள் தோல்வி: பிரிட்டன், பிரான்ஸ் வருத்தம்
அம்புகிட்ட பேசி என்னா பண்ண. ஒண்ணும் தெரியாத மாதிரி என்னல்லாம் பண்றானுவ?
____________________________________________
ரத்தினபுரி திருவிழா: சிங்கள இளைஞர்கள் மிரட்டல்!
இவனுங்க கிட்ட உக்காந்து பேசி அரசியல் ரீதியா தீர்வு! அவனவனும் பொத்திட்டு போய் இருந்தா என்னைக்கோ விடிஞ்சிருக்கும்.
____________________________________________
இந்தியா கொடுத்த பயிற்சிகளாலும், ஆயுதங்களாலும் தான் விடுதலைப்புலிகளை வென்றோம்:இலங்கை அரசு
இதுக்கு மேலயும் சொல்லு ராசா. இவ்ளோ சொல்லிட்ட. போனது எவ்ளோ. இருக்கிறது எவ்ளோ எல்லாம் சொன்னாலும் எங்காளு இல்லவே இல்லம்பாரு.
____________________________________________
நம் உணர்வுகளை சரியாக புரிந்து கொண்டு இலங்கையிலே போர் நிறுத்தம் ஏற்பட காரணமாக இருந்தவர் ப.சிதம்பரம்.
நீங்களும் அந்தாளு பிள்ளையும் போய் அங்க சங்கமம் நடத்தபோறம்னு சொல்லி பாருங்க. அப்போ சொல்லுவாங்க அப்பன்மாரெல்லாம். அய்யோ நீயும் நம்பிட்டியா? போனா சங்குதான்னு. ஏம்மா இப்படி ஏமாத்துறீங்க?
____________________________________________
பிரபாகரனை கைது செய்யும் வரையில் போர் நிறுத்தம் கிடையாது:கோதபாய ராஜபக்சே
கடைசித் தமிழன் ஒழியற வரைக்கும் கிடையாதுன்னே சொல்லு ராசா. எங்க தலவரு இருக்காரு எங்க காதுல பூ சுத்த.
____________________________________________
இலங்கையில் பாதுகாப்புவலயம் என்பதேஇல்லை:ஐநா
இத சொல்றதுக்குதான் நீங்க இருக்கிறதா? என்ன பண்ண உத்தேசம்?
____________________________________________
தமிழர்களுக்கு ஆதரவாக குரல்கொடுப்பவர்களுக்கு புலிப்பட்டம் சூட்டுவதில் பயனில்லை:ரணீல்விக்ரமசிங்க
அதுக்கென்னா? தீவிரவாதின்னு சொல்லிட்டு போவாங்க.
____________________________________________
எங்களைப் பொறுத்தவரை தமிழ் ஈழத்தை ஆதரிக்கவில்லை. ராமதாஸ்
ஏன்? நாள பின்ன அரசியல் பண்ண முடியாதில்ல . அதானே. அந்தம்மா சரின்னா இவரு ஆரம்பிச்சிடுவாரு.
____________________________________________
இலங்கைக்கான நிதியுதவியை நிறுத்தும் அமெரிக்கா
கொக்கு தலைல வெண்ண வெச்சிட்டாங்கப்பு. இனிமே உருகி கண்ண மறைக்கிறப்போ கபால்னு அமுக்கிற வேண்டியது தான்.
____________________________________________
Wednesday, April 29, 2009
நறுக்குன்னு நாலு வார்த்த - 36
அவர் சொல்றதெல்லாம் சொல்லுற தமிழ்நாட்டு ஜனங்களையும் கடத்திடலாமா?
_____________________________________________________
இலங்கை எம்.பி’யின் பிரச்சாரம் இந்திய சட்டத்துக்கு எதிரானது: வயலார் ரவி
நீங்க பண்ணுற அட்டூழியமெல்லாம் எத்தன சட்டத்துகு புறம்பானது தெரியுமா?
_____________________________________________________
ராஜபக்சே மீது கருணாநிதியும், காங்கிரசும் வழக்கு தொடரவேண்டும்: ராமதாஸ்
அப்ரூவரா மாறிடுவாருன்னு நப்பாசை போல. ஏன் கருணாநிதி மீதும் காங்கிரஸ் மீதும் மருத்துவரையா வழக்கலாமே?
_____________________________________________________
ஈழத்தமிழர்களை விட திமுக எதிர்ப்புதான் ராமதாஸ் வைகோவுக்கு முக்கியம்: திருமாவளவன்
சாவர சனங்களை விட தலைவருக்கு சொறியரதுதான் இவருக்கு முக்கியம்.
_____________________________________________________
ரவிசங்கர்ஜி கூறியதால்தான் இலங்கைப் பிரச்னை ஜெ.வுக்கு புரிந்ததா? கனிமொழி
சிதம்பரம் சொல்லி நைனாக்கு புரிஞ்சத விட இது மேலில்லயா அம்மணி!
_____________________________________________________
இலங்கையில் அறிவிக்கப்பட்டிருப்பது போர் நிறுத்தம்தான்: ராஜபக்சே
ஆமாம். ஐ.நா.ல போர் நிறுத்தம்னா என்னான்னு உன்ன கேட்டு மாத்த போராங்களாம். ஓடினவனுக்கு ஒன்பதில குருன்னு இருக்கியா மவனே?
_____________________________________________________
பிரபாகரன் சரண் அடைய வேண்டும்: ப.சிதம்பரம்
ரொம்ப முக்கியம். ஏன்? குவாட்ராச்சி சரண் அடைய வேண்டும்னு சொல்ல முடியுமா? கட்டின வேட்டியும் சொந்தமில்லன்னு ஆய்டும்.
_____________________________________________________
ராணுவ தாக்குதல் நடத்த உரிமை உண்டு: ராஜபக்சே
கேள்வி கேக்கதான் உரிமை இல்ல யாருக்கும்.
_____________________________________________________
ஒன்றரை லட்சம் மக்கள் மீது 5,000 குண்டுகள் வீழ்ந்து வெடித்ததில் நூற்றுக்கணக்கான தமிழர்கள் கோரக்கொலை (படங்களுடன்)
பொய். பொய். சண்டை நிறுத்தியாச்சி. அமைதிப் பூங்காவா நிக்குது. அறுவடை செய்யறது தான் பாக்கின்னு தலைவரே சொல்லுவாரு. இத யாரு நம்பறது?
_____________________________________________________
உங்களுடைய உண்ணாவிரதத்திற்கு ஏற்பட்ட பயன் உங்களுக்கு திருப்தி அளிக்கிறதா?
பதில்: திருப்தி அளிக்கிறது: கலைஞர். அதாவது மேல இருக்கிறது இவருக்கு திருப்தியாம்.
_____________________________________________________
மழை விட்டும் தூவானம் விடவில்லை என்பார்களே, அதைப் போல எல்லா போர் முனைகளிலும் கொஞ்சம் கொஞ்சம் இதுபோல நடக்கக் கூடும். : கலைஞர்
இனிமே ஜெ. போர்னா சகஜம்னு சொன்னாங்களேன்னு பேசுவாரு இவரு?
_____________________________________________________
நளினி விடுதலைகோரிய மனு தள்ளுபடி
வீண் முயற்சி.
_____________________________________________________
நாட்டை கூறு போடுவது பா.ஜ.க.: சோனியா காந்தி
மக்களை கொன்று போடுவது?
_____________________________________________________
Tuesday, April 28, 2009
நறுக்குன்னு நாலு வார்த்த - 35
தவறான தகவல் பத்தியெல்லாம் நீங்க பேசலாமா தலைவரே? மொத்த தமிழினத்தையும் ஏமாத்தி, என்னமோ அங்க அமைதி வந்தா மாதிரி 25கோடி வெகுமதி வேற.
____________________________________________________________
இலங்கையின் உண்மை நிலவரம் இரண்டு நாளில் தெரியும்:விஜயகாந்த் பேச்சு
ஆமாம். நாப்பத்தெட்டு மணி, ஓர் இரவு எல்லாம் புடிங்கியாச்சி. இவரு வந்துட்டாரு கெடு சொல்ல.
______________________________________________________
பிரபாகரனின் விளையாட்டு முடிந்துவிட்டது:ராஜபக்சே
மவனே இருடி. யாரு விளையாட்டு முடியிது பார்க்க தான போறம்.
__________________________________________________________
பிரபாகரனை பாதுகாக்க நினைத்தால்......-:அமெரிக்காவுக்கு இலங்கை எச்சரிக்கை
எச்ச நாயே! பச்சை அட்டை வெச்சிட்டு சலம்புற பரதேசி. ஃபெய்ன் சொன்னா மாதிரி மட்டும் நடந்துச்சி அப்போ தெரியும்டி உன் திருகுதாளம்.
____________________________________________________
போர்விதிகள் மீறல்:மனித உரிமைகள் கண்காணிப்பகம் கண்டனம்
கண்டனம் சொல்ற நேரமாய்யா இது. இப்படியே கண்டனம் சொல்லிட்டு கண்டோலன்ஸ் சொல்லிடுங்கடா.
_____________________________________________________
பிரபாகரன் தப்பிவிட்டதாக தகவல்:ராணுவம் அதிர்ச்சி!
இன்னும் இருக்குடாங் கொய்யாலே. இதுக்கே அதிர்ந்தா எப்படி?
________________________________________________
இனம் தின்னும் ராஜபக்சே:வைரமுத்து கவிதை
பேர மாத்திப் போடுங்க கவிஞரே. நிஜம்மா தமிழை தமிழனை நேசித்தால் செய்யும் பார்க்கலாம். இன்குலாப் கவிஞன். நீங்க?
_______________________________________________________
தமிழ் ஈழத்திற்கு வேறு இடத்தை தேர்ந்தெடுக்கவும்: ஜெ.வுக்கு கோத்தபாய ராஜபக்சே பதில்
எப்படி? கொழும்புல இருந்தே மாத்திடலாமா? மக்கா நடக்கும்டியேய்!
______________________________________________________
இலங்கைத்தமிழர் நிவாரண நிதிக்கு 25கோடி வழங்கப்படும்:கலைஞர்
மொத்த தமிழினத்தை முட்டாளாக்கினதுக்கு பரிசு: பொது சனம்!
_____________________________________________________
தனி ஈழம் என்று ஜெ. சொல்லுவதற்கு தேர்தலே காரணம்: கலைஞர்
உண்ணாவிரத மோசடிக்கு என்ன காரணம்?
_____________________________________________________
காங்கிரஸ் கட்சி எந்த தைரியத்தில் தேர்தலை சந்திக்கிறது: நடிகை விந்தியா
தன்னை விட பெரிய துரோகி கூட இருக்கிற தைரியம்தான்!
________________________________________________________
விடுதலைசிறுத்தைகளுக்கு ஸ்டார்சின்னம்:சுப்ரீம்கோர்ட்
சூப்பர் ஸ்டார் சின்னமே குடுக்கலாம் திருமாக்கு. ஏமாத்திட்ட சந்தோசம் என்னாமா தெரியுது முகத்தில. இதில வேற உண்மையான போராட்டத்துக்கு வெற்றியாம்.
___________________________________________________________
நாரதர் கலக்கம் நன்மையில் முடியும்!
நாராயணன் கலகம் நம்மவர் கதை முடிக்கும்!
______________________________________________
Monday, April 27, 2009
நறுக்குன்னு நாலு வார்த்த - 34
அ. 48மணி நேரத்தில் நல்லது நடக்கும்.
ஆ. போர் நிறுத்தம்: ஓரிரவு பொறுத்திருப்போம்: கலைஞர்
இ. இலங்கையில் போரை நிறுத்த வலியுறுத்தி கலைஞர் உண்ணாவிரதம்
ஈ. பிரதமர் கோரிக்கை கருணாநிதி நிராகரிப்பு
உ.போரை நிறுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன: வாசன்
ஊ.மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் போர் நிறுத்தப் பட்டுவிட்டது எனக்கூறியதால் உண்ணாவிரதம் முடித்துக்கொள்ளப்பட்டது.
எ:நாங்கள் போர் நிறுத்தத்தை அறிவிக்கவில்லை:இலங்கை அரசு அதிரடி
ஏ:கனரக ஆயுதங்கள், விமான தாக்குதல்களை நடத்த மாட்டோம் என அறிவித்த இலங்கை அரசு விமானத் தாக்குதலை மேற்கொண்டுள்ளது.
தலைவரே அவங்ககூட சேர்ந்து எங்கள ஏமாத்தினீங்களா? இல்ல எங்களோட சேர்ந்து நீங்களும் ஏமாந்தீங்களா? என்ன பண்ணப் போறீங்க?
_______________________________________________________________
ஈழப்பிரச்சனை:ஜெ.வின் அரசியல் சந்தர்ப்பவாதம்:காங்.
இன்னைக்கு நீங்க பண்ணது மோசடி இல்லையா?
_____________________________________________________
தனி ஈழத்திற்கு ஆதரவு கிடையாது: பா.ஜ.க.
உனக்கும் தமிழர் ஓட்டு கிடையாது. பரதேசிங்களா? ஏன் ராவண ஜன்ம பூமியா?
_____________________________________________________
தனி ஈழம் குறித்து இதுவரை குரல் கொடுக்காதது ஏன்?: ஜெ.வுக்கு விஜயகாந்த் கேள்வி
நீயெல்லாம் இப்படி கேக்கணும்னுதான். போய்யா.
________________________________________________
தனித் தமிழ் ஈழம் தான் தீர்வு என்று ஜெ. கூறுவது தேர்தலுக்காகத்தான்: இல.கணேசன்
நீங்க பேசறதெல்லாம் வேற எதுக்கோவா?
______________________________________________
இலங்கை: பொது வேலைநிறுத்தத்தால் ஏற்பட்ட பலன்கள் என்ன?: கலைஞர் விளக்கம்
சாதனைல ஒண்ணு ஏறிச்சி. நாம இன்னோரு வாட்டி ஏமாந்தோம்.
________________________________________________
இலங்கை பிரச்சனையில் இந்தியா தலையிட முடியாது: வீரமணி
அப்புறம் ஏன் உங்க தலைவர் பட்டியல் போடுறாரு. 48 மணிநேரம், ஒரு இரவு, அரைநாள் உண்ணாவிரதமெல்லாம் எதுக்கு?
________________________________________________
சேலம்: காங். தலைவர் தங்கபாலு உண்ணாவிரதம்
அதுக்கிருக்கிற மரியாதையே போச்சி.
________________________________________________
முதல்வர் உண்ணாவிரதம் காலம் கடந்த நடவடிக்கை: ராமதாஸ்
இல்லையே. சாப்பாட்டு நேரத்துக்கு முன்னாடியே முடிச்சிட்டாரு.
_______________________________________________
இலங்கையில் போர் நிறுத்தப்படவில்லை: சிதம்பரத்துக்கு ராஜா கண்டனம்
அது சிதம்பர ரகசியம்.
____________________________________________________
விடுதலைப்புலிகள் கடும் தாக்குதல்:முன்னேற முடியாமல் திக்குமுக்காடும் ராணுவம்
அழுதாலும் பிள்ளை அவள்தான் பெறணும். நடத்துங்க ராசாக்களா.
______________________________________________________
தே.பா.சட்டதில் இருந்து கொளத்தூர் மணி விடுதலை
தலைவருக்கு இன்னொரு ஆப்பு.
______________________________________________________
பாண்டி பஜாரில் பகுத்தறிவுப் புரட்சி.
பெரியாரால முடியாததை சாதிச்சி காட்டினவங்க நம்ம பாண்டி பஜார் வியாபாரிகள். ஆமாங்க. நாளைக்கு அட்சய திருதியை. நாளைக்கு தங்கம் வாங்கினா இருக்கிற ஒரு தனலச்சுமி அணு அணுவா பிரிஞ்சி வாங்கினவங்களுக்கு அடிமை ஆய்டுவா. நாளன்னைக்கு பேப்பர பார்த்தா தலை சுத்தும். இவ்ளோ கோடி ரூபாய் ஜனங்க கிட்ட இருக்கா? இந்தியா ஏழை நாடுன்னு எவன் சொன்னான்னு எல்லாம் தலைய பிச்சிக்கணும். உஸ்மான் ரோடுல சமத்துவம் யாரும் போராடாமலே வந்துடும். ஒண்ணர கோடி ரூபாய்க்கு நகை வாங்கற ஆளும் ஒரு கிராம்ல மூக்குத்தி தேடுற அம்மணியும் நடந்து தான் போகணும். இதில வேற பரிந்துரைக் கடிதம், தெரிஞ்ச ஆளுக்கு போன்னு எல்லாம் வேற நடக்கும். வட்டிக்கு கடன் வாங்கி, கடன் அட்டைய தேச்சாவது வாங்கியாகணும். கிராம் என்ன விலைன்னு கூட பார்க்க மாட்டாங்க. கொண்டு வந்த காசுக்கு பத்தாக் குறைன்னா காதுல மூக்குல இருக்கிறத களத்தியாவது கூட போட்டு வாங்கிடுவாங்க.
தங்கமே வாங்கினா வெள்ளி விக்கிறது எப்படி? புடிச்சாங்க ஒரு சோசியர. எங்கயோ ஒரு சுலோகம் வடமொழில. இத்தன வருஷம் ஏன்டா தெரியலன்னு எவனும் யோசிக்கிறதில்ல. அந்த சுலோகம் சொல்லி பாரு அட்சய திருதியைல வெள்ளை உலோகம் வாங்கினா அப்படி இப்படின்னு உட்டாலக்கிடி. இப்படி ஒரு ரெண்டு வருசம் ஓட்டி தங்கம் வாங்க முடியாத ஆளையும் வெள்ளி வாங்க வளைச்சு போட்டு இருக்க, வந்துச்சிய்யா பிளாட்டினம். வெள்ளையா வேணுமானாலும் வாங்கு, தங்கம் கலந்துன்னாலும் வாங்குன்னு அவங்களையும் வளைச்சி போட்டாச்சி. ஆளாளுக்கு டோக்கன் வெச்சிண்டு வரிசைல நின்னு வெள்ளத்துல சிக்கினவனுக்கு உணவுப் பொட்டலம் குடுத்தா அடிச்சிப்பாங்களே அப்படி அடிச்சிக்கும். காலைல 6 கே கடை தொறந்து நடு ராத்திரி வரைக்கும் ஓடும்.
ஆடி மாசம் நல்லதில்லைன்னு இருந்த சனங்கள ஆடித் தள்ளுபடின்னு அழுக்கு, பட்டன் போனது, தையல் விட்டதெல்லாம் போட்டு அள்ளுவானுங்க பாரு. சரவணா ஸ்டோர்ல வரவன் அத்தனை பேரும் திருடன்னு தான் பார்க்கறதே. சந்தேகம் வந்தா பாதுகாப்பு பரிசோதனை லெவலுக்கு ஜட்டிய கூட உருவி பார்த்து தான் உள்ள விடுவாங்க. பார்க்கணும் கூட்டத்த. வாடி இங்காலன்னு யாரோ பொம்பளய கைய புடிச்சி இழுத்து பொண்டாட்டி கிட்டயும் அடி வாங்குவான் நம்மாளு. ஆனாலும் அள்ளிக்கிட்டு வந்து வெளிய வரப்ப பார்க்கணும். அப்படி ஒரு பெருமை.
மார்கழி மாசம் பீடை மாசம்னா சொல்றீங்க. மக்கா இருங்கடின்னு புது வருட தள்ளுபடி. மக்கள் வசதிக்காக டிசம்பர் 25 ல இருந்தே . பொருளை தேர்ந்தெடு. காச குடு. ஒன்னாந்தேதி வந்து வாங்கிட்டு போ. எவனுமா யோசிக்க மாட்டான். பொருளை தேர்ந்தெடுத்து காச குடுத்தா இன்னைக்கு வாங்கின கணக்குத் தானேன்னு. நம்மள மாதிரி கேனைங்கள பார்த்து நீங்க ஒன்னும் வாங்கலையான்னு கேக்கற தொனி இருக்கே. கதியத்த பயலேன்னு கேக்குறா மாதிரியே இருக்கும். நீங்களே சொல்லுங்க சாமிகளா, மூட நம்பிக்கை வேணாம் வேணாம்னு கரடியா கத்தினாலும் கேக்காத நம்ம சனங்கள அந்த மூட நம்பிக்கய வெச்சே உடைச்ச பாண்டி பஜார் கடைக்காரன விட பகுத்தறிவு வாதி உண்டுமா?
Sunday, April 26, 2009
நறுக்குன்னு நாலு வார்த்த - 33
அவிங்க உங்க கூட்டணிய கொலைகாரர்கள் கூட்டணிம்பாங்க. அதையும் கேட்டுக்கதான் வேணும்.
______________________________________________
பாஸ்போர்ட் அதிகாரி-மாஜி எம்.பி.மகள் சிறையில்
போலி பாஸ்போர்ட்ல எஸ்கேப் ஆகிட போறாய்ங்க. பார்த்துக்குங்க.
______________________________________________
மே மாதம் பிரதமர், சோனியா, தமிழகத்தில் பிரச்சாரம்
வரவேற்க மக்கள் தயார். என்னா ஒரு ஏத்தம்.ம்ம்?
______________________________________________
ஐநா’ஜோன் ஹோம்ஸ் இன்று கொழும்பு செல்கின்றார்
டூர் போய்ட்டு அங்க போய் விடுதலைப் புலிகள் மக்களை விடுவிக்க வேண்டும். சரணடய வேண்டும்னு திரும்ப சொல்லப் போறாரு.
______________________________________________
இடம்பெயர்ந்த தமிழர்கள் மீது குண்டுத்தாக்குதல்: 174 பேர் பலி
எங்க போனாலும் தான் இடம் பெயர்த்துறானே.
______________________________________________
ஆணித்தரமாக சொல்கிறேன் நாங்கள் போராடி தனி ஈழம் பெற்றுத்தருவோம்:ஜெ.ஆவேசப்பேச்சு
புரிஞ்சோ புரியாமலோ இப்பொ சொல்றத கொஞ்சம் முன்னாடியே சொல்லி இருந்தா என்னல்லாமோ நடந்திருக்கலாம்.
______________________________________________
இந்தியா போர்நிறுத்தம் பற்றி பேசவில்லை: ராஜபக்சே செயலாளர்
இது கலைஞருக்கும் காங்கிரசுக்கும் தெரியவே தெரியாது.
______________________________________________
ஈழத்தில் ஒவ்வொரு வீட்டிலும் எம்ஜிஆர் படம் இருக்கிறது:ராமதாஸ் பேச்சு
யோவ். ரொம்பத்தான்யா நக்கலு. குந்த இடமில்லாம அது அது வெட்ட வெளீயில. இவரு போய் பார்த்துட்டு வந்தா மாதிரி படம் இருக்குதாம்.
______________________________________________
போர்நிறுத்தத்திற்கு சீனா எதிர்ப்பு:கலைஞர் கவிதை
ஏன்! போருக்கு காங்கிரஸ் ஆதரவுக்கு போர்ப் பரணி எழுதலையா?
______________________________________________
இலங்கை கடற்கண்காணிப்பு நிலையம் மீது விடுதலைப்புலிகள் தாக்குதல்
அவனுங்க கண்காணிக்கிறதே வேறயாச்சே.
______________________________________________
போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும்: ஜி-8 நாடுகள் அவசர கோரிக்கை
மயிலே மயிலேன்னு அவனவனும் கூவுறதுக்கு தான் ரெடி. நாள பின்ன நீ என்னா பண்ணனு கேட்றப்படாது.
______________________________________________
வன்னி நிலை:ஐ.நா.வில் விவாதிக்க பல நாடுகள் மீண்டும் முயற்சி
எவ்ளோ தள்ளிப் போட்டாலும் இந்த பக்ஸே முடிச்சி தொலைய மாட்டங்குறான். எவ்வளவு முறைதான் கூட்டம் போட்டு ஒரே பாட்ட பாடுறது.
______________________________________________
பிரபாகரன் சாகும் வரை போராடுவார்: கருணா
நீயெல்லாம் இத சொல்லலாமா. பக்ஸே செருப்புல மண்ணாம். பாலிஷ் போட போ ராசா.
______________________________________________
சிங்கள கொலைவெறியாட்டம்: சமாதான சபை தலைவர்கள் பலி
ஐ.நா.க்கு சொல்லுங்கப்பா. அந்த நாட்டு அரசியல் சட்டத்துக்கு உட்பட்டு, இறையாண்மைக்கு மதிப்பளித்து சமாதானமா போக சொல்லுவாங்க.
______________________________________________
அதிமுக கூட்டணி வெற்றி பெற இலங்கை பிரச்சனை முக்கிய காரணமாக அமையும்: ராமதாஸ்
அதுக்கு மேல உங்களுக்கெல்லாம் வேற எந்த அக்கரையுமில்லன்னு தெரியுமுங்கோ.
______________________________________________
தனி ஈழம் விஷயத்திலும் ஜெ.பல்டி அடிப்பார்:வீரமணி
பெரியார் இல்லாம போய்ட்டாரேன்னு ரொம்ப வருத்தமா இருக்கு. இந்தாளு நாறிப் போயிருப்பாரு. பேருல முதல் எழுத்த மட்டும் மாத்திட்டா சரியா இருக்கும்.
______________________________________________
ஸ்ரீரவிசங்கர் சந்திப்பு: ராஜபக்சே-ஜெ. உறவை உறுதிப்படுத்திவிட்டது: இ.யூ.மு.லீக்
தோ பார்ரா. மொட்டத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போட பார்க்குறது. (அவரு குடுத்த விடியோ போட்டோ எல்லாம் மத்திய மாநில அரசுட்ட குடுக்கலையாம். ஜெ.ட்ட குடுத்தாராம். அதனால இந்த லிங்க்கு)
______________________________________________
இலங்கை பிரச்னையில் பாமக கபட நாடகம்: ஆ.ராசா
திமுக கபட நாடகம் ஏன்னு சொல்லுங்க ராசாவே.
______________________________________________
புலிகள் ஒருதலைபட்ச போர் நிறுத்தம் அறிவிப்பு
புலிகளின் போர் நிறுத்த அறிவிப்பு: இலங்கை நிராகரிப்பு (இதும் செய்திதான். எனக்கு வேலை வைக்கல)
______________________________________________
நக்கலா நாலு கவிதை? - 1
சிவனும் எமனும் சந்திப்பு
நடு(த்தெரு)வில் நாராயணன்
நாடகம் முடிந்தது!
பிரமனின் கணினியில்
பக்சே வைரஸ்
தமிழரழிவு!
பக்ஸே எமனுக்கு
பங்கி மூன் சித்திரகுப்தன்
கணக்குத் தவறாத ஐ.நா!
தமிழீழமே ஒரே வழி
தலைவி பேச்சு
தலைவர்க்கு தூக்கம் போச்சு!
ஈழத் தமிழர் ஓட்டு
இங்கு செல்லுபடியானால்
எத்தனை உயிர் பிழைத்திருக்கும்?
ஒன்றுக்குப் போவதை
உளவு பார்க்கும் செய்மதிகள்
உயிர்க் கொலையைப் பதியாதா?
சொக்கு சூத்திரதாரி
சிவசங்கரன் வேடதாரி
தலைவரு நாதாரி!
போராடும் தாய்மாரின்
போர்வை விலக்கிப் பார்க்கும்
காவல்துறைக் கண்ணியம்.
பதிமூணு பேரு உயிர்த்தியாகம்
பதிமூணாம் தேதி தேர்தல்
பகுத்தறிவுக்கு சவால்?
புலிப்பக்கமிருந்து
எலிப்பக்கம் போன திருமா
போன மானம் வருமா?
__________________________________________________________________
Saturday, April 25, 2009
நறுக்குன்னு நாலு வார்த்த - 32
சரியாச் சொன்னிங்க! மனிசங்க கூட இல்லன்னு அம்மாவும் பிள்ளையும் நிரூபிக்கிறாங்க.
_______________________________________________________
ராகுல்காந்தியால் தூக்கமின்றி தவித்தேன்:பிரியங்கா
பழகிக்கணும்மா. பண்ண பாவம் சும்மா விடாது.
_______________________________________________________
பிரதமர் பதவியை ஏற்க மாட்டேன் : ராகுல்காந்தி
வாழைப்பழம் வேணாம்னு சொல்ற குரங்கா? நம்பிட்டோம். ஆத்தா வையும். பார்த்துக்க தம்பி.
_______________________________________________________
10கோடி நஷ்ட ஈடு வழங்கவேண்டும்:ஜெ.வுக்கு தயாநிதிமாறன் நோட்டீஸ்
யாரு செத்தா என்ன? கோடினு சாவுற கேடிங்க.
_______________________________________________________
பச்சோந்தி பாமகவுக்கு பாடம்புகட்டுங்கள்: ஜி.கே.வாசன்
பசுத்தோல் போர்த்திய புலி உங்களுக்கு புகட்டிட்டு அவங்களுக்கு புகட்டுவாங்க இருடி!
_______________________________________________________
சிவசங்கர் மேனன் இலங்கை பயணம்
இன்னைக்கு எத்தன பேரு போய்ச் சேருராங்களோ? சிரிச்சி சிரிச்சி என்னா சொல்லுவானோ. சிங்களவன் பேயாட்டம் ஆடுவான்.
_______________________________________________________
இலங்கை தமிழர்களை காப்பதிலே கடமையாக இருக்கிறார் கலைஞர்: திருமா
கடனேன்னு இருக்கிறார்தான் சரி.
_______________________________________________________
இலங்கைக்கு இந்திய ராணுவத்தை அனுப்ப வேண்டும்: விஜயகாந்த்
போனது பண்ற நாசம் போறாது. இன்னும் வேற அனுப்பணுமா? பேப்பரே படிக்க மாட்டானா இந்தாளு.
_______________________________________________________
போர் பகுதிக்கு செல்ல ஐ.நா. சபை குழுவை அனுமதிக்க மாட்டோம்: ராஜபக்சே தம்பி
இதெல்லாமும் கேட்டுகிட்டு இறையாண்மை பேசுறவன எதால அடிக்க?
_______________________________________________________
ஈழத்தமிழர் பிரச்சனையில் விரைவில் நல்ல முடிவு வரும் என்ற நம்பிக்கை இருக்கிறது:ப.சிதம்பரம்
யாருக்கு நல்ல முடிவு ? யாரு நம்பறது ?
_______________________________________________________
இன்னும் நான்கு நாட்களுக்குள் யுத்தம் நிறைவடையும்: கோத்தபாய ராஜபக்ஷ
இதானா நல்ல முடிவு.
_______________________________________________________
ஈழத்தமிழர்கள் துயர்துடைக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்:ராகுல்காந்தி
இவருக்கு போட்ட துண்டெல்லாம் அவங்களுக்கு தருவாராமா.
_______________________________________________________
விடுதலைப்புலிகள் என்பது அப்பாவிகளை கொல்லும் இயக்கமாகும்: ராகுல்காந்தி
ஓட்டு விளுகலைன்னு ஏத்திக்கிட்டானோ? ஓவரா உளருது புள்ள.
_______________________________________________________
இலங்கை பிரச்சினை மிகவும் சாதாரண ஒரு பிரச்சினை ஆகும். :ராகுல்
அப்பா புரியாம கெடுத்தது போராது. இவரு கிளம்பிட்டாரு. எவ்வளவு பேரு உசிர குடுத்த ஒரு விடயம் இவருக்கு சாதாரணம்.
_______________________________________________________
விடுதலைசிறுத்தைகள் கட்சி திமுகவுடன்தான் கூட்டணி- எங்களுடன் இல்லை:காங்.
ஆரம்பிச்சிட்டாங்க. ஒண்ண ஒண்ணு கவுத்துகிட்டு மண்ண கவ்வும்.
_______________________________________________________
குடிகாரர் வாயில் புகுந்த விஷ பாம்பு: டாக்டர்கள் சிகிச்சையில் உயிர் பிழைத்தார்
பாம்புதான் பாவம். செத் போச்.
_______________________________________________________
Friday, April 24, 2009
நறுக்குன்னு நாலு வார்த்த - 31
அடிக்கடி இப்படி அப்பாவ, அண்ணன எல்லாம் போட்டுக் குடுக்கிறியேம்மா.
______________________________________________________
எம்.பி.பதவியை ராஜினாமாசெய்யமாட்டேன்:அன்புமணி
உங்க பையனுக்கு என்னாங்க வயசு இப்போ?
______________________________________________________
அதிமுக கூட்டணி நொண்டிக்குதிரை: சிதம்பரம்
அது டாக்டர் சரி பண்ணிடுவாங்களாம். ______________________________________________________
குடும்பம் இல்லாதவருக்கு கோடிக்கணக்கில் சொத்து எதற்கு?: ஜெ.வுக்கு விஜயகாந்த் கேள்வி
குடும்பம் இருந்தா கொள்ளை அடிக்கலாம்னு நினைச்சாரோ?
______________________________________________________
பிரபாகரன் இருக்கும் இடத்தை கண்டுபிடித்துவிட்டோம்:சிங்கள ராணுவ தளபதி
கிளிநொச்சில இருந்து இதே தானே! போங்கடாங்.
______________________________________________________
வீட்டுக்கு அனுப்பமுடியாது என்கிறார் ராஜபக்சே: 5ஆண்டுகள் அகதிகளா தமிழர்கள்?
ஆயுளுக்கும் அவ்வளோதான்.
______________________________________________________
மத்திய,மாநிலஅரசு நடவடிக்கை எடுப்பதால்தான் இலங்கை பிரச்சனை ஓரளவு கட்டுப்பாட்டுடன் இருக்கிறது:தங்கபாலு
அப்படின்னா நீங்க சொல்றா மாதிரிதான் எல்லாம் நடக்குதா? அடங்கொக்காமக்கா!
______________________________________________________
இலங்கை இந்தியாவின் கோரிக்கைக்கு செவி சாய்க்கவில்லை: சிதம்பரம்
என்னா கோரினீங்க அவன் சாய்க்கல? கதவிடறதே பிழைப்பாப் போச்சி.
______________________________________________________
யாரைக் கவிழ்க்க இந்த பந்த்: ராமதாஸ்
மக்களதான்! என்ன சந்தேகம்,?
______________________________________________________
உணர்வு மிகுந்த தமிழர் ஒன்றாய் கூடுவோம்!:கலைஞர்
ஒருத்தன் கூட அப்படி இருக்கிறவன் வரமாட்டான்.
______________________________________________________
அப்பாவி தமிழர்களை கொல்வதைநிறுத்துங்கள்:இந்தியா
அப்படி தேடி அடிக்கிற குண்டு ஏதாவது கொடுத்திருக்கா?
______________________________________________________
கடைசி தமிழன் வெளியேறும்வரை போரை நிறுத்த வேண்டும்: இலங்கைக்கு இந்தியா கோரிக்கை
அது சரி. கடைசினு யாரு சொல்றது?
______________________________________________________
இலங்கை தமிழர்களை காப்பதிலே கடமையாக இருக்கிறார் கலைஞர்: திருமா
கண்டிப்பா. அது கருணா, பிள்ளையான் மாதிரி ஆளுங்களான்னு தான் கேள்வி. இனம் இனத்தோடே! சுரக்குடுக்கை ஆத்தோடே!
______________________________________________________
புலிகள் இயக்கம் அரசியலால்தான் உருவானது: தேவேகவுடா
அட தூங்காம இருந்தா சரியாதான் சொல்றாரு!
______________________________________________________
பிரபாகரனை கொல்ல 'ரா' உளவுத்துறை சதி
இலங்கை ரா போறாது. இந்த ரா வேறயா?
______________________________________________________
இலங்கைமீது இந்தியா போர்தொடுக்கவேண்டும்:திருமா
தொங்குகிட்ட சொல்லுங்க சாமி.
______________________________________________________
மக்கள் மண் சாப்பிட நேரிட்டாலும் விடுதலைப் புலிகளுடனான போர் நிறுத்தப்பட மாட்டாதென பிரதமர் ரத்னசிறி விக்ரமநாயக்க
மக்களில்ல. நீங்கதான் மண்ண கவ்வ போறிங்க. ஆமாம். ஊழல் கதை என்னாச்சி?
______________________________________________________
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உப தலைவராக கருணா நியமனம்
ஆஹா! அரசியல் தீர்வுக்கு அச்சாரம் போட்டாச்சா? எட்டப்பா என்னாடா உன் ஜித்து வேல?
______________________________________________________
விடுதலைப்புலிகளை விட சிறிலங்கா அரசு மீது அதிக தவறு: ப.சிதம்பரம்
செருப்படி பட்டாதான் புத்திவரும்னு திட்டுறது சும்மா இல்ல போலயே? சொக்குக்கு சொல்லுங்க சாமி!
______________________________________________________
மன்னித்து விடு தேவதையே!
அகிலமெங்கும்
உன் பெயர் குழந்தை
அடிமை நாட்டில்
நீ ஓர் தீவிரவாதி!
ஆம் நீ ஓர் தீவிரவாதி!
பார்வைக் கணையால்
பதைக்க வைக்கும்
நீ ஓர் தீவிரவாதி
பறக்கு முன்னே உன்
இறகொடித்த பின்னும்
பார்வையால் கொல்லும்
நீ ஓர் தீவிரவாதி!
மனிதம் இழந்த
மனிதர் மத்தியில்
மனம் தேடும்
நீ ஓர் தீவிரவாதி!
அப்படிப் பார்க்காதே அன்பே
அதைத்தாங்கும் வலிவெமக்கில்லை
மன்னித்து விடு தேவதையே
இது மானிடர் வாழும் பூமி!
தேவதைகளுக்கு
இங்கே இடமில்லை!
இல்லாத இறைவைனின்
இறையாண்மை இங்கு வேதம்!
அரசியல் சட்டமென்றோர்
அரக்கச் சட்டையணிந்த
அசுரர் வாழும்
அவனியிப் பூமி!
தமிழனாய் பிறந்ததால்
தன்மானம் இருப்பதால்
சுடப்பட்டாய் நீ
சுதந்திரம் கேட்டதால்!
தடைகளை உடைத்தித்
தரணியில் ஓர் நாள்
தமிழினம் வெல்லும்
தமிழீழம் மலரும்
அது வரை...
மன்னித்து விடு தேவதையே
இது மானுடம் மறந்த பூமி!
_________________________________________________
Wednesday, April 22, 2009
நறுக்குன்னு நாலு வார்த்த - 30
யப்பா! தப்பிச்சங்கடா சாமி. பார்க்கரோம்ல அனுதாப பவரு. ஆப்பு நீ போடாத சோப்பு !
__________________________________________________
இந்தியாவின் பிரதமரை ஜெ. தீர்மானிப்பார்: ராமதாஸ்
ஆரம்பிச்சிட்டாரு வேலைய. அப்ப அவிங்க இல்லங்கறீங்களா?
______________________________________________________
ப.சிதம்பரம் நாளை வேட்புமனு தாக்கல்
கற்றோர்க்கு சென்றவிடமெல்லாம் சிறப்பு! காங்கிரசுக்கு சென்றவிடமெல்லாம்................? சூதானமா இருந்துக்குங்க.
______________________________________________________
கள்ளுக்கடை திறப்பதில் தவறு இல்லை: ஈ.வி.கே.எஸ்.
நேத்து தொங்குக்கு எதிரா கள்ளு சங்கம் அறிக்கை. உடனே இவரு அங்க ஆதரவு. காங்கிரஸ் ஊத்திக்கும்னு புரிஞ்சு வேட்டி உருவ தயாராவுதுங்க தலைங்க.
______________________________________________________
நடிகை ஐஸ்வர்யாராயை சின்னமாக கேட்ட ’மனிதன்’!
அடங்கொக்காமக்கா. அடைஞ்சே தீருவேன்னு சபதம் போட்டாரோ?
______________________________________________________
இலங்கை பிரச்சனையை முன்வைத்து தேர்தல் பிரச்சாரம்: தமிழக அரசு தடுக்க கூடாது என கோரி மனு:விஜய டி.ராஜேந்தர்
ஆனை இறந்தால் ஆயிரம் பொன்னாம். ஈழத்தமிழன் சாவு இவனுகளுக்கு ஓட்டு! இப்படி பேசுறவனுவ யார்னாலும் செருப்பால அடிச்சா தடுக்கக் கூடாதுன்னு சட்டம் போடுங்கப்பு.
______________________________________________________
நானும் ஒரு மனித பிறவிதான். ஒரு மனித பிறவி இன்னொரு மனித பிறவியை மன்னிக்க இயலாது' பிரியங்கா காந்தி
சின்ன பிசாசு தயாராவுது பாரு. அம்மா எட்டடின்னா இது பதினாறடி. பரதேசி. மன்னிக்கத் தெரிஞ்சவந்தான் மனுசன். இல்லாட்டி இப்படி பேச மனுசனே இருக்க மாட்டான்.
______________________________________________________
மிருக வெறிகொண்டு ராணுவம் தாக்குகிறது:கருணாநிதி தைரியமானமுடிவெடுக்காதது வேதனைஅளிக்கிறது:ஜெ.
குறிக்கோள் வேறன்னு தெரியுதம்மணி. உங்க வேதனையும் புரியுது.
______________________________________________________
போர்நிறுத்தம் கோரி 23ல் பொதுவேலைநிறுத்தம்: கலைஞர்
இந்த வயசுல என்னா அல்லாடுது பாவம். பொம்பள லாரல் ஹார்டிங்க கிட்ட மாட்டிக்கிட்டு கந்தலாலா.
______________________________________________________
இலங்கையில் போர் நிறுத்தத்துக்கு தி.மு.க மட்டுமே வழிவகுத்தது. ஆர்.எம்.வீரப்பன்
மொத்தமா காலி பண்ணிக்கோ. கண்டுக்கிற மாட்டோம்னு சொல்லிட்டீங்களா என்னா? பேசுது பாரு டுபுக்கு.
______________________________________________________
ஈழப்பிரச்சனையை விட கூட்டணிதான் முக்கியம் என பாமகவும் மதிமுகவும் சென்றுவிட்டன: திருமா
தேர்தல் முடியறதுக்குள்ள பாதி பேர்த்த பைத்தியமாக்கிடுவாரு திருமா. ஆனாலும் நியாயந்தேன். இவரு கூட்டணிதான் முக்கியம்னு இருந்தவருதானே?
______________________________________________________
இலங்கை அதிபரின் சிறப்பு தூதர் இந்தியா வருகிறார்
பசிலு பச்சே தானே! ஏனோ? யக்கா மேக்கொண்டு என்னா பண்ணனும்னு கேக்கவோ?
______________________________________________________
பந்த்தில் கலந்து கொள்ளமாட்டோம்: வக்கீல்கள் சங்கம்
ஆமாமா. உசாரு. இதாஞ்சாக்கு கலாட்டா பண்ணாய்ங்கன்னு காக்கி புடிச்சி போட்டுடும்.
______________________________________________________
காங்.ஆதரவாக பிரசாரம்செய்த நடிகர்மீது செருப்புவீச்சு
காங்கிரசுன்னு காதில விழுந்தாலே காலில இருக்கிறது நாம்போறேன்னு கழண்டு போகுது. என்னா செய்ய?
______________________________________________________
Tuesday, April 21, 2009
நறுக்குன்னு நாலு வார்த்த - 29
ஏன். ஏப்ரல் 14 போய் ஒரு வாரமாச்சே? அடுத்த கெடு சொல்லாம விட்டாங்களா?
___________________________________________________________
விடுதலைப்புலிகளின் இயக்கம் ஒரு பயங்கரவாத அமைப்பு; அதன் தலைவர் போர் குற்றவாளி என்கிறார் மன் மோகன் சிங்
சிங்கு. தல்பா கட்டியிருக்கோம். காதுல பூ சுத்த முடியாதுன்னு தான எங்களுக்கு சுத்துறீரு. பியாந்த் சிங்க ஆதரிச்சவங்க போதிசத்துவரா? சொல்லிட்டு ஊரு பக்கம் போயிருவ?
______________________________________________________________
கொல்லைப்புறம் வழியாக எம்பியாக்கும் வழக்கத்தையே அவர் தொடர்ந்து கடைப்பிடிக்கிறார். இப்படிப்பட்ட ராமதாஸ், முதல்வர் கருணாநிதியை விமர்சிப்பதற்கு தகுதி இல்லாதவர்.: ஸ்டாலின்.
அய்யய்யோ அண்ணானு கனிமொழி பதறி போராங். பாருங்ணோவ்.
_________________________________________________________
முதல்வர் கருணாநிதிக்கு தேர்தல் பயம்: டி.ராஜா
உங்கள் மாதிரி ஜெயிச்சா பதவி இல்லன்னா போராட்டக் குடைச்சல்னு பொழுது போவாதே சாமி.
________________________________________________________
உண்டியல் குலுக்கியவர்கள் கரன்சி எண்ணுகிறார்கள்: கம்யூ. கட்சி மீது இளங்கோவன் தாக்கு
உண்டியல்ல கரன்சி விழாம கல்லு மண்ணா விழும். எண்ணாம என்ன பண்ண?
_________________________________________________________
சாதனைகளை சொல்லி காங்கிரஸ் வாக்கு கேட்கவில்லை: என்.வரதராஜன்
நக்கல பாரு. நாட்ல யாரும் செருப்பு போடக்கூடாதாக்கும். எல்லாரும் எறிஞ்சா வாங்குறது யாரு?
__________________________________________________________
எம்பி பதவியை அன்புமணி ராஜினாமாசெய்யாததுஏன்?
அவருக்கு தெரியாதாம். அப்பாவ கேக்கட்டுமாம். அப்பிடியே கனிமொழி ராஜினாமா கடிதம் குடுத்தாங்களான்னும் சொல்லட்டுமாம். எப்படி வசதி?
__________________________________________________________
மாயாவதியுடன் ஜெ.வை ஒப்பிடக்கூடாது:பகுஜன்சமாஜ்
மனுசன் இருக்கிற இருப்பில இதான் பண்றாங்களாக்கும். அங்க கன்ஷிராம், இங்க எம்.ஜி.ஆர் பண்ண பெரிய தப்புன்னு தெரியாதாக்கும்.
__________________________________________________________
தங்கபாலுவுக்கு எதிராகபிரசாரம்:கள் இயக்கம்அறிவிப்பு
மப்பு கூட துப்புதே தொங்கு. இப்படியா நாறப்பொழப்பு?
_________________________________________________________
வைகோவின் வழக்காடல்:நாஞ்சில் சம்பத் விடுதலை
இதானா? முள்ளு முள்ள எடுக்கறது?
________________________________________________________
உண்ணாவிரதம் இருந்து வரும் பெண்களுக்கு கவிஞர் கனிமொழி எம்.பி. நேரில் சென்று கண்ணீர் மல்க ஆறுதல் கூறினார்.
யம்மாடி. சீன் போடாம நிஜம்மா வருத்தம்னா நானும் உக்கார்ரேன்னு ஒரு பிட்ட போட்டா முதுகு வலி முட்டிக்கால் வலி எல்லாம் காணாம போய் அய்யகோ! சொக்கு கனிமொழிய காப்பாத்துன்னு நிஜம்மா கால்ல விழமாட்டாரா? "காட்டிக் கொடுத்தார் கலைஞர்! காப்பாத்தி விட்டார் கனிமொழினு" வரலாறு பேசும்ல?
________________________________________________________
சோனியாகாந்தியிடம் பேசுவதாகவும், போர் நிறுத்தம் பற்றி உரிய நடவடிக்கைகளை அவர்கள் எடுப்பார்கள் என்றும், முதல்வர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஏஞ்சாமி. சோனியாகாந்தியால இதெல்லாம் பண்ண முடியும்னா அப்போ சிங்கு, ஆப்பு எல்லாம் டம்மி. மம்மி தான் எல்லாம்னு வருதே? அப்டிதானா?
__________________________________________________________
போரை நிறுத்த சோனியா மூலம் முயற்சி: சுதர்சனம்
தேர்தல்லாம் முடியட்டும். இதுக்கென்னா அவசரம். ?
___________________________________________________________
மீட்பு பணிகள் முடிந்ததும் பிரபாகரன் மீது தாக்குதல்: உதய நாணயகரா
சடலத்தை எல்லாமா? தினம் புளுகுறவனுக்கு பேர பாரு.
____________________________________________________________
ஈழத்தில் பலியாவதை தடுத்து நிறுத்துங்கள்:அமெரிக்கா
அடங்கொய்யாலே? உன்ன அதானே கெஞ்சிண்டிருக்காங்க. சாவடிக்கரவன் உங்க சிடிசன் தான? நீ யார கெஞ்சுற?
__________________________________________________________
பாமகவும், மதிமுகவும் ஈழத்தமிழர்களுக்கு பெரும் துரோகம் செய்துவிட்டது:திருமா
முதல்ல அடிச்சவன் போலீஸ்ல புகார் குடுக்கிறா மாதிரி. யார்னாலும் உங்களுக்கு அடுத்து தான். போட்டியே இல்லை.
________________________________________________________
நான் பிரபாகரனை வெறுக்கவில்லை: பிரியங்கா காந்தி
எதுக்கும் ரெண்டு நாள் போகட்டும். இன்னைக்கு இப்படி சொல்லிட்டாங்கனு இருக்க நாளைக்கே நான் அப்படி சொல்லலன்னு வந்தா நாங்களே கேனனு திட்டிக்க வேண்டி இருக்கு. சகவாசம் அப்படி.
_________________________________________________________
சோனியாவின் முகத்தில் விழிக்கமுடியாத நிலை:லாலு
அந்தம்மா மக்கள் முகத்தில் விழிக்க முடியாத நிலை வரும்.
________________________________________________________
Monday, April 20, 2009
நறுக்குன்னு நாலு வார்த்த - 28
ஆடு பகை! குட்டி உறவு.
____________________________________________________
‘’பிரபாகரன் தீவிரவாதி அல்ல; என் நண்பர். நல்ல தீர்ப்புக்காக, உயர்ந்த நோக்கத்திற்காக போராடிக்கொண்டிருக்கிறார்கள் விடுதலைப்புலிகள்: கலைஞர்
முதுகு வலி மருந்து அதிகமா சாப்டாரா? இல்ல நமக்கு தான் கண்ண கட்டுதா?
____________________________________________________
பிரபாகரன் பற்றி கருணாநிதி கூறியது அவரது சொந்த கருத்து:காங்.
மத்ததெல்லாம் காங்கிரஸ் சொல்லிக் குடுக்கிறதா?
____________________________________________________
’’கருணாநிதி ஒரு சாணக்கியர். எப்போது எதைச் சொல்ல வேண்டும் என்று அவருக்கு தெரியும்: டக்ளஸ் தேவாநந்தா
இதுக்கு பேரு சாணக்கியம். தூ. பாம்பின் கால் பாம்பறியும் இல்லயா டக்ளஸ் கோடாலிக் காம்பு?
____________________________________________________
எமது நண்பர் கருணாநிதி,பிரபாகரனை தன் நண்பர் என்றுவிட்டாரே:கவலைப்படுகிறார் இலங்கை அமைச்சர்
அட ஏங்க கவலையெல்லாம் பட்டுகிட்டு. இந்த பிலிமெல்லாம் நாம பாக்காததா?
____________________________________________________
’ஆங்கில தொலைக்காட்சியில் வெளியான செய்தி தவறானது.': கருணாநிதி
மருந்து இறங்கிடுச்சி. யார்பா அங்க கவலைப் பட்ட முந்திரி. இப்போ சந்தோஷமா? தலீவா சொக்கு துவைச்சி காய போட்டுச்சோ? நோண்டி நோண்டி கேட்டது கனிமொழி தானே?
____________________________________________________
ராஜீவ்காந்தி மறைந்த இடத்தை எப்படி மறக்க முடியும்:கலைஞர் பேட்டி
முடியுமாய்யா. பாதில ஊட்டுக்கு அனுப்பின இடமாச்சே. இல்லாட்டி மறந்து போய்ருக்கும்.
____________________________________________________
ஈழம் பற்றிய கவலை இல்லை:குடும்பம் பற்றிய கவலைதான் இருக்கிறது:அன்புமணி குற்றச்சாட்டு
அங்க பொண்ணு மாட்டி விட்டிச்சி இங்க புள்ள. அப்பனுக்கு ஆப்பு வெக்கறதுக்குனே இருக்காங்க.
____________________________________________________
மின்சார நாற்காலியில் அமரவைக்க சிலர் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்; தாய் நாட்டிற்காக கழுத்தையும் கொடுப்பதற்கு தயார்: மஹிந்த
அப்போ கூட நாற்காலிய விடமாட்டான். பேரப்பாரு. எடுக்கிறது பிச்ச. பேரு ராஜ எச்ச!
____________________________________________________
ஸ்லம்டாக் பட சிறுமியை அவரது தந்தையே 1 - 1/2 கோடிக்கு விற்க முயற்சி
கோடீசுவரனாக இவரு புதுசா வழி கண்டு பிடிச்சாரா? செருப்பால அடி. விட்டா பொண்ணு வாங்கினா ஆஸ்கார் இலவசம்னு சொல்லுவான் போல.
____________________________________________________
பாகிஸ்தான் ஆபத்தில் இருக்கிறது: முஷாரப்
இதுல அந்த எச்சக்கு ஒத்தாசை. கெடுவான் கேடு நினைப்பானாம்.
____________________________________________________
தேர்தலில் வாக்களிப்பதை கட்டாயமாக்க சட்டம் இயற்றக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்தது.
கள்ள வாக்களிக்க கேட்டாங்களோ?
____________________________________________________
இலங்கையில் போரை நடத்துவதே இந்திய அரசுதான்: ராமதாஸ்
அன்பு மணி பதவி விலகறதுக்கு முன்னயும், அம்மையார் அணியில இணையறதுக்கு முந்தியுமிருந்தே சீமான் இதத்தான சொன்னாரு. இப்போதான் இவரு கண்டு பிடிச்சாராமா?
____________________________________________________
பிரபாகரனுக்கு 24 மணி நேர கெடு: ராஜபக்சே
அதுக்குள்ள பின்னி பெடலெடுக்கணுமா? பண்ணுவாங்கப்பு. நோ மௌத் டாக். ஒன்லி ஹேன்ட் டாக்.
____________________________________________________
பிரபாகரனிடம் ஒரு மணி நேரமாவது போர்நிறுத்தம் செய்யுமாறு கோர முடியுமா? ஜனாதிபதி சவால்
உன்கிட்ட கோரினதுக்கு பதில் என்னாடா வெண்ண! நரிக்கு பொறந்த நாப்பய. சரின்னு இருந்தா இவரு வந்து நோவாம நோம்பு கும்பிட்டு போவாரு.
____________________________________________________
Sunday, April 19, 2009
கத கேளு கத கேளு - 9
தன் முயற்சியில் சற்றும் மனந்தளராத விக்கிரமாதித்தன் மரத்தின் மீதேறி ஒரே வீச்சில் உடலை விடுவித்துத் தோளில் போட்டுக் கொண்டு இறங்கி நடக்கலானான். வேதாளம் இடி இடியென்று சிரித்து, அரசே! உனக்கேன் இந்த வேண்டாத வேலை. என்னை விட்டு விடு எனக்கூறியது. பதிலேதும் கூறாத விக்கிரமாதித்தன் தொடர்ந்து நடக்கலானான். சிறிது தூரம் சென்றதும் வேதாளம், சரி மன்னா, நான் என்ன கூறியும் நீ கேட்கப் போவதில்லை. உன்னைப் போலவே பிடிவாதமான ஒரு மன்னன் கதையைச் சொல்கிறேன் கேள் எனக் கூறியது.
மகதநாட்டின் ஆளுகைக்குட்பட்டு மச்சநாதன் என்றோர் குறுநில மன்னன் மஞ்ச தேசத்தை ஆண்டு வந்தான். அவன் நீதிமான். அவனது ஆட்சியில் அவன் தேசம் பல வழிகளிலும் செழித்தோங்கியது. அந்த தேசத்தில் ஒரு துறவி இருந்தார். தன் தவ வலிமையால் முக்காலமும் உணர்ந்த ஞானியாக விளங்கினார். மன்னன் அவர் மீது மிகுந்த பாசமும், பக்தியும் கொண்டவனாக இருந்தான். பல தருணங்களில் மன்னன் அவரது ஆலோசனை நாடிச் செல்வது வழக்கம். அவரோ இப்படித்தான் செய்ய வேண்டும் என்ற இடையூறில்லாமல், பல்வேறு வழிகளைக் கூறி இவற்றில் எது சிறந்தது என்று மன்னன் முடிவு செய்ய வேண்டும் எனக் கூறி மன்னன் பொறுப்புணர்ந்து செயல் பட வழிகோலினார்.
அந்தத் துறவி தினமும் ஒரே ஒரு வேளை ஒரு தேங்காய்ச் சிரட்டையை எடுத்துக் கொண்டு ஏதோ ஒரு வீட்டில் சென்று பிச்சை வேண்டி நிற்பார். சமைத்த உணவு எதையும் ஏற்க மாட்டார். ஒரு கைப்பிடி அரிசி மட்டும் பெற்றுக் கொண்டு, இன்னோர் வீட்டிற்குச் சென்று அங்கு அரைக் கைப்பிடி பயற்றம் பருப்பு பிச்சையாகப் பெற்று வந்து இரண்டையும் ஒன்றாய் சோறாக்கி உண்பார். வேறு யார் எது கொடுத்தாலும் பெற மாட்டார். தவத்திருந்து இறையருள் வேண்டி நிற்பார். மன்னனுக்கு இது மிகுந்த மன வருத்தமளித்தது. பல முறை அவரிடம் மன்றாடி, துறவியாரே உங்களுக்கேன் இந்த நிலை. என் அரண்மனைக்கு வாருங்கள். எனக்கு ஆலோசகராக இருங்கள். இப்படி பிச்சை எடுக்க வேண்டாம் எனக் கேட்டும் துறவி மறுத்து விடுவார்.
ஒரு நாள் மன்னன் பிடிவாதமாக துறவியிடம் அழுது மன்றாடி ஒரே ஒரு வேளை தன் அரண்மனையில் விருந்தாளியாக வந்திருந்து அவருக்கு தானே சேவை செய்ய அனுமதிக்க வேண்டுமென மன்றாடினான். வழக்கம் போல் துறவி எவ்வளவோ மறுத்தும், அழுது கெஞ்சி வற்புறுத்தலானான். முனிவரும் வேறு வழியின்றி சரி ஒரே ஒரு நாள் வருகிறேன். ஆனாலும் எனக்கு என் தினசரி உணவு மட்டுமே வேண்டும். வேறு எதுவும் உண்ண வற்புறுத்தலாகாது என்ற நிபந்தனையும் விதித்தார். மன்னன் மகிழ்வுடன் அவரை வரவேற்க சகல ஏற்பாடுகளும் செய்தான். அவர் வந்ததும் பாதம் கழுவி, சகல மரியாதையும் செய்வித்து சாப்பிட அழைத்துச் சென்றான். அவரும் அவருடைய உணவை அவருடைய சிரட்டையிலேயே பெற்று உண்டு விட்டு நன்றி கூறி கிளம்பினார். மன்னனோ அவர் கால்களைப் பிடித்துக் கொண்டு துறவியாரே, நான் தங்களுக்கு சேவை செய்யவும் தாங்கள் அனுமதித்தீர்கள். எனவே இப்படிப் போகலாகாது என்று ஒரு மஞ்சத்தில் அமரச் செய்து தானே விசிறத் துவங்கினான். துறவி மெதுவாக தூங்கி விழ ஆரம்பித்தார். மன்னன் அவரை படுக்கச் செய்து விசிறவும் கால்களைப் பிடித்து விடவுமென சேவை செய்தான். அப்போது அவன் மார்பிலிருந்த நவரத்தின மாலைகள் ஒன்றோடு ஒன்று மோதி உண்டாக்கும் சப்தம் அவருக்கு இடையூறாக இருக்கலாம் எனக்கருதி அவற்றை அவிழ்த்து அங்கிருந்த மேசையிலி வைத்து விட்டு அவருக்கு பணிவிடை செய்தான். துறவி அசந்து தூங்கிவிட்டார். மன்னனும் சப்தமிடாமல் அறையை விட்டுச் சென்றான்.
மாலையில் துறவி எழுந்து மன்னனிடம் விடைபெற்றுச் சென்ற பிறகு மன்னன் தன் மாலைகளை எடுக்க அந்த அறைக்குச் சென்ற போது அவற்றைக் காணவில்லை. அரசவையே அல்லோல கல்லோலப் பட்டது. இறுதியில் அமைச்சர் காவலருக்கு கட்டளையிட்டு அரண்மனை முழுதும் சோதனையிட்டும் அது கிடைக்கவில்லை. மன்னன் பெரும் கோவத்துக்குள்ளானான். செய்வதறையாது திகைத்த மந்திரி பொற்கொல்லனிடம் அதே போல் வேறு நகைகள் செய்யச் சொல்லி இரண்டாம் நாள் ஒரு திருடனைப் பிடித்து சோதித்ததில் அவனிடமிருந்ததாகவும், அவனும் குற்றத்தை ஒப்புக் கொண்டதாகவும் கூறினான். மன்னன், அவனை விசாரித்ததும் அவன் தானே திருடியாதாக ஒப்புக் கொண்டான். மன்னனோ அவனுக்கு கழுவிலேற்றிக் கொல்லும்படி தண்டனை விதித்து விட்டார். உடனே அவன், மன்னா நான் திருடவில்லை. மந்திரியார்தான் இப்படி ஒப்புக்கொள்ளச் சொன்னார் எனக் கதறவும் அமைச்சர் இல்லை மன்னா. இவன் தண்டனைக்கு அஞ்சி இவ்வாறு கூறுகிறான் எனச் சொன்னார்.
அந்த வேளையில் துறவி மிகவும் வாடி வதங்கி அங்கு வந்தார். மன்னா, இவன் சொல்வது உண்மை இவன் திருடனல்ல. நான் தான் திருடினேன் என்றார். மன்னனோ இல்லை. நீங்கள் இவன் மீது இரக்கம் கொண்டு இவ்வாறு கூறுகிறீர்கள். நீங்கள் விரும்பினால் நாதே நன் தர இருக்கும்போது நீங்கள் ஏன் திருட வேண்டுமென்றான். அவரோ ஏனென்று தெரியவில்லை. நீஎவ்வளவு முறை என்னை அரசவையில் பதவியில் இருத்தி சகல வசதிகளும் தருவதாகக் கூறிய போதெல்லாம் சலனப்படாத என் மனது அன்று நான் துயிலெழுந்தவுடன் உன் மாலைகலைக் கண்டதும் திருடத் தோன்றியது. நானும் எடுத்துவிட்டேன். இதை வைத்துக் கொண்டு நான் எதுவும் செய்ய முடியாதுதான். எனக்குத் தேவையுமில்லை தான். ஆனால் என்னால் என் தவறைத் திருத்திக் கொண்டு உன்னிடம் மன்னிப்புக் கேட்டு திரும்பக் கொடுக்கத் தோணவில்லை. அதன் பிறகு எனக்கு ஓயாத வயிற்றுப் போக்கு. உடல் தளரத் தளர மனச் சாட்சி இடித்துரைத்தது. என் குற்றத்தை ஒப்புக் கொண்டு எனக்குண்டான தண்டனையை அனுபவிக்க வேண்டுமென்று வந்தேன் என்றார்.
மன்னன், துறவியாரே எனக்கொன்றும் விளங்கவில்லை. நீங்கள் இப்படிச் செய்ய காரணமென்ன என்பதையும் நீங்கள் தான் கூற வேண்டுமென்றான். துறவி, மன்னா எனக்கு அளித்த சோறு எப்படிச் சமைக்கப் பட்டதென்றார். அரசன் மந்திரியைப் பார்க்க, மந்திரி மடைப்பள்ளிக்காரனை அழைக்க அவன் மன்னா நீங்கள் சொன்ன படி புது அரிசி தனாதிகாரியிடம் பெற்றுத்தான் சமைத்தேன் என்றழுதான். துறவி தனாதிகாரியிடம் அந்த அரிசி எப்படி அரண்மனைக்கு வந்ததெனக் கேட்டார். தனாதிகாரி ஏடுகளைப் பார்த்து, துறவியாரே இந்த அரிசியை ஒருவன் களவாடி கொண்டு செல்லும் போது காவலரிடம் பிடி பட்டான். அவனுக்கு தண்டனை அளித்து உரியவர் தக்க சான்றுடன் நிரூபித்துப் பெற்றுச் செல்லலாம் எனப் பறை அறிவித்தும் யாரும் வரவில்லை. எனவே அரசுக்கு சொந்தமானது என்றார்.
துறவி, பார்த்தாயா மன்னா? இது தான் காரணம். நான் பிச்சை எடுத்து உண்டால் அது எனக்குப் பிச்சையாய் இடப்பட்டது. அதற்கு தோஷமில்லை. இங்கு நான் பிச்சை எடுக்காமல் உண்டதால் அந்தக் களவு எண்ணம் எனக்கும் வந்துவிட்டதென்றார். மன்னன் அப்படியானால் நானும் அதே அரிசி தானே உண்டேன் . எனக்கொன்றும் ஆகவில்லையே என வினவினான். மன்னா நாடே உனக்குச் சொந்தம். அதனால் அரண்மனை சேர்ந்த பொருள் உன்னுடையது. அது தான் காரணமென்று கூறி வேதனையுடன் புன்முறுவல் செய்தார். மன்னனும் திருடனை விடுவித்து மாலையைப் பெற்றுக் கொண்டான் எனக் கூறிய வேதாளாம், மன்னா துறவி ஏன் வேதனையுடன் புன்முறுவல் செய்தார்? இந்தக் கேள்விக்கு விடை தெரிந்தும் பதில் கூறாவிடில் உன் தலை சுக்கு நூறாகிவிடும் என்றது.
விக்கிரமாதித்தன், வேதாளமே, துறவி முக்காலமும் உணர்ந்தவரென்று கூறினாயல்லவா. அவருக்கு எதிர்காலம் மனதில் ஓடி, மக்களாட்சியில் நாடாள வருபவர்கள் நாடு என்னுடையது என்று நான் கூறியது போல் கொள்ளை அடிப்பார்கள். மக்களிலிருந்தே ஆள வருபவர்கள் தானே. அப்படியானால் மக்களுக்கெப்படி இந்த திருட்டுக் குணம் வர முடியுமென்று ஒரு பாமரன் குழம்பி இடுகை போடுவான்! இதைப் படிப்பவர்களும் குழம்புவார்கள். அதனால் தான் அப்படிச் சிரித்தார் என்று கூறினான். மன்னன் பதிலால் திருப்தி அடைந்த வேதாளம் மீண்டும் மரத்தில் ஏறிக்கொண்டது.
Saturday, April 18, 2009
நறுக்குன்னு நாலு வார்த்த - 27
அந்த ராஜ தந்திர உறவு என்னான்னு சொன்னா தேவலை. இல்லாட்டி வுடு ஜூட். அப்புறம் அய்யகோ போட்டுக்கலாம்னா?
_________________________________________________________
சர்வதேச கண்காணிப்பாளர்களை யுத்த வலயத்திற்குள் அனுமதிக்க முடியாது: அரசாங்கம்
நீ பேசல மவனே. அடிக்கிறாப்போல கூட இல்ல அழுராப்போல அழுன்னு சொல்ல. அப்புறம் ஏன் பேசமாட்ட.
_________________________________________________________
இலங்கையில் போர் நிறுத்தம் வலியுறுத்தி தீக்குளித்த தமிழர் தேசிய இயக்கத் தொண்டர் பலி
பாதி அவனே எரிக்கிறான். மீதி இப்படி எரிஞ்சி போறது தான். எவனும் ஒண்ணும் பண்ணமாட்டான்.
_________________________________________________________
ஆபத்தான நிலைமையில் ஈழமக்கள்:ஆழ்ந்த கவலை தெரிவிக்கிறது அமெரிக்கா
அட ஏம்பா இந்த நடிப்பு. ஆழ்ந்த அனுதாபம் சொல்லிட்டா அமெரிக்காவே அனுதாபம் சொல்லிடிச்சின்னு சந்தோஷமா சாவோம்ல.
_________________________________________________________
தமிழர்கள்வெளியேறுவதை தடுக்கவில்லைபுலிகள்:ஐநா
அப்புறம் என்னா மயித்துக்கு குண்டடிக்கறன்னு அவன கேக்க என்ன கேடு. இதயும் சொல்லிட்டு புலிகள் விடுவிக்க வேணும்னு என்னா உளறல்.
_________________________________________________________
காணி நிலம் கூட விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருக்கக்கூடாது:ராஜபக்சே ஆணை
ஏண்டா நாயே! புதைச்சதெல்லாம் கூட எடுத்தெரிச்சி கடல்ல கலக்கப் போறியா. அந்த நிலம் கூட விடாத.
_________________________________________________________
ராஜபக்சேவுடன் ஐ.நா. நம்பியார் ஆலோசனை
என்னன்ன குண்டு வெச்சிருக்க. எதுக்காவது தடை இருந்தா உடனே நீக்கறோம்னா? இருக்கும்போதே கொத்து குண்டு போடுறானாம். இவரு ஆள அசைக்கிறாராம்.
_________________________________________________________
ஏனென்றால், விடுதலைப்புலிகள் இயக்கத்தை சேர்ந்த தமிழ்ச்செல்வன் இறந்து போன நேரத்தில் இரங்கல் கவிதை ஒன்று நான் எழுதினேன் என்பதற்காக ஜெயலலிதா எப்படியெல்லாம் அறிக்கை விடுத்தார்? இந்த ஆட்சியையே கலைக்க வேண்டுமென்றார். இப்போது விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்களாக உள்ள வைகோ, டாக்டர் ராமதாஸ், தா.பாண்டியன் போன்றவர்களின் குரல் பற்றி ஜெயா என்ன சொல்லப் போகிறார்?
உடனே ஆட்சி போய்விடும்னு பயந்து அய்யகோ தமிழ்ரத்தம். அதுக்குதான் அழுதேன்னு கேவலப் பட்டத விட இப்போ கூட சேர்ந்து குரல் கொடுக்குது அந்தம்மா. வெக்கமா இல்லை. பேச்சு வேற.
_________________________________________________________
அமைச்சரவையில் ஈழப்பிரச்னையை அன்புமணி எழுப்பாதது ஏன்?: ராமதாசுக்கு கலைஞர் கேள்வி
அடங்கொய்யாலே! நம்ம கதைய சொல்லிட்டு கேட்டா நல்லா இருக்குமில்லயா? அய்யா பேசக் கூடவா மறந்து போச்சி. எழுப்ப வேண்டியது பிரச்சனைய அல்ல. அது இருக்கு. அது தீர வழி. அதான் தேவை.
_________________________________________________________
ஈழப்பிரச்சனையில் காங்கிரசுடனான உறவை முறித்துக்கொள்ள திமுக தயாரா? ராமதாஸ் கேள்வி
அவரு மாட்டி விடுறா மாதிரி கேட்டாராம். பதிலுக்கு இவரு. இதெல்லாம் எங்களுக்கே தெரியுமே ஐயா.
_________________________________________________________
ஈழத்துக்கு ரூ10000 கோடி புனரமைப்பு திட்டம்: ஜெ
எட்டப்பன் கருணா இதுக்கு பதில் சொல்லிட்டாரு. பணம் மட்டும் வேணும். தனி ஈழம் தேவையில்லயாம்.
_________________________________________________________
தமிழக மக்கள் ராமதாசை சன்னியாசம் அனுப்பி வைப்பார்கள்: பொன்முடி
உங்கள அனுப்ப பூமியில இடமே இல்லயேப்பா.
_________________________________________________________
சொத்து குவிப்பு வழக்கில் தங்கபாலுக்கு நோட்டீஸ்
இப்போவாவது எவ்வளவு அடிச்சதுன்னு கணக்கு பார்க்க வாய்ப்போ? சரியா நடந்தா தொங்குக்கு சங்கு.
_________________________________________________________
அமைச்சராகஅன்புமணி நீடித்ததுதான்துரோகம்:கலைஞர்
இவரு பண்றதுக்கு பேரு பச்சைத் துரோகம். அடுத்ததா தேர்தல்ல தோத்து எட்டப்பன் காவியம்னு திரைப்படம் எழுதி எல்லாருக்கும் இலவச அனுமதிச் சீட்டு.
_________________________________________________________
நாளை ஒரே மேடையில் திமுக கூட்டணியின் 40 வேட்பாளர்கள்:கலைஞர் சிறப்புரை
செருப்புரையாகக் கடவது. அதையும் பொறுக்கி வித்து காசு பார்ப்பார்கள்.
_________________________________________________________
Friday, April 17, 2009
நறுக்குன்னு நாலு வார்த்த - 26
நம்பியார் புடிச்ச புலிவாலாகாம இருந்தச் செரி!
____________________________________________________________
தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைதானது ரத்து: டைரக்டர் சீமான் விடுதலை; உயர் நீதிமன்றம் உத்தரவு
சீமான்யா! இனிமே சிங்கமொன்று புறப்பட்டதே தான். தொங்கு தொங்கிடும்.
____________________________________________________________
இலங்கை இனப்படுகொலையை தடுக்க கோரிக்கை விடுப்போம்: அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை
அப்போ இவ்ளோ நாள் விடுத்ததெல்லாம் என்னா?
____________________________________________________________
தமிழகம் சுட்டிக்காட்டுபவரே இந்தியாவின் அடுத்த பிரதமர்: ஜெயலலிதா
இவிங்கள சுட்டனுமாமப்பா! பாசக்கார பயலுவ. பண்ணுவாங்கம்ணி!
____________________________________________________________
நடிகர் எஸ்.எஸ்.சந்திரன் மருத்துவமனையில் அனுமதி
வேட்பாளரில்லனு சொன்னதால மனசொடிஞ்சிட்டாரா?
____________________________________________________________
ராமதாஸ்-ஜெ. கனவு நிறைவேறாது: தங்கபாலு
இதாஞ்செரி. இப்படி ஏதாவது கனவு சோசியம் சொல்லி பிழைக்கலாம். கவுரவமா.
____________________________________________________________
சீச்சீ! இந்தப்பழம் புளிக்கும்:ஜெ.மீது கலைஞர்கடும்தாக்கு
தேர்தல் முடியட்டும். இந்த நரி என்னா சொல்லுதுன்னு பார்ப்பம்.
____________________________________________________________
இதுதான் நட்பு: ஜெ.வைப் பற்றி நெகிழும் வைகோ
அய்யகோ!வை.கோ! பாசமலர் பார்ட் - 2
____________________________________________________________
மத்திய அரசினை ஆட்டிப்படைக்கும் கருணாநிதி அடிமையா?பழ.நெடுமாறன் கேள்வி
அவரு மக்களதாங்க சொன்னாரு.
____________________________________________________________
சென்னையில் மத்திய அரசு அலுவலகங்களுக்கு பூட்டு போட்டது விடுதலைப்புலி ஆதரவாளர்களா?
சுவத்தில யாராவது ஒன்னுக்கடிச்சுட்டு போனா கூட அவங்களேதான். போங்கடாங்.
____________________________________________________________
தவறான கூட்டணியில் திருமாவளவன் இருக்கிறார்: ராமதாஸ்
எங்க இருந்தாலும் அங்க குழி பறிப்பாருன்னு கலைஞர் சொன்னத பொய்யாக்க பார்க்கிறாரு போல.
____________________________________________________________
கடும் பாதுகாப்புகளுக்கு மத்தியில் ராஜபக்சே கிளிநொச்சிக்கு திடீர் பயணம்
இது அவருக்கு அயல்நாடாம்ல. ஆமா. புடிச்சாச்சின்னு அலட்டி அப்புறம் என்னா பாதுகாப்பு?
____________________________________________________________
ஈழப்பிரச்சனையை உலக அளவிற்கு கொண்டு சென்றவர் ஜெ.: ஏ.பி.பரதன்
ராமதாச விட ஒரு படி மேல ஐஸ் வெக்கறது தப்பில்ல. அதுக்காக இது ரொம்ப ஓவர தெரியல.?
____________________________________________________________
இலங்கை தமிழர் பிரச்சனையில் விடுதலைப்புலி களுக்கும், இலங்கை அரசுக்கும் இடையே மத்தியஸ்தம் செய்யும் பேச்சுக்கே இடமில்லை என்றும் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.
பின்ன. அவனென்னா கேனயா? போட்டுக் குடுத்துடுவானே.
____________________________________________________________
தமிழர்கள் மீதான ராணுவ நடவடிக்கை ஏற்றுக்கொள்ள முடியாதது என்பதை தெளிவுபடுத்திய பிரணாப் முகர்ஜி.
யப்பா. என்னாமா மொட்டயடிச்சி, காது குத்தி பூ வேற சுத்துறாரு இந்தாளு.
____________________________________________________________
தமிழக மக்களின் அழுத்தம் இந்திய அரசியலில் தாக்கம் ஏற்படுத்தியுள்ளது என்று பிரணாப் முகார்ஜி தெரிவித்துள்ளார்.
என்னா பிலிம் காட்டினாலும் 'ஓ' போட்றது தான் போய்யா.
____________________________________________________________
யுத்த சூன்ய வலயத்தில் அரசாங்கம் தாக்குதல் நடத்துகிறது: ஐக்கிய நாடுகள் சபை
தோடா. இப்போதான் தெரியுதாமா?
____________________________________________________________
நறுக்குன்னு நாலு வார்த்த - 25
நீங்க தாண்டாத தோண்டாத குழி உண்டா? நம்ம கூட்டணில இருந்தா பழி. எதிர் கூட்டணின்னா குழி.
__________________________________________________________
ஜெ.மீது வழக்கு ஏன்:கலைஞர் விளக்கம்
இன்னொரு கோர்ட் கலவரத்தை தூண்டன்னு அந்தம்மா விளக்கும்.
__________________________________________________________
குறும் படங்கள் அல்ல;குறும்புப் படங்கள்:கலைஞர்
இரும்பு மனசுக்காரங்க கூட பார்க்க முடியாதது இவருக்கு குறும்புப் படம். ஏத்தம்டி. வேற என்னா?
__________________________________________________________
கூட்டணி மாறினால் சந்தர்ப்பவாதியா?: ராமதாஸ்
இல்லவே இல்லை. தியாகம். நீங்க பண்ற பலதுக்கு இன்னும் வார்த்தைகள் கண்டு பிடிக்கப் படவே இல்லை.
__________________________________________________________
பாமக மரியாதை இழந்து விட்டது: துரைமுருகன்
இவங்க கூட்டணிக்கு வந்தா திரும்ப வந்துடும். மரியாத பத்தி யாரு பேசறதுன்னு ஒரு விவஸ்தை வேணாம்?
__________________________________________________________
மக்கள் சக்தி முழுவதும் அன்பு சகோதரி பக்கம்தான்: ராமதாஸ்
பாசமலர். பாத்துங்க பாஸூ. ரொம்ப ஊத்தினா சொத்துத் தகராருல வந்துடும்னு களத்தி விட்றுவாய்ங்க.
__________________________________________________________
40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம்: அன்புமணி
இல்லாட்டியும் அப்பா எப்படியும் மந்திரி பதவி வாங்கி குடுத்துடுவாரு செல்லம்.
__________________________________________________________
காந்திபோல்தான் மன்மோகன் சிங்: பிரியங்கா
ஏம்மா. காங்கிரச கலைக்கச் சொல்லிட்டாரா?
__________________________________________________________
தொண்டர் ஆவேசம்:அத்வானி மீது ஷூ வீச்சு
பாதணியடி பாதுகாப்புச் சட்டம் வருமா?
__________________________________________________________
தீவிரவாதிகளுக்கு பிரியாணி கொடுத்து தப்பவிட்டதா ராணுவம்:மோடி மீது ப.சி. ஆவேசம்
அட அவங்க பக்ஸேய சொல்லலங்க. ஏன் டென்சனாவுறீங்க?
__________________________________________________________
பள்ளியில் செக்ஸ் கல்வி தேவையில்லை
கணக்கு வாத்தி, அறிவியல் வாத்தி, தமிழ் வாத்தி மாதிரி இத சொல்ல முடியாதே. சங்கடந்தேன்.
__________________________________________________________
4வது அணியால் பாஜகவுக்கு ஆதாயம்: பிரணாப்
பாதணியால் காங்கிரசுக்கு சேதாரம்.
__________________________________________________________
அப்பாவி பொதுமக்கள் விரைவில் விடுவிக்கப்படுவர்: இராணுவத் தளபதி சரத் பொன்சேகா
பூமியிலிருந்து.
__________________________________________________________
இவனுங்கள்ளாம் கேக்குறது ஜனங்களோட ஓட்டு
சிங்களத்தான் என்ன அந்த சீக்கியந்தானென்ன
இளிச்ச வாயி தமிழனுன்னா இவங்களுக்கு வெண்ண..
(அச்சு அப்பட்டமா பழமதம்பிய பார்த்து அடிச்ச காப்பிதான். இஃகிஃகி)
____________________________________________________________
Wednesday, April 15, 2009
நறுக்குன்னு நாலு வார்த்த - 24
உம்மாலா? உம்மாவாலா?
________________________________________
திமுகவை யாராலும் அழிக்க முடியாது: மு.கண்ணப்பன்
புதுத் துடைப்பம் நல்லாதான் கூட்டும். ஒரு வேளை தானே அழிஞ்சிடும்ங்கராரோ?
________________________________________
7 தொகுதிகளிலும் பாமக டெபாசிட்இழக்கும்:பொன்முடி
அதுக்குள்ள வாங்கியாச்சா?
________________________________________
ராமதாஸ் ஆரூடம் பலிக்காது: தங்கபாலு
எந்த கூமுட்ட சாமியாவது நரபலி குடுத்தா அசைக்க முடியாதுன்னு சொல்லிட்டானா? இவ்ளோ குடுத்திருக்கோம். நாம தோக்க மாட்டோம்னு நம்பிக்கையா தொங்கு?
________________________________________
என்னைக் கவர்ந்தது கம்யூனிசம் தான்: கலைஞர்
எப்போ சேரப்போறீங்க. அம்மா கட்சில கூட்டணி வைக்க இப்படி ஒரு பிட்டா என்னா?
________________________________________
அதிமுகவை ஏன் புறக்கணித்தேன் :நடிகர் கார்த்திக்
வடிவேலு உதாரே கௌரவமா இருக்கு. அடங்குங்க சார்.
________________________________________
வைகோவை எதிர்த்து ஏன் போட்டியிடுகிறேன்: நடிகர் கார்த்திக் விளக்கம்
அந்தாள பார்த்தா அவ்ளோ இளக்காரமா போச்சி. வேற என்ன?
________________________________________
உங்கள் ஓட்டுபணத்திற்கா?மனிதாபிமானத்திற்கா?: வைகோ
முதலாவது எங்களுக்கு தேவையில்ல. இரண்டாவது உங்கள் யாருக்கும் இல்ல.
________________________________________
எங்கள் அப்பன் குதிருக்குள் இல்லை என்கிறார் தங்கபாலு: தாக்குகிறார் ராமதாஸ்
அட போங்க டாக்டரு. அவரு அம்மாதான் குதிருக்குள்ள இல்லன்னு சொல்லிட்டிருக்காரு.
________________________________________
நாளை பீகார் தேர்தல்: கண்டதும் சுட உத்தரவு
அய்யோ. மொத்தமா பங்கு போட்டு ஓட்டு அவங்களே போட்டுக்குவாங்களா? அப்ரமெப்படி ஓட்டு போட வெளீய வரது.
________________________________________
பெரும்பான்மை கிடைக்காவிட்டால்.... : பிரதமர்
வுடு ஜூட்.
________________________________________
தேர்தலுக்குபின் பாமகஅழிந்துபோகுமா:ராமதாஸ் பேட்டி
தொங்குக்கு ஜோசியம் சோன்னீங்களாம். உங்களுக்கு தெரியாதுங்களா?
________________________________________
மகாத்மா காந்தி வாழ்க்கை வரலாற்றை படியுங்கள்: நரேந்திர மோடிக்கு பிரியங்கா அறிவுரை
இதெல்லாம் நீங்க சொல்ல நாங்க கேட்டுகிரணும்னு தல எழுத்து. அம்மா படிச்சாங்களா கேளும்மா.
________________________________________
புலிகளை முற்றிலும் அழிப்போம்: சரத் பொன்சேகா
துள்ளுற மாடு பொதி சுமக்காது.
________________________________________
பாதுகாப்பு வலய பகுதி மீது அதிகாலை முதல் இலங்கை ராணுவம் தாக்குதல்
இதுக்கு பேரு ராணுவமா? இதான் தீவிரவாதம்.
________________________________________
ஈழமக்களுக்காக தேர்தலை தவிர்க்க நினைத்தேன்: திருமா
இப்பிடி பேசியே இருக்கிற கொஞ்ச நஞ்ச மரியாதயும் கெடுத்துப்பாரு இவரு. வேணாம் திருமா.
________________________________________
3 மணி நேரத்தில் 180 ஈழத்தமிழர் பலி
சமாதானம்தான் குடுக்க முடியல. கின்னஸ் சாதனையாவது குடுங்க வெள்ளச்சாமிகளா!
________________________________________
வவுனியா செல்கிறார் வாழும் கலை’ ரவிசங்கர்
டைமிங் சரியில்லயே சாமி!
______________________________________________________________
Tuesday, April 14, 2009
லொள்ளுவதெல்லம் லொள்ளல்ல - 7
தாயும் புள்ளயுமின்னாலும் வாயும் வயிறும் வேறே
தொப்புள் கொடின்னு அளந்தாலும் தமிழ்நாடும் ஈழமும் வேறே
ஆயுதமும் காகிதமும் பேச முடியாது : அமைச்சர்
அமைச்சரும் செருப்பும் பேச முடியும்: சீக்கியர்
உடன்பிறப்புக்குச் சொல்லுவது மக்கள் சேவை
உள்ளுக்குள் இருப்பது மகன்களின் தேவை.
மருந்து குடிக்கும்போது குரங்கை நினைக்காதே: பழமொழி
மருத்துவரை நினைக்கும்போது குரங்கை மறக்காதே: புதுமொழி
கடன்பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் ஆயுதமிழந்த இராவணன்
கடன் பட்டுப் பட்டே ஆயுதம் வாங்குறான் மகிந்தன்.
சைனாக்காரன் வேணான்னா
ஐநாக்காரன் ஏன் கேக்கணும்?
ஓட்டுப் போடுங்கோ: வேட்பாளர்
ஓ போடுவேன்: வாக்காளர்
நல்ல மாட்டுக்கு ஒரு சூடு
நம்ம சாமிக்கு கொஞ்சம் முட்டை
பிள்ளையார் பிடிக்கப் போய் குரங்காய் முடிஞ்சதாம்
உண்ணாவிரதம் இருக்கப் போய் விசுவாசத்தில் விடிஞ்சதாம்.
சாட்சிக்காரன் கால்ல விழுறத விட சண்டக்காரன் கால்ல விழுறது மேல்
இந்திரா காங்கிரஸ இழுக்கிறத விட இலங்கைத் தமிழருக்கு ஆதரவு மேல்
வீடு ரெண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்
இலங்கை ரெண்டு பட்டால் காங்கிரசுக்குத் திண்டாட்டம்
கொள்ளைக்குப் போனாலும் கூட்டாப் போகாதே!
ஓட்டுக்கு போனா ஒத்தையா போகாதே!
____________________________________________________
Monday, April 13, 2009
நறுக்குன்னு நாலு வார்த்த - 23
சிறுத்தை எல்லாம் இனிமே லொள் லொள்னு தான் கத்தும். திருமா நீ இரும்மா
________________________________________________________
வாக்குசாவடிகளை கைப்பற்றினால் 5 ஆண்டு சிறை
சபாஷ். சரியான தீர்ப்பு. ஜெயிச்சா தொகுதிய கைப்பற்றினோம்னு சொல்றதால 5 வருடம் பதவி.
_______________________________________________________
ஜெயலலிதாவிடம் மக்கள் சக்தி உள்ளது: ராமதாஸ்
அப்போ மருத்துவருக்கு சக்தி இல்லாம தான் அங்க போனாரு போல.
_______________________________________________________
வாக்காளர்களுக்கு பணம் தரப்படுகிறதா? தேர்தல் ஆணையம் தீவிர கண்காணிப்பு
எத்தன எலக்ஷன்ல குடுத்திருகோம். வாங்கி இருக்கோம். தெரியராமாதிரி பண்ண கேனையா?
________________________________________________________
பாதுகாப்பு வலயத்தை நோக்கி இலங்கை ராணுவம் அதிகாலையில் எறிகணைத் தாக்குதல்
அடிக்கறதுன்னு ஆச்சி. இதுல அதிகாலை என்ன நடுராத்திரி என்னா? தூக்கம் பிடிக்கலைன்னு அடிக்கறானோ என்னாமோ?
_________________________________________________________
தமிழர்களுக்கு இலங்கை அரசு சமஉரிமை தர வேண்டும்: ப.சிதம்பரம்
சம எருமை கூட தரமாட்டான். இத சொல்ல ஆரம்பிச்சதில இருந்து 10000 பேரு கிட்ட போய் சேந்தாச்சி. யாரும் மிஞ்சலன்னு ஆவுற வரைக்கும் இதே சொல்லிக்கலாம். உனுக்கு சிங்கு தான் சரி.
__________________________________________________________
2 நாள் போர் நிறுத்தம் அறிவித்தது இலங்கை அரசு
ஒரு காது குத்த ஒரு நாள்னு கணக்கா. கம்மினாட்டி.
___________________________________________________________
ஈழப்பிரச்சனை: சென்னையில் கி.வீரமணி ஆர்ப்பாட்டம்
இன்னும் கார்த்திக் கச்சி, சரத்குமார் கச்சி, ராஜேந்தர் கச்சி, ஓட்ட ஒடசல், இத்துப்போனது,போகாதது எல்லாம் தான் பாக்கி. இதேல்லாம் ஒரு பொழப்பா?.
________________________________________________________
புலிகளுக்கு எதிரான இலங்கை ராணுவ நடவடிக்கையில் இந்தியா தலையிடமுடியாது:காங்கிரஸ்
இன்னும் இப்படியே கத விட்டா போற இடமேல்லாம், ஓட்டு இல்ல. செருப்புதான்.
_________________________________________________________
இலங்கையில் போர் நிறுத்தத்தை மீறிய ராணுவம்.
இவன் மீறாதது ஏதாவது இருக்கா?
_______________________________________________
எம்ஜிஆர் படத்துக்கு இலவச டிக்கெட்
பார்த்துக்குங்க பன்னாடைங்களா. இருக்கற பரதேசிங்களுக்கு ஓட்டு வாங்க துப்பில்ல. போன மனுசன காட்டி பொழப்பு நடக்கணும்.
__________________________________________________
பிரதமர் வேட்பாளர் தெரியாத அதிமுக கூட்டணி: ராசா
ஆமப்பு. அவங்களுக்கு தலையாட்டி பொம்ம இல்லல்ல? இந்த சிங்குக்கு ரோசம் வந்து நாம்போறேன்னு போனா அப்புறம் இருக்குடே உங்க கத.
________________________________________________________
2 நாளில் காங்கிரஸ் வேட்பாளர் அறிவிப்பு: தங்கபாலு
ஏன். யோவ் போய்யா சீட்டும் வேணாம் ஓட்டும் வேணாம். உதை வாங்காம இருந்தா போதும்னு யாரும் வரலை போல.
________________________________________________________
சென்னையில் 580 சமூக விரோதிகள் கைது
அவ்ளோ பேருதானா? கச்சி ஆளுங்க ஒண்ணு கூட இருக்காதே.
_________________________________________________________
பாஜக ஆட்சி அமைக்க அதிமுக உதவும்: அத்வானி
பெர்சேய். போஸ்ட் குடுத்தா திமுக வே ஆதரிக்கும். ராமர் தான் பாலம் கட்டினார்னு ஒத்துக்குவானுங்கோ. என்னாங்கடான்னா அம்மா அடிச்ச பல்டி மட்டும் இனிக்குதோம்பாரு.
________________________________________________________
Sunday, April 12, 2009
கலைஞர் பெசல்
இது தொடர்பாக முதல்-அமைச்சர் கருணாநிதி கேள்வி-பதில் வடிவில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
வேற யாராவது கேட்டா வில்லங்கமா கேட்டுடுவாங்கன்னு பெருசு உசாரா பண்ற வேலை இது.
பிரபாகரனை நீங்கள் ஏதோ இழிவுபடுத்தி விட்டதைப் போல பழ.நெடுமாறனும், வைகோவும், ராமதாசும் உங்கள் மீது பாய்ந்து பிறாண்டியிருக்கிறார்களே?.
எவ்ளோ காசு குடுத்தாலும் எந்த பத்திரிகைக்காரனாவது கேப்பாங்களா இப்படி. முரசொலி ஆளுங்க கூட முகத்த சுளிப்பாங்க.
இதுக்கு பதில் உளறல் இது:
இன்றைக்கு ஒரு சில பாராளுமன்ற தொகுதிகளுக்காக - கூனிக் குறுகி தொங்கிக் கொண்டிருப்பவர்களுக்கு - நம்மைப் பற்றி குறை கூறுவதற்கு என்ன தகுதி இருக்கிறது?.
வாஸ்தவமான பேச்சு. இவரு தொகுதியே வேணாம், தேர்தலே வேணாம்னு இருக்கிற ஆளு.
இலங்கைப் பிரச்சினையில் தி.மு.க.வின் சார்பாக ஐம்பதாண்டு காலத்திற்கு மேலாக எத்தனையோ போராட்டங்களையும், தியாகங்களையும் செய்ததை உலகத் தமிழர்கள் அனைவரும் அறிவார்கள்.
அய்யோ. இல்லையா பின்ன. இப்போ உசிர பிடிச்சிண்டு கெஞ்சுறப்போ பண்றத பார்க்கிறப்பவே தெரியுது.
இவ்வளவிற்கும் பிறகு இலங்கைத் தமிழர்களுக்காக தாங்கள்தான் பிறவி எடுத்தவர்கள் போல சொல்லிக் கொள்ளும் தமிழ்நாட்டுக் கட்சிகள் சில இந்திய அரசு தான் இலங்கையிலே போரை நடத்துவதைப் போலவும், அங்கே நடக்கும் படுகொலைக்குக் காரணம் இந்திய அரசும், தமிழக அரசும்தான் என்பதைப் போலவும் குற்றஞ்சாட்டி வருகிறார்களே?.
இவருக்கு மணியடிக்கிற தினத் தந்தி தான் டாங்கி ஈரோடு வழியா கொச்சின் போச்சுன்னு எழுதினது. ஃபோடோ போட்டு. அங்க கள புடுங்க போச்சா?
இது யாரு சொன்னா? ஏன் யாரும் புடிச்சி கிழிக்கல ஏன் பொய் சொல்றன்னு
தானே மாட்டிக்கிற அழகப் பாருங்கோ
"அரசியல் நோக்கத்தோடு அவர்கள் செயல்படுகிறார்கள் என்பதை இலங்கைத் தமிழர்களும், உலகத் தமிழர்களும் நன்றாக அறிவார்கள். தொகுதி உடன்பாட்டுக்கு தோட்டத்தில் தொங்கிக் கொண்டிருப்பதில் இருந்து அவர்கள் நோக்கம் புரியவில்லையா?."
இவருக்கு அரசியல் நோக்கமும் இல்ல. சொக்குன்னா சீரிண்டு வரது
எதுக்குன்னும் நமக்கு தெரியாது.
ராஜபக்சேவுக்கு உதவி செய்யும் "அம்பி'' யார் என்பதை போரஸ் வரலாற்றை நினைவுபடுத்திய முதல்வர் கருணாநிதி மக்களுக்குத் தெளிவு படுத்த வேண்டுமென்று தா. பாண்டியன் சொல்லியிருக்கிறாரே?.
இதுக்கு பதில்:ராஜபக்சேவுக்கு ஆதரவு தெரிவித்தவர் ஜெயலலிதா. அந்த ஜெயலலிதாவுக்கு துணை போய் இருப்பவர் இவர். கூட்டிக் கழித்துப் பாருங்கள். "அம்பி''யார் என்பது தெளிவாகும்!.
ஏன் சொக்கு, கலைஞர்னு பேர் மாத்திபோட்டாலும் தெளிவாகுது.
இலங்கை தமிழர்களை காக்க ஆட்சியை ஏன் கேடயமாகப் பயன்படுத்தக் கூடாது என்று டாக்டர் ராமதாஸ் கேள்வி கேட்டிருக்கிறாரே?
நாமும் பதவியை இழந்து விட்டால், பிறகு அவர்களுக்கு கட்டி அழுவதற்குக் கூட துணை இருக்க மாட்டார்கள் என்று சந்திரஹாசன் போன்றவர்கள், மங்கையற்கரசி போன்றவர்கள், சேனாதி ராஜா போன்றவர்கள் எல்லாம் கூறுவதை நம்புவதா?
பதவில இருந்தாதான் கட்டி அழுவோம்னு யாரு சொன்னாங்க இவருட்ட?
(ராமதாஸ்) இப்போது கூறுவதை அப்போதே கூறி, மத்திய அமைச்சரவையில் இருந்து விலகிக் கொண்டிருந்தால் இவரை தமிழகம் ஒருவேளை நம்பியிருக்கும்!.
இப்பவும் விலகாமா பேசாம இருக்கிற இவர நாம நம்பலன்னு தெரியுது போல.
இலங்கைத் தமிழர் பிரச்சினையில் காங்கிரஸ், தி.மு.க. அரசுகள் செய்த துரோகத்தை தெருத்தெருவாக சென்று கூறுவேன் என்கிறாரே வைகோ?.
ஆனால் தி.மு.க.வைப் பற்றி இவர் கூறும் புளுகு மூட்டைகளை நம்புவதற்கு இனியும் தமிழர்கள் தயாராக இல்லை!.
ஆமாம். எழுதி குடுத்துட்டோம் மொத்தமா. இவரு புளுகறத தான் நம்புவோம்னு.
அந்தய்யா மாதிரி வசதிக்கு வெட்டி ஒட்டுறானோனு நினைக்கிறீங்கன்னா நீங்களே பாருங்கய்யா. உங்க தல எழுத்து அப்படி:
http://www.maalaimalar.com/2009/04/12084640/chennai.html
மனச் சிதறல்கள் - 1
மணியடிக்கும் கருணாக்கள்
பலியாடுகள் எத்தனை!
ஆயுதம் ஏந்தா
அரும்புகளின் போராட்டம்
ஐநா வேரோட்டம்!
ஆட்சி மாறினும்
காட்சி மாறாது
அரசியல் வாதிகள் இறையாண்மை!
தமிழெரித்து
குளிர்காயும்
கே( கோ)வலத் தலைவன்!
விருட்சங்கள்
பதுங்கு குழிகளில்
விதைகளாக!
கடன் வாங்கிக்
கருவருக்கும் கம்ஸன்
மஹிந்த!
விரல் பிடித்து நடந்த எம் பிஞ்சுகள்
விரல் பிடித்து இட்டுச் செல்கின்றனர்
எம் விடியல் நோக்கி!
கையறு நிலை
கபட நாடகம்
கலைஞர்!
ஈழ வியாபாரம்
இனிதே முடிந்தது
எங்களுக்கே வெற்றி!
அடிக்கத் தூண்டிய கைகளுக்கு
அணைக்கத் தடையானது
இறையாண்மை!
( என்னை ஊக்குவித்த கலகலப்ரியா, பழமைபேசிக்கு என் நன்றிகள்)
**********************************************************************
Saturday, April 11, 2009
நம்பிக்கை நட்சத்திரங்கள்
:1. பிரித்தானியாவில் இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்டோர் போராட்டம்.
2. உண்ணாவிரதம் இருந்த இரண்டு மாணவர்களின் கோரிக்கையை ஏற்று பிரிட்டிஷ் அரசு ஒருவரை ஐநா சபையில் 7 நாட்டுத் தலைவர்கள் முன்னிலையில் வன்னி நிலவரத்தினை விளக்கி ஐந்தம்சக் கோரிக்கையை விவாதிக்க ஏற்பாடு.
3. ஆஸ்திரேலியா சிட்னி, மெல்போர்னில் இளைஞர்கள் முன்னெடுக்க பெரும் போராட்டம்.
4. ஃப்ரான்ஸில் நான்கு மாணவர்கள் உண்ணாவிரதம்
5. நோர்வேயில் போராட்டம் மாணவர்கள் முன்னெடுப்பில்
6. சுவிஸ்ஸில் தொடர் போராட்டம்.
பிரியாணி, தண்ணி, கூலி பேசி லாரியில அடைஞ்சி வந்த கூட்டமில்லை. உயிர்ப்போராட்டம். உறவுகளுக்கான போராட்டம்.
தொடுப்பு:
செய்திகள்:
1. http://www.tamilwin.com/view.php?2a26QVF4b3499E824dbSWnPeb0217GGc4d3iYpD3e0dVZLucce03g2hF2ccdHj0o0e
2.http://www.tamilwin.com/view.php?2a26QVF4b3499E824dbSWnPeb0217GGc4d3iYpD3e0dLZLumce03g2hF2ccdHj0o0e
3.http://www.tamilwin.com/view.php?2a08E99F20be1DpYi30ecbo0jH42ccdPZLumc4d3cSWnPd4b34FVQ6obd42iGG71ed0e3Fh2g80e
4.http://swissmurasam.net/news/breakingnews-/13524-2009-04-11-16-40-49.html
5.http://www.tamilwin.com/view.php?2a36QVF4b3499E824dbSWnPeb0217GGc4d3iYpD3e0dTZLucce03g2hF2ccdHj0o0e
காணொளி :(நேரடி ஒளிபரப்பு)
http://www.ustream.tv/channel/tamil-protests
மலர்க தமிழீழம். மாவீரர்கள் கனவு நனவாகட்டும்.
நறுக்குன்னு நாலு வார்த்த - 22
தமிழகம் முழுவதும் 14-ந் தேதி, இலங்கை தமிழர்களுக்காக கூட்டு பிரார்த்தனை செய்ய வேண்டும்: விஜயகாந்த் வேண்டுகோள் |
அட பன்னாடையே! பேபர் கூட படிக்காதா இது. அவனுங்க 14-ந் தேதியோட கத முடிஞ்சதுன்னு சாவரானுங்க. இந்தாளு பிரார்த்தன செய்யனுமாம். அதுக்கு கூடவா நாளு. அதான் புத்தாண்டு ஜனவரின்னு மாத்தியாச்சில்ல?
___________________________________________________
அவர்களைப் பாராட்டுவதைப் போல அறிக்கை கொடுத்தால் தான் பிழைப்பு நடக்கும் - வருகின்ற வருமானமும் நிற்காமல் வரும்: அய்யா நெடுமாறன் குறித்து வீராசாமி.
உங்கள பத்தியெல்லாம் பக்ஸே சொன்னது சரிதான் போல. அப்பொ வருமானம் நின்னாதான் நீங்க ஈழத் தமிழருக்காக குரல் கொடுக்கிறதா. உண்டு கொழுத்த ஓநாய்க்கு பேச்சப் பாரு.
___________________________________________________
விடுதலைப் புலிகள் பற்றி தி.மு.க.வுக்கு எத்தனையோ கருத்து வேற்றுமைகள் இருந்தாலும் முதல்-அமைச்சர் பெருந்தன்மையோடு ஒரு தமிழன் என்ற உணர்வோடு பேசியிருக்கிறார்.: அதே கூமுட்டைதான்
பங்காளிகிட்ட சோசியம் கேக்கப் போனா பாதி ராத்திரில மரணம்னு சொல்லுவான்னு ஒரு சொலவட உண்டு. இவரு செத்தா தங்கத்துல சவப்பெட்டி செய்யணும்னு கேட்டா இவரு ஆஹா என்னா பெருந்தன்மைன்னு கொஞ்சுவாரு.
___________________________________________________
அப்போது வாயை மூடிக் கொண்டிருந்துவிட்டு -கருணாநிதி பேசிய பேச்சுக்கு விஷ விதை ஊன்ற முற்படுபவர்களை தமிழகம் நன்றாகவே புரிந்து தான் வைத்துள்ளது: அந்தாளேதான்.
இது நாள் வரைக்கும் எத பேசணுமோ அதப் பேசாம இருக்கிற உங்களையும் புரிஞ்சிதான் இருக்கு.
___________________________________________________
வன்னி நிலை: ராஜபக்சேவுடன் பான் கி மூன் பேச்சு
என்னா ராசா? லெபனான் எப்படி இருக்கு. ஏதாச்சும் வேணுமா? சட்டு புட்டுன்னு முடி ராசா. ஆளாளுக்கு குடைச்சல் குடுக்கறாங்கோன்னு பேசினாரோ?
___________________________________________________
தமிழினத்தின் வாழ்வுக்காக, சுயமரியாதைக்காக, இனமானத்திற்காக, ஓர் ஆட்சியை கேடயமாக ஏன் முன்நிறுத்தக் கூடாது? :ராம்தாஸ்
அட ரென்டு மந்திரி பதவிய ஏன் முன்நிறுத்தக் கூடாது. அம்மா கூட பேசி அக்ரிமென்ட் போட்டப்புறம் தானே இனிமேலும் இருந்தா விரட்டிடுவாங்கன்னு வந்தது.
___________________________________________________
காங்கிரசை செயல்பட வைக்க வேண்டிய விசை உங்களிடம் தான் இருக்கிறது. அதை ஏன் பயன்படுத்தக் கூடாது?: அவரேதான்.
தட்டிக் கேட்க ஆளில்லன்னா தம்பி சண்டபிரசன்டன்னு யாரோ சவுன்ட் விடறாங்க.
___________________________________________________
ஆறாத புண்ணாக இருக்கும் ஈழப்பிரச்சனை:ஜி.கே.மணி
நீங்கள்ளாம் சொறியற வரைக்கும் அது ஆறாது.
___________________________________________________
அரசியலில் மாற்றம் ஒன்றே மாறாதது என்று சொல்லை எல்லா கட்சியினரும் மந்திரமாக கொண்டிருக்கிறார்கள்.: ராமதாஸ்
மாறி மாறி கலந்தாலும் சாக்கடை தானே! இதுல நான் மட்டுமா சாக்கடைன்னு பஞ்சாயத்து வேற.
___________________________________________________
திமுகவில் கூட்டணி தர்மம் இல்லை:ராமதாஸ்
அதானா? அம்மா அத விட நிறைய தர்மம் பண்ணாங்க போல. தாவிட்டாரு.
___________________________________________________
விஜயகாந்தின் அந்தரங்கத்தை புத்தகமாக எழுதி வெளியிடுவேன்:நடிகர் ராமராஜன்
நடைபாதையில தான் கிடைக்குமா. போலீஸ் புடிக்காதா? அந்தாளு பதிலுக்கு எழுத மாட்டாரா கேட்டுக்கிருங்க. இருக்கிற கூத்தில இவனுங்க கூத்து வேற.
___________________________________________________
தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தற்போது, ஜேர்மனியின் சர்வதிகாரி அடல்ப் ஹிட்லரின் நிலையில் :அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா
ஆமாம்டா. அது மட்டுமா. நீங்கதான் புத்தராம். புத்தர் நான் போறேன்னு போய்ட்டாரம் கண்டியில.
___________________________________________________
1984ன் டெல்லி கலவரம்: 2009ல் மன்னிப்பு கேட்கும் டைட்லர்!
தலீவா. கண்டுக்கினியா. மனசு தான் வோணும்.
___________________________________________________
(எனக்கொரு சந்தேகம்: பொதுவாவே வட நாட்டில தலப்பா கட்டுறது வழக்கம். அதிலயும் சீக்கியர்களுக்கு அது ரொம்ப முக்கியம். தலப்பால தான் தைரியம் இருக்கோ? இல்ல தலப்பா கட்டின தலைல மிளகாய் அரைக்க முடியாதுன்னு தான் அவங்களுக்கு நடக்குதோ? நம்ம தலைங்களுக்கு நல்லா பொடுவா போன அம்மி மாதிரி இருக்கறதால தான் ஆருன்னாலும் அரைச்சிட்டு போராங்களோ? ஏன் சந்தேகம்னா வ.உ.சி, பாரதி எல்லாம் தலைப்பா கேஸ் தான். அதான் தில்லுகார ஆளுங்களான்னு டவுட்டு.)
Friday, April 10, 2009
கத கேளு கத கேளு-8
ராஜா கூட மாறு வேடத்துல ஒரு நாள் அந்தி சாய ஊர் நிலவரம் பார்க்க போனாங்களாம். ஒரு ஆல மரத்தடியில ஒரு ஆளு துண்ட விரிச்சி படுத்திருந்ததாம். ஆரோக்கியமாதான் இருந்திச்சி ஆளு. தலைக்கு கப்பரை. கால் மேல கால் போட்ட படி கொஞ்ச நேரம் அமைதியா படுக்கறது, அப்புறம் விசுக்குன்னு எழுந்து உக்காந்து கப்பரைய தட்டிய படி பாட்டு, அப்புறம் தானே ஏதோ புலம்பல், திரும்ப பாட்டுனு இருந்து அக்கடான்னு தூங்கிட்டான். பைத்தியம் மாதிரியும் இல்ல. கப்பரைய பார்த்தா தெரியுது பிச்சக்காரன்னு. ராஜா அலட்டலா சொன்னாரு. என் ராச்சியத்துல பிச்சக்காரன் கூட சந்தோசமா கவல இல்லாம இருக்கான் பாருன்னு. இக்கு பிடிச்ச தெனாலி சும்மா இருப்பாரா. அதெல்லாம் இல்ல. அவன் அவன் சந்தோசமா இருக்கறது அவன் மனச பொருத்த விடயம்னாரு. ராஜாக்கு கோவம் வந்திடிச்சி. எப்பொ நான் எது சொன்னாலும் உடனே மறுப்பா? ஒரு மாச அவகாசம். நீ சொன்னது நிரூபிக்கலன்னா தல தப்பாதுன்னாரு.
சரின்னு போய்ட்டு, அடுத்த நாள் ஆளனுப்பி அந்த பிச்சக்காரன கூட்டியார சொன்னாங்க. அவன் நடுங்கியபடி வந்து ஓன்னு அளுறான். நான் எந்த தப்பு தண்டாக்கும் போகலனு. அட இர்ரான்னு, தெனாலி ஆள கூப்டு இவனுக்கு தாடி மீசை எல்லாம் சரி பண்ணி, நல்லா குளுப்பாட்டி, வேளா வேளைக்கு சாப்பாடு, காலமுக்கு கை அமுக்க ஆளுன்னு பெரிய மனுசங்களுக்கு என்னால்லாம் பணிவிடை உண்டோ எல்லாம் பண்ணி தங்க வைக்கணும்னு சொன்னாரு. இவனுக்கு தல சுத்திப்போச்சி. இதெல்லாம் கனவா? என்னான்னு. இருந்தாலும் அது அது நடக்க நடக்க ஆனந்தமா இருந்திச்சி. சாப்பிட போனா வக வகய பார்த்தது பார்க்கததெல்லாம் இருக்கு. எல்லாத்துலயும் ஒரு கை அள்ளிபோட்டு கலந்தடிச்சி சாப்பாடுன்னு இப்படி எல்லாம் இருக்கான்னு அலமந்து போனான். கனவுல போறா மாதிரி போய் அப்பாடான்னு ஒரு இடத்துல படுக்க போனா அய்யா அங்க இல்ல இங்கன்னு கட்டில காட்டுறாங்க. சரின்னு போய் விளுந்தவன் அய்யோ முங்கிட்டேன்னு அலறுரான். அவ்ளோ மெத்துன்னு படுக்க. ஒண்ணு காலமுக்க ஒண்ணு கை பிடிச்சி விட ஒண்ணு மடில இவர படுக்க வெச்சி தலய பிடிச்சிவிடன்னு நடக்குது. இருக்கேனா. செத்துபோய் சொர்க்கம்பாங்களே அதுவான்னு அப்டியே தூங்கிட்டான். இப்பிடியே பத்து நாள் போச்சி. அன்னைக்கு ராத்திரி படுத்தவன் காலைல எழும்பி பார்க்க பழயபடி அரசமரத்தடில கப்பர தலைக்கு வெச்சி கிடக்கான். தூக்கத்துல வந்துட்டேன் போலன்னு அரண்மனைக்கு போனா ஓடு நாயேன்னு விரட்டுராங்க. தலவிதியேன்னு வந்தான்.
ஒரு மாசம் ஆகபோக ராஜா கேட்டாரு. என்னா சொல்ற இப்போன்னு. சரி வாங்கன்னு பழயபடி மாறு வேடத்துல வந்தா மரத்தடில தோ சாவரேன்னு ஒரு ஆளு. விலா எலும்பெல்லாம் தெரிய, கண்ணு உள்ளுக்கு போக ஓன்னு அழுது அனத்துது. போய் மெதுவா என்னா ஏதுன்னு விசாரிச்சா ஊர்ல ஒருத்தியும் ஒழுங்கா சமைக்கிறதில்லயாம். சாப்பாடுன்னு கண்ட கருமத்த பண்ணி அதுலயும் கெட்டு போனது மிஞ்சி போனதுன்னு தராங்களாம். படுக்க மெத்த இல்ல. காலமுக்க ஆளில்ல. வாசன தண்ணியில்லாம குளிக்க பிடிக்கல. இப்பிடி இருக்கறதுக்கு சாவரதே மேலு. என்னா ராஜா இந்தாளு. மக்கள சுகமா வெச்சிருக்கத் தெரியலன்னு.
ராஜா அசந்து போய் நீ சொன்னது சரிதான்னாரு.
நாமளும் அப்படி தானங்க இருந்தோம். ஏதோ தின்னு, தூங்கி, பேப்பர் பார்த்து அய்யோ இப்பிடி சாக்காட்டுரானே, யாராவது இத தடுக்க மாட்டாங்களான்னு பெருமூச்சு விட்டு, அய்யோ பாவம்னு அழுது எப்டியோ போய்க்கிருந்தோம். ஐநால இருந்து ஆளுங்க, அண்ட தேசத்து ஆளுங்கன்னு வந்தப்ப பரவால்லயேன்னு இருந்தோம். ஒண்ணா குரல், உண்ணாவிரதம், கடைசி சாதனை, போராட்டம் அது இதுனு ஏத்தி விட்டு அவன மாதிரி ஏதோ நம்மாளுங்க முயற்சி பண்ணி இவங்களுக்கு ஒரு விடிவு வரும்னு இருந்தா, கட்சி மாறி கூட்டணி மாறி அவங்களையும் மறந்து, நீ திருடன் நான் திருடன்னு அடிச்சி, அசலூர்க்காரனெல்லாம் நம்மள விட கேவலமா அநியாயம் நடக்குது. ஆனா நான் ஒண்ணும் பண்ண மாட்டேன்னு நம்மள அம்போன்னு விட்டுட்டுட்டாங்க. சுகம் கண்டு அது போனதும் இருந்ததெல்லாம் ந்ரகமா தெரிஞ்சிதே அந்த பிச்சக்காரனுக்கு எம் பொழப்பும் அப்படிதான் ஆகிப்போச்சு. ஏலாம.
சிதம்பர ரகசியமா?
இது எப்படி மீண்டும் மீண்டும் சீக்கியர்களால் முடிகிறது. அவர்களும் இந்தியாவில் தானே இருக்கிறார்கள். சோனியாவை இழிவாகப் பேசுவது இறையாண்மைக்கு எதிர் என ஒரு முதலமைச்சரே கூறுகிறார். எந்தச் சட்டத்தில் இருக்கிறது அப்படி. ஒரு அமைச்சரை செருப்பால் அடிப்பது இறையாண்மைக்கு இழுக்கில்லை எனில், சீமான் பேச்சும், கொளத்தூர் மணி, வைகோ பேசுவதும் இறையாண்மைக்கு இழுக்காவது எப்படி? செருப்படி நடந்தது தில்லியில். போட்டுக் கொடுக்க தொங்கு கூட தேவையில்லை. ஒரு வேளை தில்லிக்கு தேசிய பாதுகாப்புச் சட்டம் பொருந்தாதா?
அத்தனை அட்டூழியமும் தமிழனுக்குத் தான் பண்ணலாம். சென்னை உயர்நீதி மன்றத்தில் இந்தியா ஆயுதம் வழங்கியமை திரும்பப் பெறவேண்டும் என ஒரு வழக்கு பதிவான பின்னரும், ஜெ, வைகோ, கம்யூனிஸ்ட் இன்னும் தோலான் தொப்பானெல்லாம் ஆயுதம் வழங்கியது குறித்து பேசியும் தலைவர் அதை ஏன் உறுதியாக மறுப்பதில்லை. கருணாநிதி மூக்கு நோண்டினார் என அம்மையார் சொன்னால் பக்கம் பக்கமாக அந்தம்மா காது குடைந்தது எனக்குத் தெரியாதா என உடனே பதிலளிப்பவர் ஏன் வாய் மூடி நிற்கிறார். ஃப்ரான்ஸ் நாட்டுப் பத்திரிகையில் இந்தியா முன்னிறு போர் நடத்துகிறது என நக்கீரனில் வந்ததற்கு இது உண்மையா எனக்கூட கேட்கத் துணிவில்லாத நிலை எதனால்? என்னமோ எல்லாமே முடிந்து விட்டது போல் அலெக்ஸாண்டர் கதை சொல்லி பிரபாகரன் பிடிபட்டால் புருஷோத்தமன் மாதிரி நடத்த வேண்டுமெனெ அந்த புறம்போக்கு பக்ஸேயிடம் பிச்சைஎடுக்க இவருக்கென்ன உரிமை. தந்தை செல்வா சொன்னது போல் தமிழ் நாட்டுத் தமிழனும் ஒரு அடிமை என்பது உண்மை என வெட்கம் கெட்டுப் பேச முடியுமானால் இந்த அடிமைக்கூட்டத்துக்கு தலைவனென்று ஏன் பெருமை? எல்லாக் கட்சிகளும் ஒரே அணியில் என வாய் சவடால் போடும்போது இது கவனம் வரவில்லையா?
நறுக்குன்னு நாலு வார்த்த (பெசல் பதிப்பு)
சீஈஈஈஈஈஈனு
--------------------------------------------------------------------------------
முதல்வர் கருணாநிதி, ’’ ஈழப்பிரச்சனை தொடர்பாக நான் இலங்கைக்கு செல்வதற்கு பலமுறை முயற்சி செய்தேன். அதற்கு அந்த அரசாங்கம் அனுமதி தரவில்லை. அதனாலென்ன..உணர்வால், உள்ளத்தால், ஈழத்தமிழர்களை காண்கிறேன். இலங்கை தமிழர்களுக்கு காவலர்களாக, தூதுவர்களாக இருப்பவர்களுக்கு நான் தோழராக இருக்கிறேன்”
சொக்கு? தொங்கு? ஆப்பு? சவசங்கரன்? யாரு அது? ( ஆமான்னு சொன்னா மக்கள் கிட்ட ஆப்பு, இவங்க இல்லன்னா சொக்குக்கு போடணும் சோப்பு. ஐய்யா. ஜாலி)
--------------------------------------------------------------------------------
மேலும், சோனியாகாந்தி, பிரணாப்முகர்ஜி, கலைஞர் ஆகியோரை கடுமையாக விமர்சித்தும் பேசினார். வைகோவின் இத்தகைய பேச்சு இந்திய ஒற்றுமைப்பாட்டுக்கு எதிரான பேச்சு என்று சென்னை போலீசார் அவர் மீது இன்று இரவு வழக்கு பதிந்துள்ளனர்.
ஆ. வாங்கோ வாங்கோ வாங்கோ. அதிமுக கூட்டணில நாலு சீட் வேகன்ட் வாங்கோ. போனா வராது பொழுது போனா சிக்காது. வாங்கோ.
--------------------------------------------------------------------------------
வைகோவை கைது செய்ய வேண்டும்:சு.சாமி(ரிப்பீட்டோய்)
வைகோ மீது துரும்பு பட்டாலும் இங்கு முட்டை ஆறு ஓடுமாம். ரெடியா சாமி.
--------------------------------------------------------------------------------
நம்பி வந்தவர்கள் மீது நச்சுக்குண்டுகள் வீசுகிறார்கள்:திருமா
அவன் போடுவான்னு தெரியுமுங்ணா. அவன யாரும் நம்பவுமில்ல. உங்கள தான் நம்பினாங்க(னோம்). அவன் போட்டதில நிம்மதியா போய்ட்டாங்க. நீங்க போட்டதில உள்ளுக்குள்ள எரியுரோம். நாளைக்கு எங்கயாவது ஒரு வெள்ளக்காரன் அவங்கள ஈழத் தமிழன், நம்மள ஈனத் தமிழன்னு சொல்லதான் போறான்.
--------------------------------------------------------------------------------
காலில் விழுந்து கேட்கிறேன் ஈழத்தமிழர்களை காப்பாற்றுங்கள்:கலைஞருக்கு திருமா வேண்டுகோள்
இதான் பார்திபன் சொன்னா மாதிரி போட்டு வாங்குறதா. அவரு என்னால்லாமோ பண்ணிட்டேங்குறாரு?
--------------------------------------------------------------------------------
ஈழத்திற்கும், ஈழமக்களுக்கும் எதிரானவர் ஜெ.:திருமா கடும் தாக்கு
அய்யோ. சிறுத்தன்னு நம்பினமே. இது டால்மேஷனா போச்சேடா சாமி.
--------------------------------------------------------------------------------
இதுமாதிரி அத்திரி பல்டில்லாம் தான் சென்னை செந்தமிழ்ல சொல்றது இப்பிடி
" ஐ உட்டாலங்கிடி கிரிகிரி சைதாப்பேட்ட வடகறின்னு"
Thursday, April 9, 2009
நறுக்குன்னு நாலு வார்த்த- 21
ஈழத்தமிழர்களுக்கு துரோகம் செய்த காங்கிரசை எதிர்த்து பிரசாரம்: பா.ம.க
சரி. ஆனா எங்க அணிக்கு வாக்களியுங்கள்னு கேக்க மாட்டிங்களே. 49ஓ கு போடுங்கனு சொல்லுவீங்களா? நீங்க துரோகத்த பத்தி எல்லாம் பேசலாமாங்கையா?
-----------------------------------------------------------------------
ஈழத்தமிழர் பிரச்சனையை நாடாளுமன்றத்தில் வலியுறுத்துவோம்: திருமாவளவன்
அது வரைக்கும் அந்த இனம் இருக்குமா? மனசாட்சியே இல்லையா?
-----------------------------------------------------------------------
ஈழத்தமிழர்களை பாதுகாக்க தமிழர்களின் கடைசி நம்பிக்கை சோனியாகாந்தி: திருமாவளவன்
இல்லைங்க திருமா. முதல்ல இருந்தேதான். நீங்க தான் அதுவா இதுவான்னு ஊசலாடி, இப்போ கலைஞரே ஒண்ணுமில்லன்னு ஆக்கிட்டீங்க.
----------------------------------------------------------------------
பிரபாகரன் மீது சிறு துரும்பு விழுந்தாலும் தமிழகத்தில் ரத்த ஆறு ஓடும்: வைகோ
அட ஆளே எரிஞ்சி போராங்களாம். துரும்பு எந்த மூலைக்கு. இப்பிடியே மைக் கிடைச்சா உதார் விட்டுண்டிருக்கலாம்.
-----------------------------------------------------------------------
ஈழத்தமிழர்களை பாதுகாக்க எந்த தியாகமும் செய்ய தயார்: ராமதாஸ்
தேர்தல், பதவி தவிர.
-----------------------------------------------------------------------
ஈழத்தமிழருக்காக தேர்தலை புறக்கணிக்க தயார்: விஜயகாந்த்
இவரு பங்குக்கு இவரு உதார். யாராவது சரி சொல்லுங்கப்பா.
-----------------------------------------------------------------------
இலங்கை தமிழர் பிரச்சினையில் திருமாவளவன் சர்க்கஸ் புலியாக மாறிவிட்டார்: தா.பாண்டியன்
கோமாளி சொல்லிவிட்டார்.
-----------------------------------------------------------------------
சென்னையில் இருந்து இலங்கை தமிழர்களுக்கு உணவுப் பைகள் அனுப்பப்படுகின்றன
வாங்க அங்க ஆளு இருக்காமாதிரி பண்ணுங்கப்பு. இதிலயும் தேர்தல் கமிசன் அனுமதிச்சான்னு ஒரு உள்குத்து இருக்கு. இத விட தேர்தல் தான் முக்கியமில்லிங்களா?
-----------------------------------------------------------------------
இலங்கைக்கு இந்தியா வழங்கிய ஆயுதங்களை திரும்பபெற வேண்டும்: சென்னை ஐகோர்ட்டில் வழக்கு
எப்போ விசாரணை ஆரம்பிச்சி, எப்போ தீர்ப்பு சொல்லி...........
-----------------------------------------------------------------------
இலங்கையில் உலக போரை விட கொடூரம்: திருமா
அடுத்த வருஷம் பாட புத்தகத்துல போட்டுக்கலாம்.
என்னா இப்போ?
-----------------------------------------------------------------------
வைகோவை கைது செய்ய வேண்டும்:சு.சாமி
ஆரம்பிச்சிட்டான்டா. முட்ட நாத்தம் போய்டுச்சி போல. ஆர்டர் பண்ணுங்கப்பா அழுகின முட்ட அரை லாரி.
-----------------------------------------------------------------------
காங்கிரசை எதிர்க்க மாட்டோம்: திருமாவளவன்
குரங்காட்டி வச்சிருக்கிற குரங்கு கூட இப்படி குட்டிக்கரணம் போடாது. ஒரே நாள்ள எத்தனை?
-----------------------------------------------------------------------
Wednesday, April 8, 2009
நறுக்குன்னு நாலு வார்த்த - 20
அது எங்களுக்கு எப்பவோ தெரியுமே.
---------------------------------------------------------------------
3லட்சம் ஈழ தமிழர்களின் உயிருக்கு பெரும் ஆபத்து: ஒட்டு மொத்த தமிழர்களும் குரல் கொடுங்கள்:ஜெ.
ஏங்க. நிஜமாங்க. எனக்கு கண்ண கட்டுதுங்க. நீங்க ஈழத் தமிழர்னு சொல்லிட்டீங்களா? நாளைக்கு பிழைதிருத்தம் வராதுங்களே.
---------------------------------------------------------------------
ஓட்டுப்போடுவதற்கு மட்டுமே நாங்கள்பிறக்கவில்லை: ஏன் நாடாளக்கூடாது:சீறும்திருமா
இல்லையா பின்ன. பேசாம திமுகல கலந்துடலாமே.
---------------------------------------------------------------------
இலங்கை தமிழர்களை காப்பாற்றுங்கள்:மன்மோகன், சோனியா, பிரனாப், ப.சிதம்பரத்திற்கு கலைஞர் தந்தி
ஃபோன் பிசிங்களா. ஸ்பீட் போஸ்ட்ல அனுப்பலாமே.
---------------------------------------------------------------------
இனவெறி பிடித்த சிங்கள ராணுவத்தளபதி கொக்கரிக்கிறார்: முதல்வரே, பிரதமரே ஈழத்தமிழர்களை காப்பாற்றுங்கள்:ராமதாஸ்
அன்புமணி ராஜினாமா பண்ணியாச்சே. இனிமே இப்படி சவுண்ட் விடலாம்.
---------------------------------------------------------------------
சிதம்பரம் மீது ஷூ வீசிய பத்திரிகையாளர் விடுவிப்பு
பின்ன. இது என்ன தமிழ்நாடா. தேபாச ல உள்ள போட. மிஸ்டர் தொங்கு. ஒய் சைலன்ட்?
---------------------------------------------------------------------
ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு சரணடையுங்கள்: புலிகளுக்கு ராஜபக்சே எச்சரிக்கை
ஏன். இனியும் கடனுக்கு ஆயுதம் இல்ல போன்னுட்டாங்களா ராஜஎச்ச?
---------------------------------------------------------------------
போர்நிறுத்தம் கோரி கலைஞர் தலைமையில் பேரணி
ஃபுல்லா அரிக்குது தலிவா.
---------------------------------------------------------------------
இனவெறி பிடித்த சிங்களராணுவத்தளபதி செய்திருக்கும் சூழ்ச்சி:ராமதாஸ்
உசாரு கை நைனா. நாள பின்ன தாவ வசதியா யார் சூழ்ச்சினு பேசிட மாட்டாரு.
---------------------------------------------------------------------
விடுதலைப்புலிகளுக்கு ஆதரவான வி.சி.டிக்களை பறிமுதல் செய்ய உத்தரவு:நரேஷ்குப்தா
நல்ல மாறுதல். மக்கள் தான் புலிகள்னு ஒத்துக்கிட்டாங்கனு எடுத்துக்கிறதா. தல கீழா 'தொங்கி'னாலும் கைக்கு டாடாதான்.
---------------------------------------------------------------------
ஈழத்தமிழருக்காக அரசியலில் மதிமுக இழந்ததுஅதிகம்
எத்தினி சீட். நாள பின்ன ஈழம் மலர்ந்தா ஆளாளுக்கு போய் பங்கு போடாம இருந்தா சரி.
---------------------------------------------------------------------
ஏப்ரல் 14க்குள் புலிகளை அழிப்போம்:இலங்கை பிரதமர்
உங்காளு சொன்ன கணக்குல புலி மைனஸ்ல ஓடுது. அதென்னாய்யா 14 உங்களுக்கு. வருசம் சொல்லுடா நாயே.
---------------------------------------------------------------------
ஈழத்தமிழர்களுக்கு துரோகம் செய்த காங்கிரசை எதிர்த்து பிரசாரம்: பா.ம.க
ஒட்ட ஒட்ட உறிஞ்சிட்டு இப்போ வருதுய்யா வீரம்.
---------------------------------------------------------------------
ஈழத்தமிழருக்காக திமுக நடத்தும் பேரணியில் காங்.பங்கேற்பு: தங்கபாலு
ஓட்டுக்காகவா? இல்ல உணர்ச்சி வசப்பட்டு யாராவது பேசினா போட்டு குடுக்கவா?
---------------------------------------------------------------------------------
Monday, April 6, 2009
கத கேளு கத கேளு - 7
ராஜா இருந்தா ராஜாவ அண்டிப் பிழைக்கிற புலவர் இல்லாமலா? இருந்தாரு. கொஞ்சம் தெனாவட்டு புடிச்ச ஆளு. தேவைன்னா போவாரு. அதுவே இதுவே, அப்படியே இப்படியேன்னு பிட்ட போட்டு கிடைக்கற பரிச வாங்கிட்டு வர வழிலயே அவன் கெடக்கான். கிறுக்குப்பயன்னு வர ஆளு.
வழக்கம் போல தேவை வந்திடிச்சி. தேவைன்னா இப்படி அப்படி இல்ல. ரொம்ப மோசமான நிலமை. எப்படியோ ஏதோ பண்ணி நிலமைய சீராக்க வேண்டிய நிர்பந்தம். சிக்க மாட்டானா? மொத்தமா லவட்டிடலாம்னு கடங்காரங்க காத்து நிக்கிறாய்ங்க. மானப் பிரச்சன வேற. கிறுக்குப் பயதான். என்னா பண்ணுவானோ தெரியாது. முடிஞ்ச வரைக்கும் அடிச்சி விட்டு குஷியேத்தி எவ்வளவு முடியுமோ கறந்துடணும்னு முடிவு பண்ணி ராஜாவ பாக்க நேரம் வாங்கிடிச்சி.
நேரமா போய் நின்னு கும்பிடு போட்டு எடுத்து விட்டாரு ஒரு பாட்ட. ராஜா குஷி ஆகி கொண்டு வா ஆயிரம் பொன்னுன்னாரு. என்னா எளவுடா ஆயிரம் பொன்ன வெச்சி ஆட்டுக்கு தழை கூட வாங்க முடியாதே. சரி பாப்பம்னு அடுத்து ஒண்ணு ஏத்தி விட்டாரு. ராஜா குஜால் ஆகி கொண்டுவா நவரத்தினம் எடைக்கு எடைன்னாரு. ஆளு திக்கு முக்காடி போய்ட்டான். ஆகா. கஷ்டமெல்லாம் தீந்துடும். கடனுக்கு நின்னவனெல்லாம், கடனா நினைக்க வேணாம். ஏதோ கெரகம் செரி இல்ல. கேட்டுபுட்டோம். நம்மள எதிரியா நினைக்காம தோழனா ஏத்துக்கணும்னு கெஞ்சுறா மாதிரி கண்ணில ஓடுது. சரி கிறுக்கன் என்னாமோ இன்னைக்கு ஒரு மார்க்கமாதான் இருக்கான். ஒரு போடு போட்டு பர்க்கலாம் என்னா பேருதுன்னு எடுத்து விட்டான் ஒரு பாட்ட. கடவுளெல்லாம் கால் தூசு. உன்னைய மாதிரி வருமா? அப்பிடி இப்பிடின்னு. ராஜா கண்ணீர் வழிய கட்டி புடிச்சி அழுது ஆர்பாட்டம் பண்ணி, இப்படி ஒரு சீவன அல்லாட விடுவனா. இந்த நாட்டில பாதி உனக்குத் தந்தேன்னாரு.
ராஜா, இங்க பாரு நீ பாட்டு பாடின. எனக்கு கேக்க சந்தோசமா இருந்திச்சி. நான் பரிச சொல்ல சொல்ல உனக்கு கேக்கறதோட இல்ல பார்க்கவும் சந்தோசமா இருந்திச்சி. நீயும் ஜாலி. நானும் ஜாலி. உன் பாட்டு உன்னோட. என் பரிசு என்னோட. கிளம்புன்னு சொல்லிட்டாரு. புலவனுக்கு திட்டவும் முடியல. போடாங்கொய்யாலென்னும் போக முடியல. விதிய நொந்துகிட்டு, நாள பின்ன இந்த கிறுக்குப் பயகிட்டதான் வரணும். அப்போ மனசு மாறிடும்னு நெம்ப நன்றி மகாராஜான்னு நடய கட்டினாரு.
(வழக்கம் போல ராஜா தான் மக்களா, புலவர் தான் கட்சிங்களா, பாட்டு தான் வாக்குறுதியா, பரிசு தான் வாக்கா. வாய் வார்த்தைய அள்ளி விட்டு வாக்கு அள்ளிட்டு போய்டலாம்னு வந்தா 49-O சொல்றதுதான் இதான்னு கேட்டா நான் பொருப்பில்லன்னு சொல்லுவேன்னு நினைச்சா அதுக்கு நான் பொருப்பில்ல. அதாஞ்சொன்னேன்)
Sunday, April 5, 2009
கத கேளு கத கேளு-6
அந்த ஊர்ல ஒரு வீட்டுக்கு ஒரு விருந்தாளி வந்தான். மனுசனுக்கு அவ்ளோ நல்ல மனசு. யாராவது நல்ல படியா இருந்துட்டா. இவனுக்கு இருப்பு கொள்ளாது. ஏதாவது பண்ணி அவங்க நாறிப்போறதா பார்த்து சந்தோசமா போற ஆளு. நல்லா தின்னுட்டு திண்ணைல துண்ட உதறி போட்டு படுத்திருக்க நம்ம அய்யாவும், அம்மாவும் அந்த வீதில வந்தாய்ங்க. எல்லா வீட்டில இருந்தும் ஆளுங்க வந்து, வணக்கம் சொல்லி விசாரிச்சி மரியாதயா அனுப்பி வச்சத பார்த்தாரு நம்மாளு. தாங்குமா? வீட்டாள கூப்டு யாரு என்னா விபரம்னு கேட்டாரு. அவிங்களும் சொன்னாய்ங்க. அப்பிடியான்னு கேட்டுகிட்டு தூங்கிட்டான்.
அடுத்த நாள் எழுந்து அப்படியே ஒரு பொடி நடயா போய்க்கிருக்க அந்தய்யா எதிர்ல வந்தாங்க. வணக்கஞ் சொல்லி முகத்த வெறிச்சி பார்த்த படி நின்னான். இவங்களுக்கு விளங்காம யாரு என்னாப்பான்னா, இல்லிங்க, நமக்கு முகசோசியம் தெரியுமுங்க. உங்கள பார்த்ததும் தெரிஞ்சது. போன சென்மத்தில நீங்க பெரிய ராசா. ஏதோ ஒரு சாபம், அதனால இந்த சென்மத்துல இப்பிடி சாதாரணமான ஆளா பொறந்திட்டீங்க. ஆனாலும் போன சென்மத்துல இருந்தா மாதிரியே இப்பவும் எங்க போனாலும் மரியாத. மதிப்பு. என்னா? நாஞ்சொல்றது சரிதானுங்களேன்னு கேக்க அந்தாளு தாடிய சொறிஞ்சிட்டு, இவன பார்த்ததே இல்ல. இருந்தாலும் இவ்ளோ சரியா சொல்றானேன்னு நினைச்ச படி, அடக்கமா, அது என்னாமோ, சனங்களுக்கு நம்மள புடிக்கும். அவ்ளோதான்னாரு. இவன் முகத்த சோகமா வெச்சிகிட்டு, அய்யா, கோவிக்கப்படாது. உங்களுக்கு மனைவியா இருக்கிறவங்க பொருத்தமில்லைங்கய்யா. போன சென்மத்துல நாயா இருந்தாய்ங்கன்னு சொல்லிட்டான். இவருக்கு கோவம் வந்துடிச்சி. யோவ். ஏதோ உளற்றன்னு விட்டா ஓவரா போய்க்கிருக்க, அப்பிடியேன்னாலும் போன சென்மத்துல என்னாவா இருந்தா என்ன, இப்போ எனக்கு ஏத்த மவராசின்னாரு. அய்யா மன்னிக்கோணும். இப்பவும் அவிங்களுக்கு அந்த சென்ம வாசன போகல. தினம் உங்க கணுக்கால நக்குவாய்ங்க. தூங்குறப்போ. நீங்க வேணும்னா தூங்கறா மாதிரி இருந்து கண்டுக்குங்கன்னு சொல்லிட்டு போய்ட்டான். அந்தாளு தலைல அடிச்சிகிட்டு போய்ட்டாங்க.
இவன் நேர அந்தய்யா வீட்ட போய், அய்யா அய்யான்னா, அந்தம்மா வந்து உக்கார சொல்லி, அய்யா இல்ல. வெளிய போய் இருக்காங்க. மாலைல தான் வருவாய்ங்கன்னு சொல்லிச்சி. இவன் அப்பிடியே முகத்த பார்த்து அட அட என்னா கள என்னா கள. போன சென்மத்துல அரசியா இருந்தது அப்டியே தெரியுதே. இப்பவும் என்னா குறை. வீட்டுக்கு மட்டுமா. ஊருக்கே ராணீ மாதிரித்தேன்னு அளந்து விட்டான். இந்தம்மா இவன பார்த்ததே இல்லயே, இப்படி எல்லாந்தெரிஞ்சா மாதிரி சொல்றானேன்னு இருக்க, முகத்த பாவமா வெச்சிகிட்டு, அம்மா நான் சொல்றத கேட்டு வருத்தப்படாதீங்க. நீங்க புருசனா அடைஞ்ச ஆளு பொருத்தமில்ல. போன சென்மத்துல உப்புக் குறவனா பிறந்தவங்க. நான் சொல்றத நம்பலைன்னா ராத்திரி அய்யா தூங்கும்போது கணுக்கால நக்கிப் பாருங்க கரிக்கும்னு சொல்லிட்டு போய்ட்டான். அந்தம்மாக்கு குடைச்சல் ஆரம்பிச்சது. இது நிசமா என்னா. நிசமானாதான் என்ன. இப்போ நல்லாதானே இருக்கோம்னு.
ராத்திரி அந்தய்யா வந்து சாப்பிட்டு படுக்கறப்ப இவன் சொன்னது கவனம் வந்திச்சி. தூக்கம் வரல. சரி பார்ப்போம். தினம் நக்குறான்னா ஏன் என்னான்னு கேக்காம விடுறதில்லனு இருக்க, அந்தம்மாக்கும் கவனம் வந்து தூக்கம் கெட்டு, மெதுவா எழுந்து கால நக்க போச்சி. இவரு விலுக்குன்னு ஒரு உதை விட்டு, அடி நாயே நாயே. ஜென்ம வாசன போகுதா கால நக்குதுன்னு கத்தினாரு. அம்மணிக்கு பொல்லாத கோவம். யோவ். ஜன்மத்த பத்தி நீ பேசாத. உப்புக் குறவனா உப்பாடி ஆடி பொழச்ச பொழப்பு மறந்து போச்சான்னு கத்திச்சி. அவரு கத்த இந்தம்மா கத்த ஊரு கூடி நின்னு இவிங்களா இப்படின்னு என்னமோல்லாம் சொல்லிப் பார்த்தும் அதெல்லாம் முடியாது. ஒட்டுமில்ல உறவுமில்லன்னு ஆளுக்கொரு பக்கம் போய்ட்டாங்க.
பத்த வெச்ச புண்ணியவன். அப்பாடா. வந்த வேல முடிஞ்சது. நம்ம கிட்டயேவான்னு போய் சேர்ந்தான்.
(வழமை போல அதாரு இதாருன்னு யோசிச்சா நான் பொறுப்பில்ல.)
____________________________________________________________