தினசரி வாழ்க்கையின் அவசரங்களுக்கு நடுவேயும் என்னை பாதித்த, பாதிக்கும் சில நிகழ்வுகள்
Friday, April 24, 2009
மன்னித்து விடு தேவதையே!
அகிலமெங்கும்
உன் பெயர் குழந்தை
அடிமை நாட்டில்
நீ ஓர் தீவிரவாதி!
ஆம் நீ ஓர் தீவிரவாதி!
பார்வைக் கணையால்
பதைக்க வைக்கும்
நீ ஓர் தீவிரவாதி
பறக்கு முன்னே உன்
இறகொடித்த பின்னும்
பார்வையால் கொல்லும்
நீ ஓர் தீவிரவாதி!
மனிதம் இழந்த
மனிதர் மத்தியில்
மனம் தேடும்
நீ ஓர் தீவிரவாதி!
அப்படிப் பார்க்காதே அன்பே
அதைத்தாங்கும் வலிவெமக்கில்லை
மன்னித்து விடு தேவதையே
இது மானிடர் வாழும் பூமி!
தேவதைகளுக்கு
இங்கே இடமில்லை!
இல்லாத இறைவைனின்
இறையாண்மை இங்கு வேதம்!
அரசியல் சட்டமென்றோர்
அரக்கச் சட்டையணிந்த
அசுரர் வாழும்
அவனியிப் பூமி!
தமிழனாய் பிறந்ததால்
தன்மானம் இருப்பதால்
சுடப்பட்டாய் நீ
சுதந்திரம் கேட்டதால்!
தடைகளை உடைத்தித்
தரணியில் ஓர் நாள்
தமிழினம் வெல்லும்
தமிழீழம் மலரும்
அது வரை...
மன்னித்து விடு தேவதையே
இது மானுடம் மறந்த பூமி!
_________________________________________________
வகை:
வலிகள்
Subscribe to:
Post Comments (Atom)
14 comments:
// மன்னித்து விடு தேவதையே
இது மானுடம் மறந்த பூமி! //
வேதனையின் வெளிப்பாடு..
என்ன சொல்வது என்று தெரியவில்லை. நல்ல நாள் மலரும் என்று எதிர்ப் பார்ப்போமாக..
நன்றி. இராகவன் சார். ஆறுதலுக்கு நன்றி.
மனம் கனக்குது! :-0(
என்ன சொல்ல
/*
அப்படிப் பார்க்காதே அன்பே
அதைத்தாங்கும் வலிவெமக்கில்லை
மன்னித்து விடு தேவதையே
இது மானிடர் வாழும் பூமி!
தேவதைகளுக்கு
இங்கே இடமில்லை!
இல்லாத இறைவைனின்
இறையாண்மை இங்கு வேதம்!
*/
இத படிக்கும்போது கண்ணு கலங்கிடுச்சி..............
என்ன சொல்ல..நீங்கள் கவிதையிலாவது சொல்லமுடியுது..ஆனால் இலங்கையிலிருக்கும் எம்போன்றவர்கள் நிலை....எல்லோரும் அழுகிறோமையா...ஆனால் ஊமையாய். உதிர்ந்து கொண்டிருக்கும் எம் உறவுகளுக்கு அஞ்சலிசெலுத்துவதற்குதானும் வக்கற்று நிற்கிறோமையா....என்ன..வாழ்க்கை..?
// பழமைபேசி said...
மனம் கனக்குது! :-0(
தென்னவன்.
இத படிக்கும்போது கண்ணு கலங்கிடுச்சி..............
கண்ணீரோடு கஜன்.
அஞ்சலிசெலுத்துவதற்குதானும் வக்கற்று நிற்கிறோமையா....என்ன..வாழ்க்கை..?//
தூக்கி அழத் தாயில்லை
தொட்டெடுக்க உறவில்லை
தாதியரின் அரவணைப்பில்
தனியாய்த் தமிழ்க் குழந்தை
இதயம் கனத்திட
இதழ்கள் துடித்திட
இமைகள் நனைந்திட
இது என் வெளிப்பாடு
நன்றி!
நல்ல நாள் மலரும் என்று எதிர்ப் பார்ப்போமாக..
//"மன்னித்து விடு தேவதையே!"//
அட கவிதை எழுத முன்னாடியே இப்படி கேட்டா என்ன பண்றது.. சரி சரி .. "மன்னித்து விட்டேன்"..
ஆஹா.. யாரிது..
கட்டுடன்..
கூடிய..
குட்டி தேவதை..
கைக் கட்டு..
கால் கட்டு..
இப்பவே..
போட்டுட்டாங்களா..
கொட்டாத விழிகளில்..
இருப்பது.. என்ன..
இரும்புத் தளையை..
உடைத்தெறிய..
இட்ட உரமிது..
என்ற..
ஒர்மமா..
இல்லை..
சிறகுக்காய்..
சிந்திய குருதி இது..
என்ற சித்தாந்தமா..
உன்னை முத்தமிட..
எத்தனித்த..
என்னை..
தடுக்கிறது..
யார் நீ..
என்று..
தொக்கி நிற்கும்..
உனது..
வெறித்த..
பார்வை..!
//சிறகுக்காய்..
சிந்திய குருதி இது..
என்ற சித்தாந்தமா.. //
அஃகஃகா.அருமை அருமை
//யார் நீ..
என்று..
தொக்கி நிற்கும்..
உனது..
வெறித்த..
பார்வை..!//
ஆமாம். சிறகொடிக்க அனுமதித்த நமக்கு தகும்.
இருங்க சார்.. நான் இடுகை போட்டு ரொம்ப நாளாச்சு போல.. இத அங்க போடுறேன்..
மிகவும் அருமையான கவிதை...
மனம் மௌன அழுகை அழுகிறது.
தமிழினம் வெல்லும்
தமிழீழம் மலரும்
அந்த நாளுக்காகத்தான் எல்லோரும் காத்திருக்கிறோம்!!!
கவிதை ரொம்ப அருமை!! உங்கள் உணர்வுகளின் வெளீப்பாடாக இருக்கிறது!! வாழ்த்துகள்.
நன்றி ஆதவா.
Post a Comment